அமெரிக்க சந்திப்புக்கள் குறித்து சுமந்திரன் எம்.பி விரிவான விளக்கம்

அமெரிக்க சந்திப்புக்கள் குறித்து சுமந்திரன் எம்.பி விரிவான விளக்கம்

 2017-10-09 06

அதி­யுச்­ச­மான அதி­கா­ரப்­ப­கிர்வை தமிழ்­மக்­க­ளுக்கு வழங்­கவே புதிய அர சியல் சாச­னத்தை உரு­வாக்கி வரு­கி றோம். அதை நிறை­வேற்­று­வ­தற்கு முழு­மை­யா­கவும், அர்ப்­ப­ணிப்­பு­ட­னும்­ அ­ர­சாங்கம் செயல்­பட்டு வரு­கின்­றது என்ற உத்­த­ர­வா­தத்தை வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­ மான நிமால் சிறி­பால டிசில்வா வெளி­ நாட்டு பிர­மு­கர்­க­ளுக்கும் ராஜ­தந்­தி­ரி­ க­ளுக்கும் வழங்­கி­யமை எமக்கு மேலும் நம்­பிக்கை தரு­கி­றது என யாழ். மாவட்ட பாரா­ளு ­மன்ற உறுப்­பி­னரும் தமிழ்த் தேசியக்  கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மா­கிய எம்.ஏ.சுமந்­திரன் கூறினார்.Search results for "MA Sumanthiran"

அமெரிக்காவுக்கு கடந்த மாத இறுதியில் சபாநாயகர் கரு ஜயசூரியா தலைமையில் குழுவொன்று விஜயம் செய்தது. இதில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சந்திரானி பண்டார, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார,பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், குமார வெல்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்கள் ஒவ்வொன்றிலும் இலங்கையின் நல்லிணக்க முயற்சி, சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கம், தகவலுக்கான உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அமெரிக்க அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

சந்திப்பின் இறுதியில் அமெரிக்க அதிகாரிகள், புதிய அரசியலமைப்பு தொடர்பில் இலங்கைக் குழுவினரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர். புதிய அரசியலமைப்புஊடாகத் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப் பெறுமா என்பதே அவர்களின் பிரதான கேள்வியாக இருந்துள்ளது.

இந்தக் கேள்விகளுக்கு புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் வழிநடத்தல் குழுவிலிருந்த நிமல் சிறிபால டி சில்வாவே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பதில் வழங்கியுள்ளார்.  கேட்கப்பட்ட மேலதிக கேள்விகளுக்கே, பாராமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்துள்ளார்.

பாரா­ளு­மன்றக் குழு­வுடன் அமெ­ரிக்கா சென்று திரும்­பி­யுள்ள  அவர்­ கருத்துத் தெரி­விக்­கையில்,

சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மை­யி­லான பாரா­ளு­மன்றக் குழுவில் நான் இடம் பெற்­றி­ருந்தேன். வொஷிங்டன் சென்ற நாம் அமெ­ரிக்க காங்­கி­ரஸின் பங்­காளி அமைப்பு குழுக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினோம். அச்­சந்­திப்­புக்­க­ளின்­போது இலங்­கையில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள அர­சியல் சீர்­தி­ருத்தம் பற்றி நிறைய கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றன. தகவல் அறியும் சட்டம் சுயா­தீன ஆணைக்­குழு போன்ற பல்­வேறு விட­யங்கள் பேசப்­பட்­டன.

சந்­தித்த ஒவ்­வொரு பிர­மு­கர்­களும் ராஜ­தந்­தி­ரி­களும் புதிய அர­சியல் சாசனம் தொடர்­பா­கவே கேள்­விகள் எழுப்­பி­னார்கள்.

அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா வெளி­நாட்டு பிர­மு­கர்­க­ளுக்கு விளக்­கும்­போது ஒரு­வி­ட­யத்தை மிகத் தெளி­வாகக் கூறினார். புதிய அர­சியல் சாச­ன­மொன்­றைக்­கொண்டு வரு­வ­தற்­கு­ரிய நல்ல சூழ்­நி­லை­யொன்று தற்­பொ­ழுது உரு­வா­கி­யுள்­ளது.

நாங்கள் அதில்­மு­ழு­மை­யாக ஈடு­பட்டு வரு­கிறோம். தமிழ் மக்­க­ளுக்கு அதி­கூ­டிய அதி­கா­ரப்­ப­கிர்வை வழங்கு வதற்கு நாங்கள் இணங்­கி­யுள்ளோம் என அவர் வெளி­நாட்டு ராஜ தந்­தி­ரிகள் முன் தனது கருத்தைப் பகி­ரங்­க­மாகக் கூறினார்.

அர­சியல் தீர்வைக் கொண்­டு­வரும் விட­யத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது. பொறுப்­புடன் செயல்­பட்டு வரு­கி­றது.சிங்­கள கட்­சிகள் மற்றும் சிங்­கள தலை­மை­க­ளுக்கு பிரச்­சினை உண்­டா­கா­த­வண்ணம் தீர்­வுக்­கு­ரிய வழி­வ­கை­களை செய்­து­வ­ரு­கிறோம்.

நாங்கள் தற்­பொ­ழுது கேட்­டி­ருக்கும் எல்­லைக்­குக்கீழ் ஓர் அங்­கு­லம்­கூட செல்ல முடி­யாது என்­பதை அவர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம். அதிலும் சில விட­யங்கள் இழு­பறி நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது.

குறிப்­பிட்டு கூறு­வ­தானால் வட- கிழக்கு இணைப்பு மற்றும் ஏலவே மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீளப்­பெறப் படா­மைக்­கு­ரிய பொறி­முறை ிமுறை மற்றும் நீதி அதிகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் இறுதி வரைவு செய்யப்படுகின்றபோது அது முழுமையான அர்த்தமுள்ளதாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் பட்சத்திலேயே அந்த அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியும் என்று எம்மைச் சந்­தித்த பிரமுகர்களிடம் எடுத்­துக்­கூ­றினேன் என்றார் .

http://tnaseiithy.com/news/sumanthiran-mp-s-description-of-us-meetings


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply