சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! 31 – 34

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
தமிழன் நவகோள்களைச் சுற்றுவதற்குப் பதில் அவற்றை அளப்பது எப்போது?
(31)

அண்ட வெளிpயில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு கோள் பற்றி முன்னர் (அத்தியாயம் 29) எழுதியிருந்தேன. அந்தச் செய்தியின் தலைப்பு “நீருடன் உள்ள கோள் – சூரிய மண்டலத்திற்கு வெளியே முதன்முதல் கண்டுபிடிப்பு” என்பதாகும்.

மேலும் “உயிர் வாழ்வதற்கு ஓர் அடிப்படைத் தேவையான நீர் உள்ள கோள் (கிரகம்) ஒன்று, சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருக்கிறது என்பதை வானியலாளர்கள் தெரியப்படுத்தினர்.

நீரைப் பெற்றிருக்கிற இந்தக் கோள் வேதி (ரசாயன) எரி பொருள்களைக் கொண்டு நாம் செலுத்தும் ஏவுகணைகள் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறது;. வாழ்வதற்குப் பொருத்தமற்றதாகவும் உள்ளது. அதில் பாறையில்லை. வாயுதான் இருக்கிறது. அதில் உள்ள வெப்பநிலை எஃகுவை உருக்கத்தக்கதாகும்;. அதனால் அதிலிருக்கும் நீர், மிகுவெப்ப நீராவி (ளரிநச hநயவநன ளவநயஅ) ஆக மாறிவிடுகிறது. இந்தக் கோளுக்கு (கிரகத்திற்கு) ர்னு 189733டி எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. சூரிய மண்டலத்தில் சுற்றிவரும் வியாழ கோளைவிட 15 விழுக்காடு பெரிதாக இந்தக் கோள் இருக்கிறது” என்றும் எழுதியிருந்தேன்.

ர்னு 189733டி என்ற இந்தக் கோள் புவியிலிருந்த 63 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஏரடிநஉரடய என்ற நட்சத்திரத்தை 30 இலட்சம் மைல் தொலைவில் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றிவர எடுக்கும் காலம் 2.2 புவி நாள்கள் மட்டுமே. எமது வாயுக் கோளான வியாழனை விட அளவில் சற்றுப் பெரிதான இக் கோளின் திணிவும் சற்று அதிகம். இந்தக் கோளின் வெப்பம் 1,300 பாகை பாரன்னைட் (700 பாகை செல்சியஸ்) ஆகும். இதன் காரணமாகவே தண்ணீர் மிகு வெப்ப நீராவி வடிவத்தில் காணப்படுகிறது. எனவே அங்கு எங்களுக்குத் தெரிந்த உயிரினம் இருக்க வாய்ப்பில்லை.

வெளி அண்டத்தில் (நுஒவசயளழடயச ளுலளவநஅ) இதுவரை சிறியதும் பெரியதும் ஆன சுமார் 200 கோள்களை வானியலாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.

இப்போது இந்தச் செய்தியைப் படியுங்கள்.

வோஷிங்டன், ஆகஸ்ட் 7- செவ்வாய்க் கோளில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்தனவா? நிகழ் காலத்தில் இருக்கின்றனவா? என்பனவற்றை அறிவதற்கு உதவக் கூடிய ஆய்வு கலத்தை ஆகஸ்ட் 4 இல் அமெரிக்கா விண் வெளிக்கு அனுப்பியுள்ளது.
புளோரிடா மாநிலத்தில் உள்ள  ஊயிந ஊயயெஎநசயட யுசை குழசஉந டீயளந  முனையில் இருந்து இந்த விண்வெளி ஆய்வுக்கலம் ஏவப்பட்டது. Phழநniஒ ஆயசள டுயனெநச  எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விண்வெளி ஆய்வுக் கலம் 679 மில்லியன் (67 கோடியே 90 லட்சம்) கிமீ தொலைவு சென்று ஒன்பது மாதங்களுக்குப் பின்பு 2008 மே 25 இல் செவ்வாய் கோளில் தரை இறங்கும். இதற்கு 420 மில்லியன் (42 கோடி டொலர்) செலவாயிற்று.

இப்பொழுது அனுப்பப் பட்டுள்ள விண்கலம் செவ்வாய் நிலப்பகுதியையும் பனிக்கட்டியையும் அகழ்ந்து எடுக்கும் மாதிரிப் பொருள்களை அதிலுள்ள கருவிகளின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தும்.

விண்வெளியை ஊடுருவி செவ்வாயில் இறங்க இருக்கும் இந்த விண்கலம் சூரிய ஆற்ற லால் செயல்படுகிறது. அதில் 2.35 மீட்டர் நீளமுள்ள எந்திரக் கை பொருத்தப்பட்டிருக்கிறது.

செவ்வாய் கோளின் வெப்ப நிலை -73 பாகை செல்சியஸ் முதல் – 33 பாகை  செல்சியஸ் ஆகியவற்றிற்கு இடைப்பட்டது ஆகும். ஆகையால் செவ்வாயின் மேல் பகுதியில் சில அங்குலத்திற்குக் கீழ் பனிக்கட்டி இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்தக் கலத்தில் இரண்டு கருவிகள் இருக்கின்றன. உயிர் வாழ்வுக்குத் தேவையான நீர் மற்றும் கரியின் அடிப்படையிலான வேதிப் பொருள்கள் பற்றி ஒரு கருவி ஆராயும். மற் றொரு கருவி அங்குள்ள மண்ணின் தன்மையை ஆராயும்.

பழங்காலத்தில் செவ்வாய்க் கோளில் கடலும் ஆறும் இருந்திருக்கக் கூடும் என வானியலாளர்கள் கருதுகிறார்கள்.
2002 இல்  ஓ.டி.சி. என்ற கலத்தை நாசா அனுப்பியது. செவ்வாயில் நிறைய நீரக வாய்வு (hலனசழபநn) இருப்பதை அது கண்டுபிடித்தது. அதனால் ஒரு மீட்டருக்குக் குறைவான ஆழத்திலேயே அங்கு பனிக்கட்டி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
2004 இல் நாசா அனுப்பிய ளுpசைவை (ஊக்கம்) மற்றும் ழுppழசவரnவைல (வாய்ப்பு) எனும் ஊர்திகள் சூரிய சக்திமூலம் இடம் பெயர்ந்து ஆய்வுகள் செய்தன. ஆனால் இப்பொழுது அனுப்பப்பட்டுள்ள Phழநniஒ நிலையாக இருந்து ஆய்வுகளை மேற் கொள்ளும். அதன் அளவு 5.5 ஒ 1.5 மீட்டர் ஆகும். அதில் 55 கிலோ எடையுள்ள கருவிகள் உண்டு.

பெரும்பாலான தமிழர்கள் இதுபோன்ற கண்டுபிடிப்புக்களைப் பற்றியோ விண்வெளி ஆய்வுகள் பற்றியோ அலட்டிக் கொள்வதில்லை. உண்டுடுத்து வாழ்ந்தேன் இரண்டு கால் மாடுபோல வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் சோதிட சாத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் கோள்களும் அவற்றின் குணாம்சங்களுமே!

பாரதியார் ஒரு ஒப்பற்ற கவிஞர். அவரைப் போல் தமிழ்மொழியையும் தமிழ் இனத்தையும் காதலித்த கவிஞன் இதுவரை பிறந்ததில்லை. இனியும் பிறக்கப் போவதில்லை. அவர் தமிழ்க் குமுகாயம் சாதி, மத பேதமற்ற குமுகாயமாக மிளிர வேண்டும் என்று விரும்பினார். “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் – சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ?” என்று கடாவினார்.

தமிழர்கள் வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்று விரும்பினார்.
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்றார்.
காசி நகர்ப்புற புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
என்று கனவு கண்டார்.
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்!
என சங்கநாதம் செய்தாh.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக –
மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்,
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்தி தெருபெருக்கும் சாத்திரம் கற்போம்.
எனப் பாரதியார் ஆசைப்பட்டார்.
ஆனால் இவையெல்லாம் தமிழர்கள் காதில் விழவில்லை. வெள்ளைக்காரன் காதில் விழுந்து அவன் சந்திரனிலேயே கால் பதித்து சாதனை படைத்தான். இப்போது வானை அளக்கிறான்.

வெள்ளைக்காரன் வானை அளக்கும் போது தமிழர்கள் என்ன செய்கிறார்கள்? நவக்கிரகங்களைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். சனி தோஷம் போக எள்ளெண்ணெய் சட்டி எரிக்கிறார்கள். காகத்துக்குச் சோறு வைக்கிறார்கள். செவ்வாய் தோஷம் நீங்க விரதம் இருக்கிறார்கள். மொத்தத்தில் கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார்கள். இந்த இலட்சணத்தில் தமிழினம் தலை நிமிர்வது எப்போது? சிந்திக்கத் தெரிந்தவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

ஒரு குழந்தை பிறக்கும் போது அடிவானத்தில் எழும் இராசி (இலக்கினம்) சந்திரன் நின்ற ஜென்ம இராசி, சந்திரன் நின்ற ஜென்ம நட்சத்திரம் ஆகியவை அந்தக் குழந்தையின் தலைவிதியை. நன்மை தின்மையை, கல்வி, செல்வம், நோய் — நோயின்மை, அகவை, திருமணம், மனைவி, குழந்தைகள் போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன எனச் சோதிடர்கள் சொல்கிறார்கள். அதன் பின்னரும் கோள்களின் பெயர்ச்சி மனிதர்களைப் பாதிக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் எது எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சொல்ல மறுக்கிறார்கள். ஏதோ ஒரு சக்தி அல்லது ஆற்றல் மனிதர்களைப் பாதிக்கிறது எனச் சொல்கிறார்கள். தாங்கள் சொல்வதை அப்படியே வேதவாக்காகக் கொண்டு நம்பும்படி கேட்கிறார்கள்.

இயற்கையில் நால் வகை அடிப்படை விசைகள் மட்டுமே விண்வெளியில் இருந்து கிடைக்கின்றன என்பதை முன்னரே (அத்தியாயம் 3) கூறியுள்ளேன். அவையாவன வல்அணுவிசை (ளுவசழபெ ரெஉடநயச கழசஉந) மின்காந்த விசை (நுடநஉவசழஅயபநெவiஉ கழசஉந) மென் அணுவிசை (றுநயம ரெஉடநயச கழசஉந) ஈர்ப்பு விசை (புசயஎவையவழையெட கழசஉந) என்பனவாகும். இவற்றுக்கு மேலாக வேறு தெய்வீக ஆற்றல் இல்லை.

மனிதன் பிறந்த புவி;க் கோளையும் அதன் தாக்கத்தையும் சோதிட சாத்திரம் அறவே கணக்கில் எடுப்பதில்லை. புவியும் ஒரு கோள் என்பது சோதிட சாத்திரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதே அதற்கான ஏது ஆகும்.

கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை ஈர்ப்பு விசையின் பெறுமதியை (செவ்வாய்க் கோளோடு ஒப்பிடும் பொழுது) காட்டுகிறது. செவ்வாயோடு ஒப்பிடுவது சோதிடம்; அந்தக் கோளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகவே! .

ஈர்ப்பு விசை          ஈர்ப்பு விசையின் பெறுமதி

தாய்                      20

மருத்துவர்                  06

மருத்துவமனை              500

ஞாயிறு  854,000

நிலா   4,600

புதன்                     .38

வெள்ளி                   27

செவ்வாய்                   1

வியாழன்                   46

யுறேனுஸ்   0.1

நெப்தியூன்      0.03

புளுட்டோ                  0.059

வால்மீன்               0.00001

ஈர்ப்பு விசை கோள்கள் புவிக்கு அண்மையில் வரும் பொழுது கணிக்கப்பட்டதாக கொள்ளப்பட்டது. மேலதிகமாக கொள்ளப்பட்ட அனுமானங்கள் (யுளளரஅpவழைளெ)-

குழந்தையின் எடை   – 3 கிலோ

தாயின் எடை  – 50 கிலோ

மருத்துவர் எடை  – 75 கிலோ

மருத்துவமனைக் கட்டடத்தின் எடை  –  2.1 ஒ 1012 கிலோ

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை  –  0.1 மீ

மருத்துவருக்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை    –  0.3 மீ

மருத்துவமனையின் மைய எடைகும் குழந்தைக்கும்
இடையில் உள்ள தொலை                             – 6.1 மீ

மேலே கொடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் குழந்தை பிறக்கும் பொழுது  தாய், மருத்துவர் மற்றும் மருத்துவமனைக் கட்டடம் மூலமாக இடம் பெறும் ஈர்ப்பு விசையின்; (கழசஉந ழக பசயஎவைல) தாக்கம சோதிடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் செவ்வாய்க் கோளை விட முறையே 20, 6 மற்றும் 500 மடங்கு கூடுதலாக இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். எனவே ஒரு சோதிடர் ஒரு குழந்தையின் சாதகத்தை ஈர்ப்பு விசை அடிப்படையில் தயாரித்தால் கோள்களை மட்டுமல்ல விண்வெளியிலும் மண்ணிலும் காணப்படும் ஏனைய பருப்பொருள்களையும் கணக்கில் எடுக்க வேண்டும். (வளரும்)

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
 ஒரு குழந்தையின் குணாம்சம்களை தாய் தந்தையரது மரபுக் குறியே தீர்மானிக்கிறது
 (32)

ஈர்ப்பு விசை அல்ல அந்த ஆற்றல் மின்காந்த ஆற்றல் (நடநஉவசழ-அயபநெவiஉ நநெசபல) என்று சோதிடம் சொல்லுமானால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் மீது பருப்பொருள்கள் செலுத்தும் மின்காந்த ஆற்றல் செவ்வாய்க் கோளில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலோடு ஒப்பிடும் பொழுது பின்வருமாறு காணப்படும்.

பருப்பொருள்                        மின்காந்த ஆற்றல்

ஞாயிறு 3 x 109

200 வட்ஸ் மின்குமிழ் (2 மீ தொலைவில்)   9 ஒ 106

முழு நிலா   7,600

புதன்   0.4

வெள்ளி  4.4

செவ்வாய்                               1

வியாழன்                               0.8

சனி  0.1

யுறேனுஸ்                             .0004

நெப்தியூன்     .00005

மேலே கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்  200 வட்ஸ் ஆற்றல் உடைய ஒரு மின்குமிழியில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றல் செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கோள்களைவிடப் பல ஆயிரம் மடங்கு வலுவானது!

குழந்தை பிறக்கும் பொழுது அதனைப் பாதிப்பது கோள்களின் ஈர்ப்பு விசையும் அல்ல மின்காந்த விசையும் அல்ல என்றால் பின் எதுதான் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது? என்பதைச் சோதிடர்கள் தெளிவாக விளக்க வேண்டும். பிறப்பதற்கு முன்னரே முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை காரணமாக ஒவ்வொரு உயிரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்று இந்து மதம் (உலகில் உள்ள மக்களில் 15 விழுக்காட்டினரே இந்துக்கள்) சொல்கிறது! அது உண்மையென்றால் ஒரு குழந்தையின் பிறப்பின் பொழுது கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் ஆகியவற்றின் இருக்கை முக்கியமற்றுப் போய்விடுகிறது.

சோதிடம் முற்றிலும் பிழையான அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதற்கு மேலே எடுத்துக் காட்டியவை மேலதிக சான்றுகளாகும்.

வானியல் பற்றிய அறிவு இன்றிருப்பது போல் பண்டைக் காலத்தில் இல்லாததால் சோதிடர்கள் மனம் போன போக்கில் கோள்கள் பற்றியும் இராசிகள் பற்றியும் இராசி  வீடுகள் பற்றியும் நட்சத்திரங்கள் பற்றியும்  எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்ததைப் பெரிய குற்றம் என்று சொல்ல முடியாது.  அன்றைய அறிவு அவர்களுக்கு அந்த அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய சோதிடர்கள் தொலமி, வராகமிரர், ஆரியப்பட்டர் போன்றோர் தங்கள் காலத்தில் எழுதி வைத்ததையே கிளிப்பிள்ளை போல் மனப்பாடம் செய்து அதன் அடிப்படையில் சாதகம் கணித்துப் பலன் சொல்கிறார்கள். இது சோதிடர்களின் உச்ச கட்ட புரட்டு ஆகும்.

ஒரு குழந்தையின் நிறம், குணம், உடல் நலம், புத்திக் கூர்மை, ஆயுள் பலம் போன்ற குணாம்சம்கள் அந்தக் குழந்தையின் தாய் தந்தை இருவரது மரபுக் குறியே (பநநெவiஉ உழனந) தீர்மானிக்கின்றது. இதுவே இன்றைய அறிவியலின் முடிந்த முடிபாகும்.

இப்போது சென்னையிலிருந்து ஈரோட்டுக்குத் தொடர்வண்டியில்  போகும்போது தான் சந்தித்த சோதிடரிடம் சில கேள்விகளைக் கேட்டதாகவும் அந்தச் சோதிடர் சொன்ன பதில்களை கமல் என்பவர் ஒரு இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். சோதிடர், சோதிட பாடத்தில் மதுரை காமராசர் பல்கலையில் படித்துப் பட்டம் பெற்றவராம். உங்களுக்குப் பயன்படும் என்பதால் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை கீழே தந்துள்ளேன்.

கேள்வி : மற்றக் கிரகங்களோடு சூரியனும் சேர்ந்து சுற்றுகிறதே அது எப்படி?

பதில் : ஜாதகம் கணிக்கப்படுவது பூமியை அடிப்படையாக வைத்துத்தான். அதாவது புநழ உநவெசiஉ. சூரியன் நிலையாக நின்று அதைப் பூமி சுற்றினாலும் பூமியை நிலையாக வைத்துப் பார்த்தால் சூரியன் சுற்றுவது போலத்தான் இருக்கும்.

கேள்வி : ஜோதிடத்தில் இருக்கும் கோள்களின் வேகம் வானியல் கூறும் அதே வேகமா?

பதில் : ஆமாம். (ஆனால் இதை எப்படிச் சரிபார்ப்பது எனத் தெரியவில்லை. யாராவது விளக்குங்களேன்!)

கேள்வி : பூசை புனஸ்காரங்கள் எப்படி கெட்ட பலன்களைத் தடுக்கின்றன?

பதில் : கெட்ட பலன்கள் முழுவதுமாகத் தடுக்கப்படுவதில்லை. அவற்றின் வீரியத்தை ஓரளவுக்குக் குறைக்கலாம்.

கேள்வி : எந்த அளவுக்கு?

பதில் : அது அவரவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது.

கேள்வி : மற்றவர்கள் முன்னேற, ஐந்துக்கும் பத்துக்கும் பலன் சொல்லி அலைந்து கொண்டிருக்கிறீர்களே, ஏன் உங்களுடைய ஜாதகத்தை நீங்களே பார்த்துப் பரிகாரம் செய்து வாழ்வில் முன்னேறக்கூடாது?

பதில் : என் ஜாதகத்தைப் பார்த்தேன். அதில் நான் பிறருக்குப் பலன் சொல்லும் ஜோதிடனாகத்தான் இருக்கவேண்டும் என இருக்கிறது.

கேள்வி : பரந்து விரிந்த மிகப்பெரிய வான்வெளியில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் கோள்கள் எப்படி மனிதர்களின் வாழ்வில் பாதிப்பை (நல்லவை, கெட்டவை இரண்டும்தான்) ஏற்படுத்துகின்றன?

பதில் : எல்லாக் கிரகங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பவுர்ணமி அன்று கடல் கொந்தளிப்பதில்லையா? அது போலத்தான்.

கேள்வி : பவுர்ணமியில் கடல் கொந்தளிப்பது காந்தப் புலத்தின் மாற்றங்களால். எங்கோ இருக்கும் செவ்வாய்க்கும் திருமணம் நின்று போவதற்கும் என்ன சம்பந்தம்?

பதில் : இதற்குச் செவ்வாய் மட்டுமே காரணமில்லை. மற்ற அருகிலிருக்கும் கிரகங்களும்தான் காரணம். (ஆனால் எப்படியென்று அவர் கடைசி வரை கூறவேயில்லை)

கேள்வி : ஒரே பிறந்த நேரம் மற்றும் இடத்தை இருவேறு ஜோதிடர்களிடம் கொடுத்தால் இரண்டு விதமான ஜாதகங்கள் மற்றும் பலன்கள் வருகிறதே, அது எப்படி?

பதில் : ஒரே பிறந்த நேரத்துக்கு ஒரே மாதிரியான ஜாதகம்தான் வரவேண்டும். ஜாதகம் கணிப்பவர் ஒரு விநாடியை விட்டுவிட்டாலும் ஜாதகம் மாறிப்போகும். கம்ப்யூட்டர் ஜாதகத்தில் வேறுவேறு இடங்களில் கொடுத்தாலும் ஒரே மாதிரியான ஜாதகம்தான் வரும். (கணினியில் ஒரே உள்ளே புகுத்துவதை (inpரவ) எத்தனை தடவை இயக்கினாலும் அதையே வெளியில் தள்ளுகிறது (output) என்பது எங்களுக்கே தெரியுமே!)

சில கேள்விகளுக்குப் பதிலே வரவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கூறுங்களேன்!

1. பிறப்பு என்பது ஒரு நொடியில் நிகழ்வதல்ல. குறைந்தபட்சம் சில விநாடிகளாவது ஆகும். அப்படியானால் பிறந்த நேரம் என்பது எது? தலை வெளிவந்த நேரமா அல்லது முழு உடல் வெளிவந்த நேரமா அல்லது முதன்முதலில் அழுத நேரமா? மருத்துவர் கூறும் நேரமா? மருத்துவர் கூறும் நேரமென்றால் அவரது கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுகிறது என்பது என்ன நிச்சயம்?

2. ஜோதிடத்தை ஒரு கணக்கு என்றே வைத்துக் கொண்டாலும், வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என்ற இருவேறு சூத்திர்ங்கள் (கழசஅரடய) எப்படி இருக்கும்? இரண்டில் எது சரி? இரண்டுமே சரியென்றால் இரண்டுக்கும் நேரவித்தியாசம் இருக்கிறதே? பலன்கள் வேறுபடாதா?

மேற்கண்ட இரண்டு கேள்விகளை நானும் எழுப்பியிருந்தேன் என்பதை இந்தத் தொடரைத் தொடக்கம் முதல் படித்து உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இப்படியான கேள்விகளுக்கு சோதிடர்கள் சொல்லும் பதில் மக்கள் சோதிடத்தை நம்புகிறார்கள். அது பொய்யென்றால் எப்படி சோதிடர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியும்? கடையை விரித்தேன் கொள்வார் இல்லை என்று சொல்லிக் கொண்டு கடையை மூடியல்லவா இருப்பார்கள்?

சோதிடம் இன்று ஒரு மிகுந்த வருவாய் தரும் தொழில் என்பதில் அய்யமில்லை. அமெரிக்காவில் இந்தத் தொழிலில் 2000 – 3000 முழுநேர சோதிடர்கள் இருக்கிறார்கள். சாதகம் பார்த்தல், கைரேகை பார்த்தல், எண்சாத்திரம் சொல்லுதல், குறி சொல்லுதல், மைபோட்டுப் பார்த்தல், தோச பரிகாரம் செய்தல் போன்றவற்றில் கோடிக்கணக்கில் டொலர் புரளுகின்றன. மனிதர்களின் மூடநம்பிக்கை அல்லது குருட்டு நம்பிக்கை இரண்டுமே இதற்குக் காரணம் ஆகும்.

கடலில் மூழ்கப்போறவன் எவ்வாறு ஒரு துரும்பைப் பிடித்துத்தன்னும் கரையேற முனைவானோ அதே போல் வாழ்வில் துன்பம், இடர், பின்னடைவு, இழப்பு, தோல்வி ஏற்படும்போது மனிதன் சோதிடர்களிடம் ஓடுகிறான். சோதிடர்களும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிப் பயமுறுத்தி அவர்களிடம் இருந்து பணத்தைக் கறந்து விடுகிறார்கள்.

இப்போது இன்னொரு சோதிடரின் புலம்பலைக் கேளுங்கள்.

மனிதனுக்கு வாழ்க்கையில் துன்பம் வரும்போது  “எத்தை தின்னாப் பித்தம் தெளியும்”னு சோசியரட்டப் போகிறான். சோசியரும் பலனைச் சொல்லும் போது (உமக்கு கூடப்பிறந்தவங்க இரண்டு அண்ணன்களும் ஒரு தங்கையும் உண்டு) ஏதாவது ஒன்று பலித்தாலும் போதும் சோதிடர் எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்கிறார் என்று சோதிடம் பார்த்தவர் முடிவு கட்டிவிடுகிறார். ஆயிரம் சொல்லி அதில் ஏதாவது ஒண்ணு பலிச்சுட்டாலும் பலிக்காத 999 அய் மறந்து விடுவதுதான் மனிதர்களின் “பெருந்தன்மை.”

மத்தப்படி மக்கள் நம்பிக்கையைப்பெற அறிவியல் ரீதியான விளக்கம்லாம் தேவைன்றது மூட நம்பிக்கை. யாராவது சும்மா “குறி” சொன்னாலே நம்பிருவாய்ங்க..

எனக்கு ஜோசியம் சொல்லித்தந்த வாத்தியாரு குழந்தை முதல் முதலா அழுத நேரம்தான் அது பிறந்த நேரம் என்று சொன்னார். இன்னொரு வாத்தியார் குழந்தை முதல்ல மூச்சுவிட்ட நேரம் – அதைத்தான் ஜாதகம் கணிக்க எடுத்துக்கிறணும் என்று சொன்னாரு. இன்னொருத்தரு வேற மாதிரிச் சொல்றாரு. ஜாதகம் கணிக்கிற கணக்கு வரைக்கும் சரியாத்தான் சொல்லித்தருகிறான்கள். பலாபலனுக்கு வரும்போது குழப்பி ஒண்ணுக்கிருந்துட்டாப் போல …………. பின்னாடி “குடும்ப ஜோதிடம்” புத்தகத்தவச்சு முடிஞ்ச அளவுக்கு எதுவெல்லாம் பொருந்தி வருமோ அதையெல்லாம் எழுதிப் பட்டமும் வாங்கினோம். (வளரும்

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
 ஒரு குழந்தையின் குணாம்சம்களை தாய் தந்தையரது மரபுக் குறியே தீர்மானிக்கிறது
 (32)

ஈர்ப்பு விசை அல்ல அந்த ஆற்றல் மின்காந்த ஆற்றல் (நடநஉவசழ-அயபநெவiஉ நநெசபல) என்று சோதிடம் சொல்லுமானால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் மீது பருப்பொருள்கள் செலுத்தும் மின்காந்த ஆற்றல் செவ்வாய்க் கோளில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலோடு ஒப்பிடும் பொழுது பின்வருமாறு காணப்படும்.

பருப்பொருள்                        மின்காந்த ஆற்றல்

ஞாயிறு 3 x109

200 வட்ஸ் மின்குமிழ் (2 மீ தொலைவில்)   9 ஒ 106

முழு நிலா   7,600

புதன்   0.4

வெள்ளி   4.4

செவ்வாய்                               1

வியாழன்                               0.8

சனி  0.1

யுறேனுஸ்                               .0004

நெப்தியூன்      .00005

மேலே கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்  200 வட்ஸ் ஆற்றல் உடைய ஒரு மின்குமிழியில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றல் செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கோள்களைவிடப் பல ஆயிரம் மடங்கு வலுவானது!

குழந்தை பிறக்கும் பொழுது அதனைப் பாதிப்பது கோள்களின் ஈர்ப்பு விசையும் அல்ல மின்காந்த விசையும் அல்ல என்றால் பின் எதுதான் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது? என்பதைச் சோதிடர்கள் தெளிவாக விளக்க வேண்டும். பிறப்பதற்கு முன்னரே முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை காரணமாக ஒவ்வொரு உயிரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்று இந்து மதம் (உலகில் உள்ள மக்களில் 15 விழுக்காட்டினரே இந்துக்கள்) சொல்கிறது! அது உண்மையென்றால் ஒரு குழந்தையின் பிறப்பின் பொழுது கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் ஆகியவற்றின் இருக்கை முக்கியமற்றுப் போய்விடுகிறது.

சோதிடம் முற்றிலும் பிழையான அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதற்கு மேலே எடுத்துக் காட்டியவை மேலதிக சான்றுகளாகும்.

வானியல் பற்றிய அறிவு இன்றிருப்பது போல் பண்டைக் காலத்தில் இல்லாததால் சோதிடர்கள் மனம் போன போக்கில் கோள்கள் பற்றியும் இராசிகள் பற்றியும் இராசி  வீடுகள் பற்றியும் நட்சத்திரங்கள் பற்றியும்  எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்ததைப் பெரிய குற்றம் என்று சொல்ல முடியாது.  அன்றைய அறிவு அவர்களுக்கு அந்த அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய சோதிடர்கள் தொலமி, வராகமிரர், ஆரியப்பட்டர் போன்றோர் தங்கள் காலத்தில் எழுதி வைத்ததையே கிளிப்பிள்ளை போல் மனப்பாடம் செய்து அதன் அடிப்படையில் சாதகம் கணித்துப் பலன் சொல்கிறார்கள். இது சோதிடர்களின் உச்ச கட்ட புரட்டு ஆகும்.

ஒரு குழந்தையின் நிறம், குணம், உடல் நலம், புத்திக் கூர்மை, ஆயுள் பலம் போன்ற குணாம்சம்கள் அந்தக் குழந்தையின் தாய் தந்தை இருவரது மரபுக் குறியே (பநநெவiஉ உழனந) தீர்மானிக்கின்றது. இதுவே இன்றைய அறிவியலின் முடிந்த முடிபாகும்.

இப்போது சென்னையிலிருந்து ஈரோட்டுக்குத் தொடர்வண்டியில்  போகும்போது தான் சந்தித்த சோதிடரிடம் சில கேள்விகளைக் கேட்டதாகவும் அந்தச் சோதிடர் சொன்ன பதில்களை கமல் என்பவர் ஒரு இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். சோதிடர், சோதிட பாடத்தில் மதுரை காமராசர் பல்கலையில் படித்துப் பட்டம் பெற்றவராம். உங்களுக்குப் பயன்படும் என்பதால் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை கீழே தந்துள்ளேன்.

கேள்வி : மற்றக் கிரகங்களோடு சூரியனும் சேர்ந்து சுற்றுகிறதே அது எப்படி?

பதில் : ஜாதகம் கணிக்கப்படுவது பூமியை அடிப்படையாக வைத்துத்தான். அதாவது புநழ உநவெசiஉ. சூரியன் நிலையாக நின்று அதைப் பூமி சுற்றினாலும் பூமியை நிலையாக வைத்துப் பார்த்தால் சூரியன் சுற்றுவது போலத்தான் இருக்கும்.

கேள்வி : ஜோதிடத்தில் இருக்கும் கோள்களின் வேகம் வானியல் கூறும் அதே வேகமா?

பதில் : ஆமாம். (ஆனால் இதை எப்படிச் சரிபார்ப்பது எனத் தெரியவில்லை. யாராவது விளக்குங்களேன்!)

கேள்வி : பூசை புனஸ்காரங்கள் எப்படி கெட்ட பலன்களைத் தடுக்கின்றன?

பதில் : கெட்ட பலன்கள் முழுவதுமாகத் தடுக்கப்படுவதில்லை. அவற்றின் வீரியத்தை ஓரளவுக்குக் குறைக்கலாம்.

கேள்வி : எந்த அளவுக்கு?

பதில் : அது அவரவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது.

கேள்வி : மற்றவர்கள் முன்னேற, ஐந்துக்கும் பத்துக்கும் பலன் சொல்லி அலைந்து கொண்டிருக்கிறீர்களே, ஏன் உங்களுடைய ஜாதகத்தை நீங்களே பார்த்துப் பரிகாரம் செய்து வாழ்வில் முன்னேறக்கூடாது?

பதில் : என் ஜாதகத்தைப் பார்த்தேன். அதில் நான் பிறருக்குப் பலன் சொல்லும் ஜோதிடனாகத்தான் இருக்கவேண்டும் என இருக்கிறது.

கேள்வி : பரந்து விரிந்த மிகப்பெரிய வான்வெளியில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் கோள்கள் எப்படி மனிதர்களின் வாழ்வில் பாதிப்பை (நல்லவை, கெட்டவை இரண்டும்தான்) ஏற்படுத்துகின்றன?

பதில் : எல்லாக் கிரகங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பவுர்ணமி அன்று கடல் கொந்தளிப்பதில்லையா? அது போலத்தான்.

கேள்வி : பவுர்ணமியில் கடல் கொந்தளிப்பது காந்தப் புலத்தின் மாற்றங்களால். எங்கோ இருக்கும் செவ்வாய்க்கும் திருமணம் நின்று போவதற்கும் என்ன சம்பந்தம்?

பதில் : இதற்குச் செவ்வாய் மட்டுமே காரணமில்லை. மற்ற அருகிலிருக்கும் கிரகங்களும்தான் காரணம். (ஆனால் எப்படியென்று அவர் கடைசி வரை கூறவேயில்லை)

கேள்வி : ஒரே பிறந்த நேரம் மற்றும் இடத்தை இருவேறு ஜோதிடர்களிடம் கொடுத்தால் இரண்டு விதமான ஜாதகங்கள் மற்றும் பலன்கள் வருகிறதே, அது எப்படி?

பதில் : ஒரே பிறந்த நேரத்துக்கு ஒரே மாதிரியான ஜாதகம்தான் வரவேண்டும். ஜாதகம் கணிப்பவர் ஒரு விநாடியை விட்டுவிட்டாலும் ஜாதகம் மாறிப்போகும். கம்ப்யூட்டர் ஜாதகத்தில் வேறுவேறு இடங்களில் கொடுத்தாலும் ஒரே மாதிரியான ஜாதகம்தான் வரும். (கணினியில் ஒரே உள்ளே புகுத்துவதை (inpரவ) எத்தனை தடவை இயக்கினாலும் அதையே வெளியில் தள்ளுகிறது (ழரவிரவ) என்பது எங்களுக்கே தெரியுமே!)

சில கேள்விகளுக்குப் பதிலே வரவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கூறுங்களேன்!

1. பிறப்பு என்பது ஒரு நொடியில் நிகழ்வதல்ல. குறைந்தபட்சம் சில விநாடிகளாவது ஆகும். அப்படியானால் பிறந்த நேரம் என்பது எது? தலை வெளிவந்த நேரமா அல்லது முழு உடல் வெளிவந்த நேரமா அல்லது முதன்முதலில் அழுத நேரமா? மருத்துவர் கூறும் நேரமா? மருத்துவர் கூறும் நேரமென்றால் அவரது கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுகிறது என்பது என்ன நிச்சயம்?

2. ஜோதிடத்தை ஒரு கணக்கு என்றே வைத்துக் கொண்டாலும், வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என்ற இருவேறு சூத்திர்ங்கள் (கழசஅரடய) எப்படி இருக்கும்? இரண்டில் எது சரி? இரண்டுமே சரியென்றால் இரண்டுக்கும் நேரவித்தியாசம் இருக்கிறதே? பலன்கள் வேறுபடாதா?

மேற்கண்ட இரண்டு கேள்விகளை நானும் எழுப்பியிருந்தேன் என்பதை இந்தத் தொடரைத் தொடக்கம் முதல் படித்து உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இப்படியான கேள்விகளுக்கு சோதிடர்கள் சொல்லும் பதில் மக்கள் சோதிடத்தை நம்புகிறார்கள். அது பொய்யென்றால் எப்படி சோதிடர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியும்? கடையை விரித்தேன் கொள்வார் இல்லை என்று சொல்லிக் கொண்டு கடையை மூடியல்லவா இருப்பார்கள்?

சோதிடம் இன்று ஒரு மிகுந்த வருவாய் தரும் தொழில் என்பதில் அய்யமில்லை. அமெரிக்காவில் இந்தத் தொழிலில் 2000 – 3000 முழுநேர சோதிடர்கள் இருக்கிறார்கள். சாதகம் பார்த்தல், கைரேகை பார்த்தல், எண்சாத்திரம் சொல்லுதல், குறி சொல்லுதல், மைபோட்டுப் பார்த்தல், தோச பரிகாரம் செய்தல் போன்றவற்றில் கோடிக்கணக்கில் டொலர் புரளுகின்றன. மனிதர்களின் மூடநம்பிக்கை அல்லது குருட்டு நம்பிக்கை இரண்டுமே இதற்குக் காரணம் ஆகும்.

கடலில் மூழ்கப்போறவன் எவ்வாறு ஒரு துரும்பைப் பிடித்துத்தன்னும் கரையேற முனைவானோ அதே போல் வாழ்வில் துன்பம், இடர், பின்னடைவு, இழப்பு, தோல்வி ஏற்படும்போது மனிதன் சோதிடர்களிடம் ஓடுகிறான். சோதிடர்களும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிப் பயமுறுத்தி அவர்களிடம் இருந்து பணத்தைக் கறந்து விடுகிறார்கள்.

இப்போது இன்னொரு சோதிடரின் புலம்பலைக் கேளுங்கள்.

மனிதனுக்கு வாழ்க்கையில் துன்பம் வரும்போது  “எத்தை தின்னாப் பித்தம் தெளியும்”னு சோசியரட்டப் போகிறான். சோசியரும் பலனைச் சொல்லும் போது (உமக்கு கூடப்பிறந்தவங்க இரண்டு அண்ணன்களும் ஒரு தங்கையும் உண்டு) ஏதாவது ஒன்று பலித்தாலும் போதும் சோதிடர் எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்கிறார் என்று சோதிடம் பார்த்தவர் முடிவு கட்டிவிடுகிறார். ஆயிரம் சொல்லி அதில் ஏதாவது ஒண்ணு பலிச்சுட்டாலும் பலிக்காத 999 அய் மறந்து விடுவதுதான் மனிதர்களின் “பெருந்தன்மை.”

மத்தப்படி மக்கள் நம்பிக்கையைப்பெற அறிவியல் ரீதியான விளக்கம்லாம் தேவைன்றது மூட நம்பிக்கை. யாராவது சும்மா “குறி” சொன்னாலே நம்பிருவாய்ங்க..

எனக்கு ஜோசியம் சொல்லித்தந்த வாத்தியாரு குழந்தை முதல் முதலா அழுத நேரம்தான் அது பிறந்த நேரம் என்று சொன்னார். இன்னொரு வாத்தியார் குழந்தை முதல்ல மூச்சுவிட்ட நேரம் – அதைத்தான் ஜாதகம் கணிக்க எடுத்துக்கிறணும் என்று சொன்னாரு. இன்னொருத்தரு வேற மாதிரிச் சொல்றாரு. ஜாதகம் கணிக்கிற கணக்கு வரைக்கும் சரியாத்தான் சொல்லித்தருகிறான்கள். பலாபலனுக்கு வரும்போது குழப்பி ஒண்ணுக்கிருந்துட்டாப் போல …………. பின்னாடி “குடும்ப ஜோதிடம்” புத்தகத்தவச்சு முடிஞ்ச அளவுக்கு எதுவெல்லாம் பொருந்தி வருமோ அதையெல்லாம் எழுதிப் பட்டமும் வாங்கினோம். (வளரும்)

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
தோசம் இருக்கிறது என்று சொல்லி பணம் பறிக்கும் சோதிடர்கள்
(33)

பெரும்பான்மை தமிழர்கள் காலம் காலமாக நம்பி வரும் சோதிட சாத்திரத்தை மறுத்து அது ஒரு போலி அறிவியல் என எண்பிக்கும் ஒரு நூலை 50 கனடிய டொலர் கொடுத்து வாங்க நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு வருவார்களா? அதிலும் 3 இலட்சம் மக்களுக்கு மூலைக்கு மூலை 60 க்கும் அதிகமான கோயில்களில் தேர், தீர்த்தம், சப்பரத் திருவிழா, அருச்சனை, அபிசேகம், விளக்குப் பூசை, சனி தோசம் நீங்க எள்ளெண்ணெய்ச் சட்டி எரித்தல் என கடைவிரித்திருக்கும் ரொறன்ரோவில் அது சாத்தியமா?

கடந்த சனிக்கிழமை (08-09-2007) நக்கீரன் எழுதி தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் மற்றும் முழக்கம் செய்தி இதழ் இரண்டும் இணைந்து நடத்திய  சோதிடப் புரட்டு நூல் வெளியீட்டு விழாவுக்குத் தமிழ்மொழிப் பற்றாளர்கள, தமிழின உணர்வாளர்கள், பகுத்தறிவுவாதிகள், சிந்தனையாளர்கள், சான்றோர்கள் எனப் பெருமளவில் கலந்து கொண்டு அது சாத்தியமே என எண்பித்தார்கள்.

கனடா கந்தசாமி கோயில் மண்டபம் மக்களால் நிரம்பி வழிந்தது. இடம் இல்லாததால் பலர் ஏமாற்றத்துடன் வீடு திருப்பினர். திரு. மா.க.ஈழவேந்தன் முதன்மை விருந்தினர் ஆகவும் சிறப்புப் பேச்சாளர் ஆகவும் கலந்து கொண்டார். “நக்கீரன் எழுதியுள்ள சோதிடப் புரட்டு என்ற ஆய்வு நூல் எமது சமூகத்தைப் பீடித்துள்ள மூடநம்பிக்கை என்ற நோயைக் குணப்படுத்த நிச்சயம் உதவும்” என திரு.மா.க.ஈழவேந்தன், நா.உ. தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

ரொறன்ரோவுக்குத் தமிழ் நாட்டில் இருந்து சோதிட இரத்தினங்கள், சோதிட பண்டிதர்கள், சோதிட சாத்திரிகள் எனத் தங்களைத் தாங்களே கூறிக்கொள்பவர்கள் படையெடுப்பதற்கு இங்குள்ள சில அங்காடி உரிமையாளர்களே காரணமாக இருக்கிறார்கள். சோதிடர்கள் என்று சொல்லாமல் இந்து குருமார் என்று பொய்சொல்லி இவர்களுக்கு இந்த அங்காடி உரிமையாளர்கள் விசா வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். அதற்கு ஊதியமாக சோதிடரின் வருமானத்தில் 20 விழுக்காட்டை வாங்கிக் கொள்கிறார்கள் என்று முன்னர் எழுதியிருந்தேன்.

மேலும் இந்தச் சோதிடர்கள் 20 டொலரை மட்டும் வாங்கிக் கொண்டு பலன் சொன்னாலும் வாடிக்கைக்காரருக்குத் தோசம் இருப்பதாகவும் கண்டம் இருப்பதாகவும் பயமுறுத்திப் பரிகாரப் பூசைக்கென மேலதிகமாக ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்து விடுகிறார்கள் என்றும் அப்படிச் சோதிடர்கள் பணம் கறந்து கொண்ட நிகழ்வுகளையும் குறிப்பிட்டிருந்தேன்.

உண்மை என்னவென்றால் சோதிடர்களின் சுரண்டல் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒருவருக்குக் கண்டம் இருப்பதாகக் கூறி சாந்தி செய்யச் சுளையாக 7,000 டொலரை அவரிடம் இருந்து ஒரு சோதிடர் பறித்துக் கொண்டார். இதைச் சொன்னவர் அந்தச் சோதிடருக்குக் கூலிக்கு அறை கொடுத்திருக்கும் அங்காடி உரிமையாளர்.

இன்னொரு சோதிடர் ஒரு பெண்ணிடம் பிரிந்து வாழும் கணவரோடு ஒன்று சேர்த்து வைப்பதாகக் கூறி 1,000 டொலரைக் கறந்து விட்டார். அவர் செய்த பரிகாரம் ஒரு கடதாசியின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவி அந்தப் பெண்ணிடம் கொடுத்து அதில் கடிதம் எழுதி அதனைக் கணவனக்கு அனுப்புமாறு சொன்னதுதான். அந்தக் கடதாசி வசியம் செய்யப்பட்டது என்று அந்தப் பெண்ணிடம் சோதிடர் புலுடா விட்டிருக்கிறார்.

எதைச் சொன்னாலும் எதை எழுதினாலும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள் சோதிடர்களைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இறை நம்பிக்கையை விட சோதிட நம்பிக்கை மக்களிடம் கூடுதலாக இருக்கிறது.

இதனால் கனடாவுக்கு இந்தியாவில் இருந்து சோதிடர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கே ஒரு மாதம் உழைக்கிற பணத்தை இங்கு ஒரு நாளில் சம்பாதித்து விடுகிறார்கள். பலன் சொல்வதில் அதிக வருவாய் இல்லை. பூசை செய்கிறோம், பரிகாரம் செய்கிறோம், சாந்தி செய்கிறோம் என்று சொல்லித்தான் இவர்கள் பணத்தை ஆயிரக்கணக்கில் கறக்கிறார்கள்.

இன்னும் 6 மாதத்தில் கண்டம் என்று ஒருவரைப் பயமுறுத்தி பரிகாரம் செய்ய சுளையாக 1,000 டொலர்களைப் சோதிடர் பிடுங்கிப்போட்டார். கணவன் – மனைவிக்குள் சிக்கல் என்று சொல்லி சோதிடரிடம் போன குடும்பம் “ஒன்றாக இருந்தால் உயிருக்கு ஆபத்து” என்று சோதிடர் வெருட்;ட இப்போது அவர்கள் நிரந்தரமாகப் பிரிந்து விட்டார்கள்!

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். பேரதெனியா பல்கலைக் கழகப் பட்டதாரி. கனடா வருமுன் உயர்ந்த அரச பணியில் இருந்தவர். அவர் சோதிடத்திலும் கைரேகை சாத்திரத்திலும் எண்சாத்திரத்திலும் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார். சுயமாக தொழில் செய்யும் இவர் தனது சாதகப் படியே எல்லாம் நடப்பதாகக் கூறுகிறார். இவரது சாதகத்தை எழுதியவர் மாத பலனை எழுதி வைத்திருக்கிறார். இது போதாதென்று கனடாவுக்கு வரும் பண்டிதர்கள், சாத்திரிகளிடமும் சாதகத்தைக் காட்டிப் பலன் கேட்பார். சாதகம் பார்க்கத் தெரியாத சோதிடர்களிடம் கைரேகை சாத்திரம் கேட்பார். எண் சாத்திரப்படி தனது பெயரில் உள்ள எழுத்துக்களையும் மாற்றி வைத்திருக்கிறார். தொழிற்பெயரும் எண்சாத்திரப்படிதான் வைத்திருக்கிறார்.

“அண்ணே நீங்கள் புத்தகங்களைப் படித்து விட்டு வீட்டில் இருந்த படி சோதிடம் புரட்டு, கைரேகை பொய், எண்சாத்திரம் புலுடா என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்த சாத்திரி ஒருவர் வந்து இருக்கிறார். ஒருவரது கையைப் பார்த்து அவரது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் அச்சொட்டாகச் சொல்கிறார். எனக்கும் சொன்னார். சொன்னதெல்லாம் சரி. நான் உங்களை அவரிடம் கூட்டிக் கொண்டு போகிறேன். ஒருமுறை உங்கள் கையைக் காட்டிப் பாருங்கள். நீங்களே மலைத்துப் போவீர்கள். அப்புறம் சொல்லுங்கள் சோதிடம், கைரேகை சாத்திரம் உண்மையா பொய்யா” என்று சொன்னார்.

“சரி, வருகிறேன். ஆனால் முன்கூட்டியே என்னைப் பற்றி சோதிடரிடம் ஒன்றும் சொல்லக் கூடாது” என்றேன்.

“அண்ணே! அப்படியெல்லாம் உங்களுக்கு துரோகம் (இரண்டகம்) செய்வேனா?’ என்றார்.

நாள்கள் நகர்ந்தன. ஆளைக் காணோம். என்ன நடந்தது என்று கேட்டேன். “அந்தச் சாத்திரி ஊருக்குப் போட்டான் அண்ணே” என்றார்.

ஓகஸ்ட் கடைசியில் ஒரு நாள். தொலைபேசி மணி ஒலித்தது. “அண்ணே! ஒரு சாத்திரி வந்திருக்கிறார். கையைப் பார்த்து அந்தமாதிரிச் சொல்கிறார். நீங்கள் வெளிகிட்டு நில்லுங்கோ உங்களை வந்து கூட்டிக் கொண்டு போகிறேன்” என்றார்.

போகும் போது தனது செல்லிடபேசியில் “சுவாமி! எனது நண்பர் ஒருவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார். இப்ப வந்தால் பார்க்கலாம்தானே?” எனக் கேட்டார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவரது துணைவியாருக்கு சோதிட சாத்திரத்தில் நம்பிக்கை இல்லை. பொதுவாக ஆண்களை விட மெல்லியரான பெண்களே மூடநம்பிக்கை உடையவராக இருப்பார்கள். இவர் வீடு அதற்கு எதிர்மாறு.

“ஒரு வாடிக்கைகாரர் இருக்கிறார். அவரைப் பார்த்தபின் உங்களது நண்பரைப் பார்க்கிறேன்” என சாத்திரி மறுமுனையில் சொன்னார்.

அங்கு போனால் யாரையும் காணோம். “சரி, சரி வாருங்கள், உட்காருங்கள்” என்று சாத்திரியும் அவரது மனைவியும் வரவேற்றனர். சாதாரண உடையில் முகத்தில் சோகத்தை அப்பிக் கொண்டு சோதிடர் முன் உட்கார்ந்தேன். பக்கத்தில் நண்பர். சாத்திரியார் சிமிழில் இருந்த குங்குமத்தை எடுத்து இரண்டுபேரது நெற்றியிலும் இட்டார்.

சும்மா சொல்லக் கூடாது. கட்டையான உருவம் என்றாலும் ஒரு அசல் மந்திரவாதி போல பகட்டாக உடை உடுத்திருந்தார். பட்டுச் சட்டை, இடையில் பஞ்சகட்சம். கழுத்தில் தங்கச் சங்கிலி, கைகளில் மோதிரம், அறை முழுதும் வேங்கடாசலபதி, அம்மன், அனுமான் படங்கள். மேசையில் அம்மன் உருவம். தட்டு நிறைய எலுமிச்சம் பழங்கள். இரண்டொரு சுரைக்காய்…… அட்டகாசமான அலங்காரம்.

எனது வலது கையைப் பிடித்தபடி ஏதேதோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார். ஒரு கைரேகை சாத்திரப் புத்தகத்தில் கீறியிருந்த கையையும் அதிலுள்ள கைரேகைகளையும் அடிக்கடி பார்த்துக் கொண்டார்.

அந்த நேரம் பார்த்து அவர் சொன்ன வாடிக்கைகாரர் வந்து சேர்ந்தார். உடனே எங்களைப் பார்த்து “சற்று நேரம் வெளியில் இருங்கள். இவரைப் பார்த்துவிட்டு உங்களைக் கூப்பிடுகிறேன்” என்றார்.

வேறு வழியின்றி நாங்கள் வெளியே சென்றோம். அந்த வாடிக்கைக்காரர் ஒரு தமிழ் இளைஞர். அவர் எங்களைப் பார்த்துச் சொன்னார் “எனக்கு நேரம் எடுக்கும். நீங்கள் உள்ளே போங்கள். நான் வெளியே போய் ஒரு கோப்பி குடித்துவிட்டு ஆறுதலையாக வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளப்பிப் போய்விட்டார்.

நாங்கள் மறுபடியும் உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டோம்.

மீண்டும் கையை உற்றுப் பார்த்த சோதிடர் “உமக்கு ஆயுள் கெட்டி. “ஏற்கனவே 3 கண்டங்கள் வந்து போயிட்டுது. இனி நீர் 97 வயதுவரை வாழ்வீர். உமது ஆயுள் ரேகை அப்படித்தான் சொல்கிறது” என்றார்.

சிறிது இடைவெளிக்குப் பின்னர் “நீர் ஒரு சிங்கம், உமது சம்பாத்தியத்தில் இராசா மாதிரி வாழ்கிறீர்” என்றார்.

நான் ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. துணைவியார் வேலை செய்வதில்லை. எமது பிள்ளைகளின் தயவில் இராசாமாதிரி வாழ்கிறோம் என்பது சரிதான்.

அடுத்துச் சோதிடர் சொன்னதுதான் நல்ல நகைச்சுவை. “நீர் ஒரு பக்திமான், உமது நெற்றியின் நடுவில் நாமக்கோடு இருக்கிறது” என்றார். சோதிடர் தெலுங்கர். தெலுங்கர்கள் வைணவ சமயத்தவர். அதனால்தான் அறை முழுதம் திருப்பதி வெங்கடாசலபதியின் படங்களை மாட்டியிருந்தார். அவருக்குத் தமிழும் இ;டக்குப் பண்ணியது

அடுத்துப் பொத்தாம் பொதுவாக எனக்கும் மனைவிக்கும் உடம்பில் நோ இருப்பதாகச் சொன்னார். இந்த அகவையில் யாருக்குத்தான் உடம்பில் நோ இல்லை? உண்மையில் அவர் எனக்கு வாதம் இருப்பதாகச் சொல்லியிருக்கலாம். வாதத்தில் 68 வகை வாதங்கள் உண்டு. எனது வயதில் அதில் ஒன்றாவது இருக்கும்!

எனது மூத்த மகனின் பெயர் அகவையைக் கேட்டறிந்து கொண்டார். இரண்டாவது மூன்றாவது பிள்ளைகளது பெயர்களையும் அகவையையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். அப்புறம் “உமக்கு 5 பிள்ளைகள். அதில் ஒன்று தவறிப் போய்விட்டது” என்றார். அது பிழை. எனது நண்பரின் முகத்தைப் பார்த்தேன். விளக்கெண்ணெய் வழிந்தது! தொடர்ந்து சோதிடர் சொன்ன பலன்கள் அனைத்துமே பிழையாக இருந்தன. (வளரும்)

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
 குருடும் குருடும் குரட்டாட்டம் ஆடுகின்றன
(34)
 
அடுத்து எனது நண்பர் “இவருக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து ஒருவர் வரவேண்டும். வருவதில் தடை….” என்று சொல்லும் போதே சோதிடரின் முகம் மலர்ந்தது.

“அவரை இங்கு வர ஒருவர் தடை செய்கிறார். ஆனால் எண்ணி 3 மாதத்தில் அவரை என்னால் இங்கே வரவழைக்க முடியும்” என்றார்.

“அவர் 3 மாதத்துக்குப் பின்னர் வந்து பலன் இல்லை. செப்தெம்பர் 08 ஆம் திகதிக்கு (சோதிடப் புரட்டு வெளியீட்டு விழா) முன் வரவேண்டும்?”

“அப்படிச் செய்ய என்னால் முடியும். இங்கிருந்து மந்திரம் சொல்லி “உஷ்” என்று சொன்னால் (சோதிடர் வாயாலும் கையாலும் நடித்துக் காட்டுகிறார்) அடுத்த கிழமையே அவர் இங்கு நிற்பார்!”

“அதற்கு என்ன பரிகாரம்? சாத்திரியைக் கேளுங்கள்” என்று எனது நண்பரிடம் மெல்லச் சொன்னேன். (எனக்குக் காது கேட்காதது போல் பாசாங்கு செய்ததால் சாத்திரியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை நண்பர் மூலமே கேட்டேன்)

“இரண்டு பேரது பெயருக்கும் பூசை செய்ய வேண்டும்”

“எவ்வளவு செலவாகும்?”

“அப்படி ஒன்றும் பெரிய தொகை இல்லை. 500 டொலர் கொடுங்கள். பணம் கொஞ்சம் ஆனால் பூசை பெரிது!”

நான் எனது பெயரையும் வெளிநாட்டில் இருந்து வருபவருடைய பெயரையும் தமிழில் எழுதிக் கொடுத்தேன். பெயர்களை அச்சுறுத்தி நான் சொல்ல சோதிடர் தெலுங்கு மொழியில் அவற்றை அதே துண்டுத்தாளில் எழுதினார்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த எனது நண்பர் உண்மையில் நான் பூசை செய்யப் போகிறேன் என்ற எண்ணத்தில் பணப் பையைத் திறந்து முற்பணம் என்று சொல்லி ஒரு 50 டொலர் தாளை எடுத்து மேசையில் வைத்தார்.

சோதிடரின் முகம் அன்றலர்ந்த தாமரை போல் மலர்ந்தது. ஆனால் அடுத்த கணம் அவரது முகம் இருண்டு விட்டது. என்ன காரணம்?

எனது நண்பர் ஏற்கனவே 21 டொலரை எனக்காக இழந்து விடடார். இப்போது மேலும் 50 டொலரை இழக்கப் போகிறார். எனது மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது.

மேசையில் நண்பர் வைத்த 50 டொலர் தாளை படாரென்று பாய்ந்து எடுத்து அவரது பைக்குள் திணித்தேன்!

“இரண்;டு நாளில் முழுப் பணத்துடன் வருகிறேன்” என்று சாத்திரியிடம் சொல்லிவிட்டு எனது நண்பரோடு கிளம்பினேன். சோதிடர் இன்றுவரை இலவு காத்த கிளி போலக் காத்திருக்கிறார்.

இப்போது எனது நண்பர் தனது பெயரை வெளியில் விட வேண்டாம், செய்தித்தாளில் எழுதிவிட வேண்டாம் என்று அழாக் குறையாகக் கேட்டுக்கொண்டு திரிகிறார்.

இந்தப் பிரபல சோதிட நிபுணர் தன்னைப் பற்றி இங்குள்ள செய்தியிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்திருக்கிறார். பெயர் பண்டித் ராமராஜீ சாத்திரி. கைரேகை, முகம் பார்த்து வருங்காலம், நிகழ்காலம் ஆகியவற்றை மிகத்துல்லியமாகக் கணித்துச் சொல்வார். இவர் பிரபல்யமான நடிகர், நடிகைகள், அமைச்சர்கள் போன்றோருக்குப் பலன் சொல்லி பாராட்டுதல்களைப் பெற்றவர் (அவர்களோடு சேர்ந்து எடுத்த படங்கள் விளம்பரத்தில் காட்சி அளிக்கின்றன) நீங்கள் அனேக சோதிடர்களைப் பார்த்திருக்கலாம். இவரை ஒருமுறை சந்தியுஙகள். அப்போது இவரைப்பற்றி அறிவீர்கள்.

திருமணத் தடைகள், குடும்பத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தீர, காதல், தொழில், வியாபாராம் ஆகியவற்றில் ஏற்படும் தடைகள் மற்றும் குழந்தைப் பாக்கியம், கண்திருஷ்டி …எதுவானாலும் இவர் பரிகாரம் செய்து வைப்பார்.

இதில் உள்ள சோகம் என்னவென்றால் மூன்றாம் உலகைச் சேர்ந்த பத்தாம் வகுப்புப் படித்த தெலுங்கர்கள் முதலாம் உலகில் வாழும் படித்த தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்துவிட்டுப் போகிறார்கள்! தமிழன் தமிழன் தலையில் மிளகாய் அரைத்தால் பருவாயில்லை. தமிழன்தானே பிழைத்துப் போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் தெலுங்கர்கள், வடநாட்டு இந்தி பண்டிதர்கள் மிளகாய் அரைப்பதைத்தான் பொறுக்க முடியாமல் இருக்கிறது. ;

இன்னொரு சோகம். நான் சோதிடப் புரட்டு நூல் வெளியீட்டு விழாவுக்கு முதன்மை விருந்தினராக அழைத்திருந்த பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுக்கு கனடா வர இசைவுச் சீட்டு கனடிய தூதுவரால் மறுக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த சாத்தரிகளுக்கு மட்டும் சுற்றுலா இசைவுச் சீட்டு வழங்கி குடும்பத்தோடு இங்கு அனுப்பி வைக்கிறார். இது எப்படி என்றுதான் தெரியவில்லை.

கைரேகையைப் பார்த்து ஒருவருக்கு எத்தனை பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு எத்தனை பிள்ளைகள், கல்வி, செல்வம், தொழில், அகவை, உடல்நலம் எல்லாம் சொல்ல முடியாது. சிலவற்றை ஊகத்தின் அடிப்படையில் சொல்லலாம். ஆனால் துல்லியமாக எதனையும் சொல்ல முடியாது. காரணம் சாதகக் கணிப்புப் போல் கைரேகைக்கும் அறிவியல் அடிப்படை கிடையாது.

கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை, பேய் பிசாசு நம்பிக்கை போன்று சோதிடமும் ஒரு நம்பிக்கைதான்.

அறிவு, அறிவீனம், நம்பிக்கை மூன்றையும் பின்வருமாறு வரையறை செய்யலாம்.

அறிவு – சோதிக்கக் கூடிய கருத்துக்கள் உறுதிப்படுத்தப்பட்டது. (உலகம் உருண்டையானது. மலேரியா நோய் நுளம்புகளால் ஏற்படுகிறது.)

அறிவீனம் – சோதிக்கக் கூடிய கருத்துக்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. (தியானம் ஒருவரை அந்தரத்தில் மிதக்க வைக்கும்.)

நம்பிக்கை – சோதனை செய்யமுடியாத கருத்துக்கள். (தேவதைகள் வலியை  உணர்வதில்லை. சனிக்கு எள்ளெண்ணைச் சட்டி எரித்தால் சனி தோசம் நீங்குகிறது. நாங்கள் வாழ்வது மற்றவர்களுக்கு உதவும் பொருட்டு. )

அறிவு, அறியாமை, நம்பிக்கை எல்லாம் ஒரே மாதிரியானவை அல்ல. அவ்வாறே விழுமியங்களும் (values) மெய்மைகளும் (facts) ஒன்றல்ல.

சோதிடர்கள் சோதிடத்தை விழுமியமாகக் கருதி அது உண்மை என்கிறார்கள். அறிவியலாளர்கள் சோதிடத்தை மெய்மையின் அடிப்படையில் பார்த்து அதைப் புரட்டு என்கிறார்கள்.

இதுகாறும் சொல்லியவற்றால் சோதிடம் ஒரு போலி அறிவியல் என்பது தெளிவாகிறது. பின் ஏன் எமது மக்கள் உடும்புப் பிடியாக அதைப் பிடித்துக் கொண்டு திரிகிறார்கள். எல்லாம் பழக்க தோசம்தான்.

“தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் என்று பஞ்தந்திரம் நகைக்கிறது” என்று பாரதியார் ‘தமிழருக்கு’ என்ற கட்டுரையில் (பாரதியார் கட்டுரைகள் – பக்கம் 134) சொல்வது முற்றிலும் உண்மை.

தமிழர்கள் திருமணம் என்று வரும்போது பொருத்தம் பார்க்காமல் செய்வதில்லை என முன்னரே (அத்தியாயம் 25) குறிப்பிட்டுள்ளேன்.

மீண்டும் அந்தப் பொருத்தங்கள் எவையென்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(1) கிரகப் பொருத்தம்
(2) நட்சத்திரப் பொருத்தம்
(3) கணப் பொருத்தம்
(4) மகேந்திரப் பொருத்தம்
(5) பெண் தீர்க்கப் பொருத்தம்
(6) யோனிப் பொருத்தம்
(7) இராசிப் பொருத்தம்
(8) இராசியதிபதி;ப் பொருத்தம்
(9) வசியப் பொருத்தம்
(10) இரச்சுப் பொருத்தம்
(11) வேதைப் பொருத்தம்
(12) விருஷப் பொருத்தம்
(13) ஆயுள் பொருத்தம்
(14) புத்திரப் பொருத்தம்

பொருத்தம் பார்ப்பதில் கூட சோதிடர்களிடம் ஒத்த கருத்தில்லை. சிலர் பத்துப் பொருத்தங்கள் பார்த்தால் போதும் என்பார்கள். ஒரு சோதிடர் நட்சத்திரம், கணம், யோனி, இராசி, இரச்சு ஆகிய அய்ந்தும் முக்கியம் என்பார். அது மட்டும் அல்லாமல் பிராமணருக்கு அதிபதியும் சத்திரியருக்குக் கணமும் வைசிகருக்கு பெண் தீர்க்கமும் சூத்திரருக்கு யோனியும் முக்கியமாகப் பொருந்த வேண்டும்.

பத்துப் பொருத்தங்களில் அய்ந்துக்கு மேல் பொருந்தின் உத்தமம். அய்ந்து பொருந்தின் மத்திமம். அதற்கும் குறைந்தால் அதர்மம்.

நட்சத்திரங்களைக் கொண்டறியப்படும் பொருத்தங்களிலும் கிரகநிலையைக் கொண்டறியும் பொருத்தமே முக்கியமானது என வாக்கிய பஞ்சாங்கம் (பக்கம் 24-26) கூறுகிறது.

அண்மையில் எனக்குத் தெரிந்த குடும்பங்களுக்கு இடையே திருமணப் பேச்சு நடந்தது. மாப்பிள்ளை – பெண் இருவருமே மருத்துவத்துக்குப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் இலங்கை பேரதெனியா பல்கலைக் கழகத்திலும் மாப்பிள்ளை அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றிலும் படிக்கிறார்கள். படிப்பு முடிய இரண்டொரு ஆண்டுகள் இருக்கின்றன.

மாப்பிள்ளை – பெண் இருவருக்கும் இடையில் 1) குடிப்பிறப்பு (2) ஒழுக்கம் (3) ஆள்வினையுடமை (4) அகவை (5) வடிவு  (6) காமஒழுக்கத்துக்குரிய உள்ளக் கிளர்ச்சி (7) சால்பு – நற்குணம் (8) அருளுடமை (9) உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு (10) தெய்வப் பொலிவு எனப் பத்துப் பொருத்தங்களும் பொருந்தி இருந்தன. இருந்தும் திருமணப் பேச்சு இடைநடுவில் முறிந்து போயிற்று. என்ன காரணம்?

நீங்கள் ஊகித்திருப்பீர்கள். சாதகம் பொருந்தி வரவில்லை. மாப்பிள்ளை வீட்டார் சாதகத்தைக் கொடுத்துப் பொருத்தம் பார்த்தபோது 70 விழுக்காடு பொருத்தம் என்று சாத்திரி சொன்னார். ஆனால் பெண்வீட்டார் சாதகம் கொடுத்துப் பார்த்த சாத்திரி நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்ற ஒரே காரணத்தால் பொருத்தம் அடியோடு இல்லை என்று தள்ளிவிட்டார். மற்றப் பொருத்தங்களை அவர் பார்க்கவே இல்லை.

மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்த அடிப்படையில் சோதிடர் திருமணப் பொருத்தம் 70 விழுக்காடு உண்டு என்று சொன்னார் என்பது தெரியாது. அது போலவே பெண் வீட்டாருக்கு நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்று சோதிடர் சொன்னது தெரியும். எந்த அடிப்படையில் என்பது தெரியாது.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் பொருத்தம் பார்ப்பது குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடுகின்றன. (வளரும்)

இந்தப் பொழுது (26-2-2012) ரொறன்ரோவில் கூடாரம் அடித்து கடை விரித்திருப்பவர்களது பட்டியல் இதோ:

1) ஓம் சிவா துர்க்கா ஜோதிட நிலையம் – பண்டித் குருஜி Shri Shiva Sai Astrological Bureau – பண்டிட் சிவராம்

2) குருஜி சிறீ கருமாரி அம்மன் ஜோதிடாலயம் – பால அகஸ்தியன்
3) World Famous Astrology Special Buddha Jyothissam – பண்டிட் குருமகராஜ் மற்றும் காலபைரவி சுவாமி. Specialist in Black Magic and We Give Results in 24 Hrs

4) Divya Jyothi Astro Centre – World Renowned Indian Astrologer – Pandit Ravindra. Expert in Horoscope, Palmistry – Numerology – Face Reading – Pandit Ravindra. Specialist in 100% Removal Black Magic & Bad Luck, Negativity, witchccraft, Voodoo, Obeya, Evil Spirits and He gives Protection.

5) Hai Hanuman Shirdi Sai Baba Jyotish Mandir – Pandit Deevanand Maharaj. He can handle any kind of problems. Visit to Know Past, Present and Future.

6) Sri Hanuman Astroger Center – Pandit Shankar – மிகத் துல்லியமான முறையில் உங்கள் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவும் மற்றும்…….

7) Durga Mata Jyotish Mandir – Pandit Bholenath. உங்களுடைய வேலை, கல்வி, பணம், திருமணம், தொழில், காதல், வீடு, உடல் நலம், செக்ஸ் சம்பந்தமான பிரச்சனைகள், வழக்கு, குடும்ப, நோய்கள், வெளிநாடு, அரசியல், சினிமா சம்பந்தமான பிரச்சனைகள், பேய் பிசாசுகள் பிரச்சனைகள் பூஜையின் மூலம் இல்லாமல் செய்யப்படும்.

8) Shiva Kali Astrologer and Love Pshchic – Pandit Srinivas. 33 years experience and Senior Person Removing Black Magic

9) Para Sakthi Astrorlogy Center – Pandit Manjunatha Swamy.

இந்த 9 விளம்பரங்களும் ஒரே வார ஏட்டில் வந்தவை. இந்தப் பெயர்களைப் பார்த்தால் எல்லாம் தெலுங்கு அல்லது வடநாட்டுப் பெயர்களாக இருக்கின்றன. தமிழன் பிறவியிலேயே இளித்தவாயன் அவன் தலையில் அதுவும் கனடிய தமிழன் தலையில்தான் சுலபமாக மிளகாய் அரைக்கலாம் என்று இந்தச் சோதிடர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். வார ஏடுகளும் பணத்துக்காக இந்த விளம்பரங்களை வெளியிடுகின்றன. அவற்றுக்கு சமுதாயம் எக்கேடு கெட்டாலும் பருவாயில்லை தங்கள் பணப் பெட்டியை நிரப்பினால் போதும் என்று நினைக்கின்றன. இந்த அழகில் தலையங்கம் மூலம் ஊருக்கு உபதேசம் செய்யும் தொழிலையும் செய்கிறார்கள்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply