என்றுமுள்ள செந்தமிழ்! (1-10)

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்!

நக்கீரன்
(1)

தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள்.

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்த்pருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!

திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர்.
பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும்; மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.

நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர்
நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையீசர்,
கருவூரார், கொங்கணர், காலாஞ்சி
எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி
தேரையர், குதம்பையர், சட்டைநாதர்

இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழிக் கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.

எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்;திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார்.

எனக்கு முன்னே
சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில்

என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சி;த்தர் பாணியில்-

அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்

என அடித்துச் சொல்கிறார்.

தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம்.

தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்;டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (அநசஉரசல) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது.

தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. .
சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள்.

சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

சித்தர்களில் திருமூலர் முதன்மை இடம் வகிக்கிறார். அவர் பாடிய திருமந்திரம் 3,027 பாடல்களைக் கொண்டது. இதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்குகிறது. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே’ என்ற இவரது கூற்று பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர் தம்பிமார்க்கும் சம்மதமே.

அண்ணா வேலைக்காரி திரைப்படத்தில் சாதியைச் சாடுவதற்கு திருமூலரின் “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முழக்கத்தைக் கையில் எடுத்தார்.

தேரையர் என்ற சித்தர் எழுதிய “நோய்யணுகா விதி;” சிறந்த மருத்துவ நூல் என்பர்.

இன்னொரு புகழ்பெற்ற சித்தர் அகத்தியர். அகத்தியம் என்ற இலக்கண நூல் செய்த அகத்தியர் வேறு இவர் வேறு. அகத்தியர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கிறார்கள்.

“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்”

என்பார் அகத்தியர்.

‘மூர்க்கருடன் பழகாதே பொய் சொல்லாதே
பின்னே நீ திரியாதே பிணங்கிடாதே’

என்பது நக்கீரர் கூற்று.

தமிழ்ச் சமுதாயத்தில் இன்றும் பெரு நோயாக உள்ள சாதியை சித்தர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். மேல் சாதி கீழ் சாதி, சாதிக்குள் சாதி இவற்றை அன்றே பொய் எனத் துணிந்து சாடிய நெறி சித்தர்களது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சாதி குலமில்லை, சற்குருவறிந்தால்’
‘சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்’
‘சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே’

எனப் பலர் சித்தர்கள் சாதிக் கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்கள். சாதிப் பிரிவை மிகுதிப்படுத்தி வளர்க்கும் சடங்கு, ஆசார, சாத்திரக் குப்பைகளால் தீமையேயன்றி அணுவளவும் நன்னை இல்லை என்றார்கள்.

‘கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக’

என அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை என்ற சமரச சன்மார்க்கத்தைக் காட்டிய இராமலிங்க அடிகள் கூறுகிறார்.

இன்னொரு புகழ்பெற்ற சித்தர் சிவவாக்கியர். ஆனால் இவரது பெயர் பதிணென் சித்தர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.. இருந்தும் சித்தர்களில் இவர் ஒரு அதிதீவிரப் போக்குடைய சித்தர் ஆவார். ஒரு சில சித்தர் பாடல்கள் பதிப்புக்களில் இவரது பெயர் முதல் இடம் பெற்றுள்ளது.

மொத்த சித்தர்களின் எண்ணிக்கை 50 க்கு மேல் இருக்கிறது!

சிவவாக்கியர் சாதி, சமயம், கோயில், குளம், மந்திரம் தந்திரம், ஆசாரம் சடங்கு போன்ற குருட்டு நம்பிக்கைகளை மிகவும் கடுமையாகத் தாக்கிய புரட்சியாளர். ஒவ்வொரு பாடல்களிலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சீற்றம், வெறுப்பு துலாம்பரமாகத் தெரிகிறது.

இதனால் அரண்டு போன சைவ ஆதீனங்கள் நாட்டிலுள்ள சிவவாக்கியர் பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளை தேடி எடுத்துக் கொளுத்தினார்கள்.

சித்தர்களின் பாடல்கள் ஓசை நயம் மிக்கவை. பழகு தமிழில் பாடப்பட்டவை. இருந்தும் மறைபொருள் பொருள் கொண்டவை. பாடல்களைப் படிக்கும் போது நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் இருக்கக் காணலாம்.

‘நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?’

சிவவாக்கியர் பாடிய இந்தப் பாடல் நாடறிந்த பாடல்.

சுட்ட சட்டியும் அதில் வேகுகின்ற கறியைக் கிளறுகின்ற கரண்டியும் அந்தக் கறிச்சுவையை அறியாதது போல, பரம்பொருள் நம் உள்ளத்தே இருக்க அதை அறியாமல் கற்சிலைக்கு நான்கு வகை மலர்கள் சாற்றுவதும் அதைச் சுற்றி வந்து முணு முணுக்கும் மந்திரம் எங்குள்ளது?

நட்ட கல் பேசுமோ? பேசாது!

இவ்வாறு உருவ வழிபாட்டை மறுத்து சிவவாக்கியர் நாத்திகவாதம் பேசுகிறார். இவ்வாறு 534 பாடல்களில் சிவவாக்கியர் உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் அஞ்சாது சாடி சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்துள்ளார்.

சிவவாக்கியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. அவரது இயற்பெயர், ஊர், பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிவவாக்கியம் என்ற இவரது நூலின் காப்புச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரிலேயே இவர் சிவவாக்கியர் எனக் குறிப்பிடப்படுகிறார்.

சிவவாக்கியர் தாயுமானவரால் குறிப்பிடப்படும் பெருமை பெற்றவர். (வளரும்)

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (2)

சாதியும் தீ;ண்டாமையும் இந்து மதத்தை பீடித்துள்ள நோய்கள்!

இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இது கேட்பதற்கு கசப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இதற்கு அந்த மதத்தின் எளிமை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த, உருவம் அற்ற ஒரு கடவுளை வணங்குவது காரணமாக இருக்கலாம்.

இஸ்லாம் மதத்தின் வேத நூல் குரான் மட்டுமே. அரபு மொழியில் எழுதப்பட்ட குரானில் 114 அத்தியாயங்கள், 6,666 வசனங்கள், 1,709 பக்கங்கள், 336,233 சொற்கள் காணப்படுகின்றன. குரானை கபிரியல் என்ற தேவ தூதன் 23 ஆண்டு (கி.பி. 610-கி.பி.632) காலப் பகுதியில் முகமது நபிக்கு அருளியதாகச் சொல்லப்படுகிறது.

கிறித்தவ மதத்தின் வேத நூல்களின் எண்ணிக்கை 66. அத்தியாயங்கள் 1,709. வசனங்கள் 31,173. பக்கங்கள் 1,709, சொற்கள் 774,746 காணப்படுகின்றன. 66 புத்தகங்களும் (27 பழைய ஏற்பாடு) 3 மொழிகளில் கிட்டத்தட்ட 1,500 ஆண்டு காலம் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டை ஹீப்புரூ மொழியில் எழுதிய முதல் மனிதர் மோசஸ். அதை எழுதி முடிக்க 1,000 ஆண்டுகள் எடுத்தது. அதில் சில அத்தியாயங்கள் அறாமிக் (யுசயஅiஉ) மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு கி.மு. 300 ஆண்டளவில் கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. புதிய ஏற்பாடு கி.பி. 50-கி.பி. 100 இடைப்பட்ட காலப் பகுதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

சைவசமயத்தின் அடிப்படை நூல்கள் வேதங்களும் சிவாகமங்களும் ஆகும். ‘வேத நான்கினும் பெய்ப் பொருளாவது” என்ற சம்பந்தர் தேவராரத்தில் குறிப்பிட்ட இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நால் வேதங்களையும் வியாசர் தொகுத்ததாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளைக் கொண்டவை. அவை மந்திரங்கள், பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் எனப்படும்.

இருக்கு வேதத்தில் 1,028 பாசுரங்கள் உள்ளன. இதில் இந்திரனுக்கு 250, அக்னிக்கு 200, சோமனுக்கு 120, வருணனுக்கு 12 பாசுரங்கள் பாடப் பெற்றுள்ளன.

இந்தப் பாசுரங்கள் வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் தங்கள் கருப்பு நிற எதிரிகளான தஸ்யூக்களை அழிக்குமாறும் அப்படி அழித்த கடவுளர்க்கு சோமபானம் படைத்து நன்றி பாராட்டுவன ஆகும்.

ஓ! உலகம் போற்றும் இந்திரனே!சுஷ்ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றியொன்பது படைகளையும் நீ உன் தேர் சக்கரத்துக்கு இரையாக்கி நசுககிக் கொன்று ஆரியர்களுக்கு உதவிபுரிந்தாய்.

(இருக்கு வேதம் மண்டலம் ஐ மந்திரம் 53, ஸ்லோகம் 9 அதர்வணவேதம் காண்டம் ஓஓ மந்திரம் 21, சுலோகம் 9)

சோமன் என்பது உருவகம். சோமச் செடியில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் கள்ளைக் குறிப்பது. அதை ஆரியர்கள் தாங்களும் குடித்து கடவுளர்க்கும் படைத்தார்கள்.
மேலே குறிப்பிட்ட நான்கு வேதக் கடவுளர்க்கும் வழிபாடு இப்போது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

வேதாங்கங்கள் ஆறு

1) சிக்கை – வேதங்களை உச்சரிக்கும் முறை.
2) கற்பம் – வேதக் கருமங்களை அனுட்டிப்பதைக் கூறும்.
3) வியாகரணம் – வேதங்களின் எழுத்துச் சொற்களின் இலக்கணங்களைக் கூறுவது.
4) நிருத்தம் – வேதங்களில் உள்ள சொற்களின் பொருளை அறிவிப்பது.
5) சந்தோவிசிதி – வேதங்களின் காயத்திரி, அதன் சந்தங்கள், எழுத்தின் அளவு
என்பவற்றைக் கூறுவது.

6) சோதிடம் – வேத மந்திரங்களைச் சொல்வதற்கு காலங்களைக் குறிப்பது.

வேதத்தின் உபாகமங்கள் நான்கு

1) பதினெண் புராணம் – சிவன், விட்ணு, பிரமன், சூரியன், அக்கினி இவர்களின் ஆற்றல்
பற்றி படிப்பறிவு குறைந்தவர்களுக்கு விளங்க வைப்பது
2) நியாயம் – வேதப் பொருளை நிட்சயிப்பதற்கு உதவுவது.
3) மீமாஞ்சை வேதப் பொருளின் தார்ப்பரியத்தை அறிய உதவுவது.
4) ஸ்மிருதி – நால் வருணம், ஆச்சிரமங்களுக்குரிய தர்மங்களைக் கூறுவது.

உப வேதங்கள் நான்கு

1) ஆயுர் வேதம் – வைத்திய நூல்
2) தனுர் வேதம் – படைக்கலப் பயிற்சி பற்றிய நூல். தனுர் என்றால் வில் என்று
பொருள்.
3) காந்தருவ வேதம் – கடவுளுக்கும் மனிதருக்கும் உரிய இசையை அறிவிப்பது.
4) அருத்த வேதம் – – இம்மை மறுமைக்கு உரிய பொருள் சம்பாதித்தல் தொடர்பான
சாத்திரங்களைக் கூறுவது.

மறை பொருட் கோட்பாடுகளை அறிவுறுத்தும் உப நிடதங்களின் எண்ணிக்கை 108. அதில் 12 சிறப்பானவை. இந்த உப நிடதங்களே வேதாந்தம் என அழைக்கப்படுகின்றன.

சிவாகமங்கள் 28. இவை சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் இருந்து தோன்றியவை என்று நம்பப்படுகிறது. அவை நான்கு பாதங்களைக் கொண்டவை.

1) ஞானபாதம் – முப்பொருள் உண்மை
2) யோகபாதம் – அட்டாங்க சிவயோகம்
3) கிரியாபாதம் – மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபம்,
அர்ச்சனை, ஆசாரிய, அபிசேகம்
4) சரியாபாதம் – சமயாசாரங்களை உபதேசிக்கிறது

சிவனை வேதத்தோடு இணைத்தும் வழிபாட்டினை ஆகமத்துடன் சேர்த்தும் சொல்வது சைவத்தின் பொதுப் போக்காகும். இதன் காரணமாகவே சைவத்துக்கு வேதம் பொது, ஆகமம் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.

சிவாகமங்களின் வழி நூல்கள் 207. சிவாகமங்களின் சார்பு நூல்கள் 8. பன்னிரு திருமுறைகள் வேதத்தின் வழி அல்லது சார்பு நூல்களாகும். 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள ‘திருமுகப்பாசுரம்’ சிவனால் அருளப்பட்டது என்பர். எஞ்சியவை சிவஞானம் கைவரப்பெற்ற ஞானிகளால் பாடப்பட்டவை. வேதாகமே தமிழ் வேதமாகக் கருதப்படுகிறது.

இவற்றைவிட வேதங்கள், சிவாகமங்கள், புராணங்கள், திருமுறைகள் வழிவந்த 14 சித்தாந்த சாத்திரங்களும் உண்டு.

இவற்றை திருவியலூர் உய்யவந்த தேவர் (திருவுந்தியார்) திருக்கடவூர் உய்யவந்த தேவர் (திருக்களிற்றுப் பாடியார்) மெய்கண்ட தேவர் (சிவஞானபோதம்)

அருணந்தி சிவாச்சாரியார் (சிவஞான சித்தியார், இருபாலிருபது)திருவதிகை மனவாசகம் கடந்தார் (உண்மை விளக்கம்)

மறைஞான சம்பந்தர் (சதமணித்திரட்டு)

உமாபதி சிவாச்சாரியார் (சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாக 8 சாத்திரங்கள்).

இவர்கள் 13-14 வது நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள்.

பதினான்கு சித்தாந்த சாத்திரங்களின் மூலமும் உரையும் கொண்ட நூல் மட்டும் 1206 பக்கங்கள் கொண்டவை.

குரானை முயன்றால் நெட்டுருச் செய்து கொள்ளலாம். பைபிளை படிக்க மாதங்கள் எடுக்கலாம். ஆனால் இந்து வேதாகமங்களைப் படிக்க வாழ்நாள் போதாது!

கோயில் அர்ச்சகர்கள் உட்பட வேதாகமங்களைப் படித்த சைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

பதி (இறைவன்) பசு (உயிர்) பாசம் (ஆணவம், மாயை, கன்மம்)

ஆதி சங்கரரின் (கி.பி. 788-820) அத்துவைதம் (உயிர்களும் உலகமும் பிரமத்தின் தோற்றமே என்ற மாயாவாதம். இரண்டன்மை)

சங்கரரின் அத்துவைதத்தை மறுக்கும் இராமனுசரின் (கி.பி. 1017-1137) விசிட்டாத்துவைதம் (சித்து அசித்து இரண்டும் ஈசுவரனும் ஒன்றே)

மத்துவரின் (கி.பி. 1199-1278) துவைதம் (சீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு) இந்தக் கோட்பாடுகளை படித்து பொருள் உணர்ந்து கொண்டவர்கள் அரிது.

இதனால் சைவ சமயத்தவர்கள் அர்ச்சனை அபிசேகம் போன்ற சரியை கிரிகையோடு நின்று விடுகிறார்கள்.

இஸ்லாம், கிறித்தவம், இந்து சமயங்களுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உள்ளது. அது அவர்களது மத நூல்கள் அந்தந்த மதக் கடவுள் வாக்கு என்பது. வேதங்களும் ஆகமங்களும் தாமே தோன்றியவை. மனிதர்களால் இயற்றப்படாமல் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.

தேய்ந்து வருகிற சமயங்களில் இந்து சமயம் முன்னணியில் நிற்கிறது. இதற்குக் காரணம் அந்த மதத்தில் காணப்படும் வர்ண பேதமும் சாதி அமைப்பும் வடமொழி -பிராமணிய மேலாண்மையும் ஆகும்.

கடந்த ஐப்பசி 16ஆம் நாள் பெரம்பலூர் துறைமங்கலம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் நடந்த புத்த மாநாட்டில் நூற்றுக் கணக்கான தலித் இந்துக்கள் மொட்டை அடித்து புத்த மதத்தில் இணைந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட அம்பேத்கர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு அமைப்பினரும், பன்னாட்டு பவுத்த இளைஞர் இயக்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

இதற்கான விழாவுக்கு அண்ணல் அம்பேத்கர் இளைஞர் முன்னணி மாநில தலைவர் கே.கந்தசாமி தலைமை தாங்கினார். டாக்டர் வேணு அண்ணாமலை முன்னிலை வகித்தார். கே.பி.தம்மசென் வரவேற்றார்.

‘இந்த மத மாற்ற நிகழ்ச்சி ஒரு ஆரம்பம் தான். தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு இன்னும் சமூக நீதி கிடைக்கவில்லை. தீண்டாமை இன்னும் ஒழியவில்லை. கிராமங்களில் இன்னும் இரட்டை தம்ளர் முறை உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கத்தான் தாழ்த்தப்பட்டோர் புத்த மதத்தில் சேருகின்றனர். இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தை புதுப்பிக்கிறோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்த மடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தலைவர் கந்தசாமி கூறினார்.

பவுத்த தேரர் பாதிதம்மா மற்றும் பவுத்த தேரர்கள் புத்தர் சிலைக்கு அபிசேகம் செய்தனர். அடுத்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பாலிமொழியில் மந்திரம் ஓதினர். பின்னர் புத்த மதத்தில் சேர விரும்பிய அனைவரும் பவுத்த தேரர் போதிதம்மா தலைமையில் 22 உறுதிமொழிகளைச் செய்து தீட்சை பெற்றுக் கொண்டனர்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நாக்பூரில் 1956 ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை கைவிட்டு புத்தமதத்தில் சேர்ந்து கொண்டார். இந்து மதத்தில் புரையோடிப் போய்விட்ட சாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் இவற்றில் இருந்து விடுபடவே இந்த மதமாற்றம் இடம் பெற்றதாக அப்போது அம்பேத்கார் கூறினார்.

இந்த மதமாற்றம் பற்றி சைவ ஆதீனங்கள் கவலைப்படுவதில்லை. காஞ்சி காமகோடி பீடம் துக்கப்படுவதில்லை. சைவ-இந்து அமைப்புக்கள் வருத்தப்படுவதில்லை. இந்து பரிசத் அலட்டிக் கொள்வதில்லை.

மதமாற்றம் என்பது தலையிடிக்கு தலையணையை மாற்றிக் கொள்வது போன்றது. மதங்கள் என்பது ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான். ஆனால் ஒப்பீட்டளவில் இந்து மதம் என்ற மட்டையின் நாற்றம் குமட்டல் எடுக்க வைக்கிறது. ஒருவனது ஒழுக்கத்தை அல்லாது பிறப்வை வைத்து குலத்துக்கு ஒஒரு நீதி சொல்லும் மதம் இந்து மதம் ஒன்றுதான்.

புத்த மதத்தில் மட்டுமல்ல இஸ்லாம் மதத்திற்கும் தமிழ்த் தலித்துகள் மாறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் புத்தமதத்தினர் மிக மிகக் குறைவு. ஆனால் கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் மொத்த மக்கள் தொகையில் 11 விழுக்காடு இருக்கிறார்கள்.

1981 சித்திரை மாதத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் முற்றாக இஸ்லாம் மதத்தை தழுவியது. இந்த முடிவுக்கு உடனடிக் காரணம் மேலக்கரை தேவர் சாதியைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதை அடுத்து தலித் மக்கள் மீது ஏவி விடப்பட்ட வன்முறையே.

இந்த மதமாற்றம் தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடல் பிகார் வாஜ்பாய் உட்பட பல தேசியத் தலைவர்கள் அந்த ஊருக்குச் சென்று மதம் மாறியவர்களது மனதை மாற்ற முயற்சித்தார்கள்.

ஆனால் அவர்கள் இந்து ஒடுக்குமுறைக்கு மீண்டும் திரும்ப மாட்டோம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். (ஐனெயைn நுஒpசநளள)

ஒரு மாதம் கழித்து இராமநாதபுரம் உத்தமகோசமங்கை இரவோடு இராவாக மொகமதுபுரமாக மாறியது. 150 தலித் குடும்பங்கள் இஸ்லாம் மதத்தை தழுவியது.

கடந்த ஆண்டு ஹரியானா மாநிலம் துலியானா என்ற இடத்தில் 5 தலித் மக்கள் சாதி இந்துக்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். இதையிட்டு கருத்துத் தெரிவித்த விஷ்வ இந்து பரிசத் தலைவர் ஒருவர் ‘ஒரு தலித்தின் பெறுமதி ஒரு பசுவின் பெறுமதிக்குக் குறைவானது’ என்று ஆணவத்தோடு சொன்னார்.

சாதி இந்துக்கள் தலித் மக்களை மட்டுமல்ல அவர்கள் வணங்கும் மாடன், காடன், காத்தவராயன், அம்மன், அய்யனார் போன்ற தெய்வங்களையும் தீண்டப்படாத தெய்வங்களாகப் பார்க்கிறார்கள். நவராத்திரி பூசையின் போது சாதிக் கடவுளர்கள் ‘தீட்டுப்பட்ட’ தலித் தெய்வங்களைப் ‘பார்க்காத’ வண்ணம் கருத்தச் சீலையால் மூடப்படுகின்றனர்!

திருச்சி மாவட்டம் திண்ணியம் என்ற ஊரில் உயர்சாதி இந்து முதலாளியிடம் கூலி கேட்ட ஒரு தலித் தொழிலாளியின் தொண்டைக்குள் மலம் திணிக்கப்பட்டது.

சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! என்று பாடிய பாரதி பிறந்த நாட்டில்,

‘சாதிப் பிரிவினிவே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்’

என்று சாடிய பாம்பாட்டிச் சித்தர் பிறந்த மண்ணில் இந்த அருவருப்பான, அநாகரிகமான கொடுமை நடந்தது. இந்த நிகழ்வை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கனடாவிற்கு வந்;திருந்தபோது மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார்.

சாதியும் தீண்டாமையும் இந்து மதத்தித்தில் படிந்துள்ள கறைகள் என்று உலக உத்தமர் காந்தி சொன்னார். வேதமும் மனு ஸ்மிருதியே இந்து சமுதாயத்தில் எண்ணற்ற சாதிகளை உருவாக்கியது.

பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் சாதிக் கொடுமைக்கும் தீண்டாமைக்கும் இரையாகிய தலித் மக்களே அவற்றில் இருந்து தப்ப மதம் மாறுகிறார்கள்.

இந்து மதத்தைப் பீடித்துள்ள நோய்களைப் பற்றி எழுதினால் ‘பார் பார் முழக்கம் ஏடு சைவத்தையும் தமிழையும் அழிக்கிறது’ என்று சிலர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் எங்கள் மீது பாயாமல் சைவத்தையும் தமிழையும் யார் அழிக்கிறார்கள் எதனால் அழி;கிறது என்பதை ஆர அமர சிந்தித்து இரண்டையும் காப்பாற்ற நோயையும், நோயின் மூல காரணத்தையும், அதைத் தீர்க்கும் உபாயத்தினையும் அறிந்து பிழைபடாமல் வைத்தியம் செய்ய முன்வரவேண்டும்.

சித்தர் கட்டுரைத் தொடரைப் படித்து விட்டு பல வாசகர்கள் பாராட்டி எழுதியுள்ளார்கள்.

இந்தியாவில் இருந்து கண்ணம்மா என்ற வாசகர் சாதிப் பேய் ஒளிந்துவிட்டதா? ஒழிந்து விட்டதா? என்று கேட்டு எழுதியிருக்கிறார்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் சாதி ஒழியவில்லை. தமிழீழம், கனடா உட்பட புலம்பெயர் நாடுகளில் சாதி ஒளிந்து இருக்கிறது! அதனால்தான் இந்தக் கட்டுரைத் தொடருக்கு ‘சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்’ என்று தலைப்புக் கொடுத்தேன்.

சாதி மதப் பேயை ஓட்டிய சித்தர்கள் என்று எழுதவில்லை. பேய் இன்றும் இருக்கிறது. (தொடரும்)


சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (3)
 
 இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர்! சாதிகள் சல்லி வேர்கள்!

சென்ற கிழமை டாக்டர் அம்பேத்கார் 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை உதறிவிட்டுபுத்த மதத்தை தழுவினார் என எழுதியிருந்தேன்.

‘நான் இந்துவாக சாக மாட்டேன்!;’ என்று கூறி அப்பேத்கார் மதம் மாறிய நாள் ஒவ்வொரு ஆண்டும்

அதே நாக்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் வெளிநாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 65,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலித் மக்கள் புத்த மதத்தை தழுவினார்கள்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் யப்பானில் பிறந்து இந்தியாவில் வதியும் புத்த சன்னியாசி பாந்தி நாகார்சுன் சுராய்சசாய் புத்த மதத்தை தழுவியவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

புத்தமதத்தை தழுவுகிறவர்கள் 22 உறுதி மொழிகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

பிரமன், விஷ்ணு, சிவன் போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.

கவுரி, கணபதி போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.

இராமன், கிருஷ்ணன் இருவரையும் கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்பதை நான் நம்ப மாட்டேன்.

பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நம்பமாட்டேன். அப்படி பரப்புரை செய்வது குறும்புத்தனமும் பொய்யானதும் ஆகும்.

நான் ஒரு போதும் சிரார்த்தம் செய்ய மாட்டேன்.

பவுத்த கோட்பாடுகளுக்கு எதிராக ஒரு போதும் நடக்க மாட்டேன்.

பிராமணர்களால் நடத்தப்படும் கிரிகைகள் எதனையும் ஏற்க மாட்டேன்.

அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

சமத்துவத்தை ஏற்படுத்தப் பாடுபடுவேன்.

புத்த பகவானின் அட்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றுவேன்.

தருமத்தின் தசசீலங்களை பின்பற்றுவேன்.

எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்டுவேன். அவற்றை முடிந்த மட்டும் காப்பாற்றுவேன்.
பொய் சொல்லமாட்டேன்.

திருட மாட்டேன்.

காமத்தில் உழல மாட்டேன்;. பால் உணர்வில் அத்துமீற மாட்டேன்.

போதை தரும் குடியையோ மதுவையோ நான் அருந்தமாட்டேன்.

முடிந்த மட்டும் எனது வாழ்க்கையை பவுத்த கொள்கை. கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்ட உபதேசங்களுக்கு இணங்க அமைத்துக் கொள்வேன்.

பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும் மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டுவிட்டு புத்த மார்க்கத்தைக் கைக்கொள்கிறேன்.

பவுத்த தருமமே சிறந்த மதம் என்பதை நான் முற்றாக நம்புகிறேன்.

நான் இன்று மறுபிறவி எடுத்துள்ளேன் என்பதை நம்புகிறேன்.

நான் இன்று முதல் பவுத்த தருமம் உபதேசிப்பதுபோல் ஒழுகுவேன்.

பவுத்தம் ஒரு மார்க்கமே தவிர மதமல்ல. அது பிற்காலத்தில் மதமாக்கப்பட்டது.

பகுத்தறிவுவாதியான புத்தர் தெய்வம் ஆக்கப்பட்டார். அவரது முன்னைய பிறப்புக்களைப் பற்றி நம்பமுடியாத கற்பனைக் கதைகளை அவரது சீடர்கள் எழுதி வைத்தார்கள்.

பவுத்தம் சமுதாய சமத்துவக் கருத்துக்களைப் பரப்புகிறது. நிற அடிப்படையில் சொல்லப்பட்ட வேற்றுமையைத் தகர்க்கிறது. அதன் உட்பிரிவான சாதி வரம்புகளை மறுக்கிறது. பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆகமுடியாது. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் பிராமணனாக முடியும் என பவுத்தம் சொல்கிறது.

பவுத்தம் ஆண் பெண் இடையே பால் அடிப்படையிலான வேறுபாட்டை அகற்றியது.

ஆண்களைப் போலவே பெண்கள் பவுத்த சங்கத்தில் துறவிகளாகச் சேர்க்கப் பட்டார்கள்.

பவுத்தம் மனிதனது வினைக்கு அவனே காரணம் என்று சொல்கிறது. நல்லது செய்தால் நல்வினைப் பயன் கிடைக்கும் என்றும் தீயது செய்தால் தீவினைப் பயன் சேரும் என்று சொல்கிறது. புத்தர் ஞானம் பெற்றபி;ன்னர் நான்கு வாய்மைகளை போதித்தார்.

முலாவது வாய்மை – பிறத்தல் துன்பம். பிணி துன்பம். தளர்ச்சி துன்பம். மரணம் துன்பம். வேண்டாவற்றோடு பிணிக்கப்பட்டிருப்பதும், வேண்டுவனவற்றிலிருநது பிரிக்கப்பட்டிருப்பதும் துன்பம். விழைவு கூடாமை துன்பம். சுருங்கக் கூறின் உருவம், நுகர்ச்சி, குறிப்பு, பாவனை உள்ளவறிவாகிய விஞ்ஞானம் என்ற ஐந்தும் துன்பம் தருவன. ஆதலால் பிக்குகளே துன்பம் உளது.

இரண்டாவது வாய்மை – இந்தத் துன்பங்களுக்குக் காரணம் பிறப்பீனும் வித்தாகிய அவா அல்லது வேட்கை. சிற்றின்பம் விரும்பும் வேட்கை. உயிர்வாழ விரும்பும் வேட்கை. திருஷ்டி என்ற அழிவுத்தன்மையை வேண்டும் வேட்கை. இந்த மூன்றுவித வேட்கையும் துக்கத்துக்கு காரணம். எனவே துக்க காரணம் உளது.

மூன்றாவது வாய்;மை – தன்னிடத்தில் உண்டான ஆசையை அகற்றினால் துக்க நிவாரணம் உளது.

நான்காவது வாய்மை – இந்த துக்க நிவாரணத்துக்கு வழியுண்டு. அதுவே அட்டாங்க துக்க நிவாரண மார்க்கம். அவையாவன நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளதோர் தலைப்பாடு. (இது பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் சாத்தனார் எழுதிய மணிமேகலை காப்பியத்தைப் படிக்கவும்)

எல்லாம் வல்ல படைப்புக் கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. உலகைக் கடவுள் படைத்தார் எனக் கூறுவது கடவுளை யார் படைத்தார் என ஒருவரைக் கேட்க வைக்கும்.

அண்டத்தைப் படைத்தவர் கடவுள் என்பதை புத்தர் ஒப்புக் கொண்டாரா என்பது கேள்வி. ‘இல்லை’ என்பதே பதில். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. படைப்பு கடவுளின்றியே உலகம் இருக்கிறது என்பது புத்தரின் வாக்கு. பவுத்தம் சிந்தித்தலை, கேள்வி கேட்பதை மற்றும் பகுத்தறிவை ஊக்குவிக்கிறது.

‘என்னால் நிருவாணத்துக்குரிய வழியைத்தான் காட்ட முடியும். அந்தப் பாதையில் நடப்பது உங்கள் பொறுப்பு’ என்றார் புத்தர்.

அரண்மனையில் பிறந்து பட்டாடை உடுத்தி, பொன்னாபரணம் அணிந்து, பால், பழம் பருகி, அறுசுவை விருந்துண்டு, பன்னீரில் கொப்பளித்து, மஞ்சத்தில் படுத்துறங்கி, ஆசை மனையாளோடும், அன்புக் குழந்தையோடும் ஆடிப்பாடி அரச வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் அவற்றைத் துறந்து, மஞ்சள் அங்கி அணிந்து, பிச்சா பாத்திரம் ஏந்தி, வீதிதோறும் நடந்து, வீடுதோறும் பிச்சை எடுத்து வாழ்ந்தார்.

பவுத்தம் போல் அல்லாது இந்து மதத்தில் சாதி புரையோடிப் போய்க் கிடக்கிறது. அது அந்த மதத்தை அரித்துக் கொண்டிருக்கிற புற்று நோய்.

தொட்டால் தீட்டு, நிழல் பட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு இப்படி எல்லாமே தீட்டுத்தான்.
இந்தியாவில் 101 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 85 விழுக்காடு இந்துக்கள். அதில் சுமார் 20 விழுக்காடு தலித் மக்கள்.

எனவே இப்போது நடைபெறும் மதமாற்றம் மழைத் தூவானம் போல் தெரியலாம். ஆனால் அது பெரு மழையாகப் பெய்யலாம்..

ஏற்கனவே மும் மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், சந்திரன், வருணன், அக்னி, பிரகஸ்பதி, கின்னரர், கிம்புருடர் என வாழ்ந்த பரந்த கண்டம் சுமார் 700 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டுக் கிடந்ததால் அது மூன்று துண்டாக வெட்டப்பட்டு விட்டது.

இதில் இரண்டு துண்டுகளில் இஸ்லாமிய குடியரசுகள். எஞ்சிய இந்தியாவில் 85 விழுக்காடு மட்டும் இந்துக்கள்.

இந்த மதமாற்றம் பாதி கட்டயாத்தின் பேரில் நடந்திருக்கலாம். மீதி பணம், சலுகை, பதவிபோன்றவற்றுக்கு ஆசைப்பட்டு மாறி இருக்கலாம். சாதி அடக்குமுறையில் இருந்து தப்பவும் மத மாற்றம் நடந்திருக்கலாம்.

சாதி இந்து மதத்தின் உள்கட்டுமானத்தில் இடம்பெற்றுள்ளது. வேதங்களும், ஸ்மிருதிகளும் வர்ண பேதம் கற்பிக்க பின்னர் அது சாதிகளாகப் பெருகின.

இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர். சாதிகள் சல்லி வேர்கள்.

இந்தியாவில் 6,400 சாதிகள் இருக்கின்றன என உச்ச நீதிமன்றம் கூறியது. மண்டல் அறிக்கை 3000 கும் அதிகமான சாதிப்பட்டியலை வெளியிட்ட போது ‘இந்து’ நாளேடு வியப்போடு அதே சமயம் அவநம்பிக்கையோடு எழுதியது.

உலகில் ‘இந்து அரசு’ என அரசியலமைப்பில் எழுதி வைத்திருக்கும் ஒரே நாடு நேபாளம். அரசனாகத் தம்மை ஆக்கிக்கொள்ள ஆசைப்பட்ட பிரித்வி நாராயண் ஷா என்பவன் நான்கு வருணங்களுடன் 36 சாதிகளையும் கொண்ட இந்து மத அமைப்பை நேபாளத்தில் உண்டாக்கி அரச பரம்பரையை விஷ்ணுவின் ஆட்சி என்று ஆக்கிக் கொண்டான்.

ஆனால், இந்து மதத்தில் சிவன் முழுமுதல் கடவுள். அவரது வாகனம் எருது. இதனால் நேப்பாளத்தில் காளை மாட்டை கம்பால் அடிக்கக் கூடாது. அப்படி அடுத்தால் குற்றம். ஏரில் பூட்டி உழக் கூடாது. அப்படி உழுதால் குற்றம். வண்டியில் பூட்டி ஓட்டக் கூடாது. அப்படி பூட்டி ஓட்டினால் குற்றம். காளை மாட்டை கொல்லக் கூடாது. அப்படிக் கொன்றால் அது மரண தண்டனைக்குரிய குற்றம்.

இப்படி ஏன் சட்டம் இயற்றப்பட்டுள்ளது? வேறொன்றும் இல்லை. நேப்பாள மன்னர் மனு ஸ்மிருதி விதிகளின் படி அரசாள்கிறார்.

சரி நேப்பாள மன்னர்தான் இப்படி? நாங்கள் மேடை தோறும் போற்றி பெருமைப்படும் சேர, சோழ, பாண்டியர் ஆட்சியில் என்ன நடந்தது?

மூவேந்தர்கள் எண்ணாயிரம், திருபுவனம், ஆயகுடி, முக்சூடல் போன்ற ஊர்களில் காசி, வங்காளம் (முதலாம் இராசேந்திரன்) போன்ற தேசங்களில் இருந்து பிராமணர்களை கூட்டம் கூட்டமாகக் கொண்டு வந்து அவர்களுக்கு இறையிலி மான்யங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள் என்ற புதிய குடியிருப்புகளில் குடியேற்றினார்கள்.

பிராமணர்கள் வேதம் படிக்க வேத பாடசாலைகளை நிறுவி அவற்றுக்கு நிவந்தம் எழுதி வைத்தார்கள்.

இதனை திருமூலர் கண்டிக்கிறார். அந்தணர் குடியிருப்புக்கள் ஆயிரம் அமைத்து அவற்றை அந்தணர்க்குக் கொடுப்பதாலும் கோபுரத்துடன் கூடிய கோயில்களை ஆயிரக் கணக்கில் கட்டி முடிப்பதாலும் பயன் இல்லை. அவை ஒரு ஞானிக்கு ஒரு பகலுணவு அளிப்பதற்கு நிச்சயம் நிகராகா என்கிறார்.

அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலதத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே!

திருநாள் பெருநாள்களிலும் வெற்றி விழாக்களிலும் வெளியூர் செல்லும் போதும் மூவேந்தரும் பிராமணர்க்குத் துலைநிறை (துலாபாரம்) பொன் (இரணிய கருப்பம்) ஆவாயிரம் (கோசகஸ்ரம்) முதலிய தானங்களைச் செய்து வந்தனர். (தேவநேயப்பாவாணர் எழுதிய தமிழர் மதம் – பக்கம் 93)

முதலாம் இராச இராசனின் இராசகுரு ஈசானச் கு குருதேவர், விக்கிரம சோழனுக்கு சுவாமி தேவர், சூன்றாம் குலோத சிவாச்சாரியார். முதலாம் இராசேந்திரனின் ராசகுரு சர்வசிவ பண்டிதர். இராசாதி இராசனுக்;துங்கனுக்கு சோமேசுவரர் இராசகுருவாக இருந்தனர்.

மொத்தத்தில் மூவேந்தர்கள் அந்தணர் தாள் பணிந்து ஆண்டனர்.

மனு, மிடாக்சாரி, ஹேமாத்ரி, ஜுமுக வாதனர் எழுதிய தயாபாக (தர்மரத்னா என்ற நீதி நூலின் ஒரு பகுதி) ஆகிய நான்கு சாத்திரங்களின்மேல் சோழர்களுடைய நீதி நிருவாகத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

அர்த்தசாத்திரம் அரசியல் நூல் என்ற அளவில் ஸ்மிருதிகளின் நீதியினின்று ஒரு சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது.

இவ்வாறாக அரசியல் தத்துவத்திற்கு அர்த்தசாத்திரமும், நீதித்தத்துவத்திற்கு மேற்சொன்ன நான்கு சாத்திரங்களும் சோழர் காலத்து அந்தணர்களால் ஊர் நீதிமன்றங்களிலும் அரச நீதி வழங்கு மன்றங்களிலும் எடுத்து ஓதப்பட்டு விளக்கவுரை சொல்லப்பட்டன. (திரு.மா பாலசுப்பிரமணியன் எழுதிய ‘சோழர்களின் அரசியல், கலாச்சார வரலாறு’ பாகம் 2. பக்கம் 95)

பிற்கால சேர, சோழ, பாண்டிய அரசர்களால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் செய் திருக்குறள் இரட்டடிப்புச் செய்யப்பட்டது! திருக்குறள் பற்றிய குறிப்பு எதனையும் எந்தக் கல்வெட்டிலும், செப்பேட்டிலும் காணோம்! (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்! (4)

இந்த நூற்றாண்டில் 50 – 90 விழுக்காடு மொழிகள் அழிந்து விடும்?

நக்கீரன்

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசீலந்து போன்ற நாடுகளில் ஆங்கிலம் அரசமொழியாகவும் கற்கை மொழியாகவும் விளங்குகிறது. அய்ரோப்பா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் ஆங்கிலம் இரண்டாவது மொழியாகப் பயிலப்படுகிறது. இந்தியாவில் உயர் கல்வி மொழியாகவும் விளங்குகிறது என முன்னர் பார்த்தோம். ஆங்கிலத்தின் அசுர வளர்ச்சி, அதன் உலகளாவிய மேலாண்மை ஏனைய மொழிகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்கிறார்கள் மொழியியல் அறிஞர்கள்.

உலக நாடுகள் ஒன்று நீக்கமில்லாது எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் பேசப்படுகிறது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்களை விட அதனை இரண்டாவது மொழியாகப் பேசுபவர்கள் அதிகம் உள்ளார்கள். உலக வரலாற்றில் வேறெந்த மொழியும் இந்தளவுக்கு மேலாண்மை செலுத்தியதில்லை. உலகத்தின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலைக் கொண்டுள்ளார்கள்.

அறிவியல் துறையில் ஆங்கிலத்தை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை உள்ளது. வானுர்தி கட்டுப்பாட்டு நிலையம் அனைத்திலும் ஆங்கிலமே பொதுமொழி. கிறித்துவ மதத்திலும் ஆங்கிலத்தின் மேலாண்மை கொடி கட்டிப்பறக்கிறது.

சீன மொழி (ஆயனெயசin) பேசுவோர் தொகை 100 கோடிக்கும் அதிகம். ஆங்கிலம் பேசுவோர் தொகை 500 மில்லியன் (50 கோடி) இருக்கும். இந்திமொழி பேசுவோர் தொகையும் இதே அளவுதான். ஆனால் சீன, இந்தி மொழி இரண்டையும் விட ஆங்கிலம் உலகம் முழுதும் பரவலாகப் பேசப்படுகிறது.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இணையதளத்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு நூற்றுக்கு 80 விழுக்காடாக இருக்கிறது. யப்பான் இரண்டாவது (7 விழுக்காடு) இடத்தையும் ஜெர்மனி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

உலகின் புகழ்பெற்ற ஆங்கில மொழி வானொலி, தொலைக்காட்சி குழுமங்களான பிபிசி, சிபிஎஸ், என்பிசி, எபிசி, சிபிசி ஒலி, ஒளிபரப்புக்கள் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகின்றன. ‘பொப்’ இசை ஆங்கிலத்தை உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்கிறது.

உலகில் எத்தனை மொழிகள் (பேச்சு வழக்கில் உள்ள மொழிகள் உட்பட) இருக்கின்றன? தோராயமாக 7,000 (துல்லியமாகச் சொன்னால் 6,912) மொழிகள் இருக்கின்றனவாம்.

ஆங்கிலத்தில் எத்தனை சொற்கள் இருக்கின்றன?

இந்த இயலுலகில் (அண்டம்) காணப்படும் பலவற்றை நாம் சரியாகக் கணக்கிட முடியாது.

நமது பால் வெளி மண்டலத்தில் 100,000,000,000 விண்மீன்கள் காணப்படு;கின்றன. இயலுலகில் 100,000,000,000 உடுக் கூட்டங்கள் காணப்படுகின்றன.

இயலுலகில் காணப்படும் அணுத் துகள்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? விடை
1.0 × 1072 (10 சயளைநன வழ வாந pழறநச ழக 72) ஸ்ரீ ஒன்றோடு 73 சுழியம் கூட்டிய தொகை அணுத் துகள்கள்!

சன் தியாகோ (ளுயn னுநைபழ) வில் இயங்கும் உலக மொழி கண்காணிப்பு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் மார்ச்சு 21, 2006 அன்று ஆங்கிலத்தில் 988,968 சொற்கள் இருக்கின்றனவாம்! இன்று இந்த எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டிவிட்டது! ஆனால் ஒக்ஸ்வோட் பிந்திய ஆங்கில அகரமுதலிப் (ழுஒகழசன நுபெடiளா னுiஉவழையெசல) பதிப்பில் 615,000 சொற்கள் மட்டும் காணப்படுகிறது.

சீனமொழியில் 50,000 சித்திர வடிவங்கள் காணப்படுகின்றன. அவற்றைவிட எண்ணில் அடங்கா சொற்களும் இருக்கின்றன.

ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களில் 24,000 வௌ;வேறு சொற்கள் காணப்படுகின்றன. அவற்றில் 1,700 சொற்கள் அவர் உருவாக்கியவை!

ஆங்கிலம் பெரும்பான்மை மக்களது இரண்டாவது மொழியாக வந்துவிட்டது. “படித்தவன் என்றால் ஆங்கிலம் தெரிந்தவன்” என்று வரைவிலக்கணம் செய்யப்படுகிறது!

ஆங்கிலம் நன்றாகப் படித்த ஒருவர் அண்ணளவாக 24,000 தொடக்கம் 30,000 சொற்களைப் பேச எழுதப் பயன்படுத்துகிறார்.

உள்ளுர் மொழிகயோடு ஆங்கிலம் கலந்ததினால் புதிய கலப்பு மொழிகள் தோற்றம் பெற்றுள்ளன. சிங்கப்பூர், நைசீரியா, கரிபீன் நாடுகள் அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

பப்புவா நியுகினியில் பிட்ஜின் (pனைபநn) ஆங்கிலம் பேசப்படுகிறது. நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இந்த பிட்ஜின் ஆங்கிலத்தில்தான் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன! அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைப் புறத்தில் ஆங்கிலமும் இசுப்பானிய மொழியும் கலந்த ளுpயபெடiளா பேசப்படுகிறது.

ஆங்கில மொழி உலகளாவிய அளவில் செலுத்தும் செல்வாக்கு அல்லது மேலாண்மை பற்றி எழுதுவதற்குக் காரணம் தமிழ் மொழியும் ஆங்கில மொழி செல்வாக்குக்கும் மேலாண்மைக்கும் ஆளாகியுள்ளது.

தமிழ்நாடு ஊடகத்தைப் பார்த்தால் ஆங்கில மொழியின் மேலாண்மையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக இந்தப் ‘திருப்பணியில்’ தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் தினமலர், தினமணி, தினபூமி, ஆனந்த விகடன், குமுதம் முன்னணி வகிக்கின்றன.

விகடன் குழுமத்தைப் பொறுத்தளவில் தமிழ் ஏடுகளுக்குத் தமிழ்ப் பெயரை வைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச தமிழ்ப் பற்றே இல்லாமல் இருக்கிறது!

ஆனந்த விகடன், யூனியர் விகடன், விகடன் ழுடெiநெஇ அவள், சுட்டி விகடன் குழுமம் வெளியிடும் ஏடுகளின் பெயர்கள். சரி போகட்டும். உள்ளடக்கம் எப்படி?

சினிமா
டி.வி
ஹ்யூமர்
பிஸினஸ்
போட்டோ உடான்ஸ்
ஜோக்ஸ்
கார்ட்டூன்ஸ்
மிஸ்டர் மியாவ்
ஸ்பெஷல்
ரொமன்ஸ் ரகசியங்கள்
ஹ..ஹ.. ஹனிமல்ஸ்
காசட்டுகள் வாங்க
லேட்டஸட் பார்த்தாச்சா?
Problem?
சந்தா
டிப்ஸ்
ரெசிப்பிஸ்
ரெகுலர்
வாசகி கோட்டா

இந்த ஆங்கிலச் சொற்கள் ஒவ்வொன்றுக்கும் ஈடான நல்ல அழகான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. ஆனால் விகடன் ஏடுகளை நடத்தும் தமிழ்ப் பகைவர்கள் வேண்டும் என்றே தமிழின் தூய்மையைக் கெடுத்து அதனை அழித்தே தீருவதெனக் கங்கணம் கட்டி நிற்கிறார்கள். வணிகம், நகைச்சுவை, சிறப்பு, காதல் மந்திரங்கள், ஒலிப் பேழை, திரு போன்ற தமிழ்ச் சொற்கள் இந்த ஏடுகளை வெளியிடுபவர்களுக்கு எட்டிக்காயாகக் கசக்கிறது. இப்படியான ஏடுகளைத் தமிழர்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்கத் தயாராக இருக்கும் போது அவர்கள் தமிழைக் கொலை செய்து கொண்டே இருப்பார்கள். ஆனந்த விகடன் கிழமை ஏட்டின் விற்பனை ஏழு இலட்சத்துக்கும் அதிகம்!

இசுப்பானிய மொழியில் 225,000 சொற்களும் ஜெர்மனிய மொழியில் 200,000 சொற்களும் காணப்படுகின்றன. உருசிய மொழி 125,000 சொற்களை எட்டியுள்ளது. பிரஞ்சு மொழி வெறுமனே 100,000 சொற்களே கொண்டுள்ளது.

ஆங்கிலம் நன்றாகப் படித்த ஒருவர் அண்ணளவாக 24,000 தொடக்கம் 30,000 சொற்களை மட்டுமே பேச எழுதப் பயன்படுத்துகிறார்.

யூஎன்எஸ்கோ கூரியர் (ருNநுளுஊழு ஊழரசநைச) என்பது அனைத்துலக உறவுகள் மற்றும் அரசியல் அறிவியல் பற்றிய ஆய்வுகளை வெளியிடும் ஏடாகும. அதில் சுயமெய டீதநடதயஉ-டீயடிiஉ என்பவர் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் தலைப்பு 6இ000 டயபெரயபநள: யn நுஅடியவவடநன hநசவையபந -டீசநைக யுசவiஉடந என்பதாகும். உலகில் உள்ள 6,000 மொழிகளில் 50 – 90 விழுக்காடு மொழிகள் இந்த நூற்றாண்எல் அழிந்தொழிந்து விடும் என எதிர்வு கூறியுள்ளார். இதில் என்றுமுள்ள செந்தமிழும் அடக்கமா?

வியப்பு என்னவென்றால் உலக மொழிகள் விரைவாகச் செத்துக் கொண்டிருக்கின்றன. மேற்குலக கொலனித்துவ படையெடுப்பு அப்போது பேசப்பட்ட மொழிகளில் 15 விழுக்காடு அழிக்கப்பட்டு விட்டன. கடந்த 300 ஆண்டுகளில் அய்ரோப்பா 10 – 12 மொழிகளை இழந்து விட்டது. அவுஸ்ரேலியாவில் 18 ஆம் நூற்றாண்டின் கடைசியில் பேசப்பட்ட 250 மொழிகளில் 20 மொழிகளே மிஞ்சியிருக்கின்றன! பிரேசில் 1530 ஆம் ஆண்டு தொடக்கம் போர்த்துக்கேயரது ஆட்சிக்கு உட்பட்ட பின்னர் 540 – நான்கில் மூன்று பங்கு – மொழிகள் இறந்துபட்டு விட்டன.
சுதந்திர நாடுகளின் தோற்றம் சிறுபான்மை மக்களது மொழிகள் கல்வித்துறையில், நீதித்துறையில், நிருவாகத்துறையில் புறக்கணிக்கப்பட்டு விட்டன.
தாராளமயப்படுத்தல், பொருளாதார உலகமயமாக்கல், தொழில் வளர்ச்சி கொள்கை போன்றவை பலமொழிப் பயன்பாட்டைக் குறைத்து ஒருமொழிப் பயன்பாட்டை ஊக்கிவிக்கின்றன.
தமிழ்மொழி பேசுவோர் எந்த நாட்டிலும் பெரும்பான்மையாக இல்லை. அவர்களுக்கு சுதந்திரமான நாடும் இல்லை. இவை என்றும் இருந்து வரும் செந்தமிழ் மெல்ல மறையலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்!

சங்க காலம் தமிழின் பொற்காலம்

(5)

நக்கீரன்

உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பண்பட்ட செம்மொழிகளுக்கு எல்லாம் ஒரு பொற்காலம் இருந்திருக்கிறது என்ற உண்மை தெரிய வரும். எடுத்துக் காட்டாக ஆங்கில மொழிக்கு வில்லியம் சேக்சுபியர் (றுடைடயைஅ ளூயமநளிநயசந (1564-1612) வாழ்ந்த காலத்தை பொற்காலம் என அழைக்கப்படுகிறது. அவர் 37 நாடகங்களையும் 14 அடிகள் கொண்ட 154 கவிதைகளையும் (ளுழnநெவ) எழுதியிருக்கிறார்.

தமிழ்மொழியின் பொற்காலம் எது? சங்க காலமே தமிழ்மொழியின் பொற்காலம் என்பது தமிழ் அறிஞர்களது ஒத்த கருத்தாகும். தமிழ்மொழியின் பொற்காலம் மட்டுமல்ல தமிழரின் பொற்காலமும் சங்க காலந்தான்.

பிற்கால சோழர்காலமும் பொற்காலம் என அழைக்கப்பட்டாலும் இவர்கள் காலத்திலேயே, குறிப்பாக முதலாம் இராசராசன் (985 – 1014) அவன் மகன் முதலாம் இராசேந்திரன் (1012 – 1044) காலத்திலேயே வடக்கில் இருந்து பெருந்தொகையான ஆரிய வேதியர்கள் கொண்டு வரப்பட்டு தமிழகத்தின் வளமான நிலங்களில் குடி அமர்த்தப்பட்டார்கள். அவர்களது குடியிருப்பு அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள் என அழைக்கப்பட்டன. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் வரி விதிப்பில் இருந்து (இறையிலி நிலம்) விலக்கப்பட்டது.

முதலாவது இராசராச சோழன் அவன் மகன் முதலாவது இராசேந்திரன் காலத்தில் புலிக்கொடி பறந்த சோழப் பேரரசின் கடற்படை வங்கக் கடலில் உலா வந்தன. சாவகம், புட்பம், கடாரம் வரை சோழர்களது மேலாண்மை இருந்தது. எல்லாம் இருந்தும் தீவிர பக்தர்களான சோழர்கள் வடமொழிக்கு வழங்கிய ஆதரவை தமிழ்மொழிக்கு வழங்கவில்லை. தமிழ் வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் தகாத மொழியெனத் தள்ளி வைக்கப்பட்டது. வேதப் பாடசாலைகளைக் கட்டி அவற்றின் இயக்கத்துக்குப் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்தார்கள். தமிழ்மொழிக்கு ஒரு பள்ளியேனும் கட்டினார் இல்லை.

எண்ணாயிரத்திலுள்ள ஒரு கல்வெட்டு வேதப்பள்ளியில் வேதங்களைப் படிப்பிக்க 10 பேராசிரியர்கள் அமர்த்தப்பட்டதைக் கூறுகிறது. அங்கு மொத்தம் 14 பேராசிரியர்கள், 70 முதுநிலை மாணவர்கள், 270 இளநிலை மாணவர்கள் கல்வி கற்றார்கள். திருக்கூடல் கல்வெட்டு, கோயில் நிருவாகத்தின் கீழ் ஒரு கல்லூரி இருந்ததைக் கூறுகிறது.

திருவிடைமருதூர், திருவிடைக் கழி, அணியூர், எண்ணூர், முக்கூடல் போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் வேதம், இலக்கணம், மருத்துவம் போன்றவை பயிற்றுவிக்கப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது. ஆனால் தமிழ் படிப்பிக்கப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. (தமிழக வரலாறும் பண்பாடும் – பக்கம் 216)

இருந்தும் நாயன்மார்களது தேவாரங்களையும், ஆழ்வார்களின் திவ்யபிரபந்தங்களையும் இசையுடன் பாட ஓதுவார்களை கோவில்களில் முதலாம் இராசராசன் அமர்த்தினான் என்பது உண்மையே. ஆனால் பிற்காலத்தில் இந்த வழக்கம் கைவிடப்பட்டது. இராசராசன் தில்லையம்பலத்தில் தில்லைவாழ் மூவாயிரம் அந்தணர்களால் ஒரு அறையில் பூட்டிவைக்கப்பட்டுச் செல் அரித்துப் போன தேவாரப் பதிகங்கள் அடங்கிய ஏட்டுக் குவியலைக் கண்டெடுத்துப் புதுப்பித்;தான் எனச் சொல்லப்படுகிறது.

வேதியர்களின் குடியேற்றத்தினால் சாதி சமூகம் இறுக்கம் அடைய வழிகோலியது. வருணாசிரமதர்மம் வலியுறுத்தப்பட்டது. மக்களிடையே பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டது. சாதிக்குள்ளும் உட்பிரிவுகள் பெருகின. சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு இந்தச் சாதிப் பிரிவினை முக்கிய காரணம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

வேதியர்கள் சமூக ஏணியின் மேல் மட்டத்தில் வைககப்பட்டனர். கோயில்களிலும் வேதக் கல்வி பாடசாலைகளிலும் தனியுரிமை உடையவர்களாக விளங்கினர். இதனால் அவர்களது நிலை மேலும் உயர்ந்தது. அரச செலவில் வேதவிருத்தி, பட்டவிருத்தி, பாதரவிருத்தி, புராணவிருத்தி போன்ற பட்டங்களும், தானங்களும் அவர்களது வசதிகளை மேலும் மேலும் பெருக்கின. (தமிழக வரலாறும் பண்பாடும் – பக்கம் 300 – 301)

பக்தி இயக்க காலத்தில் (7 ஆம் 8 ஆம் நூற்றாண்டு) இறை வழிபாடு தமிழிலேயே நடைபெற்றது. “அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் சொற்றமிழில் எனைப் பாடுக” என சுந்தரமூர்த்தி நாயனாரை சிவன் கேட்டதாக சேக்கிழார் தாம் எழுதிய பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல கடவுள் வழிபாடு அடியார்களால் நேரடியாகச் செய்யப்பட்டது. “நீரொடு பூ சுமந்தேத்தி புகுவார் பின்பு புகுவேன்” என்ற நாவுக்கரசர் தேவாரம் அதனை உறுதி செய்கிறது.

சமயத் துறையில் வேதங்களும் உபநிடதங்களும் ஆறங்கங்களும் சுருதிமிருதிகளும் புராண இதிகாசங்களும் வட மொழியிலேயே எடுதப்பட்டன. தமிழ்நாட்டில் தமிழ்மக்களுக்கு அரசியல் நீதி முறைகளையும் சமயநூல் வகைகளையும் எடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் அருகின. செந்தமிழ் இருந்த இந்த நிலை ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் முதலியோர் தோன்றும் வரை நீடித்தது. (சைவ இலக்கியச் சோலை – பக்கம் 42)

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நாளும் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் 8 ஆம் நூற்றாண்டில் சுந்தரரும் 9 ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகரும் தாங்கள் பாடிய தேவாரம், திருவாசகம் ஊடாக தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றினர். இவர்கள் இறை பக்தியோடு தமிழ்ப் பற்றையும் ஊட்டி வளர்த்தார்கள். இவர்களில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் திருஞானசம்பந்தர்” என சுந்தரர் ஞானசம்பந்தரைப் போற்றுவதைப் பார்க்கிறோம்.

“சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என அப்பர் தமிழ்மொழி மீது தனக்கு இருந்த காதலை வெளிபடுத்துகிறார்.

ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தமிழின் இலக்கிய வளத்திற்கு அரண் சேர்க்கின்றது. தமிழ் இனிமையையும் நீர்மையையும் உடைத்தது என்பதற்கு சான்றாக நாலாயிர திவ்விய பிரபந்தம் திகழுகிறதென்றால் அது மிகையல்ல.

வடமொழியின் மீது ஆழ்வார்களுக்கு மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் உண்டு. அதே நேரத்தில் தமிழின் மீது அவர்கள் கொண்ட காதலும், ஈடுபாடும் அதைவிட உயர்ந்து காணப்படுகிறது. செந்தமிழின் முழுவடிவமாகவே அவர்கள் திருமாலைக் கண்டு அனுபவித்துப் பாடினார்கள்.

“செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி” என்ற அடி திருநெடுந்தாண்டகத்தில் உள்ளது. இதன் பொருள் திருமால் தமிழிசையாகவும் வடசொல்லாகாவும் உள்ளான் என்பது. தமிழ் முதலில் சொல்லப்பட்டு வடமொழி பின்னர் சொல்லப்படுவது கவனிக்கத் தக்கது. மேலும் தமிழ் என்று சொல்லும்போது ஓசை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். வடமொழி என்று சொல்லும்போது வெறுமனே வடசொல் என்கிறார்.

வடமொழியிலுள்ள வேதங்களைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்வார்களின் ஈரத் தமிழ்ப் பாசுரங்கள் ஒன்றே போதும் என வேதாந்த தேசிகர் பாடுகிறார்.

செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோம்”

“செந்திறத்த என்ற சொல்லுக்கு இனிமை என்பது பொருள். இனிய தமிழ் என்பது முரட்டு சமஸ்கிருதம் என்பதற்கு மாறுபட்டது.” இவ்வாறு “தமிழ் இலக்கியங்களில் வைணவம்” என்ற நூலில் இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கிறார்.

சங்க காலம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலம். சாதி சமயம் (நிறுவன சமயம்) கால்கொள்ளாத காலம். ஆடவர் போலவே பெண்டிரும் கல்வி கற்று பாடல் இயற்றிய காலம். அதுமட்டுமல்ல நாடாளும் அரசர்களும் கவி பாடிய காலம்.

சங்க கால மன்னர்கள் புலவர்களை போற்றியதால் இயற்றமிழ் வளர்ந்தது. பாணர்களை ஆதரித்ததால் இசைத் தமிழ் வளர்ந்தது. கூத்தர்கள் நாடகத் தமிழை வளர்த்தனர்.

சங்க காலத்தில் புலவர்களாலும் மன்னர்களாலும் தமிழ் போற்றி வளர்க்கப்பட்டது.
சங்க காலம் தமிழ் தன்னேரில்லா தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் எனப் போற்றப்பட்ட காலம். கடவுள் பெயரால் ஒருவர் குடுமியை மற்றவர் பிடித்துச் சண்டையிட்டுக் கொள்ளாத காலம்.

சங்க இலக்கியம் அன்பு, அறம், ஈகை போன்ற மனித விழுமியங்களை வற்புறுத்தியது. வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழியைக் காட்டியது. உலகிற்கு வழிகாட்டக் கூடிய தகுதி பெற்றிருந்தது.

தமிழ் அரசர்கள் தமிழர்களை ஆண்டார்கள். தமிழ்மொழி பொதுமக்கள் மொழியாகவும் புலவர்கள் மொழியாகவும் அரச மொழியாகவும் இருந்தது. தமிழ்மொழி அறியாத பிற இன மன்னர்கள் ஆட்சி செய்யாத காலம்.

சங்க காலத்தில் “நாம் தமிழர், நமது மொழி தமிழ், நமது பண்பாடு தமிழ்ப் பண்பாடு என்ற மனவுணர்வு (உழளெஉழைரளநௌள) அழுத்தமாகப் பதிந்திருந்தது.

சுருங்கச் சொன்னால் தமிழின் வாழ்வும் தமிழரின் வாழ்வும் உச்சத்தில் இருந்த காலம் சங்க காலமே. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்!

(6)
சங்கம் மருவிய காலத்தில் தமிழ்மொழி

சங்க காலத்தை அடுத்து சங்கம் மருவிய காலம் தொடங்குகிறது. தமிழ் மொழி களப்பிரர் ஆட்சியிலும் முற்காலப் பல்லவர் ஆட்சியிலும் வலுவிழந்தது.

களப்பிரர், முற்காலப் பல்லவர் இருவரும் அரசியலில் தமிழைவிட வடமொழிக்கு முதன்மை இடம் கொடுத்தனர். காரணம் இவர்கள் தமிழர் அல்லர் என்பதும் தமிழகத்துக்கு வெளியே இருந்து வந்த பிற இனத்தவர் என்பதேயாகும்.

சங்ககால முடிவில் தமிழக அரசியலில் இருள் சூழ்ந்தது. சமயத்துறையில் பொறுதி மறைந்து காழ்ப்புணர்ச்சி தலையெடுத்தது.

வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் எனச் சித்திரிக்கிறார்கள். அதற்குக் காரணம் களப்பரர் என்ற அயல்நாட்டவரது படையெடுப்பு அல்லது ஊடுருவல் காரணம் என்கின்றனர்.

இரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலை கன்னட நாட்டுக் களப்பிரர் படையெடுக்க சாதகமாக இருந்தது. களப்பிரர் படையெடுத்து வந்தபோது தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய அரசர்கள் பெயர் தெரியவில்லை. இருப்பினும் களப்பிரர் மூவேந்தர்களையும் அவர்களுக்குக் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்களையும் அடக்கி வெற்றிகொண்டனர் என்பது தெரிகிறது.

வேள்விக்குடிப் பட்டயம் களப்பிர மன்னர்களை (பாண்டியர்களால் 9 ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்டது) கடுமையாகக் கண்டிக்கிறது. அப் பட்டயம்; அவர்களை கலியரசர் என இழிவாக அழைக்கிறது.

“களப்பிரர் தங்கள் வாள் வலிமையால் பல மாமன்னர்களைப் புறங்கண்டார்கள் என்றும் தேவர்களுக்கும் பிராமணர்களுக்கும் தானம் செய்யப்பட்ட தேவதானங்களையும் பிரமதேயங்களையும் கைப்பற்றி சமூக ஒழுங்கைக் கெடுத்தார்கள்” என்று பறையறைகிறது.
“வுhந ஏநடஎமைரனi பசயவெ ழக வாந Pயனெலயள (Niவொ உநவெரசல) னநழெரnஉநள வாநஅ யள நஎடை மiபௌஇ மயடi-யசயளயசஇ றாழளந inஎinஉiடிடந யசஅள ரிசழழவநன அயலெ யனாசையதயள யனெ ரிளநவ வாந ளழஉயைட ழசனநச உழகெளைஉயவiபெ யடட உhயசவையடிடந னநஎயனயயௌ யனெ டிசயாஅயனநலயள – பகைவள வழ பழனள யனெ டீசயாஅiளெ.” ( Pழடவைiஉயட ர்ளைவழசல ழக வுயஅடையெனர டில மு.யு. நேநடயமயனெய ளுயளவசi – ளுழரவா ஐனெயைn ளுவரனநைள – pயபந 136).

மேலும் அதே வேள்விப்பட்டயம் களப்பிரர்களை பாண்டியன் கடுங்கோ போரில் தோற்கடித்து பாண்டி நாட்டை மீட்டான் களரப்பரர் ஆட்சியை அகற்றினான் என்கிறது.

“அளவரிய அதிராஜரை அகலநீக்கி அகவிடத்தைக்
களப்ரனென்னுங் கலி அரைசன் கைக்கொண்டதனை
நன்கமைந்த மானம் போர்த்த தானைவேந்தன்
னொடுங்கா மன்னரொளி நகரழித்த கடுங்கோ னென்றும்
கதிர்வேற் றென்னான்.”

ஆனால் சோழ நாட்டில் களப்பிரர் ஆட்சி 6 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது.

களப்பிரர் பற்றிய இத்தகைய கருத்து வழுவானது என்று முன்னாள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முனைவர் க.ப. அறவாணன் தனது தமிழர் சமுதாய வரலாறு என்ற நூலில் மறுத்து எழுதியிருக்கிறார். அவர் எழுதியிருப்பதாவது –

“களப்பிரர் வருகையால் தமிழர்தம் பண்பாடு அழிக்கப்பட்டதாக வரலாற்றில் எழுதப்படுகிறது. இது பெரும் வழுவாகும். களப்பிரர் காலத்தில்தான் புலால் வேண்டா என்ற போதனா இயக்கம் தோன்றியது. மது வேண்டா எனும் கருத்து உரத்துப் பாடப் பெற்றது. பரத்தமை வேண்டா என்ற அறிவுரை பரப்பப்பட்டது. கொல்லாமை வேண்டா எனும் நெறி எடுத்துரைக்கப் பெற்றது. இவையெல்லாம் தமிழ்ப் பண்பாட்டை கெடுத்த நிகழ்ச்சிகளா? தமிழர்களுக்கு வேண்டாத அறிவுரையா? அல்ல என்பது வெளிப்படை.
இவர்கள் காலத்தில் தமிழ் வளர்ச்சி குன்றியது எனக் கூறப்பெறுகிறது. இதுவும் வழுவே.”

முனைவர் அறவாணனின் கருத்துப்படி சமணமும் பௌத்தமும் வடநாட்டில் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த சத்திரியர்களது எழுச்சியாக விளங்கியது என்றால் தமிழகத்தைப் பொறுத்தவரை (களப்பிரர் ஆட்சி) பிராமணரை எதிர்த்துப் பிராமணர் அல்லாதார் எழுச்சியாக இருந்தது.

முனைவர் அறவாணனின் கருத்திலும் பொருள் இருக்கிறது. சங்கம் மருவிய காலத்திலேயே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் எழுந்தன. அதற்கு முன்னர் திருக்குறள் உட்பட பதினெண் கீழ்க்கணக்கு என அழைக்கப்படும் அற நூல்கள், அக நூல்கள் எழுதப்பட்டன.

மூவேந்தர் அரசமரபும் சங்ககாலத்து அரசியலும் நீடித்த நிலையை இக் காலத்தில் (சங்கம் மருவிய காலத்தில்) காணலாம். பேரரசர், சிற்றரசர் நிலையிலும் மாற்றமில்லை. மூவேந்தர்களின் ;வரலாறு வனப்புடையதாகவே இலக்கியம் உணர்த்துகிறது. சோழர்கள் சிதறிக் கிடந்தனர். பாண்டியர்களும் சேரர்களும் அரசியல் வானில் கொடிகட்டிப் பறந்தனர்” என வ.தி. செலவம் தாம் எழுதிய தமிழக வரலாறும் பண்பாடும் என்ற நுலில் (பக்கம் 151) குறிப்பிடுகிறார்.

தமிழகத்தைக் களப்பிரர் படையெடுத்து வந்து ஆண்டது உண்மை. சரியான காலம் எது என்பதில்தான் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

கிபி 4 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அச்சுத களப்பாள மன்னன் காவிரிப் படுக்iகியல் உக்கிரபுரத்தைத் தலைநகராக வைத்துச் சோழநாட்டை ஆண்டு வந்தான் என்று புத்ததத்தன் தனது நூலில் குறிப்புட்டுள்ளான். களப்பிரர்களில் ஒரு பிரிவினர் சமணத்தையும் இன்னொரு பிரிவினர் பவுத்தத்தையும் தழுவி இருந்தனர்.

களப்பரர்களது ஆட்சிக் காலத்தில் சமணர்களின் பள்ளிகளும் சேர்க்கைகளும் மதுரை மண்டலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததாகச் சேக்கிழார் பெரிய புராணத்தில் (திருஞானசம்பந்தர் புராணம் (602) குறிப்பிடுகிறார்.

பறிமயிர்த் தலையும் பாயும்
பீலியும் தடுக்கும் மேனிச்
செறியும் முக்குடையும் ஆகித்
திரிபவர், எங்கும் ஆகி
அறியுமம் அச் சமய நூலின்
அளவினில் அடங்கிச் சைவ
நெறியினில் சித்தம் செல்லா
நிலைமையில் திகழுங் காலை. ( பாடல் 602)

மயிர் பறித்த தலையும் பாயும் மயில்பீலியும் தடுக்கும் உடம்பில் கூடிய இக் கோலங்கள் சமணத் துறவிகளுக்குரியன. சமணர்களை திருஞானசம்பந்தர் பல இடங்களில் – பத்தாம் பாட்டில் அமைத்துப் பாடுவது வழக்கம். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்!

வடமொழியைப் போற்றிய பல்லவர்

(7)

களப்பிரரை அடுத்து மீண்டும் தமிழரல்லாத பல்லவர் ஆட்சி (கி.பி. 5 – 9 ஆம் நூற்றாண்டு) தமிழகத்தில் நிலைகொண்டது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான களற்சிங்க நாயனார் பல்லவர் குலத்தைச் சேர்ந்தவர் எனப் பெரியபுராணம் குறிக்கிறது.

பல்லவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாண்டியர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். இருவருக்கும் இடையே ஓயாத போர் நிகழ்ந்தன.

பல்லவர் பாண்டியரை மட்டும் அல்ல வடக்கே சாளுக்கியர்களையும் (கிபி 550 – 750) அதன்பின் இராஷ்டிரகுட்டரையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது.

பல்லவர்களின் பகையரசர்கள் பாண்டியரின் நண்பர்களாக இருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் வெண்ணிப் போர்க்களத்தில் இருபெரு வேந்தரும் பதினொரு வேளிரும் ஒருங்கே வென்று புகழ் ஈட்டிய சோழன் கரிகால்பெருவளத்தான் பரம்பரையோ இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.

சிம்மவிஷ்ணுவே பல்லவப் பேரரசைத் தோற்றுவித்தவன் ஆவான். இவன் வடக்கே கிருஷ்ணா நதிக்கும் தெற்கே காவேரிக்கும் இடைப்பட்ட நிலத்தை ஆண்டான். இதனால் இவன் ‘அவனிசிம்மன்’ என அழைக்கப்பட்டான். இவனது மகனே புகழ்பெற்ற பல்லவ மன்னர்களில் ஒருவனான முதலாவது மகேந்திரவர்மன் (கிபி 580 – 630) ஆவான். சகல கலைகளிலும் வல்லவனான இவன் ஒரு கவிஞனுமாவான்.

மத்தவிலாசப் பிரஹசனம் என்ற நாடக நூலை எழுதியவன் இவனே. இது வடமொழியும் பிராகிருதமொழியும் கலந்து இயற்றப்பட்டது. பிரஹசனம் என்பது நகைச்சுவை எனப் பொருள்படும். மத்தவிலாச பிரஹசனம் என்பது ஒரு பயித்தியக்காரனின் நகைச்சுவை நாடகம் எனப் பொருள்படும். ஒரு பயித்தியக்காரன் பாத்திரம் இதில் இடம்பெற்றுள்ளது.

மத்தவிலாசப் பிரஹசனம் மகேந்திரவர்மன் காலத்தில் காஞ்சிபுரத்தில் இருந்த காபாலிகம், பாசுபதம், பவுத்தம், சமணம் என்ற மதங்கள் பற்றிய செய்தியை அறியக் கூடியதாக இருக்கிறது.

பவுத்த மதத்தின் அநித்தியம், துக்கம், அனாத்மம் போன்ற கொள்கைகள் நாடகத்தில் வரும் தேரரின் வாயிலாக சமணனான மகேந்திரவர்மன் ஏளனம் செய்கிறான்.

இந்த நூல் தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் மறைந்திருந்தது. சேரநாட்டில் ஒளிந்திருந்த இந்த நூல் 1917 இல் கண்டுபிடிக்கப்பட்டு திருவனந்தபுரம் சமஸ்கிருத வெளியீடு வரிசையில் ஒன்றாக அச்சிடப்பட்டது.

மத்தவிலாசப் பிரஹசனம் என்ற நாடக நூலை எழுதியதால் மகேந்திரவர்மன் மத்தவிலாசன் என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.

மத்தவிலாசப் பிரஹசனம் என்ற நகைச்சுவை நாடகத்தை தமிழில் மயிலை சீனி. வேங்கடசாமி இராவ்பகதூர் சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ. அவர்களது துணையோடு தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

மத்தவிலாசப் பிரஹசனம் வடமொழியில் எழுதப்பட்டது பல்லவர் வடமொழிக்குக் கொடுத்த அரியணை நிலைக்கு இந்த நூல் சான்றாக அமைந்துள்ளது.

மகேந்திரவர்மன் காலத்தில் தமிழ்நாட்டிலே சமண சமயமும் பவுத்த சமயமும் செல்வாக்கோடு விளங்கின. சேர, சோழ, பாண்டிய நாடு என மூன்று நாடுகளிலும் பரவி இருந்தன. மகேந்திரவர்மன் சமண சமயத்தவனாக இருந்தான்.

சமணருடைய பள்ளிகளும் பாழிகளும் பவுத்தருடைய பள்ளிகளும் விகாரைகளும் ஊரெல்லாம் நிறைந்திருந்தன. சமணத் துறவிகளும் பவுத்த தேரர்களும் நாடெல்லாம் நிறைந்திருந்தனர்.

சைவ சமயமும் வைணவ சமயமும் இரண்டின் செல்வாக்குக் குன்றியிருந்தன.

மகேந்திரவர்மனின் சமகாலத்தவர் திருநாவுக்கரசர். மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்ட திருநாவுக்கரசரே தருமசேனர் என சமணமதத்திற்கு மாறிப் பின்னர் அவரது தமக்கையார் திலகவதியாரால் மீண்டும் சைவ சமயத்துக்குத் திரும்பியவர். சமணமதத்தை சேர்ந்த மகேந்திரவர்மனை சைவசமயத்திற்கு மாற்றியவர்.

திருநாவுக்கரசரை சுண்ணாம்புக் காளவாயில் தள்ளும்படியும் பின்னர் நஞ்சு கலந்த பால்சோற்றை உண்ணக் கொடுத்தும் மதம்பிடித்த யானையை கொல்லுமாறும் கல்தூணைப்பூட்டி நடுக்கடலில் தள்ளுமாறும் ஆணையிட்டவன் இந்த மகேந்திரவர்மனே.

முதலாவது மகேந்திரவர்மனை அடுத்து அவனது மகன் முதலாவது நரசிம்மவர்மன் (கிபி 630 – 638) பட்டத்துக்கு வந்தான். இவனது ஆட்சியிலேயே பரஞ்சோதியார் தலைமையில் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற பல்லவர்படை சாளுக்கிய மன்னனான முதலாம் புலிகேசியை வாதாபியில் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது. வாதாபியை வென்றதால் மகேந்திரவர்மன் “வாதாபி கொண்டான்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டான்.

இந்த வாதாபி படையெடுப்பின் பின்னரே கணபதி தமிழ்நாட்டில் குடியேறினார் என நம்பப்படுகிறது. அதனால் போலும் வாதாபி கணபதி என அழைக்கப்படுகிறார்.

முதன்முறையாக தமிழக வரலாற்றில் கற்கோவில்களை எழுப்பியவன் முதலாம் மகேந்திரவர்மனே. முதலாம் நரசிம்மவர்மனே மாமல்லபுரத்துக் கற்பாறைகளைக் காலத்தால் அழியாத புகழ்பெற்ற கலைக் கோவில்களாகச் செதுக்கிவித்தவன். (கல்கி எழுதிய “சிவகாமியின் சபதம்” புனைகதை நரசிம்மவர்மன் காலத்து வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது).

பல்லவர் ஆட்சியில் முற்றாக வடமொழியே அரியணை மொழியாகக் கோலோச்சியது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் வடமொழியே பெருக்கெடுத்தோடியது. தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு வடமொழிக் கல்விக்கே முதலிடம் தரப்பட்டது.

காஞ்சி, கடிகாசலம், கிருத்தார்ச்சுனீயம், பாகூர் பழம்பதி போன்ற ஊர்களில் இருந்த கல்விக்கூடங்களில் வடமொழி போதிக்கப்பட்டது. தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள பாகூரில் 14 கலைகளும், 18 வித்தைகளும் கற்பிக்கப்பட்டன. வேதப் பிராமணர்களுக்கு அக்கிரகாரங்களும் சதுர்வேதிமங்கலங்களும் பிரமதேயங்களும் இறையிலி நிலங்களாக விடப்பட்டன.

பல்லவர் காலத்திலேயே லோகவிபாகம், கிருதார்ச்சுனீயம், அவந்திசுந்தரிக் கதை, மத்தவிலாசபிரகசனம் போன்ற நூல்கள் வடமொழியில் எழுதப்பட்டன.

பல்லவர் காலத்தில் தமிழ் அரியணை மொழியாக இல்லாதிருந்தும் அது வளர்ச்சி பெற்றது. அப்படி வளர்ச்சி பெற்றதற்கு பக்தி இயக்கத்தினைத் தோற்றுவித்து சைவ, வைணவ இலக்கியத்திற்கு வித்திட்ட சம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்ற சமய குரவர்களையும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வர் போன்ற ஆழ்வார்களையுமே சாரும்.

“தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” எனப் பாடிய சைவ சமயக் குரவர்களது தேவாரத் திருமுறைகளும் “செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய ஒதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றனவே” என வைணவ ஆழ்வார்கள் செந்தமிழால் அருள் செய்த நாலாயிர திவ்வியப் பிரப்பந்தமும் தமிழும் தமிழிசையும் நாளும் தளைத்தோங்கி எண்திசையும் புகழ்; மணக்க வழி வகுத்தன.

ஆண்டாளின் திருப்பாவை மாணிக்கவாசகரின் திருவெம்பாவை சங்க காலத் தலைவன்-தலைவி அகவுறவைப் பின்பற்றி நாயகன் – நாயகி பாவனையில் பாடப்பட்டதாகும்.

சுந்தரமூர்த்தி நாயனார், திருமங்கையாழ்வார் ஆகியோர் தொடர்பால் இராசசிம்ம பல்லவன் காலத்திலிருந்து பல்லவர் தமிழில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர்.

சங்க காலத்தில் தெற்கு நோக்கிக் குடியேறத் தொடங்கிய பிராமணராகிய ஆரியர் பல நூற்றாண்டு காலமாக தமிழ்ப் பண்பாடோடு கலவாது தனித்து தமது வைதீக ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வந்தனர். இதனால் அவர்கள் சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப் பட்டிருந்தனர்.

பின்னர் திராவிடர்களது சமயக் கூறுகளை ஏற்றுக்கொண்ட போதுதான் சைவ – வைணவ சமயங்களும் சிவ – திருமால் வழிபாடும் வேர்விடத் தொடங்கின.

இதனால் பக்தி இலக்கிய காலத்தில் தமிழ்ப் பண்பாடும் ஆரியப் பண்பாடும் கலந்த ஒரு கலப்புப் பண்பாட்டையே பார்க்கிறோம். தமிழ்மொழியும் ஆரியமும் (வடமொழியும்) ஒன்றுக்கொன்று தாழ்ந்ததல்ல இரண்டு


என்றுமுள்ள செந்தமிழ்!
“முத்தமிழும் நான்மறையும் ஆனாய் கண்டாய்”

(8)

திருநாவுக்கரசர் வடமொழி தென்மொழி இரண்டையும் ஒன்றாகப் பார்த்தார் என்பதற்கு அவரது தேவாரங்களில் இடம்பெற்ற பாடல் வரிகள் சான்றாக அமைந்துள்ளன.

“ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”

“முத்தமிழும் நான்மறையும் ஆனாய் கண்டாய்”

“தென்தமிழோடு ஆரியனைச் சீரியனை”

“ஆரியத் தமிழோடு இசை யானவன்”

திருநாவுக்கரசர் போலவே திருஞானசம்பந்தர் தமிழையும் வடமொழியையும் ஒன்றாகப் பார்த்தார் என்பது அவர் பாடிய தேவாரப் பாடல்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

“தம்மலரடி யென்று அடியவர் பரவத்
தமிழ்ச்சொல்லும் வடசொலுந் தரணிமேற் சேர
அம் மலர்க் கொன்றை யணிந்த எம் அடிகள்
அச்சிறுபாக்கம் ஆட்சி கொண்டாரே.”

“செந்தமிழர் தெய்வமறை நாவர் செழு நற்;கலை தெரிந்த அவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்”

“தென்சொல் விஞ்சமர் வடசொற்றிசைமொழி எழில்நரம் பெடுத்துத்
துஞ்சுநெஞ்சிருள் நீங்கத் கொழுதெழு தொல்புகலூர்”

“செந்நிறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசை தான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி”

“செந்தமிழில் தெய்வ மறை நாவர் … அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்” என்று பாடுவதன் மூலம் சம்பந்தர் காலத்தில் திருக்கோயில் வழிபாடு செந்தமிழில் இருந்ததை உணர்ந்து கொள்ளலாம்.

சம்பந்தர் – அப்பர் காலத்தில்த்தான் தமிழ்நாட்டில் சைவம் தழைத்தோங்க கால்கோள் இடப்பட்டது. புறச் சமயங்களான சமணம் – பவுத்தம் புறங்காணப்பட்டன.

வேதியர் குலத்தில் பிறந்த சம்பந்தர் வேத வேள்வி நடத்தும் முறைகளை மாற்றினார். வேள்வியில் குதிரை, ஆடு, மாடு போன்றவற்றை கொன்று பலி கொடுக்கும் உயிர்க் கொலையைத் தவிர்க்கச் செய்தார். அதே சமயம் வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை விளங்கவும் பூத பரம்பரை பொலியவும் பாடுபட்டார். தனது தந்தையார் வேள்வி செய்வதற்கு பொன் வேண்டித் திருவாவடுதுறையில் பதிகம் பாடி ஆயிரம் பொன் நிறைந்த பொற்கிழி பெற்றார் எனப் பெரிய புராணம் செப்புகிறது.

இருந்தும் சமய தளத்தில் சம்பந்தர் ஒரு புரட்சியைச் செய்தார். வேதநெறி விதைத்த சாதியை புறந்தள்ளினார். சைவ சமயம் தீண்டப்படாதோர் பட்டியலில் போட்டு வைத்த திருநீலகண்ட யாழ்ப்பாணத்தாரை தம்முடன் திருத்தல யாத்திரையின் போது உடன் கூட்டிச் சென்று தேவாரங்கள் பாடப்படும் போது யாழ் வாசிக்கச் செய்து மகிழ்ந்தார்.

இவ்வாறு ஆரியமும் தமிழும் ஒன்றென திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தேவாரப் பாடல்களில் ஆங்காங்கே கூறிச் செல்கிறார்கள்.

மொழி அடைப்படையில் இல்லாது சமய தளத்திலும் இந்த ஆரிய – தமிழ்க் கலப்பினை தாங்கள் பாடிய தேவாரத்தில் சம்பந்தரும் நாவுக்கரசரும் வற்புறுத்தி இருக்கிறார்கள்.

இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகியவையே வடமொழியில் உள்ள நால் வேதமாகும். அறம், பொருள், இன்பம், வீடு தென்மொழியில் உள்ள நால் வேதமாகும். இந்த இரண்டையும் அருளியவர் சிவபெருமான். இருவகை வேதங்களும் சொல்லும் பொருள் ஒன்றே. என்பது சம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் கருத்தாகும்.

“தூய காவிரியின் நன்னீர் கொண்டு இருக்கு ஓதி ஆட்டி”

“சாமத்து வேதமாகி நின்றதோர் சம்புதன்னை”

“சாம வேதத்தார் எந்தையும் எந்தை தந்தையும் ஆய ஈசர்”

“வேதத் தோடாறங்கம் சொன்னார் போலும்”

“அருமறையோடாறங்கம் ஆய்ந்து கொண்டு பாடினார் நால்வேதம்”

“வேதியன் காண் வேதவிதி காட்டினான் காண்”

என்றும் வடமொழி வேதத்தை சிவபெருமான் அருளிச் செய்தார் என்று கூறும் நாவுக்கரசர் தென்மொழி வேதத்தையும் ஆலின் கீழ் இருந்து அருளிச் செய்தார் என்றும் கூறுகிறார்.

சிவபெருமான் ஆலின் கீழ் இருந்து அறம் உரைத்த செய்தியை பின்வரும் தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

“ஆலின் கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கு அருளிச் செய்து
நூலின் கீழவர்க்கு எல்லாம் நுண் பொருளாகி நின்று.”

“வருந்தின நெருன லின்றாய் வழங்கினர் நாளர், ஆல் கீழ்
இருந்தின பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர்.”

“ஆலத்தார் நிழலில் அறம் நால்வர்க்குக்
கோலத்தால் உரை செய்தவன்.”

“ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடின்பம்
ஆறங்கம் வேதம் தெறித்தானை.”

இவ்வாறு ஆரிய வேதத்தையும் திராவிட வேதத்தையும் சிவபெருமான் முறையே வடமொழியிலும் தென்மொழியிலும் அருளிச் செய்தார் என்று சம்பந்தரும் நாவுக்கரசரும் பலகாலும் சொல்லிச் செல்கிறார்கள்.

சம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் சிவபெருமான் ஆலமரத்தின் கீழிருந்து அறநெறியை அருளிச் செய்தார் என்ற நாயன்மார்கள் கூறுவது போலவே திருமழிசை ஆழ்வாரும் தாம் அருளிய நான்முகன் திருவந்தாதியில் (17) திருமால் –

“ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை உகந்துரைத்தான் மெய்த் தவத்தோன் – ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்கு மாறு.”

என்கிறார்.

மெய்யான தவநெறியையுடைய சிவபெருமான் உலகத்தை அளந்தவனும் திருப்பாற்கடலில் கண் வளர்ந்தவனும் ஆலிலை மேல் துயில் கொண்டவனும் ஆன எம் பெருமானைத் தான் வழிபடும் வகையான அறநெறியை முன் யுகத்தில் ஓர் ஆலமரத்தின் நிழலில் நான்கு மாமுனிவர்களுக்கு உபதேசித்தார்.

எம்பெருமானை வழிபடும் நெறியை மாமுனிவர்களுக்குச் சிவபெருமானே உபதேசித்தான் என்றால் எம்பெருமானுடைய பரத்துவத்தைச் சொல்லவும் வேண்டுமோ?

அகத்தியர், புலத்தியர்,தட்சர், மார்க்கண்டேயர் ஆகியோரே அவ் நால்வர் ஆவர்.

வடமொழியும் தென்தமிழும் ஒன்று வடமொழிக்கு வேதம் தமிழிற்கு வள்ளுவனார் குறட்பா என வண்ணக்கஞ் சாத்தனார் என்ற புலவர் பாடியிருக்கிறார்.

“ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்(து) – ஆரியம்
சீரிய தென்தொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து, தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து” (திருவள்ளுவர் மாலை 43)

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி பாரதியார் தமிழ்த் தாயை “ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்” என்கிறார்.

சைவம் வைணவம் இரண்டையும் வளர்க்கப் பாடுபட்ட அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையாரும் அருண்மணி வாசகரும் பன்னிரு ஆழ்வார்களும் செந்தமிழையும் வளர்த்தார்கள்.

சைவம் சரி, வைணவம் சரி இரண்டுக்கும் பக்தி இயக்க காலமே பொற்காலமாகும்.

பிற்காலத்திலேயே – ஆரிய மேலாண்மை வலுப்பட்ட பின்னரே – தென்மொழியும் வடமொழியும் ஒன்றென்ற நிலை மாறி தமிழ் நீஷ பாசை வடமொழி தேவ பாசை என்ற நச்சுக் கருத்து தமிழர்கள் மத்தியில் விதைக்கப்பட்டது.
இதனால் தேவார திருவாசகங்களைச் சோழ பாண்டிய நாடுகளிலுள்ள பிராமணர்கள்கூட பெரும்பாலும் ‘பண்டாரப் பாட்டுகள்’ என்று ஒதுக்கி வைத்து விட்டார்கள். ஆதிசங்கரர் எழுதி வைத்த பாஷியங்களைப் போல் அவை போற்றப்படவில்லை.
அதனால் ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உவப்பிலா ஆனந்தமயமான தேனினைச் சொரியும் – தேன் கலந்து பால் கலந்து செழுங்கனிச் தீஞ்சுவை கலந்து ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கும் – நாயன்மார்களது தேவார திருவாசகங்கள் கருவறைக்கு வெளியே தள்ளப்பட்டன.

பக்தி தலைக்கேறிய தமிழர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். அது மட்டுமல்ல, இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி சமற்கிருதம் என்ற கோட்பாடும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்!

தில்லையில் தமிழ் படும் பாடு

(9)

தேவாரங்களை ஒதுவார் என்னும் பிரிவினரை கோயில்களில் படிக்க முதலாம் இராசராசன் ஏற்பாடு செய்தான் எனக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இன்றும் பேரளவில் இல்லாவிட்டாலும் ஓரளவு தேவாரங்கள் ஓதுவார்களால் கோயில்களில் பாடப்பெற்று வருகின்றன. ஆனால் பிராமணர்கள் எவராவது தேவாரங்கள் ஓதுவதைப் பார்க்க முடியாது.

“சைவமும் தமிழும் ஒன்று. சைவம் இன்றேல் தமிழ் இல்லை. தமிழ் இன்றேன் சைவம் இல்லை” என்கிறார்கள் பக்தர்கள். ஆனால் நடைமுறையில் அதனைக் காண்பது அரிதாக இருக்கிறது.

“தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் திருவாசகம் பாடுவேன்” என்று ஓதுவார் ஆறுமுகசாமி தனிமனித போராட்டம் நடத்துகிறார். “பாடக்கூடாது. தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடுவது மரபுக்கு விரோதமானது’ எனத்; தீட்சிதர்கள் அவருக்கு தடைவிதித்து விட்டார்கள்.

ஆதீனங்கள், மடங்கள், சைவப் பழங்;கள், தமிழ் ஆர்வலர்கள், அமைப்புகள் என்று பல பேரையும் பல ஆண்டுகளாகச் சந்தித்து இந்த அநீதியைத் தட்டிக் கேட்குமாறு மன்றாடியிருக்கிறார் ஆறுமுகசாமி. ஆனால் யாரும் அவருக்குக் கைகொடுக்க முன்வரவில்லை. “எல்லாம் வல்ல’ தீட்சிதர்களை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த அமைப்பும் முன்வரவில்லை.

8.5.2000 அன்று தனியொரு மனிதனாகச் சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடினார் ஆறுமுகசாமி. அந்தக் கணமே தீட்சிதகர்கள் அவரை அடித்துத் துவைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்!

2004 இல் இந்தச் சிக்கல் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. போராட்டங்கள் வெடித்தன. உடனே தங்களுடைய நிலையை நியாயப்படுத்திக் கொள்ள இந்து அறநிலையத் துறையையே தீட்சிதர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இணை ஆணையர் மூலம் “தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடுவது மரபுக்கு விரோதமானது’ என்று ஒரு ஆணையைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு, “தமிழில் பாடினால் கோயிலின் புனிதம் கெட்டு விடும். சட்ட ஒழுங்குச் சிக்கல் ஏற்படும்’ என்று கீழ் நீதிமன்றத்தில் ஒரு தடையாணையையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.

நீண்ட போராட்டத்தின் இறுதியில் அறநிலையத்துறை ஆணையர் புதிய ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.

“தில்லைக் கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல. திருச்சிற்றம்பல மேடையிலிருந்து தமிழ்த் திருமுறைகளை தீட்சிதர்கள் மட்டுமே “தொன்று தொட்டு’ ஓதி வருகின்றனர் என்பது உண்மையல்ல. பக்தர்கள் வழிபடலாம், ஆனால் தமிழை உச்சரிக்கக் கூடாது என்பதும் அது கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் என்பதும் தமிழுக்கு இழைக்கப்படும் பேரிழுக்காகும். கோயில் நிருவாகத்தை தங்கள் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற உள்நோக்கத்தில் தீட்சிதர்களே உருவாக்கிய கட்டுப்பாடாகத்தான் இது தோன்றுகிறது’ என்று ஆணையரின் ஆணை கூறியது.

எனினும், “கால பூசைகளின்போது திருக்கோயிலால் நியமிக்கப்படும் ஓதுவார்களைத் தவிர வேறு யாரும் திருமுறைகளைப் பாடக்கூடாது. பக்தர்கள் பூசை முடிந்தபிறகுதான் பாடலாம்’ என்று ஆணை கூறியது. இது “பாம்பும் சாகாமல் தடியும் முறியாமல்’ தமிழக அரசின் மழுங்கத்தனத்துக்குப் பொருத்தமான வகையிலும் தீட்சிதர்களின் சாதி உரிமையில் தலையிடாத வகையிலும் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆன போதிலும் தீட்சிதர்கள் இதை ஏற்பதற்குக் கூட அணியமாக இல்லை.

அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு கையில் கிடைத்தவுடனே, “2007 மே 17ஆம் நாளன்று சிற்றம்பல மேடையேறி ஆறுமுகசாமி தேவாரம் பாடுவார்’ என்ற அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் காவல்துறை அதனைத் தடுத்துவிட்டது.

அறநிலையத்துறை ஆணையரின் ஆணைக்கு இடைக்காலத் தடை வாங்குவதற்கு தீட்சிதர்கள் உயர்நீதி மன்றம் சென்றார்கள். “அறநிலையத் துறை ஆணையரின் ஆணையில் கருத்து வேறுபாடு இருந்தால், அரசுக்கு மேல்முறையீடு செய்யுங்கள். இடைக்காலத் தடை விதிக்க முடியாது’ என்று கூறி தீட்சிதர்களின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி ஜெயபால்.

வாதில் வெல்ல முடியாத தீட்சிதர்கள் சூதில் இறங்கினார்கள். நீதிபதி ஜெயபாலின் தீர்ப்புக்கு எதிராகத் தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்தார்கள். எதிர் வழக்காளியான ஆறுமுகசாமிக்கு அறிவித்தல் அனுப்பாமலேயே காதும் காதும் வைத்தாற்போல வழக்கு முடியும் வரை, தமிழுக்கு நிரந்தரத் தடையே (யுடிளழடரவந ளுவயல) விதித்து அருள்பாலித்தார்கள் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, ஜோதிமணி ஆகியோர். இந்தத் தீர்ப்பு 2007 யூன் 08 ஆம் நாளன்று வழங்கப்பட்டது.

“சிவபெருமானின் ஆணையின் பேரில் கைலாயத்திலிருந்து 3000 தீட்சிதர்களை வரவழைத்தான் மன்னன் இரண்யவர்மன். சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்ததோ 2999 தீட்சிதர்கள்தான். “ஒரு ஆளைக் காணோமே’ என்று எல்லோரும் கவலையுற்றபோது “அந்த தீட்சிதன் நான்தான்” என்று ஒரு அசரீரி ஒலித்தது. நடராசனே ஒரு தீட்சிதர்தான் என்பதால் நாங்கள் தெய்வப் பிறவிகள். இந்தக் கோயிலை நிருவாகம் செய்வது தீட்சிதர்களின் பிறப்புரிமை. அதன்மீது ஆணையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது.

“இந்தக் கோயிலில் வேத நெறிப்படி வழிபாடு நடக்கிறது. ஆகம விதிகள் இதற்குப் பொருந்தாது. திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுப்பதற்கு முன்னமே அவற்றைத் தில்லையில் தீட்சிதர்கள் பாடி வருகிறார்கள். ஆன்மீக நம்பிக்கைகளைப் பகுத்தறிவு கொண்டு ஆராய முடியாது. மத நம்பிக்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிராகத் தமிழைப் புகுத்துவதுதான் இந்த அரசின் கொள்கை. எனவே, ஆணையரின் உத்தரவு தொடர்பாக இந்த அரசிடம் முறையீடு செய்தால் நீதி கிடைக்காது. ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாக ஆணையர் கூறுகிறார். வழிபடுவதற்குத்தான் உரிமையே தவிர எங்கே நின்று வழிபடுவது, என்ன பாடுவது என்பதெல்லாம் வழிபாட்டு உரிமையில் சேராது.’

இவை தீட்சிதர்களுடைய முறைப்பாட்டில் காணப்படும் வாதங்களின் ஒரு பகுதி. இந்த வாதங்கள் தொடர்பாக நீதிமன்றம் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை.

“தில்லையில் சிவனுக்கு முன்னால் தேவாரம் பாடக்கூடாது’ என்று தீட்சிதர்கள் தடையாணை வாங்கியிருக்கிறார்கள் என்றால், “எவனுக்கு முன்னாலும் தேவாரம் பாடக்கூடாது’ என்று தடையாணை வாங்கியிருக்கிறார்கள் தருமபுரம் ஆதீன கர்த்தாக்கள்.

தில்லைக் கோயிலில் வேதநெறிப்படி வழிபாடு நடப்பதால் அங்கே தமிழ் நுழையக் கூடாது என்பது தீட்சிதர்களின் வாதம். தமிழில் வழிபாடு செய்வதும் குடமுழுக்கு நடத்துவதும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதும் ஆகம நெறிக்குப் புறம்பானது என்பதால் தமிழைத் தடை செய்யவேண்டும் என்பது ஆதீனங்களின் வாதம்.

இவர்களுடைய முறையீட்டை ஏற்று தமிழில் நடத்திவரும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளுக்கும் தமிழ் குடமுழுக்கு மற்றும் தமிழ்த் திருமறைகளை ஓதி நடத்தப்படும் திருமணங்களுக்கும் தடை விதித்திருக்கிறது உயர்நீதி மன்றம். மே 30 ஆம் நாளன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜோதிமணி, தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ஆகியோர் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றனர்.

தமிழுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் இத்தகைய தடையாணைகள் அடுத்தடுத்துப் பிறப்பிக்கப்பட்ட போதும் இவற்றுக்கெதிராக குமுறலோ கொந்தளிப்போ கண்டன அறிக்கைகளோ எதுவும் இல்லை. இந்து அறநிலையத்துறை பிறப்பித்துள்ள ஆணைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால்; தடையை நீக்கக் கோரி மேல் முறையீடு கூடச் செய்யாமல் தமிழக அரசு மவுனம் சாதித்தது. தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்குச் சட்டம் இயற்றி விட்டதாகவும், “தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என்ற அறிவிப்பை மாற்றி “தமிழில் அர்ச்சனை செய்யப்படும்’ என்று பலகையைத் தொங்கவிட்டு விட்டதாகவும் பெருமைப் பாராட்டிக் கொள்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால், “தமிழ் அர்ச்சனைக்குப் பயிற்சியே கொடுக்கக்கூடாது’ என்று நீதிமன்றம் தடை விதிக்கும்போது சும்மா இருப்பதே சுகம் என அவரும் அவரது அரசும் நடந்து கொள்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் உள்ள நரசிம்ம சுவாமி கோயிலில் புரோகிதரல்லாத இருவரை அர்ச்சகராக நியமித்து மே 7 ஆம் நாள் இந்து அறநிலையத்துறை ஆணை வெளியிடுகிறது. “பட்டாச்சாரியார் குடும்பத்தில் பிறந்து ஆகம பாடசாலையில் 6 ஆண்டுகள் குருகுலப் பயிற்சி பெற்றவர்களைத்தான் அர்ச்சகராக நியமிக்க முடியும் என்று ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நியமன ஆணையை இல்லாது செய்ய வேண்டும்” என்று உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள் புரோகிதர்கள். உடனே, “இரு அர்ச்சகர்களின் நியமன உத்தரவையும் நிறுத்தி வைத்திருப்பதா” பதில் அளித்தது தமிழக அரசு.

தமிழ் நெய்யால் தொந்தி வளர்த்த ஆதீனங்களோ “தமிழில் அர்ச்சனை செய்தால் உலகம் அழியும் என்றும் குடமுழுக்கு நடத்தினால் அரசு கவிழும் என்றும் தமிழன் அர்ச்சகனானால் கடவுளுக்குத் தீட்டு’ என்றும் பகிரங்கமாக வழக்குத் தொடுக்கின்றன.

“குஷ்புவுக்கு கோயில் கட்டித் தமிழ் குடமுழுக்கு, தமிழ் வழிபாடு நடத்திக் கொள்ளட்டும். ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் அதைச் செய்ய முடியாது’ என்று தருமபுரம் ஆதீனத்துக்காகத் தோன்றிய வழக்குரைஞர் என்.ஆர்.சந்திரன் திமிரோடு நீதிமன்றத்தில் தமிழை எள்ளி நகையாடினார்.

வெறும் 250 தீட்சிதப் பார்ப்பனர்கள் ஆறு கோடி தமிழ் மக்கள் முதுகின் மேல் எவ்வாறு சவாரி செய்ய முடிகிறது? (வளரும்)


சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (10)

சாதி மத பேதங்களை எதிர்ப்பது நாத்திகம் அல்ல!

jd; mbatid NkYk; Nrhjpf;f tpUk;gpa ,uq;fehjH Nfhtpypy; cs;s xU jq;fg; ghj;jpuj;ij vLj;Jf; nfhz;L NjtNjtpapd; ,y;yj;jpw;F xU gzpahsd; Ntlj;jpy; nrd;whH. jd; ngaH mofpa kzthsd; vd;Wk;> mij tpg;gpuehuhazH nfhLj;jDg;gpajhfTk;> md;wpuT mtH mq;F tUtjhfTk; $wpdhH. tpg;gpuUk; tof;fk; Nghy; mq;F nry;y mtiu tuNtw;W cgrupj;jhs; NjtNjtp. md;wpuT mq;Nf jq;f mDkjpj;jhs;.

kWehs; Nfhtpypy; jq;fg; ghj;jpuk; fhzhky; Nghd jfty; mHr;rfHfs; %yk; murDf;F nrd;wJ. VtyHfs; tPLfisr; Nrhjidapl;ldH. NjtNjtp tPl;by; ghj;jpuk; rpf;fpaJ. tprhuizapy; mij mtSf;F tpg;gpuehuhazH nfhLj;j jfty; njupe;jJ.

jpUl;Lg; ghj;jpuj;ij thq;fpa Fw;wj;Jf;fhf NjtNjtpf;F ntWk; mguhjk; kl;LNk tpjpf;fg;gl;lJ. Mdhy;> jpUl;L tof;fpy; re;Njff; ifjpahd tpg;gpuehuhaziu rpiwapy; milj;jhd; kd;dd;.

,uq;fhehjH kd;ddpd; fdtpy; Njhd;wp> ele;j tpguq;fis vLj;Jiuj;jhH. tpg;gpuehuhaziu tpLjiy nra;jhd; kd;dd;.

mtH kdk; jpUe;jp> mbatHfspd; ghjq;fisf; fOtp> mj;jPHj;jj;ijg; gUfp> ,iwtdpd; mUis kPz;Lk; ngw;whH. gf;jHfSf;fhf rpwpa gzpfisAk; rpuNkw;nfhz;L nra;jhH. ,jdhy; “njhz;lubg; nghbaho;thH vdg; ngaH ngw;W gy;yhz;L tho;e;J ,iwtNdhL fye;jhH.

,e;jf; fij fw;gpf;Fk; ghlk; vd;d? gf;jdpd; jhrp Nkhfj;ij jPHj;J itf;f ,uq;fehjNu gzpahs; Nghy; Ntlk; G+z;L jq;fg; ghj;jpuj;ij tpg;gpuehuhazH nfhLj;jjhff; NjtNjtpaplk; nfhLf;fpwhH. fhtp fl;ba re;epahrp jhrp tPNl fjpnadf; fple;J ciye;jhYk; gUthapy;iy> mg;gbg;gl;l xUtH ,uq;fehjuplk; gf;jp itj;jhy; NghJk;. mtUf;F ,e;j cyfpy; rpw;wpd;gKk; mLj;j cyfpy; Ngupd;gKk; fpilf;Fk;.

gf;jpf; fijfis kf;fs; gbj;jhy; mtHfspilNa ,iwAzHT ngUFk;> mUs; fpilf;Fk;> md;G kyUk;> Mztk; xopAk;> tPLNgW vspjpy; fpilf;Fk; vd;fpwhHfs;.

Mdhy; vdf;F ,e;jf; fijfisg; gbf;f tapw;iwf; Fkl;bf; nfhz;L tUfpwJ! flTs; gf;jpia tpsf;f NtW fijfs; fpilf;ftpy;iyah? eukhkprk; Nfl;Fk; flTs; mjidr; rikay; nra;J nfhLf;Fk; gf;jH; ,tHfs;jhd; fpilj;jhHfsh?

,d;iwa jiyKiwapdUf;F gf;jpapd; ngauhy; ,e;jf; fijfisr; nrhy;ypf; nfhLj;jhy; ,e;J rkak; fhl;Lkpuhz;bfspd; rkak; vd epidg;ghHfs;. mg;gb epidj;jhy; mJ mtHfs; Fw;wky;y.

,g;gb ehd; vOjpdhy; iftpuy; tpl;L vz;zf;$ba ,e;J kjthjpfs; Gj;jpiaj; jPl;Ltjw;Fg; gjpy; fj;jpiaj; jPl;LfpwhHfs;. fhQ;rp rq;fuhr;rhupahH rq;fuuhkidj; jPHj;Jf; fl;baJ Nghy jPHj;Jf; fl;btpLNthk; vd kpul;LfpwhHfs;.

Kof;fk; ehj;jpf VL. ef;fPud; ehj;jpfd; vd ehyhtJ jkpopy; jpl;LfpwhHfs;.

vkJ mf;fiw vy;yhk; vkJ ,dk;> vkJ nkhop> vkJ gz;ghL gw;wpaJ. vkJ ,dj;ij jho;j;j epidg;gtHfs;> vkJ nkhopia gopg;gtHfs;> gz;ghl;ilg; ,opj;Jiug;gtHfs; vkJ vjpupfs;.

,g;gbahd Guhzf; fijfs; kpifg;gLj;jp GuhzpfHfshy; vOjg;gl;lit. mtw;iw ngupJgLj;j Ntz;bajpy;iy vd;W rpyH nrhy;yyhk;. mJ rupahfTk; ,Uf;fyhk;.

‘ed;W Guhzq;fs; nra;jhH – mjpy;
ey;y ftpij gyg;gy je;jhH
ftpij kpfey;y NjDk; – mf;
ftpijfs; ngha;nad;W njspTwf; fz;Nlhk;
Gtpjdpy; tho;newp fhl;b – ed;ik
Nghjpf;Fk; fl;Lf; fijfs; mitjhk;’

vdg; ghujpahH Guhzf; fijfs; ngha;nad;W njspthfr; nrhy;fpwhH.

“fiyAiuj;j fw;gidNa epiynadf; nfhz;lhLk;
fz;%bg; gof;fq;fs; kz;%bg; Nghf’

vd;W ,uhkypq;f mbfs; ghLfpwhH.

Guhzf; fijfs; fl;Lf;fijfNs. my;yJ rpwpa mstpyhd cz;ik tuyhw;W epfo;r;rps; gy klq;F kpifg; gLj;jpf; $wg;gl;lit MFk;. FUl;L ek;gpf;iffis %lf; nfhs;iffis gf;jp vd;w NghHitapy; epahag;gLj;Jtjw;F Gidag; gl;lit.

vLj;Jf;fhl;lhf MupaHfsJ eshapdp fijiaf; $wyhk;. eshapdp jdJ njhONeha; gpbj;j fztid xU $ilapy; itj;J jhrp tPl;Lf;Fr; Rke;J nry;fpwhs;. ,J mts; xU fw;Gf;furp vd rpj;jupg;gjw;fhf fl;lg;gl;l fij.

,uhkd; kidtp ,uhtzdhy; ftHe;J nry;yg;gl;L gy Mz;Lfs; mNrhftdj;jpy; rpiw itf;fg;gl;lts;. ,uhtzidf; nfhd;W rPijia rpiw kPl;l ,uhkd; mtis glk; tpupj;j xU ghk;G Nghyr; rPwp vOe;J Nfhgj;NjhL ghHf;fpwhd;.

‘Cz;jpwk; cte;jid> xOf;fk; gho;gl
khz;biy> Kiwjpwg;(G) muf;fd; khefH
Mz;Liwe;(J) mlq;fpid> mr;rk; jPHe;(J) ,tz;
kPz;l(J) vd; epid(T) vid tpUk;Gk;! vd;gNjh?

(fk;guhkhazk   Aj;jfhz;lk; 966)

,uhtzid mopj;jnjy;yhk; cd;id kPl;Fk; nghUl;L md;W. vdf;F NeHe;j gopiaj; ePf;fpf; nfhs;Sk; nghUl;Nl MFk;. eP ,we;J gL. ,d;Nwy; vq;NfahtJ Ngha;tpL vd;nwy;yhk; ,uhkd; gpj;Jg; gpbj;jtd; Nghy; NgRfpwhd;. ,uhkd; ,we;J gL vd;W nrhd;djhy; rPij jPf;Fspj;J jd; fw;ig vz;gpf;fpwhs;.

Mdhy; ,d;W fw;igg; gw;wpa kjpg;gPL khwptpl;lJ. fw;ngd;W nrhy;y te;jhy; mJ Mz; ngz; ,UtUf;Fk; nghJtpy; itf;f Ntz;Lk; vd;w fUj;J Nt&wpd;wp tpl;lJ.

,d;W rPij capNuhL ,Ue;jhy; ,uhkDf;F ,d;ndhU Fop ntl;LkhW ,yf;Ftdplk; nrhy;yp mjpy; ,uhkidj; jPf; Fspj;J mtdJ fw;ig vz;gpf;FkhW Nfl;bUg;ghs;!

,d;W mUe;jjp ,Ue;jhy; guj;jikf;F vjpuhd rl;lk; mts; kPJ ghAk;. ,d;W rPij ,Ue;jhy; jw;nfhiy nra;a Kaw;rpj;j Fw;wj;Jf;fhf ifJ nra;ag; gl;bUg;ghs;. jw;nfhiy nra;a Jhz;ba Fw;wj;jpy; ,uhkDk; ifJ nra;ag;gl;bUg;ghd;.

NtW tpjj;jpy; nrhd;dhy; fhyk; khWk; NghJ fUj;Jk; khWfpwJ. gioad fope;J Gjpad GFfpwJ. mJ tOty;y. ,d;W ngz; mbikj;jdk; KOikahf ,y;yhtpl;lhYk; ngUksT xopf;fg;gl;L tpl;lJ. cld;fl;il Vwy;> ,sk;ngz; jpUkzk; rl;lg;gb jil nra;ag;gl;Ltpl;ld.

,e;J kjk; nfhba ghgq;fs; vd;W nrhy;Yk; fs;> fsT> Gyhy; cz;zy; Nghd;wtw;iw tpyf;Fk; ,e;Jf;fs; FiwT. ngupa Guhzj;ij gbf;Fk; my;yJ gbj;j ,e;Jf;fis tpuy; tpl;L vz;zptplyhk;. mjpy; nrhy;yg;gl;l fijfs; mtHfSf;F KOikahfj; njupahJ.

Mdhy; gps;isf; fwp rikj;Jf; nfhLj;j rpWj;njhz;liuAk; fl;ba kidtpia rptdbahNuhL mDg;gp itj;j ,aw;gifiaAk; Nfhapypy; itj;J topgLfpwhHfs;.

,uzpad; gpufyhjd; fij vy;NyhUf;Fk; njupAk;. fijiag; gbahtpl;lhYk; mJgw;wpf; Nfs;tpg;gl;bUg;ghHfs;. ,JTk; jpiug;glkhf gy Mz;LfSf;F Kd; ntspte;jJ.

,e;jg; Guhzf; fij Mupa Ntjkj rhj;jpuq;fisAk;> ahfk; tsHj;J mjpy; ML khL Nghd;w capHfs; gypaplg;gLtijAk; vjpHj;j jpuhtplHfis ehj;jpfHfs; vd;W fhl;Ltjw;fhf vOjg;gl;lJ.

gpwg;gpy; Ntw;Wikfs;. Vw;wj; jho;Tfs;. GNuhfpjk; nra;a caH rhjpapdUf;Nf cupik>

,d;d rhjpapdHjhd; flTis G+rpf;fyhk;> NrhW gilf;fyhk;> Fspg;ghl;lyhk;>

rk];fpUjk; Njt nkhop! jkpo; ePr nkhop! jkpo; ig]hr nkhop> jkpopy; topghL $lhJ> fhuzk; flTSf;Fj; jkpo; GupahJ> njupahJ.

#j;jpuj; .jkpod; Nfhapy; G+ir nra;af;$lhJ> mtDf;F Gir nra;Ak; mUfij ,y;iy.

jkpod; fl;ba NfhapYf;Fs;Ns mtd; Eisaf; $lhJ. me;jj; jPl;ilg; Nghf;f FlKOf;F (Fk;ghgpNrfம்) nra;a Ntz;Lk;. Mdhy; jkpopy; FlKOf;Fr; nra;af; $lhJ> mjid Mfkk; mDkjpf;fhJ.

,t;thnwy;yhk; rhj;jpuq;fs; nrhy;YNkahdhy; kfhftp ghujpahH ghbapUg;gijg; Nghy; mit rhj;jpuq;fs; my;y jkpopdj;Jf;F vjpuhd rjpnad;W nrhy;Ntd;.

fhQ;rp fhkNfhb gPl =n[Nae;jpu ru];tjp rq;fuhr;rhupahH jkpo;ehl;by; ,Ue;J nfhz;L> jkpo;f; fhw;iw Rthrpj;Jf; nfhz;L> fhtpupj; jz;zPiuf; Fbj;Jf; nfhz;L jkpo; ePr ghi\ vdg; gfpuq;fkhf Nkilfspy; NgRfpwhH. ,e;Jf; flTsHf;F jkpo; njupahJ vd;W ,Wkhg;NghL nrhy;fpwhH.

re;jpukTyP];tuUf;F G+ir nra;Ak; Neuk;tiu ePr ghi\ahd jkpopy; Ngr khl;lhH. jkpopy; NgRtijj; jtpHg;gjw;fhf kTd tpujk; ,Uf;fpwhH!

jypj;Jfisf; Nfhapypy; mDkjpf;ff; $lhJ vd;W nrhy;fpw n[fj; FUTk; ,e;j rq;fuhr;rpahHjhd;.

mWgj;J %d;W ehad;khHfis rhjpthupahf> me;je;j rhjpahH me;je;j ehad;khiu topgl Ntz;Lk; vd;W $wp tUzjHkj;jpd; NtUf;F jz;zPH Cw;WfpwtUk; ,tHjhd;. mjw;F rhkuk; tPRgtUk; ,tHjhd;. rhjp Ngjj;jpw;F Gj;JapH Cl;LgtUk; ,tHjhd;.

Vida kjq;fs; kf;fis mizj;J xd;WgLj;JfpwJ. ,e;J kjk; Mapuk; rhjpfshf kf;fisf; $W NghLfpwJ! jPz;lhik ghuhl;LfpwJ!

NkNy Fwpg;gpl;l rq;fuhr;rhupahH NtW ahUky;y. fhQ;rp tujuh[g; ngUkhs; Nfhapy; NkyhsH rq;fuuhkidf; nfhiy nra;jJ> nfhiy nra;a rjp nra;jJ Nghd;w Fw;wr; rhl;by; ifJ nra;ag;gl;L ,uz;L khjk; NtYhH rpiwapy; fk;gp vz;zpa gpd;dH gpizapy; ntspte;Js;s mNj fhQ;rp fhkNfhb gPl n[Nae;jpu ru];tjp rq;fuhr;rpahHjhd;.

,iwtd; xU nkhopf;Nf cupatd; vd;gJ ,iwtDila Fiwtpyh epiwTj; jd;ikf;F (vy;yhk; njupe;jtH) Fiw fw;gpg;gjhFk;. ,iwtDf;F tpUg;gkhd nkhop vd;Wk; tpUg;gk; ,y;yhj nkhop vd;Wk; xd;Wk; ,y;iy.

ehSk; ,d;dpirahy; jkpo; gug;Gk; jkpo; Qhdrk;ge;jH> ‘jkpNohL ,ir ghly; kwe;jwpahj’ mg;gH> ‘ePH jkpNohbir Nfl;Fk; ,r;irahy; fhR epj;jy; ey;fpdPH”vd;W ghba Re;juH ,tHfistpl fhQ;rp rq;fuhr;rhupahH gf;jpapy; caHe;jtuh? mUspy; rpwe;jtuh? mwptpy; ngupatuh? xOf;fj;jpy; rpwe;jtuh?

,e;J kjj;jpy; fhzg;gLk; %lgf;jp> rhjp> jPz;lhik> gpuhkzpa Mjpf;fk;> rk];fpUj Nkyhz;ik> fhyj;Jf;F xt;thj rhj;jpuq;fs;> Nfhj;jpuq;fs;> rk;gpujhaq;fs; Mfpatw;iw vjpHg;gJ ehj;jpfk; vd;why; ts;StH> rk;ge;jH> mg;gH> Re;juH> jpU%yH> jhAkhdtH> ,uhkypq;f mbfs;> ghujpahH> rptthf;fpahH kw;Wk; rpj;jHfs; vy;NyhUNk ehj;jpfHfs;jhd;. mLj;j fpoik mtHfisr; re;jpg;Nghk;. (tsUk;)


 

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply