பாரிஸ் அதிசொகுசு ஹோட்டலில் மஹிந்தவின் மனைவி!

அம்பலமான பாரிஸ் அதிசொகுசு ஹோட்டலில் மஹிந்தவின் மனைவி! ஆதாரம்

யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பிரான்ஸ் சென்றிருந்தார்.

2014ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

இதற்காக அவர் தனது உறவுக்கார பெண்ணான டேசி பொரஸ்ட் என்பவரையும் அந்த விஜயத்தில் இணைத்து கொண்டிருந்தார்.

அந்த விஜயத்திற்காக 2,508,0681.49 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது. அந்த பணத்தில் 153,608 ரூபாய் மது அருந்துவதற்கு மாத்திரம் செலவிடப்பட்டுள்ளதாக விலை பட்டியல் ஒன்று தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதற்கமைய ஷிரந்தி ராஜபக்சவினால் மே மாதம் 22ஆம் திகதி 45,864 ரூபாய் மதுபானம் அருந்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மே மாதம் 24ஆம் திகதி இரண்டு சந்தர்ப்பங்களில் மது அருந்துவதற்காக 107,744 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதற்கமைய மதுபானத்திற்கான மொத்த செலவு 153,608 ரூபாயாகும்.

ஷிரந்தி ராஜபக்ச உட்பட குழுவில் தூதுவ அதிகாரிகள் இருவரும் இருந்துள்ளனர். அவர்கள் நால்வருக்குமான அறை மற்றும் உணவுக் கட்டணமாக 16,175,465.76 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இவர்கள் இந்த சுற்றுலா பயணத்திற்கு மேலதிகமாக தனிப்பட்ட பயணங்கள் சிலவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த அனைத்து தனிப்பட்ட பயணங்களுக்கான வாகன வசதிகள் பெற்றுக் கொள்ளும் போது அதி சொகுசு வாகனங்களையே பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக 7,593,061.56 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவினர் தங்குவதற்காக பெற்றுக் கொண்ட ஹோட்டல், உலகிலேயே அதிகமான கட்டணம் செலுத்தப்படும் ஹோட்டலாகும். அங்கு கட்டணம் அதிகம் என்பதனால் பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி உட்பட பல பிரபலங்கள் இந்த ஹோட்டலில் தங்குவதனை தவிர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Shirani

 

http://www.tamilwin.com/politics/01/156219?ref=home-top-trending

 

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply