அறுதிப் பெரும்பான்மையோடு இருந்த முதலமைச்சர் இன்று பெரும்பான்மை இழந்து சகலரின் இழுப்பிற்கும் ஆளாகியுள்ளார்
வட மாகாண சபையின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சரவை நியமனங்களை பார்க்கும்போது மாகாண சபை உறுப்பினர் பதவியையே இராஜினாமாச் செய்யும் துர்ப்பாக்கிய முடிவினை எடுக்கும் நிலமைக்கு இட்டுச் செல்வதாக வட மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண எதிர்க் கட்சித் தலைவர் தெரிவிக்கையில் ,
வட மாகாண சபையின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சரவை நியமனங்களை பார்க்கும்போது மாகாண சபை உறுப்பினர் பதவியையே இராஜினாமாச் செய்யும் துர்ப்பாக்கிய முடிவினை எடுக்கும் நிலமைக்கு இட்டுச் செல்கின்றது. ஏனெனில் ஆளும் கட்சியின் உள் முரண்பாடே தற்போது பாரிய பேசு பொருளாகவுள்ளது. அவ்வாறு எழும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கே ஆளும் கட்சிக்கு நேரம் போதாமல் உள்ளமையினால் மக்களிற்கான எந்தப் பணியும் இடம்பெறவில்லை.
இதேநேரம் அறுதிப் பெரும்பான்மையோடு இருந்த முதலமைச்சரோ இன்று பெரும்பான்மை இல்லாத தொங்கு கட்சிபோன்ற நிலையில் சகலரின் இழுப்பிற்கும் ஆளாகியுள்ளார். மாகாண சபையின் 5 அமைச்சர்களில. தற்போது ஒரே மாவட்டத்தில் 3 அமைச்சர்கள் இந்த நிலையில் 4வது அமைச்சரும் யாழ்ப்பாணத்திலேயே நியமிக்கும் வாய்ப்புத் தென்படுகின்றது. அவ்வாறு நியமிக்க முடியாது என சட்டம் கூறவில்லை.
இருப்பினும் ஓர் ஜனநாயக முறைப்படி ஏனைய மாவட்டங்களும் உள்வாங்கப்பட வேண்டும் இல்லையேல் அது யாழ்ப்பாண மேலாதிக்கம் என்ற பழிச் சொல்லிற்கு ஆழாகுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே அதனையும் இந்த வினைத்திறன் அற்ற மாகாண சபையின் ஒட்டுமொத்த செயலையும் கண்டிக்கும் வண்ணம் எனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அன்றி அடிப்படை உறுப்பினர் பதவியைகூட துறப்பது தொடர்பில் விரைவில் பரிசீலணை செய்யவுள்ளேன்.
ஏனெனில் இன்றைய நிலையில் ஓர் சீரான முறையில் மாகாண சபையை இனி முதலமைச்சர் கொண்டு செல்வார் என நான் நம்பவில்லை என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.