இராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா..!
இராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
உலகப் புகழ் பெற்ற ஆன்மிக தலமான, தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய இராஜராஜசோழனின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நட்சத்திர நாளான சதய தினத்தில், சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான, இராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் 2 நாட்கள் இந்த விழா நடைபெற உள்ளது. இராஜராஜ சோழன் காலத்தில் தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் அவரது ஆட்சியின் கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
https://tamil.samayam.com/spiritual-news/rajaraja-chozhan-1032-sadhayam-festival-/articleshow/60966747.cms?utm_source=Colombia&utm_medium=OrganicNative&utm_campaign=CTN
Leave a Reply
You must be logged in to post a comment.