சோதிடப் புரட்டு (22)
காதலுக்குப் பாடை கட்டிக் கொல்ல நினைக்கும் தந்தை!
இதற்கு முன்னர் செவ்வாய்க் கோளத்தை வானத்தில் குறிப்பாகப் பார்த்த நினைவில்லை. பெயருக்கு எற்றாப்போலவே அது செம்மஞ்சள் (orange) நிறத்தில் காட்சி தந்தது. செவ்வாய்க் கோளைப் பற்றி ஏற்கனவே (புரட்டு 7) சற்று விரிவாக எழுதியிருக்கிறேன். அதன் நிறம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் அதன் தரைப் பரப்பு இரும்பு நிறைந்த தூசிப் படலத்தால் மூடப் பட்டிருப்பதுதான்.
ஞாயிறு மண்டலத்தில் உள்ள பத்துக் கோள்களிலும் எமது புவிக்கும் செவ்வாய்க் கோளுக்கும்தான் அதிக ஒற்றுமை உண்டு.
புவிக்கும் வியாழனுக்கும் இடையில் செவ்வாய் ஞாயிறைச் சுற்றி வருகிறது. புவியைப் போலவே அங்கு பருவங்கள் (seasons) மாறி மாறி வருகின்றன. சில சமயம் கடுமையான குளிர். ஆனால், மனிதர்களுக்குப் பிடித்த இதமான காலநிலையும் (weather) உண்டு. புவியோடு ஒப்பிடும்போது அதன் விட்டம் (diameter) 53 விழுக்காடாகும் அதாவது 12,756 கிமீ (7,926 கல்) நீளம். செவ்வாயில் ஒரு நாள் 23 மணி, 56 மணித்துளிகள், 4 வினாடி. அது ஞாயிற்றைச் சுற்ற எடுக்கும் காலம் 687 (புவி) நாள்கள். செவ்வாயின் அச்சு 23.98 பாகை சரிந்துள்ளது. (புவியின் அச்சு 23½ (23.44) பாகை சரிந்துள்ளது)
சென்ற கிழமை தென்கிழக்குத் திசையில் அடிவானத்துக்கு மேல்தோன்றிய செவ்வாய்க் கோளைக் கண்டு களித்தேன். நீங்களும் கண்டு களித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
செவ்வாயில் கற்பாறைகள்
செவ்வாயில் உள்ள எரிமலைகள் 29 கிமீ (90,000 அடி) உயரம் எழக்கூடியது. அதன் சில பள்ளத்தாக்குக்கள் தரைக்குக் கீழே 5000 கிமீ. ( 3,000 கல்) ஆழமுடையது. செவ்வாயில் உள்ள கரிமலவாயுவின் ( CO²) அளவு 95.32 விழுக்காடு. அதன் தென் துருவத்தில் பனிமேகம் காணப்படுகிறது, ஆனால், திரவ நிலையில் தண்ணீர் இல்லை.
இந்த செவ்வண்ண நிறக் கோளினால் மனிதர்களுக்குத் தோசம் உண்டு என்று சோதிடர்கள் புலுடா விடுகின்றார்கள். செவ்வண்ண நிறத்தை வைத்து அதனைப் போர்க் கடவுளாகக் கிரேக்கர்களும் உரோமர்களும் சித்தரித்தார்கள். செவ்வாய்பற்றிய வானியல் அறிவு அவர்களுக்கு அதிகளவு இருக்கவில்லை. செவ்வாய் இவ்வளவு அண்மையில் வந்ததுபற்றி எந்தச் சோதிடனும் அலட்டிக் கொள்ளவில்லை. அந்தச் செய்தியே அவர்களுக்குத் தெரியாது!
மேலும் எழுதுமுன் சோதிடப் புரட்டு கட்டுரைத் தொடர்பற்றி எனக்கு நேரிலும், தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் வழியாகவும் பல வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து இருப்பது பற்றிக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.
இந்த அழகான கோளினால் மனிதர்களுக்கு தோசம் உண்டு என்று சோதிடர்கள் புலுடா விடுகிறார்கள். இவர்களுக்குச் செவ்வாய் கோள் இருப்பதுதான் தெரியும். மற்றப்படி அதுபற்றிய அறிவு அவர்களுக்குச் சூனியம். அதனால்தான் செவ்வாய் இவ்வளவு அண்மையில் வந்ததுபற்றி எந்தச் சோதிடனும் அலட்டிக் கொள்ளவில்லை. அந்தச் செய்தியே அவர்களுக்குத் தெரியாது!
பலர் போற்றியும் மிகச் சிலர் தூற்றியும் எழுதியுள்ளார்கள். தூற்றி எழுதுவதுபற்றி எனக்குக் கவலை இல்லை. கட்டுரையை அக்கறையோடு படித்து விட்டுத் தங்கள் கருத்தை ஒளிவு மறைவின்றி எழுதித் தெரிவிக்கிறார்களே! அந்த மட்டில் எனக்கு மகிழ்ச்சி.
எப் பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என மெய்யுணர்தல் அதிகாரத்திலும் (36) எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என அறிவுடமை அதிகாரத்திலும் (43) வள்ளுவர் இரண்டாயிம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருக்கின்றார். அவர் காலத்திலும் இளித்தவாய்த் தமிழர்களும் ஏமாளித் தமிழர்களும் இருந்திருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் வள்ளுவர் இவ்வாறு அறிவுரை வழங்கினார் என்று கொள்வதற்கு இல்லை. வள்ளுவர் அறிவுரை இக்காலத்துக்கும் பொருந்தும்.
செவ்வாய் கடுகதி விண்கலம்
நான் சோதிடப் புரட்டைப் பற்றி எழுதுவதைப் படிப்போர் பொறுமையோடு படித்து வரவேண்டும். நான் முன்வைக்கும் வாதத்தில் மெய்ப்பொருள் இருக்கிறதா என உரைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்த பின்னரே அதைக் கொள்ள வேண்டும் அல்லது தள்ள வேண்டும்.
சோதிட சாத்திரம் ஒரு புரட்டு, மூடநம்பிக்கை, சாபப்கேடு, அதில் மெய்ப்பொருள் இல்லை என்பதைச் சான்றுகளோடு எண்பித்து வருகிறேன். சோதிடத்தை நம்புவர்கள் அதற்கான காரண காரியங்களை ஆராயாமல் வெறுமனே அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதனைக் குடிக்க விரும்பும் மூடர்கள் போல் நடந்து கொள்கின்றார்கள். இருந்தும் அவர்களைக் காலப் போக்கில் திருத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சென்ற சனி, ஞாயிறு, திங்கள் (விடுமுறை நாள்) காலை மாலை என்று ஒரே திருமண விழாக்கள். இப்போது திருமண நேரத்தையும் நாள்களையும் அய்யர்மார் பஞ்சாங்கத்தைப் பார்க்காமல் தங்கள் நாள்குறிப்பைப் பார்த்து நிச்சயிக்கின்றார்கள்! ஆனபடியால்தான் புலம்பெயர் நாடுகளில் சனி ஞாயிறு விடுமுறை நாள்களில் திருமணங்கள் இடம்பெறுகின்றன. வேலை நாள்களில் திருமணங்களை வைத்தால் கனடா போன்ற நாட்டில் பெரும்பாலோர் வர மாட்டார்கள்!
வழக்கம்போல எல்லாம் வைதீகத் திருமணங்கள். ஒரே ஒரு திருமணம் மட்டும் தமிழ்முறைத் திருமணம் ஆகும். தமிழ்மொழிப் பற்றும் தமிழினப்பற்றும் தன்மானமும் நிரம்பப் பெற்ற தம்பி திருமுகம் (பாபு) தான் தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்டவர். இவர் இங்குள்ள உலகத் தமிழர் இயக்கத்தில் தொண்டராக இருக்கின்றார்.
அய்யர் இல்லை, அம்மி இல்லை, அக்கினி வளர்த்தல் இல்லை, வடமொழிக் கூச்சல் இல்லை, அருந்ததி பார்த்தல் இல்லை (இன்று திருமணங்கள் மண்டபங்களில் நடப்பதால் புரோகிதர்கள் சாட்டுக்கேனும் அருந்ததி காட்டுவதைக் கைவிட்டு விட்டார்கள். பாவம் அருந்ததி) பரமசிவன் -பார்வதி, ஸ்ரீநாராயணன் – இலக்குமி சாட்சி இல்லை.
முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சி இல்லை. அகலியைக் கெடுத்ததால் ஆண்குறியை இழந்து மேனி முழுதும் ஆயிரம் யோனியைக் கவுதம முனிவரிடம் ‘பரிசாகப்” பெற்ற இந்திரன் சாட்சி இல்லை. குரு பத்தினியைக் கெடுத்த அக்கினி சாட்சி இல்லை.
இவை ஒன்றும் இல்லாமல் இரண்டு மாலைகளை மாற்றிப் பத்துத் திருக்குறளைப் படித்துத் தமிழ் மணம் கமழும் திருமணத்தை மணமக்கள் திருமுகம் – வதனி இருவரும் செய்து கொண்டார்கள்.
என்னைப் பொறுத்தளவில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. திருமண விழாவிற்கு நானே தலைமை தாங்கி நடத்தி வைத்தேன். முழக்கம் ஆசிரியர் திருமுருகவேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.
வைதீகத் திருமணம் என்றால் அய்யர் சொல்லும் வடமொழி மந்திரம் யாருக்கும் விளங்காது. அய்யர் மந்திரத்தை அடிவயிறு நோகக் கத்திச் சொல்லிக் கொண்டிருக்க திருமணத்துக்கு வந்தவர்கள் தங்கள் பாட்டில் வீட்டுக்கதை, ஊர்க்கதை, நாட்டுக்கதை கதைத்துக் கொண்டிருப்பார்கள்! பெண்களின் உரையாடல் பெரும்பாலும் புதிதாக வந்த பட்டுச்சேலை, நகை பற்றியே இருக்கும்!
தமிழ்முறைத் திருமணம் அப்படியில்லை. ‘அருச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மீது எம்மைச் சொற்றமிழில் பாடுக!” என சாட்சாத் சிவனாரே விரும்பிக் கேட்ட செந்தமிழில் நடந்த திருமண விழாவை கண்வெட்டாது காது கொடுத்து எல்லோரும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தார்கள்!
சரியாக ஒன்றே முக்கால் மணித்தியாலத்தில் நடந்து முடிந்த திருமணம் எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது. திருமணம் முடிந்த பின்னர் பெரியோர்கள், தாய்மார்கள், நண்பர்கள் தங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். இதில் இருந்து ஒரு உண்மை விளங்கியது.
வைதீகத் திருமணத்தைச் செக்கு மாட்டு மனப்பான்மையில் வழக்கத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது, மரபைக் கைவிடக் கூடாது, அப்படிச் செய்தால் கடவுள் கோவிப்பார், வாழ்க்கையில் இடர்கள் நேரலாம் என்ற அச்சத்தில்தான் பலர் செய்கின்றார்கள். சிறிதளவு பகுத்தறிவு பேசுபவர்களும் திருமணம் என்று வரும்போது குடும்ப நெருக்குதல் காரணமாக வைதீகத் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டு விடுகின்றார்கள். எதற்கும் அஞ்சாது துணிச்சலோடு தமிழ்த் திருமணங்களை செய்ய எல்லோரும் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இளைஞிகள் முன் வரவேண்டும்.
தமிழ்முறைத் திருமணங்களை செய்ய முன்வருமாறு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. அன்றைய திருமண விழா மேடையிலும் நான் கழகம் சார்பாக அழைப்பு விடுத்தேன். தட்சணை எதுவும் வாங்காது செய்து தருவதாக வாக்களித்தேன்!
வைதீக திருமண வீட்டில் என்னைக் கண்ட நண்பர்கள் (பலர் முன்பின் தெரியாதவர்கள்) சோதிடப் புரட்டுத் தொடரைப் படிப்பதாகவும் ‘இந்தச் சோதிடக்காரன்களுக்கு நன்றாகக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். ஒரு சிலர் மட்டும் ‘பாவம் சோதிடர்கள், அவர்கள் பிழைப்பில் மண்ணைப் போட்டு விடாதீர்கள்” என்று அழாக்குறையாகக் கேட்டார்கள்.
நான் ‘சோதிடர்கள் மட்டும் திருமணப் பொருத்தம் பார்ப்பதைக் கைவி;ட்டு விட்டதாக ஏடுகளில் வெளிப்படையாக அறிவிக்கட்டும். அதன் பின்னர் நானும் அவர்களைப்பற்றி எழுதுவதை நிறுத்திவிடுகிறேன்” என்றேன்.
எனது கட்டுரையால் சிலரது பிழைப்பு கெட்டுப் போகலாம். ஆனால், அவர்கள் சொல்லும் சோதிடத்தால் பலரது வாழ்க்கை அல்லவா பாழாகிப் போய்விடுகிறது! அதனை எப்படி இந்த நூற்றாண்டில் அனுமதிக்கலாம்?
இப்போது வசியப் பொருத்தம் இல்லை என்று ஒரு சோதிடர் சொல்ல அதனை நம்பிய பெண்ணின் தகப்பனார் காதலர்களுக்கு இடையில் எப்படி வில்லனாக முளைத்துள்ளார் என்பதைக் காட்டும் மின்னஞ்சலையும் அதற்கு நான் எழுதிய பதிலையும் தருகிறேன்.
‘உங்கள் கட்டுரைத் தொடர் மிகமிக நன்றாக உள்ளது. .நான் மிகவும் விரும்பிப் படிப்பேன். ஏனென்றால் தற்போது இ;ந்தப் பிரச்சினையில் சிக்கி மிகவும் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உயிர் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் ஒரு பெண்ணைக் காதலித்து இரு வீட்டாருடைய பூரண விருப்பத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட நிலையில் பெண்ணின் தந்தை இரகசியமாகக் குறிப்புப் பொருத்தம் பார்த்துவிட்டார். அதில் இருவருக்கும் வசியப் பொருத்தம் குறைவாம். கன நாள்களுக்குச் சேர்ந்திருக்க மாட்டார்களாம். ஆகக்கூடியது 2 வருடந்தானாம் சேர்ந்திருப்பார்கள் என சாதகம் கூறுகிறதாம். இப்போது பெண்ணின் தந்தை திருமணத்துக்கு தடைவிதிக்கின்றார். என்ன செய்யலாம்? உங்கள் அறிவுரை என்ன?’
இப்படிக்கு
சாந்தன்
இந்தியா என்று முகவரி இட்டாலும் சாந்தன் இலங்கையில் இருந்துதான் இந்த மின்னஞ்சலை எழுதியிருக்கின்றார். உயிர் நண்பன் சிக்கலில் சிக்கி இருப்தாகச் சொன்னாலும் அவரே சிக்கலில் சிக்கியிருப்பதாக நான் ஊகிக்கிறேன். அவருக்குப் கீழ்க்கண்டவாறு நீண்ட மறுமொழி எழுதினேன். எனது குடும்பம் பற்றிய சில செய்திகளை அதிலிருந்து எடுத்துவிட்டேன்.
வணக்கம். முதலில் இரண்டு பேருடைய சாதகங்களே பெரும்பாலும் பிழையாகக் கணிக்கப்பட்டிருக்கலாம். இந்திய சோதிடம் ஞாயிறு ஆண்டுக்குப் பதில் விண்மீன் ஆண்டை வைத்தே கணித்து வந்தது. ஆனால், கி.பி. 287 க்குப் பின்னர்; இந்த இரண்டு காலக் கணிப்புக்கு இடையில் காணப்பட்ட நேர வேறுபாடு கணக்கில் எடுக்கப்படவில்லை. இதனால் சாதகக் கணிப்புப் பிழைத்து விட்டது. இதைப்பற்றி மகாகவி பாரதியார் விவேகபோதினி என்ற ஏட்டில் ஆர். சாமிநாதய்யர் என்பவர் பஞ்சாங்கத்தில் உள்ள பெரிய பிழை ஒன்றை வடமொழி கலந்த உரைநடையில் எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டிப் பாரதியார் எழுதியிருந்ததை அப்படியே கீழே தருகிறேன்.
‘ஒரு காலத்தில் வசந்த் விஷ_வானது கார்த்திகை நஷ்சத்திரத்தில் இருந்ததாகவே வேதத்தில் இருந்து தெரிகிறது. அப்போது உத்தராயணம் மாக மாசத்திற்கு பிறந்திருக்கும்.
அதற்கு இரண்டாயிரம் – இரண்டாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கப்பால் அந்த விஷ_ அசுவினி நட்சத்திரத்தில் மேஷராசியின் ஆரம்பத்திலிருந்தது. இங்ஙனம், வசந்த விஷ வானது மேஷ ராசியின் ஆரம்பத்தில் இருந்த காலத்தில் உத்தராயணம் தைமாதப் பிறப்பன்று தொடங்கிற்று. அதற்கப்பால் கணக்குத் தவறிப் போய்விட்டது. அயனவிஷக்களின் சலனத்தை (இயக்கத்தை) அறியாமலோ அறிந்திருந்தும் கவனியாமலோ ஸம்வத்சரத்தின் பரிமாணத்தை 20½ நிமிஷம் ஜாஸ்தியாக (அதிகமாக) கணித்து விட்டபடியால், அயன விஷ காலங்கள் வருஷம் ஒன்றுக்கு 20½ நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்தில் ஒரு முழுநாள் பிந்திவிடும்.
மேற்குறித்த நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றாண்டுகளாய் விட்டபடியால் புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப்போய் நியமங்கள் பிரத்தியஷத்துக்கு விரோதமாகியிருக்கின்றன.’ (பாரதியார் கட்டுரைகள் – பக்கம் 210-211)
சாமிநாதய்யர் குறிப்பிட்ட கால வித்தியாசம் சரி, ஆனால், 80 ஆண்டு என்று எழுதியிருப்பது தவறு. அது 72 ஆண்டு என்று இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் 50.26 வட்ட வினாடி (யசஉ ளநஉழனௌ) ஞாயிறு அதன் பாதையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. எனவே 71.6 ஆண்டில் 1 பாகை (ஒரு நாள்) பின்தள்ளப்பட்டுவிடுகிறது.
மேற்குலக (வெப்ப மண்டல) சாதகத்தில் இருந்து இந்திய (நட்சத்திர ஆண்டு) சாதகத்தைக் கணிப்பதற்கு அயனாம்ச வேறுபாட்டை முன்னதில் இருந்து கழிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 1950-01-01 இல் பிறந்த ஒருவருக்கு ஞாயிறு மீன இராசியில் 25 பாகையில் நின்றால் 1950 க்கு உரிய அயனாம்ச வேறுபாடான 23-09-31 பாகையை அதிலிருந்து கழிக்க வேண்டும். அப்படி கழிக்கும் போது 1-50-26 பாகை பெறுமதி வருகிறது. எனவே இந்திய சோதிட சாதகத்தில் ஞாயிறு மீன இராசியில் 1-50-26 பாகையில் நிற்கும். இன்னொருவரது மேற்குலக சாதகத்தில் 1950 இல் ஞாயிறு மீன இராசியில் 15 பாகையில் நின்றால் அதில் இருந்து அயனாம்ச வேறுபாட்டைக் (23-09-31 பாகை) கழித்தால் 21-50-29 பாகை பெறுமதி (23-09-31 – 15 ஸ்ரீ 8-09-31) பின்னர் 30.00 – 8-09-31 ஸ்ரீ 21-50-29) வருகிறது. அதாவது ஞாயிறு கும்ப இராசியில் 21 பாகை 50 மணித்துளி 29 வினாடியில் நிற்கும்.
மீனம், கும்பம், மகரம், தனுசு நட்சத்திர மண்டலங்கள்
புவி உருண்டை வடிவமானது என்பதை நாம் அறிவோம். ஆனால், புவி முற்றிலும் உருண்டை வடிவானது அல்ல. புவியின் விட்டம் 12,756 கிமீ (7,926 மைல்) ஆகும். அது தனது அச்சில் ஒரு மணித்துளி 1,670 கிமீ (1,040 மைல்) அல்லது ஒரு விநாடிக்கு 0.46 கிமீ (0.29 மைல்) (1,040 mph or 0.29 miles per second or 1,670 km/h, 0.46 km/s) சுழல்கிறது.
ஆனால் புவி நடுவட்டக்கோட்டுக்கு வடக்கிலோ தெற்கிலோ குறைந்த வேகத்திலேயே அதன் அச்சில் சுழல்கிறது. எடுத்துக்காட்டாக நடுவட்டக்கோட்டுக்கு 40 பாகை வடக்கே அல்லது தெற்கே அதன் வேகம் மணித்தியாலத்துக்கு 1280 கிமீ (795 கல்) ஆகக் குறைந்து விடுகிறது. புவி உருண்டை வடிவில் இருப்பதே இதற்கான ஏதுவாகும்.
புவி 149.60 மில்லியன் கிமீ (92.90 மில்லியன் மைல்) தொலைவில் உள்ள ஞாயிறை ஏறத்தாள பொதுமேனி ஒரு வினாடிக்கு 29.79 கிமீ (18.49 மைல்) அல்லது மணிக்கு 107,000 கிமீ (67,000 மைல்) வேகத்தில் சுற்றுப் பாதையில் (orbit) சுற்றிவருகிறது. அப்படிச் சுற்றிவரும் போது அந்தக் கோள்வீதி புவியின் அச்சு விண்நடுக்கோட்டுக்கு 23½ பாகை சரிந்திருக்கிறது (The ecliptic is titled 23.5o relative to the celestial equator).
புவியின் ஆரம் (radius) 6378.137 கிமீ (3963.19 கல்) என்றால் அதன் சுற்றளவு (circumference) 40,075 கிமீ (24.901.5 கல்) தொலைவு ஆகும். ஆனால், வடதுருவம் – தென்துருவம் இடையிலான தொலைவு 40,000 கிமீ மட்டுமே. இந்த வேறுபாட்டுக்குக் காரணம் கிழக்கு மேற்காக உள்ள புவியின் நடுக்கோட்டை (equator) அண்டிய பகுதி கிழக்கு மேற்கு ஆக உள்ள நிரைகோடு (longitude) பகுதியைவிட சற்று புடைத்துக் (bulge) காணப்படுகிறது.
இந்த புடைப்புக் காரணமாக புவியின் அச்சு ஞாயிறு நிலா இரண்டின் எதிர் எதிரான ஈர்ப்பினால் சற்றுத் தளம்புகிறது (றழடிடிடந)இ இதனால் புவியின் சுற்று வேகம் தடைபடுகிறது.
புவியின் வட துருவம் (North Pole) அரைவிண்கோளத்தில் (Celestial Hemisphere ) ஒரு கற்பனை வட்டத்தை வலம் இடமாக (counter-clockwise) வரைகிறது. இந்த வட்டத்தைப் புவி சுற்றிவர 25,800 ஆண்டுகாலம் எடுக்கிறது. இதுவே அயன முந்து நிகழ்வு (precession of equinoxes) என்று அழைக்கப்படுகிறது.
தற்போது புவியின் துருவம் (உண்மையில் விண்ணகத்தின் துருவம் – Celestial Pole) வட கோளத்தில் உள்ள வட மீன் அல்லது துருவ நட்சத்திரத்தை (Polarisis or Polestar) நோக்கியுள்ளது. இந்தத் துருவ நட்சத்திரமே பண்டைக் காலத்தில் மாலுமிகள் கடலில் திசைகளை அறிவதற்கு வானில் ஒரு அடையாளமாக வைத்திருந்தனர்.கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வட துருவம் Tuban என்ற நட்சத்திரத்தை நோக்கி இருந்தது. கிபி 15,000 ஆண்டளவில் Vega என்ற நட்சத்திரமே வட மீனாக அல்லது துருவ நட்சத்திரமாக இருக்கும்.
ஞாயிறைப் புவி சுற்றிவரும்போது அதன் அச்சு எப்போதும் ஒரே பக்கமாக 23½ பாகை சாய்ந்திருக்கும் என்பதைப் பார்த்தோம். இதனால் ஞாயிற்றின் கோணம் ஆண்டு முழுதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறிக் கொண்டே இருக்கும் (The earth’s axis always remains pointing in the same direction as it revolves around the sun. As a result, the solar angle varies at a given place through out the year). இதுவே பருவங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகும். வட கோளத்தில் கோடை என்றால் தென் கோளத்தில் பனிக் காலமாக இருக்கும். தென் கோளத்தில் கோடை காலம் என்றால் வட கோளத்தில் பனிக் காலமாக இருக்கும்.
யூன் 22, வட கோளத்தில் புவியின் அச்சு ஞாயிறை நோக்கி இருக்கும். அப்போது ஞாயிறு 23½ பாகை வடக்கே குறுக்குக்கோட்டுக்கு சரி மேலே உச்சியில் காணப்படும். இந்த நாள் கோடை திருப்புமுகம் (Summer Solstice) எனப்படும். இதன் போது கடகக் கோட்டுக்கு (Tropric of Cancer) வடக்கே உள்ள பகுதிகளில் ஆண்டின் மிக நீண்ட பகல் காணப்படும். வடதுருவத்தில் 24 மணித்தியாலமும் பகலாக இருக்கும்.
இதற்கு எதிர்மாறாகத் தென் கோளத்தில் யூன் 22. பனி திருப்புமுகமாக (Winter Solstice) இருக்கும். மகரக் கோட்டுக்கு (Tropical Capricorn) தெற்கே உள்ள பகுதிகளில் ஆண்டின் மிக நீண்ட இரவு காணப்படும். தென் துருவத்தில் 24 மணித்தியாலமும் இரவாக இருக்கும்.
வெப்ப மண்டல ஆண்டு (Tropical Year) என்பது (இது ஞாயிறு ஆண்டு (Solar Year) என்றும் அழைக்கப்படும்) புவி ஞாயிறைச் சுற்றி வர (அல்லது புவியில் இருந்து பார்க்கும் போது ஞாயிறு நட்சத்திர மண்டலங்களைச் சுற்றி வருவது போன்ற போலி அசைவு (apparent motion) எடுக்கும் 365 நாள்கள் 5 மணி, 48 மணித்துளி (நிமிடங்கள்) 46 நொடி அல்லது 365.242189 நாள்கள் கொண்ட காலமாகும். அதன் காலம் வேனில் (Spring) சமபகலிரவு (Vernal Equinox) நாள் (மார்ச்சு 20) தொடங்கி அடுத்த வேனில் சம பகலிரவு வரையான காலமாகும். கீழ்க் கண்ட அட்டவணை புவி – ஞாயிறு மற்றும் பருவங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பைக் காட்டுகிறது.
புவி – ஞாயிறு தொடர்பு மற்றும் பருவங்கள்
Earth – Sun Relations Seasons
மார்ச் சமபகலிரவு(Equinox) |
யூன்திருப்புமுகம்
(Solstice) |
செப்தெம்பர் சமபகலிரவு
(Equinox) |
யூன் திருப்புமுகம் (Solstice) |
||
திகதி | மார்ச் 21 | யூன் 21 | செப்தெம்பர் 23 | யூன் 21 | |
ஞாயிறின் நிலை | 0 பாகை | 23 ½ பாகை வடக்கு |
0 பாகை | 23 ½ பாகை வடக்கு | |
தொடு கோடு (Tangent) கதிர்கள் |
வட- தென் துருவங்கள் |
வட- தென் துருவங்கள் | வட – தென் துருவங்கள் | வட – தென் துருவங்கள் | |
ஒரு நாளின் நீளம் | எங்கும் 12 மணித்தியாலம் பகல் | தென்துருவத்தில் 24 மணித்தியாலம் இரவு வடதுருவத்தில் 24 மணித்தியாலம் பகல் நடுவட்டக் கோட்டில் 12 மணித்தியாலம் சம பகல் இரவு | எங்கும் 12 மணித்தியாலம் பகல் | தென் துருவத்தில் 24 மணித்தியாலம் இரவு வடதுருவத்தில் 24 மணித்தியாலம் பகல் நடுவட்டக் கோட்டில் 12 மணித்தியாலம் சமபகல் இரவு |
வெப்ப மண்டல ஆண்டுக் கணிப்பில் ஞாயிறு வேனில் சம பகலிரவு மேட இராசியில் 0 பாகையில் உதயமாகிறது என எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது மாறாது, ஆனால், அயனாம்ச வேறுபாடு (2003 இல் 23-53-43 பாகை) காரணமாக நட்சத்திர மண்டல ஆண்டுக் கணிப்பில் ஞாயிறு அதே நாளில் மீனம் 6 பாகை 03 மணித்துளியில் உதயமாகிறது.
நட்சத்திர மண்டல சோதிடத்தில் ஞாயிறு ஒரு இராசி வீட்டில் புகும் நாளே மாதத் தொடக்கம் ஆகும். இது பொதுவாக மாதத்தின் (solar month) 3 ஆவது கிழமையின் தொடக்கத்தில் இடம் பெறும். ஆனால், வெப்பமண்டல சோதிட நாள்காட்டியில் மாதத் தொடக்கம் மாதத்தின் முதல் நாள் தொடங்குகிறது.
நட்சத்திர மண்டலச் சோதிடக் கணிப்பில் இராசிச் சக்கரம் நிலையானது. இராசி வீடுகளுக்கும் இராசி மண்டலங்களுக்கும் தொடர்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்தத் தொடர்பு வெப்ப மண்டல சோதிடக் கணிப்பில் இல்லை.
ஆனால், இந்த இரண்டு கணிப்பும் ஒவ்வொரு மாதமும் 15-20 இடையிலான நாள்களில் ஒன்றன் மீது ஒன்று (overlap) படிந்திருக்கும். இந்தக் காலத்தில் பிறக்கும் ஒருவர் இரண்டு சோதிட முறையிலும் ஒரே இராசியில் பிறக்கிற வாய்ப்பு இருக்கும். வேறு நாள்களில் அயனாம்ச வித்தியாசம் காரணமாக ஜென்ம இலக்கினம் மாறுபடும். விளைவு? அய்ந்தில் நான்கு (89 விழுக்காடு) சாதகம் பிழைத்து விடும்.
இந்த இடத்தில் வெப்ப மண்டலம் மற்றும் நட்சத்திர மண்டலக் கணிப்பில் இராசிகள் இடம் பெறும் நாள்கள் வேறுபடுவது போல வானியல் நாள்களும் வேறு படுகின்றன. எடுத்துக்காட்டாக ஞாயிறு மேடராசிக்கு வெப்ப மண்டலக் கணிப்பில் மார்ச்சு 21 இல் புகுகிறது. நட்சத்திர ஆண்டுக் கணிப்பில் ஏப்ரில் 14 இல் புகுகிறது. ஆனால், வானியல் கணிப்பில் ஏப்ரில் 19 இல் புகுகிறது. இதனால் சாதகம் நட்சத்திர மண்டலக் கணிப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்டாலும் அது வானியல் கணிப்போடு ஏறத்தாழ 5 நாள்கள் வேறுபடுகிறது. அப்படி வேறுபடும் போது சாதகத்தில் உள்ள இராசிகள், கோள்கள் விண்மீன்கள் சுத்தமாகப் பிழைத்துவிடுகிறது! இது பற்றிப் பின்னர் விரிவாக விளக்கப்படும்.
விண்கோளம் ஒரு இராட்சத பந்து போன்றது என்றும் அதில் விண்மீன்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன என்றும் வைத்துக் கொள்ளலாம். புவியைப் போலவே அதிலும் நடுக்கோடு, நெடுக்கோடு, குறுக்குக் கோடு, துருவங்கள் போன்றவை கற்பனையாக வரையப்பட்டிருக்கிறது. புவி தனது அச்சில் மேற்குக் கிழக்காகச் சுழலும் போது இந்த விண்கோளத்தின் நட்சத்திர மண்டலங்கள் கிழக்கு மேற்காக உதயமாகி மறைகின்றன. ஆனால், வட துருவம் ( 66½ – 90 பாகை) தென் துருவம் ( 66½ – 90 பாகை) ஆகிய பகுதிகளில் இதனைப் பார்க்க முடியாது. இதனால் அங்கு வாழும் எஸ்கிமோ, இனுயிட் (Inuit) போன்ற செவ்விந்தியருக்குச் சாதகம் கணிக்க முடியாது!
பருவங்கள்
வானியலாளர்கள் ஒரு ஆண்டு காலத்தைப் புவிக்குப் பதில் விண்கோளத்தில் (Celestial sphere) காணப்படும் ஒரு அசையா விண்மீனின் (Spica என்ற கன்னி ) பின்புலத்தில் ஞாயிறை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் ஆண்டுக் காலத்தைக் கொண்டு கணிக்கின்றார்கள்.
இப்படிக் கணிக்கப்படும் ஆண்டே நட்சத்திர ஆண்டு (Sidereal Year) என அழைக்கப்படுகிறது. இதன் காலம் 365 நாள்கள், 6 மணி, 9 மணித்துளி, 9.54 விநாடி அல்லது 365.256363 நாள்கள் ஆகும். (The time required for one complete revolution of the earth around the sun, relative to the fixed stars, or 365 days, 6 hours, 9 minutes, 9.54 ஒவ்வொரு ஆண்டும்; வேனில் சமபகலிரவு இடம் பெறும்போது இராசிவட்டத்தில் உள்ள அசையா விண்மீன்கள் 50.26 விநாடி குறைந்து காணப்படும். இவ்வாறு தொடர்ச்சியாக இராசி வட்டத்தில் வேனில் சமபகலிரவுகள் பின்நோக்கி நகர்வதை அயன ந்துநிகழ்வு (Precession of Vernal equinoxes) என அழைக்கின்றார்கள்.
இந்த அயன முந்துநிகழ்வை முதன் முதலில் கண்டு பிடித்தவர் புகழ்பெற்ற கிரேக்க தத்துவவாதியான கிப்பர்ச்சுஸ் (Hipparchus (கிமு 190-120) எனப் பரவலாக நம்பப்படுகிறது. இவரே, தான் கண்டுபிடித்த முக்கோண கணித அட்டவணையைப் (Trigonometric Table) பயன்படுத்திப் புவிக்கும் நிலாவுக்கும் இடையில் உள்ள தொலைவைச் சீர்செய்தார் எனச் சொல்கின்றார்கள்.
இரண்டு வகை ஆண்டு இருப்பதையும் விண் அச்சு பின்னோக்கி நகர்வதை முதன் முதலில் கிப்பர்ச்சுஸ் அவதானித்தார். While in reality the Earth goes in an orbit around the Sun, it seems from the Earth that the Sun moves over the ecliptic (red) on the celestial dome. When the Sun seems to pass through the vernal equinox (longitude 0°), the longitude of the Earth itself is 180° longitude.The Earth in its orbit around the Sun causes the Sun too appear on the celestial sphere moving over the ecliptic (red), which is tilted on the equator (blue).
எனவே நட்சத்திர ஆண்டுக்கும் வெப்பமண்டல ஆண்டுக்கும் இடையே 20 மணித்துளி (20.4480) வேறுபாடு ஏற்படுகிறது. அதாவது ஒரு நட்சத்திர ஆண்டு வெப்பமண்டல ஆண்டைவிட 20 மணித்துளி 24 விநாடி அதிகமானது அல்லது நீளமானது.
ஆண்டுவகை
ஆண்டுவகை
|
நாள்கள் – 86,400 மணித்துளி |
நாள் | மணி | மணித்துளி | நொடி |
நட்சத்திர ஆண்டு | 365.25636042 | 365 | 6 | 9 | 9.54 |
வெப்பமண்டல ஆண்டு | 365.24219878 | 365 | 5 | 48 | 45.51 |
வேறுபாடு | 0 | 0 | 0 | 20 | 24.03 |
ஒரு வெட்பமண்டல ஆண்டின் ஒரு வேனில் சமபகலிரவு நாளிலிருந்து அடுத்த வேனில் சமபகலிரவு நாளன்று புவியின் இருக்கையை இராசி வட்டத்தில் காணப்படும் அசையா நட்சத்திரம் ஒன்றோடு நாம் ஒப்பு நோக்கினால், புவி விண் நெடுக்கோட்டின் (Celestial longitude) மேற்குப் பக்கமாக 50.26 விநாடி நகர்ந்திருப்பது போல் தோன்றும்.
(If at the end of a tropical year from one vernal equinox to the next, we consider the position of the earth with reference to a fixed star of the zodiac, the earth appears to lie some 50.26 seconds of celestial longitude to the west of its original position. Elements of Vedic Astrology – page 22)
ஒவ்வொரு ஆண்டும்; வேனில் சமபகலிரவு இடம் பெறும்போது இராசிவட்டத்தில் உள்ள அசையா விண்மீன்கள் 50.26 விநாடி குறைந்து காணப்படும். இவ்வாறு தொடர்ச்சியாக இராசி வட்டத்தில் வேனில் சமபகலிரவுகள் பின்நோக்கி நகர்வதை அயன முந்துநிகழ்வு (Precession of Vernal equinoxes) என அழைக்கின்றார்கள்.
இந்த அயன முந்துநிகழ்வை முதன் முதலில் கண்டு பிடித்தவர் புகழ்பெற்ற கிரேக்க தத்துவவாதியான கிப்பர்ச்சுஸ் (Hipparchus (கிமு 190-120) எனப் பரவலாக நம்பப்படுகிறது. இவரே, தான் கண்டுபிடித்த முக்கோண கணித அட்டவணையைப் (Trigonometric Table) பயன்படுத்திப் புவிக்கும் நிலாவுக்கும் இடையில் உள்ள தொலைவைச் சீர்செய்தார் எனச் சொல்கின்றார்கள்.
இரண்டு வகை ஆண்டு இருப்பதையும் விண் அச்சு பின்னோக்கி நகர்வதை முதன் முதலில் கிப்பர்ச்சுஸ் அவதானித்தார். While in reality the Earth goes in an orbit around the Sun, it seems from the Earth that the Sun moves over the ecliptic (red) on the celestial dome. When the Sun seems to pass through the vernal equinox (longitude 0°), the longitude of the Earth itself is 180° longitude.The Earth in its orbit around the Sun causes the Sun too appear on the celestial sphere moving over the ecliptic (red), which is tilted on the equator (blue).
கிப்பர்ச்சுஸ் 850 கும் அதிகமான நட்சத்திரங்களின் வரைபடத்தை, அவற்றின் பொலிவு (Magnitude) ஒளிர்மை உட்படத், தயாரித்தார். இந்த வரைபடம் 1,800 ஆண்டு கழித்து வானியல் வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்தது. இவரே கோள்களின் ஓட்டத்தை விளக்க சிறு வட்டங்களை (Epicycles) கண்டு பிடித்தவர். ஆனால், இவரும் ஏனையோரைப் போல் அரிஸ்தோட்டலின் புவிமையக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவர் ஆவார்.
ஓவ்வொரு 72 ஆண்டும் இந்த வேறுபாடு அண்ணளவில் 1 பாகை அல்லது 1 நாள் ஆக அதிகரிக்கிறது. மேலே கூறியது போல அயன முந்துநிகழ்வே இந்த வேறுபாட்டிற்குக் காரணமாகும் ஆகும்.
இங்கு குறிப்பிடப்படும் கால நேரங்கள் சராசரி கால நேரங்களாகும். புவி ஞாயிறை முட்டை வடிவு போன்ற ஒரு நீள் வட்டத்தில் (elliptic) சுற்றி வருவதால் புவி ஞாயிறுக்கு அண்மையில் சுற்றும்போது சற்று வேகமாகவும் சேண்மையில் செல்லும்போது சற்றும்போது வேகம் குறைந்தும் சுற்றுகிறது.
வெட்பமண்டல ஆண்டே நாள்காட்டி, பஞ்சாங்கம் போன்றவை கணிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் சோதிடர்கள் பயன்படுத்தும் வெப்ப மண்டல இராசிவட்டம் (Tropical Zodiac) முற்றிலும் பிழையானது. அது 1,718 (கிபி 285) ஆண்டுகளுக்கு முன்னர் வானில் காணப்பட்ட விண்மீன்கள் மற்றும் கோள்களது இருக்கையையே காட்டுகிறது.
நட்சத்திர ஆண்டுக் கணிப்பு வானில் எந்தவொரு பொழுதிலும் காணப்படும் விண்மீன்கள் மற்றும் கோள்களது இருக்கையை அடிப்படையாகக் கொண்டது. வானியலாளர்கள் நட்சத்திர ஆண்டையே பயன்படுத்துகின்றார்கள்.
சோதிட சாத்திரத்தை எழுதியவர்களுக்கு இன்றைய வானியல் பற்றிய அறிவோ அதுபற்றி ஆராய்ச்சி செய்வதற்கு வேண்டிய கருவிகளோ இருக்கவில்லை. அதற்கான வாய்ப்பும் சூழலும் அன்று இருக்கவில்லை. அவர்களிடம் இருந்தது ‘ஞானக் கண்” ஒன்று மட்டுமே! இந்த வேறுபாட்டை விளக்கவே வானியல் பற்றிய முக்கிய தரவுகளை சற்று விரிவாக மேலே தந்திருக்கிறேன்.
‘தென்னாட்டுப் பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் கி.பி ஏழாம் நூற்றாண்டின் வராகமிகிரர் வகுத்துத் தந்த காலக் கணிப்பை இன்னும் அப்படியே பின்பற்றி வருகின்றனர். அதனால் 23 நாள்கள் நம்முடைய காலக் கணக்கில் பிற்பட்டதாக இருக்கிறது” என்கின்றார் பேராசிரியர் க.த. திருநாவுக்கரசு.
மேலும் “இந்த ஆண்டு (2003) தீபாவளி நொவம்பர் 14 இல் கொண்டாடப்படுகிறது என்று நாள்காட்டி கூறுகிறது. மேற்காணும் கருத்துப்படி 23 நாள் தள்ளிப் போகிறதென்பது சரியானால் தீபாவளி அக்டோபர் 22 இல் அல்லது 23 இல் வர வேண்டும்” என்கின்றார். (பொருள் புதிது நூல் – பக்கம் 91)
பி.வி. இராமன், கிருஷ்ணமூர்த்தி போன்ற சோதிடர்கள் இந்த அயனாம்ச வேறுபாட்டைக் கணக்கில் எடுத்துச் சாதகங்களைக் கணித்தார்கள். அவர்களே அயனாம்ச வேறுபாட்டைக் கணித்துக் கொடுத்திருக்கின்றார்கள். அதற்கு அவர்களது பெயர்கள் இடபப்பட்டுள்ளது. இராமனைவிட மேலும் ஏழு சோதிடர்கள்; அயனாம்சம்தைக் கணித்திருக்கின்றார்கள். ஆனால், கணிப்பில் சோதிடர்கள் ஒத்த கருத்துக் கொண்டிருக்கவில்லை. இந்தக் கணிப்புக்களில் ஒரு பாகைக்கு நான்கு விநாடிக்கும் அதிகமான வேறுபாடு காணப்படுகிறது. இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலாகிரி (Lahiri) என்பவரது கணிப்பையே பெரும்பாலான சோதிடர்கள் பின்பற்றுகின்றார்கள். இலாகிரி கி.பி. 2000 ஆம் ஆண்டுக்கு கணித்த அயனாம்சம் 23 -11-.51 பாகையாகும்.
எனவே சாதகங்கள் பிழையாகக் கணிக்கப்படுகின்றன. சாதகர்கள் பிறந்த ஆண்டுக்குரிய அயனாம்சத்தைப் பிறந்த நாள், நேரத்தில் இருந்து கழித்துச் சாதகங்களைக் கணிக்க வேண்டும்.
இப்படிக் கணித்தால் மட்டும் சாதகம் மெய்யாகிவிடாது. குறைந்த பட்சம் அயனாம்ச வேறுபாடு இருக்காது.
திருமணப் பொருத்தத்திற்கு 10 தொடக்கம் 13 விதமான பொருத்தம் பார்க்கப்படுகிறது. இதில் வசியப் பொருத்தம் ஒன்றாகும்.
கிழ்ச்சி நிறைந்த சுகமான குடும்ப வாழ்க்கைக்கு இந்தப் பொருத்தம் இருக்க வேண்டும் என்று சோதிடம் சொல்கிறது. வசியம் என்றால் கவர்ச்சி என்று பொருள்.
கவர்ச்சி இருந்தபடியால்தான் உமது நண்பனுக்கு அந்தப் பெண் மீதும் பெண்ணுக்கு அவன் மீதும் காதல் பிறந்திருக்கிறது.
இராசிகளைப் பெண் ஆண் எனப் பாகுபடுத்தி வசியப் பொருத்தம் பார்ப்பது அறிவீனம். இராசிகளை ஆண் பெண் என்று எப்படிப் பிரித்தார்கள்? மேடம் தொடங்கி மீனம் ஈறாக வரும் பன்னிரண்டு இராசிகளில் ஒற்றைப்பட வரும் இராசிகள் ஆண் இராசிகள் என்றும் இரட்டைப்பட வரும் இராசிகள் பெண் இராசிகள் என்றும் சோதிடர்கள் பிரித்திருக்கின்றார்கள். இப்படி ஒற்றை இரட்டை பார்த்துப் பிரிப்பது எந்தவித விதிக்கட்டின்றிச் (arbitray) செய்யப்பட்டதாகும். எனவே ஏனைய பொருத்தங்கள் போலவே வசியப் பொருத்தத்திற்கும் எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை. சோதிடர்கள் ஒற்றை இரட்டை பிடிப்பதில் மன்னாதி மன்னர்கள் என்பதை மட்டும் அது காட்டுகிறது.
இவ்வளவுதான் நான் சொல்லக்கூடியது. காதலுக்குப் பாடை கட்டிக் கொல்ல நினைக்கும் பெண்ணின் மூடத் தந்தைக்கு நான் இவ்வாறு எழுதியிருப்பதை எடுத்துச் சொல்லுங்கள். அவர் ஏற்க மறுத்து, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று ஒற்றைக் காலில் நின்றால் மனப் பொருத்தம் உள்ள உமது நண்பனையும் அவனது காதலியையும் ஒரு கோயிலுக்குக் கூட்டிச் சென்று தாலி கட்டவும்! அதற்கு முன் திருமணப் பதிவுப் பணியகம் சென்று பதிவுத் திருமணம் செய்யவும்.
அவர்களது எதிர்காலம் அவர்களது கையில் இருக்கிறது. சோதிடர் கையில் நிச்சயமாக இல்லை! நானோ எனது பிள்ளைகளோ சாதகம் பார்க்காமல் தான் திருமணம் செய்து கொண்டோம். எனது திருமணம் சொந்தத்துக்குள் பேசிச் செய்தது, ஆனால், பிள்ளைகளது திருமணங்கள் எல்லாம் சங்க காலத்துக் களவியலில் தொடங்கி கற்பியலில் முடிந்த திருமணங்கள்! நாங்கள் பேரளவு எந்தக் குறையுமின்றிச் சமூக அடுக்கின் நடுத் தட்டுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
சோதிடப் புரட்டு (23)
சோதிடருக்கே எமனாகப் போய்விட்ட சோதிடம்!
நக்கீரன்
‘மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில் எல்லாச் செய்கைகளுக்கும் நாள், நட்சத்திரம். லக்கினம் முதலியன பார்த்தல். சவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக் கூட நம்மவர் மாசப் பொருத்தம், பட்சப் பொருத்தம், நாள் பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது.
சவரத்துக்குக் கூட இப்படியென்றால் இனிக் கலியாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விடயத்தில் நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது.
சகுனம் பார்க்கும் வழக்கம் கார்யங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும் அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுனம் பார்ப்பதனால் காரிய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாள் பொருத்தம், லக்னப் பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே, கார்ய நஷ்டம் மட்டுமின்றி மேற்படி லக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது.’ (பாரதியார் கட்டுரைகள் – பக்கம் 8-9)
இன்று என்ன வாழுதாம்? பாரதி காலத்தைவிட இன்று மோசமான மூடநம்பிக்கைகளில் தமிழ்மக்கள் மூழ்கிப் போய் இருக்கின்றார்கள்! எத்தனை பெரியார்கள் வந்து எதைச் சொன்னாலும் மூடநம்பிக்கைகளைக் கைவிடமாட்டோம் என்று முரண்டு பிடிக்கின்றார்கள்!
நந்தினி என்ற ஒரு வாசகர் எனக்கு எழுதியிருக்கும் இந்த மடலைப் படியுங்கள்.
‘மனிதனுக்கு ஆறாம் அறிவு வீண். அவன் அயந்து அறிவுள்ள மிருகமாகவே இருந்திருக்கலாம்! சிந்திக்கத் தெரியாதவனுக்;கு எதற்கு ஆறறிவு? இவனின் மூடத்தனத்தை வைத்துத்தானே கனடாவில் இத்தனை கோயில்கள்! இவன் கனடா இல்லை செவ்வாய்க் கிரகத்திற்குப் போனாலும் திருந்தப் போவதில்லை. பாரதியின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்!
சமூக நல உதவியில் இருக்கும் ஒரு மூதாட்டி துர்க்கையம்மன் கோயில் கட்டும்போது தன் பெயர் சொல்லித் தகடு வைக்க 500 டொலர்கள் கொடுத்தாவாம். இப்படி எத்தனையோ 500 கள். இதை யாரிடம் சொல்லி அழூவது? இதே மூதாட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு 5 டொலர் கேட்டால் மூக்கால் அழுவார்! நாம் வாழும் காலத்திலேயே எம் மக்கள் மூடநம்பிக்கை என்னும் கொடிய நோயிலிருந்து விடுபட வேண்டும் என்பதே என் போன்றோரின் ஆசை.’
நந்தினி யார் என்பது எனக்குத் தெரிதிருக்கவில்லை. பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில்தான் தன்னை எனக்கு அறிமுகம் செய்து கொண்டார். அவர் ஒரு நடன ஆசிரியை. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். பிள்ளைகளுக்குத் தனித் தமிழ் பெயர் வைத்திருக்கிறார்.
நந்தினி மூடநம்பிக்கை ஒரு கொடிய நோய் என்று எழுதியது முற்றிலும் சரியே! நோய், நோயின் மூலம், அதைத் தணிக்கும் மருந்தைக் தேர்ந்தெடுத்து தகுந்த மருத்துவம் செய்யவேண்டும்!
மாப்பிள்ளை ஒரு கணினிப் பொறியியலாளர். இங்குள்ள பெயர் போன கணினி நிறுவனம் ஒன்றில் வேலை. கை நிறையச் சம்பளம், அகவை 38 ஆகிவிட்டது, ஆனால், இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன காரணம்? எட்டில் செவ்வாய்! அவரைப் போலவே எட்டில் செவ்வாய்க் குற்றமுள்ள பெண்ணைப் பிள்ளையின் பெற்றோர்கள் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்! தேடிக் கொண்டு இருக்கும் போது கவியரசு கண்ணதாசன் பாடியது போல பிள்ளைக்கு ஆண்டொன்று போனால் வயதொன்று ஏறிக் கொண்டிருக்கிறது!
போகிற போக்கைப் பார்த்தால் இவர் திருமணம் செய்ய வாய்ப்பே இல்லாமல் அரசமரப் பிள்ளையார் போல் தனிக் கட்டையாக இருக்க நேரிடும் போல் தெரிகிறது!
செவ்வாய் ஜென்ம இலக்கினத்தில் (முதலாவது இராசி வீடு) இருந்து எண்ணி 2,4,7,8 அல்லது 12 ஆவது இராசி வீடுகளில் இருந்தால் தோசம் என்கின்றார்கள். இதில் 7 அல்லது 8 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அது மோசமான தோசமாகக் கருதப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் சரி 40 விழுக்காட்டினரது சாதகத்தில் செவ்வாய்க் குற்றம் இருக்கவே செய்யும்!
கிறித்தவ தமிழர்கள் உட்பட இந்துக்கள் அல்லாதார் திருமணம் செய்து கொண்டு வாழவில்லையா? இந்துக்களும் காதல் திருமணம் என்றால் சாதகம் பார்க்காமல்தானே செய்து கொள்கின்றார்கள்! இவர்கள் எல்லோரும் வாழவில்லையா?
சாதகம் பார்த்துச் செய்த திருமணங்கள் எல்லாம் வெற்றி அடைந்து விடுமா? அதற்கான உறுதியைச் சோதிடர்களால் தரமுடியுமா? சாதகம் பார்த்துத் திருமணம் செய்தபின் மாங்கல்யம் இழந்த பெண்கள் இல்லையா? மனைவிகளை இழந்த ஆண்கள் இல்லையா? சோதிடரின் மகளே விதவையாகிவிட்ட பரிதாபம் இல்லையா?
அந்தக் குடும்பம் 23 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் குடும்பத்தோடு ஒட்டி உறவாடிய குடும்பம். எங்கள் வீட்டு நல்ல நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் முன்வரிசையில் நிற்பவர்கள். உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வள்ளுவரின் நட்பு இலக்கணத்துக்கு இலக்கியமானவர்கள். யாருக்கும் தீங்கு நினைக்காதவர்கள், மற்றவர்கள் கேட்காமலே தாங்களாக வலிந்து போய் உதவி செய்பவர்கள், நடந்தால் புல்லுக்கூடச் சாகமாட்டாது என்று சொல்வார்களே அந்தளவு மென்மையானவர்கள். அத்தோடு கடவுள் பக்தி நிறைய உள்ளவர்கள். கோயில் குளம் தேர் தீர்த்தம் ஒன்றும் தவறுவதில்லை. நண்பர் தேவார திருவாசகம், திருப்பல்லாண்டு போன்றவற்றை இசை ஞானத்தோடு பாடக் கூடியவர்.
கடந்த ஆண்டு நடந்த எனது கடைசி மகனின் திருமணத்துக்குச் சொன்னோம். ஆனால், அவர்கள் வரவில்லை. அதே நாளில் தங்களுக்கு வேறு ஒரு முக்கிய நிகழ்ச்சி இருப்பதாகச் சொன்னார்கள். அதை நாம் உண்மை என நம்பினோம்.
ஆனால், அவர்கள் திருமணத்துக்கு வராமல் விட்டதற்கு உண்மையான காரணம் மிக அண்மையில்தான் எமக்குத் தெரிந்தது. படித்துப் பட்டம் பெற்று பேசும் பொற்சித்திரம் போல் தங்கச் சிலை போல் வீட்டில் வலம் வந்த தங்கள் ஒரே மகளை சாதகப் பொருத்தம் பார்த்து வைதீக முறைப்படி திருமணம் செய்து கொடுத்தார்கள். ஒரே மகள் என்பதால் திருமணம் வெகு சிறப்போடும் சீரோடும் நடந்தது. இங்கல்ல இலண்டனில்.
ஆனால், திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் இல்லை, மகள் வீட்டோடு வந்துவிட்டார். கணவன் -மனைவிக்கிடையில் என்ன சிக்கல் என்று தெரிவியவில்லை. ஆனால், அவிழ்க்க முடியாத பெரிய சிக்கல் என்பது மட்டும் தெரிகிறது.
சாதகப் பொருத்தம் பார்த்துச் செய்த திருமணம் ஆறு மாதத்துக்குள் முறிந்து விட்டது! சோதிடர் இரண்டு சாதகங்களிலும் காணப்பட்ட நாள், கோள், நட்சத்திர நிலைகளைக் கணித்து “மணப் பொருத்தம் உண்டு செய்யலாம்’ என்று சொல்லிய பின்னர்தானே திருமணம் நடந்தது? சோதிடம் பொய்த்துப் போனதற்கு அதுவும் இவ்வளவு விரைவில் பொய்த்துப் போனதற்கு என்ன காரணம்?
முன்னர் குறிப்பிட்டது போல கி.பி. 285 ஆம் ஆண்டு முதல் காலத்தைக் கணிப்பதில் விட்ட தவறுதலால் ஞாயிறு ஆண்டுக்கும் நட்சத்திர ஆண்டுக்கும் இடையில் ஏறத்தாழ 24 பாகை வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால் அயனாம்ச வேறுபாட்டைக் கணக்கில் எடுக்காது சோதிடர்கள் கணித்துக் கொடுக்கிற சாதகங்களில் அய்ந்தில் நான்கு சாதகங்கள் பிழையான சாதகங்களாகும். சாதகர்களது ஜென்ம இலக்கினம் ஒரு இராசி மண்டலத்தால் முன்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.
சாதகத்தில் ஒருவரது ஜென்ம இலக்கினம் சிம்மம் என்று இருப்பது உண்மையில் கடக இராசி ஆக இருக்க வேண்டும்! கடக இராசி என்று இருப்பது மிதுன இராசியாக இருக்க வேண்டும். இதனால் ஒருவரது ஜென்ம இலக்கினம் ஜென்ம நட்சத்திரம் இரண்டும் வேறுபடும்! சிம்ம இராசியில் 24 பாகைக்கு மேல் பிறந்தால் மட்டும் ஜென்ம இலக்கினமும் ஜென்ம நட்சத்திரமும் சரியாக இருக்க வாய்ப்புண்டு.
மொத்தத்தில் சாதகமும் பிழை! அதன் அடிப்படையில் சொல்கின்ற பலன்களும் பிழை!
ஆண் பெண் இருவரது சாதகங்களைப் பார்த்துப் மணப் பொருத்தம் இல்லை என்று சோதிடரால் தள்ளிவிட்ட சாதகங்கள் உண்மையில் ‘பொருத்தமாக’ இருந்திருக்கலாம்! பொருத்தம் என்று சொன்ன சாதகங்கள் உண்மையில் “பொருத்தம் அற்றதாக” இருக்கலாம்!
சோதிட இரத்தினங்கள், சோதிட சிகாமணிகள், சோதிட கலைக்கோக்கள் பிழையான சாதகத்தைக் கணித்து அதன் அடிப்படையில் பலன் சொல்லி பலரது எதிர்கால வாழ்க்கையை நாசமாக்கி விடுகின்றார்கள்.
இதிலிருந்து சோதிடம் சாதாரண புரட்டல்ல அண்டப் புரட்டு என்பதை அறிந்து கொள்ளலாம். மிக அண்மைக் காலத்தில்தான் இந்த கால வித்தியாசத்தைக் (அயனாம்சம்) கழித்துக் கணினியின் உதவியோடு சாதகம் கணிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், என்னிடம் இருக்கும் கையால் எழுதிய சாதகங்களில் ஒன்றேனும் இந்த அயனாம்சத்தை கவனத்தில் கொண்டு கணிக்கப்படவில்லை!
பாரதியார் மனம் நொந்து எழுதியுள்ளதைப் போல சோதிடத்தை நம்புவதினால் தமிழ் சமுதாயத்துக்கு ஏற்படும் கேடும் இழப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் கட்டுரைத் தொடர் மூலம் சோதிடம் என்ற மூடநம்பிக்கைச் சேற்றில் மூழ்கித் தவிக்கும் ஒரு சிலரையாவது மீட்டுக் கரை சேர்க்கலாம் என உளமார நம்புகிறேன்.
இதோ இன்னொரு மடல். எழுதியவர் திருமாவளவன், மலேசியா.
மிகச் சிறந்த கட்டுரை. சோதிடத்தில் வழியும் இந்து மத வெறியால் ஏமாற்றப்படும் தமிழர்களுக்கு இது விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். மலேசிய மாசிகைகளில் இதனை வெளியிட விரும்புகின்றேன். இயலுமா? அறியப்படுத்துக. நக்கீரனுக்கு எம் நன்றியும் பாராட்டும்.
வணக்கம். பாராட்டுக்கு நன்றி. எனது கட்டுரையைப் படித்துவிட்டு சோதிடச் சுவடிகளோடு சோதிட சாத்திரிகள் என்னோடு சண்டைக்கு வருவார்கள் என நினைத்தேன். ஒருவர்தான் முன்வந்தார். ஆனால், அவர் சோதிடத்தைத் தொழிலாகக் கொள்ளாமல் அதனைப் பொழுது போக்குக்காக ஆராய்பவர். எனது கட்டுரைகளை தாராளமாக வெளியிடலாம். நக்கீரன்.
இன்னொரு வாசகர் ‘டேய் மடையா’ என்று தனது பெயரை மட்டும் எழுதிவிட்டு வேறொன்றையும் தனது மின்னஞ்சலில் குறிப்பிடாது விட்டுவிட்டார்!
‘எனது பெயர் ஆனந்த்.கொலன்டில் கடந்த 9 ஆண்டுகளாக வதித்து வருகிறேன். சோதிடப் புரட்டு உட்பட உங்களது கட்டுரைகள் எல்லாவற்றையும் வாசித்து வருகிறேன். அவை எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன. உங்களுடன் பேச விரும்புகிறேன். அது சாத்தியமா?”
தமிழன்பன் என்பவர் என்னைப் போலவே சோதிடத்தை நம்பாமல் இருந்ததாகவும் பின்னர் அதையிட்டுத் தான் செய்த ஆய்வின் பின்னர் அது அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு கலை என வாதிட்டு எழுதியுள்ளார். இதற்கு முன்னர் பெயர் போடாது எழுதியவர் (சோதிடப் புரட்டு 6) இப்போது பெயர் போட்டு எழுதியுள்ளார். ஆனால், இவர் சோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர் அல்ல என்பது தெரிந்ததே. அவர் மேலும் எழுதியிருப்பதாவது,
‘ளங்கும். ஒரு உண்மை என்னவென்றால் வானசாத்திரத்தின் மூலம் சோதிடத்தை உலகுக்கு உணர்த்;தியவர்கள் கிரேக்கர்களே. நம்மவர்கள் பல விதமான கட்டுக் கதைகளை புனைந்து அவற்றை தாம் கண்டு பிடித்ததாக நம்பப் பண்ணியிருக்கிறார்கள். குறிப்பாக இராகு கேதுக்களுக்கு கட்டப்பட்ட கதை. இவற்றை நான் வெளிநாட்டில் வான சாத்திரத்துடன் கூடிய சோதிடம் கற்றதால் நன்கு அறிந்து கொண்டேன்.
இராகு கேதுக்களைப் பற்றியும் அவைகள் எப்படி புவியில் இருப்பவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகி;ன்றன என்பதற்கு அறிவு பூர்வமான விளக்கம் உள்ளது. இவற்றுக்கெல்லாம் நேருக்கு நேர் முட்டி மோதல் இன்றி விளக்கமாக தயார் படுத்தி கொண்டிருக்கிறேன். அவற்றை முடியுமானவரை அனுப்பி வைக்கிறேன்.
எனது நோக்கம் ஒருவரைக் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டுமென்பதல்ல. நான் எனது ஆழ்ந்த முயற்சியின் பயனாக கண்டறிந்த உண்மைகளைப் பகிர்ந்நான் அவர்களுக்கு (சோதிடர்களுக்கு) வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால், வானியல் அறிவுப்படி சோதிடத்தைப் படித்தால் அதன் உண்மை விது கொள்ள வேண்டுமென்ற நோக்கமேயாகும்.”
இன்றைய சோதிடத்தை செம்மைப் படுத்தியவர்கள் கிரேக்கர்கள் என்பது சரியே. ஆனால், கிரேக்கர்கள் பாபிலோனியர்களிடம் இருந்தே இராசி சக்கரம், கோள்கள் பற்றிய தரவுகளைக் கடன் வாங்கினார்கள். சோதிடத்தின் தோற்றம் வளர்ச்சி, தேய்வு பற்றிப் பின்னர் எழுதுவேன்.
தமிழன்பன் ராகு கேது கட்டப்பட்ட கதை என்று ஒத்துக் கொண்டுவிட்டு ‘அவைகள் எப்படி புவியில் இருப்பவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு அறிவு பூர்வமான விளக்கம் உள்ளது” என முன்னுக்குப் பின் முரணாக எழுதியுள்ளார்.
சோதிட நூல்களைப் படித்ததில் இராகு கேது கோள்கள் வேத காலத்தில் இருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. பிற்காலத்தில்தான் அவை சேர்க்கப்பட்டன. இராகு, கேது கோள்களுக்கு என்ன மூலகங்கள் என்பது சொல்லப்படவில்லை.
சோதிட சாத்திரத்தின்படி புவியை ஞாயிறு சுற்றிவருகிறது. புவியை திங்கள் சுற்றிவருகிறது. அப்படி சுற்றிவரும்போது ஞாயிறு செல்வதாகத் தோன்றும் சுழற்சி வட்டத்தை (ecliptic) திங்களின் சுழற்சி வட்டம் இரண்டு முறை தெற்கு வடக்காகவும் வடக்குத் தெற்காகவும் வெட்டுகிறது. அதாவது ஒருமுறை வடக்குத் திசையிலும் இன்னொருமுறை தெற்குத் திசையிலும் வெட்டுகிறது. இதனை ஆங்கிலத்தில் முறையே North node/South node) என்று குறிப்பிடுகின்றார்கள்.
எதிர் எதிராக காணப்படும் இந்தச் சந்தியையே இந்திய சோதிடர்கள் பாம்பாக அல்லது வேதாளமாகச் சித்தரித்து தலைப்பகுதிக்கு இராகு என்றும் வாற்;பகுதிக்குக் கேது என்றும் பெயர் வைத்து அதற்குப் பலனும் சொல்கின்றார்கள்!
சிலர் சோதிடம் உண்மையானது ஆனால், அதைச் சரியாகப்படிக்காமல் பலன் சொல்லும் சோதிடர்களால்தான் சோதிடத்துக்குக் கெட்ட பெயர் என்கின்றார்கள். சோதிடம் சரி சோதிடர் பிழை என்றால் அந்தச் சோதிடத்தால் சமூகத்துக்கு என்ன பயன்?
இன்னொரு வாசகர் சீன சோதிடத்தைப் பற்றி எழுத முடியுமா என்று கேட்டு எழுதியிருக்கின்றார். இப்படி ஒவ்வொரு நாட்டுச் சோதிடம் பற்றி எழுதப் போனால் இந்தத் தொடரை முடிக்க முடியாது போய்விடும். இருந்தும் உலகில் ஒன்றுக்கு மேற்பட்ட சோதிடங்கள் இருக்கின்றன, அவை ஒன்றுக்கு ஒன்று மாறுபாடுகின்றன என்ற உண்மையை எடுத்துச் சொல்ல சீன சோதிடம் பற்றிச் சுருக்கமான தரவுகள் கீழே தரப்படுகிறது.
சீன ஜோதிட முறைப்படி, நீங்கள் பிறந்த ஆண்டு உங்கள் அகவையைக் குறிக்காது. அறுபது ஆண்டு நேர சுழற்சியின் ஒரு பகுதியை, அல்லது தரவை மட்டுமே பிறந்த ஆண்டு சொல்லும்.
இந்த ஆண்டு;களைப் பார்க்க மூன்று முறைகள் பின்பற்றப் படுகிறது. பத்து சொர்க்க ஆண்டுகள், 12 பூமி கிளைகள், 12 விலங்குகளாக ஆண்டுகள் பிரிக்கப்படுகிறது.
பனிரெண்டு விலங்கு முறை உருவான பழைய கதை தெரியாது, ஆனால், அதற்கு ஒரு புராதன கதை உண்டு. சொர்க்கத்திலிருந்த மன்னனுக்குப் பொழுது போகவில்லை. பூலோகத்தில் நடப்பவற்றை அவனால் பார்க்கவோ, தெரிந்து கொள்ளவோ முடியவில்லை. அதனால் புவியில் உலவும் விலங்குகளைப் பார்க்க ஆசைப்பட்டான். சிறந்த பனிரெண்டு விலங்குகளை வரைவுகளாகத் (model) தேர்ந்தெடுத்து அவைகளைச் சொர்க்கத்திற்குக் கொண்டு வரச் சொன்னான்.
மன்னனின் ஆலோசகர் முதலில் எலிக்கு அழைப்பு விடுத்தார். கூடவே பூனையையும் அழைத்து வரச் சொன்னார். ‘பூனைக்குச் சொர்க்கமா என்று பொறாமை கொண்ட எலி, பூனையை அழைக்கவில்லை. பிறகு எருது, புலி, முயல், புராதன மிருகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல் நாய் எல்லாம் மன்னர் மாளிகைக்குக் கொண்டு வரப்பட்டன.
விலங்குகளை மன்னன் முன்பு நிறுத்தினார்கள். பதினோரு மிருகங்கள் மட்டுமே இருந்தன. மன்னன் பனிரெண்டாவது விலங்கைக் கொண்டு வரச் சொன்னான். அவசரமாக ஓடிய சேவகன், பன்றியைச் சுமந்து செல்லும் மனிதனைக் கண்டான் பன்றியைக் கொண்டு வந்து மன்னன் முன் நிறுத்தினான்.
மிருகங்கள் சீராக நிற்காமல் தாறுமாறாக மன்னன் முன் நின்றன. எலி, எருதின் முதுகில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்தது. எலியின் இசைப் புலமையை மெச்சிய மன்னன் முதலிடத்தை எலிக்குக் கொடுத்தான். எருதின் விளையாட்டுத் திறமைக்காக இரண்டாம் இடத்தைக் கொடுத்தான். வீரமான புலிக்கு மூன்றாவது இடம், முயலுக்கு நான்காவது இடம், புராதன விலங்குக்கு அய்ந்து, பாம்பிற்கு ஆறு, குதிரைக்கு ஏழு, ஆடு எட்டு, குரங்கு ஒன்பது, சேவல் பத்து, நாய் பதினொன்று மன்னனின் தயாள குணத்தினால் பன்றிக்கு பனிரெண்டாவது இடம் கிடைத்தது. இவையே பன்னிரண்டு இராசிகளாகும்.
இந்த விழா முடிந்ததும், பூனை ஓடி வந்தது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டான் மன்னன்.
இரும்பு, நீர், மரம், நெருப்பு, பூமி ஆகிய அய்ந்து குணாதிசயங்களும் ஒவ்வொரு மிருகத்திற்கும் பொருத்தப்பட்டது பன்னிரெண்டும் அய்ந்தையும் பெருக்கி அறுபது வருட சுழற்சிக்கு பொருத்தினார்கள். சோதிடத்தில் இராசிச் சக்கரம் இருக்கிறது. ஓவ்வொரு இராசிக்கும், ஆண்டுக்கும் அந்த இராசிக்குரிய விலங்கின் குணாம்சங்களே மாடேற்றப்பட்டுள்ளது. சீன சோதிடம் ஒரு கட்டுக் கதை என்பதற்கு இந்தக் கதை நல்ல சான்றாக அமைந்துள்ளது.
இதோ ஒரு செய்தி. சோதிடத்தை நம்புவதினால் பொது மக்கள் பாதிக்கப் படுகின்றார்கள் என்பது மட்டுமல்ல சோதிடர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.
சேலத்தை அடுத்துள்ள சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 34). இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். தனக்குத்தானே தனது சாதகத்தின் பலன்களை பார்த்தார். தனக்கு மரணயோகம் நெருங்கிவிட்டது என்றும், நேரம் சரியில்லை என்றும் சாதகத்தில்; இருப்பதாக சக நண்பர்களிடம் ஜெயவேல் புலம்பியுள்ளார்.
இந் நிலையில் வீட்டில் யாருமில்லா நேரத்தில் நஞ்சு குடித்தார். வாயில் நுரை தள்ளி மயங்கிக் கிடந்த அவரை அப்பகுதி மக்கள் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வைத்தியம் பலனின்றிச் சோதிடர் ஜெயவேல் இறந்து போனார். (தினமலர் -யூலை 11, 2003)
சோதிடப் புரட்டு (24)
“அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை” என்பது ஈசனுடைய விதி!
சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே, தோத்திரச் சண்டையிலே
ஆதியிலே, அபிமானித்(து) அலைகின்ற உலகீர்!
அலைந்து அலைந்து வீணே நீ அழிதல் அழகல்ல…
என சாதி, மதம், சமயம், சாத்திரம், கோத்திரம், தோத்திரம் போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி அலைந்து அலைந்து வீணே தமிழர்கள் அழிவதைக் கண்டு வடலூர் வள்ளலார் கழிவிரக்கப்படுகின்றார். அவரது அறிவுரை இன்றுவரை யார் காதிலும் ஏறியதாகத் தெரியவில்லை.
கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக…….
நால் வருணம் ஆச்சிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச் சரிதமெல்லாம் பிள்ளைவிளையாட்டே..
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்..
வேதநெறி ஆகமத்தின் நெறிபுராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே…..
வள்ளலார் வேத, ஆகம, இதிகாச, புராணங்களை முற்று முழுதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதில் அடங்கியுள்ள சூதுகளைக் கண்டறிய வேண்டும் என்றும் கேட்கின்றார். ஆனால், அவரது அறிவுரைகள் காற்றோடு காற்றாய் கரைந்து போய்விட்டன.
மற்ற இனத்தவர்கள் விழுந்தால் எழும்பி விடுகின்றார்கள். இரண்டாவது மகாயுத்தத்தில் பாரிய உயிர் இழப்புக்களையும் உடமை இழப்புக்களையும் சந்தித்த ஜெர்மனியரும் யப்பானியரும் மீண்டும் எழுச்சி பெற்று இமயம் போல் உலக அரங்கில் எழுந்து நிற்கின்றார்கள்! உலகின் பணக்கார நாடுகளில் ஜெர்மனியும் யப்பானும் முன்வரிசையில் நிற்கின்றன! தொழில்துறையில், தொழில்நுட்பத்தில், பொருள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கின்றன.
ஆனால், தமிழர்கள் விழுந்தால் எழும்பவே மாட்டார்கள். அப்படித் தப்பித் தவறி எழும்பினாலும் மீண்டும் அதே இடத்தில் விழுந்து விடுகின்றார்கள்! தமிழ்ச் சாதியின் நாடியை நன்கு பிடித்துப் பார்த்தவர் பாரதியார். தமிழ்ச் சாதியைப் பீடித்திருந்த நோயை நுட்பமாகக் கண்டறிந்தவர். நோய்க்கு மருந்து சொன்னவர். தமிழ்ச் சாதியில் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளைப் பார்த்துக் கடும் கோபப்பட்டவர்.
“நாள் தோறும் சிலர் இறந்து போகின்றார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் “விதிவசம்” என்கின்றார்கள். ஆமடா விதிவசந்தான். அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை” என்பது ஈசனுடைய விதி. தமிழ் நாட்டிலே சாத்திரங்களில்லை, உண்மையான சாத்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வாழ்கின்றார்கள்.” (பாரதியார் பாடல்கள் – பக்கம் 433)
மேற்கு நாடுகளில் சோதிடமும் மதமும் கலப்பதில்லை. ஆனால், இந்தியாவில் சோதிடமும் மதமும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. சோதிடர்கள் தோசம் இருக்கிறதாகச் சொல்லிக் கோயில்களில் சாந்தி செய்யுமாறு தோசகாரர்களை அங்கு அனுப்பி வைக்கின்றார்கள். சோதிடர்கள் அனுப்பத் தவறியவர்களை கோயில்காரர்களே வானொலி, நாளிதழ்கள் வாயிலாக வெருட்டி அழைக்கின்றனர். கிரக தோசத்தால் இரண்டு பேர் காட்டிலும் மழை!
மற்ற எந்த இனத்தவரையும்விட தமிழர்கள் சோதிட சாத்திரத்தின் மேல் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.
திருமணம் மட்டுமல்ல மற்ற எந்த நல்ல நிகழ்வென்றாலும் பஞ்சாங்கம் பார்க்காமல் எதையும் செய்யும் துணிவு அவர்களிடம் இல்லை. கடை திறப்பு விழாவா? வீடு குடிபூரலா? பிள்ளைக்குச் சோறு ஊட்டலா? காது குத்தலா? நீத்தார் நினைவா? எதற்கு எடுத்தாலும் இராகு காலம், அட்டமி நவமி, யமகண்டம், மரணயோகம் என நாளும் கோளும் பார்க்காமல் பெரும்பான்மையான தமிழர்கள் அடுத்த அடி எடுத்து வைப்பதில்லை.
பல்லி சொன்னால் போதும் எழுந்திருந்தவர் உட்கார்ந்து விடுவார். பூனை குறுக்கே போனால் சொல்லவே வேண்டாம். சகுனப் பிழை என்று சொல்லி வேலை நிமித்தமாக வெளியே போக இருந்தவர் பேசாமல் வீட்டில் இருந்து விடுவார்.
காலங்காலமாக சோதிடத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வளர்ந்து வருகிறதே ஒழிய குறைந்த பாட்டைக் காணோம்.
வணிக நோக்கோடு நடத்தப்படும் செய்தி ஏடுகள், கிழமை ஏடுகள் பாமர மக்களின் சோதிட மோகத்திற்கு நெய்யூற்றி அதனை மேலும் வளர்த்து வருகின்றன.
சோதிடம், இராசி பலன், சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி, திருமணப் பொருத்தம், தோச சாந்தி, கேள்வி பதில் போன்றவற்றைத் தாங்கி வராத ஏடுகளே இன்று இல்லையென்று சொல்லிவிடலாம்.
இராசிகளும் கோள்களும் கனடாவில் வெளிவரும் ஏடுகளில் ‘இந்தவார இராசி பலன்” குறைந்தது இரண்டு பக்கங்களையாவது நிரப்பி விடுகிறது. அப்படி இடம் ஒதுக்காத ஏடுகளைப் பார்ப்பது மிக அரிது. முழக்கம், உலகத் தமிழர் போன்ற ஏடுகள் மட்டுமே இந்த முறைமைக்கு விலக்கு! இராசிகளும் கிரகங்களும்
இணைய வலையம் வந்த பின்னர் சோதிடர்கள் வான வெளியிலும் கடை விரித்து விட்டார்கள். ஆயிரக்கணக்கான முழுநேர சோதிடர்கள் கவர்ச்சிகரமான முறையில் சாதகம் கணிப்பது, பலன் சொல்வது, பொருத்தம் பார்ப்பது, நினைத்த காரியம் சொல்வது, உடல்நலம், வேலை, வாணிகம், பணம், பயணம் பற்றிய ஆலோசனை, தோசங்களுக்குப் பரிகாரம், அதிட்டத்துக்கு தாயத்து, நவரத்தினக் கற்கள், மோதிரம், காப்பு, உருத்திராட்சம், துளசிமாலை, யந்திரம் போன்றவற்றை விற்பனை செய்கின்றார்கள்.
அதோடு மந்திரம், தந்திரம், விரதம், செபம், தவம், சாந்தி, அருச்சனை, அபிசேகம், எள்ளெண்ணெய் சட்டி எரித்தல் போன்றவற்றைச் செய்யுமாறு சொல்கின்றார்கள். Clairvoyance
சோதிடத்தோடு தொடர்புடைய எண்சாத்திரம், நாடி சாத்திரம், வுயசழவ வாசிப்பு, அருள்வாக்கு (Clairvoyance) போன்ற மூட நம்பிக்கைகளை மூலதனமாக வைத்துக்கொண்டு வாணிகம் செய்யும் பேர்வழிகளுக்கும் குறைவில்லை.
நான் வேண்டும் என்றே ஒரு அருள்வாக்குச் சொல்லும் ஒருவரோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு எனது எதிர்காலம்பற்றிச் சொல்லுமாறு கேட்டேன். அவர் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. அடுத்த விநாடி அவரிடம் இருந்து பதில் வந்தது.
‘வேலுப்பிள்ளை (எனது முதல் பெயர்) நீங்கள் நம்ப மாட்டீர்கள்! உங்களைப்பற்றி இரவு கனவு கண்டேன். விடிய உங்கள் மின்னஞ்சல் வருகிறது. உங்களுக்கு இன்று முதல் நல்ல காலம் பிறந்திருக்கிறது. உங்களது அதிட்ட எண் 1, 3, 13. எதற்கும் விபரமான பலன் சொல்வதற்கு 50 டொலர்கள் அனுப்பி வையுங்கள்…….” நான் பதில் அனுப்பவில்லை. ஆனால், அவர் என்னை விட்டபாடில்லை. துரத்தத் தொடங்கிவிட்டார். தேவதை வீட்டுக் கதவைத் தட்டுவதைத் தனது அகக் கண்ணால் பார்க்க முடிகிறது என்றும் நான் அதனை புறக்கணிப்பு செய்வதாகவும் சொன்னார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து வெட்டிக் கொள்ளுவது பெரிய பாடாகிவிட்டது.
சாதகம் கணித்தல், பலன் சொல்லுதல், நாடி பார்த்தல் போன்றவற்றுக்கு 50 முதல் 250 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக அறவிடுகின்றார்கள். தொழில், நிதி, உடல்நலம் பற்றிய கேள்வி ஒவ்வொன்றுக்கும் 10 இல் இருந்து 50 டொலர் அறவிடுகின்றார்கள். ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு சிங்கள சோதிடர் சாதகம் பார்த்துப் பலன் சொல்ல ரூபா.4,750 கேட்கின்றார்.
வட அமெரிக்காவில் சோதிடம் பலகோடி டொலர்கள் புரளும் வணிகமாக விளங்குகிறது. பத்தாயிரத்துக்கும் அதிகமான முழு நேர சோதிடர்கள் இருக்கின்றார்கள். ஒரு ஆண்டில் 2..2 கோடி சோதிடப் புத்தகங்கள் விற்பனையாகிறது. 1997 இல் டுகைந சஞ்சிகை நடத்திய கருத்துக் கணிப்பின்படி அமெரிக்கர்களில் 47 விழுக்காட்டினர் சோதிடத்தை நம்புகின்றார்களாம்.
அறிவியல் கண்டு பிடிப்பான கணினியின் வருகை சோதிடர்களின் மூளை உழைப்பைக் குறைத்து அவர்களது வருவாயைப் பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. சாதகம் கணிப்பது, பலன் சொல்வதற்கு ஏராளமான மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
படியாதவர்கள் மட்டுமல்ல படித்தவர்கள், அறிவாளிகள், திறமைசாலிகள் அனைவருமே சோதிடத்துக்கு அடிமையாகி இருக்கின்றார்கள். சோதிடத்துக்கு அறிவை மயக்கும் ஆற்றல் (சக்தி) இருப்பதற்குக் காரணம் காலம் காலமாக தமிழர்களது மூளை சலவை செய்யப்பட்டு அதற்குள் அவர்களை அறியாமலேயே மூடநம்பிக்கைகளையும் மதசாத்திரங்களையும் மதகுருமார் திணித்து விட்டார்கள்.
யாருடைய வாழ்க்கையில்தான் துன்பம் இல்லை? தொல்லை இல்லை? கவலை இல்லை? இழப்பில்லை?
ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இன்பமும் துன்பமும், வளர்ச்சியும் தேய்வும், உயர்வும் தாழ்வும், செல்வமும் வறுமையும், நன்மையும் தின்மையும், ஏற்றமும் இறக்கமும் கலந்தே இருக்கிறது. இதனை நூல்களாலும் நடைமுறை வாழ்க்கையாலும் அறிந்து கொள்ளலாம்.
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்கிதன் இயல்பு உணர்ந்தோரே!
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே. (புறம் 194)
“ஒரு வீட்டில் சாக்காட்டுப் பறையின் ஒலி இன்னொரு வீட்டில் மணத்திற்குக் கொட்டும் மிகக் குளிர்ந்த முழவின் ஓசை ஒரு வீட்டில் காதலரோடு பூ அணிந்த மகளிர்
இன்னொரு வீட்டில் காதலர் பிரிவால் கண்களில் நீர் நிறைந்த மகளிர்
இவ்வாறு அமையுமாறு இவ்வுலககைப் படைத்தவன் பண்பறிந்து ஒழுகும் பணிபிலாளன் கொடிது இவ்வுலகினது இயற்கை ஆதலால் இவ்வுலகினது தன்மையை இனிது அறிந்து வாழக் கற்றுக் கொள்வாயாக!
என்கின்றார் பல்குடுக்கை நன்கணியார் என்ற சங்க காலப் புலவர். நன்கணி இவரது இயற்பெயர். எல்லோர்க்கும் ஒரு தன்மைப்பட அமைக்காது வேறுபட அமைத்தமையின் படைத்தவனை ‘பண்பிலாளன்” என வைகின்றார்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோலஇ ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறநானூறு 192)
ஒருவரது வாழ்க்கையில் குறிப்பிட்ட காலம்; பொருள் சேரும். இன்னொரு நேரம் அது போகும். ஒரு குறிப்பிட்ட காலம் உடல் நலம் இருக்கும். பின்னர் ஒரு காலத்தில் அது கெடக்; கூடும். இவையெலாம் இயற்கை வாய்ப்பட்டன.
எல்லாக் குழந்தைகளும் பிறக்கும் போது பகுத்தறிவோடுதான் பிறக்கின்றன. பின்னர் அவர்கள் பெரியவர்களாக வளரும் போது தாய் தந்தையர் அதன் பிஞ்சு மனதில் சாத்திர சம்பிரதாயங்களை, மூடப் பழக்க வழக்கங்களை, கட்டுக் கதைகளை, சாமி பயத்தைத் திணித்துவிடுகிறார்கள். மனிதர்கள் சோதிடத்தை நம்புவதற்கு அவ்வாறு பரம்பரை பரம்பரையாக அவர்கள் மூளையில் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளே ஏதுவாகும். எல்லா மனிதர்களும் –
1) உளவியல் அடிப்படையில் தங்களைப்பற்றி மற்றவர்கள் புகழ்வதைக் கேட்க மிகவும் ஆசைப்படுகின்றார்கள். குறிப்பாகப் பெண்களுக்கு இந்த ஆசை அதிகம்.
2) தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டி அறிய எல்லோரும் ஆசைப்படுகின்றார்கள். தங்களுக்குப் பிரம்மா அல்லது படைத்தவன் ஏதோ ஒரு பெரிய திட்டம் (grand design) ஒன்;றைத் தயாரித்து வைத்துக் கொண்டு காத்திருப்பதாக நினைக்கின்றார்கள்.
3) ‘அற்புதம்” களை அப்படியே நம்பி விடுகின்றார்கள். அறிவியலை அப்படி நம்புவதில்லை. பிள்ளையார் பால் குடிக்கின்றார், யேசுநாதர் அறையப்பட்ட சிலுவையில் இருந்து இரத்தம் வடிகிறது, சாயி பாபா படத்தில் இருந்து திருநீறு கொட்டுகிறது என்றால் வாயைப் பிளக்கின்றார்கள். முருகன் மாம்பழம் வாங்க மயிலேறி உலகைச் சுற்றி வந்தார் என்ற புராணக் கதையை எளிதில் நம்பிவிடுகின்றார்கள். ஆனால், மனிதன் நிலாவில் கால் பதித்ததை நம்ப மறுக்கின்றார்கள். வானியலாளர்கள் நெடுந்தொலைவில் எமது ஞாயிறு குடும்பத்தை ஒத்த ஞாயிறு குடும்பங்கள் இருப்பதாகவும் அதனைச் சுற்றி புவியைப் போன்ற கோள்கள் வலம் வருகின்றன எனச் சொன்னால் அதை நம்ப மாட்டார்கள்.
4) வானியலாளர்கள் நெடுந்தொலைவில் எமது ஞாயிறு குடும்பத்தை ஒத்த ஞாயிறு குடும்பங்கள் இருப்பதாகவும் அதனைச் சுற்றிப் புவியைப் போன்ற கோள்கள் வலம் வருகின்றன எனச் சொன்னால் அதை எளிதில் நம்ப மாட்டார்கள். செவ்வாய்க் கோளில் விண்கலனை இறக்கி நாசா ஆய்வு செய்கின்றது என்றால் அதைப்பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். அறுபதினாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் புவிக்கு மிக அணித்தாக செவ்வாய்க் கோள் வந்தது தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்பார்கள். ஆனால் செவ்வாய் தோசம் இருக்கின்றது என்று சோதிடர் சாதகத்தைப் பார்த்துச் சொன்னால் போதும். உடனே அதனை கேட்டுக் கேள்வியின்றி நம்பி விடுகிறார்கள்.
5) தாங்கள் நினைத்தது நடப்பதை விரும்புகின்றார்கள். காலையில் கண் விழித்தவுடன் ‘இன்று நாள் நல்லாக இருக்காது, ஏதாவது கெட்டது நடக்கப் போகிறது” என்று நினைத்தால் அப்படியே நினைத்த மாதிரி நடந்து கொள்கின்றார்கள். சென்ற கிழமை சோதிடப் பலனைப் பார்த்துவிட்டு நஞ்சு குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சோதிடர் ஜெயவேலின் சோகக் கதை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தனது சாவின் மூலம் சோதிடத்தை அவர் நூறு விழுக்காடு “மெய்ப்பித்து’ விட்டார்!
6) மற்றவர்கள் சொல்வதை எளிதில் ஒப்புக் கொண்டுவிடுகின்றார்கள். ‘உமக்கு இப்போது நேரம் காலம் சரியில்லை”; என்று மற்றவர்கள் சொன்னால் அது அவர்களுக்குச் சரி போலத் தோன்றும்.
7) தங்களுக்குத் தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வுகளை (coincidences) நினைவில் வைத்துக் கொள்கின்றார்கள். மற்றவற்றை வசதியாக மறந்துவிடுகின்றார்கள். வீட்டில் உள்ள நாய் குரைக்கும் பூனை அழும் கோட்டான் கத்தும். ஆனால், அவை நினைவில் நிற்பதில்லை. வீட்டில் ஒருவர் இறந்த நாளன்று நாய் குரைத்தது, பூனை அழுதது, கோட்டான் கத்தியது மட்டும் நினைவில் நிற்கும். ஏன் குடை கொண்டுவந்த நாள்களில் மழை பெய்தது மறந்து போய்விடும். குடை கொண்டுவராத நாள்களில் மழையில் நனைந்தது நினைவில் இருக்கும்.
8) தங்கள் சிக்கல்கள், தங்கள் வாழ்க்கை நிலைமை தனித்துவமானது என்று நினைக்கின்றார்கள்.
9) மற்றவர்கள் கொடுக்கும் ஆரவாரமான வாக்குறுதிகளை விரும்பி ஏற்றுக் கொள்கின்றார்கள்.
10) சிக்கலான விடயங்களுக்குச் சுலபமான தீர்வை எதிர்பார்க்கிறார்கள். நீரிழிவு நோய்க்கு உடற்பயிற்சி செய்து உணவுக் கட்டுப்பாட்டை அனுட்டிப்பதற்குப் பதில் மருத்துவர் கொடுக்கும் மாத்திரையை விழுங்குவதையே விரும்புவார்கள்.
பின்;வரும் சோதிடப் பலனைப் படித்துப் பாருங்கள். அது உங்களுக்குப் பொருந்தி வருவது போன்ற மயக்கத்தை ஏற்படுத்தும்.
1) உங்கள் மனசு கள்ளமில்லாத வெள்ளை மனசு. அதற்காக யாரையும் நீங்கள் எளிதில் நம்பி விட மாட்டீர்கள்.
2) நண்பர்களோடு சேர்ந்து கும்மாளம் அடிப்பீர்கள். அதே நேரம் தனிமையில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கும்.
3) நீங்கள் முற்கோபக்காரர். ஆனால், அடுத்த கணம் ‘பனிக்கட்டி” மாதிரிக் குளிர்ந்து விடுவீர்கள்.
4) உங்களுக்கு எதையும் ஒளித்து வைக்கத் தெரியாது. அதே சமயம் எல்லா இரகசியங்கனையும் உங்களது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
5) உங்கள் கை ஓட்டைக் கை. அதாவது செலவாளி. நீங்கள் எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்தாலும் கையில் நாலு காசு மிஞ்சாது.
6) நீங்கள் புதிதாகத் தொடங்கும் தொழில் ஓகோ என்று நடக்கும். ஆனால், கைவசம் உள்ள தொழில்களில் நட்டம் அடைவீர்கள்.
7) உங்களது நெருங்கிய உறவினர் ஒருவர் அண்மையில் இறந்திருக்க வேண்டுமே?
8) உங்கள் மனைவியோடு சண்டை போடுவீர்கள். ஆனால், பின்னர் சமாதானம் ஆகிவிடுவீர்கள்.
9) பழைய கடனகள் திரும்பி வரும். ஆனால், நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்க வேண்டி இருக்கும்.
10) உங்களுக்கு இனிப்புச் சாப்பாடு பிடிக்கும். பாலைச் சுடச் சுடக் குடிப்பீர்கள்.
11) கடந்த ஆறு மாதங்களாக உங்களது கிரகங்களின் பார்வை சரியில்லை. அட்டமத்தில் சனிபகவான் நின்று உங்களுக்கு மன உளைச்சல், அலைச்சல், பொருள் இழப்பு எல்லாவற்றையும் கொடுத்து விட்டார். அடுத்த மாத நடுப்பகுதியில் நவ நாயகர்களின் தலைவனான சூரியன் உச்சம் பெறுகின்றார். அங்காரகன் (செவ்வாய்) தனது சொந்த வீட்டில் ஆட்சி செய்யப் போகின்றார். வியாழ பகவான் கடக இராசி 5ஆம் பாகையில் பரம உச்சம் பெறுகின்றார். சனியோ நீச்சம் அடைகின்றார். சுப கிரகங்களான சூரியன், குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவற்றின் பார்வை இருப்பதால் இனி நிச்சயம் உங்களுக்கு யோக காலம் பிறக்கப் போகிறது.
இப்படிப் பிடிகொடாமல், ஒன்று பிழைத்தால் மற்றது சரிவருகிறமாதிரி; ஒற்றை இரட்டை பிடித்து, தக்கு வைத்துத்தான் சோதிடர்கள் பலன் கூறுகின்றார்கள்.
இராசி பலன் சோதிடம் இவற்றை நம்ப வேண்டாம் என வலியுறுத்த தவத்திரு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பலம் அடிகளார் ஒரு இலக்கிய விழாவில் கீழ்க் கண்ட கதையைச் சொன்னார்.
அவர் ஒரு பிரபல்யமான பெரிய சோதிடர். அவர் கூறுவது எல்லாம் பலிக்கிறது, அவர் சொல்லியபடி எல்லாச் செயல்கள் நடைபெறுகிறது என்று ஊரே பேசியது.
சோதிடரைச் சந்திக்க எப்போதும் மக்கள் கூட்டம். அன்று “மவுன விரதம்” யாரிடமும் சோதிடர் பேச மாட்டார் என்று சொல்லப்பட்டது.
ஒருவர் குடும்பத்துடன் வருகின்றார், தன்னுடைய மகனுக்கு பத்து நாள்களாக கடுமையான காய்ச்சல் என்கின்றார்.
வேறு ஒருவர் வருகின்றார், அவரும் தன்னுடைய மகனுக்கு பத்து நாள்களாக கடுமையான காய்ச்சல் என்கின்றார்.
சோதிட சாமியார் இருவரிடமும் ஆளுக்கு ஒரு மந்திரித்த ‘கல்” லைக் கொடுத்து அடுத்த வாரம் வந்து பார்க்கச் சொல்கின்றார்.
ஒரு வாரம் கழித்து ஒருவர் வருகின்றார் ‘சாமி, என் மகன் பிழைத்துக் கொண்டான். இப்போ நல்லா இருக்கான் சாமி, உங்க புண்ணியத்தில்” என்கின்றார்.
உடனே சோதிட சாமி கூறினார் ‘அவன் உயிர் கல்லைப் போல் உறுதியானது, கல் போல் ஆயுள் கெட்டி, அதை வெளிக்காட்டவே நான் ‘கல்”லை உன்னிடம் கொடுத்தேன்” என்கின்றார்.
அடுத்தவர் வருகின்றார் “சாமி! என் மகன் இறந்துவிட்டான்” என்கின்றார்.
உடனே சோதிட சாமி “அவன் உன் தலையில் கல்லைப் போடுவான், உயிரோடு இருக்க மாட்டான் என்பதைக் காட்டவே உன்னிடம் கல்லைக் கொடுத்தேன்”; என்கின்றார்.
இந்த ‘கில்லாடி’ சோதிடரைப் போலவே ஜாதகக் குழந்தை கதையில் வரும் சோதிடரும் “என்ன சரி? ஆண் குழந்தை பிறக்கும் என்று சொன்னீர். பெண் குழந்தை அல்லவா பிறந்திருக்கிறது’ என்று அவன் சினத்தில் கத்திய போது “பொறு தம்பி! உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றுதானே சொன்னேன்? இந்தக் குழந்தை உனக்குப் பிறந்திருந்தால் ஆண் குழந்தையாக இருந்திருக்கும். இது உனக்குப் பிறந்த குழந்தை அல்ல! ஊருக்குப் பிறந்த குழந்தை!” என்று படு கெட்டித்தனமாகத் தட்டை மாற்றவில்லையா?
ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்களும் இருக்கவே செய்வார்கள் என்பதால் சோதிடர்கள் வீட்டுக்கு ஏமாளிகள் கூட்டம் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது.
——————————————————————————————————————–
சோதிடப் புரட்டு (25)
பண்டைய மனிதனுக்கு கண்டதெல்லாம் கடவுள்கள்!
நாசா நிறுவனத்தினால் வியாழனுக்கு 150 கோடி அமெரிக்க டொலர் செலவில் அனுப்பப்பட்ட விண்கலம் 14 ஆண்டுக்குப் பின்னர் தனது ஆயுளை முடித்துக் கொண்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாசா அறிவியலாளர்கள் அந்த விண்கலத்தை வேண்டுமென்றே வியாழன் மீது மோதச் செய்து சிதறடித்தார்கள்.
அந்த ஆளில்லாத விண்கலம் மணிக்கு 174,000 கிமீ வேகத்தில் வியாழனது காற்று மண்டலத்திற்குள் புகுந்தபோது அது சிதறுண்டு ஆவியாக மாறி உருக்குலைந்து போனது. அந்த விண்கலம் கடைசியாக அனுப்பிய அறிவியல் தரவுகள் புவிக்கு 800 மில்லியன் (80 கோடி) கிமீ தொலைவைக் கடந்து வர எடுத்த நேரம் 52 மணித்துளி ஆகும்.
விண்கலத்தின் பெயரை நான் சொல்லவில்லையே? அதன் பெயர் கலிலே கலிலி (Galileo Galilei – 1564 – 1642) புகழ்பெற்ற இத்தாலி நாட்டு கலிலே கலிலி (Galileo Galilei – 1564-1642) என்ற வானியலாளரது பெயரைத்தான் நாசா அந்த விண்கலத்துக்குச் சூட்டி அவரைப் பெருமைப் படுத்தியுள்ளது.
வியாழனுக்கு இதுவரை 6 விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பயனியர் 10, பயனியர் 11, வோயேஜ்ஜர் 1, வோயேஜ்ஜர் 2, கலிலியோ மற்றும் யூலிசிஸ் (Ulysses) என்பனவே அவை ஆகும். 1989 இல் ஏவப்பட்ட கலிலியோ வியாழனின் காற்றுமண்டலத்தில் உள்ள நீர் மற்றும் வேதிப் பொருட்களை அளவிட அனுப்பப்பட்டதாகும்.
வரலாற்றில் முதன்முறையாக கலிலியோதான் வியாழ கோளை தொலைநோக்கி மூலம் பார்த்தவர். 1610 இல் அவர் வியாழ கோளைச் சுற்றிவரும் 4 நிலாக்களைக் கண்டு பிடித்தார். ஞாயிறில் கறுப்புப் புள்ளிகள் இருக்கிறது என்பதையும், நிலாவில் பள்ளத்தாக்குகள் இருக்கிறது என்பதையும், சந்திரனைப் போலவே வெள்ளிக் கோளிலும் வளர்பிறை தேய்பிறை ஏற்படுகிறது என்பதையும் கண்டு பிடித்தவரும் அவர்தான். கலிலியோ கண்டு பிடித்த நிலாக்களில் ஒன்று அவரது பெயரால் (Callisto) அழைக்கப்படுகிறது.
கலிலியோ வியாழனது நிலாக்கள் அதனைச் சுற்றி வருவதைக் கண்டு பிடித்த பின்னரே புவிமையக் கோட்பாட்டில் அய்யம் ஏற்பட்டு ஞாயிறுமையக் கோட்பாடு பற்றி வானியலாளர்கள் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.
அவருக்குப் பின்னர் மேலும் 12 நிலாக்கள் ஆக மொத்தம் 16 நிலாக்கள் வியாழனை வலம் வருகிறது என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இன்று அதன் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதில் யுரோபா (Europa) என்ற நிலாவே அளவில் பெரியது. அதில் தண்ணீர் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
1989 இல் அட்லான்டிஸ் (Atlandis) என்ற ஏவுகணை மூலம் விண்ணுக்கு ஏவப்பட்ட இந்தக் கலிலியோ விண்கலம் முதன் முறையாக ஒரு குறுங்கோளைச் (Asteroid) சுற்றி நிலா ஒன்று வலம் வருவதைக் கண்டு பிடித்தது. இந்த நுண்கோள்கள் விண்வெளியில் வியாழனுக்கும் செவ்வாய்க்கும் இடையில் காணப்படுபவை ஆகும். மேலும் வியாழ கோளின் 3 நிலாக்களில் உப்புக் கடல்கள் இருப்பதையும் வியாழன் மீது வால்மீன் மோதியதையும் படம் எடுத்து அனுப்பிய விண்கலமும் இதுதான். இந்த விண்கலம் புவிக்கு மொத்தம் 14,000 புகைப்படங்களை அனுப்பி வைத்தது.
1994 ஆம் ஆண்டு யூலை 16-22 இடைப்பட்ட காலத்தில் சூமேக்கர்- லெவி 9 என்ற (Shoemaker – Levy 9) என்ற வால்மீன் வியாழனின் தென் அரைக்கோளத்தில் (Southern Hemisphere) மோதி அதன் மீது கருப்புத் தழும்புகளை உண்டாக்கியது பலருக்கு நினைவு இருக்கலாம்.
கலிலியோ விண்கலத்தை இப்படி அழியச் செய்ததற்குக் காரணம் வியாழனின் நிலாக்களில் ஒன்றான யுரோப்பா (Europa) மீது அது மோதி அதன் மீது புவியின் நுண்ணுயிரிகள் (microbes) எதையாவதை படியச் செய்துவிடுமோ என்ற பயப்பாடுதான். 1999 இல் நிலாவில் மோதச் செய்து அழிக்கப்பட்ட விண்கலத்துக்கு (Lunar Prospector) அடுத்ததாக நாசாவால் திட்டமிட்டு மோதி அழிக்கப்பட்ட விண்கலம் கலிலியோ மட்டுமே.
நாசா இன்னும் ஒரு பத்தாண்டில் மேலும் ஒரு ஆளில்லாத விண்கலத்தை (Jupiter Icy Moons Orbitrer) அனுப்ப இருக்கிறது.
இந்த அறிவியல் செய்தியை எழுதும் போது எந்தத் தமிழ் நாளேடுகளும் அதனை வெளியிடவில்லை. அவற்றைப் பொறுத்தளவில் இது செய்தியே அல்ல. நாகபாம்பு ஒன்று எங்கேயாவது ஒரு கோயிலில் காணப்பட்டதென்றோ அல்லது நல்ல பாம்பொன்று அர்ச்சகரின் குழந்தையின் கழுத்தைச் சுற்றியது என்றோ கேள்விப்பட்டால் போதும்.
அது உண்மையோ பொய்யோ உடனே அது பரபரப்பான செய்தியாகிவிடுகிறது.
அமெரிக்கன் விண்ணில் உள்ள கோள்களை தீவிரமாக ஆராயும்போது தமிழன் எந்த வெட்கமோ துக்கமோ இல்லாமல் அதே கோள்களைப் பக்தியோடு சுற்றிக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறான். தோசம் நீங்க அருச்சனை, அபிசேகம், எள்ளெண்ணெய்ச் சட்டி எரிக்கிறான்.
அமெரிக்கன் கையில் அண்டத்தின் வரைபடம் இருக்கிறது. தமிழன் கையில் பஞ்சாங்கம் இருக்கிறது. அதில் சொல்லப்பட்டுள்ள பல்லி சொற் பலன் (பத்துத் திக்கு), பல்லி சொற் பலன் (பதினாறு திக்கு), பல்லி சொற் பிரிவின் பலன், பல்லி விழும் பலன், இருது ஜனன பலன், கனவின் பலன், காகம் கரையும் பலன், ஆரூடசக்கர பலன், சந்திர இலக்கின கோசர பலன், தாரா பலன், ஸ்ரீராம சக்கரம், விவாகப் பொருத்தம், ஆண்டுப் பலன், இராகு காலம், யம கண்டம், வார சூலம், அக்கினி யோகம், பிரயாணத்துக்கு விலக்கப்பட்ட சகுனம் முதலியவற்றை விழுந்து விழுந்து படிக்கிறான்!
இந்த அழகில் ஒரு தமிழனாவது புகழ் பெற்ற நோபெல் (Nobel) பரிசை அறிவியல்துறையில் சரி அல்லது வேறெந்தத் துறையிலாவது சரி தட்டிக் கொண்டுபோக ஒரு கடுகளவாவது சாத்தியம் இருக்கிறதா? அடுத்த நூற்றாண்டிலாவது அப்படியான சாத்தியம் இருக்கிறதா?
சோதிடம் ஒரு புரட்டு என்பதை அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள வானியல்பற்றிய நடைமுறை அறிவு தேவை. இன்றைய அறிவியல் உலகில் விண்வெளி பற்றிய மலைப்பு மனிதனுக்கு ஏற்படுவது இயற்கை. குறிப்பாக வானியல் பற்றிய தரவுகள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கின்றன.
இந்த அண்டம் (Universe) காலம் (Time) வெளி (Space) என்ற இரண்டிலும் உள்ள ஒளி, பருப்பொருள், ஆற்றல் இவற்றால் ஆனது.
பால் வீதி (Milky Way) என்று அழைக்கப்படும் அண்டத்தில் எமது பால் வெளி மண்டலத்தைப் போல் 10,000 – 20,000 கோடி பால்மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு பால்மண்டலத்திலும் 50,000 கோடி நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. அதில் எமது பால்மண்டலத்தில் (galaxy) காணப்படும் 10,000 – 20,000 கோடி விண்மீன்களில் (stars) எமது ஞாயிறும் ஒன்றாகும்.
எமது ஞாயிறு, பால்மண்டலத்தின் நடுவில் இருந்து 30,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஒரு ஓரத்தில் இருக்கிறது. புவியில் இருந்து ஞாயிறு 93 மில்லியன் (9.3 கோடி) கல் தொலைவில் இருக்கிறது. இருந்தும் அது அடுத்த கிட்டடி விண்மீனோடு ஒப்பிடும்போது 270,000 மடங்கு அணித்தாக உள்ளது.
இந்த அண்டம் 1,500 கோடி (15 பில்லியன்) ஆண்டுகளுக்கு முன்னர் அடர்த்தியான திரவ வடிவில் இருந்தது என நம்பப்படுகிறது. அப்போது நீரியம் மற்றும் கீலியத்தைவிட வேறொன்றும் இருக்கவில்லை. விண்மீன்களோ கோள்களோ இருக்கவில்லை. அண்டத்தின் அகவை பத்துக் கோடி ஆண்டு இருக்கும்போது விண்மீன்கள் நீரியத்தில் இருந்து தோன்றி இருக்கலாம்.
இப்படித்தான் எமது ஞாயிறு விண்மீன் 449 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கலாம். ஞாயிறு தோன்றுவதற்கு முன்னரும் பின்னரும் பல விண் மீன்கள் தோன்றின.
இந்தத் தோற்றம் இன்றும் தொடர்கிறது. ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது நீரியம் நெருக்கம் அடைந்து அதில் இருந்து விண்மீன்கள் தோன்றுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
அண்டத்துக்கு ஒரு மையம், முடிவு அல்லது எல்லை இருப்பதாகத் தெரியவில்லை. அதே நேரம் அது விரிந்து கொண்டு செல்வதாக அறிவியலாளர்கள் சொல்கின்றார்கள்.
நாம் தொலைநோக்கி மூலம் காணும் அண்டம் கடந்த 1,500 கோடி ஆண்டு காலம் ஒளியின் வேகத்தில் வந்து சேர்ந்த பகுதியே ஆகும். ஆதற்கு அப்பாலும் அப்பாலும் அண்டம் விரிந்து கிடக்கலாம்!
பண்டைய மனிதனுக்கு விண்வெளியும் அங்கு காணப்படும் கோடிக்கணக்கான விண்மீன்களும் (stars) கோள்மீன்களும் (planets) பெரிய மலைப்பையும் வியப்பையும் அச்சத்தையும் கொடுத்திருக்க வேண்டும்.
அந்த மலைப்பு, வியப்பு, அச்சம் காரணமாக மனிதன் விண்மீன்களையும் கோள்மீன்களையும் அதிவலு படைத்த தேவதைகளாகவும் தெய்வங்களாகவும் கடவுளர்களாகவும் கற்பனை செய்து அவற்றைப் பய பக்தியோடு வழிபடவும் செய்தான்.
குறிப்பாக சூரிய வழிபாடு எகிப்து, இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக இருந்தது. தமிழ்நாட்டில் சூரியனார் கோயில்கள் இருக்கின்றன.
சூரியன் ஒரு தேவதை, சந்திரன் ஒரு தேவதை, நட்சத்திரம் ஒவ்வொன்றும் தனித்தனித் தேவதை, மலை ஒரு தேவதை, நதி ஒரு தேவதை, சமுத்திரம் ஒரு தேவதை, மழை ஒரு தேவதை, இடிமின்னல் ஒரு தேவதை. இப்படிப் கண்டது, கேட்டது, தொட்டது எல்லாம் தேவதை என்று எல்லாவற்றுக்கும் வெவ்வேறு பெயர் வைத்து அவற்றைத் திருப்தி செய்யப் பூசாரிகளையும் மந்திரவாதிகளையும் மனிதன் நாடினான். மனிதனின் முட்டாள்த்;;தனம் தேவதைகளின் பேரால் பூசாரிகளும் மந்திரவாதிகளும் அவன் மடியில் கையை வைத்துப் பணத்தைக் கொள்ளையடிக்க வசதியாகப் போய்விட்டது.
சோதிடம் ஒவ்வொரு கிரகத்துக்கும் இராசிகளுக்கும் நட்சத்திரங்களுக்கும் அதிதேவதைகள் உண்டு எனச் சொல்கிறது.
கிரகங்களின் அதிதேவதைகள்
சூரியன் – சிவன்
சந்திரன் – பார்வதி
அங்காரகன் – கந்தர்
புதன் – மகாவிஷ்ணு
குரு – பிரமன்
சுக்கிரன் – வள்ளி
சனி – எமன்
ராகு – பத்திரகாளி
கேது – இந்திரன்
இராசி வீடுகளின் அதிதேவதை
மேஷம் – சுப்பிரமணியர்
ரிஷபம் – மீனாட்சி
மிதுனம் – மகாவிஷ்ணு
கடகம் – பாராசக்தி
சிம்மம் – பிரமன்
கன்னி – இலட்சுமி
துலா – சுரஸ்வதி
விருச்சிகம் – அய்யப்பன்
தனுசு – வெங்கடேச பெருமாள்
மகரம் – இராஜராஜேஸ்வரி
கும்பம் – பரமேஸ்வரர்
மீனம் – அன்னவாகன தேவி
இவ்வாறே அசுவினி தொடங்கி இரேவதி ஈறாக உள்ள நட்சத்திரங்களுக்கு முறையே சரஸ்வதி தொடங்கி சனி பகவான் ஈறாக அதிதேவதைகள் என எழுதி வைத்துள்ளது.
ஆனால்,, இந்த அதிதேவதை யார் யார் என்பதில் சோதிடர்கள் வழக்கம் போல் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றார்கள். நான் மேலே தந்தது ஏ.எம். பிள்ளை எழுதிய ஜோதிட அமுதம் என்ற நூலில் காணப்படும் தரவுகளாகும். இன்னொரு சோதிடர் வில்லியம் ஆர். லெவசி தான் எழுதிய ஒரு வேத வானின் கீழ் (Beneath the Vedic Sky by William S.Levacy) என்ற நூலில் பராசரரை மேற்கோள் காட்டிப் பின்வருமாறு அதிதேவதைகளின் பெயர்களை வரிசைப் படுத்துகின்றார்.
சூரியன் – அக்கினி
சந்திரன் – வருணன்
அங்காரகன் – சுப்பிரமணியர்
புதன் – மகாவிஷ்ணு
வியாழன் – இந்திரன்
வெள்ளி – இந்திராணி
சனி – பிரமன்
இராகு – துர்க்கை
கேது – கணேசர்
அங்காரகன், புதன் கோள்கள் இரண்டையும் தவிர ஏனைய அதிதேவதைகள் வேறுபடுவதையும் இடம்மாறி இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். இராசி, விண்மீன்கள் இவற்றைப் பொறுத்தவரையிலும் இதே கதைதான். சோதிடத்தில் காரண காரியங்களின் அடிப்படையில் ஏரண முறையான கருதுகோள்களை எதிர்பார்ப்பது வீண்வேலையாகும்!
உரோம கிரேக்க இதிகாசங்களிலும் கோள்கள் தேவதைகள், தெய்வங்கள், கடவுளர் ஆகச் சித்தரிக்கப்பட்டான.
சூரியன் (Sun)தனை Sol என உரோமர்களும Heilos எனக் கிரேக்கர்களும் அழைத்தார்கள்.
புதன் (Mercury) வணிகத்தின் தேவதையாக உரோம இதிகாசங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிரேக்கர்கள் புதனை Hemes என்று அழைத்தார்கள். கடவுளரின் தூதவன் என்பது அதன் பொருள்.
வெள்ளி (Venus) உரோமர்களின் காதல் மற்றும் அழகின் தெய்வம். கிரேக்க இதிகாசத்தில் வெள்ளியை Aphrodite என்று அழைத்தார்கள்.
செவ்வாய் (Mars) உரோமர்களின் போர்க் கடவுள். கிரேக்கர்கள் அதனை Aries என்று அழைத்தார்கள்.
வியாழன் (Jupiter) உரோம கடவுளரின் அரசன். உரோம அரசின் காவல் தெய்வமும் வியாழன்தான். கிரேக்கர்கள் அதனை சீயஸ் (Zeus) என்று அழைத்தார்கள். சீயஸ் கிரேக்க கடவுளர் மற்றும் ஒலிம்பஸ் மலை (Mount Olympus) ஆளும் கடவுள். இந்திய இதிகாசத்தில் வியாழன் தேவர்களது குரு, மனித குலத்தைக் காக்கும் தெய்வம்.
சனி (Saturn) உரோம இதிகாசத்தில் விவசாயக் கடவுளாக சித்தரிக்கப்டுகிறது. கிரேக்க இதிகாசத்தில் அதனை ஊசழரௌ என அழைத்தார்கள். Saturday என்ற ஆங்கிலச் சொல்ய Saturn என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.
சனி யூரேனேயசின் பிள்ளையாகும். தனது பிள்ளை ஆட்சியில் இருந்து தன்னைக் கவிழ்த்துவிடும் என்ற பயத்தில் சனி யூரேனியசை ஆண்மைக் குறைப்புச் செய்தது. பின்னர் சனி அதனது பிள்ளையான யூபிட்டர் (Jupiter ) ஆல் பதவி கவிழ்க்கப்பட்டார்.
இந்திய இதிகாசம் சனி சூரியனுக்கும் சாயா தேவிக்கும் பிறந்த குழந்தை என்று சித்தரித்து இருந்ததைப் பார்த்தோம்.
நிலா (Moon) லூனா (Luna) என உரோமர்களால் அழைக்கப்பட்டது. கிரேக்கர்கள் அதனை Artemis என அழைத்தார்கள்.
சூரியன் (Sun). இதனை Sol என உரோமர்களும் Helios எனக் கிரேக்கர்களும் அழைத்தார்கள்.
—————————————————————————————————————
சோதிடப் புரட்டு (26)
மழை பெய்விப்பதற்கு பிராணிகளுக்குத் திருமணம்!
பேரன்புடையீர்!
வணக்கம். மழை வேண்டியும், தண்ணீர்ப் பஞ்சம் நீங்கவும், பசிப்பிணி நீங்கவும், நாடு செழிக்கவும், விவசாயம் மற்றும் தொழில் விருத்தியடையவும் நிகழும் சுபானு வருடம் புரட்டாசி மாதம் 15 ஆம் நாள் (2-10-2003) வியாழக்கிழமை வளர் பிறை திதியும் மூல நட்சத்திரமும் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மணமகன் அருள்மிகு மேகவர்ணன், மணமகள் அருள்மிகு கார்முகில்வல்லி இருவருக்கும் திருமணம் பேரூர் நொய்யல் ஆற்று விநாயகர் சன்னதியில் நடைபெறுவதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
பேரூர் பொதுமக்கள்
யார் இந்த அருள்மிகு மேகவர்ணன்? அருள்மிகு கார்முகில்வல்லி? முன்னைய காலத்தில் மாப்பிள்ளை வீட்டார் அல்லது பெண் வீட்டார்தான் திருமணத்துக்கு தனித்தனியாக அழைப்பு அனுப்புவார்கள். ஆனால், இப்போதெல்லாம் இரு வீட்டார் அழைப்பு என்று போட்டு ஒர் அழைப்பிதழைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால், மேலே ஊர் மக்களே ஒன்றுகூடி அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். எனவே இது ஒரு பெரிய இடத்துத் திருமணம் என நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தால் உங்களை யாரும் குறைகூற முடியாது.
உண்மையில் இந்த மேகவர்ணன் – கார்முகில்வல்லி இரண்டும் கழுதைகள்! கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற மூடநம்பிக்கையால்தான் இந்தத் திருமணம்! தினமலர் நாளேடு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த ஏட்டுக்கு இப்படியான பத்தாம்பசலிச் செய்திகளை வெளியிடுவதில் தனி ஆர்வம்!
பேரூரில் ஒரு சோடிக் கழுதைக்குத்தான் திருமணம். ஆனால், சென்னையில் ‘மழை மற்றும் உலக அமைதி வேண்டி பாம்பு, மீன், ஓணான், பன்றி உள்பட 18 வகை ஜீவராசிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்தது” எனத் தினகரன் நாளேடு பெரிய தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
‘சென்னை, செப் 28- உலக அமைதி மற்றும் மழைக்காக சென்னை கே.கே. நகர் மல்டி வினாயகர் கோவில் வளாகத்தில் இன்று காலை 18 வகை ஜீவராசிகளுக்குத் திருமணம் நடந்தது. குதிரை, கழுதை, நாய், வாத்து, கோழி, வான்கோழி, மாடு, முயல், எலி, குரங்கு, பன்றி, மீன், நண்டு, கிளி, காகம், உடும்பு, பாம்பு, ஓணான் போன்றவற்றுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அவற்றுக்கு ஓதுவார் வாசுதேவன் மந்திரம் ஓதித் தாலி கட்டினார்.
முன்னதாக அதிகாலையில் வாஸ்து ஓமம், கணபதி ஓமம், கண்டி ஓமம், கோமாதா பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை போன்றவை நடந்தது. இந்திய தேசியக் கொடி உட்பட 5 நாட்டுக் கொடிகளுக்கும் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. உலக சமாதானம் வேண்டி 10 புறாக்கள் பறக்க விடப்பட்டன.”
இந்தச் செய்திகளைப் படித்தபோது நாங்கள் வாழ்வது மனிதன் சிக்கிமுக்கி கல்லைப் பயன்படுத்திய கற்காலமா அல்லது மனிதன் விண்வெளிப் பயணம் செய்யும் 21ஆம் நூற்றாண்டா? என்ற அய்யம் நியாயமாகவே எழுகிறது.
இந்த நூற்றாண்டில் எந்த மடையர்களாவது மழை பெய்வதற்கு இப்படிக் குதிரை, கழுதை, நாய், வாத்து, கோழி, வான்கோழி, மாடு, முயல், எலி, குரங்கு, பன்றி, மீன், நண்டு, கிளி, காகம், உடும்பு, பாம்பு, ஓணான் போன்றவற்றுக்கு மந்திரம் சொல்லி திருமணம் செய்து வைப்பார்களா?
எலி, மீன், நண்டு, காகம், உடும்பு, பாம்பு, ஓணான் ஆகியவற்றுக்கு எப்படித் திருமணம் செய்து வைப்பது?
மழை பெய்வதற்கும் பிராணிகள் கல்யாணத்திற்கும் ஓம குண்டங்களுக்கும் ஏதாவது தொடர்புண்டா? இந்தப் பிராணிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் மழை பெய்விக்க முடியுமானால் பருவ மழை பொய்த்து விட்டதால் காவிரியில் தண்ணீர் வராததாலும் தொடர்ச்சியாக 3 ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கருகிய பயிரைக் கண்டு கமக்காரர்கள் மனம் உடைந்த தற்கொலை செய்திருக்கின்றார்கள்.
‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி ‘ எனப் பட்டினப் பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் உச்சிமீது வைத்து மெச்சிப் பாடிய காவிரி பொய்த்துப் போனதால் பஞ்சம் அங்கு தலைவிரித்தாடுகிறது.
மக்கள் பசி தாங்க முடியாது எலிகளைப் பிடித்துக் கறியாக்கி உண்டு உயிர் வாழ்கின்றார்கள்.
இந்தத் திருமணத்தை, ஓமங்களை இந்த ஓதுவார் கூட்டம் தஞ்சையில் நடத்தி ஏன் மழையைப் பெய்விக்கவில்லை?
உண்மை என்னவென்றால் சென்னையிலேயே மழை பெய்யவில்லை! அப்படிப் பெய்தாலும் அதற்கும் இந்தத் திருமணத்துக்கும் ஓமத்துக்கும் தொடர்பு அறவே கிடையாது.
வேதனை என்னவென்றால் இந்தத் திருமணவிழாவிற்குத் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் காளிமுத்து தலைமை தாங்கியிருக்கின்றார். அவரது மனைவி மனோகரி, வாஸ்து சாஸ்திர நிபுணர் ர்.கே.பகவதி ராஜ், மனைவி ராதா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள். திருவாடுதுறை முத்துக்குமார தம்பிரான் சுவாமி, கருணாகரன் சுவாமி, வலம்புரி யோன், கவிஞர் பிறைசூடியான் வாழ்த்திப் பேசினார்கள். பட அதிபர் பி.டி. செல்வகுமார் நன்றி கூறினார்.
இதில் ஆர்.கே. பகவதிராஜ் மற்றும் வலம்புரி யோன் இவர்கள்பற்றி இந்தக் கட்டுரைத் தொடரின் தொடக்கத்திலேயே (புரட்டு 2, 3) எழுதியுள்ளேன்.
‘ஒரு மனிதனின் நன்மை தீமையை அவர் குடியிருக்கும் வீட்டின் வாஸ்து அமைப்பு நிர்ணயிக்கிறது என்பது விஞ்ஞான பூர்வ உண்மையாகும். குழந்தைச் செல்வம் இல்லாமல்போவது, மனநிலை பாதித்த ஆணோ, பெண்ணோ இருப்பது, தீராத நோய் பீடித்திருப்பது, திருமணத் தடைகள் உருவாகுவது, படிப்பு மந்த நிலை என்று இன்னும் பல்வேறு தீமைகள் வாஸ்து குறைபாடுள்ள வீட்டினால் ஏற்படும். அதற்கு அந்த வீட்டின் குறைகளைச் சரிசெய்வது மிக முக்கியம். வாஸ்து குறையுள்ள இடங்களில்
அமர்ந்து செய்யும் தொழில்களும் நட்டத்தில் தான் முடியும்” என்று சொன்ன புத்திசாலி இதே பகவதி ராஜ்தான்.
வாஸ்து சாத்திரம் பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் இவர்களது வீட்டுக்கு வெவ்வேறு திசையில் வாசல் இருக்க வேண்டும் என்று குலத்துக்கு ஒரு நீதி சொல்கிறது!
தமிழ்நாட்டில் எதற்குப் பஞ்சம் இருந்தாலும் இப்படியான மூடத்தனத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் பஞ்சமே இல்லை.
முடைநாற்றம் வீசுகின்ற மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவே ஊர்தோறும் உலா வருகின்றார். அவர் போகாத கோயில் இல்லை, கும்பிடாத தெய்வம் இல்லை, கொடுக்காத காணிக்கை இல்லை, குடியிருக்கும் வீடே யாகசாலையாக மாற்றப்பட்டு விட்டது.
யாகம் ஏன் செய்யப்படுகிறது? அக்கினி, வாயு, வருணன், இந்திரன் போன்ற தேவர்கள் மந்திர முழக்கங்களாலும், நெய்யின் நறுமணத்தாலும் கவரப்பட்டு, பூமியில் யாகம் நடக்கும் இடங்களுக்கு இறங்கி வந்து, யாகசாலைகளின் அழகையும் ஆடம்பரங்களையும் கண்டு இரசித்து, தீயில் பொசுங்கிய பட்டாடைகளை அணிந்து, பலவித உணவுப் பொருட்களையும் மாமிசத்தையும் உண்டு, வெறிக்கும் சோம பானத்தைப் பருகி, வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு, தாம்பூலம் தரித்து, மனம் மிக மகிழ்ச்சியடைந்து, யாகம் செய்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் வேண்டிய எல்லா வரங்களையும் கொடுத்துவிட்டு தேவலோகம் திரும்பிப் போய்விடுவார்களாம்! போகும் போது இந்திரன் மிஞ்சிய பட்டாடைகளை தனது மனைவி இந்திராணியை மகிழ்விப்பதற்கு எடுத்துச் செல்வானாம்!
துணிமணி, இறைச்சி, கள் ஆகியவற்றுக்கு ஏங்கும் இந்த அற்பத் தேவர்கள் மனிதர்களுக்கு அப்படி என்ன பெரிதாக வரம் கொடுத்துவிட முடியும்?
ஆனால், தமிழன் இந்தக் காட்டுமிராண்டி கால ஓமங்கள், யாகங்கள் இவற்றில் இன்னும் நம்பிக்கை வைத்துத் தனது பொருளையும் நேரத்தையும் மானத்தையும் அறிவையும் இழந்து வருகிறான்!
நாள், நட்சத்திரம், பஞ்சாங்கம் பாராது முதலமைச்சர் ஜெயலலிதா எந்த அலுவல்களையும் செய்வதில்லை. அவரது இராசி எண் 9 என்பதால் எல்லாவற்றையும் 9 இல் வைத்துக் கொள்கின்றார். பாதுகாப்புக்கு நிறுத்தப்படும் காவலரின் எண்ணிக்கை ஒன்பது, அமைச்சரவையின் கூட்டுத்தொகை ஒன்பது, அவரது இராசி நிறம் பச்சை என்பதால் கட்டுகிற சேலை பச்சை, போடுகிற சட்டை பச்சை, பிடிக்கிற குடை பச்சை, கொடுக்கிற அழைப்பிதழ் பச்சை எல்லாமே பச்சை நிறம்தான். கோட்டைக்குப் போவதென்றாலும் அட்டமி நவமி இராகு காலம் பார்த்துத்தான் போகின்றார்.
இப்போது கோட்டை அவருக்கு இராசி இல்லை என்று யாரோ ஒரு வாஸ்து சாத்திரி சொல்ல, பக்கத்தில் உள்ள இராணி மேரி கல்லூரியை இடித்துத் தள்ளிவிட்டு அங்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தைக் கட்டக் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார்.
‘தேரா மன்னா! செப்புவது உடையேன், உன் நகர் புகுந்து ஈங்கு என் கால் சிலம்பு பகர்தல் நின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி” எனப் பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் வழக்குரைத்த கண்ணகி “மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச் சிலம்பும் கண்ணில் கண்ணீருமாக” சென்னைக் கடற்கரையில் சிலையாக நிற்பது முழிவளத்துக்குக் கூடாதென சோதிடர் சொல்ல அது இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
மேலே கூறியவாறு தமிழ்நாட்டில் எதற்குப் பஞ்சம் இருந்தாலும் இப்படியான மூடத்தனத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் பஞ்சமே இல்லை. நாடாளும் முதலமைச்சரே மூடத்தனத்துக்கு நல்ல முன் எடுத்துக்காட்டாக விளங்கும்போது குடிமக்களைக் கேட்கவா வேண்டும்?
பிராணிகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் வாஸ்து முறையில் வீட்டைக் கட்டிவிட்டால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் தீராத நோய் தீரும் படிப்பு வரும் என்றால் இந்தியாவில் ஏழ்மை, வறுமை, பஞ்சம் நோய் இருப்பது ஏன் என்று அறிவுடையவர்கள் கேட்க மாட்டார்களா? கேட்க வேண்டாமா? இந்தியாவில் 360 மில்லியன் (36 கோடி) மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 35 விழுக்காடாகும். மாதம் ரூபா 2640 வருமானம் உள்ளோரே வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்வதாகக் கணிக்கப்படுகின்றார்கள். மொத்த மக்கள் தொகையில் 52. 6 கோடி குடும்பங்களது (59 விழுக்காடு) சராசரி ஆண்டு வருமானம் ரூபா 12,500 மட்டுமே!
இந்தியாவில் ஆண்டுக்கு 25 மில்லியன் ( 2..5 கோடி) குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 2.7 மில்லியன் பிள்ளைகள் 5 வது அகவை நிறையு முன்னர் இறந்து போகின்றார்கள்.
இந்தியாவில் 4 அகவைக்குக் குறைவான 60 மில்லியன் குழந்தைகள் ஊட்டவலு பற்றாக் குறையால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இந்தியாவில் ஆயிரத்தில் 7 குழந்தைகள், ஆயிரத்தில் 20 அகவை வந்தோர் காச நோயால் பீடிக்கப் பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் ஆண்டுக்கு 600,000 குழந்தைகள் வயிற்றோட்டத்தால் ஏற்படுகிற நீர்வரட்சியால் (dehydration) இறக்கின்றார்கள்.
இந்தியாவில் பீகார், இராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள பெண்களில் நூற்றுக்கு 75 விழுக்காட்டினர் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள்.
இந்தியாவில் எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் தொகை 3.97 மில்லியன் (2001). தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொகை 704,000 (மார்ச் 31, 2000).
எண்ணிறந்த கடவுளரும், ஆயிரக்கணக்கான கோயில்களும் சோதிடர்களும் வாஸ்து சாஸ்திரிகளும் அருச்சகர்களும் பூசாரிகளும் வாழும் புண்ணிய பூமியான இந்திய நாட்டின் அலங்கோலம் இதுதான். இந்த அழகில் கோயில் குளம், தேர், தீர்த்தம், அருச்சனை, அபிசேகம், நோன்பு, காவடி போன்றவற்றில் ஏதாவது பொருள் இருக்கிறதா? சிந்திக்கத் தெரிந்தவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எமது ஞாயிறு குடும்பம் (solar system ) ஞாயிறை வலம் வரும் ஒன்பது கோள்கள், நூற்றுக்கணக்கான நுண்;கோள்கள், வால்மீன்கள் முதலியவற்றை உள்ளடக்கியது.
ஞாயிறில் இருந்து அதிகரிக்கும் தொலைவில் உள்ள கோள்கள் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யூறேனஸ், நெப்தியூன் மற்றும் புளுட்டோ ஆகும். இவற்றில் முதல் 6 கிரகங்கள்பற்றி ஏற்கனவே (அத்தியாயம் 6) ஓரளவு விளக்கமாக எழுதியுள்ளேன்.
யூறேனஸ்தான் தற்காலத்தில் (1781) கண்டு பிடிக்கப்பட்ட முதல் கோளாகும். இதன் நிறம் பச்சை- நீலம் கலந்தது. ஞாயிறில் இருந்து ஏழாவது தொலைவிடத்தில் இந்தக் கோள் இருக்கிறது. இது சனியைப் போல் இன்னொரு மடங்குதொலைவு. இந்தக் கோளைத் தற்செயலாக பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த வில்லியம் கேர்ஷல் (William Herschel) என்பவர் தொலைநோக்கி மூலம் வானத்தைப் பார்த்தபோது கண்டு பிடித்தார். அதற்கு முன்னரும் சிலர் அதனைப் பார்த்திருக்கின்றார்கள், ஆனால், அவர்கள் அதனை ஒருவிண்மீன் (star) எனத் தவறாக எடுத்துக் கொண்டார்கள்.
இந்தக் கோளுக்கு வில்லியம் கேர்சல் தனது நாட்டின் அரசர் யோர்ஜ் நினைவாக வைத்த பெயர் (Georgian Star) அட்லஸ் (Atlas) என்பதாகும். ஆனால், ஏனைய கோள்களது பெயர்கள் அனைத்தும் கிரேக்கம் அல்லது உரோமானிய இதிகாச கடவுளர்களது பெயர்களாக இருந்ததால் இதற்கு யூரேனியஸ் என்ற கிரேக்க ஆகாய இதிகாச கடவுளின் பெயரை Johann E.Bode என்ற ஜெர்மானிய வானியலாளர் மாற்றிச் சூட்டினார்.
ஞாயிறின் சுற்றுப் பாதை
இந்தக் கோள் பெரும்பாலும் நீரியம் மற்றும் கீலியம் இரண்டினாலும் ஆனது. ஆனால், வியாழன் அல்லது சனியைவிட பாரமான மூலங்கள் (elements) கொண்டது. முகில்களால் மூடப்பட்டுள்ளது. 1986 இல் விண்வெளிக்கு ஏவப்பட்ட வொயேஜ்ஜர் 2 (Voyager 2) விண்கலம் மூலந்தான் முதன் முதலாக யூறேனஸ் பற்றிய பல தரவுகளை வானியலாளர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த விண்கலம் யூரேனியசை மூடியுள்ள முகில்களுக்கு மேலே 50,000 மைல் (80,000 கிமீ.) தூரத்தில் பறந்தது.யூறேனுஸ்
விட்டம் – 51,118 கிமீ (31,763 கல்)
திணிவு 14.53
தரை – வாயு மற்றும் திரவகத்தால் ஆனது. இதன் மையப் பகுதியில் புவியின் அளவில் பாறைகள் இருக்கக் கூடும்.
காற்று மண்டலம் – நீரகம், கீலியம், மெதேன் மற்றும் அமோனியா.
வெப்பம் – -328 பாரன்கைட் ( -200 செல்சியஸ்)
தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் – 17 மணி 16 மணித்துளி யுறேனுஸ் ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம் – 30,685 நாள் அல்லது 84 புவி ஆண்டு.
புவியில் இருந்து குறைந்த தொலைவு – 2,570.00 மில்லியன் கிமீ (1,597.00 மில்லியன் கல்)
ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு – 2870.99 மில்லியன் கிமீ (1783.94 கல்)
உங்கள் எடை – புவியில் 200 கிலோ என்றால் யூறேனஸ் 177.8 கிகி
துணைக் கோள் – 5
வளையங்கள் – 11
அடுத்த கிழமை எஞ்சியுள்ள நெப்தியூன் மற்றும் புளுட்டோபற்றி எழுதுவேன்.
———————————————————————————————————————————————————————–
சோதிடப் புரட்டு (27)
விண்ணைப்பற்றிய அச்சமே சோதிடம்!
நக்கீரன்
சென்ற கிழமை பேரூர், சென்னை இரண்டு நகரங்களிலும் மழை வேண்டிப் பிராணிகளுக்குத் ‘திருமணம்” செய்து வைத்த மூடத்தனத்தைப் பற்றி எழுதியிருந்தேன். இந்த நிகழ்ச்சி பற்றி புவனகிரியில் இருந்து அ. குணசேகரன் என்பவர் எழுதிய ‘ஆயிரம் ஈ.வெ.ரா. வந்தாலும் திருத்துவது கடினம்!” என்ற கடிதம் தினமலர் நாளேட்டில் (7-10-2003) வெளிவந்துள்ளது. அதனைக் கீழே தருகிறேன்,
‘மூடநம்பிக்கைகளுக்கு எதிர்ப் பிரசாரம் செய்தவர் ஈ.வெ.ரா. அவர் தொடங்கிய திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்ததே தி.மு.க. இக்கட்சியின் தலைவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பதாகச் சொல்லியும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்லியும் தங்களது கட்சியை வளர்த்தனர்.
இந்நிலையில், உலக நன்மை கருதி 18 வகைப் பட்சி, மிருகசாதி, சீவராசிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லி பல உயிரினங்களை வதைத்துள்ளனர். உலக நன்மைக்காக இத்திருமணம் செய்வதாகச் சொல்லி, உயிரினங்களை வதைத்துள்ளது முற்றிலும் கொடூரமான செயல். இதற்கு முன்னிலை வகித்தவர் சபாநாயகர் காளிமுத்து. இப்படித் திராவிட இயக்கத்தினரே மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ளதை பார்க்கும்போது ஆயிரம் ஈ.வெ.ரா. பிறந்தாலும் நம்மவர்களைத் திருத்த முடியாது போல் தோன்றுகிறது.”
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர்கள் மனதில் குடியிருக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பது என்பது எளிதான செயல் அல்ல. ஒரு தலைமுறையில் அதனை ஒழிக்க முடியாது. பெரியார் தொடக்கி வைத்த பணியை நாம்தான் முடித்து வைக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவே மூடநம்பிக்கைகளை வளர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார். அவரைப் பற்றிய செய்தியெல்லாம் இன்ன கோயிலுக்குப் போனார், இன்ன தோச நீக்கத்துக்கு இன்ன யாகம் செய்தார், இன்ன தானம் செய்தார், இன்ன தெட்சணை கொடுத்தார் என்பவை பற்றியே இருக்கின்றன. அவரது அமைச்சர்கள் அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி தீ மிதிக்கிறார்கள். தீச் சட்டி ஏந்துகிறார்கள், காவடி எடுக்கிறார்கள். நேர்த்தி வைக்கிறார்கள்.
இவ்வாறு நாடாளும் முதலமைச்சரே மூடநம்பிக்கைகளின் உறைவிடமாக இருக்கும் போது அதிகம் படித்திராத சாதாரண பொது மக்களை எவ்வாறு திருத்துவது?
அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதல்லவா எமது கோட்பாடு? மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று நம்பி வந்த இனம் அல்லவா எமது இனம்?
உண்மையில் ஜெயலலிதா அண்ணாவின் பெயரைக் கொண்ட ஒரு கட்சிக்குத் தலைமை தாங்குவது ஒரு மாபெரும் வரலாற்று விபத்தாகும். அதைவிடப் பெரிய விபத்து திராவிடர் கழகத்; தலைவர் கி.வீரமணி அந்த அம்மாவுக்கு அவ்வப்போது கொடுத்து வரும் ஆதரவு!
திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடக்கிய அறிஞர் அண்ணா கடைசிவரை பகுத்தறிவுவாதியாக வாழ்ந்து பகுத்தறிவுவாதியாகவே மறைந்தார். அவரது பெயரைத் தாங்கிய அதிமுகவுக்கு கோயில் கோயிலாக கும்பிட்டு எழும் ஜெயலலிதா தலைமை தாங்குவது அண்ணாவின் பெயருக்கே மாபெரும் இழுக்காகும்.
வீரமணியார் பார்ப்பனியத்தை வாழ்நாள் முழுதும் எதிர்த்த தந்தை பெரியார் தொடக்கிய திராவிடர் கழகத்தின் தலைவராக இருக்கின்றார். தந்தை பெரியார் வழியில் ‘சாதி ஷேமகரமானது’ என்று பிதற்றும் காஞ்சி சங்கராச்சியாரை கண்டிக்கின்றார். ஆனால், “சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம்” என்று இந்து மதத்தின் சாபக்கேடான சாதியையும் சாத்திரத்தையும் எந்தவொரு பகுத்தறிவுவாதிக்கும் குறையாது சாடிய பாரதியார் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்தால் அவரைப் பாராட்ட மறுக்கும் வீரமணியார், அய்யங்கார் ஜெயலலிதா கோயில் கோயிலாக ஏறிப் பூசைகள், தானங்கள், யாகங்கள் செய்வதையிட்டு மட்டும் ஏன் கண்டு கொள்வதில்லை என்பது விளங்கவில்லை.
அண்ணா பேரில் உள்ள கட்சிக்குப் பொதுச் செயலாளராக இருக்கும் ஒருவர் நாட்டில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதில் முன்னணியில் நிற்பதைக் கண்டிக்க வேண்டாமா? கண்டிக்காது விட்டாலும் பருவாயில்லை, ஜெயலலிதாவைத் தேர்தலில் ஆதரிப்பது, பொன்னாடை போர்த்துவது எந்தவகையில் நியாயம்? பாரதிக்கு ஒரு நீதி ஜெயலலிதாவிற்கு இன்னொரு நீதியா? இதைவிட வெட்கக் கேடும் தலைக் குனிவும் தமிழினத்துக்கு வேறு இருக்கவே முடியாது.
நெப்தியூன் என்ற கோள் 1846 ஆம் ஆண்டு முதன் முதலாக Johann Galle என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. நெப்தியூன் என்ற பெயர் உரோமரது கடல்த் தெய்வத்தைக் குறிப்பதாகும். நெப்தியூன் ஞாயிறில் இருந்து புவியை விட 30 மடங்கு தொலைவில் காணப்படுகிறது.
நெப்தியூன் (Neptune)
விட்டம் – 49,528 கிமீ (30,757 கல்)
திணிவு – 17.14
அளவு – புவியைவிட 4 மடங்கு பெரியது.
தரை – தடித்த புயல் மேகங்கள் மூடப்பட்டுள்ள திராவகப் படை.
காற்று மண்டலம் – நீரகம், கீலியம், மெதேன் மற்றும் அமோனியா.
நெப்தியூன்
வெட்பம் – -346 பாரன்கைட் (-210 செல்சியஸ்)
தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் – 16 மணி 7 மணித்துளி
ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம் – 165 ஆண்டு
புவியிலிருந்து குறைந்த தொலைவு – 4,600.00 மில்லியன் கிமீ (2,680.00மில்லியன் கல்
ஞாயிற்றில் இருந்து பொதுமேனி தொலைவு – 4,497.07 மில்லியன் கிமீ (2,794.00 மில்லியன் கல்)
உங்கள் எடை – புவியில் 200 கிலோ என்றால் நெப்தியூனில் 225 கிகி
துணைக் கோள் – 8
வளையங்கள் – 4
புளுட்டோ உரோமானிய மற்றும் கிரேக்க பாதாளக் கடவுளின் பெயராகும். புளுட்டோவை 1930 ஆம் ஆண்டு ஊடலனந வுழஅடியரபா என்பவர் கண்டு பிடித்தார். மிகவும் சிறிய, குளிர்ந்த, வெகு தொலைவில் உள்ள கோள் இதுவாகும். புளுட்டோவின் துணைக் கோள் சாரன் (ஊhயசழn) என்று அழைக்கப்படுகிறது. அதனை 1977 இல் கண்டு பிடித்தார்கள். அதன் விட்டம் 148 – 208 கிமீ (92-129 கற்கள்). அதனால் புளுட்டோவும் சாரனும் இரட்டைக் கோள்கள் என வர்ணிக்கப்படுகின்றன.
செயற்கைக் கோள்களை ஏவி ஆராயப்படாத ஒரே கோள் புளுட்டோதான். இருபது ஆண்டு (1979-1999) புளுட்டோ நெப்தியூனுக்கு உட்புறமாக ஞாயிறை வலம் வந்தது. அப்படி வலம் வரும்போது நெப்தியூன் ஞாயிறு மண்டலத்துக்கு அப்பால் உள்ள கோளாக (ழரவநச pடயநெவ) காட்சி அளிக்கும்.
புளுட்டோ
விட்டம் – 2,300 கிமீ (1,428 கல்)
திணிவு – 0.004
தரை -மெத்தேன், தண்ணீர் கலந்த பாறை புளுட்டோ
காற்று மண்டலம் – மெத்தேன்
அளவு – புவியைவிட அய்ந்தில் ஒரு பங்கு
வெட்பம் – -380 பாரன்கைட் ( -229 செல்சியஸ்)
தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் – 6 நாள், 9 மணி 18 மணித்துளி;
ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம் – 248 ஆண்டு;
உங்கள் எடை – புவியில் 200 கிலோ என்றால் புளுட்டோவில் 13.4 கிகி
புவியில் இருந்து பொதுமேனி தொலைவு – 4340.00 மில்லியன் கிமீ (2700.00 மில்லியன் கல்)
ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு – 5913.52 மில்லியன் கிமீ (3674.00 மில்லியன் கல்)
துணைக் கோள் – 1
வளையங்கள் – ?
ஏனைய கோள்களைப் போலவே யுறேனுஸ் நெப்தியூன், புளுட்டோ இந்த மூன்றிலும் உயிரினம் இருக்க முடியாது என அறிவியலாளர்கள் கருதுகின்றார்கள். இல்லாத இராகு கேது கோள்களைக் கணக்கில் எடுக்கும் இந்திய சோதிடர்கள் இந்த 3 கோள்களையும் கணக்கில் எடுப்பதில்லை. காரணம் சோதிட சாத்திரம் எழுதிய இருடிகளிடம் தொலைநோக்கி இருக்கவில்லை. அவர்களிடம் ஞானக் கண் மட்டும் இருந்தது. அந்த ஞானக் கண்ணால் முக்காலத்தையும் கண்டறிந்தார்கள், முழு அண்டத்தையும் அளந்தார்கள் என்று சொல்லப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகும்..
மேற்குலக சோதிடர்கள் புதிதாகக் கண்டு பிடித்த இந்தக் கோள்களைக் கணக்கில் எடுத்து, அவற்றுக்கு இராசி ஆட்சி வீடுகளை ஒதுக்கிப் பலன் சொல்கின்றார்கள். எப்படிச் சொல்கின்றார்கள் என்பது விளங்கவில்லை. கிபி 1846 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நெப்தியூன் இன்னும் ஞாயிறை முழுமையாக ஒரு சுற்றுச் சுற்றி வரவில்லை. புளுட்டோ கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் 74 ஆண்டுதான் ஞாயிறைச் சுற்றியுள்ளது. அதனை முழுதும் சுற்றி வர இன்னும் 174 ஆண்டு எடுக்கும்! சோதிடம் ஒரு புரட்டு என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
தொடக்க கால வானியல் வரலாறு பற்றி எம்மால் ஊகிக்க மட்டுமே முடியும். விண்ணுலகம் பற்றிய மனிதனது அக்கறை எழுத்துக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. ஆதி காலம் தொட்டே மனிதன் வானுலகை ஒருவித பயபக்தியோடு அண்ணாந்து பார்த்திருக்க வேண்டும். அங்கே கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான உடுக்கள் (நட்சத்திரங்கள்) அவன் மனதில் அச்சம், வியப்பு போன்ற மெய்ப்பாடுகளைத் தோற்றுவித்திருக்க வேண்டும்.
இன்றைய சோதிடம் மத்திய கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த மெசோப்பொட்டமியா (Mesopotamia) பகுதியில் ஆரம்பமானது. மெசோப்பொட்டமியா நாகரிகத்தின் தொட்டில் என வரலாற்று ஆசிரியர்களால் பாராட்டப் பட்டுள்ளது.
மெசோப்பொட்டமியா என்பது ரைகிறிஸ் யுபிரேட்டிஸ் (Tigris and Euphrartes) ஆறுகள் ஓடுகின்ற இன்றைய இராக் நாடாகும். இந்த நிலப்பகுதியைச் சுற்றியே சுமேரியர், அசீரியர், பபிலோனியர், சல்டியர் வாழ்ந்தார்கள். பபிலோனியாவை ஆண்ட அரசர்களில் கமுராபி (கிமு 1795-1750) என்பவர் புகழ் வாய்ந்தவர். இவரே வரலாற்றில் முதன் முதலாக ஒரு நாட்டின் சட்டங்களை முறைப்படி தொகுத்து எழுதியவர் ஆவர்.
கிமு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பபிலோனிய பூசாரிகள் காவல் கோபுரங்களை நிறுவி விண்ணை வரைபடமாக வரைந்தார்கள். கிமு 1800 ஆண்டுக்கு முன்னரே களிமண் வில்லைகளில் (clay tablets) ஞாயிறு, நிலா இவற்றின் ஓட்டங்களை திருத்தமாக எழுதி வைத்தார்கள்.
விண்மீன்கள் கோள்மீன்கள் இவற்றுக்குத் தெய்வீகம் கற்பிக்கப்பட்டதற்கு இந்தப் பூசாரிகளே ஏது ஆவர். அவர்களது கற்பனையே பின்னர் சோதிடமாக உருப்பெற்றது. புவி தட்டை வடிவம், அது அசைவதில்லை, அதுவே அண்டத்தின் நடுவில் இருக்கிறது. புவியைச் சுற்றியே ஒவ்வொரு நாளும் ஞாயிறு காலையில் கிழக்கே குதிரைகள் பூட்டிய தீயினால் ஆன தேரில் கிளம்பி ஆகாய வழியாகச் செலவு செய்து மாலையில் கடலில் வீழ்வதாகப் பபிலோனியர்கள் எண்ணினார்கள்.
எகிப்தியர்கள் ஞாயிறைக் கடவுளாக வழிபட்டார்கள். சால்டியர், பாபிலோனியர் போலவே எகிப்தியர்களும் வானுலகை ஆராய்ந்தார்கள். அவர்கள் கட்டிய பெரிய பிரமிட் (Great Pyramid) ஓறியன் (Orion) விண்மீன் கூட்டத்தின் தோற்றத்தை ஒத்ததாகக் கட்டப்பட்டதாகும்.
கிமு 4 ஆம் நூற்றாண்டளவில் பபிலோனியனரின் சோத்pடம் கிரேக்கர்களுக்கு அறிமுகமானது. கிரேக்கத்தின் புகழ்பெற்ற தத்துவவாதிகளான பிளாட்டோ அவரது மாணாக்கர் அரிஸ்தோட்டல் இவர்களது எழுத்துக்கள் மூலம் சோதிடம் மிகவும் செல்வாக்கான ஒரு தத்துவமாகத் தோற்றம் பெற்றது. பின்னர் உரோமானியர்கள் சோதிடத்தைத் தழுவிக் கொண்டார்கள். இன்றுவரை உரோமர்களது கடவுளர் பெயர்களாலேயே கோள்கள் அழைக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.
சோத்pடம் நிலமிசை வாழ்வோர் மீது விண்ணுல விண்மீன்கள் மற்றும் கோள்கள் செல்வாக்குச் செலுத்துகிறது என்ற பொதுவான ஆனால், தவறான நம்பிக்கையின் அடிப்படையில் தோற்றம் பெற்ற சாத்திரமாகும்.
தொடக்க காலத்தில் வானியலும் சோதிடமும் கைகோர்த்துக் கொண்டு ஒரே பாதையில் நடைபோட்டன. வானியல் என்பது ஒரு தனி இயல் அல்ல. அது கேத்திரகணிதம், வேதியியல், புவியியல், உயிரியல், இயற்பியல் போன்ற கற்கைகளை உள்ளடக்கியது.
வானியல் சோதிடம் இரண்டையும் குறிக்கத் தொடக்கத்தில் ஒரே சொல்தான் பயன் படுத்தப்பட்டது. கிரேக்க மொழியில் Astrology என்றால் நட்சத்திரத்தைப் பற்றிய அறிவு என்று பொருள். கிபி 16 ஆம் நூற்றாண்டில் வானியல் சோதிடத்தில் இருந்து முழுதாகப் பிரிந்து தனி இயலாக உருவெடுத்தது. அந்த இயல் Astronomy என்று அழைக்கப்பட்டது. அந்தச் சொல்லின் பொருள் விண்மீன்களை அளப்பது என்பதாகும்.
வானியலுக்கு அகரமுதலி தரும் வரைவிலக்கணம் ‘புவியின் காற்று மண்டலத்துக்கு வெளியே காணப்படும் பொருள்கள் (objects) பருப்பொருள்கள் (matter) அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் (chemical properties) பற்றிய கற்கை’ என்பதாகும். ஏன் எல்லாவற்றையும் பற்றிய கற்கை என்று கூடக் கூறலாம். காரணம் நாம் பார்க்கும் பொருட்கள் யாவும் அண்டத்தின் கூறுகளே!
பின்னர் இயற்கை அழிவுகளை முன்கூட்டி அறியவும், மன்னர்களது முடிசூட்டு விழாக்களுக்கும் போர் தொடங்குவதற்கும் நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும் பயிர்களை நடுவதற்கும் அவற்றை அறுவடை செய்வதற்கும் உரிய பருவங்களைக் கணிப்பதற்கும் சோதிடம் பயன்படுத்தப்பட்டது. காலப் போக்கில் பொது மக்களுக்கு நல்லது கெட்டது சொல்வதற்கும் சோதிடம் பயன் படுத்தப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.
தொடக்க காலத்தில் இருந்தே நிலா வானியலாளர்களது கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. அது வியப்புக்குரிய விடயம் அல்ல. சந்திரனின் தாக்கத்தினால் கடல் பெருக்கு எடுப்பதை அவர்கள் கவனித்தார்கள். நிலாக் காலம் காதல் உணர்வுகளை கிளர்த்துவதாகவும் நம்பினார்கள்.
விண்ணில் பல ஆயிரம் விண்மீன்கள் காணப்பட்டாலும் அவை ஒரே இடத்தில் இருப்பது போல் காணப்பட்டன. ஆனால், அவற்றில் 5 ‘நட்சத்திரங்கள்’ மட்டும் அலைந்து கொண்டு திருடர்கள் போல் புவியை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருவதைக் கண்டார்கள். அதனால் அந்த அய்ந்து நட்சத்திரங்களுக்கும் கிரேக்கர் அலைபவன் (wanderer) என்ற பொருளில் planet என்ற பெயர் வைத்தார்கள்.
புவியும் ஏனைய கோள்களும் தனித்தனி சமதள சுற்றுப் பாதையிலேயே ( Orbital plane) ஞாயிறைச் சுற்றி வந்தாலும், அவை கிட்டத்தட்ட ஒரே சமதளத்தில்தான் சுற்றுகின்றன. கோள்களின் சமதளப் பாதைகள் ஞாயிறு செல்வதாகத் தோன்றும் பாதைக்கு (Ecliptic) இரு மருங்கிலும் 8 பாகைக்குள்ளேயே இருக்கின்றன. விண்ணில் காணப்படும் இந்தப் பகுதி இராசி வட்டம் (Zodiac) என அழைக்கப்படுகிறது. விண்ணில் கோள்கள் இந்த இராசி வட்டத்தை வலம் வரும் போது இராசி வட்டத்தின் ‘வீடுகளில்’ புகுந்து வெளியேறுவது போலப் புவியில் இருப்பவர்களது கண்ணுக்குப் புலபம்புடுகின்றன. அதே போல் பல்லாயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படும் விண்மீன் (நட்சத்திர) கூட்டங்களும் இராசி வீடுகளில் நிற்பதுபோலக் கண்ணுக்குத் தெரிகின்றன.
————————————————————————————————————————————————————————
சோதிடப் புரட்டு (28)
இராசிகள் வெறும் கற்பனை உருவங்களே!
நக்கீரன்
சீனா நேற்று (ஒக்தோபர் 15, 2003) காலை 9 மணி அறவில் விண்வெளிக்கு ஒரு மனிதனுடன் கூடிய விண்கலத்தை முதன் முறையாக அனுப்பியுள்ளது. சீனாவில் உள்ள கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜியுகுவான் என்ற ஏவுகணைத் தளத்தில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது.
இந்த மகத்தான சாதனை மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய உருசியா, அமெரிக்க நாடுகளது வரிசையில் சீனாவும் சேர்ந்துள்ளது! சீனாவின் விண்வெளி வீரர் புவியை வெற்றிகரமாகச் சுற்றி வருகின்றார்.
உலகிலேயே உருசியாதான் 42 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய நாடாகும். அதைத் தொடர்ந்து மனிதனை விண்வெளியில் செலுத்திய 2 ஆவது நாடு என்ற புகழை அமெரிக்கா ஈட்டியது. இந்த வரிசையில் இப்போது 3 ஆவது நாடாக சீனா சேர்ந்துள்ளது.
சீனாவின் முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை யாங் லீவே(38) பெற்று உள்ளார். இவர் முன்னாள் சண்டை விமான ஓட்டி (Col.Yang Liwei, a former fighter pilot) ஆவார். வரலாற்றுப் புகழ் படைத்த இந்த நிகழ்வை சீன தொலைக்காட்சி வழக்கமாக ஒளிபரப்பும் நிகழ்ச்சியை இடைநிறுத்திவிட்டு ஏவுகணை வெற்றிகரமாக விண் நோக்கிப் பாய்ந்ததை நேரடி ஒளிபரப்புச் செய்தது.
சீன வீரருடன் புவியை விண்ணில் சுற்றும் இந்த விண்கலம் 14 தடவை புவியைச் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 21 மணி நேரம் இந்தச் செலவு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
சீன மக்களின் நீண்டநாள் கனவு இது என வர்ணிக்கப்படுகிறது. சீன ஆட்சித்தலைவர் (Chinese Premier Wen Jiabao) மற்றும் மூத்த தலைவர்கள் ஏவுகணைத் தளத்துக்கு நேரில் சென்று அது விண்ணுக்குப் பாய்வதைக் கண்டு களித்தனர்.
சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி முயற்சியில் இந்த நிகழ்வு ஒரு மைல்கல். விண்வெளியில் சுற்றி வந்த பின்னர் மங்கோலியாவில் விண்கலம் தரை இறங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
சீனாவுக்கு சுமார் ஐயாயிரம் ஆண்டு கால அறிவியல் பாரம்பரியம் உண்டு. சீனர்களே அச்சுயந்திரம், வெடிமருந்து, தாள் நாணயம் இவற்றைக் கண்டு பிடித்தவர்கள். சீனாவை ஆண்ட பேரரசர்கள் வானியல் ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவி விண்ணைத் தொடர்ச்சியாக ஆராய்ந்து வந்திருக்கின்றார்கள்.
தனி மனிதன் சரி, ஒரு நாடு சரி, பொருளாதரத்தில் முன்னேற வேண்டும் என்றால் அறிவியலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று அமெரிக்கா, உருசியா, யப்பான் போன்ற நாடுகள் உலகில் செல்வாக்கோடு கோலோச்சுகின்றன என்றால் அதற்கு அந்த நாடுகள் விண்ணையும் மண்ணையும் அளந்து அறிவியலில் வேகமாக முன்னேறியிருப்பதுவே காரணம் ஆகும். ஆங்கிலத்தில் Knowledge is Power என்ற பொன்மொழி மேற்கு நாடுகளைப் பொறுத்தளவில் முற்றிலும் உண்மை.
தமிழர்கள் ஆண்டு தோறும் கலைமகள் விழாக் கொண்டாடத் தவறுவதில்லை. கலைமகள் படத்துக்கு முன் நூல்களை வைத்து அவல், சுண்டல், கொழுக்கட்டை செய்து படைத்தால் அறிவு தானாக வந்துவிடும் என நினைக்கின்றார்கள். இது பேதமை ஆகும்.
அறிவியலில் ஒரு நாடு முன்னேறினால் மட்டுமே பொருளாதரத்தில் அந்த நாடு முன்னேற முடியும். அவ்வாறு அறிவியல், பொருளாதாரம் இரண்டிலும் முன்னேறும் நாடுகளே வறுமை, ஏழ்மை என்ற இரண்டு ஆமைகளையும் ஒழிக்க முடியும்!
இனி விட்ட இடத்தில் இருந்து தொடருகிறேன். நாளடைவில் சோதிடர்கள் இந்த ஞாயிறு செல்லும் பாதையை 12 இராசி மண்டலங்களாகப் (constellations) பிரித்தார்கள். பிரித்தபின் அந்தப் பாதையின் பின்புலத்தில் காணப்பட்ட நட்சத்திர மண்டலங்களின் பெயர்களை அவற்றுக்குச் சூட்டினார்கள். பபிலோனியர்கள் இராசிகளின் எண்ணிக்கை 13 எனக் கணித்தார்கள். பின்னால் ஒன்று விடுபட்டுப் போய்விட்டது. அப்படி விடுபட்ட அல்லது கணக்கில் சேர்க்கப்படாத இராசி மண்டலத்தின் பெயர் Ophiuchus. இதன் பொருள் பாம்பாட்டி (The Serpent Holder or Snake Charmer) என்பதாகும். (புரட்டு 5)
மேலும் 12 இராசிகளை ஒவ்வொன்றும் 30 பாகை ஆகப் பிரித்ததும் தவறுதான். வானியலின்படி இராசி மண்டலங்களின் உண்மையான எண்ணிக்கை 21. அவற்றில் 13 இராசி மண்டலங்களையும் அவற்றின் அளவையும் ( புரட்டு 6) பார்ப்போம்.
இராசிகளின் காலம், தொலைவு, உருவம்
இராசி |
திகதி |
பாகை |
உருவம் |
மேடம் |
ஏப்ரில் 19 – மே 13 |
25 |
ஆடு |
இடபம் |
மே 14 – யூன் 19 |
37 |
எருது |
மிதுனம் |
யூன் 20 – யூலை 20 |
31 |
ஆண் – பெண் |
கடகம் |
யூலை 21 – ஓகஸ்த் 9 |
20 |
நண்டு |
சிம்மம் |
ஆகஸ்த் 10 – செப்தெம்பர் 15 |
37 |
சிங்கம் |
கன்னி |
செப்தெம்பர் 16 – ஒக்தோபர் 30 |
45 |
பெண் |
துலாம் |
ஒக்தோபர் 31- நொவெம்பர் 22 |
23 |
தராசு |
விருட்சிகம் |
நொவெம்பர் 23 – நொவெம்பர் 29 |
07 |
தேள் |
பாம்பாட்டி |
நொவெம்பர் 30 – டிசெம்பர் 17 |
18 |
பாம்பாட்டி |
தனு |
டிசெம்பர் 18 – சனவரி 18 |
32 |
வில் |
மகரம் |
சனவரி 19- பெப்ரவரி 15 |
28 |
சுறாமீன்/கடல்குதிரை |
கும்பம் |
பெப்ரவரி 16 – மார்ச் 11 |
24 |
குடம் |
மீனம் |
மார்ச் 12 – ஏப்ரில் 18 | 38 |
இரட்டை மீன் |
விருச்சிக இராசியை ஞாயிறு கடக்கும் தொலைவு 7 பாகை மட்டுமே. அதே நேரம் கன்னி இராசியைக் கடக்கும் தொலைவு 45 பாகை! ஆறு மடங்குக்கு மேல்! விடுபட்ட இராசி மண்டலத்தை ஞாயிறு சுடக்கும்தொலைவு 18 பாகை. விருச்சிக இராசியை (7 பாகை) விட 11 பாகை அதிகமானது!
உண்மையில் ஞாயிறு இராசிகளைக் கடப்பதில்லை என்றும் புவிக் கோள் ஞாயிறு என்ற விண்மீனைச் சுற்றி வருவது எங்கள் கண்ணுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவது போன்ற போலித் தோற்றத்தை உண்டாக்குகிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஞாயிறு, கோள்கள், இராசிகளைக் கடந்து செல்கிறது என்று எழுதுவதை புவி, இராசிகளின் பின்புலத்தில் ஞாயிறு விண்மீனைச் சுற்றி வருகிறது என்று பொருள் கொள்ள வேண்டும்!
சோதிடர்கள் பாம்பாட்டி இராசி மண்டலத்தை என்ன செய்தார்கள்? அதனை விருச்சிக இராசியோடு சேர்த்து விட்டார்கள்!
இப்படியான குழப்பங்களுக்குச் சோதிடத்தில் கணக்கே இல்லை! புவி ஞாயிறைச் சுற்ற 365 நாள்கள் எடுக்கிறது. எனவே ஒரு நாளைக்கு ஏறத்தாழ 1 பாகையை ஞாயிறு கடக்கிறது.
எனவே ஞாயிறு 25 பாகை நீளமுள்ள மேட இராசியை 25 நாள்களில் ( ஏப்ரல் 19 – மே 13) கடந்து விடுகிறது. ஆனால், சோதிடருக்கு மேட இராசியை ஞாயிறு கடக்க எடுக்கும் காலம் 30 நாள்கள் அல்லது 30 பாகை நீளம்! இதனால் ஞாயிறு மேடராசியை மே 13 அன்று கடந்து விட்டாலும் சாதகம் கணிக்கும் சோதிடர் மே 18 வரை ஞாயிறு இன்னமும் மேடராசியில் இருப்பதாகவே எடுத்துக் கொள்வார். இவ்வாறு ஏனைய இராசிகளை ஞாயிறு உண்மையாகக் கடக்க எடுக்கும் காலத்துக்கும் சோதிடர்கள் ஞாயிறு கடப்பதாகக் கொள்ளும் காலத்துக்கும் வேறுபாடு ஏற்படுகிறது! ஞாயிறுக்குச் சொன்னது ஏனைய கோள்களுக்கும் பொருந்தும்.
கோள்களின் வேகம் (புவி – மைய கோட்பாடு)
கிரகம் | சுற்றும் காலம் | இராசியில் நிற்கும் காலம் | ஓர்ஆண்டில் அசைவு |
சந்திரன் | 28 நாள்கள் | 2½ நாள்கள் | 13 சுற்றோட்டம் |
ஞாயிறு | 1 மாதம் | 1 மாதம் | 360 பாகை |
புதன் | 1 ஆண்டு | 1 மாதம் | 360 பாகை |
வெள்ளி | 1 ஆண்டு | 1 மாதம் | 360 பாகை |
செவ்வாய் | 2 ஆண்டு | 2 மாதம் | 180 பாகை |
வியாழன் | 12 ஆண்டு | 1 ஆண்டு | 30 பாகை |
சனி | 30 ஆண்டு | 2½ ஆண்டு | 12 பாகை |
யூறேனஸ் | 90 ஆண்டு | 7½ ஆண்டு | 4 பாகை |
நெப்தியூன் | 180 ஆண்டு | 15 ஆண்டு | 2 பாகை |
சோதிட சிகாமணிகள் இவைபற்றிக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. ‘என்னுடைய வாழ்க்கையில் எனது சாதகத்தில் சொன்னபடி, எனது கைரேகை சாத்திரம் சொன்னபடி எல்லாம் அச்சொட்டாக நடக்கிறது’ என்று சொல்லும் ஏமாளிகளும் கோமாளிகளும் நிறைய இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் இருக்கு மட்டும் சோதிடர்கள் எதற்காகக் கவலைப் படவேண்டும்? எதைப்பற்றிக் கவலைப் படவேண்டும்?
சோதிட சாத்திரத்துக்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது என்பதற்கு மேற் கூறப்பட்ட தரவுகள் தகுந்த சான்று பகருகின்றன. சோதிடத்துக்கு உள்ள ஒரே அடிப்படை மக்களது மூளையை மழுங்கடித்து, தன்னம்பிக்கையைத் தகர்த்து அவர்களை மடமையில் ஆழ்த்திப் பணம் கறப்பதுவே!
புவியில் இருந்து வானத்தை அண்ணாந்து பார்த்த பபிலோனியர்களுக்கு இந்த விண்மீன் (நட்சத்திர) கூட்டங்கள் ஒவ்வொன்றும் ஒரு உருவத்தின் சாயலைக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. அந்த உருவத்தையே அந்த விண்மீன் கூட்டத்துக்கு வைத்து அதற்குப் பெயரும் வைத்தார்கள்.
பிற் காலத்தில் மனிதர் புவியைக் கண்டங்களாகப் பிரித்து, கண்டங்களை நாடுகளாகப் பிரித்து, நாடுகளை மாநிலங்களாகப் பிரித்து அவற்றுக்குச் செயற்கையாகப் பெயர் வைத்தது போன்று வானத்தில் தென்படும் விண்மீன்களை பபிலோனியர் விதிக்கட்டின்றிச் (arbitrary) செயற்கையாகப் பிரித்து அவற்றுக்குப் பெயர் சூட்டினார்கள். விண்மீன் கூட்டங்களை (constellations) புவியில் உள்ள நாடுகளுக்கு (அமெரிக்கா, யப்பான், கனடா) ஒப்பிட்டால் ஒரு காலத்தில் இருந்து இப்போது மறைந்துவிட்ட ஒட்டமான் பேரரசு (Ottaman Empire) பாபிலோனியா (Babylonia) போனிசியா (Phoenicia) சோவியத் ஒன்றியம் (Soviet Union) போன்றவற்றோடு இராசிகளை (Zodiac Signs) ஒப்பிடலாம்.
எனவே விண்மீன் கூட்டங்கள் உண்மையென்றாலும் அதற்குக் கற்பிக்கப்பட்ட உருவங்களும் (ஆடு, மாடு, இரட்டையர், சிங்கம் ….) பெயர்களும் (மேட இராசி, இடப இராசி, மிதுன இராசி, சிம்ம இராசி……) செயற்கையானவை. அதாவது விண்மீன் கூட்டங்களுக்கும் இராசிகளுக்கும் (Zodiac Signs) எந்தத் தொடர்பும் இல்லை. இராசி வட்டத்தின் பின்புலத்தில் காணப்படும் விண்மீன்களை ஒன்றோடு ஒன்று தொடுத்துப் பன்னிரண்டு இராசிகள் என உருவமும் பெயரும் குணாம்சங்களும் கற்பித்தது கற்பனை கலந்த பொய். அதில் உண்மையில்லை.
விண்மீன்கள் அருகருகே காணப்பட்டாலும் உண்மையில் அவற்றுக்கு இடையில் முன்னும் பின்னும் இடமும் வலமும் பல நூறு ஒளி ஆண்டு இடைவெளி இருக்கின்றன. அவை ஒரே திசையில் காணப்படுவதால் அருகருகே இருப்பது போன்ற மயக்கம் அல்லது மருட்சி (டைடரளழைn) ஏற்படுகிறது. மேலும் அவை புவியில் இருந்து பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கின்றன. (சோதிடப் புரட்டு 7)
தொலமி என்பவர் 48 விண்மீன் கூட்டத்தை (constellations) அட்டவணைப் படுத்தினார். 1930 இல் கூடிய உலக வானியலாளர்கள் மாநாடு 88 விண்மீன் கூட்டத்தை அட்டவணைப் படுத்தியது. அவற்றின் பெயர்களை இலத்தீன் மொழியில் அழைப்பது என்றும் முடிவானது.
எமது ஞாயிறும் ஒரு விண்மீன் என்பது தெரிந்ததே. அதன் தொலைவு புவியில் இருந்து 149,600.000 மில்லியன் கிமீ (93,000,000 மில்லியன் கல்) என்பதை முன்னரே பார்த்தோம். .புவியைப் போல் அல்லாது அண்டத்தை அளக்க கிமீ அல்லது கல் தோதுப்படாது. எடுத்துக்காட்டாக எங்களது பால் வழி மண்டலத்துக்கு அடுத்த Andromeda Gala பால்மண்டலம் 21,000,000,000,000,000,000 கிமீ (21 quintrillion km) தொலைவில் இருக்கிறது. இதை எண்ணில் எழுதுவது கடினம் ஆகும். எனவே விண்மீன்களின் தொலைவைக் குறிப்பிடுவதற்கு புவிக்கும் ஞாயிறுக்கும் உள்ள தொலைவை ஒரு வானியல் அலகாக (Astronomical Unit – AU) எடுத்துக் கொண்டு குறிப்பிடுகின்றார்கள். இதன்படி புளுட்டோ சுமார் 40 ஏயு தூரத்தில் இருக்கிறது.
தொலைவில் உள்ள விண்மீன்கள்
ஆனால், அண்டவெளியில் உள்ள விண்மீன்கள், பால்மண்டலங்கள் இவற்றின் தூரத்தைக் கணக்கிட்டுச் சொல்வதற்கு இந்த ஏயு அளவுகோல் கூடப் பற்றாது. எனவே அவற்றை ஒளி ஆண்டுக் கணக்கில் அல்லது pயசளநஉ இல் அளவிடுகின்றார்கள். ஒரு parsec 3.26 ஒளி ஆண்டுக்குச் சமமானது.
ஒரு ஒளி ஆண்டென்பது ஒளி ஒரு நொடிக்கு 300,000 கிமீ (186,000 கல்) வேகத்தில் ஒரு ஆண்டு செல்லும் தொலைவு ஆகும். அதாவது 9,500,000,000,000 கிமீ தொலைவு! எமது ஞாயிறு குடும்பத்துக்கு அடுத்து மிக அருகில் உள்ள அல்பா சென்தோரி (Alpha Centauri) என்ற நட்சத்திரம் 4.24 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது!
அல்பா சென்ரோரி Alpha supernova 4,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது! எங்களது பால் வழி மண்டலத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல எடுக்கும் நேரம் 150,000 ஒளி ஆண்டு; ஆகும்! Andromeda Galaxy என்ற பால்மண்டலம் 2.3 மில்லியன் (பத்து மில்லியன் ஒரு கோடி) ஒளி ஆண்டுக்கு அப்பால் உள்ளது!
விண்மீன்கள், கோள்கள் இவற்றின் தொலைவை இங்கு தருவதற்குக் காரணம் அவை அப்பாலுக்கும் அப்பால் இருப்பதையும் அதனால் அவை இந்தப் புவியில் உள்ள மனிதர்கள் மீது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பு எள்முனையளவு கூட இல்லை என்பதை எடுத்துக் காட்டவே ஆகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விண்மீன்கள் இப்பொழுது இருக்கின்றனவா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது! காரணம் பல ஒளி ஆண்டுகளுக்கு முன்னர் புறப்பட்ட ஒளியைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
இந்த மாதம் (ஒக்தோபர், 2003) சூரியன், புதன், வெள்ளி ஆகியன கன்னி (ஏசைபழ) இராசிக்குள் புகுகின்றன. வெள்ளி மற்றும் புதன் இரண்டின் தொலைவு புவியில் இருந்து முறையே 77.30 மில்லியன் கிமீ (48.21 மில்லியன் கல்) 40.00 மில்லியன் கிமீ (24.90 மில்லியன் கல்) ஆகும்.
செவ்வாய் கும்ப (யுஙரயசரைள) இராசிக்குள் புகுகிறது. வியாழன் சிம்ம (leo) இராசிக்கும் சனி மிதுன (Gemini) இராசிக்கும் செல்கிறது. அவற்றின் தொலைவு முறையே 56.00 மில்லியன் கிமீ (35.00 மில்லியன் கல்) 588.50 மில்லியன் கிமீ (367.04 மில்லியன் கல்) ஆகும். அது போலவே இராசி மண்டலங்களின் தொலைவு பின்வருமாறு:
சிம்ம இராசி – 78 ஒளி ஆண்டு
கன்னி இராசி – 263 ஒளி ஆண்டு
மிதுன இராசி – 2,700 ஒளி ஆண்டு
கும்ப இராசி – 37,500 ஒளி ஆண்டு
இராசி வட்டத்தின் இருபக்கமும் காணப்படும் கோள்கள் பல கோடி கிமீ அப்பால் வலம் வருகின்றன. இராசி மண்டலங்களோ பத்து, நூறு, ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு வெகு தொலைவில் காணப்படுகின்ற கோள்களும் இராசி மண்டலங்களும் புவியில் பிறக்கிற குழந்தைகளின் குணாம்சங்களைத் தீர்மானிக்கிறதாகப் பபிலோனியர்கள் நம்பினார்கள். அவர்களுக்கு இந்தக் கோள்கள் மற்றும் இராசிகள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பது பற்றிய அறிவு சிறிதும் இருக்கவில்லை. அதனை அவர்களிடம் எதிர்பார்க்கவும் முடியாது. அவர்களைப் பெருந்தன்மையோடு மன்னித்து விடலாம்.
சோதிடர்கள் வானுலக கோள்கள் மற்றும் விண்மீன் கூட்டங்கள் ஆகியவற்றுக்கும் புவியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் இடையில் முடிச்சுப் போட்டார்கள். எடுத்துக்காட்டாக தொலமி (Ptolemy, AD 85-165) 1,022 நட்சத்திரங்களின் பட்டியலைத் தயாரித்தது மட்டும் அல்லாது வுநவசயடிiடிடழள என்ற சோதிட நூலையும் கிபி 139-161 காலப் பகுதியில் எழுதினார்.
மேற்குலக வெப்பமண்டல சோதிடக் கலைக்குத் தொலமி எழுதிய நூலே இன்றுவரை பால பாடமாக இருந்து வருகிறது. தொலமி மட்டுமல்ல, அவருக்குப் பின்னர் வந்த கலிலியோ, கெப்லர், நிக்கலஸ் கோபெர்னிக்கஸ் (Nicolaus Copernicus) மற்றும்
Tyche Brahe போன்றவர்களும் சோதிடத்தைத் தங்களது கற்கையின் ஒரு கூறாகப் படித்தார்கள்.
ஆனால், எப்போது ஞாயிறு புவியைச் சுற்றிவரவில்லை மாறாக ஞாயிறைச் சுற்றியே புவி சுற்றி வருகிறது என்பது எண்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்து சோதிடம், வானியல் இரண்டுக்கும் இடையில் முறிவு ஏற்பட்டு இரண்டும் தனித் தனிப் பாதைகளில் செல்லத் தொடங்கின.
பின்னர் புதிய கோள்களான யூறேனஸ், நெப்தியூன், புளுட்டோ கண்டு பிடிக்கப்பட்ட போது சோதிடத்தின் நம்பகத்தன்மை கேள்விக் குறிக்கு ஆளானது.
——————————————————————————————————————————————————-
அடுத்து, கிரேக்க தத்துவத்தின் மும்மூர்த்திகளில் ஒருவராக எண்ணப்படும் பிளாட்டோவின் (Plato (கிமு 427-347) பங்களிப்பு முக்கியமானது. சோக்கிறட்டிசின் (Socrates கிமு 469-399) மாணவர். சோக்கிறட்டிஸ் நஞ்சு குடித்து இறந்த பின்னர் இவர் எகிப்து, சிசிலி (Sicily) இத்தாலி போன்ற நாடுகளுக்குச் செலவு மேற்கொண்டார். எகிப்தில் நாழிகை வட்டிலின் (water – clock) செய்முறையைத் தெரிந்து கொண்டு வந்து அதனைக் கிரேக்கத்தில் அறிமுகப்படுத்தினார்.
இத்தாலியில் பைதாகொறாசின் கற்கைகளைப் படித்துக் கணிதத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டார். அறிவியல் வரலாற்றில் இது முக்கியமான திருப்புமுனை ஆகும்.
இதன் விளைவாக பிளாட்டோ ‘அறிவியல் சிந்தனைகளை எல்லாம் கணக்கியல் முறையில் துல்லியமாகவும் உறுதியோடும் சொல்ல வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தார். பிளாட்டோவின் இந்தச் சிந்தனைதான் அன்று தொடக்கம் இன்றுவரை அறிவியல் வளர்ச்சிக்கு அரணாக இருந்து வருகிறது. சோதிடம் அல்லது வானியல் கருதுகோளுக்குப் பைதாகொறாஸ் கால்கோள் இட்டவர் என்று சொன்னால் அதனைக் கட்டி எழுப்பியவர் பிளாட்டோ ஆவார்.
பிளாட்டோ அண்டத்தை விளக்கப் பருப்பொருளை (matter) விட ஆன்மீகத்துக்கு (spiritualism) முன்னுரிமை கொடுத்தார்.
பிளாட்டோவின் மாணாக்கரில் ஒருவரான யூடொக்ஸ் (Eudoxus (கிமு 400-347) என்பவர்தான் கோள்கள் முறைகேடான வட்டத்தில் சுற்றிவருவதற்கு அவை ஒன்றுக்கு மேற்பட்ட உருளையில் (Sphere) சுற்றி வருவது காரணி என்று அறுதியிட்டுச் சொன்னவர்.
அவரது கணிப்பின்படி மொத்தம் 26 உருளைகள் உண்டென்றும் விண்மீன்களையும் சேர்த்து அவற்றின் எண்ணிக்கை 27 என்றார்.
——————————————————————————————————————–
Leave a Reply
You must be logged in to post a comment.