இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 90 – 91-1

பெண்களுக்கு மோட்சம் கிடையாது! கடவுளுக்கு வேலை என்ன? பகுதி 90 

 மோட்சம் பெறுவது எப்படி? கடவுளுக்கு வேலை மகாலட்சுமியுடன் இருந்து சந்தோஷிப்பதுதான்.

பெண்களுக்கு மோட்சம் கிடையாது அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம்.

உடலுறவுக்கு மோட்சலோகத்தில் ஸ்த்ரிகள் நிறைய பேரை அங்கு போனவன் படைத்துக் கொள்வான்.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 90. 91-1

பகுதி 90

உன்னை இங்கு படைப்பவள் அம்மா – நீ நினைத்தால் உன் அம்மாவையே அங்கு படைக்கலாம் உன்னைப் படைத்தவர் அப்பா நீ நினைத்தால் உன் அப்பாவையே அங்கு படைக்கலாம் இப்படியொரு Super Nature சூத்திரத்தின் படி சொல்லப்பட்டு வரும் மோட்ச உலகத்தைப்பற்றி போன அத்தியாயத்தில் பார்த்தோம்.

இப்படியெல்லாம் இருக்குமா? பசி, பட்டினியற்ற இந்த உலகத்துக்குப் போகவேண்டும் என்றால் எப்படிப் போவது?

இதற்காக சாந்தோக்ய உபநிஷத்தில் பல வித்யையைகள் ஓதப் பெற்றிருக்கின்றன அதாவது இந்த உபநிஷதுவின் மூன்றாம் அத்தியாயம் முதலாக. மதுவித்யை, காயத்ரீ ப்ரம்ம வித்யை, சாண்டில்ய வித்யை, ஸம்வர்க வித்யை, ஷோட சகல ப்ரம்ம வித்யை உபகோஸல வித்யை, ப்ராண வித்யை, பஞ்சாக்னி வித்யை இப்படியாக பல வித்யைகள் போய்க் கொண்டே இருக்கின்றன.

இந்த வித்யைகளை ப்ரம்மன் ப்ராஜபதிக்கும் ப்ராஜபதி மநுவுக்கும், மநு பிரஜைகளுக்கும் உபதேசித்தாராம்.

அப்படி என்ன இருக்கின்றன அந்த வித்யைகளில்?

ஆத்மாவை அறிபவன் மோட்சம் பெறுகிறான் இதுதான் இந்த ONE LINE உபநிஷது.

இந்த ப்ராஜபதிக்கு தேவர்களும், அசுரர்களும் பிள்ளைகள் ஆத்மாவை அதன் எட்டு குணங்களோடு அறிந்தவனுக்கே மோட்சம் என வாக்கியமொன்றை உலகமெங்கும் பரவவிட்டார்.

உடனே. தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் பிரதிநிதியாக விரோசனனும் தங்கள் அப்பாவான ப்ராஜபதியிடம் ‘மோட்சம் பெறுவது எப்படி? என கற்பதற்காக 32 வருஷம் ப்ரம்மச்சர்யம் இருந்து வந்தார்கள் அப்போது அப்பா சொன்னார்

ஒரு மடக்கில் ஜலம் வார்த்து நன்றாகப் பாருங்கள் நல்ல அலங்காரங்களை செய்துகொண்டு பாருங்கள் ஏதும் தெரியாமல் இருந்தால் கேளுங்கள் என்றார்.

அசுரர் தலைவர் விரோசனன் பார்த்தான் அவன் ரூபமே மடக்கு தண்ணீரில் தெரிந்தது ஓ இதுதான் ஆத்மா என தீர்மானித்து தன் அசுரர்களுக்கு இதையே உபதேசித்தான் இதனால் அசுர குலமே தேஹாத்மவாதிகளாகி விட்டார்கள் அதாவது தேகத்தை தான் ஆத்மா என தப்பாக நினைத்தவர்களாகி விட்டார்கள்

ஆனால், தேவர் தலைவர் இந்திரன் இது நமது முகம் மாதிரியே இருக்கிறதே என யோசித்து மறுபடியும் தன் அப்பாவிடமே வந்தான். அவர் மறுபடியும் இந்திரனை 101 வருஷங்கள் காக்க வைத்து உபதேசம் செய்து மோட்சத்துக்கு அனுப்பினாராம்.

அதாவது அசுராளுக்கு மோட்சம் இல்லை தேவர்களுக்கு தான் மோட்சம் என்ற பாகுபாட்டை நிரூபிப்பதற்காக இந்தக் கதை நினைத்திருந்தால் அன்றே அந்த ப்ராஜபதி அசுராளுக்கும், ஆத்மாவைப்பற்றி சரியாக உபதேசித்திருக்க முடியுமல்லவா?

இதை உபநிஷது பண்ணிய ரிஷிகள் நினைக்கவில்லை அவ்வளவு தான்.

அதே உபநிஷதுகளில் இன்னொரு வித்யை.

அருணமகரிஷியின் பிள்ளை உத்தாலகர் உத்தாலகரின் மகன் ச்வேதகேது அந்த ச்வேதகேது வேதம், சம்பிரதாயம் எதுவும் கற்க விருப்பமில்லாமல் சுதந்திரமாய் திரிந்தான்.

இதைக் கண்ட அவன் அப்பா உத்தாலகர் ‘டேய் இதுமாதிரி வேத அத்யயனம் பண்ணாத பிராம்மணனாய் இருந்து என்ன பயன்? வெளியே போய் குருகுல வாசம் செய்து கற்றுக்கொண்டு வாடான்னு அனுப்பி வைத்தார்.

அப்பா பேச்சால் உணர்ச்சி வசப்பட்ட ச்வேதகேது வெளியே போனான் எல்லா வேதங்களையும் ஸாங்கோபாங்கமாகக் கற்று இனி நாம் கற்க எதுவும் இல்லையென்று வீட்டுக்கு வந்துவிட்டான்.

அப்பா உத்தாலகர், ‘என்னடா திரும்பி வந்துவிட்டாய்? என்றார்.

’12 ஆண்டுகளாகப் படித்து விட்டேன் இனிமேல் நான் படிக்க ஒன்றுமில்லை. என்றான் அந்த 24 வயது இளைஞன். ‘எதைக் கேட்டு சிந்தித்தால் உலகத்தில் எல்லாம் கேட்டு சிந்தித்த பயன் வருமோ அது என்னவென்று உன் ஆச்சார்யனிடம் கேட்டாயா? என்றார் அப்பா.

‘என்னப்பா சொல்கிறீர் உலகம் எவ்வளவு பெரியது ஒன்றையறிந்தால் உலகெல்லாம் அறிய முடியுமா?. அப்படியொரு வஸ்துவெல்லாம் இல்லையப்பா.’

அப்பா உத்தாலகர் அவனுக்கு என்னென்னவோ உபதேசம் செய்தார்

இன்னொரு காட்சி ச்வேதகேது பாஞ்சால தேசத்திலே ஸதஸ்க்கு சென்றான். ஸதஸ் என்றால் மன்றம் பல அறிஞர்கள் விவாதிக்கும் இடம் அங்கே ப்ரவாஹணன் என்ற ராஜரிஷியை சந்தித்தான்.

ராஜரிஷி கேட்டார் ‘பிள்ளாய் உனக்கு தகப்பனார் உபதேசங்களை செய்தருளினாரா? ’’ஆம்.’’. அப்படியானால் ப்ரஜைகள் மரணமடைந்த பின்னால் போகும் இடம் எது தெரியுமா?’தெரியாது’. திரும்பி வரும்போதுள்ள வழி தெரியுமா? ’’தெரியாது’’ சரி மேலுலகம் போய்ச் சேர்ந்த ப்ராணிகளாவது யார் தெரியுமா? ’’தெரியாது ’’ சரி தேவயாந மார்க்கம், பித்ருயாண மார்க்கம் என்றவையின் வேறுபாடு தெரியுமா? ’’தெரியாது’’

அப்படியென்றால் நீ உபதேசம் பெற்றது என்ன? இவைகளை அறியவில்லையென்றால், உபதேசம் பெற்றதாக எங்கனம் கூறுவது?

’ச்வேதகேது தன் தகப்பனார் இருக்கும் இடத்துக்கு ஓடிவந்து தான் பட்ட மானபங்கத்தைச் சொல்லி வருத்தப்பட்டான் பின்னர் தன் அப்பாவிடம் அந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னப்பா பதில்? என கேட்டான்.

அதற்குத் தகப்பனார் உத்தாலகர். ‘குமாரனே எனக்குத் தெரிந்திருந்தால் சொல்லாமல் இருப்பேனா? என்கிறார். இப்படித்தான் இருக்கின்றன மோட்சம் பற்றிய விசாரணைகள். — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி – 91- 1. மோட்சம் பற்றிய விசாரணைகளை விரிவாகவே பார்த்தோம். வ்யாஸர் – ஜெய்மினி உரையாடல், உத்தாலகர் – ச்வேதகேது – வ்ராஷ்ணன் உரையாடல் என உதாரணங்களும் பார்த்தோம்.

என்ன விளங்கினோம் அதாவது இந்த உலகத்தில் நீ நல்லவனாக வாழவேண்டும் வாழ்ந்தால் இதைவிட இன்பம் மிகுந்த உலகம் உனக்கென இருக்கிறது என ஆசை காட்டும் வேலை தான் மோட்சம்.

பெண்களுக்கு மோட்சம் கிடையாது அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் என முன்னர் நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படியென்றால்.. மோட்சலோகத்தில் ஸ்த்ரிகள் நிறைய பேரை அங்கு போனவன் படைத்துக் கொள்வான் என்றும் பார்த்தோம். அப்படியென்றால் அங்கு கடவுளுக்கு வேலை என்ன என்று கேள்வி வருகிறது.

அங்கே கடவுளுக்கு வேலை மகாலட்சுமியுடன் இருந்து சந்தோஷிப்பதுதான் அதாவது மோட்சலோகம் என்பது இதே போன்றதொரு இன்னொரு ஆனந்த மயமான லோகம்தான் அதை அடைவதற்குப் பல கடுமையான நிபந்தனைகள் இருக்கிறது என்பது நம்மை நெறிப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட விஷயம் வேறொன்றும் அல்ல.

சரி.. ‘குழந்தாய் இந்தா பால் இதைக் குடித்து நன்றாக வளர்வாயாக என பிறந்த சிறு குழந்தைகளுக்கு வேதம் சொன்னதிலிருந்து இறப்புக்குப் பிறகான மோட்சம்பற்றி உபநிஷது சொல்லியவரை அனேக விஷயங்களை அலசி விட்டோம். — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
(தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 89. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடு தட்டுபாடில்லாமல் வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள். நீ விரும்பிய பெண்கள்

பகுதி – 91-2 to 96. நம்தேசத்தில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே ஏன்? வேதங்களில் ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது. ‘ஹிந்து’ என்ற பெயர் நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

About editor 3120 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply