வடக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் மக்களின் உணர்வுகனை மதிக்க வேண்டும்!
கட்சி அரசியலுக்காக சின்னத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது!
வடக்கு மாகாண கல்வி அமைச்சரினால் இடை நிறுத்துமாறு உத்தரவிட்ட கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய வைரவிழா தொடர்பில் உத்தரவினை செவிசாய்க்காதமைக்கு விளக்கம் கோரப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பாடசாலையின் வைரவிழா நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் சிலர் முறையிட்டதாக சுட்டிக்காட்டி அந்த நிகழ்வுகளை நிறுத்துமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் பணிப்பின் பெயரில் செயலாளரின் ஒப்பத்துடன் மூத்த உதவிச் செயலாளர் எழுத்தில் அறிவுறுத்தியிருந்தார்.
இருப்பினும் கல்வி நடவடிக்கையில் சுயநல அரசியலைக் கருத்தில்க் கொண்டே மேற்படி நிகழ்வை நிறுத்துவதாக பாடசாலைத் தரப்புக்கள் சுட்டிக்காட்டி நிகழ்வை அனுமதிக்குமாறு கல்வி அமைச்சரை நாடினர். ஆனால் கல்வி அமைச்சர் நிகழ்வை நிறுத்தியதற்கான காரணமாக அறிக்கை வெளியிடப்பட்டபோதும் அதற்கான ஒப்புதலை அளித்திருக்கவில்லை.
இதன் காரணமாக பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள் என அனைவரும் ஒருங்கே ஒன்றினைந்து கல்வி அமைச்சரின் நிகழ்வைப் பிற்போடும் உத்தரவு தொடர்பில் ஆராய்ந்த்தோடு அந் உத்தரவிற்கு அடிப்படையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை அழைப்பது தொடர்பிலும் மீண்டும் ஆராய்ந்தனர்.
அவ்வாறு ஆராய்ந்தபோது அமைச்சரின் கூற்றுக்காக நிகழ்வை ஒத்தி வைத்து பாடசாலையினதும் கிராமத்தினதும் நன்மதிப்பை இழப்பதில்லை எனவும் மக்கள் பிரதி நிதியின் அழைப்பையும் நிறுத்துவதில்லை என்றும் மீண்டும் தீர்மானித்து அதன்பிரகாரம் நிகழ்வுகள் மிகக்கோலாகலமாக இடம்பெற்றன.
இவ்வாறு இடம்பெற்ற நிகழ்வு தொடர்பிலேயே கல்வி அமைச்சின் செயலாளர் தற்போது விளக்கம் கேட்டிருக்கிறார்.
நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம். இன்றைய கல்வி அமைச்சர் மாகாணசபையைக் குழப்புவதில் ஒருவர் என முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அடையாளம் காணப்பட்டவர். கல்வி அமைச்சர் அந்த மாவட்ட நா.உ, பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் போன்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் நடைபெறும் இப்படியான நிகழ்ச்சியில் அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கட்டாயமாக அழைக்கப்பட வேண்டும். அது தனிமனிதருக்கு அல்லாது அந்தப் பதவிக்கு கொடுக்கப்படும் கௌரவமாகும். இதில் கல்வி அமைச்சர் அரசியல் செய்ய நினைத்தது தேவையற்ற திருப்பணி. ல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் பாவம். அவர் அமைச்சர் சொன்னதைச் செய்கிறார். சர்வேஸ்வரன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கல்வி அமைச்சர் பதவி நிரந்தரமில்லை. அடுத்த தேர்தலில் இபிஎல்ஆர்எவ் கட்சி துடைத்து எறியப்படும். அதற்கான வேலைகளை அந்தக் கட்சி தலைவரும் உறுப்பினர்களும் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.