விக்னேஸ்வரன் தமிழர்களின் வரமா? சாபமா?

விக்னேஸ்வரன் தமிழர்களின் வரமா? சாபமா?

விக்னேஸ்வரன் தமிழர்களின் வரமா? சாபமா?

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வைக் குழப்­பங்­க­ளைத் தொடர்ந்து அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னைக் கட்­சி­யி­லி­ருந்து 6 மாதங்­க­ளுக்­குத் தற்­கா­லி­க­மாக நீக்­கி­யி­ருக்­கி­றது ரெலொ அமைப்பு.

அதன் மூலம் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் நட­வ­டிக்­கை­கள் ஊடாக கட்­சிக்­குள் உடைவு அல்­லது குழப்­பம் ஏற்­பட்ட மூன்­றா­வது அமைப்­பாகி இருக்­கி­றது ரெலோ.

முத­ல­மைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­ற­தில் இருந்தே சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் நட­வ­டிக்­கை­கள் ஏதோ­வொரு விதத்­தில் கட்­சி­கள் அனைத்­தை­யும் பாதித்­துள்­ளன.

கூட்­ட­மைப்­பில் உள்ள கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­களை மட்­டு­மல்ல, கட்­சி­க­ளுக்கு உள்ளே உறுப்­பி­னர்­கள் இடை­யி­லான உற­வு களையும் பாதித்­துள்­ளன.

முதன் முத­லில் அமைச்­ச­ர­வையை நிய­மித்­த­போதே இந்­தப் பிரச்­சினை ஆரம்­பித்­து­விட்­டது. தகு­தி­யா­ன­வர்­க­ளைத்­தான் அமைச்­சர்­க­ளாக நிய­மிப்­பேன் என்று கூறிக்­கொண்டு ஈபி­ஆர்­எவ் அமைப்­பின் கோரிக்­கையை நிரா­க­ரித்து பொ.ஐங்­க­ர­நே­சனை விவ­சாய அமைச்­ச­ராக நிய­மித்­தார். இதன் மூலம் ஈபி­ஆர்­எல்­எவ் அமைப்­பி­லி­ருந்து ஐங்­க­ர­நே­சன் பிரி­யக் கார­ண­மா­னார்.

ஊழல் குற்­றச்­சாட்டு விசா­ர­ணை­யின் முடி­வில் அமைச்­சர்­கள் பொ.ஐங்­க­ர­நே­ச­னை­யும் த.குரு­கு­ல­ரா­சா­வை­யும் பத­வி­க­ளைத் தியா­கம் செய்­ய­வேண்­டும் என்று கேட்­ட­தன் பய­னாக மற்­றைய இரு­வ­ரை­யும் பதவி விலக்­கு­வ­தில் குறி­யாக இருந்­தார்.

அதன் மூலம் ரெலோ கட்­சிக்­குள் பிளவை ஏற்­ப­டுத்­தி­னார். அமைச்­சர் டெனீஸ்­வ­ரனை அந்த அமைப்பு அடிப்­படை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்தே தூக்கி வீசி­விட்­டது.

புளொட் அமைப்­புக்­குள் அமைச்­சுப் பதவியை யாருக்கு வழங்­கு­வது என்­பது தொடர்­பில் மாகாண சபை உறுப்­பி­னர் லிங்­க­நா­தன் தனது புளொட் கட்­சி­யு­டன் மனக் கசப்­புக்­களை உரு­வாக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

தமிழ் அர­சுக் கட்­சி­யை­யும் அவர் விட்­டு­வைக்­க­வில்லை.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு உரிய அமைச்­சுப் பத­வியை வ.கம­லேஸ்­வ­ர­னுக்கு வழங்­கப்­போ­வ­தாக அவ­ரி­டம் தெரி­விக்­கப்­போக, இப்­போது தமி­ழ­ர­சுக் கட்­சி­யைத் சேர்ந்த சிலர் சம்­பந்­த­ரி­டம் அதற்­கா­கத் தூது போயி­ருக்­கி­றார்­கள்.

அமைச்­ச­ர­வை­யில் இடம் பெறு­வது இல்லை என்று கட்­சித் தலை­மை­யும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும் முடிவு செய்த பின்­னர், அங்­கே­யும் ஓர் விரி­சல் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இப்­படி தன்னை ஆட்­சிக்­குக் கொண்டு வந்த கட்­சி­கள் அனைத்­திற்­குள்­ளும் தனது நட­வ­டிக்­கை­கள் ஊடா­கக் குழப்­பங்­க­ளைக் கனகச்­சி­த­மாக விளை­வித்­து­விட்­டார் முத­ல­மைச்­சர்.

தான் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக வர­வேண்­டும் என்­றால் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் நான்கு கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும் ஒன்­றா­கக் கோரிக்கை விடுக்­க­ வேண்­டும் என்று வலி­யு­றுத்தி, அதற்­கூ­டாக ஒற்­று­மைக்­கான சமிக்­ஞை­யைக் காட்­டிய முத­ல­மைச்­சர், தற்­போது அந்­தக் கட்­சி­க­ளுக்கு உள்­ளேயே குழப்­பங்­க­ளை­யும், பிரி­வை­யும், பிரி­வி­னை­யை­யும் ஏற்­ப­டுத்­திய ஒரு­வ­ரா­கி­விட்­டார்.

இந்த நிலை­யில் தமிழ் மக்­க­ளின் எதிர்ப்பு அர­சி­ய­லின் அடை­யா­ள­மாக முத­ல­மைச்­சர் உரு­வ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கொழும்பு அர­சின் நண்­ப­னாகி இணைந்­தோ­டும் அர­சி­யலை மேற்­கொள்­வ­தால், முத­ல­மைச்­சர் தன்னைத்தானே எதிர்ப்பு அர­சி­ய­லின் கதா­நா­ய­க­னாக நிலை­நி­றுத்­திக்­கொள்­ளப் பார்க்­கி­றார்.

இத­னா­லேயே அவரை மாற்று அணிக்­குத் தலைமை தாங்­கு­மாறு அழைப்பு விடுக்­கி­றார்­கள். தமிழ் மக்­களை ஓர­ணி­யில் இணைத்து, எதிர்ப்பு அர­சி­ய­லின் தொடர்ச்­சியை அவர் முன்­னெ­டுப்­பார் என்­கிற பெரும் எதிர்­பார்ப்பு அப்­படி அழைப்பு விடுப்­ப­வர்­க­ளி­டம் காணப்­ப­டு­கி­றது.

ஒரு பக்­கத்­தில் தமிழ் மக்­களை ஒருங்­கி­ணைத்து அவர்­க­ளின் வேண­வாவை, விருப்­பத்தை, வேட்­கையை வென்­றெ­டுப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டும் ஒரு­வர், மறு­பு­றத்­தில் யதார்த்­தத்­தில் அதே தமிழ் மக்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் கட்­சி­க­ளுக்கு இடை­யி­லும், கட்­சி­க­ளுக்கு உள்­ளே­யும் குழப்­பங்­க­ளை­யும் சர்ச்­சை­க­ளை­யும் பிள­வு­க­ளை­யும் உரு­வாக்­கு­வ­தற்­கும் கார­ண­மாகி இருக்­கி­றார்.

அத­னால்­தான் அவர் வரமா சாபமா என்­கிற கேள்­வியே இங்கு எழு­கி­றது.

http://www.jvpnews.com/srilanka/04/137227?ref=recommended3


About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. வட மாகாண சபை குரங்கு கைப் பூமாலையாகி விட்டது. எல்லா விதத்திலும் வட மாகாண சபை ஏனைய மகாண சபைகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருக்கும் என்றுதான் பலர் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்புப் பிழைத்துவிட்டது. அது மட்டுமல்ல நரிக்கு நாட்டாமை கொடுத்த கதையாகவும் மாறிவிட்டது. அமைச்சரவை அமைக்கும் அதிகாரத்தை சம்பந்தன் அவருக்கே வழங்கிவிட்டார். இது விக்னேஸ்வரனின் அதிகாரப் பசிக்கு தீனி போட்டது போன்றாகி விட்டது. மாகாண சபையை தனது எண்ணப்படியே நடத்தத் தொடங்கினார். தனது சொல்லுக்கு மறு சொல் கிடையாது என நம்ப தொடங்கினார். விளைவு? தான் ஏறிய ஏணியை உதைத்துத் தள்ளினார். “தமிழரசுக் கட்சியின் செல்வாக்கால் அல்ல எனது சொந்தச் செல்வாக்கால் தேர்தலில் வென்றேன்” என்று பிதற்ற தொடங்கினார். 2015 தேர்தலில் முதலில் தான் நடு நிலமை வகிக்கப் போவதாகச் சொன்னாார். பின்னர் வீட்டை விட்டு வெளிவந்து மாற்றத்துக்கு வாக்களியுங்கள் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டார். அவரது ஆசை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறைந்தது இரண்டு மூன்று இருக்கைகளைப் பிடிக்க வேண்டும் என்பதுதான். அவரது கனவு பொய்த்தது. ஆனால் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் ஆனார். இந்த தமிழ் மக்கள் பேரவை புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் பினாமி அமைப்பாகும். அதன் யாப்பையும் அதன் கட்டமைப்பையும் படித்துப் பார்த்தாலே தெரியும். அப்போதே விக்னேஸ்வரனது பதவியைப் பறித்துவிட்டு வீட்டுக்கு அவரை அனுப்பி வைத்திருக்க வேண்டும். இதனை சம்பந்தன் ஐயா செய்யத் தவறினார். தன்னால் அரசியலுக்கு கொண்டு வந்தவரை எப்படி வீட்டுக்கு அனுப்புவது என்று அவர் யோசித்தார் போலும். தமிழ் அரசுக் கட்சி பின்வாங்குவதை விக்னேஸ்வரன் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு இருண்டு ஆடு கேட்குமாம். மாகாண சபையில் இடம்பெற்ற முறைகேடுகள் பற்றி ஒரு விசாரணைக் குழுவை விக்னேஸ்வரன் நியமித்தார். இந்த விசாரணைக் குழுவுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் மாகாண சபை சட்ட திட்டங்களில் இல்லை. ஆனால் அந்த விசாரணை அறிக்கையை வைத்து தனக்குப் பிடிக்காத (விதி விலக்கு ஐங்கரநேசன்) அமைச்சர்களை பழிவாங்கப் பயன்படுத்தினார். விசாரணைக் குழுவால் குற்றமற்றவர்கள் எனக் காணப்பட்ட நல்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் இருவரும் கட்டாய ஓய்வில் ஒரு மாதம் போக வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். உண்மையில் அவரது இலக்கு அமைச்சர் சத்தியலிங்கம்தான். அவரை “மாட்ட முடியாதா” என விசாரணை குழு உறுப்பினர்களிடமே கேட்டார். இப்போது மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில் ஏறிக் கொண்டது போல முதலமைச்சர் நினைத்தபடி அமைச்சரவையை அமைத்துக் கொள்ளலாம் என சம்பந்தர் ஐயா பச்சைக் கொடி காட்டி விட்டார். இது போதாதா? இப்போது அமைச்சர்கள் நியமனத்தில் விக்னேஸ்வரன் பந்தடித்து விளையாடுகிறார். மக்கள்தான் பாவம். இலவு காத்த கிளிபோல் ஆகிவிட்டார்கள்!

Leave a Reply