இந்திய ஜனாதிபதியின் சம்பளம் எவ்வளவு? என்னென்ன சலுகைகள் கிடைக்கும்

இந்திய ஜனாதிபதியின் சம்பளம் எவ்வளவு? என்னென்ன சலுகைகள் கிடைக்கும்

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந் அவர்கள் பதவியேற்றுள்ளார்.

ராம்நாத்தின் சம்பளம், தற்போது 3,00,000 ரூபாயாக உள்ள ஜனாதிபதியின் மாத சம்பளம் விரைவில் 5,00,000 ரூபாயாக மாற்றப்பட இருக்கின்றது.

உலக நாடுகளினை ஒப்பிடும் போது இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந் வசிக்க இருக்கும் வீடு மிகப் பெரியதாகும்.

330 ஏக்கர் நிலத்தில் 2,00,000 சதுர அடியில் 340 அறைகள் கொண்ட ஒற்றைக் கட்டிட வீடு. இதில் நூலகங்கள், உணவகங்கள் எனப் பல தரப்பட்ட வசதிகள் கிடைக்கும்.

ராஷ்டிரபதி பவனில் இந்திய குடியரசு தலைவர் தங்க இருக்கும் வீட்டினை முறையாகக் கவனித்திகொள்ள 200 ஊழியர்கள். அது மட்டும் இல்லாமல் 5 செயலக ஊழியர்கள் உள்ளனர்.

இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்து ராஷ்டிரபதி பவனில் வசிக்க இருக்கும் வீட்டின் ஒரு வருட மிசாரக் கட்டணம் மட்டும் 6.7 கோடி ரூபாய்.

ராம் நாத் கோவிந் அவர்கள் ராஷ்டிரபதி பவன் மட்டும் இல்லாமல் விடுமுறை தினங்களில் வசிக்க ஹைதராபாத் மற்றும் சிம்லாவில் ஓய்வு வீடுகள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் இலவசமாக அரசின் செலவில் தங்க முடியும்.

கோவிந்த் வியப்பூட்டும் பிளாக் மெர்சிடிஸ் பென்ஸ் S600 (W221) புல்மேன் கார்டு கார் பயன்படுத்த அளிக்கப்பட்டுள்ளது, இதில் புல்லட் ப்ரூப், துப்பாக்கிகள் போன்றவை உள்ளன. இவரது வாகன பட்டியலில் முன்னல் குடியரசு தலைவர் பிரனாப் முக்கர்ஜி பயன்படுத்திய கருப்பு மெர்சிடிஸ்-பென்ஸ் W140-ம் உண்டு.

இந்திய குடியரசு தலைவரும் அவரது மனைவியும் அரசின் செலவில் இலவசமாக உலகம் முழுவதும் எங்கு வேண்டும் என்றாலும் சென்று வரலாம்.

குடியரசு தலைவர்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்து பாதுகாப்பான VR6/VR7 வகுப்புச் சேவைகள் அளிக்கப்படும். இவரது பாதுகாப்பிற்கு ராணுவத் துப்பாக்கி குண்டுகள், வெடி குண்டுகள் போன்றவற்றால் உயிற் சேதம் ஏதும் ஏற்படாத அளவிற்குப் பாதுகாப்புக் கவசம் அளிக்கப்படும்.

ஓய்வூதிய காலத்தில் தங்க வீடு, இரண்டு இலவச தரைவழி போன் மற்றும் ஒரு மொபைல் போன் வரம்பற்ற இணையதளச் சேவையுடன் வழங்கப்படும். இலவசமாக ரயில் மற்றும் விமானத்தில் பயணம் செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் 205 லிட்டர் பெட்ரோல் இலவசம். சொந்தக் காரை பயன்படுத்த வாகன ஓட்டுநர்களுக்கு அரசங்கம் சம்பளம் அளிக்கும்.

 

http://news.lankasri.com/india/03/129563

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply