Political Column by Nakkeeran 2006 (1)

தமிழகத்தில் அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்
நக்கீரன்

தமிழ் நாட்டுத் தேர்தல் திருவிழா என்பது ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்றது. திரைப்படத்தில் சிரிப்பு, அவலம், இழிபு, வியப்பு, பயம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி முதலிய எட்டுச் சுவைகளைச் சித்தரிக்கும் காட்சிகள் இருக்கும். தமிழ் நாட்டுத் தேர்தலிலும் அவை நிறைய உண்டு.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நாள் குறிப்பிடப்படாவிட்டாலும் தேர்தல் நடைபெறும் நாள் மே 8 என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. மே 11 ஆம் நாள் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பது தெரிந்துவிடும்.

திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்து விட்டாலும் எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

அதிமுக கூட்டணியிலும் இதே நிலைமை தான் நீடிக்கிறது. எல்லாக் கட்சிகளுமே வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக இருக்கும் தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்கின்றன. தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலுக்கு இதுதான் ஏதுவாகும்.

அதிமுக வேட்பாளர்களைப் பொறுத்தளவில் அவர்களது பெயர்கள் அடங்கி பட்டியலை ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா கோயில் கோயிலாக எடுத்துச் சென்று விக்கிரகங்களது பாதங்களில் வைத்து  பூசை செய்கிறார்! இப்படிச் செய்தால் அதிமுக வேட்பாளர்களது  வெற்றிக்குக் கடவுள் அருளுவார் என்பது நம்பிக்கை.

மழைக்கு முளைக்கும் காளான்கள் போல் தேர்தல் காலத்தில் பல கட்சிகள் முளைத்துள்ளன. தீரனின் மக்கள் பாட்டாளிக் கட்சி; திண்டிவனம் ராமமூர்த்தியின் இந்திரா காங்கிரஸ், விஜய ராசேந்திரரின் இலட்சிய திமுக தொகுதிகளுக்காக பொயஸ் தோட்டத்தில் பழி கிடக்கின்றன.

அதிமுக அவர்களுக்கு பிச்சை போடுவதுபோல ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கிக் கொடுக்கிறது. தீரன், திண்டிவனம் ராமமூர்த்தி போன்றோர் தொகுதி ஒதுக்கீட்டுக்குத் தொடர்ந்து தோட்டத்தில் தவம் இருக்கிறார்கள். நரிக்குறவர்கள் கூடத் தங்கள் இனத்துக்கு ஒரு தொகுதி கொடுங்கள் எனக் கேட்டுத் தோட்டத்தில் முகாம் அடித்துக் காத்திருக்கிறார்கள்!

தேர்தல் காலத்தில் இடம்பெறும் கட்சித் தாவல்கள் தொடர்கின்றன. காங்கிரஸ் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் அதிமுக வில் சேர்ந்துள்ளார்.

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) அதிமுக விடம் 2 தொகுதிகள் கேட்டு வாங்கி தேர்தலில் போட்டியிடுகிறது! தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை 234 தொகுதிகளிலும் போட்டி போடப் போவதாக அறிவித்துள்ளது!

கடந்த பெப்ரவரி 24 ஆம் நாள் கலைஞர் கருணாநிதியை தொகுதி உடன்பாடு பற்றிச் பேசிய பின்னர் “கலைஞர் கருணாநிதியை அடுத்த முதலராக்குவோம்” என்று செய்தியாளர்களிடம் அறிவித்த மதிமுக பொதுச் செயலர் திமுக கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்தார். வைகோவின் தாயார்  “நூறு சீட் கொடுத்தாலும் எனது மகன் அந்த அம்மாவோடு சேர மாட்டான்” என விகடன் கிழமை இதழுக்கு செவ்வி கொடுத்தார். ஆனால் மார்ச்சு 4 ஆம் நாள் வைகோ தோட்டத்துக்குச் சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து 35 தொகுதிகளை வாங்கிக் கொண்டு அதிமுக கூட்டணியில் சேர்ந்து கொண்டார்.

இதன் மூலம் வைகோ அதிமுக அணியில் சேர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று செய்தித் தாள்களில் வலம் வந்த ஊகங்கள் உண்மையாகி விட்டன.

கடந்த இரண்டு மாதங்களாகவே திமுக கூட்டணியா? அதிமுக கூட்டணியா? என வைகோ ஊசலாடிக் கொண்டிருந்தார். அதனால் முதல்வர் ஜெயலலிதாவை விமர்ச்சிப்பதை அவர் தவிர்த்து வந்தார்.

கட்சிகள் கூட்டணி மாறுவது என்பது தமிழ்நாட்டில் மிக மிக சாதாரண நிகழ்ச்சியாகும். திமுக – அதிமுக கூட்டணி மட்டும் இன்னும் ஏற்படவில்லை. மற்றப்படி கட்சிகள் மாறி மாறிக் கூட்டணி வைத்துள்ளன.

1967 இல் அண்ணா தலைமையிலான திமுக இராசாசியின் சுதந்திரா கட்சியோடு கூட்டணி வைத்துத்தான் ஆட்சியைப் பிடித்தது. 1977 ஆம் ஆண்டு தொடக்கம் அமைந்த கூட்டணி எவையெவை என்பதை கீழ்க் கண்ட அட்டவணை காட்டுகிறது.

கட்சிமாறுவதும் கூட்டணி மாறுவதும் இயல்பு என்றாலும் தன்னை 18 மாதங்கள் சிறைக் கொட்டிலில் அடைத்து வைத்த ஜெயலலிதாவோடு வைகோ கூட்டணி வைத்துக் கொண்டதுதான் பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக ஜெயலலிதா தன்னைத் தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரியாகவும் விடுதலைப் புலிகளின்  கடும் எதிர்ப்பாளராகவும் காட்டி வந்திருக்கிறார். தேசியத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்த வேண்டும் எனச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ‘பெருமை” அவரைச் சாரும். பொடாவில் வைகோ, பழ.நெடுமாறன், சுப வீரபாண்டியன் போன்றோரை சிறையில் அடைத்த ‘புகழும்’ அவரையே சேரும்!

‘லட்சியத்தில் உறுதி’  ‘பொதுவாழ்வில் தூய்மை’ ‘அரசியலில் நேர்மை’ வைகோ அடிக்கடி சொல்லும் முழக்கங்கள்.

“நாகரிக அரசியல் என்பது அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படுகிற அபூர்வப் பொருளாகி விட்ட இந்தக் காலத்தில வைகோ ஒரு நிகழ்கால அதிசயம்”இந்த வாசகம் எல்லோரும் பார்க்கக் கூடியதாக வைகோ வீட்டில் சுவரில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதுகால வரை வைகோ ஒரு நேர்மையான அரசியல்வாதி,  கொண்ட கொள்கைக்காக சிறைச்சாலையை தவச்சாலையாக எண்ணிச் சிரித்த முகத்துடன் செல்லக் கூடியவர் (24 முறை சிறை சென்றுள்ளார்) அடக்குமுறைக்கு அஞ்சாதவர் என்ற படிமம் இருந்தது. அது இனி என்னாகுமோ என்பதுதான் அவரது ஆதரவாளர்களது கவலை.

சிறையில் இருந்த பொழுதும் சிறையில் இருந்து வெளிவந்த பின்னரும் ஜெயலலிதாவை மிகக் கடுமையாகக் கண்டித்தவர். சூடான வார்த்தைப் பதங்களைப் பயன்படுத்தியவர்.

‘மக்கள் என்னும் சக்தியைத் திரட்டி இந்தப் பாசிச ஆட்சியைத் தூக்கி எறிவேன்” இது  சென்னை விமான நிலையத்தில் (2002 யூலை 11)  வைத்து காவல்துறையால் பொடாவில் கைது செய்யப்பட்டபோது வைகோ ஆவேசமாக இட்ட முழக்கம்.

”தமிழ்நாட்டை வாழ வைக்க ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி பேசும் ஜெயலலிதாவை அரசியலை விட்டு விரட்டுவேன்”  இது பொடா நீதிமன்றத்துக்கும் வேலூர் சிறைக்கும் வானில் வந்து போன போது வைகோ பேசியது.

இப்படியலெ;லாம் பேசிவிட்டு ‘தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு அற்புதமான நிகழ்வு. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, அதிமுகவின் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்.’ போயஸ் தோட்டத்து படிக்கட்டுகளில் முதல்வர் “புரட்சித்தலைவி” ஜெயலலிதாவின் பக்கத்தில் நின்ற பேசியது.

“வைகோவின் நண்பர்கள் சரி எதிரிகள் சரி அரசியல் அவரது அரசியல் நகர்வை சந்தர்ப்பவாதம் என்றே நினைக்கிறார்கள்” என ஒரு ஏடு வர்ணித்துள்ளது.

மதிமுக அதிமுக வோடு கூட்டணி சேர்ந்ததற்குத் தொண்டர்கள் மத்தியல் ஆதரவு உண்டுபோல் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தேர்தல் முடிந்த பின்னரே தெரியவரும்.

“பண்டாரப் பரதேசிகள்” என்றும், “நச்சரவங்கள்’ என்றும் பாஜா வை விமர்சித்து விட்டு, அதே பாஜ அமைச்சரவையில் திமுக இடம் பெறவில்லையா? முரசொலி மாறன் மறைகிற வரை அமைச்சரவையில் நீடித்துவிட்டு அவரது இறுதி சடங்கிற்கு வாஜ்பாய் வந்து சென்ற பிறகு, பாரதிய ஜனதாவுக்கு டாட்டா காட்டிவிட்டு காங்கிரஸ் பக்கம் திமுக தாவவில்லையா? இதற்கெல்லாம் பெயர் என்ன? அவர்கள் எல்லாம் செய்தது ராஜதந்திரம் நான் எடுத்த முடிவு மட்டும் சந்தர்ப்பவாதமா…?’ இவ்வாறு மதிமுக செயலர் வைகோ சூடாகக் கேட்டுள்ளார். இரண்டு பிழைகள் ஒரு சரியாகிவிடாது என்பதுதான் இதற்கான விடை! அதுவும் வைகோ அந்தப் பிழையை விடக் கூடாது என்பதுதான் தமிழ்த் தேசியவாதிகளின் ஆசையாகும்.
ம.தி.மு.க.  பொது செயலர் வைகோ திமுக வுடன் ஆன கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு ஒரேயொரு தொகுதி வித்தியாசம்தான் காரணம் என்பதை நினைக்கும் போது அதைக் கொடுத்து கலைஞர் கருணாநிதி வைகோவைத் தன்னோடு வைத்திருந்திருக்கலாம் எனச் சொல்லத் தோன்றுகிறது.

‘மதிமுக வுக்கு 22 தொகுதிகளே ஒதுக்க முடியும் விரும்பினால் அதை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் நீடிக்கலாம் இல்லாவிட்டால் அவர்கள் போகலாம்” என்று கலைஞர் கருணாநிதி எடுத்தெறிந்து பேசியது அவரது அரசியல் முதிர்ச்சியையோ இராதந்திரத்தைகோ கிஞ்சித்தும் காட்டவில்லை. அகம்பாவத்தைத்தான் அவரது பேச்சுக் காட்டியது.

மதிமுக வுக்கு ஒதுக்கிய 22 தொகுதிகள் இப்போது ஏனைய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி கூட்டணிக் கட்சிகளுக்கு 105 தொகுதிகள் (காங்கிரஸ் 48, பாமக 31, கம்யூனிஸ்ட் (மா) 13, கம்யூனிஸ்ட் (இ) 10 முஸ்லிம் காங்கிரஸ் 3) ஒதுக்கியது போக மீதம் 129 தொகுதிகளே திமுக வுக்கு எஞ்சியுள்ளன. இவற்றிலும் 4  தொகுதிகளை சேதுராமன், ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களுக்கு வழங்கினால்  திமுக போட்டியிடும் தொகுதிகள் 125 மட்டுமே.

திமுக தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 125 தொகுதிகளில் 118 தொகுதிகளை வெல்ல வேண்டும். அதாவது 94.4 விழுக்காடு தொகுதிகளை வெல்ல வேண்டம். இது சாத்தியப்படாது என்பது நிச்சயம்.

கடந்த 2001 ஆம் நடந்த  சட்டசபைத் தேர்தலில் இதே திமுக 167 தொகுதிகளில் போட்டியிட்டது. இது தவிர உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 183 தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்தத் தொகுதிப் பங்கீடு திமுக தேர்தலுக்குப் பின்னர் ஒரு கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்துவிட்டதைக் காட்டுகிறது. இவ்வாறான எண்ணம் தொடக்கத்திலேயே வந்திருந்தால் மதிமுக வுக்கு மேலும் 2 அல்லது 3 தொகுதிகளைக் கொடுத்து அந்தக் கட்சியை கூட்டணியோடு வைத்திருந்திருக்கலாம்.

மதிமுகவும் சிறுத்தைகளும் அதிமுகவோடு சேர்ந்தாலும் வி.புலிகளுக்கு வழங்கும் ஆதரவில்; மாற்றம் இல்லை என வைகோவும் திருமாவளவனும் அறிவித்துள்ளார்கள். அது மனதுக்கு ஆறுதலையாக இருந்தாலும் அது நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

வைகோ அணிமாறியது சனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை. மதிமுக சனநாயக முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து இருப்பதை எதிர்க்கப் போவதாக கலைஞர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். அவ்வாறு மதிமுக சனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் வைகோவிற்கு பிரதமர் மான்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா போன்றவர்களிடம் தற்போது இருக்கும் செல்வாக்கு சரிந்து போய்விடும் என்பதில் அய்யமில்லை. அது தமிழ்த் தேசியத்துக்கு நிச்சயம் பின்னடைவைக் கொடுக்கும்.

தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தளவில் தமிழ்த் நேசியத்தை நேசிக்கும் அனைத்துக்  கட்சிகளும் ஒரு குடையின் கீழ் திரள்வதையே தமிழ் உணர்வாளர்கள் விரும்புகிறார்கள். பாமக மற்றும் திக ஒரு அணியிலும் மதிமுக மற்றும் சிறுத்தைகள் இன்னொரு அணியிலும் எதிரும் புதிருமாக நிற்பதை அவர்கள் விரும்பவில்லை.

இந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு வேட்பாளர்கள் பாமக வேட்பாளர்களோடு மோதப் போகிறார்கள். அது நடக்கக் கூடியதுதான் என்பதை “பாமக போட்டியிடும் தொகுதிகளில் வி.சிறுத்தைகள் அமைப்பு போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் கூட்டணி ‘தர்மமப்படி’ செயல்படுவோம்” என திருமாவளவன் சொல்லியிருப்பது உறுதி செய்கிறது. சிறுத்தைகள் மட்டுமல்ல மதிமுகவும் பாமக வோடு மோத நேரிடலாம்.

இந்தத் தேர்தலில் முன் எப்பொழுதையும் விடத் திரைப்பட நடிகர்களின் கையோங்கியுள்ளது. நடிகர் விஜயகாந்த், நடிகர் கார்த்திக், நடிகர் விஜய இராசேந்தர் தனிக் கட்சிகளுக்குத் தலைமை தாங்குகிறார்கள். நடிகர் விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் போட்டி போடப் போவதாகவும் ஊழலை ஒழிக்கப் போவதாகவும் மேடைகளில் வசனம் பேசுகிறார்.

நடிகர் விஜயகாந்த் நடிகர் கார்த்திக் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். இது தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து திரைப்பட மோகத்தில் மூழ்கி இருப்பதைக் காட்டுகிறது. புலம் பெயர்ந்த தமிழர்களிடையும் இந்த நோய் இல்லாமல் இல்லை. அதற்குச் சில ஊடகங்கள் தீனி போடுகின்றன என்பதுதான் சோகம்!

மே 8 இல் நடக்கும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க  வாயப்பில்லை. பெரும்பாலும் கூட்டணி ஆட்சியே உருவாகும் என்றே நம்பப்படுகிறது. திமுக இப்போதே அதற்குத் தயாராகிவிட்டது. (உலகத்தமிழர் – மார்ச்சு 17, 2006)


சுதந்திரத்தை நோக்கி நடைபோடும் கொசொவோ  
நக்கீரன்

கொசொவோவின் எதிர்கால அரசியல் மற்றும் அதன் சட்டத் தகுநிலை (status)  பற்றி சேர்பியர் மற்றும் அல்பேனியர் ஆகிய  இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சு வார்த்தை வியனாவில் கடந்த பெப்ரவரி 26 தொடக்கம் நடைபெற்று வருகிறது. கொசொவோ ஒரு முழு அளவிலான சுதந்திர நாடாக மாற்றம் பெற வேண்டுமா அல்லது சேர்பியா-மொன்ரெநீக்றோ (Serbia – Montenegro) குடியரசின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட வேண்டுமா என்பதை இந்தப் பேச்சு வார்த்தை முடிவு செய்ய இருக்கிறது. பேச்சு வார்த்தை நடத்தும் இரு தரப்பினருக்கும் இடையில்  அய்க்கிய நாடுகள் அவை இடையீட்டளாராக (Mediator) இருந்து வருகிறது.

கொசொவோ கடந்த 7 ஆண்டுகளாக (1999 தொடக்கம்)  அய்க்கிய நாடுகள் அவையால் நிருவகிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பினரும் தத்தம் பக்க நிலைப்பாட்டை மணித்தியாலக் கணக்கில் எடுத்துப் பேசினார்கள். குறிப்பாக கொசொவோவில் வாழும் சேர்பியர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களில்  கல்வி, நல்வாழ்வு (Health) மற்றும் பண்பாடு போன்ற துறைகளில் எந்தளவு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேற்கு நாட்டு இராசதந்திரிகள் இறுதித் தீர்வு கொசொவாவின் உறுதித்தன்iiயையும் அதன் செயல்பாட்டினையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார்கள்.

கொசொவோவின் மொத்த மக்கள் தொகை 20 இலக்கம் ( 2 million) ஆகும். இதில் அல்பேனியர்கள் 90 விழுக்காடு! சேர்பியர் 8 விழுக்காடு ஆகும்.

கொசொவோ தனிநாடு கேட்டுப் போராடிய போது அவர்களது போராட்டத்தை முறியடிக்க அன்றைய சேர்பிய நாட்டு ஆட்சித் தலைவராக இருந்து ஸ்லோபடன் மிலோசெவிக் (Slobodan Milosevic) இராணுவத்தைக் கொண்டு அடக்க முற்பட்டார். அதனை நிறுத்த நேட்டோ நாடுகள் சேர்பியா மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.

அந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து பட்டார்கள். இலக்கக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். சண்டை முடிந்த போதும் சேர்பியர்களும் அல்பேனியர்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பகை உணர்வோடு பிரிந்தே வாழ்ந்தார்கள்.

அய்க்கிய நாடுகள் அவை சார்பாக முன்னாள் பின்லாந்து நாட்டுப் பிரதமர் Martti Ahtisaari  அவரது உதவியாளர்   Albert Rohan    பங்கு கொள்கிறார்கள்.

அய்க்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் உருசியா நாடுகளைச் சேர்ந்த இராசதந்திரிகளும் இந்தப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்கிறார்கள். இந்த நாடுகள் கொசொவோவின் எதிர்காலம் பற்றித் தமக்குள் கலந்து பேசி ஒருமுகப்பட்ட முடிவை எட்டியுள்ளன.  அதன்படி கொசொவோ மறுபடியும் சேர்பியாவோடு இணைக்கப்படமாட்டாது. அதே சமயம் கொசொவோ வேறு எந்த நாட்டுடனோ, எடுத்துக்காட்டாக அல்பேனியாவோடு, சேரவும் அனுமதிக்கப் படமாட்டாது. எந்த உடன்பாடு கண்டாலும் அது கொசொவோ மக்களது ஆதரவைப் பெற வேண்டும்.

சேர்பியாவைப் பொறுத்தளவில் ஒரு சுதந்திர கொசொவோ பற்றிப் பள்ளிக்கூடங்களும் தேவாலயங்களும் பேசுவதில்லை. சேர்பிய நாட்டு ஊடகங்களும் அதுபற்றி விவாதிப்பதில்லை.
அய்ரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கொசொவோவை சேர்பியா மீண்டும் ஆள நினைப்பதை மறந்து விட வேண்டும் என்கிறார்கள். அதே நேரம் பெரும்பான்மை கொசொவோ அல்பேனியர்கள் சிறுபான்மை கொசோவோ சேர்பியர்களோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருமாறும் வற்புறுத்தி வருகிறார்கள். அப்படிச் செய்தால் மட்டுமே ஒரு உறுதியான, மக்களாட்சியை மதிக்கும் பல்லின கொசொவோவை உருவாக்க முடியும் என அய்ரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் OlliRegn அறிவுரை வழங்கியுள்ளார். சேர்பியா கொசொவோவை மீண்டும் ஆள வேண்டும் என்ற நினைப்பைக் கைவிட்டு விட வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார்.

நேட்டோ நாடுகள் சேர்பியா மீது தாக்குதல் நடத்திய போது அன்றைய யூகோசிலாவியா  நாட்டின் ஆட்சித் தலைவர் ஸ்லோபொடன் மிலோசொவிக் (Slobodan Milosevic) சண்டையை நிறுத்துவதற்கு அவமானமான நிபந்தனைகளை ஏற்க வேண்டி இருந்தது. அதே சமயம் கொசொவோ விடுதலை இராணுவம் சுதந்திர கொசொவோ பற்றிய தீர்மானம் தள்ளிப்பட்டுப் போனதினால் கவலை அடைந்தது. அதற்கு மேலாக கொசொவோ விடுதலை இராணுவம் ஆயுதங்களைக் கீழெ வைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அது விரும்பவில்லை.

கொசொவோ  அய்க்கிய நாடுகள் அவையின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டாலும் நேட்டோ நாடுகளது படைகளே அங்கு நிலைகொண்டு இருந்தது. கொசொவோ அய்க்கிய நாடுகள் அவையின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் அங்கே காலப் போக்கில் மக்களாட்சிக்கு வேண்டிய நிலையான அமைப்புக்களைக் (iளெவவைரவழைளெ)  கட்டி எழுப்புவதே ஆகும்.

பண்டைக் காலத்தில் கொசொவோவில் வாழந்தவர்கள் கிரேக்கர்களாலும் உரோமர்களாலும் இலிறியன்ஸ் (Illyrians) என்று அழைக்கப்பட்டார்கள். அந்தப் பிரதேசம் மகா அலெக்சாந்தரால் கிமு 300 ஆண்டளவில் கைப்பற்றப்பட்டது. கிபி 4 ஆம் நூற்றாண்டளவில் அது உரோம பேரரசின் ஒரு பகுதியாக இருந்து வந்தது.

கிபி 6 ஆம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து டனூப் ஆற்றைக் கடந்து சிலாவ்ஸ் கொசொவோ பிரதேசத்தில் குடியேறினார்கள். இந்தப் புலப்பெயர்வு அன்றைய பைசாந்தியம் பேரரசை (Byzantium  Empire)  பலவீனப் படுத்த உதவியது. இதனால் இலிறியன்ஸ் அட்றியாரிக்கில் (Adriatic)  இருந்து கிழக்கு நோக்கி கொசொவோ பக்கம் நகர்ந்தார்கள். அவர்களது மொழி அல்பேனியாவோடும்  அவர்களது பண்பாடு கத்தோலிக்க மதபீடம் கிழக்கு மற்றும் மேற்குக் கிளைகளாகப் பிரிந்த பின்னர் (கிபி 1054) பைசாந்தியத்தோடும் கலந்து கொண்டன.

போல்க்கன் (Balkans) பகுதிக்குப் புலம் பெயர்ந்த சிலாவ்ஸ் சிலோவன்ஸ், குறோட்ஸ், சேர்ப்ஸ் என மூன்று பிரிவினராகப் பிரிந்தார்கள். இந்தப் பிரிவு இன்றும் நீடிக்கிறது. 12 ஆம் நூற்றாண்டளவில் இந்தப் பிரதேசம் வட அல்பேனியா என்று அழைக்கப்பட்டது. கொசொவோ சிலாவிக்கியர்களது கையில் சிக்கி இருந்தது.

14 ஆம் நூற்றாண்டில் கொசொவோ சேர்பியர்களால் “பழைய சேர்பியா” என அழைக்கப்பட்டது. ஆனால் கிபி 1389 இல் சேபியர் ஒட்டாமன் துருக்கியர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அது முதல் கொசொவோ ஒட்டாமன் பேரரசின் ஒரு உறுப்பாக வந்தது. அல்பேனியர்கள் 15 ஆம் நூற்றாண்டில் மீண்டும் கொசோவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். கிபி 1489 இல் ஒட்டாமன் பேரரசு அந்தப் பகுதியின் இறைமையைக் கையில் எடுத்துக் கொண்டது.

இந்தக் கட்டத்தில் பெரும்பான்மை அல்பேனியர்கள் கிறித்தவர்களாவே காணப்பட்டார்கள். அதனால் சேர்பியர்களும் அல்பேனியர்களும் பேரளவு ஒற்றுமையோடு வாழ்ந்தார்கள். ஆனால் நாளடைவில் அல்பேனியர்கள் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.

சிறுபான்மை சேபியர்களும் மதம் மாற்றம் செய்யப்பட்டார்கள். ஆனால், பெரும்பான்மையோர் மதமாற்றத்தை விரும்பாமல் சேர்பியன் பழமைவாத தேவாலயம் (Serbian Orthodox Church)   என்ற அமைப்பை உருவாக்கினார்கள். ஒட்டமான் துருக்கியர்களது தாக்குதல் காரணமாக சேர்பியர்கள் அல்பேனியாவில் இருந்து வெளியேறினார்கள். இதனால் கொசொவோமக்கள் தொகை வெகுவாகக் குறைந்து போய்விட்டது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அல்பேனியர்கள் அங்கே குடியேறினார்கள்.

கொசொவோ உட்பட சேர்பியா ஒட்டமான் துருக்கியர்களால் 1459 இல் கைப்பற்றப்பட்டது. கிபி 1465 இல் பொஸ்னியாவும் 1483 இல் ஹேர்ஸ்கொவினாவும் (Herzegovina) கைப்பற்றப்பட்டன.

ஒட்டமான் பேரரசு இஸ்லாமிய அரசாக இருந்ததால் அதன் ஆட்சியில் யூதர்களும் கிறித்தவர்களும் அடக்குமுறைக்கு ஆளானார்கள். அதிக வரி கட்டக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அடிமைகள் போல்  மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள். அதன் பின்னர்  அய்ந்து நூற்றாண்டு காலத்துக்கு ஒட்டமான் பேரரசின் இரும்புப் பிடிக்குள் அது வைக்கப்பட்டிருந்தது.  கிபி 1912 இல் போல்கன் யுத்தத்தை அடுத்து சேர்பியா சுதந்திரம் அடையும்வரை இந்த நிலை நீடித்தது.

இஸ்லாமிய மதவாத ஒட்டமான் பேரரசின் அடக்குமுறைக்கு ஆளான சேர்பியர் நகரங்களைவிட்டு நீங்கி மலைப்பிரதேசங்களில் குடியேறி வாழ்ந்தார்கள். நகரங்களில் வாழ்ந்தபோது கைவினைப் பொருட்கள், சுரங்கவேலை மற்றும் வணிகம் முதலிய தொழில்கள் செய்து பிழைத்த சேர்பியர்கள் புதிய சூழலில் கால்நடை வளர்த்தல், விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபட்டார்கள்.

அய்ரோப்பிய நாடுகளும் அவுஸ்திரியாவும் (யுரளவசயை) துருக்கிக்கு எதிராக ஒட்டமான் பேரரசின் கீழ் வாழ்ந்த சேர்பியர்களது உதவியுடன் பல யுத்தங்களை நடத்தின. துருக்கி-அவுஸ்திரியா இடையில் நடந்த யுத்தத்தின்போது (1593-1605) சேர்பியர்கள் துருக்கிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள். பதிலடியாகத் துருக்கி சுல்தான் சேர்பியர்களால் போற்றப்படும் பரி.சாவா (ளுவ. ளுயஎய) அவர்களது உயிரற்ற உடலைக் கொளுத்தி அழித்தான்.

சேர்பியர்கள் ஹேர்ஸ்கொவினா  என்ற பிரதேசத்தில் இன்னொரு எதிர்ப்பு மையத்தை உருவாக்கித் துருக்கிக்கு எதிராகச் செயல்பட்டார்கள்.

ஆனால் யுத்தத்தை நிறுத்த துருக்கியும் – அவுஸ்திரியாவும் உடன்படிக்கை செய்து கொண்டபோது சேர்பியர் தங்கள் எதிர் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டி நேரிட்டது. இப்படி யுத்தம், அமைதி உடன்படிக்கை, மீண்டும் யுத்தம் என்ற வழமை அடுத்த பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது.

1683 – 1690 இல் துருக்கிக்கும் அவுஸ்திரியா, போலந்து மற்றும் வெனிஸ் நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பெரிய யுத்தம் நடந்தது. அவுஸ்திரியா, போலந்து மற்றும் வெனிஸ் நாடுகளுக்கு இடையிலான புனித கூட்டணியை (Holy Alliance) போப்பாண்டவரே உருவாக்கி இருந்தார். இந்தப் புனித கூட்டணி நாடுகள் சேர்பியரை துருக்கிக்கு எதிராகக் கிளர்ந்து எழுமாறு தூண்டியது. சேர்பியர்களது கிளர்ச்சி போல்கன் பிரதேசம் முழுதும் பரவியது. சேர்பியர்கள் துருக்கிக்கு எதிராகக் கரந்தடித் தாக்குதலில் ஈடுபட்டார்கள்.

ஒரு கட்டத்தில் அவுஸ்திரியா தனது படையைப் பின்வாங்க முடிவு செய்தது. அப்போது சேர்பியர்களை வடக்கு நோக்கித் தனது பிரதேசத்துக்கு வருமாறு அவுஸ்திரியா கேட்டுக் கொண்டது. துருக்கியின் அடக்குமுறை ஆட்சியில் அடங்கி ஒடுங்கி வாழ்வதா அல்லாது பிறந்த மண்ணை விட்டு வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து வாழ்வதா என்று தீர்மானிப்பது சேர்பியர்களுக்கு இலகுவாக இருக்கவில்லை. இறுதியில் பெரும்பான்மையினர் (சுமார் 30,000 – 40,000 குடும்பங்கள்) இடம் பெயர்வது என முடிவுக்கு வந்தார்கள்.

சேர்பியர்கள் விட்டு நீங்கிய பிரதேசம் வெறிச்சோடியது. இதுதான் தருணம் என்று எண்ணிய துருக்கி எஞ்சியிருந்த பிரதேச (கொசொவோ, மஸ்டோனியா….) மக்களை இஸ்லாமிய மதத்தை தழுவமாறு அழுத்தம் கொடுத்து அதில் வெற்றியும் கண்டது. இன்று போல்க்கன் பிரதேசத்தில் கணிசமான முஸ்லிம்கள் இருப்பதற்கு இந்த வரலாற்றுப் பின்னணிதான் காரணம்.

துருக்கி – அவுஸ்திரிய நாடுகளுக்கு இடையில் யுத்தம் (1716-1718) மீண்டும் மூண்டது. இம்முறையும் சேர்பியர்கள் அவுஸ்திரியா பக்கம் நின்று போராடினார்கள். யுத்தம் பொஸ்னியா, ஹெர்ஸ்கொவினா, பெல்கிறேட், டனூப் பள்ளத்தாக்கு (Danube basin) எங்கும் பரவியது. யுத்த முடிவில் ஒரு அமைதி உடன்பாடு துருக்கிக்கும் அவுஸ்திரியாவுக்கும் இடையில் எழுதப்பட்டது. இந்த உடன்படிக்கையின் விளைவாக துருக்கி டனூப் பள்ளத்தாக்கு, வட சேர்பியா, வட பொஸ்னியா போன்ற இடங்களை முற்றாக இழந்தது.

அவுஸ்திரியா – துருக்கி இடையிலான கடைசி யுத்தம் 1788 – 1791 இல் நடந்தது. அந்த யுத்தத்திற்குப் பெயர் டுபிக்கா போர் (Dubica War) என்பது. இந்தமுறையும் அவுஸ்திரியர் துருக்கிக்கு எதிராகக் கிளர்ந்து எழுமாறு பொஸ்னியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

1877 ஏப்றில் 12 ஆம் நாள் சேர்பியாவும் மொன்ரெநீக்கிறோவும் ஒட்டமான் பேரரசின் மீது போர்ப் பிரகடனம் செய்தன. அதே சமயம் உருசியாவை ஆண்ட இரண்டாவது அலெக்சாந்தர் ஒட்டமான் பேரரசுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தார். 1878 பெப்ரவரி 19 இல் உருசியப் படைகள் டுநஎயெ என்ற நகரைக் கைப்பற்றியது. அதே ஆண்டு உருசியா – ஒட்டமான் பேரரசு இரண்டுக்கும் இடையில் அமைதி உடன்படிக்கை கைச்சாத்தானது.

சேர்பியா, மொன்ரெநீக்றோ மற்றும் றோமேனி;யா நாடுகளின் சுதந்திரத்தை ஒட்டமான் பேரரசு அங்கீகரித்தது.

பின்னர் 1912 இல் சேர்பியாவிற்கும் துருக்கிக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் துருக்கியின் எச்ச சொச்ச ஆட்சி முற்றாக முடிவுக்கு வந்தது. முதலாவது உலக மகா யுத்தம் தொடங்கியபோது  போல்க்கன் பிரதேசம் சிறு சிறு நாடுகளாகச் சிதறுண்டு கிடந்தன.

1914 யூன் 14 இல் அவுஸ்திரிய மன்னர் யுரளவசயைn யுசஉhனரமந குசயணெ குநசனiயெனெ பொஸ்னியன் சேர்பியர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை முதலாவது உலக மகா யுத்தத்திற்கான கொடியேற்றம் ஆக அமைந்தது.

யுத்த முடிவில் வெற்றி பெற்ற நட்பு நாடுகள் போல்க்கன் பிரதேசத்தை கூறுபோட முனைந்தன. அதற்காக அவுஸ்றோ – ஹங்கேரி பேரரசு (Austro-Hungarian Empire)  துண்டாடப்பட்டது. 1918 இல் சேர்பியர், குரோசியர், பல்N;கரியன்ஸ், அல்பேனியன்ஸ், மசிடோனியன்ஸ் ஒன்றாக இணைந்து சேர்பியர்களின் இராச்சியம்   (Kingdom of Serbs) என்ற அரசை உருவாக்கினார்கள். பின்னர் 1929 ஆம் ஆண்டு அது யூகோசிலாவியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யூகோசிலாவியா என்றால் தென் ஸ்லாவ் அரசு  (South Slav State)  என்று பொருள் படும்.

1934 ஆம் ஆண்டு யூகோசிலாவியா மன்னர் அலெக்சாந்தர் மசிடோனியா புரட்சிவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து போல்க்கன் நாடுகளில் புரட்சி இயக்கங்கள், தேசிய இயக்கங்கள் தலைதூக்கின.

இரண்டாவது உலக யுத்தத்தின்போது நாசி ஜெர்மனி அய்ரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து அவற்றை ஆக்கிரமித்தபோது யூகோசிலாவியா இனக் குழுக்களிடம் பிளவு ஏற்பட்டது. பாதிப் பேர் ஜெர்மனியரை “விடுவிப்பாளர்” (Liberators)  எனக் கூறி வாழ்த்தி வரவேற்றனர். மீதிப் பேர் நாசி ஜெர்மனியை எதிர்த்தனர்.

ஜெர்மனியின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இரண்டு கெரில்லா இயக்கங்கள் போரிட்டன. அதில் ஒன்று மார்ஷல் யோசிப் புறஸ் ரிட்ரோ (Josip Broz Tito)  தலைமையில் சோவியத் நாட்டின் ஆதரவோடு போரிட்டது.

1943 ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ரிட்ரோ தலைமையில் சேர்பியா, குரோசியா, ஸ்லோவினா, பொஸ்னியா – ஹெர்ஸ்கொவினா, மசிடோனியா, மொன்ரெநீக்றோ குடியரசுகள் அடங்கிய சமவுடமை யூகோசிலாவிய இணைப்புக் குடியரசு (Yugolovia Federal Socialist Republic)  பிரகடனப் படுத்தப்பட்டது. சனாதிபதி ரிட்ரோ கலப்பு இனத்தவர். இந்தக் குடியரசில் சேர்பியர்களே பெரும்பான்மை இனத்தவராக விளங்கினார்கள்.

1974 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் யாப்பு குரோசியர், ஸ்லோவினியர்கள், முஸ்லிம்கள் மற்றும் அல்பேனியர்களது தேசிய உணர்வையும் பிரிவினை உணர்வையும் அதிகரிக்க வழிகோலியது.

1980 இல் அதிபர் ரிட்ரோ காலமானார். அவரது மறைவோடு இரும்புப் பிடிக்குள் அவர் வைத்திருந்த யூகோசிலாவியா குடியரசு சிதற ஆரம்பித்தது.

சேர்பியாவில் வாழ்ந்த அல்பேனிய சிறுபான்மையினர் தங்களுக்கு யூகோசிலாவியா குடியரசின் கீழ் தன்னாட்சி வேண்டும் என்று வலியுறுத்திப் போராடினார்கள்.

1889 இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (1990) சோவியத் ஒன்றியம் உருக் குலைந்தது. 1991 டிசெம்பர் 8 இல் சோவியத் ஒன்றியம் 74 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசமுறையாகக் கலைக்கப்பட்டது. அதற்கு ஈடாக 12 சுதந்திர நாடுகளின் பொதுநல அமைப்பு உருவாகியது.

இவற்றால் யூகோசிலாவியாவின் அரசியல் ஒருமைப்பாடு ஈடாடிப் போனது. யூகோசிலாவியாவில் உறுப்புரிமை வகித்த குரோசியாவும் ஸ்லோவேனியாவும் முறையே யூன் 25, 1991 இல் சுதந்திரப் பிரகடனம் செய்துவிட்டுத் தனி நாடுகளாகப் பிரிந்தன. இந்த இரண்டு நாடுகளையும் அய்க்கிய .நாடுகள் அவை 1992 சனவரியில் புதிய நாடுகளாக அங்கீகரித்தது.
1991 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் மசிடோனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது. சண்டை இல்லாமல் அமைதி வழி யூகோசிலாவியாவில் இருந்து பிரிந்த ஒரே நாடு மசிடோனியாதான்.

இதனைத் தொடர்ந்து பொஸ்னியா 1992 பெப்ரவரி மாதத்தில் தன்னைச் சுதந்திரநாடாகப் பிரகடனப்படுத்தியது. அதே ஆண்டு ஏப்ரில் மாதத்தில் அதற்கு அய்க்கிய நாடுகள் அவையின் அங்கீகராரம் கிடைத்தது. அதே சமயம் யூகோசிலாவியா (எஞ்சிய) அய்க்கிய நாடுகள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இன்று  சேர்பியா – மொன்ரெநீக்றோ இரண்டும் மட்டுமே பழைய யூகோசிலாவியா குடியரசில் எஞ்சி இருக்கும் நாடுகள் ஆகும்.

மிக விரைவில் கொசொவோவும் சுதந்திர நாடாகத் தோற்றம் பெற்றுவிடும் என்பதில் எந்தவித அய்யமும் இல்லை.

நாடுகள் உள்நாட்டு விவகாரம், இறைமை, பிரதேசக் ஒருமைப்பாடு, இறைமை என்ற வேலிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இனப் படுகொலை நடாத்த முடியாது. அதனை உலக நாடுகள் (அமெரிக்கா உட்பட ) அனுமதிக்கவில்லை.

சுண்டைக்காய் நாடுகள் கூட சுதந்திர நாடுகளாகத் தோற்றம் கொள்ளலாம்! அவற்றின் உருவத்துக்கும் சுதந்திரத்திற்கும் தொடர்பு இல்லை.

இன்று உலகத்தில் சிறுபான்மை தேசிய இனங்களைச் சார்ந்த 80 கோடி மக்கள் தங்கள் சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் போராடிவருகிறார்கள்.

புலம், வரலாறு, மொழி, பண்பாடு இவற்றின் அடிப்படையில் தேசிய இனங்களாகக் கணிக்கப்படும் ஒவ்வொரு இனத்துக்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்படவேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே நிரந்தர உலக சமாதானத்தை உருவாக்கலாம்.

அய்க்கிய நாடுகள் அவை தோற்றம் பெற்றபோது அதில் உறுப்புரிமை வகித்த நாடுகளின் எண்ணிக்கை வெறுமனே 51 மட்டுமே. இன்று அதன் எண்ணிக்கை 191 ஆகும்.  கடந்த 12 ஆண்டுகளில் (1990-2002) அய்யன்னா  அவையின் உறுப்பினர் தொகை 159 இல் இருந்து 191 ஆக உயர்ந்துள்ளது.

நாடுகளின் தொகை கூடியதால் வானம் இடிந்து விழுந்துவிட வில்லை. அல்லது பூமி பிளந்து விடவில்லை. மாறாக நாடுகளின் அதிகரிப்பு உலக அமைதிக்கு வழிகோலியுள்ளது.

அய்க்கிய நாடுகள் அவையில் தமிழீழத்தைவிடப் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் குறைந்த 38 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.

இந்த வரலாற்று உண்மைகளை சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள அரசியல் கட்சிகளும் செரித்துக் கொண்டால் இனச் சிக்கலுக்குக் குருதி சிந்தாது அமைதியான வழியில் தீர்வு காண முடியும். (உலகத்தமிழர் – மார்ச்சு 10, 2006)


உள்நாட்டுப் போருக்குத் தயாராகும் இராக்
நக்கீரன்

இன்றைய இராக்  பண்டைய காலத்தில் தலைசிறந்த ஒரு நாகரிகத்தின் தொட்டில் ஆக விளங்கியது.

ரைகிறிஸ் மற்றும் யுபிரட்டிஸ் (Tigris and Euphrates)  ஆறுகள் ஓடும் அன்றைய மெசொப்பொட்டாமிய (Mesopotamia) எகிப்து, கிரேக்கம், உரோம் நாடுகள் நாகரிகம் அடையுமுன்னரே (கிமு 4,000) நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தது.

மெசொப்பொட்டாமியாவில்  வாழ்ந்த சுமேரியர்கள் எழுத்தைக் கண்டு பிடித்து வணிகத் தரவுகளை களிமண்ணில் பதித்து வைத்தார்கள். கிமு 3,000 ஆண்டளவில் முழு அளவிலான நெடுங்கணக்கை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

ரைகிறிஸ் மற்றும் யுபிரட்டிஸ் ஆறுகளின் நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தார்கள். உலக வரலாற்றில் சுமேரியர்களே தங்களது தேவைக்கு அதிகமான உபரி உணவை முதன் முதல் உற்பத்தி செய்தவர்கள் என்ற பெருமைக்கு உரியவர்கள்.

இன்றைய இராக் நாட்டில் குருதி ஆறு ஓடுகிறது. கடந்த 2003 ஆண்டு மார்ச்சு மாதத்தில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இராக் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் போர் காரணமாக 30,000 – 100,000 பொதுமக்கள் அநியாயமாக இறந்து பட்டிருக்கிறார்கள்.

இதுகால வரையில்; அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான கெரிலாத் தாக்குதல்களை ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத மூன்று பிரிவினர் நடாத்தி வந்தார்கள்.

(1) சதாம் குசேனின் ஆதரவாளர்கள்.
(2) அமெரிக்க படையினரை நம்பிக்கை ஈனர்கள் எனக் கருதும் இஸ்லாமிய அடிப்படை வாதிகள்.
(3) இராக்கின் விடுதலைக்காகப் போராடும் இராக்கிய தேசியவாதிகள்.

இப்போது இராக்கிய சுன்னி மதப் பிரிவினரும் சியா மதப் பிரிவினரும் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி உயிர்ப் பலி எடுத்து வருகிறார்கள்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் பக்தாத்துக்கு வடக்கே 100 கிமீ தொலைவில் உள்ள சமாரா நகரில் இருந்த பொன்மசூதி சுன்னிகளால் குண்டு வைத்துத் தகர்கப்பட்டது. அதனை அடுத்து சுன்னி-சியா மதப்பிரிவினரிடையே இடம்பெற்று வரும் மோதல்களில் இதுவரை 500 கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பக்தாத்தில் நேற்று (மார்ச்சு 02) நடந்த தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். சுன்னி மதப் பிரிவினரின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அட்னன் – அல் – துலாய்மி பயணம் செய்த வண்டி மீது மேற்கொண்ட தாக்குதலில்  அவர் மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்.

சுன்னி – சியா மதப் பிரிவினருக்கு இடையில் நடைபெறும் தாக்குதல் – எதிர்த்தாக்குதல் இராக்கை ஒரு முழு அளவிலான உள்நாட்டுப் போருக்குத் தள்ளிவிடக் கூடிய அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது.

சதாம் குசேயின் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த இராக் இன்று அமளி துமளிப் பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான பயங்கரவாதம் அதற்கு முக்கிய காரணியாகும்.

பொது எதிரியான அமெரிக்காவுக்கு எதிராகப் போராட வேண்டிய இராக் மக்கள் எதற்காக தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஏனைய மதங்களைப் போலவே இஸ்லாம் மதத்திலும் சியா – சுன்னி என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இராக்கின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் சியா, 35 விழுக்காட்டினர் சுன்னி மதப் பிரிவினர் ஆவார்.

ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகச்  சிறுபான்மை சுன்னி மதப்பிரிவினரே ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கைக்குள் வைத்திருந்தார்கள். இராக்கின் முன்னாள் சனாதிபதி சதாம் குசேன் சுன்னி மதப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

சியா- சன்னி இரு பிரிவினரும் முகமது நபிகள் நாயகத்தை இறை தூதராகவும் குர்ரானை இறைநூலாகவும் ஏற்றுக் கொண்டவர்கள். இருந்தும் இராக் நாட்டில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும்  சியா- சுன்னி மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

சியா – சுன்னி இரு மதப்பிரிவினரும் இஸ்லராம் மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை (Five Pillard) ஏற்றுக் கொள்கிறார்கள். அவையாவன –

(1)    அல்லாவை விட வேறு கடவுள் இல்லை.  முகமது நபிகளே அல்லாவின்  கடைசி இறை தூதர் ஆவார்.
(2)    ஒரு நாளில் ஐந்து முறை மெக்காவை நோக்கி தொழுதல் வேண்டும்.
(3)    இராமதான் மாதத்தில் நோன்பு அனுட்டிக்க வேண்டும்.
(4)    வருவாயில் 2.5 விழுக்காடு தர்மத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
(5)    உடல்;நலம் உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் மெக்காவிற்கு யாத்திரை செய்ய வேண்டும்.

சியா மதப்பிரிவினரின் பொன்மசூதி சுன்னிகளால் தாக்கப்பட்டதை அடுத்து 90 சுன்னி மசூதிகள் சியா மதப் பிரிவினரால் தாக்கிச் சேதப்படுத்தப் பட்டுள்ளன.

பொன்மசூதியில் முகமது நபிகளின் வாரிசுகளான இருண்டு இமாம்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல இந்த மசூதிக்கு அருகிலேயே 12 சியா இமாம்களின் கடைசி இமாமான முகமது – அல் மாடி காணாமல் போனதாக சியா மதப்பிரிவினர் நம்புகிறார்கள். இந்த அல் மாடி அஸ்காரிய மசூதியில் புதைக்கப்பட்டுள்ள .இரண்டு இமாம்களின் மகன் – பேரன் ஆவார். சியாக்கள் அல் மாடி மறைத்து வைக்கப்பட்டுள்ளார் அவர் வெளிவந்து உலகில் நீதியை நிலைநாட்டுவார் என்று நம்புகிறார்கள்.

இமாம் அல் மாடி பற்றிச் சுன்னிகளது கருத்தியல் வேறுவிதமானது. அவர்கள் மாடிகள் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறந்து தங்களைப் பகைவர்களிடம் இருந்து காப்பாற்றுவார்கள் என நம்புகிறார்கள். வேறு சிலர் முஸ்லிம் உலகம் முற்றுகைக்கு உட்படும் என்றும் அப்போது யேசுநாதர் தோன்றுவார் என்றும் நம்புகிறார்கள்.

பல  நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வரும் சியா-சுன்னி மோதல்களுக்கு இந்த அல் மாடி காணாமல் போனதும் ஒரு ஏதுவாகும்.

இந்த இரண்டு மதப் பிரிவினருக்கும் இடையில் உள்ள மிதவாதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போனாலும் கடும் போக்காளர் அவ்வப்போது தங்களுக்குள் கடுமையாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். சவுதி அரேபிய நாட்டு வாகாபிஸ் மற்றும் சலாபிஸ் போன்ற சுன்னி கடும் போக்காளர்கள் சியா மதப் பிரிவினரை மதவிரோதிகள் என நினைக்கிறார்கள். ஆனால் இலட்சக்கணக்கான சியா பிரிவினர் மக்காவிற்கு கஜ் யாத்திரை மேற்கொள்வதை சவுதி அரேபியா அனுமதிக்கிறது.

சியா- சுன்னி மோதல் 7 ஆம் நூற்றாண்டு தொடங்கி இடம்பெற்று வருகிறது. முகமது நபிகள் இறந்த போதே இந்த மோதல் தொடங்கி விட்டது. சிலர் முகமது நபிகளின் மருமகன் அலி ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் பெரும்பான்மையினர் முகமது நபிகளின் ஆப்த நண்பர் அபூபக்கர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாதிட்டார்கள். அபுபக்கருக்குப் பின்னர் அலி  4 ஆவது கலிவ் ஆகப் பதவிக்கு வந்தார்.

அலியின் ஆட்சிக் காலத்தில் சிரியாவை ஆண்ட ஆளுநர் யெசித் (ஆளுநர் முவியாவின் மகன்)  கலிவ் அலியோடு முரண்பட்டுக் கொண்டார். யெசித்தோடு பேசி ஒரு இணக்கத்துக்கு வர அலியின் மகன் குசேன் (முகமது நபியின் பேரன்) தலைமையில் ஒரு குழு சிரியா சென்றது. ஆனால் நிராயுதபாணிகளான குசேனின் குழு கர்பாலா நகரில் (இராக்) இரவில் முகாமிட்டு இருந்த போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டது. அதில்  குசேன் உட்பட பலர் கொல்லப்பட்டார்கள். ஒரு சிலரே குசேனின் மகனனோடு உயிர்தப்பி மக்கா திரும்பினர். இவர்களே தங்களைச் சியா என்று கூறிக் கொண்டனர்.

முகமது நபிகளின் தலைமுறை கிபி 873 இல் முடிவுக்கு வந்தது.

அல் மகாடி 4 வயதில் இமாம் ஆக பதவி ஏற்றபோது மறைந்த போனார். ஆனால் சியா பிரிவினர் அவர் இறக்கவில்லை எங்கோ மறைத்துவைக்கப்பட்டிருக்கிறார் ஒரு நாள் திரும்பி வருவார் என்று நம்பினார்கள்.

பல நூற்றாண்டு காலமாக அல் மாதி திரும்பி வராததால் சியாப் பிரிவைச் சேர்ந்த 12 உலாமாக்கள் கூடி ஒரு தலைமை இமாமைத் தங்கள் ஆன்மீகத் தலைவராகத் தெரிவு செய்தார்கள்.

இன்று இரானில் ஆன்மீகத் தலைவராக இருக்கும் அயத்தொல்லா கொமேனி (Ayyatollah Khomeni)  அவ்வாறு தெரிவு செய்யப்டவர் ஆவார்.  இவரது படம் சியா மதப் பிரிவினரின் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க மதத்தினருக்குப் போப்பாண்டவர் எப்படியோ அப்படியே சியா மதப்பிரிவினருக்கு அயத்தொல்லா விளங்குகிறார். அவர் பிழைவிட முடியாதவர் என்றும் சமயம் பற்றிய அவரது தீர்ப்பே இறுதியானது என சியா மதப்பிரிவினர் நம்புகிறார்கள். உலகில்  இரான் மட்டுமே சியா மதப்பிரிவினர் பெரும்பான்மையாக வாழும் நாடாக விளங்குகிறது. சியா மதப்பிரிவினர் அலியைப் பெரிதும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

சியா மதப்பிரிவினரோடு ஒப்பிடும் போது சுன்னி மதப் பிரிவினர் புறட்டஸ்தான் மதப் பிரிவைப் போன்றது. அவர்களுக்கு மதத் தலைவர்கள் கிடையாது.

இராக்கில் சியா – சுன்னி மதப்பிரிவினர் இடையே இடம்பெற்று வரும் கடும் மோதல்களுக்கு அமெரிக்க படையெடுப்பே காரணமாகும். சதாம் குசேன் ஆட்சியின் போது அப்படியான மோதல்கள் இடம் பெற்றது கிடையாது.

பொன்மசூதியைத் தாக்கியவர்கள் அல் கெயிடா தீவிரவாதிகள் என நம்பப்படுகிறது. ஆனால் அவர்களை வழிநடத்துபவர்கள் என்று நம்பப்படும் ஒசமா பின் லேடன் சுன்னிகள் சியா மதத்தவரைத் தாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

பொன்மசூதி தாக்கப்பட்டதற்குப் பின்னால் இஸ்ரேலும் அமெரிக்கா தலைமையிலான அந்நிய நாட்டுப் படைகளும் காரணம் என இரான் நாட்டு ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா கொமேனி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க இராணுவ கல்லூரியின் சார்பில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று சியா- சுன்னி மதப் பிரிவினரிடையே மத வேறுபாட்டை விதைத்து மதக் கோட்பாட்டு மோதலை வளர்க்க வேண்டும் என அமெரிக்காவைக் கேட்டுள்ளது.

இஸ்லாம் ஏனைய மதங்கள் போலல்லாது மிகவும் கட்டுக் கோப்பான மதமாகும். இஸ்லாம் மதத்தில் அரசு வேறு பள்ளிவாசல் வேறு என்ற பிரிவு கிடையாது. பொதுவாக வெள்ளிக்கிழமைத் தொழுகை;குப் பின்னரே முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன.

மது அருந்தல், புகைத்தல் முஸ்லிம்களுக்கு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியரின் மதநூலான குர்ரான் அல்லாவால் கபிரியல் என்ற தேவதூதர் மூலம் முகமது நபிக்கு ஓதப்பட்டது என்பது நம்பிக்கையாகும். குர்ரான் எழுத்துரு பெற்றபின்னர் அதில் ஒரு கால்புள்ளி கூட மாற்றப்படவில்லை!

மசூதிகளில் வழிபாடு அரபு மொழியிலேயே நடை பெறுகிறது. அதற்காக முஸ்லிம் பிள்ளைகளுக்கு அரபு மொழி இளவயதில் பெற்றோர்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறது. எந்த இனத்தவராக இருந்தாலும் முஸ்லிம் மதத்தவர் அரபு மொழிப் பெயர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்.

குர்ரானில் உலகம், உயிர், கடவுள் இவற்றுக்கு இடையிலான உறவுகள் பற்றிச் சிக்கலான  தத்துவங்கள் பேசப்படவில்லை. இஸ்லாம் மிகவும் எளிமையான மதமாகும்.

இராக், லெபனன், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் மதம்சார்ந்த மோதல்கள் இஸ்லாம் மதத்திற்குக் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இஸ்லாம் மதம் வன்முறையை வளர்க்கிற அல்லது ஊக்குவிக்கிற தீவிரவாத மதம் என்ற படிமம் ஏற்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டு செய்தி இதள்களில் முகமது நபிகளை ஒரு பயங்கரவாதி போன்று சித்தரித்து எழுதப்பட்ட கேலிச்சித்திரங்களுக்கு எதிராகத் தீவிரவாத முஸ்லிம்கள் பல நாடுகளில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தீ வைப்பு, கொலை போன்ற வன்முறையில் முடிந்தன. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு மதத் தலைவரை பயங்கரவாதிகயாகச் சித்தரித்து அந்த மதத்தைச் சார்ந்தவர்களின் மனதைப் புண்படுத்துயதை யாரும் எற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே சமயம் அந்தக் கேலிச்சித்;திரம் வரைந்த சித்திரக்காரரது தலைக்கு 10 இலட்சம் விலை பேசுவதையும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

நல்லகாலமாக முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராக முஸ்லிம் அறிஞர்கள் கல்விமான்கள்  குரல் கொடுக்கத்; தொடங்கியுள்ளார்கள்.

“பாசிசம், நாசிசம் மற்றும் ஸ்டாலினிசம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த பின்னர் உலகம் இப்போது புதிதாக இஸ்லாமிசம் என்ற சர்வாதிகாரத்தை எதிர்நோக்குகிறது.
எழுத்தாளர்கள், செய்தியாளர்கள், அறிவிப்பிழைப்பாளர்கள் ஆகிய நாங்கள் மத சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் சுதந்திரம், சமவாய்ப்பு, மதசார்பின்மை போன்ற விழுமியங்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தீவிரஇஸ்லாம் என்பது பிற்போக்குக் கோட்பாடாகும். அது சமத்துவம், சுதந்திரம் மற்றும் மதசார்பின்மையைக் கொல்கிறது. அதன் வெற்றி உலக மேலாண்மை, பெண்கள் மீதான  மேலாண்மை, தீவிரஇஸ்லாமின் மேலாண்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

நாங்கள் எல்லாக் கண்டங்களிலும் எண்ணச் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க விரும்புகிறோம். நாங்கள் இஸ்லாமிய விரோதிகள் எனக் குற்றம்சாட்டப்படுவோம் என்ற பயத்தில் எதனையும் நுணுகி ஆராய்ந்து பார்ப்பதைக் கைவிட்டு ஒதுங்க நாம் தயாரில்லை.

இந்த அறிக்கையில் 6 அறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள். அவர்களில் சாத்தானின் பாடல்கள் (ளுயவயniஉ ஏநசளநள) எழுதிய சல்மான் ருஷ்டி, பெண்ணியவாதி தஸ்லிமா நஸ்றீன் அடங்குவர்.

எல்லா மதங்களும் அன்பு, அறன், அருள் போன்ற மனித விழுமியங்களைப் போதித்தாலும் நடைமுறையில் அவற்றைக் காண்பது அரிதாக இருக்கிறது. அதற்கு அதிக தூரம் போக வேண்டியதில்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்த புத்தரின் மஞ்சள் அங்கி அணிந்த சீடர்கள் ஸ்ரீலங்காவில் போர்ப்பறை கொட்டுவதைப் பார்த்தாலே தெரிந்துவிடும். (உலகத்தமிழர் – மார்ச்சு 03, 2006)


 

சூடு பிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்

நக்கீரன்

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, பரப்புரை என இப்போதே தயாராகிவிட்டன. தேர்தலுக்கான நாள் இன்னும் அறிவிக்கப் படவில்லை. எப்படியும் தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் அல்லது அதற்கு முன்னதாக நடந்தே ஆகவேண்டும்.

தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைமையிலான 7 கட்சிக் கூட்டணிக்குள் இழுபறி  நிலவுகிறது. எல்லாக் கட்சிகளுமே தங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று அடம் பிடிக்கின்றன.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக குறைந்தது 138 தொகுதிகளை தனக்கு வைத்துக்கொள்ள விரும்புகிறது. எஞ்சிய 96 தொகுதிகளை ஏனைய கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். ஆனால் அதில்தான் சிக்கல் இருக்கிறது.

கூட்டணிக் கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றன என்ற பட்டியலைத் தருமாறு திமுக கேட்டுள்ளது. பாமக தவிர ஏனைய கட்சிகள் பட்டியலைக் கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன. இருந்தும் இந்தக்  கட்சிகள் தங்கள் பட்டியலை விரைவில் கொடுக்கும் என்று திமுக எதிர்பார்க்கிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டம் 17 ஆம் நாள்; காலை அண்ணா அறிவாலத்தில் கருணாநிதி தலைமையில் நடக்க இருக்கிறது இந்த கூட்டத்தில் திமுக மற்றும் கட்சிகள் கொடுக்கும் பட்டியலைச் சரிபார்த்துப் .போட்டியிட விரும்பும் தொகுதிகள் பற்றிக் கலந்து பேசி முடிவு எடுக்கப்படலாம்.

திமுக கூட்டணியில் ம.திமுக நீடிக்குமா இல்லையா என மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ள நிiலில் மதிமுக திமுக கூடணியில் தான் தொடர்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் மதிமுக வின் இரண்டாம் மட்டத்  தலைவர்களின் பேச்சு வேறு விதமாக உள்ளது.

ம.திமுக கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் தற்போதுள்ள கூட்டணி குறித்து வாய் திறக்காமல் ஜெயலலிதா குறித்தும் குறைகூறாமல் பாம்பும் சாகவேண்டும் தடியும் முறியக் கூடாது என்பது போல் மதிமுக அணி மாறுவதை உறுதிப்படுத்தும் தோரணையில் பேசியுள்ளார்.

உடுமலை  அருகேயுள்ள கணியூர் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசும்போது “தமிழகத்தில் ம.திமுக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. இதைப் பயன்படுத்தி இந்த முறை வாணிகம் செய்யலாம் என்று உள்ளோம். நாங்கள், என்ன விவசாயிகளா? பாடுபட்டு விதைத்து, இடையில் வெட்டுக் கிளிகள் அரித்து, இறுதியில் வணிகர்கள் இலாபம் பார்ப்பதற்கு? அதற்காக நாங்கள் தனித்து நிற்க மாட்டோம்.  நிச்சயம் கூட்டணிதான்” எனப் பேசியிருக்கிறார்.

இதற்கிடையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் அதிமுக வைகோவிற்கு வலை வீசி வருகிறது. இன்னாள் அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவருமான கே. காளிமுத்து துரியோதனர்களோடு சேர்ந்திருக்கும் வைகோ என்ற கர்ணன் பாண்டவரிடம் வந்து சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். காளிமுத்துவின் பேச்சுக்கள் திமுக வட்டாரத்தில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக அதிமுகவோடு சேரும் பட்சத்தில் 50 தொகுதிகள் வழங்கப்படும் என்றும் தேர்தல் செலவையும் அதிமுக பொறுப்பேற்கும் என்ற பேச்சும் காற்றில் அடிபடுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக திருவண்ணாமலையில் நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய காளிமுத்து தான் வைகோவிடம் தொலைபேசியில் பேசி வருவதாகவும் வைகோ கருணாநிதிபற்றி சொன்னவை வெளியில் சொல்லமுடியாதவை என்றும் பேசியிருக்கிறார்.

“அவதூறான பேச்சுக்களை காளிமுத்து அடிக்கடி பேசி வருவது மக்களிடம் தேவையில்லாத சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. தில்லியில் செவ்வியளித்த நண்பர் வைகோ திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ள சூழ்நிலையில் காளிமுத்துவின் இத்தகைய பேச்சுக்களுக்கு வைகோவே சரியான பதில் அளித்து முற்றுப்புள்ளி வைப்பார்” என்று திமுக பொருளாளர் வீராசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனால் வைகோ திமுக கூட்டணியோடுதான்  இருக்கிறார், அவரைப்பற்றி ஏடுகளில் வெளிவரும் செய்திகள் வேண்டும் என்றே அவரைத் திமுக கூட்டணியில் இருந்து பிரிக்க எதிரிகள் செய்யும் சூழ்ச்சிகள் என்று பேசிவந்த திமுக இப்போது காளிமுத்துவின் பேச்சுக்கு வைகோவே சரியான பதில் அளித்து முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்ப்பதாக அறிக்கை விட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக அனைத்துத் தொகுதியிலும் தோற்றுப்போனது. வைகோவின் சொந்தத் தொகுதியான கலிங்கப்பட்டியிலும் மதிமுக தோற்றுப் போனது. மதிமுக தேர்தலில் 5.12 விழுக்காடு வாக்குகளை மட்டும் பெற முடிந்தது.

இருந்தும் இப்படித் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு வைகோவைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய அவசியம் என்ன?

அவசியம் இருக்கிறது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1)      மக்கள் மத்தியில் வைகோ பற்றிய படிமம் இன்று அதிகரித்துள்ளது. அவரது 18 மாத சிறைவாசம் அவரை ஒரு கொள்கைவாதியாகவும் தியாகியாகவும் மக்களை எண்ண வைத்திருக்கிறது.

2)      நாடாளுமன்றத்துக்கு 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சனநாயக முற்போக்குக் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியதற்கு தமிழ்நாடு முழுதும் வைகோவின் சூறாவளிப் பரப்புரை முக்கிய காரணி எனக் கருதப்படுகிறது.

இன்று தமிழ்நாட்டில் வைகோவே மக்களைக் கவரும் வண்ணம் பேசக் கூடிய சிறந்த பேச்சாளர் என்ற  பெயரை எடுத்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்திக்கும் சேர்ந்து வெளியிடும்  “கருத்து’ இதழ் மூலம் தமிழ்நாட்டின் முதல்வராகும் தகுதி யாருக்கு உண்டு என வாசகர்களிடம் இருந்து கருத்து கேட்டிருந்தனர்.  அதில், வைகோவுக்கு 70 விழுக்காடு வாக்குகளும், ஸ்டாலினுக்கு 10 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியது.

இதனால் உற்சாகம் அடைந்து கொண்ட மதிமுக வின் இரண்டாம் மட்டத் தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் “ வெற்றி பெறும் கூட்டணிக்கு மட்டுமே ஓட்டளித்துப் பழகியவர்கள் மக்கள். அதனால் நாங்கள் இனி வெற்றிக் கூட்டணியில் சேருவோம். எங்களுக்கும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் வேண்டும். தொண்டர்களின் கருத்து அறியப்பட்டு வருகிறது. ஒரு கூட்டணியில் மாட்டிக்கிட்டு முழிக்க நாங்கள் தயாரில்லை வேட்பு மனு தாக்கல் வரை பார்ப்போம். கடந்த லோக்சபா தேர்தலில் திமுககூட்டணி வெற்றி பெற வைகோவின் பேச்சுத் தான் காரணம். அழகான பொண்ணு இருந்தா எல்லாருக்கும் ஆசை இருக்கும். எங்களுக்கும் தகுதி இருக்கிறது. தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறோம் அரசியலில் எதுவும் நடக்கலாம். நாட்டுக்கு எது நல்லது, கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் கூட்டணி அமைந்துள்ளதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். சில முடிவுகள் தேடி வருகின்றன. தவறு செய்தவர்கள் வட்டியும், முதலுமாக சேர்த்து பிராயசித்தம் செய்யத் தயாராகி வருகின்றனர். இந்த தேர்தலில் நிச்சயம் மதிமுகவுக்கு 50 தொகுதிகள் கிடைக்கும்” எனப் பேசியுள்ளார்.

மதிமுக தொடங்கி 12 ஆண்டுகள் (1994) ஆகிவிட்டன. இதுவரை காலமும் சட்டசபையில் கணக்கே திறக்கவில்ல. இந்த நிலையில் மதிமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் தங்கள் எம்எல்ஏ கனவுகள் நனவாக இலவு காத்த கிளிகள் போல மேலும்  காத்திருக்கத் தயாராயில்லை என்பது தெரிகிறது.

வைகோ பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவினால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் 578 நாள்கள் (யூலை 11, 2002 – பெப்ரவரி 07,2004) அடைக்கப்பட்டவர். வைகோ தனது கைது அரசியல் பழிவாங்கல் என்று ஜெயலலிதா மீது கடுமையாகக் குற்றம் சாட்டினார்.  வைகோ மட்டுமல்ல ஏனையோரும் அப்படித்தான் பேசினார்கள். அது மட்டுமல்ல வைகோவுக்கு எதிரான 18 ஆண்டுகளுக்கு முந்திய ஒரு வழக்கையும் தூசி தட்டி எடுத்த ஜெயலலிதா அவரை வேலூர்க்கும் நீதிமன்றத்துக்கும் இழுத்தடித்தார்.
ஜெயலலிதா தமிழ்நாட்டில் பழிவாங்கும் அரசியலையே நடத்தி வருகிறார். சிலர் பட்டறிவு காரணமாக அரசியல் முதிர்ச்சி, பக்குவம் அடைவார்கள். ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து தலைக்கனத்தோடு ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியாகவே நடந்து கொள்கிறார். அவரிடம் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் தகுதி பண்பு நாகரிகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

2001 இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு சென்னையில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்தார் என்ற குற்றம் சாட்டி நள்ளிரவில் ஜெயலலிதா காவல்துறை அதிகாரிகளை அனுப்பி கலைஞரைக் கதறக் கதறக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் சிறையில் அடைத்தார்.

மதுரையைச் சேர்ந்த  ஷெரிஜா பானு, அவரது தாயார் ரஷிஜா, வண்டியோட்டி சதீஷ் ஆகியோர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். காவல்துறையே ஜெயலலிதாவின் கட்டளைப்படி கஞ்சாவை வைத்துவிட்டுக் கைது செய்ததாக பரவலான குற்றச் சாட்டு எழுந்தது. கைதுக்குக் காரணம்? சசிகலாவின் கணவர் நடராசன் ஷெரிஜா பானுவோடு வைத்திருந்த தொடர்பே எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் சென்னையில் பெய்த கன மழை மற்றும் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கியது. சென்னை எம்.ஜிஆர் நகரில் வெள்ள நிவாரணம் பெறக் கூடியிருந்த மக்களிடையே ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 42 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அரசு மற்றும் காவல்துறையின் கையாலாகத்தனத்தால்தான் அச் சம்பவம் நடந்தது.  ஆனால், இந்தச் சாவுகளுக்கு திமுகவினர் பரப்பிய வதந்தியே காரணம் என முதல்வர் ஜெயலலிதா ‘கண்டுபிடித்தார்.’

அதனைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டார். வழக்கில் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை கொடுத்தது. ஆனால் அதற்குள் பிணையில் வெளியே வர முடியாதவாறு தனசேகரன் மீது குண்டர் சட்டம் ஏவிவிடப்பட்டது. குண்டர் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தனசேகரன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார் ஆகியோர் கீழ் நீதிமன்றம் முறைப்பாட்டாளருக்கு நிபந்தனையோடு  அளித்த பிணையை கருத்தில் கொள்ளாமல் குண்டர் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தததை ஏற்க முடியாது எனவே அவர் கைது செய்யப்பட்டது செல்லாது உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என அதிரடியாகத்  தீர்ப்பளித்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திலும் ஜெயலலிதா அரசு வாங்கிக் கட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையைப் பயன்படுத்தித் தனது எதிரிகளைப் பொய்வழக்கில் சிக்க வைத்துப் பழிவாங்குவது ஜெயலலிதாவிற்குக் கைவந்த கலையாகும். வைகோவே அதற்கு சான்றாக விளங்குகின்றார்.

அப்படிப்பட்ட ஒரு பண்பற்ற, பணிவற்ற, நாகரிகமற்ற ஒரு அரசியல்வாதியோடு வைகோ சில தேர்தல் தொகுதிகளுக்காக மீண்டும் கைகோர்த்தால் தூய்மையான அரசியல்வாதி (Mr. Clean Politician) என்ற அவரது படிமம் சேதாரப்படலாம் எனப் பலர் நினைக்கிறார்கள்.

அது மட்டுமல்ல ஜெயலலிதா ஏதாவது ஒரு அற்ப காரணத்துக்காக வைகோவை  மீண்டும் வெளியேற்றி அவமானப்படுத்தினாலும் அதில் வியப்பேதுமில்லை.
1999 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிகவும் அதிமுகவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் என்று சொல்லி அணி சேர்ந்த வைகோ பின்னர் அதில் இருந்து வெளியேறினார் என்பது நினைவு கூரத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதா 2001 இல் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், அரசு அலுவலகர்கள், ஆசிரியர்கள், தொழிலாhளர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பினரும் பெற்று வந்த சலுகைகள் அனைத்தையும், நிதிநிலையைக் காரணம் காட்டி வெட்டிவிட்டார். அப்படிச் செய்துவிட்டு அதற்குக் காரணம் கருணாநிதியின் முந்தைய ஆட்சிதான் என்று பழி சுமத்தினார்.

சாலைப் பணியாளர் 10 ஆயிரம் பேர், மக்கள் நலப் பணியாளர் 13 ஆயிரம் பேர், கூட்டுறவுப் பணியாளர் 9 ஆயிரம் பேரைக் கூண்டோடு பணி நீக்கம் செய்தார். ஆனால், இப்போது, சட்டசபைத் தேர்தல் வருவதை முன்னிட்டு, மக்களுக்குப் பல்வேறு சலுகைகளை நாள்தோறும் அறிவிப்புச் செய்து வருவதுடன், சாலைப் பணியாளர்களின் மீது  “கருணை’ காட்டி, திடீரென மீண்டும் வேலை கொடுத்து, அவர்களுக்கு எதிரான நீதி மன்ற வழக்கையும் திருப்பிப் பெறப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த நாலரை  ஆண்டு காலம், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளுக்கும், எதிர்க்கட்சியினரின் குரல்களுக்கும் செவி சாய்க்காத முதல்வர், நிதிநிலையைக் காரணம் காட்டி வந்த முதல்வர், தற்போது நிதிநிலை சீராகி விட்டதாகக் கூறி, நாளாந்தம் சலுகை அறிவிப்புகளை செய்து வருகிறார்.  அரசால் அறிவிக்கப்படும் சலுகைகள், எந்த நோக்கத்தைக் கருத்திற் கொண்டு வழங்கப் படுகிறது என்பதை மக்கள் உணராமல் இல்லை. “ஜீபூம்பா’ நிலையில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும், தேர்தலுக்குப் பின் நீடிக்குமா என்பது பெரிய கேள்விக் குறியாகும்.  தேர்தல் ஆணையம்  தேர்தல் தேதியை அறிவிக்கும் வரை அரசு வழங்கும் சலுகை அறிவிப்புகள், புதிய தொழிற்சாலைகள் பற்றிய உறுதி மொழிகள் தேர்தலில் ஓட்டுகளைப் பெறுவதற்குத் தரப்படும் கையூட்டு என்பதே சரியாகும்.

1967 இல் இருந்து தமிழக அரசியலை புரட்டிப் பார்த்தால், தொடர்ந்து திரையுலகத் துறையைச் சேர்ந்தவர்கள் தான் முதல்வர் நாற்காலியைப் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். எத்தனையோ பேர் படிப்பு, அனுபவம், திறமை, தகுதி படைத்து இருந்தும் அவர்களால் முதல்வர் நாற்காலியைப் பிடிக்க முடியவி;ல்லை.

1967 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த திமுக. பின்னர் அதில் இருந்து பிரிந்து போன அதிமுக கட்சி இரண்டுமே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகள் மீதும் உள்ள சினிமாக் கவர்ச்சி இன்னும் விட்டுப் போகவில்லை.

நடிகர் செந்தில், விஜயகுமார், முரளி, இயக்குநர் விஜய இராசேந்திரர்,  இயக்குநர் லியாகத் அலிகான், திரைப்படத் தயாரிப்பாளர் பழ. கருப்பையா ஆகியோர் அதிமுகவில் சங்கமமாயுள்ளது அந்தக் கட்சிக்கு ஏற்கனவே உள்ள சினிமாக் கவர்ச்சியை அதிகரிகச் செய்துள்ளது.

சினிமாக் கவர்ச்சியை நம்பியே நடிகர் விஜயகாந்த் தேசிய திமுக வைத் தொடக்கி இருக்கிறார். அவர் போகும் இடமெலாம் கூட்டம் அலை மோதுகிறது. அது வாக்ககளாக மாறுமா என்பது தேர்தல் முடிந்த பின்னர்தான் தெரியவரும்.

இன்னொரு சினிமா நடிகர் கார்த்திக் தமிழ்நாடு  குழசறயசன டீடழஉம கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று திராவிடக் கட்சிகள் தேர்தல் அரசியலுக்காக இந்தி எதிர்ப்பைக் கைவிட்டு விட்டன.  பகுத்தறிவு கொள்கையும் காற்றோடு போய்விட்டது. அதிமுக பற்றிப் பேசவே வேண்டாம். அந்தக் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் வேற்றுமை காண முடியாத அளவுக்கு அது ஒரு மதவாதக் கட்சியாக மாறிவிட்டது.

அதிமுக கட்சித் தலைவர்கள் தங்களை அம்மா உதைத்தாலும் அம்மா காலால் உதைவாங்கியதைப் பெருமையாக நினைக்கிறார்கள். அதனால் ஜெயலலிதா அவர்களைத் தனது கொத்தடிமைகளாகவே வைத்திருக்கிறார். சட்டசபைக்குள் அவர் நுழையும் போது அமைச்சர்கள் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறார்கள். சட்டசபையில் பேரவைத் தலைவருக்கு மட்டும் எழுந்து மரியாதை செய்வதே மரபாகும்.

வேடிக்கை என்னவென்றால் கருத்துக் கணிப்புக்கள் எதிர் வரும் தேர்தலில் ஜெயலலிதாவே வெல்வார் எனச் சொல்கின்றன. கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மற்றும்  கும்முடிப்பூண்டி தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்றமுறை திமுக அணிpயிலிருந்து வைகோ அநீதியான முறையில் கழட்டிவிடப்பட்டார். இம்முறை அவராகவே அணியிலிருந்து போய்விடுவாரா? அவரது முடிவு எதுவாக இருந்தாலும் அது தமிழ்த் தேசியத்துக்கு ஊறு விளைக்காது என்று நம்பலாம்.  (உலகத்தமிழர் – பெப்ரவரி 27, 2006)


பழமைவாதக் கட்சி தரம் இறங்க இரண்டு  கிழமையே பிடித்தது!

நக்கீரன்  

ஸ்ரீபன் கார்ப்பர் (47) கனடாவின் 22 ஆவது பிரதமராக கடந்த பெப்ரலரி 6 ஆம் நாள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

அதன் பின் புதிய அமைச்சரவை பற்றிய விபரத்தை வெளியிட்ட பிரதமர் ஸ்ரீவன் கார்ப்பர் தனது அரசு முன்னுரிமை வழங்க இருக்கும் அய்ந்து முக்கிய திட்டங்களை அறிவித்தார்.

1)    மத்திய அரசின் பொறுப்புடமை சட்டத்தை  ( Federal  Accountability Act) இயற்றி அரச இயந்திரத்தைத் தூய்மைப் படுத்தல்.
2)    உழைக்கும் கனடியர்களது வரிச் சுமை குறைக்கப்படும். அதன் தொடக்கமாக பொருட்கள் மற்றம் சேவை வரி குறைக்கப்படும்.
3)     கனடிய குடும்பங்களையும் சமூகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு நீதிமுறை பலப்படுத்தப் படும்.
4)    குழந்தைப் பராமரிப்பில் பெற்றோரது விருப்பப்படி நடத்தல்.
5)    கனடியர்களது நல்வாழ்வுத் தேவையை, எப்போது தேவைப்படுகிறதோ அப்போது  வழங்கும் பொருட்டு மாகாண அரசுகளுடன் பேசி நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தை உறுதிப்படுத்தல்.

மேலும் “எங்களது வழிமுறைகள் தெளிவானது. நாங்கள் எங்களது பொது நிறுவனங்கள் மீது நம்பிக்கையை மீள்கட்டியெழுப்பி கனடாவை வலிமையும் ஒற்றுமையும் படைத்த  நாடாக வைத்திருப்போம்” எனப் பிரதமர் குறிப்பிட்டார்.  பேச்சுப் பல்லக்குத்தான்! ஆனால் கார்ப்பரின் நடைமுறை எப்படி இருக்கிறது?

“அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு வார்” என்று பிழாவைத் தூக்கிய குடிமகன்  கதையாகப் பிரதமராகப் பதவியேற்ற பழமைவாதக் கட்சியின் தலைவர் ஸ்ரீபன் கார்ப்பர் ஆட்சியில் பொறுப்புடமை (Accountability) அரசியலில் தூய்மை, வினையில் ஒழுக்கம் என்ற தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று? அவற்றுக்கு நேர்ந்த கதியென்ன?

கார்ப்பர் பிரதமராகப் பதவி ஏற்ற அடுத்த கணம் எந்த வாக்குறுதிகளை அள்ளி வீசித் தேர்தலில் வென்று வந்தாரோ அவற்றில் முக்கியமான இரண்டைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார்!

சென்ற மாத பிற்பகுதியில் லிபரல் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற வன்கூவர்-கிங்ஸ்வே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் இமேர்சன் இந்த மாத முற்பகுதியில் கார்ப்பர் அமைச்சர் அவையில் பன்னாட்டு வணிக அமைச்சராகி விட்டார்!

டேவிட் இமேர்சன் லிபரல் ஆட்சியின் போது கைத்தொழில் அமைச்சராக இருந்தவர்.

இந்தக் கட்சித் தாவல் அவருக்கு வாக்குப் போட்டு வெற்றிபெறச் செய்த தொகுதி வாக்காளர்களுக்குக் கன்னத்தில் அடித்தமாதிரிப் போய்விட்டது. லிபரல் மற்றும் புதிய மக்களாட்சிக் கட்சி இரண்டுக்கும் கிடைத்த வாக்கு விழுக்காடு 77 க்கு அதிகமாகும். பழமைவாதக் கட்சிக்கு வெறுமனே 20 விழுக்காடு வாக்குகளே விழுந்தன.

கட்சிமாறிய இமேர்சனைப் பதவி விலகுமாறு அவரது தொகுதி லிபரல் கிளை  கேட்டுள்ளது. அவரது தேர்தல் வெற்றிக்குச் செலவளித்த 96,755 டொலர்களைத் திருப்பித் தருமாறும் கேட்டுள்ளது. வாக்காளர்கள் அவரைத் திருப்பி அனுப்பக் கேட்டுக் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.

வானொலியும் தொலைக்காட்சியும் இந்தக் கட்சித் தாவலை நாள்தோறும் தாளித்துக் கொண்டு இருக்கின்றன!

ஆனால் அமைச்சர் டேவிட் இமேர்சன் அசைவதாக இல்லை. தான் பதவி விலகப்போவதும் இல்லை பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போவதும் இல்லை என்று அடித்துச் சொல்லி விட்டார். அவரது தொகுதி வாக்காளர்கள்தான் பாவம்! அமைச்சர் அவர்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டார்!

டேவிட் இமேர்சன் பழமைவாதக் கட்சிக்கு நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்தது  பழமைவாதக் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இல்லை என்பதைக் காட்டுகிறது.

இன்னொருவர் மைக்கேல் வோட்டியர் (Michel Fortier)  ஆவார். இவர் தேர்தலில் நிற்காதவர். இப்போது பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல அவர் கார்ப்பரால் மேலவைக்கு நியமிக்கப்பட்டு பொதுப்பணி (Public Works) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்! இது மேல்சபைக்கு உறுப்பினர்கள் பிரதமரால் நியமனம் செய்யப்படும் முறைக்கு முழுக்குப் போட்டுவிட்டு தேர்தல் மூலம் அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற பழமைவாதக் கட்சியின் தேர்தல் உறுதிமொழிக்கு வேட்டு வைப்பதாக உள்ளது. மைக்கேல் வோட்டியர் கியூபெக் மாகாண பழமைவாதக் கட்சியின் தேர்தல் இணைத் தலைவராகப் பணியாற்றினார். அதற்கான பரிசு இந்த மேலவை மற்றும் அமைச்சர் பதவி பரிசாக எடுத்துக்கொள்ளலாம். பொதுப்பணி அமைச்சு பணம் புரளும் அமைச்சாகும்!

லிபரல் கட்சியின் அரசியல் தரத்துக்குப் பழமைவாதக் கட்சி தரம் இறங்க இரண்டு  கிழமையே பிடித்திருக்கிறது!

தேர்தல் பரப்புரையின் போது “முக்கிய அரச நியமனங்கள் தகுதி திறமை அடிப்படையிலேயே நிரப்பப்பட வேண்டும் அவை நண்பர்கள் கட்சி ஆதரவாளர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று வீரம் பேசிய கார்ப்பர் அதனை இவ்வளவு கெதியில் மறப்பார் என யாரும் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கட்சித் தாவல் என்று வரும்போது கனடிய அரசியல்வாதிகள் மூன்றாம் உலக அரசியல்வாதிகளுக்கு எள்ளளவேனும் சளைத்தவர்கள் அல்லர்! இன்னும் சொல்லப் போனால் இவர்கள் அவர்களை விட விபரமானவர்கள்!

அரசியலில் கற்பைப் பற்றிக் கூறவந்தால் கனடிய அரசியல் அதற்கு நிச்சயமாக ஒரு எடுத்துக் காட்டல்ல எனலாம். கட்சி தாவல் கனடிய அரசியலுக்குப் புதியதன்று..அது இங்கு  மிகச் சாதாரணமாகப் போய்விட்டது.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற டீநடiனெய ளுவழயெஉh லிபரல் கட்சிக்குத் தாவியது மட்டுமல்ல போல் மாட்டின் அவருக்கு மனிதவள அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இன்று கியூபெக் மாகாண முதலமைச்சராக இருக்கும் துநயn ஊhயசநளவ 1993 ஆம் ஆண்டு முற்போக்கு பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அதே ஆண்டு நடந்த தேர்தலில் பழமைவாதக் கட்சி படு தோல்வியைத் தழுவியது. 295 தொகுதிகளில் போட்டியிட்ட பழமைவாதக் கட்சி 2 தொகுதிகிளில் மட்டும் வெற்றிபெற்றது. அதில் துநயn ஊhயசநளவ ஒருவர். 1997 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பழமைவாதக் கட்சி 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால் விரக்தி அடைந்த  ஊhயசநளவ பழமைவாதக் கட்சியைக் கைகழுவி விட்டு கியூபெக் மாகாண லிபரல் கட்சிக்கு 1998 இல் தாவினார்.

அதே ஆண்டு கியூபெக் மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஊhயசநளவ எதிர்க் கட்சித் தலைவரானார். பின்னர் 2003 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அந்த மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார்.

Belinda Stronach   2004 மே மாதத்தில் நடந்த தேர்தலில்  New Market – Aurora தொகுதியில் பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர். தொழில் அதிபரான இவர் Scott Brison  Magna  என்ற தொழில் நிறுவனத்தின் இயக்குநர் அவையில் இயக்குநராக (1988-2004) இருந்தவர்.  நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட அதே மாதம் (மே 17)  லிபரல் கட்சிக்குப் பாய்ந்தார். போல் மாட்டின் உடனே அவரை  மனிதவள அமைச்சராக நியமித்தார்.  ளுஉழவவ டீசளைழn 1997 இல் பழமைவாதக் கட்சி சார்பில்  KingHants (Nova Scotia) போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2003 ஆம் ஆண்டு லிபரல் கட்சிக்குத் தாவினார். தாவிய கையோடு பிரதமரின் நாடாளுமன்றச் செயலாளராக பதவி நியமனம் செய்யப்பட்டார்.

வேடிக்கை என்னவென்றால் கட்சி தாவிய Scott Brison மற்றும்  Belinda Stronach   இப்போது நடந்து முடிந்த தேர்தலில் இருவரும் அதே தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்!

பழமைவாதக் கட்சியில் போட்டியிட்ட போதும் வென்றார்கள். லிபரல் கட்சியில் போட்டியிட்ட போதும் வெல்கிறார்கள். அப்படியென்றால் தேர்தலில் கட்சிச் செல்வாக்கைவிட தங்கள் சொந்தச் செல்வாக்கில் இவர்கள் வெல்கிறார்களா?

Belinda Stronach  கட்சி தாவியபோது கார்ப்பர் அவரைக் கடுமையாகச் சாடினார். “Belinda Stronach  கட்சி தாவியது பழமைவாதக் கட்சி நா.உறுப்பினர்களது மனதில் வாட்டத்தையம் ஏமாற்றத்தையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. பலர் அவர் கட்சிக்குத் துரோகம் செய்து விட்டார்” என செய்தியாளர் மாநாட்டில் கார்ப்பர் சொன்னார். மேலும் பேசுகையில் “இந்தக் கட்சித் தாவல் எமது நாடாளுமன்றக் குழுவின் லிபரல் ஆளும் கட்சி அடிப்படையில் ஒரு ஊழல் நிறைந்த கட்சி என்ற நிலைப்பாட்டில் மாற்றவில்லை.”

இப்போது கூட லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர்  Bob Rae, Belinda Stronach, மற்றும் Scott Brison  ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. பொப் றே புதிய மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்.

கார்ப்பரின் குத்துக் கரணங்கள் பழமைவாதக் கட்சியி நா.உறுப்பினர்களிடையே சினத்தை மூட்டியுள்ளது. எதையெதை எதிர்த்துத் தேர்தலில் பரப்புரை செய்தோமோ அவற்றுக்கு மாறாக கார்ப்பர் நடந்து கொள்வது அதிர்ச்சியாக இருக்கிறது எனப் பலர் புலம்புகிறார்கள்.

பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் இன்னொரு சாதனையையும் செய்து காட்டியுள்ளார். முன்னர் கனடிய இராணுவத்துக்கு ஆயுத தளபாடம் விற்கும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு மாமா வேலை (Lobbyist) பார்த்து வந்த  (இழிவு பொருளில் இதை நான் கூறவில்லை) ஓய்வு பெற்ற இராணுவ தளபதி Gordon O’Connor   பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது கள்ளனைக் காவலுக்கு வைத்த கதை மாதிரி என்று எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன. மாமா வேலை பார்ப்போரை எதிர்க்கும் கார்ப்பர் அப்படியான ஒருவரை எப்படி அமைச்சராக்கினார் அதிலும் பாதுகாப்பு அமைச்சராக்கினார் என எல்லோரும் வியப்பில் மூக்கில் விரலை வைக்கிறார்கள்.

பீட்டர் மக்கே துணைப் பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்வுகூறல் சொல்லப்பட்டது. ஆனால் துணைப் பிரதமர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. பழமைவாதக் கட்சியின் முக்கிய தலைவர்களான பீட்டர் மக்கே மற்றும் ஸ்ரொக்வெல் டே இருவரும் முறையே வெளியுறவு மற்றும் பொதுப் பாதுகாப்பு (Public Safety) அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரொக்வெல்லே வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் அவர்தான் பழமைவாதக் கட்சியின் வெளியுறவு விமர்சகராக இருந்தார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சரான ஸ்ரொக்வெல்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குப் பொறுப்பாக இருக்கப் போகிறார்.

ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தி உளவுத்துறை வி.புலிகளை தடைசெய்யுமாறு புதிய அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

எதிர்கட்சி வரிசையில் இருந்து கொண்டு வி.புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்ரொக்வெல் மற்றும் பீட்டர் மக்கே அப்படிச் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. வி.புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும்போது வி.புலிகள் அமைப்புத்  தடை செய்யப்படுவது சாத்தியமில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் வெடித்தால் கனடிய அரசின் நிலைப்பாடு மாறலாம்.

பழமைவாதக் கட்சியின் நட்சத்திர  நாடாளுமன்ற உறுப்பினர் Diane  Ablonczy  க்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு நாடாளுமன்றச் செயலாளர் பதவியே வழங்கப்பட்டுள்ளது. கட்சி தாவிக்கும் தேர்தலில் போட்டியிடாதவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கும் போது னுயைநெ யுடிடழnஉணல போன்ற பட்டறிவும் திறமையும் வாய்ந்த ஒரு பெண்ணுக்கு அமைச்சர் பதவி வழங்காதது ஆண் – பெண் சமத்துவத்தில் கார்ப்பருக்கு அதிக நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.

அகப்பை பிடிப்பவள் நம்மடை ஆள் என்றால் அடிப் பந்தியில் இருந்தால் என்ன நுனிப் பந்தியில் இருந்தால் என்ன? கார்ப்பர் அமைச்சரவையில் அவரது சொந்த மாகாணமான அல்பேட்டாவைச் சேர்ந்த மூன்று பேர் அமைச்சர்களாகி விட்டார்கள். எட்மொன்ரன் றோனா அம்புறோசா சுற்றுச் சூழல் அமைச்சர், கல்கறி ஜிம் பிறென்ரிஸ் பூர்வீககுடியுறவு  அமைச்சர், மொன்ரே சொல்பேர்க் குடிவரவு அமைச்சர்.

கியூபெக் மாகாணத்தல் வெற்றிபெற்ற பத்து நா.உறுப்பினர்களில் நான்கு பேர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்!

ஒன்ரோறியோ மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட   Jim Flaherty  மற்றும்  Tony Clement   முறையே நிதி அமைச்சராகவும் நல்வாழ்வு அமைச்ராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். இவர்கள் மைக் கரிஸ் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள். இதில் துiஅ குடயாநசவல மைக் கரிசைவிட மோசமான வலதுசாரி அரசியல்வாதி எனப் பெயர் எடுத்தவர்.

பொதுவாக வலதுசாரிகளான பழமைவாதக் கட்சி ஆட்சியைப் பிடித்திருப்பதை கனடிய இராணுவ தளபதிகள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கோடு பல கோடி பெறுமதியான போர் விமானங்கள், இராணுவதளபாடங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றைக் கனடா கொள்வனவு செய்ய உள்ளது. ஆயுத விற்பனை தொழில் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்தான். கிணற்றில் இருக்கும் தவளை தண்ணீர் குடிக்காது என்றால் அதை யார் நம்புவார்கள்?

லிபரல் கட்சியின் அரசியல் தரத்துக்குப் பழமைவாதக் கட்சி தரம் இறங்க இரண்டு  கிழமையே பிடித்தது! அவர்களை வெல்ல எத்தனை கிழமை வேண்டும்? (உலகத்தமிழர் – பெப்ரவரி 10, 2006)


Mahinda Rajapase Wallowing In Political Quagmire Like His Predecessors

by V.Thangavelu, President TCWA 

Speaking at the 58th anniversary of independence President Rajapakse was full of honey and milk when he made the tall claim “This country is one that belongs to all, Sinhalese, Tamil, Muslim, Burgher and other peoples to whom this is home. We cannot solve this problem by dividing this country. That will only lead to aggravating the crisis.”

Continuing his oration President Mahinda Rajapaksa called for a new “state structure” to bring genuine democracy to all Sri Lankans and resolve the ethnic conflict without dividing the country.

He concluded “Honoured friends, we should bear well in our minds that if we are to stop the increasing flow of blood through war, we should shed more and more sweat in the cause of peace.”

The Thamil people have heard this political rhetoric many times before on such solemn occasions. Rajapakse’s predecessor Chandrika Kumaratunga has said so at every independence day from 1994-2005.  But the ground situation and realpolitik remain different.

Since Mahinda Rajapakse assuming power, the Thamil people as a whole feel increasingly insecure not only in the Northeast but also in the South.  More than 50 Thamil civilians have been shot dead by trigger happy Sinhala troops.  Thamil women have been raped and youths have disappeared after arrest by the armed forces.

The Amnesty International in its reported dated February 03, 2006 summed up the grim situation thus “The human rights situation in eastern Sri Lanka has deteriorated dramatically over the last two years, as levels of violence have escalated, resulting in widespread human rights abuses and a climate of fear and insecurity.”

Out of many executions style killings in the Northeast by the armed forces and paramilitaries the following were the worst in terms of sheer brutality.

(1)  On 24 th December 2005, Tamil National Alliance MP and North East Secretariat on Human Rights (NESOHR) member Joseph Pararajasingam was shot and killed at a midnight church service in St Mary’s Church, Batticaloa.

(2)  On 2 nd January 2006 five high school students were killed in Trincomalee. Although the Sri Lankan army first claimed they were killed by a grenade that the students were carrying, following a post mortem it was revealed that the students had been shot, three of them in the head. The President ordered an inquiry into the killings, but the assassins are still at large.

(3) On 5th January, 2006 three women from the same family, Bojan Renuka, Bojan Shanuka and Bojan Arthanageswary were shot and killed in their home in Manipay, Jaffna district.

. (4)  On January 26, 2006 Major Kapilan, a senior Liberation Tigers cadre, was killed in an ambush attack in Vadamunai in Batticaloa district. LTTE media spokesperson blamed the army deep penetration unit of having carried out the killing. This killing took place on the same day (January 25, 2006) the LTTE leader ordered the release of one of the three Sri Lankan policemen held in custody since September 2005 for illegally entering into Liberation Tigers controlled area.

(5) On January 29th and 30th 19 TRO staffers were waylaid and abducted at Welikanda in Polonnaruwa district.  Eleven staffers have been released, but the rest are still missing.

The abduction of TRO staffers has again raised the spectre of the deteriorating law and order situation in government controlled areas in the Northeast.  TRO has accused paramilitaries working with Sri Lanka military of abducting their workers.

Although President Mahinda Rajapaksa appointed two Deputy Inspectors General of police, four Senior Superintendents of Police and 22 other men to speed up the investigations regarding the abduction, even after the lapse of more than a week the fate of the abducted TRO staffers remain a mystery.

In point of fact far from giving the abduction the serious attention it deserved, Foreign Affairs Minister rubbed salt into the wound by claiming that “It was a “mystery” that the TRO had taken 30 hours to make a complaint to the police, though the nearest police station at Welikanda was only a quarter of a mile away from the scene of the kidnapping.”

The Foreign Minister expects the TRO staff that was severely assaulted and warned not to report the incident to the Police by the abductors to ignore the threat.  The Foreign Minister went on to make the audacious claim that “preliminary investigations into the alleged incident did not provide answers but only raised questions. No complaint was lodged either at Batticaloa or at Colombo, though the TRO had offices in both places. There had been no formal complaint till the late afternoon of January 31.”

The public knows the fate that overtook the two women staff that went to lodge a complaint about their abduction at the Batticaloa Police Station. They were detained at the Police Station overnight and the police extracted a statement from the complainants to the effect that it is the LTTE that abducted them! Such low and cheap tactics displays stupidity of the Police.

President Mahinda Rajapakse’s government on a roller-coaster self-destructive politics refuses to rein in the armed forces and the paramilitaries responsible for the violence against the Thamil people.  It appears that Mahinda Rajapakse is both aiding and abetting the armed forces or he has lost control over the devilish forces he deliberately unleashed to capture power.  Though he claimed he is a practical politician, his performance proves he is not.  He is following the same chauvinistic and bankrupt politics of his predecessors though somewhat clumsily.  The exodus of Thamils living in government controlled areas to Thamil Nadu and Vanni is a telling indictment of his government.    Rajapakse has displayed a singular inability to grasp the dynamics and the fundamentals of the ethnic conflict.

Foreign Minister  Mangala Samaraweera has also accused the LTTE of having gone on a publicity spree on an international scale with alacrity but had kept the Sri Lankan police in the dark.

Finally he queried with a tinge of sarcasm “the “so-called” abductions raised two questions: Were they stage managed to hide the pressure being brought in other countries against fund raising by the TRO? Were they an attempt by interested parties to sabotage the forthcoming talks on the ceasefire agreement?”

The whole world knows who wanted to derail the talks?  Who wanted to re-negotiate the CFA? Who wanted Norway to be sidelined? Who openly asked Norway’s foreign minister to ditch Special Envoy Erik Solheim?  After failing in each and every subterfuge to sabotage the peace talks he is now pretending to be a saint!

In an interview to Asian Tribune on January 8, 2006 in Washington  Foreign Minister Samaraweeera  made the ridiculous statement that the “LTTE was more ruthless than the Al Qaeda  and the Sri Lanka government is fully aware of the grievances of the Tamil people. Well, there is a greater awareness in Washington that the LTTE does not necessarily represent the interests of the Tamil people.”

If that is so, LTTE does not necessarily represent the interests of Thamil people; why not hold the talks with the likes of V. Anandasangaree and Douglas Devananda in Colombo?

There is no doubt that Minister Samaraweera is following in the footsteps of his predecessor Lakshman Kadirgamar in terms of deceit and arrogance. As Foreign Minister Kadirgamar haughtily told the UN resident representative in Sri Lanka to confine himself to catching mosquitoes and not to interfere in the internal affairs of Sri Lanka.

The vituperative comments of Minister Samaraweera clearly shows the mind-set of Mahinda Rajapakse‘s government and its style of governance. The divide between the South and Northeast increases by the day and Mahinda Rajapakse almost pushed the country to the brink of war.

For talks to succeed there should be goodwill and mutual respect for each other.  What we are now witnessing   is cynicism and antagonism on the part of the government.  Given the pervasive negativism and ill will displayed by Mahinda Rajapakse’s government only the very optimist will entertain the slightest hope of the talks in Geneva succeeding.  The Thamil people are very pessimistic that Geneva talks will solve any of their pressing problems.  Foreign Minister Mangala Samaraweera’s political rhetoric gives no such hope.   And President Mahinda Rajapakse lacks the political acumen and sophistication to offer any realistic solution to resolve the ethnic conflict.  Mahinda Rajapakse and his Foreign Minister like the quack doctors have only “kulisai” to cure cancer!


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply