முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உளவியல் ஆலோசனை அவசரமாகத் தேவைப்படுகிறது!

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உளவியல் ஆலோசனை அவசரமாகத் தேவைப்படுகிறது!

நக்கீரன்

வட மாகாண சபை அமைச்சரவையில் இருந்து நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தை அகற்றுவதில் முதலமைச்சர்  விக்னேஸ்வரன் குறியாக இருந்திருக்கிறார். இப்போது அதில் வெற்றியும் கண்டுள்ளார். முதலமைச்சர் அமைத்த விசாரணைக் குழு இரண்டு அமைச்சர்களை  (பொ. ஐங்கரநேசன் மற்றும் த. குருகுலராசா) குற்றவாளியாகக் கண்டு அவர்கள் பதவி விலத்த  வேண்டும் என்று பரிந்துரை செய்தது. எஞ்சிய இரண்டு அமைச்சர்கள் மீதும் சாட்டப்பட்ட குற்றச் சாட்டுக்கள் எண்பிக்கப்படவில்லை என்பதால் அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறியது. இது விக்னேஸ்வரனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

மருத்துவர் சத்தியலிங்கத்தை எப்படியும் “மாட்ட” வேண்டும் என்று கருவிக் கொண்டிருந்த விக்னேஸ்வரன் மேலும் ஒரு விசாரணைக் குழுவை அமைக்கப் போவதாகவும் முன்னைய விசாரணைக் குழுவில் முறைப்பாடு செய்தவர்கள் நாட்டில் இல்லாததால்  சாட்சியம் சொல்ல முடியவில்லை என்ற காரணத்தைச் சொன்னார். அப்படிச்  சாட்சியம் சொல்ல முடியாமல் வெளிநாட்டில்  இருந்தவர் அனந்தி சசிதரனும் ஒருவர் என்றார்.Image result for P.Sathiyalingam

அனந்தி ஜெனீவா சென்றிருந்தமையால் சாட்சியம் சொல்ல முடியவில்லை என்பது முதலமைச்சரின் வாதம். அனந்தி என்ன ஜெனிவாவில் மாதக்கணக்காக அல்லது ஆண்டுக்கணக்காக இருந்தவரா? அவர் ஜெனிவா சென்று திரும்பிய பின்னர் ஆணைக் குழுமுன் தோன்றி தனது சாட்சியத்தை சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை?  ஆணைக்குழு ஓராண்டு காலமாக விசாரணை நடத்தி வந்ததே?

இரண்டாவது ஆணைக் குழு வைப்பதோடு விக்னேஸ்வரன் நிற்கவில்லை. அமைச்சர்கள் ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஒரு மாத காலம் கட்டாய ஓய்வில் போக வேண்டும் என்றும் சொன்னார். இந்த இரண்டு அமைச்சர்களும் முதலமைச்சரே  நியமித்த விசாரணைக் குழுவால் குற்றமற்றவர்கள் என்று சொல்லி விடுதலை செய்யப்பட்டவர்கள். பின் எதற்காக அவர்கள் கட்டாய ஓய்வில் போக வேண்டும்? இது தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவிக்கு பெருமை சேர்க்கு முகமாக  துளிகூட நடக்கவில்லை. மாறாகத்  தனது பதவிக்கு சிறுமை தேடித்தருமாறு சின்னத்தனமாக, அற்பத்தனமாக நடந்து கொண்டார். ஒரு முன்னாள் நீதியரசர்  விருப்பு வெறுப்பின்றி நடுநிலமையோடு நீதி வழங்குவார்  என்றுதான் எல்லோரும்  எதிர்பார்ப்பார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் நடந்து கொண்டார்.

இதனை அடுத்துத்தான் அவர் மீது 21 மாகாண சபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அன்றிரவே  (ஓகஸ்ட் 23 -24) யூலை ஆளுநரிடம் கையளித்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியோடு முரண் பட்டுக் கொண்டிருந்த  எஞ்சிய மூன்று பங்காளிக் கட்சிகளுக்கும்  ததேகூ இல் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி மலட்டு அரசியல் நடத்தும் கஜேந்திரகுமாரும் அவரது ஆதரவாளர்களும்  வி.புலிகளின் மிச்சங்களால்  உருவாக்கப்பட்ட  தமிழ் மக்கள் பேரவையும் முதலமைச்சருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என இறங்கினார்கள்.

இதில் வேடிக்கை  என்னவென்றால் முதலமைச்சரால் அவமதிக்கப்பட்ட  அல்லது பழி தீர்க்கப்பட்ட இரண்டு அமைச்சர்களில் ஒருவரான பா. டெனீஸ்வரன் அவர்களை ரெலோ அமைப்பு அம்போ என்று கை கழுவி விட்டுவிட்டது. அமைச்சர் டெனீஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். சட்டப்படி அமைக்கப்படும் விசாரணைக் குழுமுன் சாட்சியம் அளிக்கத் தயார் ஆனால் பதவி விலக முடியாது என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார். தேவைப்படில் தான் நீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டத் தயார் என்றும் சொன்னார். ஆனால் ரெலோ அமைப்பு அவரது இடத்தை நிரப்ப மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் பெயரை பரிந்துரை செய்தது. ஆனால் முதலமைச்சர் அந்தப் பரிந்துரையை புறம்தள்ளிவிட்டு அதே கட்சியைச் சார்ந்த மருத்துவர்  குணசீலனை நல்வாழ்வு அமைச்சராக நியமித்தார்.

அமைச்சர் பதவி என்று வரும்போது கட்சியாவது கத்தரிக்காய் ஆவது என்பதை மருத்துவர் குணசீலன் நடைமுறையில் எண்பித்துக் காட்டிவிட்டார். இவரைப் போலவே  2013 இல் இபிஎல்ஆர்எவ் கட்சி பரிந்துரைத்த  க. சர்வேஸ்வரனை  புறம் தள்ளிவிட்டு அதே கட்சியைச் சார்ந்த ஐங்கரநேசனை  முதலமைச்சர் விக்னேஸ்வரன்  வேளாண் அமைச்சராக நியமித்தார். மருத்துவர் குணசீலனின் இந்த நியமனத்தைக்  கடுமையான தொனியில் கண்டித்து ரெலோ செயலாளர் நாயகம் ஒரு  கடிதம் எழுதினார். அதில்,

“இப்பொழுது எமது கட்சியின் சார்பில் எமது மாகாண சபை உறுப்பினரொருவரை நீங்களே தேர்ந்தெடுத்து அமைச்சராக்குவது என்பது குறித்த நியமனத்தை எம்மீது பலவந்தமாகத் திணிக்க முயற்சிப்பதாகவே முடியும். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அனுமதிக்கவும் மாட்டோம்.”எனக் கடும் தொனியில்    கண்டனம் தெரிவித்தார். இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை. நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் தவறை நிவர்த்தி செய்ய நீங்கள் முன்வர வேண்டும். வடமாகாண சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டுச் செயலாற்றுவதற்கு இது அவசியமானது…” என எழுதப்பட்டிருந்தது.Image result for பா.டெனீஸ்வரன்

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல  முதலமைச்சர் தான் நினைத்த மாதிரி மருத்துவர் குணசீலனை அமைச்சராக்கி அழகு பார்த்துவிட்டார்.  “இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அனுமதிக்கவும் மாட்டோம். எமது கட்சிக்குச் சுயமரியாதையுண்டு. எந்தச் சூழ்நிலையிலும், எந்தக்காரணத்திற்காகவேனும் அதனை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” என அந்தக் கடிதத்தில்  தெரிவித்த ரெலோ இப்போது மவுனியாகிவிட்டது. இதை வைத்து ரெலோ அமைப்புக்கு  ‘சுயமரியாதை’ கிஞ்சித்தும் கிடையாது என்ற முடிவுக்கு வருவதில் பிசகில்லை.  இதனை  பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்றும்  எடுத்துக் கொள்ளலாம்.

உண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனது இலக்கு பா.டெனீஸ்வரன் அல்ல. அவரது இலக்கு மருத்துவர் ப. சத்தியலிங்கம்தான். ஓகஸ்ட் 12, தேதியிட்டு எழுதிய தனது இராஜிநாமா கடிதத்தில் சத்தியலிங்கம் வடமாகாண அமைச்சர் வாரியத்தில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்று  தீராத முயற்சியில் முதலமைச்சர் தொடர்ந்து  முயன்று கொண்டிருக்கின்றார் என பகிரங்கமாகப் குற்றம் சாட்டியிருந்தார். தன்னை  அமைச்சர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக உள்நோக்கத்துடன்  முதலமைச்சர் செயல்பட்டார் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.  

“அதன் அடிப்படையிலே, நாங்கள் தமிழரசுக் கட்சியின்    மாகாண சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திலே கூடி மாகாண சபையின் நிலைமைகளை ஆராய்ந்தோம். வடமாகாண சபையின் அமைச்சர் வாரியத்தில் யார் அமைச்சராக இருப்பது என்பது இப்போதைய நிலையில் தமிழ் மக்களுடைய பிரதானமான பிரச்சினையாக இருக்கவில்லை. அதிலும் பார்க்க, அதிலும் முக்கியமாக பல பிரச்சினைகள் எம் முன்னால் இருக்கின்றன.

இனவிடுதலைக்கான இந்த நீண்டகாலப் போராட்டத்திலே, நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்திருக்கின்ற தமிழ்பேசும் மக்களுடைய அடிப்படை உரிமைகளை உள்ளடக்கி தாங்களே தங்களை ஆளக்கூடிய, ஒரு பூரணமான ஒரு சுயாட்சியை ஏற்படுத்தக்கூடிய நல்லதொரு அரசியல் தீர்வை நோக்கி நகர வேண்டிய ஓர் இறுதிச்சந்தர்ப்பமாக இன்றைய நிலைமையை நாங்கள் கருத வேண்டியிருக்கின்றது என அந்தக் கூட்டத்திலே நாங்கள் தீர்மானித்தோம்.

தற்போது வடக்கு மாகாணத்திலும் அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும், காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை, அரசியல் கைதிகளின் தொடர்ந்து,5 ஆம் திகதி முதலமைச்சருடைய இல்லத்திலே அவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் குறிப்பாக என்னை அமைச்சர் வாரியத்திலிருந்து நீக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்திருக்கின்றார்.
முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவானது என்னை நிரபாராதி என்று தெரிவித்திருந்த போதிலும்கூட, அரசியல் நோக்கத்திற்காக என்னை அமைச்சர் வாரியத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக எடுத்து வருகின்ற தீராத முயற்சி அந்தக் கூட்டத்தில் வெளிப்பட்டிருக்கின்றது” என தனது இராஜினாமா கடிதத்தில் மருத்துவர் சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு  எதிராக ஒரேயொருவர்தான் 5 குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார். அந்த ஒரேயொருவர்  அனந்தி சசிதரன் ஆவார்.  அதில் ஒரு குற்றச்சாட்டு மருத்துவர் சத்தியலிங்கம் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு ருபா10 இலட்சம் கொடுத்தார் என்பது.

மறு விசாரணை வைப்பதற்கு முதலமைச்சர் சொன்ன சாட்டு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் சொல்லவில்லை,  காரணம் அவர்கள் வெனிநாட்டில் அப்போது இருந்தார்கள் என்பதே. அப்படி  வெளிநாட்டில் இருந்தவர் அனந்தி சசிதரன் மட்டுமே. அவர் ஜெனிவாவுக்குப் போன காரணத்தால்தான்  சாட்சியம் அளிக்கமுடியவில்லை என முதலமைச்சர் சொல்கிறார். ஓர் ஆண்டுக்கு அதிகமாக விசாரணை குழு விசாரணை நடத்தியது. அனந்தி சசிகரன் ஓராண்டு காலம் ஜெனிவாவில் இருந்தாரா?  இல்லை அது பொய் என்கிறார் மருத்துவர் சத்தியலிங்கம்.

அனந்தி சசிதரன் முறைப்பாடு செய்தாரேயொழிய அதனையிட்டு சாட்சியம் சொல்ல அவருக்குத்  துணிச்சல் இருக்கவில்லை. அவர் ஜெனீவா போவது ஐநாமஉ  பேரவையில் பேச அல்ல.  அங்கே பேசுதற்குரிய ஆங்கில மொழி அறிவு அவருக்குக் கிடையாது. அவர் போவது அங்குள்ள அங்காடிகளில்  துணிமணிகள் வாங்கிக் கொண்டு வர மட்டுமே. அவரது பயணச் செலவுகளை ஐரோப்பாவில் உள்ள வி.புலிகளின் மிச்சங்கள் கவனித்துக் கொள்கின்றன.

அது சரி. மருத்துவர் சத்தியலிங்கத்தின் மீது ஏன் முதலமைச்சருக்கு இந்த அதீத காய்ச்சல்? மூன்று  காரணங்களைச் சொல்லலாம்.

(1)   ஐந்து அமைச்சர்களில் அவர் ஒருவரே வினைத்திறன் மிக்கவராக இருந்தார்.  அவரே கனடா, ஐக்கிய இராச்சியம், னோர்வே போன்ற நாடுகளுக்குச் சென்று தனது அமைச்சுக்கு வேண்டிய உதவிகளைப் புலம்பெயர் தமிழர்களிடம் பெற்றுக் கொண்டார்.

(2) மத்திய அரசின் நல்வாழ்வு அமைச்சர் இராஜித சேனரத்தின அவர்களை அணுகியதன் பலனாக  கிட்டத்தட்ட ருபா  14,65,000   மில்லியன் ரூபா  செலவில் வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான நிதியைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.  நாட்டின் அமைச்சரவை அந்த வேலைத்திட்டங்களுக்கான அனுமதியை அண்மையில் வழங்கியுள்ளது. அதனையடுத்து  இரண்டு வாரத்துக்கு முன்னர் நெதர்லாந்து நாட்டு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இருவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து  மருத்துவர் சத்தியலிங்கத்தைச்  சந்தித்தபோது, ஒருசில மாதங்களில் இந்த வேலைத்திட்டத்தை  தொடங்கப்படும்  என்ற மகிழ்ச்சியான  செய்தியை அவருக்குத் தெரிவித்தார்கள்.

(3) யாரோ ஒருவர்  முதமைச்சர் காதில் அடுத்த முதலமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கம் என்ற செய்தியை அவரது காதுக்குச் சொல்லியிருக்க வேண்டும்.

இன்னொரு முதலமைச்சராக இருந்தால் நல்வாழ்வு அமைச்சர் சத்தியலிங்கத்தின் கெட்டித்தனத்தப் பாராட்டி முதுகில்  தட்டிக் கொடுத்திருப்பார். அதுதான்  முதலமைச்சருக்கு பெருந்தன்மையாக இருந்திருக்கும். ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்ன சொன்னார்? தன்னைக் கேளாமல் தனது அமைச்சர் ஒருவர் மத்திய அரசோடு பேசி தனது அமைச்சுக்கு நிதி வாங்கியிருக்கிறார் என ஒரு மூன்றாம் தர மனிதர் போல் பேசினார். பாம்புக்கு பல்லில்தான் விஷம். முதலமைச்சருக்கு உடம்பெல்லாம் விஷம்.

திருவள்ளுவர் இறைமாட்சி  என்ற அதிகாரத்தில் அரசனுக்கு இருக்க வேண்டிய குணாம்சங்கள் பற்றிக் கூறியிருக்கிறார். அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் அரசனுக்கு வேண்டிய சிறந்த குணங்கள் ஆகும். அதுமட்டுமல்ல ஈகை, இரக்கம், நீதி,  குடிமக்களைப் பாதுகாத்தல் இவைகளை உடைய அரசனே அரசர்களுக்குள் உயர்ந்தவன். அன்று அரசர்களுக்கு வள்ளுவர் சொல்லிய அறிவுரை இன்றைய மக்களாட்சி முறைமையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பொருந்தும். ஆனால் அவரது சொல்லும் செயலும் எதிர்மாறாக இருக்கிறது. மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். செருக்கு, சிளம், கெட்ட குணங்கள் அவரிடம் காணப்படுகின்றன. 

முதலமைச்சர் என்பவர் ஒரு நிறுவனத்தின் முக்கிய நிறைவேற்று அதிகாரியல்ல. ஓர் அமைச்சரவையில் எல்லா அமைச்சர்களும் சமமானவர்கள். முதலமைச்சர் முதல் இடத்தில் (First among the equals)  இருக்கிறார்.  அவ்வளவுதான்.

பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டிய முதலமைச்சர்  பொறாமை காரணமாக சின்னத்தனமாக நடந்து கொண்டார். பெரும்தன்மையாக எல்லோராலும் நடந்து கொள்ள முடியாது போலும். ஔவையார் சொன்னது போல நட்பு,  தயை

கொடை மூன்றும்  பிறவிக்குணம். பெருந்தன்மையும் அவ்வாறே!

அண்மையில் முதலமைச்சர் மனநலம் பற்றிப் பேசினார்.  மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் விசேட கவனிப்புக்களுடன் சமூகத்தில் இணைக்கப்படாவிட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வடமாகாண முதலமைச்சர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டிடத் தொகுதி மற்றும் மருத்துவர்களுக்கான விடுதி என்பன  அவரால் திறந்து வைக்கப்பட்ட போது சொன்னார்.  உண்மையில் முதலமைச்சர் அவர்களுக்கே இந்த  விசேட கவனிப்பு தேவைப்படுகிறது. அண்மைக் காலமாக  அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.

அண்மையில் வேளாண் அமைச்சராக நியமிக்கப்பட்ட கந்தையா சிவநேசனுக்கு முதலமைச்சர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ” ஊடகவியலாளர் தராக்கி சிவராம் கொலை தொடர்பாக குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே உமக்கு அமைச்சர் பதவி தரமுடியாது” எனக் குறிப்பிட்டார். இப்போது அதே பேர்வழியை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர். கேட்டால் குற்றம் நிரூபிக்கும்வரை ஒருவர் நிரபராதியாகக் கருதப் படவேண்டும்” என்று வியாக்கியானம் சொன்னார். அப்படியென்றால் மருத்துவர் சத்தியலிங்கம் மற்றும் பா. டெனீஸ்வரன் இருவரையும் விசாரணைக் குழு அமைக்கு முன்னரே தங்கள் பதவிகளை விட்டு கட்டாய ஓய்வில் போக வேண்டும் என்று ஏன் அடம்பிடித்தார்? குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிராபராதி என்பது சட்டம் படித்த முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கவில்லையா?

  • விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி   ஊழல்  செய்த இரண்டு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றார்.   பின்னர்  அமைச்சர்கள்  ஊழல்  செய்யவில்லை அதிகார முறைகேடுகள்தான் செய்தார்கள் என்றார்.   இரண்டாயிரம் வருடங்ளுக்கு முன்னர்  இயேசு கிறிஸ்து தான்  யூதர்களுடைய அரசன்,  பரமண்டலத்தில் இருக்கும் தனது பிதாவின் இராச்சியத்தை  கொண்டுவருவதாக  சொன்ன காரணத்தால்  குற்றவாளியாக இனங்கண்டு  அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். இருந்தும் மக்கள்  அவரை   இறைவனாகவும் இறைமகனாகவும்  இறை அவதாரமாகவும்     இப்போதும் உலகில் உள்ள 120 கோடி கிறித்தவர்கள்  வணங்குகிறார்கள்.

இரண்டாயிரம் வருடங்ளுக்கு முன்னர்  இயேசு கிறிஸ்து தான்  யூதர்களுடைய அரசன்,  பரமண்டலத்தில் இருக்கும் தனது பிதாவின் இராச்சியத்தை  கொண்டுவருவதாக  சொன்ன காரணத்தால்  குற்றவாளியாக இனங்கண்டு  அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். இருந்தும் மக்கள்  அவரை   இறைவனாகவும் இறைமகனாகவும்  இறை அவதாரமாகவும்     இப்போதும் உலகில் உள்ள 120 கோடி கிறித்தவர்கள்  வணங்குகிறார்கள்.Image result for Premananda

ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் யேசுநாதர் மீது அபாண்டமான ஒரு  குற்றச்சாட்டை சுமத்தினார்.  இயேசு பிரானை மக்கள் இன்றும் கடவுளாக வணங்கும்போது பிரேமானந்த சுவாமியை கடவுளாக வணங்குவதில் என்ன தவறு என வினா எழுப்பினார். இங்கு யாரை யாரோடு விக்னேஸ்வரன் ஒப்பிடுகிறார் என்பது ஊன்றிக்  கவனிக்கத் தக்கது.((நாளை மிகுதி)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply