முதலமைச்சர் பாலியல் சுவாமி பிரேமனந்தாவுடனான கள்ளத்தொடர்பு அம்பலம்

                          முதலமைச்சர் பாலியல் சுவாமி பிரேமனந்தாவுடனான கள்ளத்தொடர்பு அம்பலம்                                                        பலகோடி சொத்துக்களை விக்கினேஸ்வரனிடம் ஒப்படைத்த ஆதாரபூர்வமாண காணொளி   தினப்புயல் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது

Video: 2011ல் பிரேமானந்தா விக்னேஸ்வரனிடம் கொடுத்த இரண்டு பொறுப்புக்கள்! திட்டமிட்டே செய்யப்பட்ட அரசியல் பிரவேசம்??

Video: 2011ல் பிரேமானந்தா விக்னேஸ்வரனிடம் கொடுத்த இரண்டு பொறுப்புக்கள்! திட்டமிட்டே செய்யப்பட்ட அரசியல் பிரவேசம்??

இப்போது பார்வைக்கு எட்டியுள்ள இந்த ஒளிப்பதிவில், 2011ம் ஆண்டு பரோலில் (பாதுகாப்புடனான நிபந்தனைக்குட்பட்ட விடுப்பில்) இரண்டு நாட்கள் சிறையிலிருந்து ஆச்சிரமத்திற்கு வந்த பிரேமானந்தா நேரடியாகவே இலங்கையில் தனது மாநாடு நடத்தும் பொறுப்பை திரு. விக்னேஸ்வரன் அவர்களிடம் ஒப்படைக்கின்றார்.‘துர்க்காணந்தா’ என்கிற பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த தனது சீடனும், ‘விக்னேஸ்வரனும்’ தான் நினைத்தைச் சாதிப்பார்கள் என்று பிரேமானந்தா கூறுகின்றார். 2011ல் இந்த விடயம் நடந்து சில மாதங்களிலேயே பிரேமானந்தா இறந்தாலும் அவர் கூறியதற்கும் மேலாக பிரேமானந்தாவின் கோரிக்கையை திரு. விக்னேஸ்வரன் நிறைவேற்றுகின்றார் என்பதைச் சம்பவச் சாட்சியங்கள் கூறுகின்றன.

மகிந்த ராஜபக்சா தனக்கு நல்ல நண்பரென்றும், தான் அவருடன் ஆண்மிக ரீதியில் மாத்திரமே தொடர்புகளை இன்றுவரைப் பேணுவதாகவும், தன்னை இலங்கைக்கு எடுத்து அங்கே விடுவிக்க மகிந்த பல வழிகளைத் தெரிவிதத்தாகவும் பகிரங்கமாகக் கூறுகின்றார். மகிந்த செய்கின்ற அரசியல் பற்றியெல்லாம் தனக்கு அக்கறையில்லையென்று கூறுகின்றார். அதனை திரு.விக்னேஸ்வரனும் ஆமோதிக்கின்றார்.

பிரேமானந்தா தெரிவிக்கின்ற முக்கியமான தகவல் “எனது இந்தச் சொத்துக்கள் அனைத்தும் இலங்கையின் தமிழ்ப் பகுதியிலே இருக்கின்றன.” “விக்னேஸ்வரன் இவற்றைப் பார்த்துக் கொள்வார்”. “துர்க்காணந்தா சொல்கிறார், விக்னேஸ்வரனை என்னோடு இணைத்து விடுங்கள், மிகுதியை நாங்கள் இரண்டு பேரும் பார்த்துக் கொள்கின்றோம்”. ஒளிப்பதிவின் 5வது நிமிடத்தில் தமிழிலிருந்து உரையாடல் சிங்களத்திற்கு ஒரு சில விநாடிகளிற்குச் செல்கின்றது.

திரு. விக்னேஸ்வரனிடம் இரண்டு உறுதிமொழிகளை பிரேமானந்தா கேட்கின்றார். முதலாவது இலங்கையில் தங்களது மாநாட்டை நடத்துவது, இலங்கையில் பிரேமானந்தா ஆச்சிரம சர்வதேச மாநாட்டை நடத்த வேண்டுமென்று கோரி அதனை இவரால் தான் முடியும் என்றும் கையளிக்கின்றார்கள்.

இரண்டாவதாக தன்னுடைய “பூபாலகிருஸ்ணா நம்பிக்கை நிதியத்தை” பார்க்கும் பொறுப்பையும் கையளிக்கின்றார். அதிலும் தனது நிதியத்திற்குள்ள சொத்துக்களைப் பற்றி குறிப்பிடும் பிரேமானாந்தா அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை திரு. விக்னேஸ்வரனிடம் ஒப்படைக்கின்றார்.

இவற்றையும் இதனை விட மேலும் பலவற்றையும் இந்த 10 நிமிட ஒலிப்பதிவில் பார்க்க முடியும்.
வவுனியாவில் வசித்து அமரத்துவமடைந்த “எஸ்டேட் பொன்னம்பலம்” என்பவர் காணிகளைக் கையளித்துள்ளதாகச் சொல்கின்றார். அது தான் இப்போது புளியங்குளத்தில் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள பிரேமானந்தா ஆச்சிரமம் அமைந்துள்ள இடமாகும்.

அதிலும் அந்த நம்பிக்கை நிதியத்திற்கு விக்னேஸ்வரன் பல சொத்துக்களை கையளித்திருக்கின்றார் என்று இந்த ஒளிப்பதிவில் தெரிவித்திருக்கின்றார் அமரர் பிரேமானந்தா.

பிரேமானந்தாவின் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை திரு.விக்னேஸ்வரன் 1983ல் இருந்து வருடந் தவறாமல் இந்தியா சென்று 2011ம் ஆண்டுவரை செய்து வந்திருக்கின்றார். ஒவ்வொரு வருடமும் பிரேமானந்தா பரோலில் parole சிறையிலிருந்து ஆச்சிரமம் வரும்போதும் விக்னேஸ்வரன் அங்கு சென்று அவருடன் தங்கியிருப்பார்.

2009ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி பரோலில் வந்த போதும் தனது உரையை வழங்குகின்றார். திரு. விக்னேஸ்வரனே 50 நிமிடங்கள் மொழிபெயர்க்கின்றார். தமிழர்கள் 1 லட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்ட ஆண்டாக ஐக்கிய நாடுகளவை தெரிவிக்கும் 2009ம் ஆண்டு இன அவலம் உச்சம்பெற்றிருந்த மே மாதத்தில் நடக்கும் நிகழ்வில் இன அவலத்தைப்பற்றி எந்தவொரு குறிப்பிடலுமில்லாமல் அந்தப் பேச்சு முடிவுபெற்றது.

“நான் செய்து முடிப்பேன்” என்ற உறுதிமொழியைக் 2011ல் கொடுத்த திரு.விக்னேஸ்வரன், பிரேமானந்தா இறந்த பிறகு “பொட்டு” வைக்கத் தொடங்குகின்றார். அதாவது பிரேமானந்தா பொட்டு வைப்பது போல, கண்ணின் இரு புருவங்களுக்கும் மத்தியிலான பொட்டு வைத்தலைப் பின் பற்றுகின்றார்.

இப்போது இந்த விவகாரத்தை நாங்கள் அரசியலுடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2013ல் அரசியலிற்குள் வருகின்றார். துர்க்காணந்தாவின் வழிகாட்டுதல் தான் இதற்குக் காரணமாக இருக்கலாம். 2014ல் பிரேமானந்தா சொல்லியதை நிறைவேற்றுகின்றார். புளியங்குளத்திற்கு பல மேல்நாட்டவர் உள்ளிட்ட பிரேமானந்தாவின் பக்தர்களைக் கூப்பிடுகின்றார். கோவிலொன்றைக் கட்டுகின்றார். தானே திறந்தும் வைக்கின்றார். பிரேமானந்தா விரும்பிய சர்வதேச மாநாட்டை நடாத்துகின்றார். இந்தியப் பிரதமர் மோடிக்குக் கூட உத்தியோகபூர்வக் கடிதத் தலைப்பில் பாலியல் கற்பழிப்புக்கள், கொலைகள் ஆகியவற்றுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வரை விடுவிக்குமாறு கடிதம் எழுதுகின்றார்.

பிரேமானந்தாவின் கோரிக்கையின் பிரகாரம் அவரது நிதியத்தையும் திரு.விக்னேஸ்வரனே இப்போது பராமரித்து வருகின்றார் என நம்பப்படுகின்றது. பிரேமானந்தா கட்டளையிட்டதை போல தமிழ்ப் பகுதிகளில் உள்ள சொத்துக்களை பராமரிக்கின்றார். சம்பந்தனுடன் கூட விக்ணேஸ்வரன் நெருக்கமாக வரலாம் காரணம் நிலாவெளியில் உள்ள பிரேமானந்தாவின் சொத்தொன்றைப் பராமரிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.

ஆக, முதலமைச்சராக திரு.விக்னேஸ்வரன் அரசியலிற்கு வந்ததே பிரேமானந்தாவின் இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றவா என்ற கேள்வி தவிர்க்க முடியாதபடி எழுகின்றது. முதல்வர் பதவியை இவர் தவறாகப் பயன்படுத்துகின்றாரா என்ற கேள்வியும் எழுகின்றது. அதிலும் புளியங்குளத்தில் அமைந்துள்ள ஆச்சிரமத்தையொட்டிய பணிகளிலேயே இவரது அதிக கவணம் செல்கின்றது என்பதோடல்லாமல்,

வவுனியாவில் வைத்துத்தான் அரச உத்தியோகத்தர்கள் மீது முதல்வர் கடுமையாகக் கோபமடைந்தார். அது கூட வவுனியா, புளியங்குளம் போன்ற இடங்களிலிருந்தும் ஆச்சிரம் சார்ந்த இடங்களிற்கான தேவைகளைப் பெறுவதற்கா என்ற கேள்வியும் எழுகின்றது. கீழேயுள்ள இணைப்பு முதலமைச்சர் வவுனியாவில் அரச அதிகாரிகளின் மீது கோபப்பட்டு வெளியிட்ட செய்தி.

எனவே முதல்வர் தான் அரசியலில் இருக்கும் வரை “ஆச்சிரப்பணிகளிலிருந்து” தற்காலிகமாக விடுவித்துக் கொள்ள வேண்டும். சேர். பொன். இராமநாதன், சேர்.பொன். அருணாச்சலம் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரனின் பேரரான விக்னேஸ்வரன் தமிழர்களின் வரலாற்றில் பழிச்சொல் ஏற்கக்கூடாது என்பது எங்களின் ஆதங்கம்.

முதல்வர் விக்னேஸ்வரன் தமிழர்களிற்கு தேவையானவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தேவையானவர். முதல்வரிற்கான வேட்பாளராக அவர் எந்தவித முற்கூட்டிய அரசியல் பங்களிப்புமின்றே தெரிவு செய்யபடுவதற்கே அவர் வகித்த உயர்நீதிமன்ற நீதியரசர் என்ற பதவி கூடக் காரணமாயிற்று.

78 வயதில் அவர் தனது முதல்வர் பதவிக்கான பணிகளை நிறைவேற்ற முனைவதும், வடக்கின் முகமாக இருப்பதும் மறுக்கப்பட முடியாத ஒரு தேவை. ஆனால் அவர் தமிழர்களின் ஒற்றுமையின் சிதைவாக, அவரை அப்பாவித்தனமாக நம்பவைத்து சிலர் முயற்சிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுப் பலமாக உண்டு.

இவற்றிலிருந்து தன்னைத் தவிர்த்து, “நான் ஒரு அரசியல்வாதியல்ல, மக்களிற்கான சேவையாளனாக இருந்து வருகின்றேன்” என்பதை நிரூபிக்க அவர் இயன்றளவு முயன்று வந்தாலும் இந்திய நீதிமன்று திரு.விக்னேஸ்வரனை “யதார்த்திற்குப் புறம்பான சிந்தனையாளராக” wishful thinker எனக் குறிப்பிட்டதானது, அவர் அவ்வாறான ஒரு ‘போலி ஒளிவட்டநிலையில்’ இருந்து வருகின்றாரா என்ற கேள்வியே எங்களிற்கு கீழ்க்காணும் ஒளிப்பதிவு நடாவைப் பார்த்த போது ஏற்படுகின்றது.

ஒருவர் “யதார்த்திற்குப் புறம்பான சிந்தனையாளராக” இருந்தால் அவர்கள் களநிலைமையிலிருந்து வேறுபட்டு, யதார்த்ததிலிருந்து அந்நியப்பட்டு, தாங்கள் நினைப்பதையே உண்மையாக எண்ணி, அல்லது எதிர்காலத்தில் ஏற்படும் என அறுதியாக நம்பி அதன் வழியே பயணிப்பார்கள் என்பதே மிகவும் ஆபத்தான உண்மையாகும்.

கனடா போன்ற வெளிநாடுகளில் அவரது உத்தியோகபூர்வக் கணக்கில் வராமல் சேர்க்கப்படும் பணம் கூட அவரது குருவான பிரேமானந்தா மீதான நம்பிக்கை சார்ந்த செயல்களிற்குச் “பூபாலகிருஸ்ணா நம்பிக்கை நிதியத்திற்கே” செல்கின்றது என்ற சந்தேகம் ஏற்பட வாய்ப்புண்டு.

வடக்கு மாகாணம் 35விழுக்காடு கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும், பௌத்தர்களையும் கொண்டது. எனவே அந்தப் பிரதேசத்தை ஆளும் முதல்வர் தமிழர்களின் முதல்வராக இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரோடு பயணிப்போம்.

wicky vavuniya

 

 

 

 

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply