சிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம்

சிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம்

முனைவர் அசோகா பண்டாரகே

(தமிழாக்கம் நக்கீரன்)

கடந்த செப்தெம்பர் 21, 2017 அன்று பிரதமர் இரணில் விக்கிரமசிங்கா  அரசியலமைப்பு வழிநடத்தல்  குழுவினால் தயாரிக்கப்பட்ட  இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு பேரவையில் தாக்கல் செய்தார். அரசியலமைப்பு செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட 06 உபகுழுக்களின் அறிக்கைகள் மற்றும் மக்கள் கருத்தறியும் லால் விஜயநாயக்கவின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த இடைக்­கால  அறிக்கை மீதான விவாதம் இம்­மாதம் 30, 31 ஆம் திகதிகளிலும் மற்றும் நொவெம்பர் முதலாம் திகதியும் நடைபெறும்.

பிரதமரினால் தாக்கல் செய்யப்பட்ட  இடைக்கால அறிக்கை வடக்கிலும் தென்னிலங்கையிலும் சூடான வாதத்தை எழுப்பியுள்ளது.  வழமை போல   தென்னிலங்கை சிங்கள – பவுத்த தேசியவாதிகள் இந்த அறிக்கைக்க எதிராக தீவிரமாகப் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அதே சமயம்  தீவிர தமிழ்த் தேசியவாதிகள் இந்த  இடைக்கால அறிக்கையை  யானை பார்த்த குருடன் கதை போல பலவிதமாகக் கண்டித்துப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

ஒரே பொருள் ஆனால் வியாக்கியானம் நேர் எதிர்மாறாக இருக்கிறது. இந்த இடைக்கால அறிக்கையில் ஒன்றுமே இல்லை என தீவிர தமிழ்த் தேசியவாதிகள் ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள். இந்த இடைக்கால அறிக்கையில் வட கிழக்கு இணைப்பு இல்லை,   இணைப்பாட்சி இல்லை, காணி அதிகாரம் இல்லை, காவல்துறை அதிகாரம் இல்லை எனப் புலம்புகிறார்கள். ஒரு சிலர் இப்போதிருக்கிற யாப்பை விட இந்த உத்தேச யாப்பு மோசமாக இருக்கப் போவதாகவும்   கிளி சோதிடம் சொல்கிறார்கள். இவர்கள் எந்தத் தீர்வுத் திட்டமும் வந்து விடக் கூடாது என்பதில் கரிசனையாக இருக்கிறார்கள்.  மொத்தத்தில் இடைக்கால அறிக்கையை ஆதரிப்பவர்களை விட அதனை எதிர்த்து விமரிசனம் செய்பவர்களே அதிகம். தமிழர்கள் எப்போதும் உணர்ச்சி வசப்படும் குணம்  கொண்டவர்கள். உணர்ச்சிவசப்படுத்தும் பண்பு கொண்டவர்கள்.  இந்தக் குணம் தமிழர்களிடமிருந்து மாறவேண்டும்.

மறுபுறம் தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதிகள் இந்த இடைக்கால அறிக்கை இணைப்பாட்சிக்குப் போடப்பட்டுள்ள அத்திவாரம் என்கிறார்கள். மத்திய அரசு இனிப் பெயருக்கு மட்டும் இருக்கப் போகிறது, எல்லா அதிகாரங்களும் மாகாண சபைக்கே வழங்கப்பட இருப்பதாகச் சொல்கிறார்கள் அல்லது  எழுதுகிறார்கள்.

ஓர் அரசியல் யாப்பை உருவாக்கு என்பது எளிதான செயல் அல்ல. அதிலும் இலங்கை போன்ற பல்லின,  பல்சமயங்கள், இருமொழி  பேசுகின்ற நாட்டில்  எல்லோரது நலன்களையும் உள்ளடக்கக் கூடிய யாப்பை எழுதுவது கடினம்.

இலங்கை  பெப்ரவரி 4, 1948 இல் சோல்பெரி யாப்பின் கீழேதான் சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் 1972 இல் ஒரு யாப்பு எழுதப்பட்டது.  பின்னர் இப்போது நடைமுறையில் உள்ள  யாப்பு 1978 இல் ஒரு யாப்பு உருவாக்கப்பட்டது.  இப்போது நான்காவது  யாப்பை எழுதும் முயற்சியில் இலங்கை அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளார்கள். அதாவது 70 ஆண்டு கால வரலாற்றில் நான்கு அரசியல் யாப்புக்கள்.

ஒரு யாப்புத்தான் நாட்டின் மிக உச்ச அதிகாரம்   (supreme) படைத்த  சட்டமாகும். ஒரு நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, அமைதி,  பொருளாதார மேம்பாடு, ஆட்புல உறுதிப்பாடு எல்லாமே அந்த நாட்டின் யாப்பில்தான் தங்கியிருக்கிறது.

மன்னர் காலத்தில் மன்னன் உயிர்த்தே  மலர்தலை உலகம் என்ற கோட்பாடு இருந்தது. மக்களுக்கு மன்னன்தான் உயிர். அதனை உணர்ந்து கொள்வது அவனது கடமை. இறைமையும் மன்னனிடமே இருந்தது. இன்று மன்னர்கள் இல்லை. மக்கள்தான் மன்னர்கள். மக்களிடம்தான் இறைமையும் உண்டு. மக்களது  உயிர் போன்று இருக்க வேண்டியவர்கள் ஆள்வோர்.  அப்போதுதான் அந்த நாட்டில் மிக்க பசியும்  நீங்காத நோயும்  புறத்து நின்றும்  மற்றும் அகத்து இருந்தும் அழிவு செய்யும் புறப்பகை, உட்பகை  இருக்காது.Search results for "Northern provincial council"

ஒக்தோபர் 10 அன்று வெளிவந்த டெயிலி மிறர் என்ற நாளேட்டில் முனைவர்  அசோகா பண்டாரகே என்பவர்  இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் (Sovereignty, Territorial Integrity and Constitutional Reform in Sri Lanka) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இந்த இடைக்கால அறிக்கை பற்றி ஒரு சிங்கள – பவுத்த தேசியவாதிகளது பார்வை எப்படியிருக்கிறது என்பதற்கும் ஒரு கதைக்கு இரண்டு பக்கம் உண்டு என்பதற்கும்  இந்தக் கட்டுரை  நல்ல எடுத்துக்காட்டு. அதன் முக்கிய பகுதிகளின் தமிழாக்கத்தை இப்போது பார்ப்போம்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய அமெரிக்க சனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் நாடுகளது ஆட்சியில்  இறையாண்மை அவற்றின் நெறிமுறையாக இருக்க வேண்டும் என்றார். இந்தக் கூற்று ஒருபுறம் இருக்க,  ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பன்னாட்டு சமூகம் ஏனைய நாடுகளது உள்ளக  விவகாரங்களில் தொடர்ந்து தலையீடு செய்வதை தமது கொள்கையாகக் கொண்டுள்ளன.  சிறிலங்கா இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

தமிழீழ வி.புலிகளின் பணம்படைத்த புலம்பெயர்   அமைப்புக்களின் செல்வாக்குக் காரணமாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஒக்தோபர் 01, 2015 அன்று ஜெனிவாவில்  ஒரு தீர்மானத்தை (அமெரிக்கா மற்றும் சிறிலங்கா நாடுகளது அனுசரணையோடு) நிறைவேற்றியது.  இந்தத் தீர்மானம் பொறுப்புக் கூறல் மற்றும் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் இடைமாறுபாட்டு கால ஏற்பாடுகள், நல்லிணக்கம் பற்றி ஒரு பன்னாட்டு கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியது.  இந்தத் தீர்மானத்தின் உறுப்புரை 16,  சிறிலங்கா யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் அரசியல் தீர்வு,  மீளிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்காவின் ஈடுபாட்டை அது உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்  கேட்டுள்ளது.  அமெரிக்க உயர் மட்ட அரச அதிகாரிகள் ஐக்கிய நாடு மனித உரிமைப்  பேரவையின் தீர்மானத்துக்கும் சிறிலங்காவின் புதிய யாப்பு உருவாக்கத்துக்கும் ‘நேரடித் தொடர்பு’ (‘direct link’) இருப்பதாக ஒத்துக் கொண்டுள்ளனர். இந்த யாப்பின் வரைவை  உருவாக்குவதற்கு   தங்கள் உதவியை நல்குவதோடு அதன் நிறைவேற்றத்தை கண்காணிக்கவும் முன்வந்துள்ளார்கள்.  “இந்த யாப்பு உருவாக்கத்தின் வெற்றியில் தங்களுக்கு பகிரப்பட்ட பொறுப்பு இருப்பதாக” உரிமை கொண்டாடுகிறார்கள்.Search results for "Northern provincial council"

மார்ச் 9, 2016 இல் சிறிலங்கா நாடாளுமன்றம்  ஓர் அரசியல் அமைப்புப் பேரவையை  (நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு ஒரு சபையாக இருப்பார்கள்) உருவாக்குவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.  அரசியல் நிர்ணயசபையின் வழிநடத்தல் குழு செப்தெம்பர் 21, 2017 அன்று தனது இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. இந்த இடைக்கால அறிக்கை பெரும்பாலும் 13 ஆவது சட்ட திருத்தத்தை விரிவாக்கியும் அரசியல் அமைப்புப் பேரவையின் மத்திய – சுற்றயல் உறவுகள் பற்றிய உபகுழுவின் அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலையீட்டை அடுத்து எழுதப்பட்ட  இந்திய – இலங்கை உடன்படிக்கையை அடுத்து 13 ஆவது சட்ட திருத்தம்  நொவெம்பர் 14, 1987 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது. இந்த உடன்பாடு ‘ஐக்கியம், இறையாண்மை மற்றும் ஆட்புல உறுதிப்பாட்டைக்  கட்டிக்காக்கும் அதேவேளை சிறிலங்காவின் இனச் சிக்கலைத் தீர்த்து வைப்பதை நோக்கமாகக்  கொண்டது’.  மாகாண சபைகளுக்கு அரசியல் அதிகாரத்தை கொடுப்பதற்காகவே இந்த 13 ஆவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனினும்  இந்திய தலையீடு, இந்திய – இலங்கை உடன்படிக்கை மற்றும் 13 ஆவது சட்ட திருத்தம் பெருத்த தோல்விகளில் முடிந்தன.  இதனைத் தொடர்ந்து வந்த எஞ்சிய சகாப்தங்களில் மோதல் தவிர்ப்பல்ல மாறாக  மோதல்  அதிகரிப்பு, வன்முறை மற்றும் பயங்கரவாத இயக்கமான வி.புலிகள் தமிழ்மக்களின் ‘ஏகப் பிரதிநிதியாக’ உருப்பெற்றன. மே 2009 இல் வி.புலிகள் இராணவ மட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வி.புலிகள் ஆதரவுக் குழு மற்றும் “பன்னாட்டு சமூகம்” 13 ஆவது திருத்த அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை  தீவிரப்படுத்தியுள்ளன.

நிறைவேற்ற அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையை ஒழித்தல் மற்றும் தேர்தல் முறையை சீர் செய்தல் என்ற ஆணையைப் பெற்று இப்போதுள்ள சிறிலங்கா அரசு சனனவரி 2015 இல் ஆட்சிக்கு வந்தது.  இந்த அரசுக்கு ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்கு அல்லது ஆட்சிக் கட்டமைப்பை ஒற்றையாட்சியில் இருந்து இணைப்பாட்சிக்கு மாற்றவோ ஆணை கொடுக்கப்படவில்லை. உள்ளூர் மக்களது கண்ணேட்டத்தில் அரசாங்கம் முகம்கொடுக்கும் நெறிமுறைகளுக்கு, எடுத்துக் காட்டாக மத்திய வங்கி பிணைமுறி விற்பனை பற்றிய மோசடி, புது யாப்பு உருவாக்கத்தைவிட முன்னுரிமை கொடுக்கிறார்கள்.  இருந்தும் 13 ஆவது திருத்த சட்டத்துக்கு அப்பால், நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைக்  குறைக்கும்  அதிகாரப் பரவலாக்கல் முன் வைக்கப்பட்டுள்ளது.  ஆனால் யாப்பு உருவாக்கம் பற்றிய வெளிப்படைத்தன்மை  இல்லாத குறைபாடு  இருக்கிறது.  புதிய யாப்பைப் பற்றிய தகவல்கள் நாட்டின் பொதுமக்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. இடைக்கால அறிக்கையில்  முக்கிய விடயங்கள் தெளிவற்றதாகவும் மழுப்பலாகவும் இருக்கின்றன.  தேசியப் பட்டியலில் (மத்திய அரசாங்கத்தின் அதிகாரம்) இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்குத் தேவையான விடயங்கள்  உள்ளடக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

எனினும்,  இந்த அறிக்கை விரிவான தேசியப் பட்டியல் ஒன்றைக் கொடுக்கவில்லை.  இதனால்  13ஏ சட்ட திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பட்டியலில்  இருக்கும் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம், தனிமங்கள், குடிவரவு – குடியுரிமை,  புள்ளிவிபரம்,  அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள், துறைமுகங்கள், பெருந்துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, விமானநிலையங்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து இருக்குமா அல்லது புதிய யாப்பின் கீழ் மாகாணசபைக்கு பாரப்படுத்தப்படுமா என்பதுபற்றிப்  பொதுமக்கள் இருட்டில் விடப்பட்டுள்ளார்கள். இடைக்கால அறிக்கை யாப்பு நீதிமன்றத்தை அறிமுகப்படுத்துகிறது. இப்படியான நீதிமன்றம், இது  இப்போதுள்ள 13ஏ சட்ட திருத்தத்தில் இல்லை, மத்தியஅரசுக்கும் மாகாண சபைக்கும் இடையில் எழும் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும். ஆனால்  அதில்  யார் யார் அதில் இடம்பெறுவார்கள்,  அது எப்படி இயங்கும்  என்ற விபரம்   இடைக்கால அறிக்கையில் இல்லை.  (தொடரும்)

https://www.huffingtonpost.com/entry/sovereignty-territorial-integrity-and-constitutional_us_59cbcb67e4b028e6bb0a6746


சிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்தம்

முனைவர் அசோகா பண்டாரகே

(தமிழாக்கம் நக்கீரன்)

முன்னைய தொடர்ச்சி……

நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையை ஒழித்தல் மற்றும் தேர்தல் முறையை சீர் செய்தல் என்ற ஆணையைப் பெற்று இப்போதுள்ள சிறிலங்கா அரசு சனவரி 2015 இல் ஆட்சிக்கு வந்தது.  இந்த அரசுக்கு ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்கு அல்லது ஆட்சிக் கட்டமைப்பை ஒற்றையாட்சியில் இருந்து இணைப்பாட்சிக்கு மாற்றவோ ஆணை கொடுக்கப்படவில்லை. உள்ளூர் மக்களது கண்ணேட்டத்தில் அரசாங்கம் முகம்கொடுக்கும் நெறிமுறைகளுக்கு, எடுத்துக் காட்டாக மத்திய வங்கி பிணை முறி பற்றிய மோசடி, புது யாப்பு உருவாக்கத்தைவிட முன்னுரிமை கொடுக்கிறார்கள்.  இருந்தும் 13 ஆவது திருத்த சட்டத்துக்கு அப்பால், நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை  குறைக்கும்  அதிகாரப் பரவலாக்கல் முன் வைக்கப்பட்டுள்ளது.  இதில் யாப்பு உருவாக்கம் பற்றிய வெளிப்படைத்தன்மை  இல்லாத குறைபாடு  இருக்கிறது.  புதிய யாப்பைப் பற்றிய தகவல்கள் நாட்டுப் பொதுமக்களுக்கு தெரியாமல் இருக்கிறது.Search results for "Northern provincial council"

இடைக்கால அறிக்கையில்  முக்கிய விடயங்கள் தெளிவற்றதாகவும் மழுப்பலாகவும் இருக்கின்றன.  தேசியப் பட்டியலில் (மத்திய அரசாங்கத்தின் அதிகாரம்) இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்குத் தேவையான விடயங்கள்  உள்ளடக்கப்படும் எனக் கூறப்படுகிறது.  எனினும்,  இந்த அறிக்கை விரிவான தேசியப் பட்டியல் ஒன்றைக் கொடுக்கவில்லை.  இதனால்  13ஏ சட்ட திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பட்டியலில்  இருக்கும் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம், தனிமங்கள், குடிவரவு – குடியுரிமை,  புள்ளிவிபரம்,  அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள், துறைமுகங்கள், பெருந்துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, விமானநிலையங்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து இருக்குமா அல்லது புதிய யாப்பின் கீழ் மாகாணசபைக்கு பாரப்படுத்தப்படுமா என்பன பற்றிப்  பொதுமக்கள் இருட்டில் விடப்பட்டுள்ளார்கள்.

இடைக்கால அறிக்கை யாப்பு நீதிமன்றத்தை அறிமுகப்படுத்துகிறது. இப்படியான நீதிமன்றம், இது  இப்போதுள்ள 13ஏ சட்ட திருத்தத்தில் இல்லை, இந்த நீதிமன்றம் மத்தியஅரசுக்கும் மாகாண சபைக்கும் இடையில் எழும் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும். ஆனால்  அதில்  யார் யார்  இடம்பெறுவார்கள்,  அது எப்படி இயங்கும்  என்ற விபரம்   இடைக்கால அறிக்கையில் இல்லை.

வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இப்போதுள்ள அரசியல் யாப்பை ஈடுசெய்கிறது. உறுப்புரை 2 (clause 2) “சிறிலங்கா குடியரசு ஒற்றையாட்சி அரசு” என்பதற்கு ஈடாக “சிறிலங்கா (இலங்கை)  ஒரு ஏகிய இராஜ்ஜியம்/ஒருமித்த நாடு,   மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்கள் அரசியல் யாப்பில் குறிப்பிட்டதற்கு அமைய அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும்”. இந்த தொடக்க உறுப்புரையே  மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது. இந்த உறுப்புரை கொலனித்துவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிலோன் என்ற வார்த்தையை மீள உயிர்ப்பிப்தாக உள்ளது. சிலோன் என்ற சொல் உத்தியோகபூர்வமாக 1972 இல் கைவிடப்பட்டுவிட்டது.  இந்த உறுப்புரிமை  ஒற்றையாட்சி மற்றும் இணைப்பாட்சி என்ற சர்ச்சைக்குரிய ஆங்கிலப் சொற்களுக்கு ஈடாக சிங்கள – தமிழ் சொற்றொகுதிகள் வஞ்சகமாகப் பயன்படுத்துள்ளன. ஆங்கில அறிக்கையில் இந்தச் சொற்றொகுதி  அப்படியே  சிங்களத்திலும் தமிழிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிங்களச் சொற்றொகுதியான ஏகிய இராஜ்ஜியம் ஒற்றையாட்சி நாடு என மொழிபெயர்க்கப்படலாம்.   மறுபுறம் தமிழில் ஒருமித்த நாடு என்பது ஐக்கிய நாடு அல்லது இணைப்பினால் உருவாக்கப்பட்ட நாடு என மொழிபெயர்க்கப்படலாம். நாட்டின் அடையாளத்துக்கு  வெவ்வேறுவிதமான மொழிபெயர்ப்பு கொடுப்பதால் இரண்டு மொழிசார்ந்த   சமூகங்களுக்கு இடையே எதிர்காலத்தில்  இந்த அரசியல் அமைப்பு  உருவாக்க விரும்பும் உண்மை மற்றும் மீளிணகத்துக்குப்  பதிலாக இந்த உறுப்புரை மோதலுக்கு அடித்தளம் இடுகிSearch results for "Eastern provincial council"றது.

இப்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய யாப்பின் நோக்கம் மத்திய அரசின் அதிகாரங்களை இடித்து வீழ்த்தி (மாகாணங்களுக்கு) அதியுச்ச அதிகாரப் பரவலாக்கத்தை வழங்குவது  ஆகும்.    இந்தச் சீர்திருத்தங்கள் “துணையாக்கற் கோட்பாட்டை”  ஊக்கிவிக்கிறது.  துணையாக்கற்  கோட்பாடு என்பது “மிகக்கீழ் மட்டததில்  கையாளப்பட வேண்டிய எதுவாகினும் அதற்குரிய  அதிகாரத்தை அதனிடத்து அளிக்கப் படவேண்டும்” என்பதாகும்.

மூன்று மட்ட ஆட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவையாவென மத்திய அரசு, மாகாண சபைகள்  மற்றும் உள்ளாட்சி அதிகாரசபைகள்.   மாகாணம் அதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக இருக்கும் எனத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  உள்ளாட்சி அதிகார சபைகள் கிட்டத்தட்ட எல்லாம் மாகாணசபைக்குக் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது.  மத்திய அரசு மாகாண சபையோடு பங்குகொள்ளும் முறைமையைக் கைக்கொள்ள வேண்டும். இந்த அறிக்கை மேலும் கூறுவதாவது “மாகாண சபையால் மாகாணசபைக்குரிய நிரலின் கீழ் இயற்றப்படும் நியதிச் சட்டங்களை தேசியக்  கொள்கை ஒதுக்கித் தள்ளமுடியாது. வேறுவிதமாகச் சொன்னால் மத்திய அரசு பிரதேச மட்டத்தில் மாகாண சபையின்  அடிதழுவி நடக்க  வேண்டியிருக்கும்.

வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இப்போதுள்ள அரசியல் யாப்பை ஈடுசெய்கிறது. உறுப்புரை 2 (clause 2) “சிறிலங்கா குடியரசு ஒற்றையாட்சி அரசு” என்பதற்கு ஈடாக “சிறிலங்கா (இலங்கை)  ஒரு ஏகிய இராஜ்ஜியம்/ஒருமித்த நாடு,   மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்கள் அரசியல் யாப்பில் குறிப்பிட்டதற்கு அமைய அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும்”. இந்த தொடக்க உறுப்புரையே  மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது. இந்த உறுப்புரை கொலனித்துவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிலோன் என்ற வார்த்தையை மீள உயிர்ப்பிப்தாக உள்ளது. சிலோன் என்ற சொல் உத்தியோகபூர்வமாக 1972 இல் கைவிடப்பட்டுவிட்டது.  இந்த உறுப்புரிமை  ஒற்றையாட்சி மற்றும் இணைப்பாட்சி என்ற சர்ச்சைக்குரிய ஆங்கிலப் சொற்களுக்கு ஈடாக சிங்கள – தமிழ் சொற்றொகுதிகள் வஞ்சகமாகப் பயன்படுத்துள்ளன. ஆங்கில அறிக்கையில் இந்தச் சொற்றொகுதி  அப்படியே  சிங்களத்திலும் தமிழிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிங்களச் சொற்றொகுதியான ஏகிய இராஜ்ஜியம் ஒற்றையாட்சி நாடு என மொழிபெயர்க்கப்படலாம்.   மறுபுறம் தமிழில் ஒருமித்த நாடு என்பது ஐக்கிய நாடு அல்லது இணைப்பினால் உருவாக்கப்பட்ட நாடு என மொழிபெயர்க்கப்படலாம். நாட்டின் அடையாளத்துக்கு  வெவ்வேறுவிதமான மொழிபெயர்ப்பு கொடுப்பதால் இரண்டு மொழிசார்ந்த   சமூகங்களுக்கு இடையே எதிர்காலத்தில்  இந்த அரசியல் அமைப்பு  உருவாக்க விரும்பும் உண்மை மற்றும் மீளிணகத்துக்குப்  பதிலாக இந்த உறுப்புரை மோதலுக்கு அடித்தளம் இடுகிறது.

இப்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய யாப்பின் நோக்கம் மத்திய அரசின் அதிகாரங்களை இடித்து வீழ்த்தி (மாகாணங்களுக்கு) அதியுச்ச அதிகாரப் பரவலாக்கத்தை வழங்குவது  ஆகும்.    இந்தச் சீர்திருத்தங்கள் “துணையாக்கற் கோட்பாட்டை”  ஊக்கிவிக்கிறது.  துணையாக்கற்  கோட்பாடு என்பது “மிகக்கீழ் மட்டததில்  கையாளப்பட வேண்டிய எதுவாகினும் அதற்குரிய  அதிகாரத்தை அதனிடத்து அளிக்கப் படவேண்டும்” என்பதாகும். Image Search Results

மூன்று மட்ட ஆட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவையாவென மத்திய அரசு, மாகாண சபைகள்  மற்றும் உள்ளாட்சி அதிகாரசபைகள்.   மாகாணம் அதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக இருக்கும் எனத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  உள்ளாட்சி அதிகார சபைகள் கிட்டத்தட்ட எல்லாம் மாகாணசபைக்குக் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது.  மத்திய அரசு மாகாண சபையோடு பங்குகொள்ளும் முறைமையைக் கைக்கொள்ள வேண்டும். இந்த அறிக்கை மேலும் கூறுவதாவது “மாகாண சபையால் மாகாணசபைக்குரிய நிரலின் கீழ் இயற்றப்படும் நியதிச் சட்டங்களை தேசியக்  கொள்கை ஒதுக்கித் தள்ளமுடியாது. வேறுவிதமாகச் சொன்னால் மத்திய அரசு பிரதேச மட்டத்தில் மாகாண சபையின்  அடிதழுவி நடக்க  வேண்டியிருக்கும்.

இந்த இடைக்கால அறிக்கை இரண்டு அல்லது அதற்கு மேலான மாகாணசபைகள் ஒரு மாகாணசபையாக உருவாகுவது சாத்தியம் எனச் சொல்கிறது.  தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு இலங்கையின் உச்ச நீதிமன்றத்தால் “அரசியல் அமைப்புக்கு எதிரானது, சட்டத்துக்கு முரணானது மற்றும் சட்ட வலுவற்றது” என்று ஒக்தோபர் 2006  இல்  தீர்ப்பளிக்கப்பட்டு அவை பிரிக்கப்பட்டாலும் இந்த அறிக்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் ஒரே மாகாணம் என்பதை அடையாளம் கண்டுள்ளது.

வாதத்துக்கிடமான அந்த இணைப்பை மீளக் கொண்டுவருவது தமிழ்ப் பிரிவினையாளர்கள் மற்றும் அவர்களது  கூட்டாளிகளை திருப்பிப்படுத்தல் கூடும். எனினும் கிழக்கு மாகாணத்தில்  உள்ள சிங்களவர் – முஸ்லிம் சமூகங்கள் அதனை எதிர்ப்பார்கள். சிங்களவர்களும் முஸ்லிம்களும் வட – கிழக்கு இணைப்பை எப்போதும் எதிர்த்து வந்துள்ளார்கள். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அளவுள்ள வட –  கிழக்கு மாகாணங்கள் வரலாற்று அல்லது மக்கள்தொகை அடிப்படையில் இணப்பதற்கான அடிப்படை கிடையாது,  வெவ்வேறு பூகோளப் பகுதிகளில் வாழும் ‘சிறுபான்மை’ யினரை பாதுகாக்க தனித்துவமான “சமுதாய சபைகளை”  உருவாக்க செய்யப்படும் என்ற பரிந்துரை மனிதவுரிமை, நல்லிணக்கம் அல்லது அரசியல் தீர்வு ஆகியவற்றுக்குப் பதில் வகுப்புவாதத்தையும் இனமோதல்களையும்  மேலும் மோசமாக்கவே வழிவகுக்கும்.

“இந்தியாவின் தலையீடு காரணமாக எழுதப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை காரணமாக இலங்கை அரசியல் யாப்பில்  13ஏ சட்ட திருத்தம் நொவெம்பர் 14,1987 இல் இயற்றப்பட்டது.  இலங்கையின் “ஐக்கியம், இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு” ஆகியவற்றைப் பாதுகாக்கும் அதேவேளை  இந்த உடன்படிக்கை ‘சிறிலங்காவின் இனச் சிக்கலுக்கு’ தீர்வு காண்பதற்காக எழுதப்பட்டது.  மாகாண சபைகள் மூலமாக அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்க 13ஏ திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.”

“The 13th Amendment to the Sri Lankan Constitution was passed on November 14, 1987 following Indian intervention and the signing of the Indo-Lanka Accord. The Accord was intended to resolve ‘the ethnic problem of Sri Lanka’ while preserving its ‘unity, sovereignty and territorial integrity’. The 13th Amendment was introduced to create Provincial Councils for devolving political power”

சட்ட திருத்தம் 13ஏ இன் கீழ்  மத்திய அரசின் பிரதிநிதி என்ற முறையில் ஆளுநர் முழு அளவிலான நிறைவேற்று அதிகாரம் படைத்தவராக இருப்பார். அவருக்கு ஒரு சபையைக் கலைக்கக் கூட அதிகாரம்  உண்டு. ஆனால், இப்போது பரிந்துரைத்திருக்கும் பரிந்துரைகள் ஆளுநரை ஒரு  பெயர்சார்ந்த ஒருவராக ஆக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் அதிகாரமும் அதிகளவு குறைக்கப்பட்டுள்ளது.  13ஏ சட்ட திருத்தத்தின் கீழ் மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் பொதுவான ஒருங்கிணைந்த பட்டியல் இருக்கிறது. எனினும் மத்திய அரசை பலவீனப்படுத்தும் நோக்கோடு இந்தப் புதிய அரசியல் யாப்பில் அந்த ஒருங்கிணைந்த பட்டியல் நீக்கப்பட்டுள்ளது.

அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தேசிய திட்டங்களுக்கு வேண்டிய காணியை  மத்திய அரசு மாகாண நிருவாகத்திடம் கேட்டுப் பெறவேண்டும் என்கிறது. மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையில் காணி  தொடர்பாக பிணக்கு ஏற்பட்டால்  மத்திய அரசு மற்றும் மாகாண சபையின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு தீர்ப்பாயத்துக்கு விடப்பட வேண்டும். தீர்ப்பாயத்தின் முடிவுகள் தொடர்பாக மேன்முறையீடு செய்வதென்றால் அது அரசியல்யாப்பு நீதிமன்றத்திடம் முறையீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் அதிகாரத்தை மேலும் குறைக்கும் நோக்கோடு  ஒரு தேசிய காணி ஆணையம் உருவாக்கப்படவுள்ளது. இந்த ஆணையத்தில் மத்திய அரசு – மாகாண சபை இரண்டுக்கும் சமமான பிரதிநித்துவம் இருக்கும்.  அரசியல்யாப்பு நீதிமன்றத்தின் முடிவுகள் இறுதியானது.  எக்காரணம் கொண்டும்  வேறெந்த நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் அதுபற்றி கேள்வி கேட்க முடியாது. அரசியல் யாப்பு நீதிமன்றம் மட்டுமே விதிவிலக்கு.

மாகாணசபைக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு  ஒருதலைப் பட்சமாக திரும்ப எடுக்க முடியாது. வேறுவிதமாகச் சொன்னால் சிறிலங்கா ஒரு இணைப்பாட்சி (federal) அரசாக மாறியுள்ளது. ஆட்சி அதிகாரம் அரசியல்யாப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கனை மத்திய அரசு நினைத்தவாறு திருப்பி எடுக்க முடியாது.

இறையாண்மை மற்றும் ஆள்புலக்  கட்டுறுதி   

புதிய அரசியல்யாப்பு ஒவ்வொரு மாகாணமும் அரசியல்யாப்பின் படி சுயாதீனமாக இயங்கக் கூடியவாறு ஒரு வரைவை எழுதியுள்ளது. மத்திய அரசில் இருந்து பிரிந்து போகக் கூடிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.  தமிழ் அரசுக் கட்சியின் தாபகரான எஸ்ஜேவி செல்வநாயகம் அவர்களின்  எதிர்பார்ப்பு  இணைப்பாட்சி தனிநாட்டுக்கு இட்டுச் செல்லும் என்பதே.  அவர் தொடக்கிய கட்சி ஆங்கிலத்தில்  Federal Party  அல்லது   Tamil State Party என்று தமிழில் அழைக்கப்பட்டது.  இருப்பினும் வட மாகாணத்தை பிரதிநித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள் (கொழும்பில் வாழ்ந்து கொண்டு) பிரிவினைக்குக் கூக்குரல் இட்டாலும் முன்மொழியப்பட்டுள்ள இணைப்பாட்சிக் கட்டுமானம் ஏனைய அரசியல்வாதிகள் பிரிவினையையும்  கையில் எடுக்க ஊக்குவிக்கக் கூடும். அதுமட்டுமல்ல தனியான முஸ்லிம் அரசியல் அலகு வேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாணத்தில் மீள உயிர்ப்பிக்க உதவும்.  இந்தக் கோரிக்கை  2002 ஆம் ஆண்டு தோல்வி கண்ட நோர்வே பேச்சு வார்த்தையின் போது வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.  எதிரான அரசியல் யாப்பில் பிரிவினைக்கு எதிரான  உத்தரவாதங்கள் உலகின் பல பிராந்தியங்களில், எடுத்துக்காட்டாக கொசோவோ, கற்றலோனா, இராக்,  ஏன் தமிழ்நாடு உட்பட,  பிரிவினையைத் தடுக்க முடியவில்லை.  புதிய அரசியல் யாப்பின் ஊடாக உண்டாக்கப்படும் அரசியல் சீர்குலைவு மற்றும் நாடு துண்டு துண்டாக்கப் படுதல் (இலங்கைத்) தீவில் ஒன்றோடு ஒன்று போரிடும் குட்டி – அரசுகளின் தோற்றத்தில் முடியலாம்.Search results for "Eastern province"

விரியும் நோக்கங்கள்

இனம் மற்றும் மதவாதக் குழுக்களிடையே மோதல்களும் வன்முறையும் எப்போதும் இருந்துள்ளன  எனினும்  பொதுநலப்பண்பும் ஒத்துழைப்பும் மேலோங்கி வந்திருக்கிறது. பூகோள அரசியலில் இருந்து வரும் பயமுறுத்தல்களை நாடு முகம் கொடுத்து வருவதை சிறிலங்காவில் வாழும் இனம், மதம், சமூக வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் நாட்டின் இறையாண்மைக்கும் ஆட்புல கட்டுறுதிக்கும்  விடுக்கப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். இறுதியில் பருவகால மாற்றம், உயர்ந்துவரும் கடல்மட்டம், அடிக்கடி வரும் வரட்சி, வெள்ளம், மணிசரிவு போன்றவற்றில் இருந்து  நாட்டின்  சூழல் கட்டுறுதியையும் தக்க வைத்தலையும் காப்பாற்ற மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரளவேண்டும்.

ஒரு சிலரது குறுகிய, உள்ளேயும் வெளியேயும் குறுகிய கால நலன்கள் ஆகியவற்றின் ஆதாயத்துக்காக மட்டும் செய்யப்படும் அபாயகரமான அரசியல்யாப்பு சீர்திருத்தத்தை எதிர்க்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கும் சூழலுக்கும் எதிராக  எழும் பொதுப் பயமுறுத்தல்களை எதிர்கொள்ளப் பலமான ஒரு மத்திய அரசு தேவைப்படுகிறது. அது வெளிநாடுகளுக்கு அடிமையாக இருக்கிற ஏக இனமாகவோ, ஊழல்  நிறைந்த மத்திய அரசாகவோ (mono-ethnic, corrupt Centre) இருக்க முடியாது. அது  எல்லா இனக் குழுக்களைப் பிரதிநித்துவப் படுத்துவதாகவும் அதிகாரங்களையும் வளங்களையும் பகிர்ந்து கொள்வதாகவும்  இருக்க வேண்டும். உண்மையான  உள்ளூர் மற்றும் ஆக்க பூர்வமான தீர்வுகளுக்கு  ‘பெட்டிக்கு வெளியே’ (மக்கள்) வர வேண்டிய நேரம் இது.  வேற்றுமையில் ஒற்றுமை காண ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் மற்றும் கூட்டுப் பங்காண்மையுடனும்  மற்றும் மனவுணர்வும் தேவைப்படுகிறது.

இந்தக் கட்டுரையை எழுதிய முனைவர்  அசோகா பண்டாரகே தனக்குச் சாதகமாக சிலவற்றை எழுதியுள்ளார். எடுத்துக்காட்டாக “புதிய அரசியல்யாப்பு ஒவ்வொரு மாகாணமும் அரசியல்யாப்பின் படி சுயாதீனமாக இயங்கக் கூடியவாறு ஒரு வரைவை எழுதியுள்ளது. மத்திய அரசில் இருந்து பிரிந்து போகக் கூடிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது”   என்பது பிழையாகும். அப்படி எந்த முன்மொழிவும் இடைக்கால அறிக்கையில் இல்லை.  அதில் பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்பதை சிங்களப் பதமான “ஏகிய இராஜ்ஜிய” நன்கு விபரிக்கப்படுகிறது. இது தமிழ மொழியில் “ஒருமித்த நாடு” என்பதற்கு சமனாகும்.

இந்தக் கட்டுரையாளர் போலவே பல சிங்கள – பவுத்த தேசியவாதிகள் இந்த இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு இணைப்பாட்சியை வழங்குகிறது என எழுதுகிறார்கள். அதிகாரப் பரவலாக்கல் செய்வதாயின் அது மாவட்ட மட்டத்தில் செய்யப்பட வேண்டுமேயொழிய மாகாண சபை அதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக இருக்கக் கூடாது என வாதாடுகிறார்கள். (முற்றும்)

https://www.huffingtonpost.com/entry/sovereignty-territorial-integrity-and-constitutional_us_59cbcb67e4b028e6bb0a6746

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply