மேற்குலக நாடுகள் தடியைக் கொடுத்து அடி வாங்குகின்றனவா?

மேற்குலக நாடுகள் தடியைக் கொடுத்து  அடி வாங்குகின்றனவா?

நக்கீரன்

இயற்கை அனர்த்தங்களைப் பெரும்பாலும் மனிதனால் தடுக்க முடிவதில்லை.  எரிமலை, நிலநடுக்கம், புயல், வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படுவதை மனிதனால் தடுக்க முடியாது,   இந்த அனர்த்தங்கள் பூமிப் பந்தில் எங்கேயாவது ஒரு நாட்டில்  அடிக்கடி  நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  இவற்றால் உயிர் இழப்பு மட்டுமல்ல வீடு, வாசல், தோட்டம் துரவுகளும் அழிக்கப்படுகின்றன.

இவை போதாதென்று செயற்கையாகவும் உயிர், உடமை அழிவுகள் ஏற்படுகின்றன. அண்மைக்காலமாக சில  இஸ்லாமிய நாடுகளில் பயங்கரமான உள்நாட்டுப் போர்கள்  நடந்து கொண்டிருக்கின்றன. சிரியா, யேமன், லிபியா, ஆப்கனிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் நடக்கும்   பயங்கர  உள்நாட்டுப் போர் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் இறந்து பட்டுள்ளனர்.  இன்னும் பல மில்லியன் மக்கள்  ஏதிலிகளாக அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.

சிரியாவில்  சனவரி 26, 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப்  போர் தொடங்கியது.  சிரியாப் படைகளுக்கும்  சுதந்திர சிரியா கூட்டணிப்  படையினருக்கும் (Syrian National Coalition) இடையில்  கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.    அண்மையில் சுதந்திர  சிரியா நாட்டு படையினரிடம் இருந்த பல பிரதேசங்களை  சிரியா படையினர் கைப்பற்றியுள்ளார்கள்.

இந்த உள்நாட்டு போரில்   சிரியா அரசு பக்கம் உருசியாவும்   சுதந்திர சிரியா   கூ ட்டணிப் பக்கம் அமெரிக்காவும்  தலையிட்டு  விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த உள்நாட்டுப் போரில் 15 மில்லியன் சிரியர்கள் வீடு வாசல்களை கைவிட்டு நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் இடம்பெயர்ந்துள்ளார்கள். எட்டு மில்லியன் மக்கள் நாட்டுக்கு உள்ளேயும் மேலும் ஒரு 7 மில்லியன் நாட்டுக்கு வெளியேயும் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.  Image result for Manchester attack

இஸ்லாமி நாடுகளுக்கு இடையேதான்  சண்டை  நடக்கின்றன. முக்கிய காரணம் இஸ்லாம் மதத்தில் காணப்படும் சுன்னி – ஷியா பிரிவுகள். ஒரே அல்லா, ஒரே மொகமது நபி, ஒரே குரானைப் பின்பற்றினாலும் இந்த இரண்டு பிரிவுகளுக்கும்  இடையே கடுமையான பகைமை நிலவுகிறது.

மத்திய கிழக்கில் கடந்த காலங்களில் நடந்த உள்நாட்டுப் போர் காரணமாகவும்  தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போர்கள் காரணமாகவும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மேற்குலக நாடுகளுக்குப்  புலம் பெயர்ந்துள்ளார்கள். இதனால் மேற்கு ஐரோப்பாவில் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

இந்தப் பின்புலத்தில்  கடந்தImage result for Manchester attack  மே 22 இல் மன்செஸ்டர் அரீனா விளையாட்டு மைதானத்தில்  நடத்தப்பட்ட  ஈவிரக்கம் அற்ற மிருகத்தனமான  தாக்குதல் உலகம் முழுதும் எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்தத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டு 120 பேர் காயம் அடைந்துள்ளார்கள். இந்த விளையாட்டு மைதானத்தில்  21,000 இரசிகர்கள் உட்காந்து பார்க்கக் கூடிய வசதி படைத்தது. சம்பவம் நடந்த  நாளில் பாடகரும் நடிகையுமான ஆரியனா கிரான்டே (ArianaGrande)அவர்களின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. ஐரோப்பியாவில் இருந்து அவரது விசிறிகள் வந்திருந்தார்கள்.  தாக்குதலின் போது கிரான்டே  காயம் எதுவும் இல்லாது தப்பிவிட்டார்.Image result for Manchester attack

2005 ஆம் ஆண்டில் இலண்டன் பாதாள தொடர்வண்டி நிலையத்தின் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 பேர் இறந்துபட்டார்கள். அதன் பின் நடந்த கொடூரமான தாக்குதல் இதுவாகும்.

மே 22  இல் தாக்குதலை நடத்தியவன் 22 அகவை சல்மான் பேடி என்ற இஸ்லாமிய இளைஞனாவான். மன்செஸ்டரில் 1994 இல் பிறந்த அபெடி நாலு  பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை.  கடாபி ஆட்சியில் இருந்து தப்ப அவனது தாய் தந்தையர்  ஐக்கிய இராச்சியத்துக்கு அகதிகளாக வந்து சேர்ந்தார்கள்.  2011 இல் கடாபி கொல்லப்பட்ட பின்னர் லிபியாவுக்கு சென்று விட்டார்கள்.  பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அபெடி பின்னர் தனது படிப்பை இடையில் நிறுத்திவிட்டான். அபெடி மன்செஸ்ரர் இஸ்லாமிக் மையத்துக்கு போகிற பழக்கம் உடையவன். சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களது கல்மா பிரார்த்தனையை அரபு மொழியில் தெருவில் நின்று உரத்துப் படித்திருக்கிறான்.  பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உளவுத்துறையினர் இவனைப்பற்றி அறிந்திருந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கான உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை. ஆனால் அவனுக்கும் ஐஎஸ்ஐல் என்ற தீவிர இஸ்லாமியக் குழுவுக்கும் தொடர்பிருக்கலாம் என எண்ணப்படுகிறது. அந்த இயக்கம் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

2014 ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.  மே 24, 2014 தொடக்கம் இதுவரை 40 க்கும் மேற்பட்ட பயங்கரத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.  இந்தத் தாக்குதல்களுக்கும்  சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும்  Islamic State of Iraq and the Levant (ISIL) என்ற  அமைப்பின்   தோற்றமும்  மேலதிக  காரணமாகும்.. அண்மைக்காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலட்சக் கணக்கில் ஏதிலிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்துள்ளார்கள். இவர்களோடு சேர்ந்து இஸ்லாமிய  தீவிரவாதிகளும் ஊடுருவியுள்ளார்கள்.

பிரான்சில் சனவரி 2015 தொடக்கம் யூலை 2016 வரையிலான 18 மாத காலத்தில் எட்டுத் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தாக்குதல்களில்  400 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.  மார்ச் 2016 இல் பிறசல்ஸ் நகரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டார்கள்.  டிசெம்பர் 2016 இல் பேர்லின் நத்தார் சந்தைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டார்கள். ஏப்ரில் 2017  இல்  Saint Petersburg Metro தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டார்கள்.

ஐரோப்பா எங்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட  தாக்குதல்களை நடத்துமாறு  ஐஎஸ்ஐஎல்  பயங்கரவாத அமைப்பு  தனது அயல்நாட்டுப் போராளிகளை கேட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்புத் துறையின் கணிப்பின்படி 3,000 ஜிஹாதிகள் (jihadis)  அந்த நாட்டில் இருக்கிறார்களாம். அண்ணளவாக 850 ஜிஹாதிகள் பிரித்தானியாவில் இருந்து இஸ்லாமிய அரசுக்கு ஆதரவாகப் போராட சிரியா  சென்றிருக்கிறார்கள்.

இவர்களில் 100 பேரளவில்  போரில் கொல்லப்பட்டுவிட்டார்கள். எஞ்சியவர்கள் போர்க்கள அனுபவத்தோடு நாடு திரும்பியுள்ளார்கள். இவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் மேற்கொள்ளலாம். ஜிஹாதிகள் தங்கள் இலக்கை ஆர அமர யோசித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  அதனை  முன்கூட்டியே கண்டு பிடிப்பது இயலாத காரியம். அதனால் இந்த நாடுகளில் உள்ள புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறை திணறுகிறது.

இங்கிலாந்தில் ஒரு ஜிஹாதியைக் கண்காணிக்க 30 பொலீஸ் அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள்.

ஜிஹாதி என்ற சொல் உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களை உள்ளடக்கிய ஒரு இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்ற கோட்பாட்டை யும் அந்த முயற்சிக்கு எதிராக இருப்பவர்களை வன்முறை மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை நம்புகிற ஒருவரைக் குறிக்கிறது.

ஐக்கிய இராச்சியத்தில் 2016-2017 ஆண்டுகளில் 380 பேர் பயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது கடந்த  ஆண்டை விட 25 விழுக்காடு அதிகமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் 386  பயங்கரவாதிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள் என ஸ்கொட்லாந்து பொலீஸ் தெரிவிக்கிறது.

குரானின் அறிவுரையின்  படி மேற்குலக  இசை, அவர்களது வாழ்க்கை முறை ஹாரம் ஆகும். அதாவது அல்லாவால் தடை செய்யப்பட்ட விடயங்கள் ஆகும். அதில் ஈடுபடுபவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்.  அதே போல் மது, புகை பிடித்தல், பிறன்மனை சேரல் தண்டனைக்குரிய குற்றங்களாகும். பிறன்மனை சேர்ந்த ஆண், பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்படல் வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்ஐஎல் என்கிற இஸ்லாமிய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் ” பாடல்கள் மற்றும் இசை இரண்டும் இஸ்லாமிய மதத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. காரணம் அவை அல்லாவையும் குரானையும் மறக்க வைக்கின்றன. அவற்றால் இதயம் தூண்டப்படுகிறது. கெட்டுப்போகிறது. ஒரு பொப் பாடல் பாடினால் பாடுபவர்களுக்கு 30 – 40 கசையடி கொடுக்கப்படுகிறது. இசைக் கருவிகளை இசைத்தால் 90 கசையடி கொடுக்கப்படுகிறது.

உண்மையில் இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல,  அது ஒரு அரசியல் வழிபாட்டு (political cult) மரபாகும்.  முழ உலகத்தையும் இஸ்லாமிய ஆளுகைக்குள் கொண்டு வருவதே அதன் நோக்கமாகும். இன்று உலகில் எண்ணிக்கை அளவில் கிறித்துவத்துக்கு  அடுத்து  இரண்டாவது இடத்தில் (1.7 பில்லியன்)  இஸ்லாம்  இருக்கிறது. உலகின் 23 விழுக்காடு மக்கள் இஸ்லாம் மதத்தவராவர்.

“அல்லாவை விட வேறு கடவுள் இல்லை. மொகமது நபிகளே கடைசி இறைத் தூதுவர்” என பிரகடனம் செய்வதன் மூலாம்  இஸ்லாம் ஏனைய மதங்கள் மீது போர் தொடுக்கிறது.  மதசார்பின்மைக் கோட்பாட்டை (secularism) இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. அல்லாவில் நம்பிக்கை இல்லாத ஒருவர் நம்பிக்கைஈனர் (kafit/infidel) என அழைக்கப்படுகிறார். முஸ்லிம்கள் மனிதர் உருவாக்கிய சட்டங்களை ஏற்பதில்லை. அல்லா உருவாக்கிய சட்டங்களையே அவர்கள் பின்பற்ற வேண்டும். மதத்தையும் அரசையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. அப்படி ஏற்பது அல்லாவின் சட்டத்தை மீறுவதாகும்.  இஸ்லாம் வன்முறையை பிறழ்ச்சி என்று பார்ப்பதில்லை. அது இஸ்லாம் மதக் கோட்பாட்டில் உள்ள  இயற்கையான கூறு ஆகும்.Image result for Manchester attack

இஸ்லாம் மதத்துக்காக போர்க்களத்தில் மரணிக்கும் ஜிஹாதிகள்  மற்றும் தற்கொடையாளர்கள் ஆகியோருக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு என குரான் சத்தியம் (குரான் 3:157) செய்கிறது. இந்தியா 700 ஆண்டுகள் இஸ்லாமிய ஆளுகைக்குள் அகப்பட்டிருந்தது. இதனால் பலர் வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். இதன்காரணமாக இந்தியாவில் இருந்து ஒன்றல்ல இரண்டு இஸ்லாமிய நாடுகள் பிரித்தெடுக்கப்பட்டன. Image result for Manchester attack

இசுலாமியர் என்பவர்கள் இசுலாம்  சமயத்தைப்  பின்பற்றுபவர்கள் ஆவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும்.

மேற்குநாட்டவர்களிடம் இயற்கையாகக் காணப்படும்  நீதி,  இரக்கம், கருணை, பெருந்தன்மை, விசாலமான பார்வை காரணமாக தங்கள் நாட்டுக்கு  அரசியல் தஞ்சம் கேட்டு வருபவர்களை உள்ளன்போடு ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்று இஸ்லாமிய   அடிப்படை வாதிகளால் மேற்கு நாடுகளின் பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் எழுந்துள்ளது. தடியைக் கொடுத்து அடி வாங்கினவன் கதையாக மேற்கு நாடுகள் தவித்து நின்கின்றன.

 

 

 

 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply