அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்!

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்!

நடப்பவை யாவும் கேலிக் கூத்து அல்லநாடாளுமன்ற சனநாயகத்தின் சட்டப் பூர்வமான நகைச்சுவைப் பக்கங்கள்..

மேகதாத்தின் குறுக்கே அணைபிளஸ் மதிப்பெண்படி மருத்துவ இடங்களை நிரப்புதல்கதிராமங்கலம்,நெடுவாசல் மக்களின் உரிமைப் போராட்டம்நடுக்கடலில் அடித்து விரட்டப்படும் மீனவர்கள்அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் என ‘அற்பமான’ விசயங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு அணிகள் இணைப்புக்காக நடந்த அடுத்ததடுத்த காட்சிப் படங்களால் அரசியல் சூழல் பரப்பரப்பாகிக் கிடக்கிறது.மக்களின் மாபெரும் ஜனநாயக உரிமை என்று பறைசாற்றப்படும் வாக்குகளைப் பெற்று சட்ட மன்ற உறுப்பினர்களாக ஆனவர்கள் கோமாளிகளாகவும் நாளுக்கொரு பேச்சு பேசியபடி ‘ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்கள்’ என்று நம்ப வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகின்றனர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட இந்நடிகர்கள் நாடக மன்றத்தில் தங்கள் ஆடைகளை களைந்து வெவ்வேறு வேடம் பூண்டுக் கொள்ளவும் இடம்ராமனாய் நடித்தவன் ராவணன் ஆகலாம்இலட்சுமனன் வாலியாகலாம்,ஏன் சீதையாய் நடித்தவர் கூனியாகலாம்கைகேயி சீதையாகலாம்.. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்களோ நாடகம் முடியும் வரை அதாவது ஐந்தாண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும்அதற்கு பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்அந்த வாய்ப்பைப் பயன்படுத்திவிட்டால் மீண்டும் ஒரு ஐந்தாண்டுகளுக்கு பார்வையாளர் ஆக வேண்டிய மாபெரும் ஜனநாயக உரிமையை மக்களின் எஜமானர்கள் வழங்கியுள்ளனர்.

.பி.எஸ்ஸின் நீதிக்கான ’தர்மயுத்தம்’ நிதி அமைச்சகம் கிடைத்தவுடன் முடிவுக்கு வந்துவிட்டது.சேர்வதற்கோபிரிவதற்கோ ஆசி வழங்குவதற்கு அம்மாவின் ஆன்மா இருக்கிறது.பி.எஸ்தியானம் செய்துதான் தனது கலகக்கார வேடத்தை வெளிப்படுத்தினார்அம்மாவின் கல்லறை மீது சத்தியம் செய்து சிறைக்குப் போயுள்ளார் சின்ன அம்மாஅம்மாவின் ஆன்மாவின் ஆசிக்காக கல்லறையின் முன்பு எடப்பாடி விழுந்து எழுகிறார் டி.டி.விஅணியில் உள்ள 19 பேரும் அம்மாவின் கல்லறையில் தியானத்தில் இருக்கிறார்கள்மோடிமோடி என்று நாடெங்கும் உச்சாடனம் நடந்து கொண்டிருந்த வேளையில் மோடியா?லேடியாஎன முழங்கிய ’அம்மா’ இறந்ததாக அறிவிக்கப்பட்ட அன்றே அவசர அவசரமாய் அவரது பக்த கேடிகளால் அடக்கம் செய்யப்பட்டு லேடிக்குப் பின் மோடி என காலில் விழுந்தனர்மோடியோலேடியோ பதவிக்காக விழ வேண்டிய கால்கள் எதுஎன்பது மட்டும்தான் இங்கே கேள்விஅம்மாவின் அருளாசி யாருக்கென்று அவர்களுக்கு தெரியாதுஆனால்யாருக்கும் விதிவிலக்கில்லைகல்லறையில் வந்து விழுந்து கும்பிட்டாக வேண்டும்ஏனென்றால் அதுதான் அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரம்.

கேலிக்கூத்து நடக்கின்றதுபதவி பேரம் நடக்கின்றதுஊழல்ஊழல் என்று மேடையைச் சுற்றிலும் அரிதாரம் பூசிய நடிகர்கள் குழு சத்தம் எழுப்பியபடி இருக்கின்றனஏனென்றால் அவர்கள் எவ்வளவுக்கு உரக்கப் பேசுகிறார்களோ அவ்வளவுக்கு அவர்கள் அடுத்த நாடக மன்றத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கிறதுஆனால்இப்போது கேள்வி என்னவென்றால் – மிக தொன்மையான வரலாறு கொண்ட,பாரம்பரியமிக்க கலைஇலக்கியபண்பாட்டுச் செழுமை கொண்டகீழடி சொல்லும் காலந்தொட்டு நகர நாகரிகம் கண்டஇந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியில் இரண்டாவது இடத்தில் இருக்கும்தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலாவது இடத்தில் இருக்கும் ஏழரை கோடி மக்களைக் கொண்ட ஒரு மாநிலத்தை ஓ.பி.எஸ்., .பி.எஸ்டி.டி.விபோன்ற கோமாளி நடிகர்கள் சேர்ந்து முட்டாளாக்கிவிட முடியுமா?

மனிதர்கள் தமது வரலாற்றை உருவாக்குகிறார்கள்ஆனால்அவர்கள் விரும்பும்படி அவர்களால் அதை உருவாக்க முடிவதில்லைதமக்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட வரலாற்று நிலைமைகளில்கடந்த காலம் தம் முன் விரித்துள்ள சூழ்நிலைமைகளின் மீது வினையாற்றுவதன் மூலம்தான் தமது வரலாற்றை உருவாக்கிக் கொள்கின்றனர்அது போலவேபிரிவும் இணைப்பும் என கேலிச் சித்திரங்களால் நிரப்பப்பட்ட இந்தக் காட்சிகளைத் தீர்மானித்த வரலாற்று நிலைமைகள் என்ன?

http://ilanthamizhagam.org/author/ilanthamizhagam/

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply