விக்னேஷ்வரனின் ஆலோசகர் நிமலன் கார்திகேயன் மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்!

விக்னேஷ்வரனின் ஆலோசகர் நிமலன் கார்திகேயன் மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்!

கனடாவில் குடியிருக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் நிதி குற்றவியல் புலனாய்வு அமைப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்த 50,000 கனடியன் டொலர் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருந்தனர்.

குறித்த தொகையானது வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் பெயரில் அவரது ஆலோசகர் நிமலன் கார்திகேயன் ராசையா என்பவர் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை குறித்த நிதியை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் கனடிய சமுதாயக் கருத்துக்களம் என்ற அமைப்பானது கடந்த ஜனவரி மாதம் நிதி திரட்டும் வகையில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

டிக்கெட் விலையாக 500 மற்றும் 1000 டொலர்கள் வசூலித்துள்ளனர். இந்த விருந்து நிகழ்ச்சியால் சுமார் 113,500 கனடியன் டொலர் நிதியை திரட்டியுள்ளனர்.

குறித்த நிகழ்வின் செலவினங்கள் போக மீதி தொகையாக 50,150 கனடியன் டொலர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 50,000 கனடியன் டொலர் தொகையை வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்திருந்ததாக கூறப்படுகிறது.

கனடாவில் இருந்து முதலமைச்சர் விக்னேஷ்வரன் இலங்கை திரும்பியதும் நிதி பெற்றுக் கொண்டதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

இதேவேளை, குறித்த நிதி தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் மற்றும் அவரது ஆலோசகர் நிமலன் ஆகியோர் மெளனம் சாதிப்பது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

 


Complaint to Police FCID About Northern Chief Minister and his “Strategic Adviser” Misappropriating 50,000$ Donated by Tamil Canadians to the NPC

Posted by Administrator on 19 June 2017, 2:19 am

A Group of concerned Canadian citizens of Sri Lankan Tamil origin are engaged in the process of submitting a formal complaint through lawyers to the Financial Crimes Investigation Department (FCID) of the Sri Lankan Police about alleged misappropriation of funds by Northern Province Chief Minister Canagasabapathy Visuvalingam Wigneswaran and his “adviser” Nimalan Karthigeyan Rasiah.

Toronto, Jan – 2017

The complaint to the Sri Lankan Police FCID concerns a sum of 50,000 Canadian dollars that was handed over in Toronto for the Northern provincial council to be utilised for rehabilitation and re-sellement projects in the North. The money was allegedly accepted on behalf of chief minister Wigneswaran by Mr. Nimalan Karthigeyan Rasiah who was introduced to Canadian Tamils as an Australian citizen now working as a consultant to the Northern provincial council and as “strategic adviser” to the chief minister. Apparently Mr. Rasiah popularly known as Nimalan was in charge of Wigneswaran’s itinerary in Canada while the Northern chief minister visited Canada in January 2017.
Continue reading ‘Complaint to Police FCID About Northern Chief Minister and his “Strategic Adviser” Misappropriating 50,000$ Donated by Tamil Canadians to the NPC’ »

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply