சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! (1-15)

 சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
(1)

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் நாள் (வியாழக்கிழமை) செக் குடியரசின் தலைநகரான பிராக் நகரில் பன்னாட்டு வானியலாளர்கள் மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உலகளாவிய அளவில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 வானியல் அறிஞர்கள் பங்கேற்றனர்.

பொதுவாக இப்படியான மாநாடு பற்றிய செய்திகள் பெரிதாக வெளிவருவதில்லை. ஊடகங்கள் வானியலை விட சோதிடம் பற்றிய செய்திகளையே அதிகம் பிரசுரிக்கின்றன. மக்களும் அப்படியான செய்திகளையே வாசிக்க விரும்புகிறார்கள்.

ஆனால் வானியலாளர் மாநாட்டில் புளுட்டோ பதவி இறக்கம் செய்யப்பட்டது பெரிய செய்தியாகிவிட்டது.

1781 ஆம் ஆண்டு வரை வியாழனைத் தாண்டி வேறு கோள்களை மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த ஆண்டு யுரேனஸ் என்ற கோளும் 1846 இல் ஆண்டு நெப்தியூன் கோளும் 1930 இல் புளூட்டோ கோளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தக் கண்டு பிடிப்புகளால் கோள்களின் எண்ணிக்கை ஆறில் இருந்து ஒன்பதாக உயர்ந்தது. ஆக, கிரகங்களின் எண்ணிக்கை அவ்வப்போது மாறிக் கொண்டு வந்திருக்கிறது. மக்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பிராக் நகரில் நடந்த பன்னாட்டு வானியல் அறிஞர்கள் மாநாட்டில் ஞாயிறு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துவது எனக் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் பற்றி விவாதம் நடந்தது.

அந்த 12 கோள்கள் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், சேறெஸ் (Ceres) வியாழன், சனி, யுரேனஸ், நெப்தியூன், புளுட்டோ, சாறன் (Charon) மற்றும் 2003 UB 313 ஆகியனவாகும்.
ஆனால் 12 கோள்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மாறாக புளுட்டோவை கோள்களின் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போது புளூட்டோவுக்கு 134340 என்ற எண் ஒதுக்கப்ட்டுள்ளது. இதனால் சூரியனைச் சுற்றி வரும் 1,36,562 விண்பொருள்களில் புளுட்டோவும் ஒன்றாக உள்ளடக்கப் பட்டுள்ளது. இப்போது கோள்களின் எண்ணிக்கை 9 இல் இருந்து 8 ஆகக் குறைந்து விட்டது.

அதே சமயம் நெப்தியூனுக்கு அப்பால்  Kuiper Belt முரipநச டீநடவ என்ற பகுதியில் ஆயிரக்கணக்pல் காணப்படும் அழற்பாறைகளில் புளுட்டோ, சாறோன்  மற்றும் 2003 ருடீ313 மட்டும் புளுட்டோன்ஸ் (Plutons) என அழைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

எவற்றைக் கோள்களாகச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு வானியலாளர்கள் வரைவிலக்கணம் வகுத்திருக்கிறார்கள்.

கோள் ஒரு விண்மீனைச் (நட்சத்திரத்தை) சுற்ற வேண்டும். ஆனால், அதுவே ஒரு விண்மீனாக இருக்கக்கூடாது.

கோள், கோள்வடிவில் (Sphere) இருக்க வேண்டும். அத்துடன் தனது அடர்த்திக்குத் தகுந்த ஈர்ப்பு விசை இருக்க வேண்டும். தமிழில் கோள் என்றால் உருண்டை என்பது பொருள் ஆகும்.

கோளின் குறுக்களவு 800 கிமீ க்கு சற்று அதிகமாக இருக்க வேண்டும். நிலவைப் போல 0.6 சதவீத அடர்த்தி கூடுதலாக இருக்க வேண்டும்.

புளுட்டோவைக் கோள்களின் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது பதவி இறக்கம் செய்யக்கூடாது எனப் பரிந்து பேசிய வானியலாளர்கள் இருந்தார்கள். அவர்களில் பலர் அமெரிக்க வானியலாளர்கள் எனச் செய்திகள் தெரிவித்தன.

புளுட்டோவுக்கு ஆதரவு திரட்டிய இன்னொரு கூட்டமும் இருந்தது. அது மேற்குலக சோதிடர்கள் சங்கங்கள் ஆகும். அவை பெரும் பொருட்செலவில் அதற்கான பரப்புரையைச் செய்தது.

சோதிடர் சங்கங்களுக்கு ஏன் இந்தக் கரிசனை? அவர்களுக்கு என்ன பாதிப்பு?

மேற்குலக சோதிடத்தில் புளுட்டோவையும் ஒரு கோளாகச் சேர்த்து அதற்கு இராசிச் சக்கரத்தில் வீடும் ஒதுக்கிப் பலனும் சொல்லப்படுகிறது! எனவே புளுட்டோ பதவி இறக்கம் செய்யப்பட்டது அவர்களது ஏமாற்றிப் பணம் பிடுங்கும் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.

சோதிடம் மேற்குலக நாடுகளில் கோடிக்கணக்கான டொலர்கள் புரளும் ஒரு பெரிய தொழில். நூற்றுக்கணக்கான கிழமை, மாத சோதிட சஞ்சிகைகள் வெளிவந்து விற்பனையாகின்றன.

அமெரிக்காவில் 10,000 கும் அதிகமான சோதிடர்கள் சாதகம் கணிப்பது, சாதகபலன் சொல்வது, கைரேகை பார்ப்பது, எண்சாத்திரம் சொல்வது, குறிசொல்வது (psychic) சொல்வது, Tarrot வாசிப்பது என சோதிடத்தை முழு நேரத் தொழிலாகச் செய்து வருகிறார்கள். அமெரிக்கர்கள் சோதிடம் பார்ப்பதற்கு ஆண்டொன்றுக்கு 200 மில்லியன் டொலர்களைச் செலவிடுகிறார்கள். இதற்கு மாறாக அமெரிக்காவில் 3,000 தொழில்சார் வானியலாளர்களே இருக்கிறார்கள். நூறு மில்லியன் டொலர்களே அடிப்படை ஆராய்ச்சிக்குச் (விண்வெளி ஆராய்ச்சி நீங்கலாக) செலவிடப்படுகிறது.

கோள்களுக்கு உரோம (இலத்தீன்) மொழியிலேயே பெயரிட்டுள்ளார்கள். யுரேனஸ் மட்டும் கிரேக்க மொழிப் பெயராகும். புவிக்கு இட்டுள்ள பெயர் பழைய ஆங்கிலமாகும். உரோம இதிகாசத்தில் புளுட்டோ இறப்புக் கடவுள் (God of Death) ஆவார். உள்ளுர் இயமனுடைய இரட்டை என்று வைத்துக் கொள்ளலாம். சனிக்கு புளுட்டோ மகன் முறை. வியாழன் மற்றும் நெப்தியூன் இருவரும் உடன்பிறப்புக்கள். இறந்தவர்கள் பாதாள உலகத்துக் போவதால் புளுட்டோவை பாதாளக் கடவுள் என்று கூறுவர். 1830 இல் கண்டு பிடிக்கப்பட்ட புளுட்டோ இன்னும் முழுதாக ஞாயிறைச் சுற்றிவரவில்லை. ஞாயிறை ஒருமுறை சுற்றிவர அது 228 (227.92) புவி ஆண்டுகள் எடுக்கிறது. அதன் விட்டம் 2,274 கிமீ. திணிவு 1.29 ஒ 1022 கிகி. ஞாயிறில் இருந்து பொதுமேனித் தொலைவு 5,906,376,200 கிமீ (39.48 AU ) ஆகும்.

புளுட்டோ கோள்களின் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டதையிட்டு இந்திய சோதிடர்கள் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம், அதனை இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை. ஊனக் கண்ணால் பார்த்த புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி  கோள்களோடு விண்மீனான ஞாயிறு, துணைக் கோளான நிலா, இராகு கேது என்ற இரண்டு கற்பனைக் கோள்கள் ஆகியவற்றையே ஒன்பது கோள்கள் (நவக்கிரகம்) என இந்திய சோதிடர்கள் சொல்கிறார்கள்.

உண்மையில் ஞாயிறையும் நிலாவையும் கோள்களோடு சேர்த்திருக்கக் கூடாது. விண்மீனான ஞாயிறுக்கு சுய ஒளி உண்டு. கோள்களுக்கு சுய ஒளி இல்லை. நிலா புவியைச் சுற்றிவரும் துணைக் கோள் ஆகும். இந்த வேறுபாடு ஞானக் கண்ணால் முக்காலத்தையும் அறிந்த முனிவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இப்போது “சோதிடத்தால் விபரீதம் குழந்தைக்கு ஏழரை சனி தீக்குளித்து தாய் சாவு – கணவன், மகன்கள் படுகாயம்” எனத் தலைப்பிட்டு தினகரன் செய்தி ஏட்டில் (செப்தெம்பர் 25, 2006) வெளிவந்த இந்தச் செய்தியைப் படியுங்கள்.

குழந்தைக்கு ஏழரை சனி பிடித்திருக்கிறது என ஜோதிடர் கூறியதால் விரக்தியடைந்த தாய், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேட்டூர், செப். 25: சேலம், நெத்திமேட்டைச் சேர்ந்தவர் துரைசாமி (32). மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா (29). இவர்களுக்கு தீபக் (2), மணி (10 மாதம்) ஆகிய மகன்கள் உள்ளனர்.

துரைசாமி கடந்த 22 ஆம் தேதி மேட்டூர் அருகே உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மனைவி, குழந்தைகளுடன் சென்றார். வீட்டில் இருந்த மல்லிகா தனது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றித் தீ வைத்தார். அருகில் இருந்த குழந்தைகள் தீபக், மணி ஆகியோர் மீதும் தீ பரவியது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த துரைசாமி அவர்களைக் காப்பாற்ற முயன்றார், அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

துரைசாமி, மல்லிகா இருவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இங்கு மல்லிகா மருத்துவம் பயனளிக்காது இறந்தார். குழந்தைகள் இருவருக்கும் மருத்துவம் அளிக்கப்படுகிறது.

மல்லிகா சில தினங்களுக்கு முன் சோதிடம் பார்த்தார். அப்போது, 10 மாதக் குழந்தையான மணிக்கு ஏழரை சனி பிடித்திருக்கிறது எனச் சோதிடர் கூறியுள்ளார். இதனால், குடும்பத்தில் கஷ்டங்கள் வரும் என அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி மல்லிகா கவலைப்பட்டுள்ளார். இந்த விரக்தியில் அவர் தீக்குளித்தார்.

இப்படியான கண்றாவிச் செய்திகள் செய்தி ஏடுகளில் நாளாந்தம் வந்து கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான மேற்குலக மக்கள் சோதிடத்தை நம்புவதில்லை. அப்படி நம்புகிறவர்களும் அதனை ஒரு பொழுது போக்கு என்ற அடிப்படையிலேயே பார்க்கிறார்கள். குறிப்பாக தாங்கள் பிறந்த நேரத்தில் ஞாயிறு எந்த இராசியில் நின்றது (Sun Sign) என்பதைத் தெரிந்து கொண்டு தங்களது ஆளுமை (personality)  பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணம், தொழில் தொடங்குதல், வீடுகட்டுதல், குடிபூரல், பயணம் என்று வரும்போது இந்தியர்கள் அல்லது தமிழர்கள் போல் சாதகத்தை எடுத்துக் கொண்டு சோதிடர்களிடம் அவர்களிடம் அலைவதில்லை.

சோதிடத்தை நம்புவதில் மற்ற எவரையும் விட இந்துமதத் தமிழர்களே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மணப்பெண் – மணமகன் இருவரது சாதகப் பொருத்தம் பாராது தமிழர்கள் திருமணம் செய்து கொள்வதைப் பார்க்க முடியாது. பெண்ணுக்கு ஏழில் செவ்வாய் தோசம் இருந்தால் போதும். இன்னொரு ஏழில் செவ்வாய் உள்ள மணமகனைத் தேடிச் செருப்புத் தேய பெண்ணின் தகப்பனார் அலைகிறார். அதற்கிடையில் மணமகளின் அகவை கிடு கிடு என்று ஏறிவிடும். பின்னர் திருமணச் சந்தையில் விலை போகாமல் மணமகள் இருந்து விடுவார். காதல் திருமணங்கள் மட்டும் இதற்குப் புறநடையாக இருக்கலாம். கிறித்துவ தமிழர்கள் சாதகப் பொருத்தம் பார்ப்பதில்லை. கிறித்துவம் சோதிடம் பொய்ச் சாத்திரம் எனக் கூறுகிறது.

சோதிடம் ஒரு அறிவியல் என்று வாதிடும் சோதிடர்களுக்கு Thornhill  இல் வசிக்கும் வானியலாளர் ஒருவர் பதில் இறுத்துள்ளார். அவரது பதில் இங்கு வெளியாகும் Toronto Star (September  17, 2006) வாசகர் கடிதப் பகுதியில் Astrology not science, not art and not news  “சோதிடம் அறிவியல் அன்று, கலை அன்று, செய்தி அன்று”) என்ற தலைப்பிட்டு வெளிவந்தது. அதை எழுதியவரின் பெயர் Paul Mortfield  என்பதாகும். அந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை அடுத்த இதழில் பார்ப்போம். (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
சோதிடம் … பாதி அறிவியல் பாதி கலை என்பது உண்மையன்று

(2)
“ஒரு வானியலாளர் மற்றும் கல்வியாளன் என்றளவில் புளுட்டோ பற்றி Phil Booth எழுதிய கட்டுரை, குறிப்பாக சோதிடம் ஒரு அறிவியல் எனச் சித்திரிக்கும் முயற்சி, என்னை ஆழமான வருத்தத்தத்தைத் தந்துள்ளது. பூத் அவர்கள் “சோதிடம் …. பாதி அறிவியல் பாதி கலை” எனச் சொல்கிறார். உண்மையில் அது இரண்டும் அன்று. பூத் சோதிடர்களின் செயல்பாடுகளை எண்பிப்பதற்கு சோதிடர்கள் “ஒரேமாதிரியான இணைத்தொடர்பு” மற்றும் “ஆயிரம் ஆண்டுகாலப் பட்டறிவுச் சான்று” (“consistent correlation” and “empirical evidence over the millennia”)   எனக் கூறுகிறார். ஆனால் இவை ஆறிவியல் மதிப்பாய்வுக்குத் தாக்குப் பிடிக்கமாட்டாதவை ஆகும்.

பூத் “கோள்கள் அவற்றை உருவகப்படுத்தும் புராண கதைப் பாத்திரங்களின் ஆற்றலையும் திறமையையும் பெருமளவு ஒத்திருக்கிறது” என உங்களை நம்பச் சொல்கிறார். அதாவது இலடச்சக்கணக்கான கிலோ மீட்டருக்கு அப்பாலே அண்ட வெளியில் காணப்படும் ஒரு பெரிய கற்பாறை அல்லது பெரிய வாயுப் பந்து ஆகியவற்றுக்கு ஒரு ஆளுமை இருப்பது போலவும் அது எங்களது வாழ்க்கை மீது செல்வாக்குச் செலுத்துகிறது என்று சொல்கிறார்.

செய்தி என்பது ஒத்துப் பார்க்கப்பட்ட உண்மைகளையும் தகவல்களையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். செய்தியாளர்கள் தாங்கள் தயாரிக்கும் செய்தி சரிதானா என்பதை உறுதி செய்ய அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். இந்த அறம் சோதிடம் பற்றி எழுதும் போதும் கடைப்பிடிக்க வேண்டாமா? நான் பள்ளிக்கூடங்களுக்கு விருந்துப் பேச்சாளராகப் போகும்போது அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளயும் கண்டுபிடிப்புக்களையும் தாங்கி அண்மையில் வெளிவந்த செய்திகளைப் படிக்குமாறு மாணவர்களை ஊக்கப்படுத்துவேன். அப்படிச் செய்ய நான் இப்போது தயங்குகிறேன். தனது நிறுவனத்தில் ஒரு சோதிடரை வைத்திருக்கும் இந்தச் செய்தித்தாளை எப்படி நம்புவது?

இந்திய சோதிட சாத்திரத்தின் தந்தை என மகரிஷி பராசரர் கொண்டாடப்படுகிறார். அவர் பிரிஹத் பராசர ஹொற சாத்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். இவரது காலம் கிமு 250 ஆண்டளவில் இருக்கலாம். பொதுமேனி 1200 பக்கங்கள் கொண்ட (இரண்டு தொகுதிகள்) இந்த நூல் இந்திய சோதிட சாத்திரத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

திருமணம், குழந்தைகள், ஆயுள்பலம், பிணி, வெளிநாட்டுச் செலவு, பாலியல், விபத்து போன்றவை இதில் சொல்லப்பட்டுள்ளது. பராசரர் எழுதிய நூலில் பிரகஸ்பதி, வசிட்டர் இருவரையும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் இவர்களது சாத்திரம் எழுத்துருவம் அடைந்ததாகத் தெரியவில்லை.

இந்திய சோதிடத்தில் சிறப்பாகப் பேசப்படும் இன்னொரு வல்லுனர் ஸ்ரீ வராஹமிகிரர் (கிபி 505-587) ஆவார். இவரே இந்திய வானியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவர் சூரியனை வழிபட்ட கிழக்கு இரான் நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர். பாரசீக மொழியில் வராஹ என்றால் பன்றி என்றும் மிஹிர என்றால் நண்பன் என்றும் பொருள்படும்.

ஸ்ரீ வராஹமிகிரர் வானியல் மற்றும் கணிதவியலில் வல்லுனராக விளங்கினார். இவர் உஜ்ஜியை (இன்றைய இராஜ்புத்தானம்) ஆண்ட சந்திரகுப்த விக்கிரமாதித்தனின் அரண்மனையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவர் ஆவார். இவர் பஞ்சசித்தாந்திகா, பிருஹத் ஜாதக, பிருஹத் சம்ஹித என மூன்று முக்கிய நூல்களை எழுதியுள்ளார் இதில் பிருஹத் ஜாதக சோதிட நூலாகும். பஞ்ச – சித்தாந்திகா வானியல் – கணிதவியல் பற்றிய நூலாகும்.

ஸ்ரீ வராஹமிகிரருக்கு மேற்குலக உரோம – கிரேக்க வானியல் பற்றிய அறிவு நன்கு தெரிந்திருந்தது. பஞ்சசித்தாந்திகாவில் காணப்படும் அய்ந்து பிரிவுகளில் புலிச சித்தாந்திகா மற்றும் உரோம சித்தாந்திகா முறையே கிரேக்க – உரோம சோதிட – வானியலை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். போலிசா என்ற கிரேக்க வானியல் -சோதிட வல்லுனரின் பெயரே புலிச என மருவி வந்துள்ளது. இந்திய சோதிடர்களுக்கு கிரேக்க உரோம சோதிட சாத்திரம் தெரிந்திருந்ததை பஞ்சசித்தாந்திகா எடுத்துக்காட்டுகின்றது.

இந்திய சோதிடர்கள் பராசரர், வராஹமிகிரர் போன்றோர் எழுதிய சோதிட நூல்களையே சாதகம் கணிக்க இன்றும் பயன்படுத்துகிறார்கள்.

இவர்கள் காலத்தில் கண்ணால் கண்ட கோள்கள் மற்றும் விண்மீன்களே கணக்கில் எடுக்கப்பட்டன. கண்ணுக்குத் தெரியாத ஆனால் தொலைநோக்கியால் பார்க்கக் கூடிய கோள்களையும் விண்மீன்களையும் அவர்கள் விட்டுவிட்டார்கள்.
புளுட்டோ மட்டுமல்ல சனிக்கு அடுத்ததாக உள்ள நெப்தியூன் மற்றும் யுரேனஸ் (Uranus) கோள்களையும் விட்டுவிட்டார்கள்.
இந்திய சோதிடர்களுக்கு-

1) புவி ஒரு கோள் என்பது தெரிந்திருக்கவில்லை.
2) புவி தனது அச்சில் 23 ½ பாகை சரிந்திருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை.
3) ஞாயிறு, ஞாயிறு மண்டலத்தின் நடுவில் இருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை.
4) கோள்கள் மற்றும் விண்மீன்கள் எவ்வளவு தொலைக்கு அப்பால் இருக்கின்றன என்பது தெரிந்திருக்கவில்லை.
5) கோள்களின் சுற்றுப்பாதை நீள்வட்டமாக இருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை.
6) சில கோள்கள் தமது சுற்றுப்பாதையில் பின்னோக்கிப் போவது (வக்கிரம்) போல் தெரிவதற்கான காரணம் தெரிந்திருக்கவில்லை.
7) புவியின் சுற்றுப்பாதையை ஞாயிறின் சுற்றுப் பாதை எனத் தவறாக நினைத்தார்கள்.
சோதிடத்தைப் பற்றிய பொய்மையைப் புரிந்து கொள்ள அது எவ்வாறு தோற்றம் பெற்றது என்ற வரலாற்றை அறிந்து கொள்வது நல்லது.

பாபிலோனியர்களே சோதிட சாத்திரத்தின் முன்னோடிகள் எனக் கூறலாம். அவர்கள் விண்ணை அண்ணாந்து பார்த்த போது கண்ணுக்குத் தெரிந்த வானுடலிகள் (Heavely Bodies) அவர்களுக்கு வியப்பையும் அச்சத்தையும் கொடுத்தன. அவற்றை அவதானித்தவர்கள் சில வான்பொருள்கள் அசைவதையும் ஏனையவை அசையாது ஒரே இடத்தில் இருப்பதையும் கவனித்தார்கள். அசையும் வான்பொருள்களுக்கு கோள் (planet) எனப் பெயரிட்டனர். கிரேக்க மொழியில் planet என்றால் அலைபவன் என்று பொருள் ஆகும். கோள்களின் ஓட்டங்களை அளந்தார்கள். சில வேகமாகவும் சில மெதுவாகவும் நகர்வதைக் கவனித்தார்கள். ஞாயிறை அவர்கள் கடவுள் என நினைத்தார்கள். பகல், ஞாயிறு எழுவதோடு தொடங்கியது. இரவு, ஞாயிறு படுவதோடு தொடங்கியது. இவ்வாறு பொழுது கிழக்கில் எழுதலும் பின்னர் அது மேற்கில் படுதலும் அவர்களுக்கு முக்கிய நிகழ்ச்சியாகப் பட்டது. விண்ணில் அவர்கள் கண்ட கோள்கள், விண்மீன்கள் அச்சத்தை ஊட்டியதால் அவை தெய்வங்கள் ஆக வழிபடப்பட்டன. கடவுள்கள் படைக்கப்படுவதற்கு மனிதர்களுக்கு இருந்த பயமே காரணமாக இருந்திருக்கிறது.

தெய்வங்களுக்கு உரிய காலத்தில் பூசை, திருவிழாக்கள் செய்யவும் தானியங்களை விதைக்கவும் பின்னர் அவற்றை அரிவு வெட்டவும் அவர்களுக்கு ஒரு நாள்காட்டி தேவைப்பட்டது. கிமு 1,000 ஆண்டளவில் கோள்களின் ஓட்டம், இருப்பு பற்றிய சோதிடக் குறிப்புக்கள் தோற்றம் பெற்றன. கோள்களைத் தெய்வங்கள் என நினைத்ததால் அவற்றுக்கு மார்டுக் (Marduk) இஸ்தர் (Istgar) நேர்கல் (Nergal) எனப் பெயர் இட்டார்கள். நேர்கல் (Mars -செவ்வாய்)  போர்த் தெய்வம் என்பதால் கோடைகால வானத்தில் போர்த் தெய்வம் நேர்கல் ஒளிர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதுவே போர் செய்வதற்கு உகந்த காலம் எனப் கோயில் பூசாரிகள் நினைத்தார்கள். அதே போல் காதல் கடவுளான இஸ்தார் (Venus- வெள்ளி)  வேனில் காலத்தில் சூரியன் மறைந்த பின் மேற்கே ஒளிர்வதைப் பார்த்து அது காதல் செய்வதற்கு நல்ல வேளை என நினைத்தார்கள்.

பபிலோனியர்கள் ஒரு மனிதன் பிறக்கும் போது விண்ணில் காணப்பட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இருக்கை அவனது மரணம் வரை ஏற்படும் நன்மை தின்மையை தீர்மானிக்கின்றன என நம்பினார்கள். அதாவது அவனது தலைவிதியைத் தீர்மானிக்கிறது என நம்பினார்கள். அதனை வட்ட வடிவான இராசிச் சக்கரத்தில் (Zodiac) பதித்தார்கள். கிமு 600 அளவில் 6 – 18 இராசிகள் கொண்ட இராசி சக்கரத்தை உருவாக்கிவிட்டார்கள். பின்னர் 12 இராசிகள் கொண்ட சக்கரம் நிலைத்துவிட்டது. அந்தச் சக்கரம் ஒரு குழந்தை பிறக்கும் போது வானில் கோள்கள் நின்ற நிலைகளைக் காட்டுகிறது என நம்பப்பட்டது. ஆனால் 12 இராசிகளின் எண்ணிக்கைக்கும் உருவத்துக்கும் அறிவியல் அடிப்படை எதுவும் கிடையாது.

எமக்குத் தெரிந்த அண்டத்தில் (Known Universe) ஏறத்தாழ 36,000 கோடி பால்மண்டலங்கள் (Galaxies) இருக்கின்றன எனவும் ஓவ்வொரு பால் மண்டலத்திலும் 10,000 – 20,000 கோடி விண்மீன்கள் (stars) காணப்படுகின்றன எனவும் வானியலாளர்கள் சொல்கின்றார்கள்! ஆனால் மனிதனது ஊனக் கண்களுக்கு சுமார் 6,000 நட்சத்திரங்கள் மட்டுமே இரவில் தெரிகின்றன! அதுவும் அடிவானத்துக்கு மேலே உள்ள நட்சத்திரங்கள்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. அடிவானத்துக்குக் கீழேயுள்ள நட்சத்திரங்கள் வட கோளத்தில் தெரிவதில்லை.

இவ்வண்டத்தின் ஆரம் 35,000,000,000, ஒளி ஆண்டுகள் (336 கோடி கோடி கிமீ) ஆகும். ஆரத்தின் நீளத்தை வைத்துக் கொண்டு அண்டத்தின் விட்டம், சற்றளவு, புறப்பரப்பு ஆகியவற்றை நீங்களே கணக்கிடலாம்.

அண்டத்தின் வடிவம் ஒரு இட்லி வடிவத்தில் இருக்கிறதாம்! அதாவது நடுவில் பருத்தும் விளிம்பில் சற்று மெலிந்தும் காணப்படுகிறது.

எமது ஞாயிறு குடும்பம் இருக்கும் பால்மண்டலம் பால்வழி அல்லது பால் வீதி (Milky Way) என அழைக்கப்படுகிறது. இந்தப் பால்மண்டலம் அதன் மையத்தை அச்சு ஆகக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது. ஞாயிறும் அதன் கோள்களும் இந்தப் பால்மண்டலத்தை ஏறத்தாழ மணிக்கு 864,000 கிமீ வேகத்தில் சுற்றிவருகிறது! இவ்வாறு ஒருமுறை சுற்றிவர 22 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

இந்த அண்டம் நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவுகளும் காலம் எனப்படும் ஓர் அளவும் ஆக மொத்தம் நான்கு அளவீடுகள் (Four Dimensional Space – Time)  கொண்டதாகும்.

இவ்வண்டம் எல்லை அல்லது முடிவு அற்றது என்றே நியூட்டன் உட்பட பெரும்பான்மை அறிவியலாளர்கள் எண்ணினார்கள். பேரறிஞர் அல்யபேட் அயின்ஸ்தீன் (Albert  Einstein) அவர்கள் மட்டும் இந்த அண்டத்தில் நேர்க்கோடு என்பதே கிடையாது எல்லாம் வட்டங்களே என்றார்.

இவ்வண்டத்துக்கு எல்லை இருக்கிறது என்று ஏன் கருத முடியாது? அப்படி எல்லை உள்ளதாகக் கருதினால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற பயங்கரக் கேள்விக்கு விடை கூற வேண்டி நேரிடும்! (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
அறிவியலும் சோதிடமும்
(3)
தொடக்க கால கிரேக்க தத்துவவாதிகள் (துறைசார்ந்த வல்லுனர்கள் எல்லோரும் தத்துவவாதி (philosopher) என்ற ஒரே சொல்லால் அழைக்கப்பட்டார்கள்) 48 பால்மண்டலங்களை (Constellations) அடையாளம் கண்டார்கள். அவற்றுள் பெரும்பான்மையான பால் மண்டலங்களுக்கு தொலமியே (Ptolemy – கிபி 100-170) பெயர் சூட்டினார். பல நூற்றாண்டு காலமாக பால் மண்டலங்களின் எண்ணிக்கை கூட்டியும் மாற்றியும் வரப்பட்டது. சில விடுபட்டுப் போயின. 1982 ஆம் ஆண்டிலேதான் பன்னாட்டு வானியலாளர் கழகம் தற்போதுள்ள 88 பால்மண்டலங்களின் எல்லையை துல்லியமாக வகுத்தது. இதில் ஆதி மனிதர்கள் கண்டு பிடித்த 12 இராசிகளும் அடக்கம்.

பபிலோனியரது சோதிடம் முதலில் கிரேக்கத்துக்கும் பின்னர் உரோமுக்கும் பரவியது. பபிலோனிய சோதிடர்கள் சல்டியன்ஸ் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் முக்கிய நகரங்களில் கடைவிரித்தார்கள். கிரேக்க தத்துவவாதிகள் முதலில் சோதிட சாத்திரம் புரட்டு என்றார்கள். கிமு 44 இல் மார்க்கஸ் துல்லியஸ் சிசரோ (Marcus Tullius Ciceso)  சோதிடத்தைக் கண்டித்து ஒரு நூல் எழுதினார். அது இன்றும் படித்து அறியக்கூடிய ஒன்றாகும்.

“இந்தச் சோதிடர்கள் பயித்தியக்காரர்கள். வானத்தில் மெல்ல நகரும் கோள்கள் மனிதனது தலைவிதியை மாற்றுகிறது என்கிறார்கள். ஆனால் காற்றினாலும் மழையினாலும் அப்படியான தாக்கம் இல்லை என அனுமானிக்கிறார்கள்” என அந்நூலில் காணப்பட்ட ஒரு வாசகம் சோதிடத்தைப் பலமாகச் சாடியது.

கிறித்தவ மதத்தின் வருகையோடு சோதிடம் செல்வாக்கு இழந்தது. காரணம் கிறித்தவர்கள் புறச் சமயத்துக்கும் (Pagan) புறச்சமய கடவுளர்க்கும் எதிராக இருந்தார்கள். சோதிடம் அடிப்பiயில் சமய சார்புடையது. அதனை சமய சார்பற்றது என மறைக்க முடியவில்லை.

சிலுவை யுத்தம் சோதிடத்தை மீண்டும் அய்ரோப்பாவுக்கு கொண்டுவந்தது. அது கிறித்தவத்தோடு சக வாழ்வு வாழ்ந்து வந்தது.
கிபி 1,600 தொடக்கம் அறிவியலில் எற்பட்ட பாரிய முன்னேற்றம் சோதிடத்துக்கு பாரிய பின்னடைவைக் கொடுத்தது. கிபி 1,900 வெளிவந்த பிரஞ்சு மொழி கலைக்களஞ்சியம் சோதிடம் மறைந்து கொண்டிருக்கும் ஒரு வழிபாட்டு மரவு (உரடவ) எனச் சரியாக விபரித்தது.

ஆனால் முதலாவது உலகப் போரின் பின்னர் சோதிடம் மீண்டும் தலையெடுத்தது. பிரித்தானியவைச் சேர்ந்த S.H. நெயிலர் (S.H. Naylor ) முதல் முறையாக நாளேடுகளில் இராசி பலன் பற்றி எழுதத் தொடங்கினார். இன்றும் பல செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், இணைய தளங்களில் இராசி பலன் வெளிவருகிறது.

இந்த இராசி பலன் மேற்குலக சோதிடத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. சூரியன் ஒரு ஆண்டில் பன்னிரண்டு இராசிகளைக் கடந்து செல்கிறது என்பதைப் பார்த்தோம். ஒரு குழந்தை பிறக்கும் போது சூரியன் பன்னிரண்டு இராசியில் ஏதோ ஒரு இராசியில் சஞ்சரிக்கிறது. இவ்வாறு சூரியன் சஞ்சரித்த இராசி சூரிய லக்கினம் (Sun Sign) என்று அழைக்கப்படுகிறது. இந்திய சோதிடத்தில் சூரியனுக்கு, சந்திரன் மற்றும் நட்சத்திரங்களுக்கு அடுத்தே முக்கியம் கொடுக்கப்படுகிறது. ஆனால் மேற்குலக சோதிடத்தில் பிறப்பின் போது சூரியன் நின்ற இராசிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனை அடுத்தே சந்திரன் நின்ற இராசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நட்சத்திரங்களுக்கு மேற்குலக சோதிடத்தில் இடம் இல்லை.
உலகில் இன்று 600 கோடி மக்கள் வாழ்கிறார்கள். எனவே பொதுமேனி 50 கோடி மக்கள் ஒரே இராசியில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.

எடுத்துக்காட்டாக மார்ச்சு 21 – ஏப்ரில் 20 வரை (இந்திய சோதிடம் ஏப்ரில் 14 – மே 14 வரை) 50 கோடி மக்கள் மேட இராசியில் பிறந்திருப்பார்கள். இத்தனை கோடிமக்களுக்குச் சோதிடர்கள் சொல்லுகின்ற இராசி பலன் எப்படி சரியாக இருக்க முடியும்?
ஆனால் (மூட) நம்பிக்கை காரணமாக இராசி பலனைப் படிப்பவர்கள் அது சரியாக இருக்கிறது என நினைக்கிறார்கள்.
இதில் உள்ள முரண்பாட்டு மெய்மை அல்லது வேடிக்கை என்னவென்றால் மக்கள் அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கிக்கிடந்த இடைக்காலத்தில் அல்லாது 20 ஆம் நூற்றாண்டில் கோள்கள் வானுறையும் தெய்வங்கள் அல்ல அவை நாம் வாழும் புவி போன்ற ஒன்றே என்ற அடிப்படை வானியல் உண்மை தெரிந்திருந்தும் சோதிடம் மேற்குலகில் செல்வாக்கோடு விளங்குவதே!
அறிவியல் என்பது அறிவியலாளர்கள் தனியாகவும் குழுவாகவும் நீண்ட காலம் ஒரு பொருளையோ நிகழ்வையோ கூர்ந்து அவதானித்து முறைப்படி ஆயு;வு செய்து நம்பத்தகுந்த, முரண்படாத, விதிக்கட்டுப்பாடுள்ள ஒரு கோட்பாட்டை (theory) அல்லது விதியைப் பெரும்பாலும் கணித அடிப்படையில் உருவாக்குவதாகும். கூர்ந்து அவதானித்தல் என்பது ஒரு பொருளையோ அல்லது நிகழ்ச்சியையோ விருப்பு வெறுப்பின்றித் திறந்த மனத்தோடு ஆழ்ந்து பார்த்து ஏதுக்களின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுப்பதாகும். அப்படியான அறிவியல் முறைமை அய்ந்து படிகளைக் கொண்டதாக இருக்கும்.

1) ஒரு நிகழ்வை அல்லது நிகழ்வுகளைக் கூர்ந்து அவதானித்துப் பெறப்படும் தரவுகளைத் திருத்தத்தோடும் (accuracy) மெய்மையோடும் (objectivity) அளவியல் அடிப்படையோடும் (logical) வரைப்படுத்தல்.
2) ஒரு நிகழ்வை விளக்குவதற்கு ஒரு புனைகோளை (hypothesis) உருவாக்குதல்.
3) இயற்பியலில் புனைகோள் கணித அடிப்படையில் அமைக்கப்படும்.
4) புனைகோளைப் பயன்படுத்தி நிகழ்வை எதிர்வுகூறல் செய்தல்.
5) எதிர்வுகூறலைச் சுதந்திரமான தனித்தனி சோதனை மூலம் சரிபிழை பார்த்தல்.

சோதிடம் இவ்வாறான சோதனைகளைச் செய்வதில்லை. அவை அவாகளது மூளைக்கு எட்டாதவகையாகும்.
பாபிலோனியரைப் பின்பற்றி கிரேக்கர்கள் இராசி சக்கரத்தை வைத்துக் கொண்டு சாதகம் எழுதத் தொடங்கினார்கள். முதலில் அரசர்களுக்கும் பிரபுக்களுக்கும் எழுதப்பட்ட சாதகம் பின்னர் பொது மக்களுக்கும் எழுதப்பட்டன.
தொலமி என்ற கிரேக்கர்தான் முதன் முதலாக சோதிடம் பற்றி விரிவாக எழுதினார். இவர் எழதிய Almest Almamagest  என்ற சோதிட நூலே மேற்குலக சோதிடர்களின் ‘பைபிள்’ ஆகும்.

சோதிடம் பற்றி எழுதிய தொலமி வானியல் பற்றியும் எழுதினார். அவர் எழுதிய நூலின் பெயர் வுநவசயடிiடிடழள என்பதாகும். இவர் காலத்திலேயே சோதிடத்தில் இருந்து வானியல் தனி இயலாகத் தோற்றம் கொள்ளத் தொடங்கியது. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் – யூரேனியஸ் மற்றும் நெப்தியூன் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் – சோதிடமும் வானியலும் முற்றாகப் பிரிந்து தனிவழி போய்விட்டன.

சோதிடர்கள், ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் இப் புவியைச் சுற்றிக் கிழக்கும் மேற்குமாக மேலும் கீழுமாக வான வீதியில் –

(அ) படர்ந்துள்ள இராசிச் சக்கரத்தின் (Zodiac Signs) இருபுறமும் மேலும் கீழும் 6 பாகைக்குள் காணப்படும் 12 இராசி மண்டலங்கள் (விண்மீன் கூட்டங்கள்)

(ஆ) 360 பாகை கொண்ட இராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 கூறுகளாகப் பிரித்து வரும் 12 இராசி வீடுகள்.

(இ) வானவீதியில் இராசிச் சக்கரத்தை வலம் வரும் 9 கிரகங்கள்.

(ஈ) இராசிச் சக்கரத்தின் பின்புலத்தில் காணப்படும் 27 நட்சத்திரங்கள்.

ஆகியவற்றின் தாக்கம் அந்தக் குழந்தையின் தலைவிதியைத் தீர்மானிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்தத் தாக்கம் அல்லது ஆற்றல் எது என்பதை சோதிடர்கள் சொல்வதில்லை.

புவி மேற்குக் கிழக்காகச் சுற்றுகிறது. இதனால் நட்சத்திர மண்டலங்கள் கிழக்கு மேற்காகத் தோன்றி மறைகின்றன. இது வெறும் புலணுர்வு அல்லது புலக்காட்சியே. உண்மையில் நட்சத்திர மண்டங்கள் கிழக்கு அடிவானில் எழுவதில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் புவியின் 66.5 பாகைக்கு வடக்கு அல்லது தெற்கு திசைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதகம் கணிக்க முடியாது. காரணம் அங்கு அடிவானத்தில் இருந்து இராசிகள், சூரியன் உதயமாவதில்லை!

ஒரு குழந்தை பிறக்கும் போது ஒரு குழந்தை மீது படியும் புவி ஈர்ப்பு விசை ஏனைய கோள்கள் நட்சத்திரங்களோடு ஒப்பிடும் போது பத்து இலட்சம் அதிகமானது. அதே போல் தாய் அல்லது அந்தக் குழந்தை பிறந்த மருத்துவமனை வெளிப்படுத்தும் ஈர்ப்பு விசை வான் உடலிகளை விட அதிகமானது.

பருப்பொருளைப் (matter) படைக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்பது இயற்பியல் விதி. பருப்பொருளை ஆற்றலாகவும் ஆற்றலைப் பருப்பொருளாகவும் மாற்ற முடியும் ஆனால், அழிக்க முடியாது. அதனை அறிவியலாளர் அய்ன்ஸ்தீன் தனது E=mc²  என்ற சமன்பாடு மூலம் எண்பித்துக் காட்டினார்.

பருப்பொருள் போலவே இயற்கையில் நால் வகை அடிப்படை விசைகள் மட்டுமே விண்வெளியில் இருந்து கிடைக்கின்றன. அவையாவன வல்விசை (Strong force) மின்காந்த விசை (Ekectrinagbetic force) மென் விசை (Weaker force) ஈர்ப்பு விசை (Gravitational force ) என்பனவாகும். இவற்றுக்கு மேலாக தெய்வீக ஆற்றல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அலுமினியத்தில் அணுக்கள் அவ்வளவு நெருக்கமாக இல்லை – காரணம் மென் விசை என்கிறார்கள். அதே நேரம் இரும்புக் குண்டில் அணுக்கள் மிகவும் நெருக்கமாக இணைந்திருப்பதால் அது கனமாகத் தோன்றுகிறது. அவ்வாறு அணுக்கள் நெருக்கமாக இணைந்திருப்பதை வல்விசை என்கிறோம்.

இந்த அடிப்படை விசை பற்றிய அறிவு சோதிடர்களுக்கு அறவே கிடையாது. குழந்தை பிறக்கும் போது ஏதோ ஒரு தாக்கம் அல்லது ஆற்றல் அந்தக் குழந்தை மீது படிகிறது என்று மட்டும் கிளிப்பிள்ளை சொன்ன மாதிரிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதனை மக்கள் நம்புவதுதான் வியப்பாக இருக்கிறது. அதற்கொரு காரணம் நம்புவது எளிதானது. சிந்திப்பது கடினமானது. பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று கேட்டவுடனேயே மக்கள் அதை .இலேசில் நம்பி விடுகிறார்கள். கல்லுப் பிள்ளையார் எப்படிப் பாலைக் குடிக்க முடியும் என்று அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அப்படிச் சிந்திப்பது கடினமான காரியம். எனவே விட்டு விடுகிறார்கள். (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
இராசிகள் கற்பனை உருவங்கள்

(4)

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக அண்டம் பற்றி அரிஸ்தோட்டல் (Aristotle) பிளாட்டோ (Plato) தொலமி (Ptolemy) முதலியோர் எழுதி வைத்த கோட்பாடுகளை கோபெர்னிக்கஸ் (Copernicus) கெப்லர் (Kepler) கலிலியோ கலிலி (Galileo  Galilei) அய்சக் நியூட்டன் (Isasac Newton) போன்ற வானியலாளர்கள் தலைகீழாக மாற்றி அமைத்தார்கள்! குறிப்பாகக் கோபெர்னிக்கஸ் அண்டத்தின் மையத்தில் இருந்த புவியை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஞாயிறை வைத்தபோது கிறித்தவ மதத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டது. கிறித்தவ மதகுருமார்கள் பதைத்துப் போனார்கள்! என்ன செய்வதென்றே அவர்களுக்கு விளங்கவில்லை!
இயற்பியலாளர் அல்பேட் அயின்ஸ்தீனின் பொது சார்புக் கோட்பாடு (General Theory of Relativity) இயற்பியலில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. அண்டத்தில் ஆகக்கூடிய வேகம் ஒளியின் வேகத்தை விஞ்ச முடியாது, பருப்பொருளும் ஆற்றலும் மதிப்பில் ஒப்பானவை, ஒன்று மற்றொன்றாக மாறக் கூடியவை என்ற அவரது கண்டுபிடிப்புக்கள் இயற்பியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி இயற்கையின் சிக்கலான முடிச்சுக்களை அவிழ்க்க உதவியது.

சோதிடர்கள் ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் ஞாயிறு, சந்திரன், கோள்கள் இருந்த இருக்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் பிறப்பென்பது ஒரு கணநேரத்தில் நடப்பதல்ல. ஒரு குழந்தை ஒரு கண நேரத்தில் பிறக்க முடியாது. அது நீண்ட நேரம் எடுக்கும்.

மருத்துவச்சி ஒரு குழந்தை பிறந்த நேரத்தை ஒரு தாளில் குறிப்பதால் அதுவே பிறந்த நேரமாகிவிட முடியாது. பிறப்பு நீண்ட நேரம் நீடிக்கும் நிகழ்வாகும்.

ஒரு குழந்தை பிறந்த நேரம் எது? அது கருவில் உருவான நேரமா? பிறக்கும் போது தலை அல்லது கால் புவியில் தொட்ட நேரமா? தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நேரமா? பன்னீர்க்குடம் உடைந்த நேரமா? குழந்தை முதல் மூச்சுவிட்ட நேரமா? குழந்தையின் முதல் “குவா குவா” அழுகைச் சத்தம் கேட்ட நேரமா? அல்லது மருத்துவிச்சி மணிக்கூட்டைப் பார்த்து நேரத்தைக் குறித்த நேரமா? இதில் எந்த நேரம் சரியான நேரம்? இதில் சோதிடர்களிடையே ஒத்த கருத்து இல்லை.

ஒரு குழந்தையின் பிறப்பு தாய் கருக்கொள்வதோடு (conception  தொடங்குகிறது. அது கருவறையில் இருக்கும் போதே அதன் குணாம்சங்கள் நிச்சயிக்கப்படுகிறது.

இப்போதெல்லாம் குழந்தையின் பிறப்பை ஒரு குறிப்பிட்ட நாளுக்கு முன்னரோ பின்னரோ தள்ளிப் போட முடியும். இரண்டு மணித்தியாலத்துக்கு ஒரு இராசி மாறிக்கொண்டு இருப்பதால் ஒரு இராசியில் பிறக்க வேண்டிய குழந்தையை செயற்கையாக இன்னொரு இராசியியல் பிறக்க வைத்துவிட்டால் அதன் தலைவிதி மாறிவிடுமா? ஊனத்தோடு பிறக்க வேண்டிய ஒரு குழந்தையின் பிறப்பு நேரத்தை மாற்றுவதன் மூலம் ஊனத்தை இல்லாது செய்து விட முடியுமா?

ஒரு மருத்துவமனையில் இரண்டு மூன்று மணித்துளி வேறுபாட்டில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் சாதக பலன் ஒன்றாக இருக்க வேண்டும். அவர்களது கல்வி, செல்வம், தொழில், உடல் நலம், திருமணம் போன்றவை ஒரேமாதிரி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருப்பதில்லை. அதற்கான சாத்தியமும் இல்லை.

இராசிச் சக்கரம் எனச் சோதிடர்கள் கூறுவது சூரியன் செல்லுமாப் போல் எங்கள் கண்ணுக்குத் தோன்றும் புலக்காட்சியாகும். உண்மையில் அது நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் பாதையாகும்.

பன்னிரண்டு இராசிகளுக்கும் மேடம் முதல் மீனம் ஈறாக 12 உருவங்கள் கற்பித்து அதற்குரிய குணாம்சங்களை மனிதனே விதிக்கட்டின்றி (யசடிவைசயசல) எழுதி வைத்துள்ளான்.

எடுத்துக்காட்டாக மேட இராசி ஆடாக (கிடா) உருவகப்படுத்தப் பட்டு ஆட்டுக்குள்ள குணமான துணிவு, வலியச் சண்டைக்குப் போதல் போன்ற குணாம்சங்கள் மாடேற்றப்பட்டுள்ளன. அதே நேரம் இடப இராசி இடபமாக (எருது) உருவகப்படுத்தப் பட்டுள்ளது. அப்படி என்றால் ஆட்டின் குணத்துக்கும் மாட்டின் குணத்துக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்ன? அல்லது நட்டுவக்காலிக்கும் (விருச்சிக இராசி)  நண்டுக்கும் (கடக இராசி) உள்ள வேற்றுமை என்ன? இந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கு (இராசிகள்) மேசை, கதிரை என்று பெயர் வைத்திருந்தால் அந்த இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?

இராசிகளுக்க மட்டுமல்ல கோள்களுக்கும் பண்டையகால மனிதர்கள் வியாழனுக்கு செவ்வாய் என்று பெயர் வைத்திருக்கலாம். அறிவியல் அது பற்றி அலட்டிக்கொள்ளாது. ஆனால் சோதிடர்களது பலன் பிழைத்துவிடும். காரணம் அந்தப் பலன் கோளின் பெயரை மட்டுமே வைத்துச் சொல்லப்படுகிறது. அந்த கோளின் இயற்பியல் பண்புகளின் (physical  properties) அடிப்படையில் சொல்லப்படுவதில்லை.

பத்து, நூறு, ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை மனம்போன போக்கில் ஒன்றோடு ஒன்று விதிக்கட்டுபாடின்றி தொடுத்து அவற்றுக்குப் பெயர் இட்டது செயற்கை ஆகும். அந்தப் பெயர்களும் அவற்றின் வடிவத்தைக் கொண்டு இட்ட பெயர்களாகும். சில இராசிகளின் தொலைவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி வினாடிக்கு 300,000 கிமீ வேகத்தில் ஓர் ஆண்டு பயணிக்கும் தொலைவாகும். எனவே ஒளி ஓர் ஆண்டில் 9,500,000,000,000 கிமீ (9.5 திரில்லியன கிமீ)

ஞாயிறில் இருந்து இராசிகளின் தொலைவு

இராசி
ளுபைn
ளுவயச
ஒளி ஆண்டுகள்
ஞாயிறு
மிதுனம்
புநஅini
Pழடடரஒ
33.7
ஞாயிறு
மிதுனம்
புநஅini
ஊயளவழச
51.6
ஞாயிறு
இடபம்
வுயரசரள
யுடனடியசயn
65.2
ஞாயிறு
சிம்மம்
டுநழ
சுநபரடரள
77.6
ஞாயிறு
கன்னி
ஏசைபழ
ளுpiஉய
263
ஞாயிறு
இடபம்
வுயரசரள
Pடநயைனநள
385
ஞாயிறு
விருச்சிகம்
ளுஉழசிரைள
யுவெயசநள
604

ஒளி ஒரு வினாடிக்கு 300,000 கிமீ வேகத்தில் செலவு செய்கிறது என்பது தெரிந்ததே. இதன் அடிப்படையில் ஒளி சந்திரன் ஞாயிறு ஆகியவற்றில் இருந்து புவிக்கு வந்து சேர எடுக்கும் நேரமும்; ஞாயிறில் இருந்து கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் சேர எடுக்கும் நேரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புவி – சந்திரன்    1.25 வினாடி
புவி – ஞாயிறு 8.3 மணித்துளி
ஞாயிறு – வியாழன் 41.0 மணித்துளி
ஞாயிறு – சனி 85.0 மணித்துளி
ஞாயிறு – புளுட்டோ 5.5 மணி;
ஞாயிறு – யுடிhய ஊநவெயரசi  விண்மீன்    4.24 ஒளி ஆண்டு
ஞாயிறு- மிருகசீரிடம்  (ழுசழைn) சுபைநட விண்மீன் 777 ஒளி ஆண்டு
நட்டுவக்காலி போல் தெரிந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு விருச்சிகம் (ளுஉழசிழை) எனப் பெயரிட்டு நட்டுவக்காலிக்கு இருக்கும் குணாம்சங்களை அந்த இராசிக்கும் மாடேற்றி விட்டார்கள். இதனால்தான் விருச்சிக இராசியில் பிறந்தவர்கள் நட்டுவக்காலிபோல் மற்றவர்களைக் கொட்டுவார்கள், சிங்க இராசியில் பிறந்தவர்கள் சிங்கத்தைப் போல் மூர்க்க குணம் உடையவர்களாக இருப்பார்கள் என எழுதி வைத்து விட்டார்கள். இந்த இராசி உருவங்கள் செயற்கையானது. இராசிகளும் அவற்றுக்குரிய உருவங்களும் பின்வருமாறு.

இராசிகளும் அவற்றுக்குரிய உருவங்களும்

இராசி
ளுபைn
உருவம்
மேடம்
யுசநைள
ஆடு
இடபம்
வுயரசரள
எருது
மிதுனம்
புநஅini
ஆண் பெண்
கடகம்
ஊயnஉநச
நண்டு
சிம்மம
டுநழ
சிங்கம்
கன்னி
ஏசைபழ
பெண்
துலாம்
டுiடிசய
தராசு
விருச்சிகளம்
ளுஉழசிழை
நட்டுவக்காலி
தனுசு
ளுயபவைவயசரைள
வில்
மகரம்
ஊயிசiஉழசn
கடற்குதிரை
கும்பம்
யுஉஙரயசரைள
குடம்
மீனம்
Pளைஉநள
இரட்டை மீன்

இராசி வட்டம்

 

;

 

 

 

ஆதி மனிதன் விண்ணில் ஞாயிறு செல்லும் பாதையை (இராசி வட்டத்தை) அண்ணாந்து பார்த்த போது சில விண்மீன் தொகுதிகள் அல்லது கூட்டங்கள் அவனது கண்களுக்கு மேடம் (ஆடு) இடபம் (எருது) மிதுனம் (ஆண் பெண் உருவம்) கடகம் (நண்டு) சிம்மம் (சிங்கம்) கன்னி (பெண்) துலாம் ( தராசு) விருச்சிகம் (நட்டுவக்காலி) தனுசு (வில்) மகரம் (கடற்குதிரை) கும்பம் (குடம்) மீனம் (இரட்டைமீன்) போன்று காட்சியளித்தன.

விண்ணில் தெரிந்த இராசிகள்
எனவே இராசிகள் என்பது வான வீதியில் மனிதன் தன் ஊனக் கண்ணால் பார்த்த விண்மீன் தொகுதிகளுக்கு அவன் கொடுத்த கற்பனை உருவாகும். கிரேக்கமொழியில் ணுழனயைஉ என்ற சொல்லுக்கு விலங்குகள் என்பது பொருளாகும்.
இதனால்தான் இந்தியர்களது கண்ணுக்கு இடபமாகவும் விருச்சிகமாகவும் (நட்டுவக்காலி) தோன்றிய இராசிகள் சீனர்களது கண்ணுக்கு முறையே எலியாகவும் பாம்பாகவும் தோன்றியிருக்கிறது! (வளரும்)

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
கனடாவில் கடை விரித்திருக்கும் சோதிடர்கள்!
(5)
சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! என்னும் தொடரை பரபரப்பு ஜேர்னலில் எழுத எண்ணிய போது அதற்கு எத்தகைய வரவேற்புப் புலம் பெயர்ந்த வாசகர்களிடம் இருக்கும் என்ற அய்யம் என் மனில் ஒரு மூலையில் இருந்தது. இது போன்ற தொடரை (சோதிடப் புரட்டு) மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் இருந்து வெளிவரும் முழக்கம் ஏட்டில் 72 கிழமைகள் தொடர்ந்து எழுதினேன்.
சோதிடப் புரட்டை எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்தது இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு நடந்த முத்தரப்புத் துடுப்பாட்டப் போட்டியாகும். அது பற்றி வந்த செய்தியில் இந்த முறை இந்தியாதான் வெற்றிவாகை சூடும் எனப் பல சோதிடர்கள் எதிர்வுகூறல் (ஆரூடம்) கூறியிருந்தார்கள். இந்தச் சோதிடர்களில் சிலர் பிரபல சோதிடர் நொஸ்ரடாமைக் (ழேளவசயனயஅரள) மேற்கோள் காட்டி அவர் சூசகமாக உலகக் கிண்ண கோப்பையை இந்தியாதான் கைப்பற்றும் எனக் கூறினார்கள்.
இந்த நொஸ்ரடாம் (கிபி 1503-1566) யூத இனத்தவர். தென் பிரான்ஸ் நாட்டின் ளுயiவெ சுநஅi என்ற மாகாணத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர் ஆiஉhநட னந ழேளவசநனயஅந என்பதாகும். அதனை இலத்தீன் மொழியில் ழேளவசயனயஅரள என மாற்றி வைத்துக் கொண்டார். சமயவிசாரணை (ஐஙெரளைவைழைn) என்ற தண்டனைக்குப் பயந்து நொஸ்ரடாம் குடும்பம் கத்தோலிக்க மதத்துக்கு மாறிக் கொண்டது. நொஸ்ரடாம் 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம் உலகம் முடியும்வரை நடைபெறப் போகிற நிகழ்ச்சிகளை கவிதை வடிவில் (ஞரயவசயiளெ) எதுகை மோனையோடு எழுதினார். அவர் கையாண்ட நடை பூடகமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே இலத்தீன், கிரேக்கம், இத்தாலி மொழிச் சொற்களைப் புகுத்தி எழுதினார். மயங்க வைக்குமாறு சொற்களையும் சொற்களின் எழுத்துக்களையும் மாற்றி எழுதினார். உலகம் கிபி 3,797 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிடும் என்பது அவரது எதிர்வுகூறல் ஆகும்.
துடுப்பாட்டம் தோன்றாத காலத்தில் 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு நடந்த முத்தரப்புப் போட்டியில் இந்தியா வெல்லும் என்று ஒருவர் எப்படி எதிர்வுகூறி இருக்க முடியும் அப்படி இருக்க வாய்ப்பில்லை என எனது பகுத்தறிவு சொல்லியது. எனவே சோதிடம் ஒரு போலி அறிவியல் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்த காரணத்தால் அதனை மறுத்து எழுதினேன். நான்கு அய்ந்து கிழமையோடு முடித்து விடலாம் என முதலில் நினைத்தேன். ஆனால் வானியல், சாதகம், காண்டம், எண்சாத்திரம் என அது விரிந்து கொண்டே போயிற்று.
வேடிக்கை என்னவென்றால் இந்தியா வெல்லும் என்று எதிர்வு கூறல் கூறிய பிரபல சோதிடர்கள் எல்லோரும் மண் கவ்வினார்கள்! இந்தியா முத்தரப்புப் போட்டியில் தோற்றுவிட்டது!
அந்தக் கட்டுரைத் தொடர் செம்மைப்படுத்தப் பட்டு சோதிடப் புரட்டு என்ற பெயரில் இப்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
கவிஞர் காசி ஆனந்தன் அதற்கு முன்னுரை எழுதியுள்ளார்.
“கணியத்தை நக்கீரன் பொய் என்று சொல்வதால் யாரும் சினம் அடையத் வேண்டியதில்லை….. ஏனென்றால் பொய்யை நீங்கள் கணியம் என்று சொல்வதால் அவர் சினம் அடைந்திருக்கிறார். நான் நக்கீரன் பக்கமே!
அவர் படைப்பு அறியாமைக்குத் தீயிடும் அனல் பிழம்பு சீர்திருத்தப் புயலின் சீற்றம். உண்மையின் குரல்.”
சோதிடப் புரட்டு நூலை தமிழ்நாடு பெரியார் திராவிடக் கழகம் பதிப்பித்து இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. கவிஞர் அறிவுமதி அதனை வெளியிட்டு வைத்தார்.
நூலை எழுதி முடித்த பின்னரும் சோதிடம், வானியல் பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே இருக்கின்றேன்.
இப்போது பரபரப்பு ஜேர்ணல் வாசகர்களுக்கு ஏற்றவாறு சற்று மாறுபட்ட கோணத்தில் சோதிடம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் என்னை அரசியல், இலக்கியம் தொடர்பாக எழுதும் எழுத்தாளன் என்றே பலர் எண்ணிக் கொண்டு இருப்பதால் தமிழ்ச் குமுகாயத்தில் புரையோடிப் போய்விட்ட ஒரு மூடப் பழக்கத்தை மறுத்து எழுதுவதை பரபரப்பு வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற தயக்கம் முதலில் இருந்தது. அந்தத் தயக்கத்தை பரபரப்பு ஆசிரியர் ரிஷி போக்கிவிட்டார். தொலைபேசியில் என்னை அழைத்த அவர் “உங்கள் கட்டுரைத் தொடருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் அய்ரோப்பா வாசகர்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது” என்ற நல்ல செய்தியைப் பரபரப்போடு சொன்னார். அந்தச் செய்தி எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. ஈன்றபொழுது இருந்த உவகையைவிட பெற்ற பிள்ளை சான்றோன் (கல்வியில் வல்லவன்) எனக் கேட்ட தாய்க்கு அதிக உவகை இருக்குமாம். அது போல எழுதுவதைவிட எழுத்தை மற்றவர்கள் பாராட்டும் போதுதான் கூடுதல் மகிழ்ச்சி பிறக்கிறது.
கனடாவில் கடந்த சில மாதங்களாக பல சோதிட சாஸ்திரிகள், சோதிட சிகாமணிகள், சோதிட பண்டிதர்கள், சோதிட பகவான்கள், சோதிட சக்கரவர்த்திகள், சோதிட சுவாமிகள் கூடாரம் அடித்து கடை விரித்துள்ளார்கள். கடைகளுக்கு ஓம் சக்தி ஜோதிடலாயம், ஸ்ரீ பத்திரகாளிகாம்பாள் ஜோதிட சாலை, ஓம் முத்துமாரி அம்மன் ஜோதிடலாயம், ஓம் ஸ்ரீ துர்க்காதேவி ஜோதிடாலயம் என நல்ல கவர்ச்சியான பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.
இதில் பண்டிதர் சாமி பிரகாஷ் ராவ் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, டெம்மார்க், சுவிஸ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற இடங்களில் பிரசித்தி பெற்றவராம்!
சோதிடர்களது விளம்பரங்கள் இங்குள்ள செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் அட்டகாசமாக வெளிவருகின்றன.
கைரேகை, முகநாடி மூலம் துல்லியமாக நடந்தவை, நடப்பவை, நடக்கப் போகின்றவை பற்றி விபரமாகக் கூறப்படும். ஆயுள் பூசை, லட்சுமி கடாச்ச பூசை, தொழில், வியாபாரம், லட்சுமீகர விடயமான பொருத்தம், விவாகப் பொருத்தம், வாகன மனைப் பொருத்தங்கள், பிள்ளைகளின் படிப்பு, காதல் விவகாரம், பெண்பிள்ளைகள் குடும்ப ஒற்றுமை (?) கணவன் மனைவி ஒற்றுமையின்மை, கோட் வழக்கு, உடல் நலமின்மை, வேலைவாய்ப்பு, போன்றவற்றிற்கு பரிகாரம், ஒன்றுகூடுதல், எதிரிகளினால் மந்திரம், சூனியம், பேய், பிசாசு, ஏவல், செய்வினை, கண்திருஷ்டி போன்றவற்றிற்கான பரிகாரங்கள், இவற்றுடன் கைரேகை, ஜாதகக் குறிப்பைக் கொண்டு எதிர்காலப் பலாபலன்களைத் தெரிவித்தல், பரிகாரம் செய்தல் என்பன இவர்கள் விற்பனைப் படுத்தும் சரக்குகளாகும்!
ஏறக்குறைய மனிதர்கள் எதிர்கொள்ளும் சகல சிக்கல்களையும் இவர்கள் தீர்த்து வைப்பார்களாம்! தீர்த்து வைக்க முடியாத சிக்கல் எதுவும் இல்லை.
இவர்கள் தங்களது டீழை-னுயவய வையும் கொடுக்கத் தவறுவதில்லை. “இந்தியாவில் பல சந்ததிகளாக சாத்திரம் கூறும் குடும்பத்தில் பிறந்தவர். பல நடிகர்களுக்கும் அமைச்சர்களுக்கும் பலன்களைக் கணித்துக் கூறியுள்ளார். நீங்கள் வேறு ஜோதிடர்களிடம் பார்த்திருக்கலாம் இவரையும் ஒருமுறை பாருங்கள். அம்பாளின் திருவருள் துணையுடன் கைரேகை சோதிடம், மநோதத்துவம் ஆகியவற்றில் உள்ள பலாபலன்களை சாத்திரரீதியாகத் தன்னுடையை திறமையைப் பயன்படுத்தி உங்களுடைய இறந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களை சரியாகக் கணி;த்து உங்களுக்கு கூறுவார்.”
இந்தச் சோதிடர்கள் தங்கள் வீரப்பிரதாபங்களை வினம்பரப்படுத்த சிவாஜி கணேசன் போன்ற பிரபல நடிகர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் போடுகிறார்கள்.
இவ்வளவு திறமை படைத்த இந்தச் சோதிடர்களால் தங்களது திறமையால், முத்துமாரி அம்மன் அருளால் முக்காலத்தையும் அளந்து தீர்த்து வைக்க முடியுமென்பது உண்மையானால்  முதலில் இவர்கள் தங்கள் வாழ்க்கைச் சிக்கல்களை ஏன் தீர்த்து வைக்க முயலவில்லை? இந்தியாவில் வாழும் மக்களது ஏழ்மையை, கல்லாமையைப் முதலில் ஏன் போக்கவில்லை? கனடா போன்ற உறைபனி பெய்யும் நாட்டுக்கு ஏன் படையெடுக்க வேண்டும்? பிழைப்பதற்கு நாடு நாடாக ஏன் பேயாய் அலைய வேண்டும்?
கனடாவில் பேய் (மனிதப் பேய்களைச் சொல்லவில்லை) பிசாசு இருப்பதாக யார் அவர்களுக்குச் சொன்னது? அதெல்லாம் அந்தக் காலத்தில் ஊர்கள் இருட்டில் மூழ்கிக் கிடந்த போதுதான் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனி, கொள்ளிவாய்ப் பேய், குறளைப் பேய், காட்டேரி உலா வந்தன? வெள்ளையன் கண்டு பிடித்த மின்சாரம் வந்த பின்னர் இந்தப் பேய்கள் எல்லாம் ஓடிப்போய் விட்டனவே!
சோதிடர்கள் மனிதர்களிடம் மலிந்து காணப்படும் மூடநம்பிக்கைகளை தங்களது பிழைப்புக்கு மூலதனமாகப் பயன்படுத்துகிறார்கள்.
மனிதன் திங்களில் கால் பதித்து 38 ஆண்டுகள் கழிந்து விட்டன. செவ்வாய், புதன், வியாழன், சனி போன்ற கோள்களை ஆராய விண்கலங்கள் ஏவப்பட்டு வருகின்றன. அடுத்து செவ்வாயில் மனிதனை இறக்க நாசா  திட்டமிட்டு வருகிறது. புவியில் உள்ள மக்கள்தொகை சிக்கலைச் சமாளிக்க திங்களில் மனிதர்களை குடியேற்றும் திட்டம் கூட ஆராயப்பட்டு வருகிறது. ஆனால் தமிழன் மட்டும் இன்னும் சோதிடம், காண்டம், கைரேகை, அருள்வாக்குச் சொல்லி ஊரை ஏமாற்றி வயிறு வளர்ச்கும் சோம்பேறிக் கூட்டத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்.
ஒரு குழந்தை நல்ல இலக்கினத்தில் நல்ல இராசியில் நல்ல நட்சத்திரத்தில் பிறந்தால் அக் குழந்தையின் வாழ்வு சிறப்பாக அமையும் என்றும் அவ்வாறு அல்லாது கெட்ட இலக்கினத்தில், கெட்ட இராசியில், கெட்ட நட்சத்திரத்தில் பிறந்தால் வாழ்வு சிறப்பாக அமையாது என்றும் எந்த விதிக்கட்டின்றி (யசடிவைசயசல) அனுமானத்தில் கண்டு பிடிக்கப்பட்டதுதான் சோதிடம் ஆகும்.
இடைக் காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் அரண்மனையில் இராசகுருவாக இருந்த சோதிடர்கள் சாதகத்தைக் காட்டி அரசருக்கு தோசம் இருக்கிறது அரசியார்க்கு பேய் பிடித்திருக்கிறது அவற்றை நீக்க யாகம் செய்ய வேண்டும் புரோகிதர்களுக்குத் தானம் கொடுக்க வேண்டும் என்று கூறிக் கருவூலத்தை கொள்ளையடித்தார்கள். பொன்தானம் கோதானம் பூதானம் கொடுத்த சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் 13 ஆம் நூற்றாண்டோடு மறைந்து போயின!
கனடிய தமிழர்களின் பலவீனங்களைப் பணமாக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் இருந்து தங்களைத் தாங்களே சாத்திரிகள், பண்டிதர்கள், சாமியார்கள், ரிஷிகள் எனச் சொல்லிக் கொண்டு கனடாவிற்குப் படையெடுப்பவர்கள் தங்களின் பித்தலாட்டத்தைப் பணமாக்க கனடாவில்தான் அதிகளவு இளித்தவாயர்கள் இருக்கிறார்கள் எனக் கணக்குப் போடுவதே இந்தப் படையெடுப்புக்குக் காரணமாகும். முன்னைவிடப் புதுப் புது தொழில் நுட்பத்தோடு சோதிடர்கள் கடைவிரிக்கிறார்கள். கடைவிரிக்க இங்குள்ள சில அங்காடிகள் மற்றும் கோயில்கள் ஒத்துழைப்பு நல்குகின்றன.
விவேகானந்தர் போன்ற தூய துறவிகள் உடுத்திய காவி இன்று புரட்டுக்களை மறைக்கும் ஆடையாக மாறிவிட்டது.
பிராமணர்களின் வீடுகளில் மட்டும் இருந்து வந்த சோதிடம் இன்று தமிழர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் குடி கொண்டுவிட்டது. குழந்தை பிறந்தது முதல் பெயர் சூட்டுவது, திருமணம் செய்து கொள்வது, தொழில் தொடங்குவது, வீடு வாங்குவது, குடி புகுவது, வேலை தேடுவது, மருத்துவம் பார்ப்பது வரை சோதிடர்களைத் தேடித் தமிழர்கள் பேயாய் அலைகிறார்கள்.
நான் முன்னர் கூறியவாறு புவி உருண்டை என்றோ, அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ஞாயிறையும் சுற்றி வருகிறது என்றோ, ஞாயிறு ஒரு கோள் அல்ல அது கோடான கோடி பால் மண்டலங்களில் காணப்படும் கோடான கோடி விண்மீன்களில் ஒன்று என்று தெரியாதவர்களால்தான் சோதிட சாத்திரம் இயற்றப்பட்டது. இன்றும் ஞாயிறு பூமியைச் சுற்றுகிறது என்ற பிழையான அடிப்படையில்தான் சாதகம் கணிக்கப்படுகிறது.
ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் கோடிக்கணக்கான கற்;கள் தொலைவில் உள்ள கோள்கள், பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்  சஞ்;சரிக்கும் இராசி வீடுகளைப் பொறுத்து அக்குழந்தையின் எதிர்காலமும் குணநலமும் கல்வி மற்றும் தொழில் மனைவி மக்கள் எல்லாம் அமைகிறது என்பது வெறும் கட்டுக் கதை. இன்றைய அறிவியல் உலகம் அதனை ஏற்றுக்கொள்ளாது. சிலரது சாதகத்தையும் அந்த சாதகத்திற்குரியவர்களின் குணநலன்கள் ஆளுமை மற்ற இயல்புகள் பற்றிய விபரங்களைக் கொடுத்து எந்தச் சாதகம் யாருடையது என்று கண்டு பிடிக்கச் சொன்னால் சோதிடர்களால் ஊகித்துச் சொல்ல முடியுமே தவிர கண்டு பிடித்துச் சொல்ல முடியாது.
குடுகுடுப்பைக்காரன் சொல்லும் குறியையும் குறத்தி கூறும் வாக்கையும் சோழி உருட்டிச் சோதிடம் கூறுபவனையும் கிளி சோசியம் பார்ப்பவனையும் கைரேகை பார்ப்பவனையும் சாதக பலன் சொல்பவனையும் காண்டம் வாசிப்பவனையும் பாமர மக்கள் நம்புகிறார்கள் என்றால் படித்தவர்களும் நம்புகிறார்கள் என்பதுதான் பெரிய சோகம்!
சோதிடர் சொல்லும் எதிர்கூறலில் சில காகதாலியமாக நடந்து விடுவதைக் கொண்டு சோதிடம் உண்மை என்று சிலர் நம்பி விடுகிறார்கள். சோதிடர் சொல்வது நடக்காமல் போனால் “எல்லாம் பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தைப் பொறுத்தே நடக்கும்” என்று கூறிச் சமாளிக்கிறார்கள். இதனால் சோதிடரின் பிழைப்பு தடை இல்லாமல் தொடர்ந்து நடக்கிறது. மூன்றாவது உலக நாட்டில் வாழும் போது சோதிடம் போன்ற மூட நம்பிக்கையை நம்பினால் அதனைப் பெருந்தன்மையோடு மன்னித்துக் கொள்ளலாம். ஆனால் கனடா போன்ற முதல் உலக நாடுகளுக்கு வந்த பின்னரும் சோதிடத்தை நம்புவது மூடத்தனம் ஆகும்! .
தமிழ்மக்கள் சோதிடம் போன்ற மூடநம்பிக்ககளில் இருந்து விடுபட வேண்டும். தங்கள் எதிர்காலத்தை தாங்களே தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்பவற்றை வலியுறுத்தவே இந்தத் தொடரை எழுதுகிறேன்.
கடந்த நொவெம்பர் 8 ஆம் நாள் (புதன்கிழமை) வானில் ஒரு அழகான ஆனால் அதிசயமான காட்சியைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. (வளரும்)
சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
புதன் கோள் அலியாம்! எப்படிக் கண்டுபிடித்தார்கள்?
(6)
வானியலுக்கும் சோதிட சாத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சோதிட சாத்திரத்தின் படிமுறை வளர்ச்சியே வானியலாகும்.
சோதிடம், வானமண்டலத்தில் காணப்படும் கோள்கள், இராசிகள், இராசி வீடுகள், நட்சத்திரங்கள் போன்றவற்றுக்கும் புவியில் பிறக்கும் குழந்தைக்கும் ‘முடிச்சு’ ப் போட்டுக் கொண்டிருக்க அறிவியல் அண்டத்தில் காணப்படும் (புவி நீங்கலாக) திடப்பொருள் – ஆற்றல், பங்கீடு, ஆக்க அமைப்பு, இயற்பொருள் நிலை, அசைவுகள், ஓட்டங்கள் மற்றும் படிமுறை வளர்ச்சி ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து வருகிறது. (வுhந ளஉநைnஉந றாiஉh inஎநளவபையவநள யடட வாந அயவவநச-நநெசபல in வாந ரniஎநசளந: வைள னளைவசiடிரவழைnஇ உழஅpழளவைழைnஇ phலளiஉயட ளவயவநளஇ அழஎநஅநவெளஇ யனெ நஎழடரவழைn)
புதன் கோள் புவியைவிட ஞாயிறுக்கு அண்மையில் காணப்படும் ஒரு சிறிய கோளாகும். அதன் சுற்றுப் பாதை ஞாயிறில் இருந்து 58 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. அது ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலம் 88 நாள் மட்டுமே. அது சுற்றும் பாதை புவி சுற்றி வரும் பாதையின் தளத்திற்கு 7 பாகை சாய் கோணத்தில் உள்ளது. இப்படிச் சாய்ந்திருப்பதால் ஞாயிறின் பாதையைப் புதன் கோள் அரிதாகவே கடந்து செல்கிறது.  ஒரு நூற்றாண்டில் இப்படியான பெயர்ச்சி சீரற்ற இடைவெளியில் மொத்தம் 13 முறையே இடம் பெறுகிறது.
சென்ற முறை மே 07,  2003 இல் இடம்பெற்றது. அடுத்து இரண்டு கிழமைகளுக்கு முன்னர் ( நொவெம்பர் 8, 2006) இடம் பெற்றது. இனிமேல் 2016 இல் தான் இடம்பெறும்.
இப்படி இராசிவட்டத்தில் (ஞாயிறு செல்லுமாப் போல் தெரியும் வானவீதி) உள்ள இராசி வீடுகளைக் கோள்கள் கடந்து செல்வதைப் பெயர்ச்சி (வுசயளெவை) என அழைக்கிறார்கள். இந்தப் பெயர்ச்சி, கோள்கள் ஞாயிறைச் சுற்றிவரும் வேகத்தைப் பொறுத்து இடம் பெறுகிறது.
இப்படியான பெயர்ச்சிகளையும் அதனால் ஏற்படும் கிரகணங்களையும் வானியலாளர் அண்டத்தின் புதிர்களை அவிழ்கப் பயன்படுத்தும் போது சோதிடர்கள் நாட்டில் கெட்டது நடக்கப்போவதாகச் சொல்லிப் பாமர மக்களைப் பயமுறுத்துகிறார்கள். தோசம் நீங்கக் கோயில் குளங்களுக்குச் சென்று கிரகங்களுக்கு அருச்சனை, அபிசேகம் மற்றும் சாந்தி செய்யுமாறு தூண்டுகின்றார்கள். குறிப்பாகப் பாப கிரகங்கள் என நம்பப்படும் சனி, செவ்வாய், சூரியன், இராகு, கேது ஆகியவற்றின் பெயர்ச்சியின் போது தோசம் உண்டாவதாகச் சொல்லி மக்களை ஏய்த்துப் பணம் பறிக்கிறார்கள்.
கனடாவில் நவக்கிரகங்கள் இல்லாத கோயில்களையே பார்க்க முடியாது. ஏனைய கடவுளரைவிட இந்த நவக்கிரகங்களால்த்தான் அதிக வருமானம் வருகிறதாம்!
கோயில் வாசலில்  “எள்ளெண்ணைச் சட்டி எரிக்க 2 டொலர் மட்டுமே” என பெரிய விளம்பரப் பலகைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள். பெரிய சந்தைகளில் எழுதி வைப்பதுபோல “இரண்டு எள்ளெண்ணைச் சட்டி எரித்தால் ஒன்று இலவசம்” என்று எழுதி வைத்தாலும் வியப்பேதும் இல்லை!
மேலே கூறியவாறு சென்ற நொவெம்பர் 07 ஆம் நாள் புதன் கோள் (ஆநசஉரசல) புவிக்கும் ஞாயிறுக்கும் இடையில் நேர்க் கோட்டில் வந்தது. அப்பொழுது சூரிய கிரகணம் ஏற்பட்டது. ஆனால் ஞாயிறோடு ஒப்பிடும் பொழுது புதன் கோள் மிகவும் சிறியது. அதன் விட்டம் 4,800 கிமீ மட்டுமே.
வானத்தில் காணப்படும் பொருட்களின் கோண அளவை (யபெரடயச அநயளரசந) பாகை, ஆர்க்மணித்துளி, ஆர்க்வினாடி என வானியலாளர்கள் அளவிடுகிறார்கள்.
ஒரு பாகை – ஒரு வட்டத்தின் 1ஃ360 பாகமாகும்
ஒரு ஆர்க்மணித்துளி – 1 பாகை ஸ்ரீ 1ஃ60 பாகையாகும்
ஒரு ஆர்க்வினாடி – 1 ஆர்க்மணித்துளி ஸ்ரீ 1ஃ60 இன் ஆர்க்மணித்துளி ஸ்ரீ 1ஃ3600
பாகை
புதன் பெயர்ச்சியின் போது ஞாயிறின் விட்டம் 1937.5 ஆர்க்வினாடி ஆகும். அதே சமயம் புதனிpன் விட்டம் 10.0 ஆர்க் வினாடி மட்டுமே! வேறுமாதிரிச் சொல்வதானால் ஞாயிறோடு ஒப்பிடும் போது புதனின் விட்டம் 0.005 மட்டுமே. எனவே ஞாயிறுக்கும் புவிக்கும் இடையில் நிலா நேர்க் கோட்டில் வருவதால் ஏற்படும் சூரிய கிரகணம் போல் இது இருக்கவில்லை. புதன் கோள் ஒரு சிறிய பொட்டுப்போல் ஞாயிறு மீது காணப்பட்டது. புதன் ஞாயிறைக் கடந்து அதன் பின்புறம் செல்ல எடுத்த நேரம் ஏறத்தாழ 5 மணித்தியாலம் ஆகும்.
சந்திர-சூரிய கிரகணங்கள் இராகு கேது என்ற இரண்டு பாம்புகள் அவற்றைக் கவ்வுவதால் ஏற்படுகிறது என்று சோதிடர்கள் சொல்கிறார்கள். கிரகணம் முடிந்த பின்னரே குளித்து முழுகிச் சமைக்கத் தொடங்க வேண்டும் அல்லாவிட்டால் உணவில் நஞ்சு கலந்து விடும் என்று பாமரமக்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். கிரகணம் பற்றிய அறியாமை காரணமாக எழுகின்ற வீண் அச்சமே இதற்குக் காரணமாகும்.
சோதிடர்களைப் பொறுத்தளவில் ‘புதன் கோள் நல்ல குடும்ப வாழ்வுக்கு ஏற்றதல்ல. காரணம் அது ஆற்றல் இல்லாத கோள். உண்மையில் அது கோள்களில் அலி ஆகும். புதன் கோள் மாற்றம் பெரும்பாலும் சண்டை சச்சரவை ஏற்படுத்தும். முடிவுகள் எடுப்பதையும் அது தடுத்து விடும். அதுதான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்ட மூலம் பற்றி நாடாளுமன்றம் ஒரு முடிவை எடுக்க முடியாமல் போய்விட்டது” இப்படிச் சொல்பவர் லால் பகதூர் சாஸ்திரி வித்தியா பீடத்தைச் சேர்ந்த சோதிடர் மாபிரேம் உஷா! இராக் போர் விரைவில் முடிந்ததற்கும் (?) புதனின் ‘செல்வாக்கே” காரணமாம்.
புதன் (ஆநசஉரசல)
புதன் கோள் புவியோடு ஒப்பிடும்போது அய்ந்தில் இரண்டு பங்காகும். இது கோள்களில் இரண்டாவது சிறிய கோளாகும். இதில் காற்று மண்டலம் இல்லாததால் உயிரினங்கள் வாழும் வாய்ப்பு இல்லை.
விட்டம் – 4,878 கிமீ (3,031 கல்)
மேற்பரப்பு – மூலகம் (சிலிகேட்) கொண்ட தூசிப் படைகளால் மூடப்பட்டுள்ளது. சமவெளிகள், குழிகள்
கொண்டது.
திணிவு (புவி 1) – 0.06
வளிமண்டலம் – மெல்லிய கீலியம் (95 விழுக்காடு) மற்றும் நீரகம்.
வெப்பம் – ஞாயிறு ஒளிபடும் பக்கம் 950 பாகை பாரன்கைட் (510 பாகை செல்சியஸ்) இருளில் இருக்கும் பக்கம் -346 பாகை பாரன்கைட் (-210 பாகை செல்சியஸ்;)
ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம் – 87.96 புவி நாள்
தன்னைத்தானே சுற்றும் காலம் – 58.67 புவி நாள்
சோதிட நூல்கள் அனைத்துக் கோள்களின் பலத்தை வரிசைப்படுத்தும் பொழுது புதன் கோளை இறுதியில் வைத்திருக்கின்றன.
1. கேது
2. இராகு
3. ஞாயிறு
4. திங்கள் (சந்திரன்)
5. வெள்ளி (சுக்கிரன்)
6. வியாழன் (குரு)
7. சனி
8. செவ்வாய் (அங்காரகன்)
9. புதன்

மேலும் புதனுக்குச் சந்திரன் சத்துரு, செவ்வாய்க்குப் புதன் சத்துரு. தோல் சம்பந்தமான நோய் புதன் கோளினால் ஏற்படுமாம். ஏனைய கோள்களினால் ஏற்படும் நோய்கள் பின்வருமாறு:
ஞாயிறு     – எலும்பு தொடர்பான நோய்
சந்திரன்    – குருதி தொடர்பான நோய்
செவ்வாய்   – மூளை தொடர்பான நோய்
வியாழன்    – தசை, மாமிசம் தொடர்பான நோய்
சனி       – நரம்பு தொடர்பான நோய்
வெள்ளி    – விந்து (சுக்கிலம்) கருமுட்டை (சுரோணிதம்) தொடர்பான நோய்
இராகு கேது – உடல், குடல் தொடர்பான நோய்

இவற்றை எல்லாம் யார் யார் எப்படி எப்பொழுது ஆய்ந்து கண்டு பிடித்தனர் என்பது தெரியவில்லை. பாரத்தை அல்லது பழியைப் பராசரர், வாராகமிருகர்  போன்ற முற்கால முனிவர்கள் தலையில் ஏற்றி விட்டுச் சோதிடர்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள். இவர்கள் எந்த அடிப்படையும் இல்லாது, எந்த விதிக்கட்டின்றியும் மனம்போன போக்கில் கோள்களின் குணாம்சங்களைச் சித்திரித்து இருக்கிறார்கள்.
வேடிக்கை என்னவென்றால் இரண்டு சோதிடர்கள் ஒரு சாதகத்தைப் பார்த்து ஒரே மாதிரியான பலன்களை ஒரே குரலில் சொல்வதில்லை. ஆளுக்கு ஆள் மாற்றி மாற்றிச் சொல்கின்றார்கள். அதற்கு தக்க காரணம் இருக்கிறது.
ஜெனன லக்கினம், ஜெனன ராசி, பன்னிரண்டு இராசிகள் என அவற்றுக்குத் தனித்தனிப் பலன்கள் உண்டு. ஆனால் அவை நிற்கும் 12 வீடுகளைப் பொறுத்து பலன்கள் மாறுபடுகின்றன. ஒன்பது கோள்களுக்கும் தனித்தனிப் பலன்கள் உண்டு. ஆனால் அவை நிற்கும் வீடுகளைப் பொறுத்து பலன்கள் மாறுபடுகின்றன.
ஒன்பது கோள்களும் ஆட்சி, உச்சம், சமம், நீச்சம், நட்பு (மித்துரு) பகை (சத்துரு) தெசாபுத்தி, ஆரோகணம், அவரோகணம், அந்தஸ்த தோஷம், அதி தேவதைகள், காரகப்பலன், பார்வைகள், நவாம்சம் போன்ற பலதிறப்பட்ட தன்மைகளைப் பொறுத்துப் பலன்கள் வேறுபடுகின்றன.
சாதகத்தில் கிரக (கோள்) நிலைகள் இருந்தது போல் சாதகம் பார்க்கும் போது அவை இருப்பதில்லை. எனவே இரண்டு கோள்நிலைகளையும் கணக்கில் எடுத்துப் பலன் சொல்ல வேண்டும்.
இவ்வாறு சேர்த்தும் கணித்தும் வரிசைமாற்றியும் (உழஅடிiயெவழைnஇ உழஅpரவயவழைn யனெ pநசஅரவயவழைn) பத்தாம்தரம் படித்த சோதிடரால் பலன் சொல்ல முடியுமா? அதனால்தான் ஒரு சோதிடர் சாதகத்தைப் பார்த்து மணப் பொருத்தம் இல்லை என்றால் மற்ற சோதிடர் மணப்பொருத்தம் உண்டு எனச் சொல்கிறார்! சோதிடம் பார்த்துப் பொருத்தம் சொல்லும் சோதிடரது மகளே திருமணம் செய்து சில காலத்தில் இறந்து போகிறார் அல்லது விதவையாக வீட்டில் உட்கார்ந்திருக்கிறார் அல்லது குழந்தைப் பாக்கியம் இல்லாதவராக இருக்கிறார். அப்படியென்றால் மற்றவர்கள் கதி என்ன? படியாதவர்களை விட்டு விடுவோம். அவர்களைத் திருத்த முடியாது. படித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
கமம் விளைய வேண்டும் என்றால் பயிரோடு முiளைக்கும் புல்லையும் பிடுங்க வேண்டும். சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் அந்தச் சமுதாயத்தில் புரையோடிப் போய்க் கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்களையும் களையெடுக்க வேண்டும். (வளரும்)

 

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
அய்யப்பனுக்குத் தீட்டுப்பட்டு விட்டது! சோதிடர் புரட்டு!
(7)
மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை விடுவதில்லை. அசைத்து அசைத்து ஆட்டிக் கொண்டே இருக்கும்.
சோதிடர்களும் அப்படித்தான். நான் சும்மா இருக்க விரும்பினாலும் அவர்கள் என்னை விடுவதாக இல்லை. இதோ அண்மையில் தமிழக ஏடு ஒன்றில் வந்த செய்தியைப் படியுங்கள். செய்தியில் காணப்பட்ட தமிழ் நடையை சற்று செம்மைப்படுத்தியுள்ளேன்.
அத்வானி முதல் தேவகவுடா வரையில் ஜோதிட ஆலோசனை கேட்கும் பிரமுகர் ஒருவர் காஞ்சி புரத்தில் இருக்கிறாராம். இந்தத் தகவலை சமீபத்தில் கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், ஜோதிடரை உடனடியாக ஹைதராபாத்துக்குப் புறப்பட்டு வரச் சொன்னாராம். ‘சிவாஜி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, காஞ்சிபுரத்து ஜோதிடரிடம் தனது எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும்படி கேட்டாராம்.
‘உங்கள் ஜாதக யோகத்துக்கு நீங்கள் அரசியலில் குதிப்பீர்கள். யாரும் எட்டமுடியாத உயரத்துக்குப் போவீர்கள்… அதற்கு உங்கள் பேரனின் ஜாதகமும் துணையாக இருக்கிறது….’ என்று சொல்லிவிட, ரஜினியின் உள்ளம் குளிர்ந்து விட்டதாம்.
‘இப்போது ‘சிவாஜி’ படப்பிடிப்பை முதலில் முடித்து விடுகிறேன். அதன்பிறகு, மீண்டும் ஒருமுறை எனது ரசிகர் மன்ற சகாக்களிடம் கலந்து பேசிவிட்டு, அரசியலில் குதிப்பது குறித்து முடிவெடுக்கிறேன்…’ என்று சொல்லி ஜோதிடரை ஏகமாகக் கவனித்து அனுப்பிய ரஜினி, தொடர்ந்து அந்த ஜோதிடருக்கு போன்மேல் போன் போட்டுப் பேசிக்கொண்டே இருக்கிறாராம். இந்த விஷயம் எப்படியோ காஞ்சிபுரம் பகுதியில் பரவிவிட, ‘ரஜினி ஜோதிடர்ப்பா…’ என்று சொல்லி, தற்போது ஏகத்துக்கும் கூட்டம் வருகிறதாம்!
தோதிடர்கள் தங்கள் பிழைப்புக்காக “சிவாஜி கணேசனுக்கு நான்தான் சாதகம் கணித்துப் பலன் சொன்னேன்” “ரஜினி என்னைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார்” “என்ன நல்ல காரியத்துக்கும் அண்ணாச்சிக்கு நான்தான் நாள் நட்சத்திரம் கணித்துக் கொடுப்பேன்” என்றெல்லாம் புளுகுவார்கள்.
ரஜினி யோகக்காரர் என்பதை அவரது சாதகத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. பழனிமலை அடிவாரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரனைக் கேட்டாலே சொல்லுவான்!
“ரஜினி தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர்” என்று நீண்ட காலமாகவே சோதிடர்கள் ஆரூடம் சொல்லி வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தல் வரும்போது அப்படியான பேச்சு அடிபடும். தேர்தல் முடிந்ததும் அது நின்றுவிடும்.
ரஜினி நல்ல நடிகர். ஆனால் சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளை எளிதில் நம்பிவிடும் பேர்வழி. நம்புவது மட்டுமல்ல அவரே மூடநம்பிக்கைகளுக்கு தீனி போட்டு வளர்த்து வருகிறார். இமயமலை அடிவாரத்தில் ஒரு பாவா (சாமியார்) இருக்கிறார் என்றும் தான் அவரிடம் அடிக்கடி போய் தரிசித்து ஆசீர்வாதம் வாங்குவதாகவும் அந்தச் சாமியார் ஆயிரத்து அய்ங்நூறு ஆண்டுகளாக உயிரோடு இருப்பதாகவும் ரஜினி சொல்கிறார்!
இந்த சாமியார் மீதான அதீத பக்தி வெறியில் ரஜினி அவரது பெயரிலேயே ஒரு திரைப்படம் தயாரித்தார். அதில் சாமியார் வேடத்தில் வரும் ரஜினி அடிக்கடி விரலை மடித்து சின் முத்திரை காட்டுவார். ஆனால் பாபா படம் படுதோல்வி அடைந்தது. திரையிட்ட சில நாட்களில் திரைப்பட அரங்குகளை விட்டு ஓடிவிட்டது. படம் ஓகோ என்று ஓடும் என நம்பி அதை வாங்கியவர்கள் நொந்து போனார்கள். நல்ல காலமாக ரஜினி அவர்களது இழப்பை ஈடு செய்தார்!
ரஜினியை மிஞ்சிய மூடங்கள் பல தமிழ்நாட்டில் இருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சுற்றி எப்போதும் சோதிடர் பட்டாளம் இருக்கும். அவர் முதலமைச்சராக இருந்த போது எந்தக் காரியத்தையும் நாள் நட்சத்திரம் பாராது செய்யமாட்டார். கோட்டைக்குப் போவதாக இருந்தாலும் இராகு காலம் கழித்துத்தான் போவார். வீட்டில் யாகம் செய்வது போதாதென்று கோயில் கோயிலாகப் போய் கும்பிட்டு யாகம், சாந்தி, அருச்சனை, அபிசேகம், காணிக்கை என்று அமர்க்களப்படுத்துவார்.
சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்? சோதிடம் கணிப்பதில் பிரஸ்னம் (சோளிகளை உருட்டி விட்டு கடவுளிடம் அருள் வாக்குக் கேட்பது) பார்ப்பதில் இவர் ஒரு “புலி” யாம்! இவர்தான் ஜெயலலிதாவின் அரண்மனைச் சோதிடர்.
பழனி கோயிலில் உள்ள முருகனது பஞ்சபாஷாண சிலை தேய்ந்துவிட்டது. அதனால் அதனுடைய சக்தி போய்விட்டது. அதனை அப்புறப்படுத்திவிட்டு தங்கத்தால் செய்த சிலையொன்றை வைக்க வேண்டும் என்று உன்னிகிருஷ்ண பணிக்கர் ஜெயலலிதாவுக்கு ஆலோசனை சொன்னார். சொன்னதுதான் தாமதம் பஞ்சபாஷாண சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டு தங்கத்தால் ஆன சிலை வைக்கப்பட்டுவிட்டது. சிலை மாற்றம் பக்தர்களிடையே பெரிய சூறாவளியைக் கிளப்பியது!
“பிரஸ்ன்ன புலி” உன்னிகிருஷ்ண பணிக்கரின் பிரஸ்னத்தால் புலி மீதமர்ந்த அய்யப்பக் கடவுளே ஆடிப் போகும் அளவுக்கு வாதப்பிரதி வாதங்கள் கிளம்பி கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. உச்சக்கட்டமாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைக் குரல்களும் எழுந்துள்ளன.
கேரளத்தில் இருக்கும் சபரிமலை அய்யப்பன் சந்நிதானத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்வதற்காக கடந்த யூன் 19 ஆம் நாள்  திருவாங்கூர் அறநிலையத் துறை உன்னிகிருஷ்ண பணிக்கரை அழைத்து தேவபிரஸ்னம் கேட்டது.
“அய்யப்பன் சந்நிதானத்தில் இளம் பெண் ஒருவர் அவரைத் தொட்டுக் கும்பிட்டிருக்கிறார். அதனால் அய்யப்பனுக்குத் தீட்டுப் பட்டுவிட்டது! பிரஸ்னம் பார்த்ததில் கோயிலுக்குள் பெண் வந்து போனதும் கூடவே கள் வாசனை இருப்பதும் தெரிந்தது. இங்குள்ள தந்திரிகள் கள், சாரயம் போன்ற மதுபானங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இதனால் அய்யப்பன் பயங்கர கோபத்தில் உள்ளார்.  அவரின் முகமே மாறி விட்டது. இந்தக் கோபத்தை மாற்ற அவருக்கு அணியும் ஆபரணங்களைப் புதிதாகச் செய்ய வேண்டும். புதிதாக அய்யப்பன் சிலையையும் செய்ய வேண்டும்” என தன் பிரஸ்னத்தில் தெரிவதாக பணிக்கர் ஒரு குண்டு போட்டார்.
“கோயில் கருவறைக்குள் யாரும் நுழைய முடியாது. அதுவும் ஒரு பெண் நுழைந்து சுவாமி சிலையைத் தொட்டு வணங்குவது என்பது கற்பனையில் கூட நடக்க முடியாதது. எனவே உன்னிகிருஷ்ண பணிக்கரும் நடிகை ஜெயமாலாவும் கூட்டுச் சேர்ந்து எதற்காகவோ நாடகமாடுகிறார்கள்” என்று கோயில் தந்திரிகள் உன்னிகிருஷ்ண பணிக்கர் மீது குற்றம் சாட்டினார்கள்
“தந்திரிகள் ஆகம விதிப்படி நாளும் குளித்துவிட்டுத்தான் பூசை செய்ய வேண்டும். ஆனால் இப்போது சபரிமலை கோயிலில் உள்ள தந்திரியும் மேல் சாந்தியும் குளிப்பதில்லை. குளிக்காமலேயே பூசை செய்கிறார்கள். மீறிக் குளித்தாலும் குழாய்த் தண்ணீரில் குளிக்கிறார்கள், ஆசார நியமனம் ஒன்றும் பார்ப்பதில்லை, மகாருத்ர யாகம், சகஸ்ரகலசம் ஆகியவையும் முறையாக நடப்பதில்லை இதனால் சபரிமலையின் புனிதம் இவர்களால் கெட்டுவிட்டது. அய்யப்பன் பயங்கரக் கோபத்தில் இருக்கிறார்” எனப் பதிலுக்கு உன்னிகிருஷ்ண பணிக்கர் தந்திரிகள் மீது குற்றம் சாட்டினார்.
தந்திரியும் மேல் சாந்தியும் நம்பூதிரிப் பிராமணர்கள். உன்னிகிருஷ்ண பணிக்கர் வேறு சாதியைச் சேர்ந்தவர். எனவே இந்தச் சண்டை பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்ற கோணத்திலும் நடைபெறுகின்றது என்ற பேச்சும் அடிபடுகிறது.
பிரஸ்னத்தைத் தொடர்ந்து, கன்னடத்தைச் சேர்ந்த பிரபல நடிகையான ஜெயமாலா, “1986 ஆம் ஆண்டு என் இருபத்தேழாவது வயதில், தந்திரி ஒருவர் உதவியுடன் அய்யப்பன் சிலை அருகில் சென்றேன். கூட்ட நெரிசலில் கீழே விழுந்த நான் அய்யப்பனின் கால்களைத் தொட்டு வணங்கினேன். உன்னிகிருஷ்ண பணிக்கர் சொல்லும் பெண் நான்தான்” என அறநிலையத் துறைக்கு ஒரு தொலைப்படியை (கயஒ) அனுப்பினார்.
மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும், வயதுக்கு வராத சிறுமிகளும்தான் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அப்படியிருக்க, ஜெயமாலா இப்படிச் சொன்னதும் “அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று குரல் எழும்பியது. இது இரு மாநில சட்டமன்றங்களிலும் காரசாரமாக விவாதிக்கப் பட்டது.
இந்தச் சந்தடிகளுக்கு இடையில், பரம்பரை பரம்பரையாக அய்யப்பன் கோயிலுடன் தொப்புள்கொடி தொடர்புகொண்ட பந்தளம் அரச குடும்பத்தினர், அறநிலையத் துறை மீதும் உன்னிகிருஷ்ண பணிக்கர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை சொல்ல ஆரம்பித்தனர்.
“கோயிலுக்கும் எங்களுக்குமான தொடர்புகளை இல்லாமல் போகச் செய்யும் முயற்சிதான் இது. சபரிமலையில் ஊழல் செய்வதற்காகவே தேவசம் சபையும், தந்திரியும் (பூசாரியும்) உன்னிகிருஷ்ண பணிக்கரும் சேர்ந்து தேவப்பிரஸ்னம் நடத்தியுள்ளனர்” என்று பந்தளம் அரண்மனை வட்டாரம் குற்றம் சாட்டுகிறது.
பந்தளம் அரசரின் வளர்ப்பு மகன்தான் அய்யப்பன் என்பது அய்தீகம். அய்யப்பன் வேண்டுகோள்படி சபரிமலையில் அய்யப்பன் கோயில் கட்டப்பட்டது என்பது வரலாறு.
கடவுளுக்கும் சாதாரண மனிதனைப் போல் கோபதாபம் இருக்கிறதா? அது எல்லாம் வல்ல எல்லாம் தெரிந்த எங்கும் நிறைந்த கடவுள் இலக்கணத்துக்கு முரண் இல்லையா?
கோயில் பூசாரியும் தொட்டுத்தானே கும்பிடுகிறார்? அவரும் மனிதர்தானே? ஜெயமாலா என்ற நடிகை மட்டும் ஏன் தொட்டுக் கும்பிடக் கூடாது? பெண் கும்பிடக் கூடாது என்று சொல்வது பெண் அடிமைத்தனத்துக்கு சாமரம் வீசுவது போல் இல்லையா?
அய்யப்பன் ஒரு வித்தியாசமான கடவுள்! அய்யப்பன் அரிக்கும் அரனுக்கும் பிறந்தவர். கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாதவர். எனவே அவருக்குப் பெண்வாடை பிடிக்காது! பாலாழியைக் கடைந்ததும் அமுதம் எடுத்ததும் பாகவதத்தில் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. மோகினி வடிவமெடுத்த விஷ்ணுவைக் கண்டதும், தன்னுடைய மனைவியான பார்வதி அருகில் இருப்பதைக்கூடப் பொருட் படுத்தாமல் சிவன் காமத்துடன் நெருங்கினார். கடைசியில் அவருக்குச் சுக்கில வெளிப்பாடு உண்டானது. அது விழுந்த இடங்கள் பொன்னும் வெள்ளியும் விளையும் பிரதேசங்களாக மாறின எனப் பாகவத புராணம் கூறுகின்றது.
சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் அய்யப்பன் சாமிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டு ஏற்பட்டுவிட்டது என்று சொல்வது சரியானால் இவ்வளவு நாளும் செய்த வழிபாடு, பூசை எல்லாம் சுத்தமாக வீணாகிவிட்டதே! அது மட்டுமல்ல அய்யப்பனைவிட நடிகை ஜெயமாலாவுக்கு சக்தி அதிகம் என்ற பொருளும் இதில் பொதிந்து கிடக்கிறது!
தீட்டு நீங்க வேண்டும் என்றால் கோயிலை இனிப் புனிதப்படுத்த வேண்டும். முன்னரும் ஆகம விதிகளுக்கு மாறாக தலித்துக்களைக் கோயிலுக்குள் அனுமதித்த போது சுவாமிக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்று பக்தர்கள் புலம்பினார்கள்! புரோகிதர்கள் பதைத்துப் போனார்கள்! கும்பாவிசேகம் செய்து தீட்டுக் கழிக்க வேண்டும் என்று ஒரே குரலில் சொன்னார்கள்.
உண்மை என்னவென்றால் உன்னிகிருஷ்ண பணிக்கருக்கும் நடிகை ஜெயமாலாவுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்திருக்கிறது. வாஸ்து தொடர்பாக ஜெயமாலாவுக்கு பணிக்கர் ஆலோசனை வழங்கி இருக்கிறார். அதனைப் பயன்படுத்தித்தான் பணிக்கர் “அருள்வாக்கு” ச் சொல்லியிருக்கிறார்!
உன்னிகிருஷ்ண பணிக்கர் ஏன் அப்படியொரு நாடகமாட வேண்டும்? சரிந்து வரும் அவரது புகழையும் வருமானத்தையும் தூக்கி நிறுத்தத்தான் என்கிறார்கள் தந்திரிகள்!
இப்போது நடிகை ஜெயமாலா சொல்வதைப் படியுங்கள். எனது கைச்சரக்கு ஏதாவது இருக்குமோ என்று யாரும் அய்யப்படக் கூடாது என்பதால் விகடனில் வந்த அவரது கொச்சைத் தமிழ் செவ்வியை அப்படியே கீழே தருகிறேன்.
‘‘இந்த வீட்டைக் கட்டுறதுக்கு முன்னால இங்க நிறைய கரையான் புத்து இருந்துச்சு. அதை இடிச்சி மூடிட்டு தான் வீட்டைக் கட்டினோம். அப்போ ஜோதிடர். ‘வீட்டுல தோஷம் இருக்கு. குடி வராதீங்க… மீறி வந்தா, மூணு மாசத்துலயே செத்து டுவீங்கன்னு சொல்லிட்டாரு.
வீட்டுல அஷ்டமங்கலம் போட்டா என்ன தோஷம் இருக்குன்னு பார்த்து சரிபண்ணிடலாம்னு சொன்னதால், உன்னிகிருஷ்ண பணிக்கரை எங்க வீட்டுக்குக் கூட்டி வந்தோம். அஷ்டமங்கலம் போட்ட பணிக்கர், ‘நீங்க சுப்ரமணியா சாமியை எங்காவது தொட்டு இருக்கீங்களா?’னு கேட்டாரு. ‘இல்லையே’னு சொன்னேன். ‘நல்லா யோசிச்சிச் சொல்லுங்க… காட்டுல இருக்கிற ஒரு பவர்ஃபுல் சாமியை நீங்க தொட்ட தோஷம் இதுல தெரியுதுன்னு திரும்பவும் கேட்டாரு. உடனே ஐயப்பன் கோயில் ஞாபகம் வந்தது. அப்ப சாமியை தொட்டதை சொன்னேன். உடனே பணிக்கர், ‘நீங்க ஐயப்பன் கோயிலுக்குப் போனதும், அங்கே இருந்த சாமியைத் தொட்டதும் ரொம்ப தப்பு. அந்தத் தோஷம்தான் உங்களை ஆட்டுவிக்குதுன்னு சொல்லி, பரிகார பூஜை நடத்தினாரு. இதெல்லாம் நடந்தது 2000 ஆம் வருஷத்துல. அதுக்குப் பிறகு நான் பணிக்கரை பார்க்கவோ, பேசவோ இல்லை. மத்தபடி எங்களுக்குள்ள எந்த தொடர்பும் கிடையாது.’’
‘‘பணிக்கர் சபரிமலையில தேவபிரஸ்னம் பார்த்த அன்றைக்கே எப்படி நீங்க தேவஸம் போர்டுக்கு ஃபேக்ஸ் அனுப்பினீங்க?’’
‘‘அதைத்தான் சொல்ல வரேன். பணிக்கர் சபரி மலையில தேவபிரஸ்னம் பார்த்த அன்னைக்கு பணிக்கரோட உதவியாளர் எனக்கு போன் பண்ணி, ‘கோயில்ல பணிக்கர் பிரஸ்னம் பார்த்ததில் நீங்க ஐயப்பனைத் தொட்ட தோஷம் இன்னும் இருக்குனு சொல்றாரு. நீங்க அதை ஒப்புக் கிட்டு மன்னிப்பு கேட்டு ஃபேக்ஸ் அனுப்பச் சொல்லி பணிக்கர் சொன்னாருன்னு தகவல் கொடுத்தார். எங்க குடும்ப ஜோதிடர்ட்ட கன்சல்ட் செய்துட்டு ஃபேக்ஸ் அனுப்பினேன். ஆனா, மறுநாள் இதையெல்லாம் மறைச்சு பணிக்கர் பிரஸ்னம் பார்த்துச் சொன்ன பவர்லதான் நான் ஃபேக்ஸ் அனுப்பிய மாதிரி தேவஸம் போர்டு திரிச்சி செய்திகளை வெளியிட்டது. அதை பார்த்து ஷாக் ஆயிட்டேன். இருந்தும் கடவுள் விவகாரம் என்பதால் அப்போ வாய்திறக்கல.’’
‘‘சில வாரங்களுக்கு முன்பு பணிக்கரை நான் பார்த்ததே இல்லன்னு சொல்லிட்டு இருந்தீங்களே..?’’
‘‘சபரிமலை விவகாரம் தொடர்பாக எதுவும் பேசக்கூடாதுனு கேரள போலீஸ் சொல்லியிருந்தாங்க. கர்நாடக போலீஸாரும் ‘இந்த விஷயம் சீரியஸாகிட்டே போகுது. அதனால யாரு எதைக் கேட்டாலும் தெரியாதுனு சொல்லுங்கன்னு சொல்லியிருந்தாங்க. இப்போ நான் ஏதோ பணிக்கர்கூட சேர்ந்துகிட்டு டிராமா போடுற மாதிரி க்ரியேட் பண்ணிட்டு இருக்காங்க. அதனாலதான் இனியும் உண்மைகளை மறைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டேன்.’’ ‘‘கேரள போலீஸார் உங்களிடம் விசாரிச்ச போது என்ன சொன்னீங்க..?’’ (தொடரும்)
சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் கைது செய்யப்படுகிறார்!
(8)
“எஸ்.பியான இராமச்சந்திரன் நாயர்கூட வந்த போலீஸ் டீம், என்கிட்ட 73 கேள்விகளை எழுதிக் கொடுத்து விசாரிச்சுட்டு, ‘உங்க மேல எந்தத் தப்பும் இல்லம்மா’னு சொல்லிட்டுப் போனாங்க. அப்படியிருக்கும் போது போலீஸோட முழுமையான விசாரணை அறிக்கை வெளி வர்றதுக்கு முன்பே ஜெயமாலாதான் குற்றவாளினு கதை கட்டிட்டு இருக்காங்க. இந்த விஷயத்துல என்னைப் பலிகடாவாக்கப் பார்க்கிறாங்க.”
“எதுக்காக உங்களைப் பலிகடாவாக்கணும்?”
“பணிக்கர், தேவஸம் போர்டு, அமைச்சர் சுதாகரன் எல்லாமே ஒரே கோஷ்டிதான். பணிக்கர் ஏதோ அவரோட தெய்வாதீன சக்தியால நான் அய்யப்பனைத் தொட்டதைக் கண்டு பிடிச்சதைபோல காட்டிக்க நினைக்கிறாரு. அப்படி காட்டிக் கிட்டா அவரோட மவுசு இன்னும் அதிகமாகும் இல்ல. தேவஸம் போர்டுல இருக்கிறவுங்க அவுங்க மேல உள்ள தப்பை மறைக்க, இந்த விஷயத்தை ஊதி விடுறாங்க. அமைச்சர் விளம்பரத்துக்காக என்மேல நடவடிக்கை எடுக்கப் போறதா சொல்லிட்டுத் திரியிறாரு. இவுங்க மூணு பேரும் சேர்ந்து போடுற நாடகத்தில என்னை வில்லியாக்கிட்டாங்க.
இதுக்கு மேலயும் ஏதாவது சொல்லிட்டு இருந்தாங்கன்னா,சட்டபடி நடவடிக்கை எடுக்கிற தைத் தவிர வேறவழி தெரியல. அதுக்கு அய்யப்பன் எனக்குத் துணை நிற்பாரு’’ என நெஞ்சில் கைவைத்துச் சொன்னார் ஜெயமாலா.
கேரள குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரி இராமச்சந்திரன் நாயர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் உன்னிகிருஷ்ண பணிக்கரும் நடிகை ஜெயமாலாவும் சதித் திட்டம் தீட்டி நாடகமாடியது தெரியவந்துள்ளது. அவர் கடந்த 2 மாதத்திற்கு முன் கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணனிடம் கொடுத்த அறிக்கையில் ஜெயமாலா மீதும், ஜோதிடர் பணிக்கர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார். இதனால் இன்னும் ஒரு சில வாரங்களில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரியவருகிறது. அதற்கான உத்தரவை கேரள அரசு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஜெயமாலா அறத்துறை அமைச்சர் சுதாகரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர்தான் என்னை சிக்கவைத்து விட்டார். என் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம்,’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்திற்கு அமைச்சர் சுதாகரன் நான்கு பக்க அளவில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
“நடிகை ஜெயமாலா தன்னை “குற்றமற்றவர்’ என்று கூறியுள்ளார். அப்படியானால், இலட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களின் உணர்வுகளைக் காப்பாற்றும் பொருட்டு, இந்த சர்ச்சை குறித்த உண்மை நிலையை அவர் வெளியிட வேண்டும். இந்த விஷயத்தில் அவர் பகடைக் காயாக பயன்படுத்தப் பட்டிருக்கலாம். உன்னிகிருஷ்ண பணிக்கரும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என விசாரணை நடத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர். கன்னட நடிகை ஜெயமாலா 20 ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை கோவிலில் அய்யப்பன் சிலையை தொட்டதாக அறிக்கை வெளியிட்டதற்கான காரணத்தைத் தெரிவித்தால் அவருக்குக் கருணை காட்டப்படும்.
பத்து முதல் ஐம்பது வயது பெண்கள் கோவிலில் நுழையத் தடை இருக்கும்போது, தன்னுடைய இளம் வயதில் நடிகை ஜெயமாலா கோவிலுக்குள் நுழைந்ததாகக் கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட தடை இருக்கும்போது, அவர் நுழைந்தது உறுதி செய்யப்பட்டால் அது கிரிமினல் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படும். இவை அனைத்தையும் ஜெயமாலாவுக்கு எழுதிய கடிதத்தில் நான் தெரிவித்துள்ளேன்” என கேரள அமைச்சர் சுதாகரன் கூறினார்.
இதற்கிடையில் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக “இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகவே நடிகை ஜெயமாலா மூலம் அய்யப்பன் கோவில் சர்ச்சையை அரங்கேற்றி ஆதாயம் தேட முயலுகிறார் உன்னிகிருஷ்ண பணிக்கர்” என்று அவரது முன்னாள் உதவியாளர் நாராயணன் குற்றம் சாட்டுகிறார்.
‘ஜெயமாலா சொல்வது சுத்தப் பொய். கோவிலுக்குள் நுழைந்தது, சுவாமி சிலையை தொட்டது எல்லாமே உன்னிகிருஷ்ண பணிக்கர் சொல்லிக் கொடுத்தது. அவர் போட்டுக் கொடுத்த சதித் திட்டத்தைத்தான் ஜெயமாலா இப்போது அமல்படுத்தியுள்ளார்” என்று நாராயணன் சாடுகிறார்.
நெல்லையில் உள்ள தனது வீட்டில் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் “ நான் மூன்று ஆண்டுகள் பணிக்கரிடம் தனி உதவியாளராக இருந்தேன். பின்னர் என்னைக் கடந்த மாதம் (யூன் 2006) பணியிலிருந்து நீக்கி விட்டார். மேலும், நாராயணன் பரப்பனங்காடியில் நான் வாங்கியிருந்த ரூபா 7 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் ரூபா 2 லட்சம் மட்டும் கொடுத்து எழுதி வாங்கி விட்டார். ஜெயமாலா சொல்வது அனைத்துமே பொய். எல்லாமே பணிக்கரின் திட்டம்தான். அதாவது அவருக்கு சபரிமலை கோவிலில் தேவபிரசன்னம் பார்க்க அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும், முன்பு போல அவருக்கு கேரளாவில் செல்வாக்கும் இல்லை.
அவரை நம்பி ஆரூடம் கேட்ட பலரும் இப்போது விலகிச் செல்ல ஆரம்பித்து விட்டனர். இதனால் விரக்தி அடைந்த பணிக்கர், இழந்த செல்வாக்கைப் பெறும் விதத்தில்தான் “நான் கணித்தது போல நடந்து விட்டது பார்த்தீர்களா” என்று காட்டுவதற்காகவே ஜெயமாலா மூலம் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
ஜெயமாலாவை நான் பார்த்ததே இல்லை என்று பணிக்கர் கூறுவது பச்சைப் பொய். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 3 முறை இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். பெங்களூரில் இரண்டு முறையும் சென்னையில் ஒருமுறையும் இருவரும் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது நானும் பணிக்கருடன்தான் இருந்தேன் என்று கூறியுள்ளார்.
சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் என்ன சொல்கிறார்? “தேவபிரஸ்னம் பார்ப்பது என்பது நான் மட்டும் தனிப்பட்டு பார்ப்பதில்லை. தேவஸம் போர்டைச் சேர்ந்த 23 ஜோதிடர்கள் முன்னிலையில்தான் பார்ப்பேன். சோளியை உருட்டி நான் பிரஸ்னம் பார்த்துச் சொல்வதைக் கூடவே இருந்து அவர்களும் உறுதிப்படுத்துவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் நடந்தது. அப்போதெல்லாம் பேசாமலிருந்த தந்திரிகள், இப்போது மட்டும் ஏன் பிரச்னை கிளப்பவேண்டும்?” என்கிறார்.

தந்திரி கண்டரகு மோகனருவோ “அவர் சொல்வதை யாரும் நம்பத் தயாராக இல்லை. விளம்பரத்துக்காக பணிக்கர் செயல்படக்கூடியவர்’’  என்கிறார்.

அறத்துறை உறுப்பினர் புனலூர் மாது “பந்தளம் ராஜா, தனது பழைய செல்வாக்கை வைத்துக் கோயில் நிர்வாகத்திடம் பணம் பறிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால்தான் அவருக்கும் போர்டுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. ராஜாவிடம் இருக்கும் நகைகள் அனைத்தும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் சொத்து. எப்படியோ, ஏமாற்றி தங்கள் குடும்பக் கட்டுப்பாட்டில் வைத்து விட்டனர்” என்கிறார்.

இவ்வாறு ஆளுக்கு ஆள் தாராளமாக சேற்றை அள்ளி வீசுகிறார்கள்.

எல்லோருக்கும் சொல்லும் பல்லி தான்மட்டும் கூழ்ப் பானைக்குள் விழுந்ததாம். எல்லோருக்கும் சாதகம், வாஸ்து, பிரஸ்னம் பார்த்துச் சொல்லும் “பிரஸ்ன புலி” உன்னிகிருஷ்ண பணிக்கர் அந்தப் பல்லியின் நிலையில்தான் இருக்கிறார். அய்யப்பனுக்கு பிரஸ்னம் பார்க்கு முன்னர் பணிக்கர் தன் பிரஸ்னம் எப்படி என்று ஏன் பார்க்கவில்லை?
அவரது உதவியாளர் சொல்வது போல தனது புகழையும் வருமானத்தையும் தூக்கி நிறுத்தவே பணிக்கர் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். அவரது கெட்ட காலம் நாடகம் துன்பியலில் முடிந்திருக்கிறது!
இது இவ்வாறிருக்க ஆடையில்லாத அழகிகளோடு அய்யப்பன் கோயில் கண்டரரு மோகனரு தந்திரி கலவிக் கடலில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த காட்சியை சில மாதங்களுக்கு முன்னர் சிலர் படம் எடுத்துள்ளார்கள்!
கொலை, களவு, பொய், கள், காமம் என்ற பஞ்சமா பாதகங்களில் அய்யப்பன் கோயில் பூசாரியார் கடைசிப் பாதகத்தைத் துணிந்து செயதிருக்கிறார்.
அய்யப்பனுக்குக் களங்கம் ஏற்படுத்திய தந்திரியை சிறையில் தள்ளுங்கள் என தேவசம் சபை அமைச்சர் ஆவேசமாகப் பேசியுள்ளார். தந்திரியின் வேலையையும் தேவசம் சபை பறித்து விட்டது.
“நான்காவது மாடிக்குச் சென்றதும் ஒரு அறையில் என்னைத் தள்ளிக் கதவை மூடினர். என் ஆடைகளை அவிழ்த்துவிட்டு கட்டிலில் தள்ளினர். பின்னர், கறுத்த நிறத்தில் இருந்த பெண்ணை எனக்கு அருகே தள்ளிவிட்டனர். இரண்டு பேரின் தலைகளைச் சேர்த்து வைத்தும் நாங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடப்பது போலவும் போட்டோ எடுத்தனர். அந்தப் பெண் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நிர்வாணமாக இருந்தார். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு திரும்ப வந்தார்கள.; போட்டோவைக் காட்டி ரூ.30 லட்சம் கேட்டனர். கேட்டதைத் தராவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர்.
நான் இங்கிருந்து போனால்தான் பணம் தரமுடியும் என்றேன். பணமோ, செக்கோ உடனே தர வேண்டும் இல்லாவிட்டால் போட்டோவை வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். என்னிடம் இருந்த செல்போன், பிரேஸ்லெட், மாலை, இரத்தின மோதிரங்களைப் பறித்துக்கொண்டு வெளியே விட்டனர்” எனப் புலம்புகிறார் தந்திரி!
கண்டரரு மோகனரு காவல்துறைக்குக் கொடுத்த முறைப்பாட்டில் கூறியுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சுமார் 22 வீடுகள் உள்ளன. தந்திரி அடைக்கப்பட்டதாகக் கூறிய அந்த வீட்டில் 2 பெண்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பரத்தமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
குறிப்பிட்ட இந்த வீட்டிற்குக் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 20 முறைக்கு மேல் தந்திரி சென்று இருக்கிறார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் அந்த வீட்டுக்குள் அவர் இருப்பார். அதன் பிறகே வெளியே வருவாராம். நீண்ட நாள்களுக்குப் பிறகே இந்த வீட்டுக்கு வந்து செல்வது சபரிமலை தந்திரி என்பது அக்கம் பக்கத்தாருக்குத் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தந்திரியின் முறைப்பாட்டை விசாரித்த எர்ணாக்குளம் காவல்துறை தெரிவிக்கிறது. இதற்கான ஆதராங்கள் அனைத்தும் தற்போது தங்களிடம் உள்ளதாக காவல்துறை மேலும் சொல்கிறது.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தந்திரியுடன் காணப்பட்ட பெண் சேர்த்தலையைச் சேர்ந்தவர். விபசார வழக்கில் தேவரை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டவர். இப்படிப்பட்ட பெண் தனியாக வசிக்கும் குடியிருப்பில் தந்திரிக்கு என்ன வேலை?
இதுபற்றிக் கேரள அறத்துறை அமைச்சர் சுதாகரன் கூறும்போது “சபரிமலை விவகாரத்தில் புதிது புதிதாக பல பிரச்னைகள் முளைக்கின்றன. தந்திரி மீதான பயங்கர குற்றச்சாட்டு கேரள மக்களுக்கே பெருத்த அதிர்ச்சியாக உள்ளது. கேரள கலாசாரத்தையே அவர் அவமானப்படுத்தி விட்டார். இது குறித்து தேவசம் சபை முறையான விசாரணை நடத்த வேண்டும். அவரைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்” குறிப்பிட்டார்.
நடிகை ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டுக் கும்பிட்டதால் அய்யப்பனுக்குத் தீட்டு என்று சொல்லி பெரிய பொருட்செலவில் பரிகாரம் செய்யப்பட்டது. இப்போது தந்திரியால் அய்யப்பனுக்கு தீட்டுப்பட்டுவிட்டதாம். அதற்கும் பரிகாரம் செய்யப்போகிறார்களாம்!
இப்படி சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பற்றி வெளிவரும் செய்திகள் உங்களுக்கு எப்படியோ எனக்கு அந்த நாற்றம் வயிற்றைக் குமட்டுகிறது!
சபரிமலையைச் சுற்றியுள்ள காடு அழிக்கப்பட்டு அதன் சூழல் மாசுபடுதப் பட்டுவிட்டது. அருகில் ஓடும் பம்பை நதி தூய்மை இழந்து குளிப்பதற்குக் கூட உதவாமல் போய்விட்டது. அய்யப்பன் இங்குதான் கண்டெடுக்கப்பட்டது என்று இந்தப் பம்பா நதிக்கரையைத்தான் காட்டுகிறார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பக்தர்கள் கார்த்திகை மாதத்திலிருந்து செல்லத் தொடங்குவார்கள். சபரிமலையின் அடிவாரத்தில் தங்கி, பம்பையில் இருந்து 40 மிமீ தூரம் செங்குத்தான மலைப்பாதையில் நடந்து, பம்பா நதியில் குளித்து அய்யப்பனிடம் இருமுடியைக் கொடுத்து விட்டுத் திரும்புவார்கள். வயதானோர், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாசக் கோளாறால் அவதிப்படுவோர் பெரிதும் சிரமப் படுகின்றனர்.
இவர்கள் நலன்கருதி திருவாங்கூர் அறத்துறை பம்பை – நீலிமலையேற்றம் அப்பாச்சி மேடு – சபரிமலை நடைபாதயில் 18 இடங்களில் உயிர்க்காற்று மூச்சு மையங்களை அமைத்துள்ளது.
இதுமட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்துகள், இதய நோய் மருத்துவர்கள் எல்லாம் தயாராக வைக்கப்பட்டிருக்கிறதாம். அய்யப்பனால் எதுவும் ஆகாது துளிகூடப் பயனில்லை என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
காடு, மலை தாண்டி தன்னைப் பார்க்க வரும் தனது பக்தர்களையாவது அய்யப்பன் காக்க வேண்டாமா?
பக்தர்கள் போகின்ற வழிகளிலும் தங்குகின்ற இடங்களிலும் கழிப்பறை வசதிகள் எதுவும் கிடையாது. வானமே கூரையாகக் கருதி வெட்டவெளியில் எல்லாவற்றையும் முடித்துக் கொள்வார்கள். குளிக்கும் வசதியும் கிடையாது. மலைப் பாதையில் ஓடும் நீரோடைகளில் குளித்துக் கரையேறுவார்கள்.
பக்தர்கள் பம்பா ஆற்றிலேயே மலங் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.  ஆற்றங்கரைகளில் கால் வைக்கவே இடம் இல்லாமல் அது வெறும் மலக்காடாகவே காட்சி தருகிறது. நீர் தேங்கும் இடங்களில் மலம் தேங்கி மிதக்கிறது. .
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி இம்மலத்தின் எடை 12 ஆயிரம் தொன்கள். பத்து தொன் எடை ஒரு பாரவுந்தில் ஏற்றலாம் என்றால் எத்தனை பாரவுந்து மலம் எனக் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.
இந்த ஆற்றைத்தான் புனிதம் என நினைத்து அதில் நீராட ஆண்டு தோறும் ஒரு கோடிப் பக்தர்கள் கார்த்திகை முதல் தை வரை படையெடுக்கிறார்கள்.
இந்த ஆண்டு (2006)  சனவரி 13 இல் மகரவிளக்கு அன்றைக்குப் பம்பா நதியின் நீரை மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதித்துப் பார்த்துள்ளது.  100 மில்லி நீரில் பொதுமேனி 4 லட்சத்து 30 ஆயிரம் நுண்ணுயிர்க் கிருமிகள் (உழடகைழசஅ டியஉவநசயை) காணப்பட்டன! (வளரும்)

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
செவ்வாய் தோசம்
(9)
பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்பார்கள். சபரிமலை அய்யப்ப பக்தியும் இது போன்றதுதான். பம்பா ஆறு குளிப்பதற்குக் கூட உதவாது தூய்மை அற்றுப் போய்விட்டது எனக் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்கிறது.
ஒரு லிட்டரில் 43 இலட்சத்துக்குமேல் நுண்ணுயிர்க் கிருமிகள் இருக்கின்றனவாம். அனுமதிக்கப்பட்ட நுண்ணுயிர்க் கிருமிகளின் அளவு 100 மில்லி நீரில் 500 மட்டுமே!
இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் பம்பா நதியில் கோடிக்கணக்கில் நுண்ணுயிர்க் கிருமிகள் இருக்கின்றன. இந்த நோய்க் கிருமிகள் குடலில் வலியையும் நோயையும் உண்டாக்கக் கூடியவை. (வுhந ர்iனெர – ழுஉவழடிநச 09இ 2006)
மதம் ஒரு போதை. கடவுள், கோயில், குளம், ஜீவாத்மா – பரமாத்மா, நரகம் – சொர்க்கம் போன்றவை பக்திப் போதையை விற்பனை செய்யப் பயன்படும் வசீகரமான தகுடுதத்தங்கள்! மனித மூளைக்கு விலங்கிட்டு மனிதனை விலங்காகவே ஆக்கும் ஒரு வகை மூளைச் சலவை!
ஆனால் இவையெல்லாம் அய்யப்ப பக்தர்களுக்கு உறைக்காது. அவர்கள் தொடர்ந்து “சாமியே! அய்யப்பா” “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை”எனக் பாடிக் கொண்டே செருப்புக் கால்களோடு மலை ஏறுவார்கள்!
இந்த அய்யப்பன் வழிபாடு தமிழர்களுக்குப் புதிது. தமிழர்களது மனம் புதிய புதிய கடவுளர்களைத் தேடுகிறது. அவ்வாறு புதிய கடவுளர்களைத் தேடியதன் விளைவே கேரள அய்யப்பன் புகழ் ஏறுவதற்கும் தமிழ்நாட்டுக் கடவுளர்;கள் மதிப்பு இறங்குவதற்கும் காரணமாயின.
இன்று மலையாள ஆந்திரக் கடவுளர்க்குக் கொண்டாட்டம் தமிழ்நாட்டுக் கடவுளர்க்குத் திண்டாட்டம் என்றாகிவிட்டது.
இந்தியாவில் உள்ள பணக்காரக் கடவுளான திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. ஏழுமலையானை வழிபட நாள் தோறும் 50,000 அடியார்கள் மலை ஏறுகிறார்கள்.
ஏழுமலையானை நாளும் ரூபா 100 கோடி பெறுமதியான தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நவரத்தினம், கோமேதகம் போன்ற விலை உயர்ந்த வைர ஆபரணங்களை அணிவித்துப் புதிய பட்டு ஆடையால் அலங்காரம் செய்கிறார்கள். ஒவ்வொன்றும் 60 கிலோ எடையுள்ள இலட்டுகள் ஏழுமலையானுக்கு ஒவ்வொரு நாளும் படைக்கப்பட்டு பின் அடியார்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏழுமலையானின் நிரந்தர வைப்பு நிதி 2835 கோடியை எட்டியுள்ளதாம். கடந்த 2 ஆண்டுகளில் ரூபா 500 கோடி அதிகரித்துள்ளது.
ஏழுமலையானின் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் ரூபா 600 கோடி. இதில் ரூ 230 கோடி நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி என்கிறது தேவஸ்தானம்.
உலகில் நாள் தோறும் மணிக்கு ஒரு தடவை வங்கியில் பணம் செலுத்தும் ஒரே நிறுவனம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மட்டும்தான். செல்வச் செழிப்பில் வத்திக்கனும் மெக்காவும் திருப்பதியைக் கிட்ட நெருங்க முடியாது!
திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்கத்தின் கையிருப்பை உலகச் சந்தையில் இறக்கிவி;ட்டால் தங்கத்தின் விலை படுபாதாளத்திற்குச் சரிந்துவிடும்!
திருப்பதி ஏழுமலையானோடு சபரிமலை அய்யப்பனை ஒப்பிட்டால் பின்னவர் “ஏழை”தான். ஆண்டு வருமானம் 75 கோடி மட்டுமே. இருந்தும் கேரள அரசு சபரிமலை அய்யப்பனை காசு காய்க்கும் மரமாகப் பார்க்கிறது.
இதனால் முதலுக்கு மோசம் வந்துவிடக் கூடாது என எண்ணி சபரிமலை அய்யப்பன் கோவிலை  ரூ.30 கோடிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் காப்புறுதி செய்துள்ளது.
இதுதவிர கோவில் நகைகள், விலை உயர்ந்த பொருட்களும் ரூபா 5 கோடிக்குக் காப்புறுதி செய்யப்பட்டுள்ளன.
அய்யப்ப பக்தர்களுக்கும் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. கீழ் நிலக்கல் பகுதியிலிருந்து சன்னிதானம் வரையிலான 18 கிமீ  தொலைவிலான பாதையில் வரும் பக்தர்களுக்கு விபத்தினால் காயம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்பட்டால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
இதேபோல சபரிமலையில் பணியில் ஈடுபட்டிருக்கும் தேவஸ்தான மற்றும் அரசு ஊழியர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ரூ. 1.5 இலட்சம் காப்பீட்டுத் தொகையாக கிடைக்கும். இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்திற்கு மட்டும் ஆண்டுக் கட்டணம் ரூபா 14.75 இலட்சம் ஆகும்.
இந்த அய்யப்பசாமி வேடம் பூண்டால் 48 நாள் நல்ல உணவு கிடைக்கும். வீட்டில் யாரும் திட்டமாட்டார்கள். சாமி.. சாமி.. என்று நல்ல மரியாதை வேறு. இவற்றால் பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களும் ஊர் சுற்றும் இளைஞர்களும் அய்யப்பன் சாமிக்கு மாலை போட்டுக் கொண்டு மலை ஏறுகிறாhர்கள்.
நான் ஒரு ஊடகவியலாளரைச் சந்தித்தேன். சபரிமலை ஏறிவிட்டு நாடு திரும்பியிருந்தார்.
“இப்போது என்னிடம் எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லை. மச்ச மாமிசம் குடி எல்லாவற்றுக்கும் அய்யப்பன் அருளால் முழுக்குப் போட்டு விட்டேன்” என்றார். ஒருவர் யாருடைய அருளால் அல்லது தூண்டுதலால் திருந்தினாலும் அது வரவேற்கக்கூடியதே! எனக்கு அறவற்ற மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சி அதிகநாள் நீடிக்கவில்லை. இன்னொரு நாள் அவரைப் பார்த்தபோது மனிதர் தண்ணீரில் தள்ளாடிக் கொண்டிருந்தார்!
சமுதாயத்தில் காணப்படும் பிரபலங்கள்தான் சோதிடம் போன்ற மூடநம்பிக்கைக்கு நெய்யூற்றி வளர்க்கிறார்கள்.
கடந்த நொவெம்பர் 28; அன்று வட இந்திய நடிகர் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மகள் சுவேதா, நடிகை அய்ஸ்வர்யா ராய், சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச்செயலர் அமர் சிங், வாரணாசி கோயிலுக்குத் திடீரென்று போனார்கள். அபிஷேக் – அய்ஸ்வர்யா ராய் இருவரும் மணக்கோலத்தில் சென்றதால் அவர்கள் திருமணம் செய்துகொண்டதாகக் கதை பரவியது. அவர்களைப் பார்க்க கூட்டம் அலை மோதியது. அவர்களுக்கு காவல்துறை பலத்த பாதுகாப்பு அளித்தது.
முதலில் சங்கட் மோச்சன் கோவிலுக்குச் சென்று  பல்வேறு பூசைகளை நடத்தினர். பின் அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றனர்.  அங்கு ஸ்ரீகாந்த் திரிபாதி தலைமையில் 11 அர்ச்சகர்கள் சிறப்பு அபிசேக பூசைகள்  செய்தனர். இதையடுத்து மங்கள ஆரத்தி பூசை நடந்தது. இதில் பச்சன் குடும்பத்தினரும் அய்ஸ்வர்யாவும் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமியை வழிபட்டனர். பின்னர் பார்வதி தேவி கோவிலுக்கு சென்ற பச்சன் குடும்பத்தினர் அங்கும் வழிபாடு நடத்தினர். அங்கிருந்த அர்ச்சகர் ஐஸ்வர்யாவின் நெற்றியில் குங்குமத்தை இட்டார். அப்போது ஐஸ்வர்யா பயபக்தியுடன் தலையைக் குனிந்து அதனை ஏற்றுக் கொண்டார். அபிஷேக்கின் வலது கையை அய்ஸ்வர்யா பிடித்திருந்தார். இது, அபிஷேக்கும் அய்ஸ்வர்யாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேசப்படும் செய்தியை உறுதிப் படுத்துவது போல் இருந்தது,
காசி விஸ்வநாதர் கோயிலில் பூசையை முடித்துவிட்டு நள்ளிரவு 2.40 மணிக்கு வெளியே வந்தனர். உடனடியாக அமிதாப்பும் அவரது குடும்பத்தார் ஒரு வண்டியிலும் அய்ஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இன்னொரு வண்டியிலும் ஏறி மும்பைக்குப் புறப்பட்டனர்.
அபிஷேக் – அய்ஸ்வர்யாவுக்குத் திருமணம் நடக்கவில்லை. பின் ஏன் இந்த பூசை, அபிசேகம், மணக்கோலம்? திருமணத் தடைகளை நீக்குவதற்காகவே இந்த வழிபாடு நடத்தப்பட்டதாக அர்ச்சகர்கள் தெரிவித்தார்கள். முன்னதாக பச்சன் குடும்பத்தினர் பிரபல சோதிடர் சந்திரமவுலி உபத்யாயாவை சந்தித்துப்  பேசினர். பச்சன் குடும்பத்தினர் கோவிலுக்கு ஏன் வந்தார்கள் என்பதை அவர் விளக்கினார். “அய்ஸ்வர்யாவின் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருந்தன. குறிப்பாக செவ்வாய் தோஷம் இருந்தது. அதனை நீக்க சிறப்பு பூசை வழிபாடு நடத்தினால் நல்லது என்று ஆலோசனை கூறினேன்;” என்றார்.
வசதியும் வாய்ப்பும் செல்வமும் செல்வாக்கும் வாய்ந்த மேட்டுக்குடியினரே சாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என நம்பி அதனை நீக்க பூசை அபிசேக வழிபாடு செய்யும் போது மற்றவர்கள் சாதகத்தை நம்புவதை எப்படித் தடுக்க முடியம்?
செவ்வாய் கோள் புவியோடு ஒப்பிடும் போது நாலில்; ஒரு பங்கு அளவு உள்ளது. மேற்தரை செங்குத்தான பள்ளத்தாக்குகள், எரிமலை, பனித்துருவங்கள் கொண்டது. அதன் விட்டம் 6,794 கிமீ கல் நீளம். வழி மண்டலத்தில் 95.32 விழுக்காடு கரிமலவாயு, 2.7 விழுக்காடு நீரகம் உடையது. வெப்பம் -305 பாரன்கைட் (-187 செல்சியஸ்).
தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் 24 மணி, 38 மணித்துளி, 23 விநாடி. தன்னைத்தானே சுற்றும் வேகம் விநாடிக்கு 24.13 கிமீ. ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம் 687 புவி நாள்கள். புவியில் இருந்து பொதுமேனி தொலைவு 56.00 மில்லியன் கிமீ (35.00 மில்லியன் கல்) ஆகும். புவியில் உங்கள் எடை 200 கிலோ என்றால் செவ்வாயில் உங்கள் எடை 75.4 கிலோ மட்டுமே!
புவியில் இருந்து 56.00 மில்லியன் கிமீ (5.6 கோடி கிமீ) தொலைவில் உள்ள செவ்வாய்க் கோளுக்கு வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் பூசை செய்தால் தோசம் நீங்கிவிடுமா? மந்திரங்களுக்கு அந்தளவு ஆற்றல் இருக்கிறதா? மந்திரத்தால் ஒரு மாங்காயைக் கூட விழுத்த முடியாது எனப் பழமொழியே இருக்கிறதே!
சாதகத்தின் படி செவ்வாய் தோசம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் அது 7 இல் அல்லது 8 இல் (வீடுகள்) இருந்தாலே சோதிடர்கள் மிகவும் கெட்ட தோசம் என்கிறார்கள். அதுவும் பாபப்பட்ட பெண்களுக்கு செவ்வாய் தோசம் இருந்தால் அவர்களது திருமணம் பாதிக்கப்படுகிறது. இன்னொரு செவ்வாய் தோசம் உள்ள மாப்பிள்ளையைத் தேடிப் பெண் வீட்டார் செருப்புத் தேய அலைய வேண்டியுள்ளது.
மனிதனே செவ்வாயின் நிறத்தைப் பார்த்து அதற்கு செவ்வாய் என்று பெயரிட்ட பிறகு சிவப்பு நிறம் குருதியைச் சுட்டுவதால் அதனைப் போர்க் கடவுள் என அதனை வழிபடுவதும் அதனை ஒரு பாப கிரகம் என்று முத்திரை குத்துவதும் எவ்வளவு முட்டாள்தனம் என்பதை தமிழர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. பல்கலைக் கழகத்தில் பட்டம் வாங்கிய தந்தைமாரே செவ்வாய் தோசம் உள்ள தங்களது மகளது சாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய் மாப்பிள்ளை தேடிப் பேயாய் நாயாய் அலைகிறார்கள்!
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இணைவதற்குத் தொல்காப்பியர் பத்துப் பொருத்தங்களைச் சொல்கிறார். அவர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது இன்றும் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் சோதிடம் சொல்லும் 10-12 பொருத்தங்கள் மூடநம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படுபவை. திருமணப் பொருத்தம் பார்ப்பதில் உள்ள முட்டாள்த்தனத்தை பின்னர் விரிவாக எழுதுவேன்.
வாரணாசியில் மட்டுமல்ல உள்ளுர்க் கோவில்களிலும் செவ்வாய் தோசத்தை நீக்கப் பூசை, அபிசேகம் செய்யும் போது நாசா (Nயுளுயு) நிறுவனம் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பிய ஆயசள புடழடியட ளுரசஎநலழச என்ற விண்கலம் செவ்வாயில் தண்ணீர் அரித்தோடிய மலை இடுக்குகளைப் (பரடடநைள)  படம்பிடித்து புவிக்கு அனுப்பியுள்ளது! இந்த விண்கலம் கடந்த 10 ஆண்டுகளாக செவ்வாய்க் கோளை வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கண்டு பிடிப்பு செவ்வாயில் உயிரினங்கள் இருக்கக் கூடிய வாய்ப்பை அதிகரித்துள்ளது. வானியலாளர்கள் ஒரு காலத்தில் செவ்வாய்க் கோளில் பெரிய ஏரிகள் இருந்ததற்கும் அதன் துருவங்களில் உறைபனியால் மூடப்பட்டுள்ளதையும் அங்கு தண்ணீர் நீர்ம (திவர) வடிவத்தில் (டஙைரனை) இருப்பதற்கும் உள்ள சான்றுகளைக் கண்டு பிடித்துள்ளார்கள்.
நாசா வானியலாளர்கள் 1999 ஆம் ஆண்டு செவ்வாய்க் கோளைப் படம் பிடித்த போது அதன் தரை இருந்த கோலத்தையும் 2006 ஆண்டு அதே செவ்வாய்க் கோளைப் படம் பிடித்த போது காணப்பட்ட தரையின் கோலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து இடையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்தார்கள். அவர்கள் இரண்டு நிலக்குழிச் சுவர்களில் இருந்து தண்ணீர் பீறிட்டுக் கீழ்நோக்கிப் பள்ளத்தில் பாய்ந்திருப்பதைக் கண்டார்கள். அப்படிப் பாய்ந்த தண்ணீர் பல நூறு மீட்டருக்கு கனிப்பொருள் வண்டலை (அiநெசயட னநிழளவைள) விட்டுச் சென்றுள்ளது. (இந்து – 08-12-2006)
இது மட்டுமல்ல. 2020 ஆம் ஆண்டளவில் நாசா நிலாவின் தென்துருவத்தில் விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு குடியேற்றத்தை நிறுவும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஞாயிறு மண்டலத்தை ஆய்வு செய்வதற்கு இது முதல் அடி என நாசா வானியலாளர்கள் சொல்கிறார்கள். தொடக்கத்தில் நான்கு நான்கு பேர் கொண்ட குழு ஒரு கிழமை நிலாவில் முகாமிடும். அதைத் தொடர்ந்து நீண்ட செலவுகள் (பயணங்கள்) மேற்கொள்ளப்படும். முடிவில் மின்சக்தி மற்றும் தேவையான வழங்கல்கள் (ளரிpடநைள) கொண்டு செல்லப்பட்டதும் அங்கு விண்வெளி வீரர்கள் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள்! அங்கிருந்து கொண்டு செவ்வாய்க் கோளுக்கு விண்வீரர்கள் அனுப்பும் நீண்ட காலத் திட்டத்தையும் நாசா தீட்டி வைத்திருக்கிறது! இந்தத் திட்டங்களுக்கு ஆகும் செலவை வெளியிட நாசா மறுத்து விட்டது. உருசியாவும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள ஆவலாக உள்ளது. (ருளுயு வுழனயல – 4-12-2006)
இதற்கிடையில் பல அமெரிக்க நிறுவனங்கள் நிலாவின் தரையை அளந்து துண்டு துண்டாக காணிகளை விற்றுக் கொண்டிருக்கின்றன. கனடாவில் வெளியாகும் யேவழையெட Pழளவ என்ற நாளேடு ஒரு நிறுவனத்துக்கு 10 டொலர் கொடுத்து நிலாவில் காணி வாங்கியுள்ளது! இதுவரை 11 இலட்சம் பேர் நிலாவில் 300 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பை வாங்கியுள்ளதாகவும் வாய்ப்பை நழுவ விடாமல் நீங்;களும் உடனே வாங்குங்கள் என்று இணைய தளத்தில் நிறையப் பேர் விளம்பரம் செய்கிறார்கள்!
அறிவியல், அமெரிக்கர்களை நிலாவில் இறக்கியது. அதே அறிவியல் கண்டு பிடித்த விண்கலங்கள் இப்போது செவ்வாயை ஆய்வு செய்ய அதனை வலம் வந்து கொண்டிருக்கின்றன. அடுத்து நிலாவில் நிரந்தரமாக குடியிருப்புக்களை உருவாக்கி அங்கிருந்து செவ்வாய்க் கோளில் மனிதர்களை இறக்க அறிவியல் முயற்சிக்கிறது! தமிழர்களோ செவ்வாய் சனி தோசம் நீங்க நவக்கிரகங்களை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்! இந்த சோகத்தை யாரிடம் சொல்லி அழுவது?
காசி நகர்ப் புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
என நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த  பாட்டுக்கொரு புலவன் பாரதி கனவு கண்டான். அந்தக் கனவை தமிழன் நினைவாக்கவில்லை. இத்தாலி நாட்டு மார்க்கோனி; (புரபடநைடஅழ ஆயசஉழni (1874-1937) பாரதி கண்ட கனவை நினைவாக்கினார். 1901 இல் வானொலியைக் கண்டுபிடித்தார்! (வளரும்)
சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
மக்களது வாழ்க்கையை நாசம் செய்யும் சோதிடர்கள்
(10)
புத்தர் ஒரு மதவாதியல்ல. அவர் ஒரு பகுத்தறிவுவாதி. கடவுள் இருப்பதை நேரடியாக இல்லாமல் எதிர்மறையாக மறுத்தவர். ஆன்மா உண்டென்பதை மறுத்தவர். இருந்தும் இந்து மதத்தின் செல்வாக்கால் புத்தர் கடவுளாக்கப்பட்டு விட்டார். அவர் போதனை மதமாகிவிட்டது. அவர் பேரில் விகாரைகள், சடங்குகள், கற்பனை கலந்த பாட்டிக் கதைகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. உண்மையான புத்தர் சொன்ன பகுத்தறிவுக் கருத்துக்களை எல்லோரும் ஊன்றிப் படிக்க வேண்டும். படித்த பின்னர் அவற்றில் உண்மையிருந்தால் அவற்றைப் பின்பற்றி ஒழுக வேண்டும்.
நீ கேட்டதை அப்படியே நம்பி விடாதே!
கோட்பாடுகள் தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கப்பட்டு வந்திருப்பதால் மட்டும் அதனை நம்பி
விடாதே!
பலர் கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக ஒன்றையும் நம்பிவிடாதே!
ஒரு மூப்படைந்த முனிவர் ஒன்றைச் சொல்கிறார் என்பதற்காக எதனையும் நம்பிவிடாதே!
பழக்கம் காரணமாக ஏற்றுக்கொண்ட உண்மைகளை நம்பிவிடாதே!
உனது ஆசிரியர்கள் பெரியோர் சொன்னது என்பதற்காக எதனையும் நம்பி விடாதே!
எல்லாவற்றையும் பகுத்துப் பார். சிந்தித்துப் பார். அதன் விளைவாக ஏற்படும முடிவு பகுத்தறிவோடு பொருந்தி வருமானால், அது நன்மை பயக்குமேயானால் அதனை ஏற்றுக்கொண்டு அதன்பபடி வாழக் கற்றுக்கொள்!
புத்தர் இவ்வாறு பகுத்தறிவுக்கு வரைவிலக்கணம் வகுத்து 2,500 ஆண்டுகள் ஆகிவிட்டன. புத்தர் மனிதனது வாழ்க்கை அவன் செய்யும் நல்வினை தீவினைக்கு ஏற்ப அமையுமேயன்றி வானத்து நட்சத்திரங்களால் அல்ல எனச் சொன்னார். பவுத்த தேரர்கள் பிக்குணிகள் அதனை நம்பவோ, பயிலவோ தொழிலாகக் கொள்ளவோ கூடாது என அறிவுறுத்தி இருக்கிறார். இன்று சில தேரர்களே சோதிடர்களாக மாறிப் பலன் சொல்வது சோகந்தான்!
புத்தரைப் போலவே வள்ளுவரும் அறிவுடமை என்ற அதிகாரத்தில் எப்பொருளை யார் யார் கூறக் கேட்டாலும் அப்பொருளின் உண்மையைக் காண்பதே அறிவு என்கிறார்.
தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் எத்தனை புத்தர்கள், எத்தனை வள்ளுவர்கள் எத்தனை பெரியார்கள் வந்தாலும் தமிழர்களைத் திருத்தவே முடியாது போல் இருக்கிறது.
“உன்னால் வீட்டுக்கு கஷ்டம்” சோதிடர் சொன்னதை நம்பி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார். சும்மா ஓடவில்லை ஒரு உருக்கமான கடிதத்தை எழுதிவைத்து விட்டு ஓடியிருக்கிறார்.
சென்னை கோயம்பேடு குமரன் நகர் முக்கிய தெருவில் வாழ்பவர் மாணிக்கம் (50). இவருடைய 2 ஆவது மகன் வைரவபெருமாள் (21) வளசரவாக்கத்திலுள்ள எம்ஜிஆர் ஊயவநசiபெ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த மாதம் 22 ஆம் நாள் காலை கல்லூரிக்குச் சென்ற வைரவபெருமாள் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்காத நிலையில் வைரவபெருமாளின் அறையில் ஒரு கடிதத்தை மாணிக்கம் கண்டெடுத்தார். அந்தக் கடிதத்தில் வைரவபெருமாள் எழுதியிருப்பதாவது:
“சோசியரிடம் குடும்ப நிலைமையைக் கூறி என் சாதகத்தைக் கொடுத்தேன். “என் மேல் கண்டம் உள்ளது’’ என்று கூறினார். என்னுடைய 20 ஆவது வயதுக்கு மேல் நம் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கண்டங்கள் வரும் என்றும் கூறினார். அதை நான் நம்பவில்லை. ஆனால் என் 20 ஆவது வயது முடிந்த அய்ந்தே மாதத்தில் ஏகப்பட்ட நஷ்டம் வந்ததைக் கண்டேன். ஆதலால் நான் அனைவரையும் விட்டுச் செல்கிறேன். என்னைத் தேடாதீர்கள். நான் வடஇந்தியா செல்கிறேன். ஆனால் நிச்சயம் ஒருநாள் திரும்புவேன். இறப்பதற்குள் உங்களை வந்து பார்த்து விட்டுத்தான் இறப்பேன். எல்லாம் நன்மைக்கே.’’
கடிதத்தை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து மாணிக்கம் முறைப்பாடு  செய்தார். காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்குச் சோதிடத்தில் எப்படி நம்பிக்கை வந்தது? சாதகத்தை சோதிடரிடம் காட்ட வேண்டிய அவசியம் அவசரம் என்ன? குடும்ப சூழ்நிலைதான் காரணமாக இருக்க வேண்டும்.
சாதகத்தைப் பார்த்து “உன் மேல் கண்டம் உள்ளது. 20 ஆவது அகவைக்கு மேல் அனைவருக்கும் கண்டம் வரும் என்று கூறினார். அதனை நான் நம்பவில்லை. ஆனால் என் 20 ஆவது வயது முடிந்த அய்ந்தே மாதத்தில் ஏகப்பட்ட நஷ்டம் வந்ததைக் கண்டேன்” என்று அந்த மாணவன் நினைத்ததுதான் தவறு. அது காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை (காகதாலியம்) போன்றது. மாணவன் குடும்பம் நலிந்த குடும்பம் ஆக இருக்க வேண்டும். அதனால்தான் சாதகத்தைத் தூக்கிக் கொண்டு சோதிடரிடம் ஓடியிருக்கிறான்!
ஒருவருடைய சாதகத்தை வைத்து அவரது பலன்களை சொல்லலாம். ஒருவருடைய சாதகத்தை வைத்து மற்றவர்களுடைய பலன்களைச் எப்படிச் சொல்ல முடியும்? அது சாத்தியமா? ஆனால் சோதிடர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிச் சொல்லி பல்லாயிரக்கணக்கான மக்களது வாழ்க்கையை நாசம் செய்து விடுகிறார்கள்.
சோதிடர் ஒருவர் “உனக்கு 25 வயதில் கண்டம்” என்று சொன்னால் அந்தப் பயம் காரணமாகவே சாதகர் உயிரை விட்டுச் சோதிடரது ஆரூடத்தை நூறு விழுக்காடு மெய்ப்பித்து விடுவார்! அதனை ஆங்கிலத்தில் ‘ளநடக-iனெரஉநன ளரiஉனைந’ என  உளவியலாளர்கள் வருணிப்பார்கள்.
முன்னர் நடிகர் ரஜினி இமயமலைக்க யாத்திரை போய் பாபாவை தரிசித்து ஆசீர்வாதம் பெற்று வருவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது சிவாஜி படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் இமயமலைக்குச் சென்று பாபாவைச் சந்திக்கப் போகிறாராம். சென்ற முறை போனபோதுதான் பாவா கதை பிறந்தது. அதைப் படமாக்கி கையைச் சுட்டுக் கொண்டார். இம்முறை அப்படியான விபத்து ஒன்றும் நடக்காது இருக்க வேண்டும்!
இந்த அண்டம் நீளம், அகலம், உயரம் என்னும் மூன்று அளவுகளும் காலம் எனப்படும் ஓர் அளவும் ஆக மொத்தம் நான்கு அளவீடுகள் (குழரச னiஅநளெழையெட ளுpயஉந – வுiஅந) கொண்டதாகும் என்பதை முன்னர் (அத்தியாயம் 2) பார்த்தோம்.
இவ்வண்டத்தின் ஆரம் (சயனரைள) 35,000,000,000, ஒளி ஆண்டுகள் (336 கோடி கோடி கிமீ) ஆகும். ஆரத்தின் நீளத்தை வைத்துக் கொண்டு அண்டத்தின் விட்டம், சற்றளவு, புறப்பரப்பு ஆகியவற்றை நீங்களே கணக்கிடலாம்.
அண்டத்தின் வடிவம் ஒரு இட்லி வடிவத்தில் இருக்கிறதாம்! அதாவது நடுவில் பருத்தும் விளிம்பில் சற்று மெலிந்தும் காணப்படுகிறது.
சோதிட சாத்திரம் ஒன்பது  கோள்களில் (நவக்கிரகங்களில்)  ஒன்றான ஞாயிறைக் (சூரியனை) கோள்கள் பட்டியலில் சேர்த்திருப்பது சரியல்ல. ஞாயிறு கோளல்ல – அது சுய ஒளி படைத்த ஒரு விண்மீன் ஆகும். திங்கள் (சந்திரன்) கோளல்ல – அது புவியைச் சுற்றிவரும் ஒரு துணைக் கோள் ஆகும்.  இல்லை அது கோள்தான் என்று வாதிட்டால் வியாழனைச் சுற்றிவரும் 45 துணைக் கோள்களையும் சனியைச் சுற்றி வரும் 31 துணைக் கோள்களையும் சோதிடக் கணிப்பில் சேர்க்க வேண்டும். அதுவே முறை, அதுவே வாய்மை ஆகும். ஏன் சோதிடர்கள் அவற்றைச் சேர்க்கவில்லை?
இவ்வாறே 27 நட்சத்திரங்களுக்கும் உருவம் கற்பித்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அஸ்வினி நட்சத்திரம் குதிரை முகம் ஆகும்.
ஒன்பது கோள்களில் இராக கேது என்ற கோள்கள் கற்பனைக் கோள்கள். அவ்வாறான கோள்கள் வானத்தில் இல்லை. மேற்குலக சோதிடத்தில் இராகு கேது எனக் கோள்கள் இல்லை.
மேலே கூறியவாறு சூரியன் கோள் அல்ல. நிலா கோள் அல்ல. இந்தக’ கிரகங்களுக்குச் சொல்லப்படும் குணாம்சங்கள் அதன் உருவத்துக்குச் சொன்ன குணாம்சங்கள். உள்ளடக்கத்திற்குச் சொன்ன குணாம்சங்கல் அல்ல. கிரகங்களை ஆண் பெண் அலி என்று பிரிப்பதும் சுப கிரகம் பாப கிரகம் என்று பிரிப்பதும் சோதிடர்களது பிள்ளை விளையாட்டே!
கிரகங்களில் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவை சுபகிரகங்கள் என்றும் சூரியன், அங்ககாரன், சனி, ராகு, கேது, தேய்பிறைச் சந்திரன் பாப கிரகங்கள் என்றும் கோதிடர்கள் வகுத்திருக்கிறார்கள்.
சோதிடம் கிரகங்களை பால் அடிப்படையில் ஆண், பெண், அலி எனப் பிரிக்கிறது. வர்ண அடிப்படையில் பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பிரிக்கிறது. சுப கிருகங்களான குரு, சுக்கிரன் பிராமணனுக்கும் பாப கிரகமான சனி சூத்திரன் (தமிழர்- சூத்திரர்) என்றும் பகுக்கப்பட்டிருக்கும் சூட்சுமத்தைக் கவனியுங்கள்.  அப்படிக் கவனித்தால் இந்தச் சோதிடத்துக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்பதையும் ஏமாந்த தமிழன் தலையில் யாரோ மிளகாய் அரைத்து விட்டார்கள் என்பதையும் உணர்வீர்கள். (வளரும்)
சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
சித்திரையில் பிறந்த குழந்தையைக் கொன்ற தாய்!
(11)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்;; முடைநாற்றம் வீசுகின்ற மூடத்தனத்தை தமிழ் சமுதாயத்தில் இருந்து ஒழித்துப் பகுத்தறிவைப் பரப்பப் பாடல் இயற்றியவர். பாரதியின் சமுதாயப் பரட்சியை முன்னெடுத்தவர். ஆண் குழந்தை தாலாட்டு, பெண் குழந்தை தாலாட்டு என்ற இரண்டு பாடல்களை இயற்றியுள்ளார். அதில் பெண் குழந்தைக்குப் பாடிய தாலாட்டுப் பாட்டை இவ்வாறு முடித்திருக்கிறார்.
சாணிக்குப் பொட்டிட்;டு சாமி என்பார் செய்கைக்கு
நாணி உறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு!
தமிழ் சமுதாயத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். செவ்வாய் தோசம் உள்ள ஆணைகளை விட செவ்வாய் தோசம் உள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்வது தடைபடுகிறது. இப்போது இந்தச் செய்தியைப் படியுங்கள்.
சித்திரை மாதத்தில் பெண் குழந்தை பிறந்தால் திருமணம் தடைபடும் என்ற மூட நம்பிக்கையால் பத்து மாத பச்சிளம் பெண் குழந்தையைப் பாலில் நஞ்சு கலந்து கொடுத்து கொன்ற தாயை காவல்துறை கைது செய்துள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கீழ்கொத்தூர் ஊர் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி இலட்சுமி (அகவை 21) தான் கலையரசி என்ற தனது பத்து மாதக் குழந்தைக்கு பூச்சிக் கொல்லி மருந்தைப் பாலில் கலந்து குழந்தைக்குக் கொடுத்துக் கொன்றிருக்கிறார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
“என்னுடைய குழந்தை கலையரசி சித்திரை மாதம் பிறந்தாள். சித்திரை மாதம் பிறந்த பெண் குழந்தைக்கு எதிர்காலத்தில் திருமணம் தடைபடும் என்று உறவினர்களும், ஊரில் உள்ளவர்களும் கூறினர். இதனால் நானும், என் கணவரும் மிகுந்த வேதனை அடைந்தோம். எனவே, குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்தேன். கடந்த சில நாள்களுக்கு முன், என் கணவரும் மாமனாரும் சபரிமலைக்குச் சென்றனர். குழந்தையைக் கொலை செய்ய ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததால், பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாராக வைத்திருந்தேன். அதைப் பாலில் கலந்து குழந்தைக்குக் கொடுத்தேன். பின்னர், எதுவும் தெரியாதது-போல் மாமியாருடன் புல் அறுக்க வயலுக்குச் சென்று விட்டேன். ஆனால், பூச்சிக் கொல்லி மருந்து போத்தலில் பதிவாகியிருந்த என் கைரேகை என்னைக் காட்டிக் கொடுத்து விட்டது.”
சித்திரையில் பிறந்த குழந்தைக்கு திருமணம் தடைபடும் என்பதற்கு அறிவியல் அடிப்படையில் எந்தவித சான்றும் இல்லை. மாதங்களுக்கு பெயர் வைத்ததே மனிதன்தான். பின்னர் ஏன் தான் வைத்த பெயரைக் கண்டு மிரள்கிறார்கள்? பெற்ற குழந்தையைக் கொல்லும் அளவுக்கு வெறி கொள்கிறார்கள்?
மனித இனம் எடுத்த எடுப்பிலேயே நாகரிகம் அடைந்து விடவில்லை. நாகரிகம் என்பது அறிவியல் துறையில் ஏற்பட்ட அல்லது ஏற்பட்டு வரும் ஒரு படிமுறை வளர்ச்சியாகும். இன்றைய நாகரிக வளர்ச்சியை அடைவதற்கு மனிதனுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் எடுத்தன.
பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களது வாழ்க்கையை இரவு பகல், வளர்பிறை தேய்பிறை மற்றும் பருவங்கள் ஆட்சி செய்தன. ஞாயிறு, புவி மற்றும் நிலா ஆகியவற்றின் அசைவின் அடிப்படையிலேயே காலங்கள் கணிக்கப்பட்டன.

எனவே இன்றைய நாள்காட்டியின் வரலாறு வானியல், புவி, ஞாயிறு மற்றும் திங்கள் (சந்திரன்) ஆகியவற்றோடு தொடங்குகிறது. இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் நாள்காட்டியின் வரலாறு ஒரு நாள், ஒரு திங்கள் (டரயெச அழவொ) ஒரு ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில் தொடங்குகிறது.
முற்காலத்தில் எல்லா நாட்டு மக்களும் சந்திரனின் வளர்பிறை தேய்பிறை இரண்டையும் வைத்தே காலத்தைக் கணக்கிட்டார்கள். சந்திரன் தமிழில் திங்கள் என அழைக்கப்படுகிறது. திங்கள், மாதம் எனவும் பொருள் தருதல் காண்க. இவ்வாறே ஆங்கிலத்தில் அழழn என்ற சொல்லில் இருந்து அழவொ என்ற சொல் பிறந்தது.  இன்றைக்கும் முஸ்லிம்கள்; சந்திரனை வைத்தே ஆண்டைக் கணக்கிடுகிறார்கள். யூதர்கள் ஆண்டை புவி ஞாயிறைச் சுற்றிவரும் காலத்தின் அடிப்படையிலும் மாதங்களை நிலா புவியைச் சுற்றிவரும் காலத்தின் அடிப்படையிலும் கணக்கிடுகிறார்கள். மற்றெல்N;லாரும் சூரியனை அடிப்படையாய் வைத்தே காலத்தைக் கணிக்கிறார்கள்.
எகிப்தியர் தொடக்க காலத்தில் இருந்தே ஞாயிறின் அசைவை வைத்தே ஆண்டைக் கணக்கிட்டார்கள். எகிப்தியர்கள் ஒவ்வொன்றும் 30 நாள்கொண்ட 12 மாதங்களை வைத்திருந்தார்கள். இறுதி மாதத்தில் மேலும் 5 நாள்களை கூட்டினார்கள். இந்த 5 நாள்களும் எகிப்தியர்களது கடவுளரை வழிபடப் பயன்படுத்தப்பட்டது.
புவி தன்னைத்தானே சுற்றும் காலத்தை வைத்தே நாள் கணக்கிடப்படுகிறது. இது அண்ணளவாக 24 மணியாகும். அது போலவே புவி ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலத்தின் அடிப்படையிலேயே ஆண்டு கணக்கிடப்படுகிறது. நிலா ஆண்டுக்காலம் ஞாயிறைவிட குறைவானது. இதனால் தான் இரம்ழான் நோன்பு ஒவ்வொரு ஆண்டும் 10 – 11 நாள்கள் முந்தி வருகிறது.
புவியின் சுற்றுப் பாதையில் ஒரு புள்ளியில் இருந்து மறுபடியும் அந்தச் சுற்றுப்பாதையில் அதே புள்ளியில் வரும் காலத்தை ஓர் ஆண்டு என்று கணக்கிட்டார்கள். இந்தப் புள்ளி எமது கண்காட்சிக்கு ஞாயிறு விண்நடுக்கோட்டை (உநடநளவயைட நஙரயவழச) கடக்கும் போது வெட்டும் இடமாகும். ஆண்டில் இருமுறை ஞாயிறு இவ்வாறு நடுக்கோட்டை வெட்டுகிறது. அப்போது இரவும் பகலும் சமமாக இருக்கும். ஒரு ஆண்டில் பொதுமேனி 365.242190 நாள்கள் இருக்கின்றன.
நிலா, முழுநிலாவில் இருந்து அடுத்த முழுநிலா வரை உள்ள காலத்தை சந்திர மாதம் என்று அழைத்தார்கள். இது பொதுமேனி 29.5305889 நாள்கள் ஆகும். ஒரு வெப்பமண்டல ஆண்டில் (வுசழிiஉயட லுநயச) 12.36826639275 மாதங்கள் இருக்கின்றன. அதாவது பன்னிரண்டு சந்திர மாதங்கள் வெட்பமண்ட ஆண்டை விட 10.8751234326 நாள்கள் குறைவானது.
நிலா 240,000 மைல் தொலைவில் மணிக்கு 2,355.2 மைல் வேகத்தில் புவியைச் சுற்றிவருகிறது. ஞாயிறைச் சுற்றிவரும் புவியும் புவியைச் சுற்றிவரும் நிலாவும் தமது வேகத்தை இழந்து வருகின்றன. சந்திரன் ஒரு நூற்றாண்டில் அரை விநாடியும் புவி 10,000 ஆண்டுகளில் 2 விநாடியும் வேகம் இழக்கின்றன.
புவி தனது அச்சில் விநாடிக்கு 0.5 கிமீ வேகத்தில் தன்னைத்தானே சுற்றுகிறது. அதே நேரம் பொதுமேனி 149,600,000 கிமீ ( 93 மில்லியன் மைல்) தொலைவில் காணப்படும் ஞாயிறை விநாடிக்கு 30 கிமீ (18.5 மைல்) அல்லது மணிக்கு 1670 கிமீ (1040 மைல்) புவி சுற்றுகிறது. எமது ஞாயிறு மண்டலம் பால் வழி மண்டலத்தை வினாடிக்கு 250 கிமீ வேகத்தில் சுற்றுகிறது. அதே சமயம் எமது பால் வழி மண்டலம் அருகில் உள்ள அண்டங்களை விநாடிக்கு 300 கிமீ சுற்றுகிறது.

நாங்கள் இன்று பயன்படுத்தும் நாள்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தி அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. நாள்கள், மாதங்கள் கூடியும் குறைந்தும் அவற்றின் வரிசை முறை மாறியும் வந்திருக்கின்றன.

தொடக்கத்தில் ஓர் ஆண்டில் பத்து மாதங்களும் முதல் மாதமாக மார்ச்சும் இருந்தன. அதனால்தான் 7 முதல் 10 வரை உள்ள மாதங்கள் செப்தெம்பர் (ளுநிவநஅ-7) ஒக்தோபர் (ழுஉவழ-8) நொவெம்பர் (ழேஎநஅ-9) டிசெம்பர் (னுநஉநஅ-10) என இலத்தீன் மொழியில் பெயரிடப்பட்டன. பிற்காலத்தில் சனவரியும் பெப்ரவரியும் சேர்க்கப்பட்டு சனவரி முதல் மாதமாகியது. இருந்தும் 9-12 வரையான மாதங்கள் முன்னைய 7-10 மாதங்களுக்குரிய பெயராலேயே தொடர்ந்தும் அழைக்கப்படுகிறது!

5 ஆம் மாதத்துக்கு ஞரடவெடைடர  (லத்தீன் ஞரiஙெரந 5) எனப் பெயர் இருந்தது. உரோமா னியச் சர்வாதிகாரி யூலியர் சீசர் பிறந்த மாதம் அதுவாதலால் அவரின் நினைவாய் யூலை எனப் பெயர் இடப் பெற்றது. 6 ஆம் மாதம் ளுநஒவடைடளை (லத்தீன் ளுநஒ 6) எனப்பட்டது. உரோமானியப் பேரரசர் ஆகஸ்தின் சீசர் நினைவாக அது ஆகஸ்ட் எனப் பெயர் மாற்றஞ் செய்யப்பட்டது.   (வளரும்)

 

 

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
சோதிடம் போல் எண்சாத்திரமும் ஒரு புரட்டு!
(12)
இப்போது உலகு பின் பற்றும் நாள்காட்டிக்கு வித்திட்டவர் உரோமானியச் சர்வாதிகாரி யூலியஸ் சீசர் (கிமு யூலை 13, 100 – கிமு மார்ச் 15, 44) ஆவர். நாள்காட்டியைச் செப்பனிட யூலியஸ் சீசர் கிரேக்க வானியல் அறிஞர் (ளுழளபைநநௌ) அவர்களது உதவியை நாடினார். சொசிஜெனஸ் 365.25 நாள்கள் கொண்டது ஓர் ஆண்டு என்னும் அடிப்படையில் ஒருநாள் காட்டியை உருவாக்கினார். கிமு 46 ஆண்டின் நாள்களை 445 நாள்களாக அதிகரித்தார். நான்காண்டுக்கு ஒருமுறை பெப்ரவரி மாதத்தில் (டநயி லநயச) ஒரு நாளைக் கூட்டுவது என்றும் முடிவு செய்தார்.

இந்நாள்காட்டி கிமு 45 ஆம் ஆண்டு சனவரி முதல் நாளில் நடைமுறைக்கு வந்தது. யூலியன் நாள்காட்டி கிறித்தவ நாடுகளில் 1,582 ஆம் ஆண்டுவரை நடைமுறையில் இருந்தது.

யூலியன் ஆண்டு (365.25) கணக்குப்படி ஓர் ஆண்டு 11 மணித்துளி 12 விநாடிகளால் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் 128 ஆண்டுகளில் ஒரு நாள் அதிகரித்தது.

யூலியன் நாள்காட்டி அடிப்படையில் வேனில் சமயிரவு (எநசயெட நஙரiழெஒ) மார்ச்சு 10 இல் இடம்பெற்றது. ஆனால் வேனில் சமயிரவு 21 க்கு முந்தி வரக்கூடாது என 13 ஆவது போப்பாண்டவர் கிறெகோறி முடிவு செய்தார். யூலியன் நாள்காட்டியில் உள்ள குறைபாட்டைக் களைய 1582 இல் போப்பாண்டவர் புதிய நாள்காட்டியை உருவாக்குவதற்கு அறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப போப்பாண்டவர் கிறெகோறி யூலியன் நாள்காட்டியில் இருந்து 10 நாள்களைக் குறைக்குமாறு கட்டளை பிறப்பித்தார். அதற்கு அமைய ஒக்தோபர் 4, 1582 (யூலியன்) அடுத்து ஒக்தோபர் 15 (வெள்ளிக்கிழமை) தொடர்ந்தது. மேலும் ஒரு ஆண்டு 00 இல் முடிந்து அதனை 400 ஆகப் பிரிக்க முடிந்தால் பெப்ரவரி மாதத்தில் மேலும் ஒரு நாளைக் கூட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது நாலு நூற்றாண்டில் 3 பாய்ச்சல் ஆண்டுகள் (டநயி லநயசள) கணக்கில் எடுக்கப்படாது விடப்பட்டது.

நானூறு ஆண்டுகள் 146097 நாள்களுக்கு சமமானது. இதன்படி பொதுமேனி ஆண்டு 365.2425 நாள்களாகும். இது ஒரு வெப்பமண்டல ஆண்டைவிட 26.8 விநாடி அதிகமானது. இந்த வேறுபாடு 3200 ஆண்டுகளில் 1 நாளை அதிகரிகச் செய்துவிடும். இருந்தும் 49 ஆம் நூற்றாண்டுவரை இப்போதுள்ள நாள்காட்டியில் மாற்றம் செய்ய வேண்டி இருக்காது!

உரோமர்கள் கிழமை நாள்களை அவர்கள் கடவுளாகக் கும்பிட்ட கோள்களின் பெயர்களைக் கொண்டு அழைத்தனர்.

ளுரn’ள னயல (ளுரனெயல)  – ஞாயிறு
ஆழழn’ள னயல (ஆழனெயல)         – திங்கள்
ஆயச’ள னயல (வுரநளயனல)    – செவ்வாய்
ஆநசஉரசல’ள னயல (றுநனநௌனயல)  –    புதன்
துரிவைநச’ள னயல (வுhரசளனயல)  –     வியாழக்கிழமை
ஏநரௌ’ள னயல (குசனையல)     –     வெள்ளி
ளுயவரசn’ள னயல  (ளுயவரசனயல)  –     சனி

தமிழர்களும் உரோமரைப் பின்பற்றி கோள்களுக்கு கொடுக்கப்பட்ட பெயரை கிழமை நாள்களுக்கு வைத்திருக்கிறார்கள். 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் “வேயுறு தோழிபங்கன் விடமுண்ட கண்டன் … “ எனத் தொடங்கும் கோளறு பதிகத்தில் இந்தக் கிழமை நாள்களை வரிசையாகச் சொல்லி இருக்கிறார். பிரஞ்சு மொழியிலும் இவ்வாறே அழைக்கப்படுகிறது. ஜெர்மன் மொழியில்  ஆயசளஇ ஆநசஉரசலஇ துரிவைநச யனெ ஏநரௌ ஆகியவற்றுக்குப் பதிலாக வுரைஇ றுழனநnஇ வுhழச யனெ குசநலய எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிரேக்கர்களோடு ஒப்பிடும் பொழுது தமிழர்களது வானியல் அறிவும் கணித அறிவும் குறிப்பிடத்தக்கவாறு இல்லை என்பது கசப்பான உண்மை ஆகும். கோள்கள், கோள்களின் தொலைவு, கோள்களின் அசைவு, கோள்களின் ஓட்டம், புவியின் விட்டம், கிரகணங்கள் ஆகியவைபற்றித் தமிழர்கள் விரிவாகவும் திருத்தமாகவும் ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை. செய்திருந்தாலும் அவை இன்று கிடைத்திலது.

சங்க காலத் தமிழர்களுக்கு இருந்த வானியல் பற்றிய அறிவு அதன் பின்னர்  வந்த தலைமுறையினரால் மேம்படுத்தப் படவில்லை. பிற் காலத்தில் கோள்களைப் பற்றி ஆராய்வதற்குப் பதில் அவற்றுக்குக் கோயில்கள் கட்டி வழிபாடு  செய்யத் தமிழர்கள் தலைபட்டுவிட்டனர்.

சூரியன், சந்திரன், சனி, இராகு, கேது ஆகிய கோள்களுக்குத் தனிக் கோயில்கள் கட்டப்பட்டன.

தொல்காப்பியர் பொருளதிகாரம் அகத்திணை இயலில் பெரும்பொழுதை வகுத்துக் கூறியவர் நாள்களின் பெயர்களையோ மாதங்களின் பெயர்களையோ குறிப்பிடவில்லை.

தொல்காப்பியப் பொருளதிகாரம் பொழுதைச்  சிறுபொழுது பெரும்பொழுது எனப் பகுத்;துப் பேசுகிறது.

சிறு பொழுது

காலை   6 – 10 மணிவரை
நண்பகல் 10 – 2 மணிவரை
ஏற்பாடு 2 – 6 மணிவரை
மாலை  6 – 10 மணிவரை
யாமம் 10 – 2 மணிவரை
வைகறை (விடியல்)     2 – 6 மணிவரை

ஒரு நாழிகை        – 24 மணித்துளி;
இரண்டரை நாழிகை   – ஒரு மணித்தியாலம்
அறுபது நாழிகை  – ஒரு நாள்

பெரும் பொழுது

இளவேனில்  –   சித்திரை, வைகாசி
முதுவேனில்   –  ஆனி, ஆடி
கார்    –  ஆவணி, புரட்டாதி,
கூதிர்  – அய்ப்பசி, கார்த்திகை
முன்பனி   – மார்கழி, தை
பின்பனி – மாசி, பங்குனி

இந்தப் பகுப்பு நூலுக்கு நூல் வேறுபடுகிறது. இப்பொழுது கார்காலம் அய்ப்பசி கார்த்திகைத் திங்கள்களில் இடம்பெறுகிறது. அவ்வாறே ஏனைய பெரும் பொழுதுகளின் காலமும் மாறுபடுகின்றன.

தமிழர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தங்கள் ஆண்டின் துவக்கமாகக் கொண்டனர் எனத் தெரிகிறது. தைத் திங்கள் முதல் நாள் (சனவரி 14) ஞாயிறு தனது தென்திசைச் செலவை முடித்துக் கொண்டு வடதிசை நோக்கிச் செல்கிறது. எனவே ஞாயிறு, மகர ஓரையில் (23½ பாகை தெற்கு) தோன்றி வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கும் நாளையே தமிழர்கள் தங்கள் ஆண்டின் துவக்கமாகக் கொண்டிருந்தனர் எனலாம்.

உவவுமதி (பூரணை) நாளில் புவியின் ஒருபுறம் ஞாயிறும், மறுபுறம் 180 பாகையில் திங்களும் எதிரெதிரே நிற்கும் என்பது பண்டைய தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது. திங்கள் தோன்றும் பொழுது ஞாயிறு மறையும் என்பதனை,

உவவுத் தலை வந்த பெரு நாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு……          (புறம் 65)

“முழுமதி வந்து கூடிய பெரிய நாளாhகிய பொழுதின் கண் ஞாயிறும் திங்களுமாகிய இரு சுடரும் தம்முள் எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒரு சுடர் புல்லிய மாலைப் பொழுதின்கண் மலைக்குள் மறைந்தாற்போல” என்பது இதன் பொருளாகும்.

எட்டாம் நாள் பிறைநிலவை “எண்ணாள் திங்கள்” என்றும் முழுமதி “உவவுமதி” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமே ஒளிவிடும் மீன்கள் நாண்மீன்கள் என்றும், ஞாயிற்றிடமிருந்து பிறக்கும் ஒளியினால் ஒளிரும் கோள்கள் கோள்மீன்கள் எனவும் அழைக்கப்பட்டன.

கோள்; மீன்களின் நிறம் தமிழர்க்குத் தெரிந்து இருந்தது. செந்நிறமுடைய கோளை செவ்வாய் என்றும், வெண்ணிறமுடைய கோளை வெள்ளி என்றும், கரிய நிறமுடைய கோளை சனி என்றும் (சனி கரிய நிறம் என்பது பிழையான முடிவு) பெயரிட்டனர். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அன்றைய ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிந்ததாகக் குறிப்பிடுகிறார். இப்படிக் கணக்கிடும் முறை கிமு500 ஆண்டுக்கு முன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவற்றில் இருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. அது என்னவென்றால் காலம் நேரம் என்பது ஒரு ஒப்பீடு. இந்த ஞாயிறு மண்டலம் தோற்றம் பெற்று 4500 கோடி ஆண்டுகள் இருக்கும் என வானியலாளர்கள் குத்துமதிப்பீடாகச் சொல்கிறார்கள். அதில் 2107 ஆண்டுகள் என்பது ஒரு கணப்பொழுது.
ஆனால் சாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லும் சோதிடர்கள் போல் எண் சோதிடர்கள் ஒருவர் பிறந்த நாள், மாதம், ஆண்டை மட்டும் வைத்து பலன் சொல்கிறார்கள். இப்படிப் பலன் சொல்வதற்கு பெரிய கணித அறிவு தேவையில்லை. கூட்டக் கழிக்கத் தெரிந்திருந்தால் போதும். இதனால் ஒருவர் தடுக்கி விழுந்தால் ஒரு எண்சாத்திரி மீதுதான் விழவேண்டும்! கிட்டத்தட்ட எல்லோருமே தங்களை எண்சாத்திரிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால் இந்த எண்சாத்திரிகள் சொல்வதை  மக்கள் நம்பிவிடுகிறார்கள். தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எண்சாத்திரத்தின் படி பெற்றோர்கள் பெயர் வைத்துவிடுகிறார்கள். வயது வந்தவர்கள் தங்கள் பெயரை எண்சாத்திரத்துக்கு அமைய ஒரு குறிப்பிட்ட இலக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். அதற்காக பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எண்சாத்திரி சொல்லியபடி தனது பெயரை துயலயடயடiவாயய என ஒரு ஏக்குப் பதில் இரண்டு ஏ க்களை வைத்துக் கொண்டுள்ளார்!
சோதிடம் போலவே எண் சோதிடத்திலும் கோட்பாடு பற்றி ஒத்த கருத்தில்லை. சிலர் 1 – 9 எண்களை வைத்துப் பலன் சொல்கிறார்கள். சிலர் 1 – 8 எண்களை மட்டும் வைத்துப் பலன் சொல்கிறார்கள். இன்னும் சிலர் 11, 22 எண்களையும் சேர்த்துப் பலன் சொல்கிறார்கள்.

எண்சோதிடத்தில் ஒருவர் பிறந்தவுடன் வைத்த பெயரே முக்கியமானது. அதுதான் அவரது தலைவிதியை தீர்மானிக்கிறதாம். இடையில் அவர் பெயரை மாற்றினால் அது அவரது தற்போதைய ஆளுமையைத் தீர்மானிக்கிறதாம். ஆனால், இதுபற்றி நடத்திய ஆய்வுகள் இந்த நம்பிக்கைகளை மெய்ப்பிக்கவில்லை.

எண் சோதிடர்கள் இப்படிப் பிறந்த திகதியை கூட்டி வருகிற எண் அலையதிர்வுகளை (எiடிசயவழைளெ) எழுப்புவதாகச் சொல்கிறார்கள்.

எண்களுக்கு அலையதிர்வுகள் உண்டா? எண்கள் தெய்வீக சக்தியின் வெளிப்பாடா? இன்ன எண்ணுக்கு இன்ன பலன் என்று யார் வகுத்தார்கள்? என்ன அடிப்படையில் வகுத்தார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு எண்சோதிடர்கள் சொல்லும் பதில் ‘இந்த எண்சாத்திரம் மாய மந்திரம் சார்ந்த ஒரு தெய்வீகக் கலை.  நாங்கள் சொல்லும் பலன் சரியா பிழையா என்று ஒருமுறை சோதித்துப் பாருங்கள்! அப்போது உண்மை தெரியும்” என்கிறார்கள்! வேறு சிலர் எண்சோதிடம் அறிவியல் அடிப்படையில் அமைந்த கலை என்கிறார்கள்! எண்களை வைத்துக் கொண்டு –

1) ஒருவரது குணம், நடை, திறமை, வாழ்க்கையின் நோக்கம், துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்?

2) எந்த நகரத்தில் எந்த வீட்டில் குடியிருக்க வேண்டும்?

3) எப்போது நிலபுலம் வாங்க வேண்டும்?

4) எப்போது முதலீடு செய்ய வேண்டும்?

5) பயணம் செய்வதற்குரிய சிறந்த நாள் எது?

6) புது வாணிகம் எப்போது தொடங்க வேண்டும்?

7) எப்போது அறுவை வைத்தியத்தை வைத்துக் கொள்ளலாம்?

என்பதை எல்லாம் தங்களால் கணித்துக் கூற முடியும் என்கிறார்கள்.

சுற்றியும் சுற்றியும் சுப்பருடைய கோடிக்குள் என்பது போல உலகத்தில் இன்று வாழும் 610 கோடி மக்களை 9 எண்களில் எண்சோதிடர்கள் அடக்கி விடுகிறார்கள். இதனால்  அண்ணளவாக ஒரே எண்ணில் உள்ள 67.7 கோடி மக்களது விதி ஒரேமாதிரி இருக்க வேண்டும்! அப்படி இருக்கிறதா? இருக்க முடியுமா? அது சாத்தியமா? எண் சோதிடம் பாhப்பவர்கள் இவற்றை ஏன் எண்ணிப் பார்ப்பதில்லை?

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
சோதிடம் வானியல் அறிவில்;லாதவர்களால் எழுதப்பட்ட சாத்திரம்!
(13)
எண்சோதிடர்கள் அராபிக் எண்களைப் பயன் படுத்துவதை ஓரளவு நியாயப்படுத்தலாம். அது உலகில் உள்ள பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆங்கில அரிச்சுவடியைப் பயன் படுத்துவது எந்த வகையில் நியாயம்? ஆங்கில மொழி பேசுவோர் தொகையைவிட இந்தி, சீன மொழி பேசுவோர் தொகை உலகில் அதிகம் ஆகும்.

வேடிக்கை என்னவென்றால் இந்திய எண்சோதிடர்கள் கூட ஆங்கில அரிச்சுவடியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இது எண்சாத்திரம் மிக மிக அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு புரட்டு என்பதைக் காட்டுகிறது. இதில் என்ன சோகம் என்றால் அந்தப் புரட்டைக் கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் எனச் சொல்கிறார்கள்!

எண் சாத்திரத்தில் ஒருவரது பிறந்த திகதிதான் முக்கியமானது. அது மாதம், நாள,; ஆண்டு என்ற வரிசையில் வைத்துக் கணக்கிடப்படுகிறது. அதனை வாழ்க்கைப் பாதை (டகைந-pயவா) என அழைக்கின்றனர்.
ஒருவர் பிறந்தபோது பதிவு செய்த பெயர் எண்ணாக மாற்றப்படுகிறது. ஒவ்வொரு எண்ணும் எந்த எழுத்துக்களின் பெறுபேற்றைக் குறிக்கிறது என்பது கீழே தரப்பட்டுள்ளது.

1  2  3  4  5  6  7  8  9
யு டீ ஊ னு நு கு பு ர் ஐ
து மு டு ஆ N ழு P ஞ சு
ளு வு ரு ஏ று ஓ லு ணு
இவ்வாறு எழுதுத்துக்களுக்கு வரிசைப்படி எண்களை ஒதுக்குவதற்கு அறிவியல் அடிப்படை எதுவும் கிடையாது. விதிக்கட்டின்றி (யசடிவைசயசல) ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த எண்சாத்திரம் ஒரு புரட்டு என்பதற்கு தக்க சான்றாகும்!

பிறந்த திகதியை எடுத்துக் கொண்டால் எதற்காக கிறித்தவ ஆண்டை எடுத்துக் கொள்ள வேண்டும்? கிறித்தவ ஆண்டை விட-

கலியுக ஆண்டு           – (கிமு 3102)
பவுத்த ஆண்டு           – (கிமு 544)
விக்கிமாதித்த ஆண்டு      –   (கிமு 57)
திருவள்ளுவர் ஆண்டு      – (கிமு 31)
சாலிவாகன ஆண்டு        –   (கிபி 78)
இஸ்லாமிய (கிஜிரி) ஆண்டு – (கிபி 622)
கொல்லம் ஆண்டு – (கிபி 825)

இவற்றை ஏன் பயன்படுத்தக் கூடாது?

இந்தக் கேள்விகளைக் கேட்கக் கூடாது. காரணம் அவற்றுக்கான பதில் எண்சோதிடர்களிடம் இல்லை. அவர்கள் வெறுமனே தாங்கள் சொல்வதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மேலும் நெருக்கினால் எண் சாத்திரம் மாய மந்திரக் கலைகளைச் சார்ந்தது என மழுப்பி விடுகிறார்கள்.

கிறித்தவ நாள்காட்டியை எடுத்துக் கொண்டால் கூட அது தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. கிமு 1 யை அடுத்து கிபி 1 என கணிக்கப்பட்டதால் ஒரு ஆண்டு கூடுதலாக கணக்கிடப்பட்டு விட்டது. யேசுநாதர் பிறந்த ஆண்டுத் தொடக்கமும் ஒரு ஊகம்தான்.

கிபி முதல் நூற்றாண்டு    1    – 100 வரை,
கிபி இரண்டாம் நூற்றாண்டு 101    – 200 வரை,
கிபி முதல் புத்தாயிரம்   1    – 1000 வரை,
இரண்டாவது புத்தாயிரம்   1001    – 2000 வரை.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டு 2000 என எண்ணப்பட்டது. 2001 தான் மூன்றாவது புத்தாயிரத்தின் (வுhசைன அடைடநnnரைஅ) முதல் ஆண்டு. ஆனால், உலகம் 2001 ஆம் ஆண்டுக்குக் காத்திராது 2000 ஆம் ஆண்டையே மூன்றாவது புத்தாயிரம் ஆகக் கொண்டாடியது!

இந்தக் குழப்பத்திற்குக் கிபி 976 வரை சுழி (ணநசழ) அய்ரோப்பாவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் ஏது ஆகும். நடப்பு ஆண்டு 2004 குப் பதில் 2003 என்று இருக்க வேண்டும்!

எனவே காலத்துக்குக் காலம் மாற்றப்பட்டும் திருத்தப்பட்டும் வந்த நாள்காட்டியின் அடிப்படையில் எண்கணித சோதிடர்கள் பலன் கூறுவது பகுத்தறிவுக்கு முரணானது.

எண்சோதிடர்கள் வௌ;வேறு எண்முறை (9, 8)  வௌ;வேறு எழுத்துமுறை (ஆங்கிலம், ஹீப்புறு) பயன்படுத்துவதால் அவை வௌ;வேறு முடிவுகளைத் தருகின்றன. எண்களைப் பற்றியும் எழுத்தைப் பற்றியும் ஒரே மாதிரியான விளக்கம் இல்லை. முதலாம் எண்காரர் மிகவும் செல்வாக்கானவர் எனவும் பேரளவு ஆளுமை உடையவர்; என்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது.  ஆனால், 4 எண்காரர் ‘தோல்வி, வறுமை மற்றும் துயர் நிறைந்தவர்களாக இருப்பர்” எனச் சொல்லப்படுகிறது.

எண்களைப் பற்றிய மூடநம்பிக்கை எல்லாப் பண்பாட்டிலும் இருந்து வந்துள்ளது. இன்றும் இருந்து வருகிறது.

இரண்டு (2)  சீனமொழியில் (ஊயவெழநௌந) ‘சுலபம்” என்பது போல் ஒலிக்கிறது. அதே நேரம் 24 எண் ‘சுலபமாகச் சாதல்” என்பது போல் ஒலிக்கிறது.

நான்கு (4) சீன யப்பானிய பண்பாட்டில் போகூழ் (ரடெரஉமல)  எண்ணாகக் கருதப்படுகிறது. காரணம் அந்த எண்ணை ஒலிக்கும் பொழுது சாவு என்ற ஒலிபோல் ஒலிக்கிறது. எனவே சீனர் 4 எண் வரும் வீட்டை வாங்குவதில்லை. மாறாக  தமிழர் பண்பாட்டில் 4 பற்றிய பயம் எதுவும் இல்லை.

ஏழு (7) பல பண்பாட்டில் போகூழ் எண்ணாகவே கருதப்படுகிறது. தமிழரிடை இந்த எண் தீமையான எண்ணாகக் கருதப்படுகிறது. ஏழில் செவ்வாய் தோசமாக எண்ணப்படுகிறது. ஏழரைச் சனியன் ஒருவரை நாய் போல் அலைக்கும் என நம்பப்படுகிறது.

எட்டு (8) சீனர் யப்பானியர் இருபாலாராலும் ஆகூழ் (டரஉமல ) எண்ணாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் ஒலிப்பு வளமை என்ற ஒலிப்பைப் போல் இருக்கிறது.
ஆனால், தமிழரிடையே 8 கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. எட்டில் சனி மரணத்தைக் குறிப்பதாகச் சோதிட சாத்திரம் சொல்கிறது. கனடாவில் வீடு வாங்கும் தமிழர் 8 வரும் வீடுகளை வாங்குவதில்லை. ஆனால், சீனர் அதனையே விரும்பி வாங்குகிறார்கள்!
பதின்மூன்று (13) மேற்குலக பண்பாட்டில் அச்சத்தை ஊட்டும் எண்ணாகக் கொள்ளப்படுகிறது.  தொடர்மாடி வீடுகளைக் கட்டும்போது 12 ஆவது மாடிக்கு அடுத்த மாடியை 14 ஆவது மாடி என்று எழுதிவைத்து விடுகிறார்கள்.

யேசுநாதரின் கடைசி விருந்தில் கலந்து கொண்ட 13 சீடர்களில் ஒருவரான யூதாஸ் யேசுவை 30 வெள்ளிக்காசுக்கு உரோம் ஆளுநருக்குக் காட்டிக் கொடுத்தவன் என்பதுதான் இந்த அச்சத்துக்குக் காரணம்.

ஆனால், 13 எண் சீனர்களது மொழியில் ‘வாழ்வு நிச்சயம்” என ஒலிப்பதால் அது  நல்ல எண்ணாகக் கருதப்படுகிறது.

பதினேழு (17) இலத்தீன் மொழியில் ஓஏ1ஐ  என்று எழுதும் போது அது ‘நான் வாழ்ந்து முடித்து விட்டேன்”  என்ற பொருளைத் தருகிறது, அதாவது இறப்பைக் குறிக்கிறது. எனவே இத்தாலி நாட்டில்  17 எண் போகூழாகக் கருதப்படுகிறது.

666 மிருகத்தின் எண் எனச் சொல்லப்படுகிறது.

9413 எண் சீன மொழியில் ‘தப்பி வாழும் வாய்ப்பு மிகவும் குறைவு” (“ளடiஅ உhயnஉந ழக ளரசஎiஎயட”)  மற்றும் ‘ஒன்பது பேர் இறக்கிறார்கள் ஒருவர் மட்டும் வாழ்கிறார்” என்ற பழமொழியைக் குறிப்பதால் அது போகூழாகக் கருதப்படுகிறது!

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஒரு எண் நல்லதா கெட்டதா நன்மையா தீமையா என்பது மனிதரது மனதைப் பொறுத்தது ஆகும். எண் பாபம் –  கோள்கள், இராசிகள், இராசி வீடுகள், நட்சத்திரங்கள் போல அதற்கு ஒன்றும் தெரியாது! அதற்கு எந்தச் சிறப்பு அதிர்வலைகளும் கிடையாது.

சாதகத்தைக் கணிக்கும் சோதிடனாவது ஒருவன் பிறந்த இடம், நாள், நேரம் இவற்றை வைத்து அந்தக் கணத்தில் விண்ணில் கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் நின்ற நிலைகளின் அடிப்படையில் சாதகத்தைக் கணித்துப் பலன் சொல்கிறான். கையால் சாதகத்தைக் கணித்துப் பலன் சொல்ல ஒரு நாள் பிடிக்கும்! ஆனால், எண் சோதிடர் பலன் சொல்ல சில விநாடிகளே தேவைப்படுகிறது.

எனவே எண்சோதிடரின் பலன்கள் எண்சோதிட முறையைப் பொறுத்திருக்கிறதே ஒழிய எண்களைப் பொறுத்ததல்ல என்பது எளிதில் பெறப்படும். இதற்கு மேல் எண்சோதிடத்தைப் பற்றி எழுதுவது நேரத்தைப் பாழாக்கும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
சோதிட சாத்திரம் எழுதியவர்களுக்கு வானியல் அறிவு பேரளவு இருக்கவில்லை. எடுத்துக் காட்டாக புவி ஞாயிறைச் சுற்றி ஒரு நீள்வட்டத்தில் வருவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. புலக்காட்சியின் அடிப்படையில் ஞாயிறு புவியைச் சுற்றுவதாகத்தான் அவர்கள் எண்ணினார்கள். இதனால் கிரகங்களைப் பற்றி தாறுமாறாக எழுதி வைத்திருக்கிறார்கள்.
கிரகங்களுக்கு வருணம், ஆண், பெண், அலி என்ற பால்வேற்றுமை, மித்துரு (நட்பு) சத்துரு (பகை) என்ற குணாம்சங்கள் போன்றவற்றைக் கற்பித்திருக்கிறார்கள்.
சோதிடர்களை நான் குறை கூறவில்லை. அன்றைய கால கட்டத்தில் வானியல் பற்றிய அறிவு அவ்வளவே இருந்தது. பிழை என்னவென்றால் இன்று அறிவியல் வளர்ந்த பின்னரும் சோதிடர்கள் “அப்பன் வெட்டிய கிணறு உப்புத்தண்ணீர் என்றாலும் குடிக்கும் பிள்ளைகள் போல்” தொடர்ந்து சோதிட சாத்திரத்தைக் குரங்குப் பிடியாக பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.
படித்தவர்களும் படியாதவர்களும் மந்தைகள் போல் கண்ணை மூடிக்கொண்டு சோதிடம், எண்சாத்திரம், வாஸ்து போன்றவற்றை நம்பி சாதகமும் கையுமாகச் சோதிடர்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! (வளரும்)
சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
கோள்களுக்கு வருணம் கற்;பிக்கும் சோதிட சாத்திரம்!
(14)
செவ்வாய் தோஷம், சனி தோஷம், நாக தோஷம் பற்றித்தான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது மாங்கல்ய தோஷத்துக்குப் பரிகாரம் தேடிப் பிரபல அபிஷேக் பச்சன் – நடிகை அய்ஸ்வர்ய ராய் சோடி கோயில் கோயிலாக அலைவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபுர் நகரில் உள்ள புகழ்பெற்ற விந்தியாவாசினி கோயிலில் அபிஷேக் பச்சன் – அய்ஸ்வர்யா ராய் 16 வகையான சிறப்புப் பூசைகள் செய்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பொது இடத்திற்குச் சோடியாக இருவரும் சென்றது இதுவே முதல் தடவையாகும். இந்த இளம் சோடியைக் காண பொதுமக்கள் திரண்டனர்.
மாங்கல்ய தோஷ நிவர்த்திக்காகவே சிறப்புப் பூசைகள் செய்யப்பட்டன. பரிகார பூசைகள் செய்து சாமி தரிசனம் செய்த அபிஷேக் – அய்ஸ்வர்யா ராய் அவர்களுக்குக் குங்குமப் பிரசாதம் அருச்சகர்களால் வழங்கப்பட்டது.
தங்கக் குடை, வயிர மூக்குத்தி, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை கோயிலுக்குக் காணிக்கையாக இருவரும் வழங்கினர்.
பணம்படைத்த செல்வந்தர்கள் சாமிக்குத் தங்கக் குடை, வயிர மூக்குத்தி, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றைக் கையூட்டாகக் கொடுத்து 16 வகை சிறப்புப் பூசைகள் மூலம் தோஷ நிவர்த்தி தேடிக் கொள்கிறார்கள். வசதியற்றவர்கள் கதி என்ன? அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப நடமாடும் சாமிகளைத் தேடி ஓடுகின்றனர்.
சென்னை அசோக் நகர் காவலர் குடியிருப்பு அருகில் உள்ள அங்காள பரமேசுவரி கோயிலில் மாதவன் என்ற சாமியார் பக்தர்களுக்குக் குறி சொல்லி வந்தாராம்.
இவர் மீது சென்னைூ சின்மயா நகர் போ°டல் காலனியைச் சேர்ந்த இரவிக்குமார் என்பவர் காவல்துறை ஆணையர் லத்திகா சரணிடம் ஒரு முறைப்பாட்டைக் கொடுத்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் சாமியார் மாதவன் தோஷம் கழிப்பதாகக் கூறி 50 சவரன் நகைகளை வாங்கி அம்மன் காலடியில் வைப்பதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த முறைப்பாடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினருக்கு காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.
அதன்படி சாமியார் மாதவன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆனால் சாமியார் மாதவன் தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்கக் காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம், இளங்காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில். கேரளாவைச் சேர்ந்த இவர் சென்னை மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மந்திர தந்திரம் மாந்த்தி;ரீகம் தெரிந்தவர் என்பதால் இவரிடம் ஏராளமான பேர் தாயத்து கட்டுவதற்கும், பில்லி சூனியம் எடுப்பதற்கும் வருவார்கள். ஓய்வுக்குப் பின்னர் இவர் மாந்த்திரீகத்தை முழு நேரத் தொழிலாக மாற்றிக் கொண்டார்.
நிருவாண பூசை செய்வது இவரது ளிநஉயைடவைல! அதனால் இவரிடம் ஆண்களை விடப் பெண்கள்தான் அதிக அளவில் வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. செவ்வாய் மற்றும்  வெள்ளிக்கிழமைகளில்தான் இவர் பூசைகள் செய்வாராம். அந்த நாள்களில் மட்டும் “பக்தர்களை’ சந்தித்து அவர்களது சிக்கல்களைக் கேட்பது வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு இவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இது பக்கத்துக் குடிசைகளுக்கும் பரவி பெரும் அழிவை ஏற்படுத்தியது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
விபத்துக் குறித்து விசாரிக்க வந்த காவல்துறையினர் தீவிபத்து நடந்த குடிசைப் பகுதியிலிருந்து ஒரு பெண்ணின் கருகிய உடலைக் கண்டுபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வியாழக்கிழமை இரவு அமாவாசை என்பதால் அன்று சிறப்புப் பூசைக்கு இஸ்மாயில் ஏற்பாடு செய்தார். அந்தப் பூசையில் கோடம்பாக்கம் சக்கரபாணி தெருவைச் சேர்ந்த மஞ்சுளாவும் கலந்து கொண்டார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.
சென்னையில் தனது தம்பி பாஸ்கர் ராவ் வீட்டில் தங்கியிருந்தார். இவரது கணவர் கோவிந்தசாமி சென்னையில் ஓட்டுநராக இருந்ததால் அங்கு வந்து தங்கியிருந்தார். இவருக்கு ஒரே மகன் ஆனந்த்பாபு. இவர் சில படங்களில் கதாநாயகனுக்குத் தோழன் வேடத்தில் நடித்துள்ளார். மஞ்சுளாவும் கூட ஒரு துணை நடிகைதான். சில படங்களில் தலையைக் காட்டியுள்ளார்.
1999 ஆம் ஆண்டு கோவிந்தசாமி இறந்தார். இதையடுத்து தனது கணவர் “மீண்டும் வர வேண்டும்” எனக் கோரி இஸ்மாயிலை அணுகினார். அதற்கு அவர் நான் ஆவிகளுடன் பேசுவது வழக்கம். விரைவில் உனது கணவர் கிடைப்பார் என்று கூறி பல ஆயிரம் ரூபாய் பணத்தைக் கறந்துள்ளார்.
இந் நிலையில் 2000 ஆவது ஆண்டு ஆனந்த் பாபு விபத்தில் இறந்து போனார். இதனால் மஞ்சுளா மனம் உடைந்தார். இஸ்மாயிலை நாடிய அவர் தனது கணவரையும், மகனையும் ‘மீட்டுத் தருமாறு’ கூறினார். இஸ்மாயில் சொன்னபடியெல்லாம் பூசைகள் செய்து வந்தார்.
இந்தக் கட்டத்தில்தான் நிருவாண பூசை செய்தால்தான் பலன் கிடைக்கும் என இஸ்மாயில் கூறியுள்ளார். இதையடுத்து வியாழக்கிழமை அமாவாசை தினத்தன்று நடந்த பூசையின்போது நிருவாண பூசைக்குத் தயாரானார் மஞ்சுளா.
யாக குண்டம் முன்பு நிருவாண கோலத்தில் மஞ்சுளா அமர்ந்திருக்க இஸ்மாயில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அருகில் இருந்த மண்ணெண்ணையை எடுத்துத் தன் மீது ஊற்றிக் கொண்ட மஞ்சுளா, யாகத் தீயை எடுத்துத் தன் மீது போட்டுக் கொண்டு தீக்குளித்தார்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன போலி மந்திரவாதி இஸ்மாயில், மஞ்சுளாவைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் பலன் இல்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி வெளியே ஓடினார்.
மந்திரவாதி இஸ்மாயில் வீட்டு அருகே கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் உடல் துணை நடிகை மஞ்சுளா என்பதும் மந்திராவாதி வீட்டில் நடந்த நிருவாண பூசையின்போது அவர் தீயில் கருகி இறந்தார் என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த மந்திரவாதியைக் காவல்துறை கைது செய்துள்ளனர்.
மந்திரவாதி இஸ்மாயில் மேற்கண்ட தகவலை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் உண்மையைச் சொல்கிறாரா அல்லது பெண்ணை அவரே எரித்தாரா என்று விசாரணை நடந்து வருகிறது.
நாளாந்தம் சோதிடர்கள், மந்திரவாதிகள், மாந்த்திரீகர்கள், போலிச் சாமிகள், பாபாக்கள் போன்றவர்களிடம் ஏமாறும் மூடர்கள் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஏமாற்றுக்காரர்கள்; கடவுள், தெய்வம், கோள்;, நட்சத்திரம், பேய், பிசாசு, நரகம் போன்றவற்றைக் காட்டிப் பயமுறுத்தி மூடர்களிடம் இருந்து பணம் கறக்கிறார்கள்.
தேர், திருவிழா, தீர்த்தம், அபிசேகம், அருச்சனை, பலி, காணிக்கை, தோஷபரிகாரம் சோதிடம், ஆவியோடு பேசுதல், குறிபார்த்தல், பில்லி சூனியம் எடுத்தல், தாயத்துக் கட்டுதல், நூல் கட்டுதல், காவடி எடுத்தல், செதில் குத்துதல் எல்லாம் பணம் சுருட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டவை.
இறந்துபோன கணவர் மீண்டும் வர வேண்டும் என்று கோரி மந்திரவாதிp இஸ்மாயிலை துணை நடிகை மஞ்சுளா அணுகி இருக்கிறார். எங்கேயாவது இறந்தவர்கள் மீண்டும் வந்திருக்கிறார்களா? புராணக் கதைகளில் வந்திருக்கலாம். ஆனால் உலகம் தோன்றிய காலம் தொட்டு அப்படி ஒரு அதிசயம் இன்னும் நடக்கவில்லை. ஆனால் மந்திரவாதி இஸ்மாயில் “நான் ஆவிகளுடன் பேசுவது வழக்கம். விரைவில் உனது கணவர் கிடைப்பார்”; என்று அப்பட்டமான பொய்யைக் கூறி பல ஆயிரம் ரூபாய் பணத்தைக் கறந்துள்ளார்.
கோள்கள் கோடி கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள ஞாயிறு என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. அதற்கு அப்பால் தோராயமாக 40,000 கோடி நட்சத்திரங்கள் (400 டிடைடழைn ளவயசள) அண்ட வெளியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.  எமது ஞாயிறு அந்த நட்சத்திரங்களில் ஒன்றாகும். அதற்கு அடுத்து அண்மையில் உள்ள நட்சத்திரத்தின் பெயர் Pசழஒiஅய ஊநவெயரசi (யுடிhய ஊநவெயரசi ஊ). இந்த நட்சத்திரம் 4.24 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளது.
ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி வினாடிக்கு 300,000 கிமீ வேகத்தில் ஓர் ஆண்டு பயணிக்கும் தொலைவாகும். எனவே ஒளி ஓர் ஆண்டில் 9,500,000,000,000 கிமீ (9.5 திரில்லியன கிமீ தொலை பயணிக்கிறது. (அத்தியாயம் 4)
இவ்வளவு நெடுந்தொலைவில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மனிதனுடைய வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பது முட்டாள்த்தனமான கற்பனையாகும். அதற்கு மேலாக அந்தக் கோள்கள் நட்சத்திரங்களால் ஏற்படும் தோஷங்களுக்கு பூசை அபிசேகம் அருச்சனை செய்து, எள்ளெண்ணைய்ச் சட்டி எரித்துப் போக்கிவிடலாம் என எண்ணுவது அதைவிட வடிகட்டிய முட்டாள்த்தனமாகும்!
மனிதன் நாகரிகம் அடையாத காலத்தில், வானியல் அறிவு இன்று போல் இல்லாத ஒரு கால கட்டத்தில் இயற்றப்பட்ட அரைகுறைச் சாத்திரமே சோதிட சாத்திரமாகும்.  இன்று   கோள்களில் விண்கலங்களை இறக்கி அவற்றை வானியலாளர்கள் ஆராய்கிறார்கள். ஆனால் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மக்கள், குறிப்பாக தமிழர்கள், கோள்களால் தோஷம் ஏற்படுகிறது என்று சொல்வதை நம்பி தங்கள் நேரத்தையும் பொருளையும் மானத்தையும் இழப்பதுதான் வியப்பாக இருக்கிறது!
கோள்களைச் சோதிடர்கள் விதிக்கட்டின்றி எப்படிப் பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் என்று வகுத்துள்ளார்கள் எனபதைக் கீழ்க்கண்ட அட்டவணை காட்டுகிறது.

கிரகங்களின் வருணம்
வருணம்
கிரகம்
இராசி
இராசி எண்
பிராமணன்
குரு, சுக்கிரன்
கடகம், விருச்சிகம், மீனம்
4, 8, 12
சத்திரியன்
சூரியன், செவ்வாய்
மேடம், சிம்மம், தனுசு
1, 5, 9
வைசிகன்
சந்திரன், புதன்
இடபம், கன்னி, மகரம்
2, 6, 10
சூத்திரன்
சனி
மிதுனம், துலாம், கும்பம்
3, 7, 11

இவ்வாறு வகுத்ததற்கு இந்து மதத்தில் புரையோடிப் போயிருக்கும் வருணாசிரமக் கோட்பாடு காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. வருணாசிரமம் பிராமணர்களடைய மேலாண்மையை நிலைநாட்ட உற்பத்தி செய்யப்பட்ட தந்திரமாகும்.

கீதையில் கண்ணன் இந்த வருண தருமம் பற்றி என்ன சொல்கிறான்?

சதுர்வர்ணயம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகச:
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யகர்த்தார-மவ்யயம்.

(கீதை அத். 4- சுலோகம் 13)

“நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை, அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தரும உற்பத்தியாளனாகிய (கர்த்தா) என்னால் கூட முடியாது’ (வுhழரபா ஐ யஅ வாந உசநயவழச ழக வாந கழரச கழடன உயளவநஇ மழெற ஆந வழ டிந inஉயியடிடந ழக யஉவழைn ழச உhயபெந).

கீதை சாமானிய நூல் அல்ல. அது நால் வேதங்களையும் பிழிந்து வடிகட்டிய சாறு! தொட்டதற்கு எல்லாம் இந்து மதவாதிகள் கையில் எடுக்கும் போர்வாள்!
மேற்கொண்டு சோதிட சாத்திரம் கோள்களைப் பற்றிச் சொல்வதைப் படியுங்கள். கிரகங்களில்-
சூரியன்-  – அரசன்
சந்திரன்   – அரசி
செவ்வாய் – படைத் தளபதி
புதன் – இளவரசன்
வியாழன் மற்றம் வெள்ளி – அமைச்சர்கள்
சனி -. வேலைக்காரன்
இராகு கேது – படை!
செவ்வாய் – புவி. சந்திரன் மற்றும் சுக்கிரன் – தண்ணீர். புதன் – காற்று. குரு மற்றும் சூரியன் – நெருப்பு. சனி – வான்வெளி.
சோதிட சாத்திரம் கிரகங்களை மித்துரு (நட்பு) சத்துரு (பகை) எனவும் பிரிக்கிறது. ஏன், எதற்காக, எந்த அடிப்படையில் என்பது யாருக்கும் தெரியாது. (வளரும்)
சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
கிரகங்கள் உயிரற்ற சடப் பொருட்கள்!
(15)
சோதிட சாத்திரம் கிரகங்களையும்; இராசிகளையும் வருண அடிப்படையில் விதிக்கட்டின்றி மனம் போன போக்கில் பிரித்திருப்பதைப் பார்த்தோம். சோதிட சாத்திரம் வேதத்துக்கு அங்கமாகப் பார்க்கப்படும் வேதாங்கங்கள் ஆறில் (சிக்கை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம்) ஒன்றாக விளங்குகிறது. வேத காலத்தில் மந்திரங்களைச் சொல்லி யாகங்கள் செய்வதற்குரிய நல்வேளையை (முகூர்த்தத்தை) நிருணயிப்பதற்கு சோதிடம் பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் தனிமனிதனது எதிர்காலத்தைக் கணித்துப் பயன் சொல்லவும் பயன்படுத்தப்பட்டது.
கிரகங்களை மித்துரு (நட்பு) சத்துரு (பகை) என சோதிட சாத்திரம் பிரித்துள்ளது. எந்தக் கிரகத்துக்கு எந்தெந்தக் கிரகங்கள் மித்துரு, சத்துரு என்பதைக் கீழ்க் கண்ட அட்டவணை காட்டுகிறது.
மித்துரு சத்துரு கிரகங்கள்

கிரகம்
மித்துருக்கள்
சத்துருக்கள்
சூரியன்
சந்திரன், அங்காரகன், குரு
சுக்கிரன், சனி, இராகு
சந்திரன்
சூரியன், குரு
சனி, இராகு, கேது
அங்காரகன்
சூரியன், குரு
புதன்
புதன்
சுக்கிரன்
சந்திரன்
குரு
சூரியன், சந்திரன், அங்காரகன்
புதன், சுக்கிரன்
சுக்கிரன்
சனி, புதன், இராகு
சூரியன், சந்திரன், அங்காரகன்
சனி
புதன், சுக்கிரன்
சூரியன், சந்திரன்
இராகு
சுக்கிரன்
சூரியன்
கேது
சூரியன், குரு
சந்திரன்
ஆதாரம் – ஜோதிட அமுதம் (பக்கம் 88)
குறிப்பு – எந்தக் கிரகம் எந்தக் கிரகத்துக்கு நட்பு அல்லது பகை என்பதில் சோதிட சாத்திரத்தில்  ஒத்த கருத்தில்லை. நூலுக்கு நூல் அது வேறுபடுகிறது.
வானத்தில் பார்த்த இராசி மண்டலங்களுக்கு மனம் போன போக்கில் உருவங்களை அமைத்து அவற்றை ஆண் பெண், சரம், ஸ்திரம், உபயம், பகலில் பலமுடைய இராசிகள், இரவில் பலமுடைய இராசிகள், பகலிலும் இரவிலும் பலமுடைய இராசிகள், யோககாரர்கள் மாரகாதிபதிகள் எனப் பிரித்திருக்கிறார்கள். இதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் அறவே கிiயாது. எடுத்துக் காட்டாக சனிக் கிரகம் பாப கிரகம், அதன் நிறம் கருப்பு, அதன் பகைக் கிரகம் சூரியன் என்பது வெறும் கற்பனையே. செவ்வாய் சிவப்பு நிறமாகக் கண்ணுக்குத் தெரிந்ததால் (செவ்வாயின் தரை சிவப்பாக இருப்பதற்கு அதில் காணப்படும் சைழn ழஒனைநள காரணம் ஆகும்;) அதனைக்  கிரேக்கர்கள் போர்க் கடவுளாக எண்ணினர். இது அறியாமை காரணமாக எடுத்த தவறான முடிவாகும்.
இராசிகள் பற்றிய தரவுகளை ஒரே பார்வையில் கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது.
அட்டவணை

இராசி
பால்
உருவம்
சரம்ஃஸ்திரம் ஃஉபயம்
பகல்ஃ
இரவு
நடப்புஃ
காலம்
தனிமம்
மேடம்
ஆண்
ஆடு
சரம்
இரவு
4-15நாழி
நெருப்பு
இடபம்
பெண்
எருது
ஸ்திரம்
.இரவு
4-45நாழி
பிருதுவி
மிதுனம்
ஆண்
ஆண் – பெண்;
உபயம்
இரவு
5-15நாழி
ஜலம்
கடகம்
பெண்
நண்டு
சரம்
இரவு
5-30நாழி
நெருப்பு
சிம்மம்
ஆண்
சிங்கம்
ஸ்திரம்
பகல்
5-15நாழி
பிருதுவி
கன்னி
பெண்
பெண்
உபயம்
பகல்
5-00நாழி
ஜலம்
துலாம்
ஆண்
தராசு
சரம்
பகல்
5-00நாழி
நெருப்பு
விருச்சிகம்
பெண்
நட்டுவக்காலி
ஸ்திரம்
பகல்
5-15நாழி
பிருதுவி
தனுசு
ஆண்;
வில்
உபயம்
இரவு
5-30நாழி
ஜலம்
மகரம்
பெண்
கடல்குதிரை
சரம்
இரவு
5-15நாழி
நெருப்பு
கும்பம்
ஆண்
குடம்
ஸ்திரம்
பகல்
4-45நாழி
பிருதுவி
மீனம்
பெண்
இரட்டைமீன்
உபயம்
பகல்ஃஇரவு
4-15நாழி
ஜலம்

கீழ்க்கண்ட அட்டவணை ஒரே பார்வையில் புவி உட்பட 9 கோள் பற்றிய தரவுகளைத் தருகிறது.

கோள்கள்ள பற்றிய தரவு

கோள்

விட்டம்

ஞாயிறு-கோள்
தொலைவு

சுழல்
காலம்

சுற்றுக்
காலம்

துணை
கோள்

அடர்த்தி

திணிவு

வெப்பம்

அச்சின்
சாய்வு
ஞாயிறை
சுற்றும்
வேகம்

கிமீ
கல்
மில்.கிமீ

நீர்-1
புவி-1
செல்சி
பாகை
கிமீஃவிநாடி
புதன்
4,878
3,029
57,910
58.67 நா
87.96 நா
0
5.43
0.06
467ஃ210
0
47.89
வெள்ளி
12,102
7,515
108,200
243 நா
224.70 நா
0
5.25
0.82
450
177.4
35.03
புவி
12,756
7,921
149,600
23ம56 ம
365.24 நா
1
5.52
1.00
-89ஃ58
23.45
29.79
நிலா
3,476
2,159
384,467ழூ
27.32ழூழூ
27.32ழூழூ
0
0.60
0.012
123ஃ-233
7.00
31.022ழூழூழூ
செவ்வாய்
6,794
4,219
227,940
24.6 ம
687 நா
2
3.93
0.11
-187
23.98
24.13
வியாழன்
142,984
88,793
778,330
9.8 ம
11.9 ஆ
35
1.33
317.83
-148
3.08
13.06
சனி
120,536
74,852
1,426,940
10.665 ம
29.46 ஆ
31
0.71
95.2
-178
26.73
9.64
யுறேனஸ்
51,118
31,744
2,870,990
17.24 ம
84 ஆ
5
1.24
14.53
-210
97.92
6.81
நெப்தியூன்
49,528
30,756
4,497,070
16.1 ம
165 ஆ
8
1.67
17.14
-210
28.8
5.43
புளுட்டோ
2,300
1.428
5,913,520
6நா 9ம
248 ஆ
1
2.03
0.004
-229
122
4.74

ழூபுவி-நிலா தொலைவு (கிமீ)
ழூழூபுவியைச் சுற்றும் காலம்
ழூழூழூ புவியைச் சுற்றும் வேகம்
இந்தக் கிரகங்கள் உணர்வற்ற சடப் பொருள்கள.; பல கோடி கிமீ க்கு அப்பால் வலம் வந்து கொண்டிருப்பவை. அவற்றினால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது வீண் புரளியே!
வானில் கோடான கோடி கோடி நட்சத்திரங்கள் உண்டு. அவற்றில் 27 நட்சத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றுக்குப் பலன் சொல்வது அறிவீனமாகும். பண்டைய மனிதன் தனது அறிவுக்கு ஒப்ப அவற்றுக்கு உருவம் கற்பித்துப் பெயரும் வைத்து குணங்களையும் சொன்னான். இதற்கு அறிவியல் அடிப்படை எதுவும்  அடியோடு கிடையாது.
மேலே கூறியவற்றால் திருமணத்துக்கு மணமகன் மணமகள் சாதகத்தை வைத்துப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு மடமை என்பது சொல்லாமலே விளங்கும். அது இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடிய குருடன் கதை போன்றது!
அண்மைக் காலம் வரை சந்திர – சூரிய கிரகணத்தின் போது பாம்பு அவற்றை விழுங்குவதாக நினைத்து மக்கள் அச்சம் அடைந்தார்கள். இப்போது சந்திர – சூரிய கிரகணங்கள் எதனால் ஏற்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
சந்திரன், புவியை ஒரு நீள்வட்டக் கோட்டில் 29 நாள் 12 மணித்தியாலம் 44 மணித்துளிக்கு ஒருமுறை சுற்றிவருகிறது. இப்படிச் சுற்றிவரும் போது அமாவாசை அன்று சந்திரன் சூரியனுக்கும் புவிக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் இடம் பெறுகிறது. சந்திரன், அவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் பூமியில் படிகிறது. அப்போது சூரியனை சந்திரன் மறைத்து விடுகிறது. உண்மையில் ஒவ்வொரு 29 ½ நாளுக்கு ஒருமுறை சூரிய கிரகணம் ஏற்பட வேண்டும். ஆனால் சந்திரனின் ஓடுபாதை புவியின் ஓடுபாதைக்கு 5 பாகை சரிந்திருக்கிற காரணத்தால் ஆண்டில் குறைந்தது இரண்டு சூரிய கிரகணங்கள் மட்டும் இடம் பெறுகின்றன.
சந்திர கிரகணம் பூரணை நாளன்றே இடம்பெறுகிறது. புவியின் இருள்பகுதியில் இருப்பவர்களே சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும். புவி,  சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சூரிய ஒளி சந்திரன் மீது விழாதவாறு புவி தடுத்துவிடுகிறது. அதே நேரம் புவியின் நிழல் சந்திரனில் படிந்து சந்திர கிரகணம் இடம் பெறுகிறது.
எனவே சந்திர – சூரிய கிரகணங்கள் இயற்கை நிகழ்வுகளாகும். கிரகணம் நிகழும் பொழுது சமைக்கக் கூடாது சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் நஞ்சு என்பதெல்லாம் பாட்டிக் கதைகள். ஆனால் படித்தவர்களில் சிலரும் அதனை நம்புகிறார்கள். கோயில் அருச்சகர்கள் தோசம் நீங்க கோயிலுக்கு வந்து சாந்தி செய்யுமாறு மக்களை வெருட்டுகிறார்கள். பூசை செய்யுமாறு அச்சுறுத்துகிறார்கள்.
சனி 1,321,416,800 கிமீ (821,190,000 கல்) தொலைவுக்கு அப்பால் சூரியனை வலம் வரும் கிரகம். அந்தக் கிரகம்  இந்தப் புவியில் வாழும் மக்களது நன்மை தின்மை, யோகம் அவயோகம், சுகம், துக்கம் போன்றவற்றுக்குக் காரணமாக இருக்க முடியுமா?
இங்கிருந்து இவ்வளவு தொலைவில் உள்ள சனிக் கிரகத்துக்கு எள்ளெண்ணை எரித்தால் சனியைச் சரிக்கட்டி விடமுடியுமா?
மனிதன் நாகரிகம் அடையாத காட்டுமிராண்டிக் காலத்தில் வாழ்ந்தபோது இந்தக் கிரகங்களை கடவுள் என நினைத்து அவற்றை வழிபட்டான் என்றால் அறிவியல் வளர்ந்த இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் அவற்றை வழிபட வேண்டுமா? அவ்வாறு வழிபடுவது சரியா? அறிவு நாணயமுள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (வளரும்)

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply