தாய்நாடும் சேய்நாடும் போற்றிய நாவலர்

தாய்நாடும் சேய்நாடும் போற்றிய நாவலர்
நக்கீரன்

ஈழத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பலர் தொண்டாற்றி இருக்கிறார்கள். அதேபோல் சைவ சமயம் தளைத்தோங்கப்பணியாற்றியவர்கள் பலர் ஆவர். ஆனால் ”சைவமும் தமிழும்” என்ற இரண்டையும் இரு கண்களாகப் போற்றி வளர்த்தவர் யார் என்று பார்க்கும்போது ஒரேயொருவர்தான் எங்கள் கண்முன்; தெரிகிறார். ‘தமிழ் உரைநடையின் தந்தை’, ‘ஐந்தாம் சைவ சமய குரவர்’ என்று பலராலும் போற்றப்படும் நல்லூர் ஆறுமுக நாவலரே அந்தப் பெருமகனாவார்.

‘நாயனார் நாற்குரவர் நாவலர்தென் ஞாலமிசை
மேயினார் ஈசனருள் மேல்’

என்று சி.வை. தாமோதரம் பிள்ளை செப்புகிறார்.

சங்க கால ஈழத்துப் பூதந்தேவனாருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் தன் புகழ் பதித்த பெருமை ஆறுமுக நாவலருக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தின் சமய வரலாறு, இலக்கிய வரலாறு, சமூக வரலாறுகளில் நாவலர் தம்முடைய முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளார்.

நாவலர் பிறந்திரரேல் சைவசமயத்திற்கும் தமிழுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை நாவலர் சிவபதமடைந்தபோது சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதிய இன்னொரு பாடல் இனிது விளக்குகிறது.

‘நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே அறை.’

நாவலர் என்பது நாவாற்றல் படைத்தவர் என்பதைக் குறிக்கும். இந்தப் பட்டத்தை யாழ்ப்பாணம் கந்தப்பிள்ளை ஆறுமுகம் அவர்கட்கு திருவாவடுதுறை ஆதீனமே செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் அவர் ஆற்றிய பெருந்தொண்டினைப் பாராட்டுமுகமாக வழங்கிச் சிறப்பித்தது.

நாவலரின் காலம் (1822 – 1879) பிறபண்பாட்டுக்கும், பிறமொழிப் படையெடுப்புக்கும் தமிழர்கள் உட்பட்டிருந்த காலம். ஆண்ட பரம்பரை அரசிழந்து அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலம்.

கல்வி வாய்ப்புக்காகவும், அரச ஊழியத்துக்காகவும் தமிழ்மக்கள் சைவ சமயத்தைவிட்டு கிறித்துவ மதத்திற்கு மாறிக் கொண்டிருந்தார்கள். தமிழ்க் கல்வி புறக்கணிக்கப்பட்டு ஆங்கில மோகம் மக்களை ஆட்டிப்படைத்தது.

இந்த இரண்டு போக்கினின்றும் மக்களைத் தடுத்து நிறுத்தி தமிழ்மொழியையும் சைவநெறியையும் போற்றி வளர்த்திட தம் வாழ்நாள் முழுவதும் நாவலர் பாடுபட்டார். புறசமயத்தவர் எவற்றைக் கருவிகளாகக் கொண்டு தமிழ் மக்களை மதமாற்றம் செய்யப் புறப்பட்டார்களோ அதே கருவிகளை நாவலரும் கையில் எடுத்தார்!
ஆறுமுக நாவலரின் சுற்றம் செல்வாக்கு மிகுந்தது. அவரது பரம்பரை பொன்பற்றியூர் பாண்டிமளவன் வழி எனக் கருதப்படுகிறது. அவரது முன்னோரில் ஒருவராகச் சிறப்புப் பெற்றவர் ஞானப்பிரகாச முனிவர் என்பவர். வடகோவை சபாபதி நாவலர், ஆறுமுக நாவலரை வெறும் ஆறுமுகமாக திருவாவடுதுறை மடத்திற்கு அனுப்பி வைத்தபோது அவர் சமவாத சைவப் பிசாசாகிய ஞானப்பிரகாச முனிவர் மரபிற் பிறந்தவர் என்று கூறும் கடிதத்தோடு அனுப்பி வைக்கப்பட்டார்.

அக்கால வழக்கப்படி ஆசிரியர் சுப்பிரமணியம் என்பவர் நடத்திவந்த தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் நாவலர் கல்வி கற்கத் தொடங்கினார். பின்பு அவரது உடன்பிறப்புக்கள் சரவணமுத்துப் புலவர், சேனாதிராயர் முதலியோரிடத்தில் தமிழ்க் கல்வி கற்க வழி செய்தனர். தமது ஆசிரியர்களிடம் கற்க வேண்டிய இலக்கிய இலக்கணங்களை நாவலர் நன்கு கற்றுக் கொண்டார். இவரது திறமையைக் கண்ட அண்ணன்மார் யாழ்ப்பாண மத்திய பாடசாலையில் ஆங்கிலம் கற்க அனுப்பி வைத்தனர். நன்கு ஆங்கிலம் கற்று தமிழ்மொழியோடு இருமொழிப் புலமையைக் கண்ட பாடசாலை அதிபர் பேர்சிவல் பாதிரியார் அந்தப் பாடசாலையில் மேல்வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் கற்பிக்க அவரை நியமித்தார். இவரது மொழியாற்றலைக் கண்டு வியந்த பேர்சிவல் பாதிரியார் தாம் மொழிபெயர்த்த விவிலிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை சரிபார்த்துத் திருத்துவதற்கு தனது தமிழ்ப் பண்டிதராக வைத்துக் கொண்டார். இந்தப் பதவியில் ஊதியம் இல்லாமல் பல ஆண்டு நாவலர் பணியாற்றினார். இந்தக் காலத்திலேயே சிவாகமங்களை நாவலர் ஐயந்திரிபறக் கற்றுக் கொண்டார்.

ஆறுமுக நாவலர் ஒரு பழமைவாதி என்பது அவர் மீது பலரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று. அதற்குக் காரணம் நாவலர் திருக்கோயில்களில் நடைபெறும் அர்ச்சனைகள், பூசைகள் ஆகம முறைப்படி செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்தியதே.

சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும், ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கொண்டருளிய விநாயகர், சுப்பிரமணியர், வைரவர், வீரபத்திரர் போன்ற மூர்த்தங்களை வழிபடும் மார்க்கம் சைவ சமயம் என்றார். அவ்வாறு இல்லாது சிறு தெய்வங்களை பரம் என்று வணங்குகிற சமயம் சைவ சமயம் ஆகாது என்றார். துட்ட தேவதைகளையும், காடன், மாடன், காட்டேறி, மதுரை வீரன், கறுப்பன், முனி போன்றவர்களை மட்டுமல்ல கண்ணகியை அம்மனாக வணங்குவதையும் நாவலர் கண்டித்தார்.

ஆகமங்களில் விதித்தவாறு சிதம்பரத்தில் பூசைகள் செய்யப்படவில்லை என அங்குள்ள தீஷிகர்களைக் கண்டித்ததால் அவர்களது பகையை நாவலர் தேடிக் கொண்டார்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகரது அருட்பாக்களை மட்டுமே கோயில்களில் ஓதப்பட வேண்டும் என்பதுநாவலர் கட்சி. அதனால் இராமலிங்க அடிகளாரது திருமுறைகள் மருட்பா எனக் கண்டித்தார். இதுபற்றி எழுந்த மோதலே நாவலரையும் இராமலிங்க அடிகளாரையும் சிதம்பர தீஷிதர்களையும் நீதிமன்றப் படிக்கற்களை ஏற வைத்தது. இராமலிங்க அடிகளாரது திருமறைகளை மருட்பா என்று சாடினாலும் தனிப்பட்ட முறையில் இராமலிங்க அடிகளார் ஒரு சான்றோர் என்பதை நாவலர் மறுக்கவில்லை.

நாவலருக்கு ரோசாப் பூக்கள் என்றால் கொள்ளை ஆசை. அதனை அதிகமாக தனது பூசைகளில் பயன்படுத்துவார். ஆனால் ஆகமத்தில் கோயிற் பூசைக்குரிய மலர்களில் ஒன்றாக அது இல்லாததால் புட்பக விதி என்ற நூலில் அதனை சேர்க்காது விட்டு விட்டார்!

உண்மையில் நாவலர் பழமைவாதியல்ல. கல்வித் தளத்தில் ஏற்பட்ட அறிவியல் மாற்றங்களை அவர் வரவேற்றார். கிறித்தவர்கள் தங்கள் மதத்தைப் பரம்பல் செய்யக் கையாண்ட கருவிகள் ஒவ்வொன்றையும் நாவலர் சைவத்தை வளர்க்கக் கையில் ஏந்தினார்!

கிறித்தவ பாதிரிமார்கள் சமயம் வளர்க்க பல பள்ளிகள் நிறுவினார்கள். நாவலரும் அரும்பாடு பட்டு சைவப் பள்ளிகள்நிறுவினார். அந்தப் பள்ளிகளில் சமய சாத்திரங்கள் (தேவார திருவாசகங்கள், புராணங்கள், நாலடியார், திருக்குறள், மெய்கண்ட சாத்திரங்கள்) படிப்பிப்பதற்கு ஒரு பாடத் திட்டத்தையே வகுத்தார். அத்தோடு மேற்குநாட்டுச் சாத்திரங்களான வரலாறு, பூகோளம், கணிதம், இயற்பியல், வேற்பியல் கற்பிக்க ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வீடுதோறும் பிடி அரிசி திரட்டும் திட்டத்தை உருவாக்கினார்.

கிறித்தவர்கள் தங்கள் மதபோதனைகளைப் பரப்ப அச்சு யந்திரசாலைகளை அமைத்து நிறையப் புத்தகங்களை அச்சிட்டு மக்களிடம் கொடுத்தார்கள். நாவலரும் அவ்வாறே அச்சுக் கூடங்களை யாழ்ப்பாணத்திலும் சிதம்பரத்திலும் நிறுவி ஓலைகளில் இருந்த சைவசமய நூல்களை ஒப்புநோக்கி, பாடபேதங்கள் நீக்கிப் பதிப்பித்து வெளியிட்டார்.

கிறித்தவர்கள் வினா விடை பாணியில் (catechism) சமயக் கோட்பாடுகளை விளக்கியது போல் நாவலரும் சைவ வினாவிடை நூல்களை எழுதினார். பல நூல்களுக்கு உரை எழுதினார். அவரது நண்பர்கள், மாணாக்கர்கள் எழுதிய நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தார். அல்லது பதிப்பிக்க உதவினார். நாவலரது உழைப்பால் வெளிவந்த நூல்களுக்கு அளவில்லை.

நன்னூல் விருத்தியுரை
நன்னூல் காண்டிகையுரை
நைடதவுரை
சூடாமணி நிகண்டுரை
திருமுருகாற்றுப்படை உரை
இலக்கணக் கொத்து
திருவிளையாடற புராணம்
சிவ பூசாவிதி
பால பாடம் (1.2.3.4)
ஆத்திசூடி உரை
கொன்றை வேந்தன் உரை
மருதூரந்தாதியுரை
கோயிற்புராண உரை
சைவ சமயநெறி உரை
கந்தபுராணம்
பெரியபுராணம் (உரைநடை)
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
திருக்கோவையாருரை
தொல்காப்பியம்
சவுந்தரிய லகரி
சைவ எல்லப்ப நாவலர்
பாரதம்
கொலை மறுத்தல்
வைராக்கிய தீபம்
வைராக்கிய சதகம்
திருவுந்தியார்
தாயுமானவ சுவாமிகள் பாடல்கள்

நாவலர் மீது வீசப்படும் இன்னொரு குற்றச்சாட்டு அவர் தமிழினத்தில் புரையோடிப் போய்க்கிடந்த சாதி அமைப்பை ஆதரித்தார் என்பது. இதற்குக் காரணம் நாவலர் ஆகமத்தின் மீது வைத்திருந்த பக்தியே. ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். நாவலர் ஒரு சமூக சீர்திருத்தவாதி அல்ல. அதற்கு அவருக்கு நேரம் இருக்கவில்லை. பிற சமய, மொழி,பண்பாடு இவற்றின் படையெடுப்பில் இருந்து தமிழினத்தைக் காப்பாற்றுவதே அவரது ஒரே நோக்கமாகவும் உடனடிக் குறிக்கோளாகவும் இருந்தது. அதனால் வயலில் உள்ள களையைப்பற்றிக் கவலைப்படாது பரசமய வெள்ளம் உள்ளே வராது சைவசமயம் என்ற வயலுக்கு வரம்பு கட்டினார். இதனைத் தவறென்று சொல்ல முடியாது.

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நாளன்று ஆறுமுக நாவலர் ஆற்றிய இறுதியுரை தமக்கு ஒரு வாரிசைத் தேடிக் கொள்ளாத மனத் தாங்கலை வெளிப்படுத்தியது.

‘நான் உங்களிடத்துக் கைம்மாறு பெறுதலைச் சிறிதும் எண்ணாது முப்பத்திரண்டு வருடகாலம் உங்களுக்கு சைவ சமயத்தின் உண்மைகளைப் போதித்து வந்தேன். எனக்குப் பின் சைவசமயம் குன்றிப் போமென்றுபாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். ஆதலால் நான் உயிரோடு இருக்கும்போதே உங்களுக்காக ஒரு சைவப்பிரசாரகரைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும், என்னைப் போலப் படித்தவர்களும் சன்மார்க்களுமாய் அநேகர் வருவார்கள். ஆனால் உங்கள் வைவுகளைக் கேட்டுக் கேட்டுக் கைமாறு கருதாது சமயத்தைப் போதிக்க என்னைப்போல் ஒருவரும் வரார்.’

நல்லைநகர் ஆறுமுக நாவலர் மறைந்து 122 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நாவலர் விட்டுச் சென்ற சமயப் பணியையும் தமிழ்ப் பணியையும் பின்வந்த தலைமுறைகள் செவ்வனே செய்து முடித்து விட்டனவா?

நன்னூல் விருத்தியுரை
நன்னூல் காண்டிகையுரை
நைடதவுரை
சூடாமணி நிகண்டுரை
திருமுருகாற்றுப்படை உரை
இலக்கணக் கொத்து
திருவிளையாடற புராணம்
சிவ பூசாவிதி
பால பாடம் (1.2.3.4)
ஆத்திசூடி உரை
கொன்றை வேந்தன் உரை
மருதூரந்தாதியுரை
கோயிற்புராண உரை
சைவ சமயநெறி உரை
கந்தபுராணம்
பெரியபுராணம் (உரைநடை)
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
திருக்கோவையாருரை
தொல்காப்பியம்
சவுந்தரிய லகரி
சைவ எல்லப்ப நாவலர்
பாரதம்
கொலை மறுத்தல்
வைராக்கிய தீபம்
வைராக்கிய சதகம்
திருவுந்தியார்
தாயுமானவ சுவாமிகள் பாடல்கள்

தமிழ்த் தாத்தா உவே சாமிநாத ஐயரைப் பாராட்டுகிறவர்கள் ஏன் நல்லூர் ஆறுமுகநாவலரையும் சி.வை. தாமோதரம்பிள்ளையையும் பாராட்டுவதில்லை? அறிவியல் நூலான தொல்காப்பியத்தை முழுமையாகப்பதிப்பித்தவர்களில் சி.வை. தாமோதரனாரே முன்னோடி. ஆறுமுக நாவலர் 1868இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைத் தான் ஆய்வுசெய்து தாமோதரம் பிள்ளையைக் கொண்டு பதிப்பிக்கச் செய்துள்ளார்.

 • வீரசோழியம் (1881)
  •தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883)
  •தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885)
  •கலித்தொகை (1887)
  •இலக்கண விளக்கம், சூளாமணி (1889)
  •தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891)
  •தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892)

முதலியவை தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன.

இது மட்டுமன்றி,

கட்டளைக் கலித்துறை
வசன சூளாமணி
சைவ மகத்துவம்
நட்சத்திரமாலை

முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்ட பெருமை பிள்ளைக்கே உரியதாகும். தாமோதரனாரின் தூண்டுதலால் உ.வே.சா. பதிப்புப்பணியி்ல் தளராமல் ஈடுபட்டார். எனவேதான், தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் “பதிப்புப்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுகநாவலர். சுவர்களை எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை. கட்டமைத்தவர் சுவாமிநாத அய்யர்” எனப் பதிப்புப்பணிகளைப் பாராட்டி உள்ளார்.

தாமோதரனாரின் தூண்டுதலால் உ.வே.சா. பதிப்புப்பணியி்ல் தளராமல் ஈடுபட்டார். எனவேதான் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் ‘பதிப்புப்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுகநாவலர். சுவர்களை எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை. கட்டமைத்தவர் சுவாமிநாத அய்யர்’ எனப் பதிப்புப்பணிகளைப் பாராட்டி உள்ளார்.

ஆறுமுக நாவலர் பதிப்புத்துறையில் மற்ற எல்லோரையு விஞ்சியவர். அவர் உரை எழுதி பதிப்பித்தன நூல்கள்:

நன்னூல் விருத்தியுரை
நன்னூல் காண்டிகையுரை
நைடதவுரை
சூடாமணி நிகண்டுரை
திருமுருகாற்றுப்படை உரை
இலக்கணக் கொத்து
திருவிளையாடற புராணம்
சிவ பூசாவிதி
பால பாடம் (1.2.3.4)
ஆத்திசூடி உரை
கொன்றை வேந்தன் உரை
மருதூரந்தாதியுரை
கோயிற்புராண உரை
சைவ சமயநெறி உரை
கந்தபுராணம்
பெரியபுராணம் (உரைநடை)
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
திருக்கோவையாருரை
தொல்காப்பியம்
சவுந்தரிய லகரி
சைவ எல்லப்ப நாவலர்
பாரதம்
கொலை மறுத்தல்
வைராக்கிய தீபம்
வைராக்கிய சதகம்
திருவுந்தியார்
தாயுமானவ சுவாமிகள் பாடல்கள்

பல பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்று மகிழும் நாம், அவருக்கு முன்னோடிகளாக இருந்த நல்லைநகர் நாவலரையும் சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகிய இருவரது பதிப்புப் பணியை நாம் மறந்துவிடக் கூடாது. அது எமது கடமை.

About editor 3020 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply