மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் குடும்பம் தொடர்பாக வெளியான தகவல்

மான்செஸ்டரில் இஸ்லாமிய தீவிரவாதி சல்மன் பேடி நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 22 பேர் இறந்து 119 பேர் காயமடைந்தார்கள். தாக்குதல் மேற்கொண்ட 22 வயது இளைஞர் இங்கிலாந்தில் பிறந்தவர். இவரது தந்தை இரமதீன் தனது மகன் நிரபராதி என வாதாடுகிறார். இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலால் பிரான்ஸ், பெல்ஜியம், நெதலாந்து போன்ற நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. எங்கு, எப்போது, யார் தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்பது தெரியாமல் இந்த நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் திணறுகின்றன. இஸ்லாம் ஒரு மதமல்ல. அது ஒரு இறுக்கமான அரசியல் இயக்கம். உலகத்தை இஸ்லாமிய மயப்படுத்தப்படுத்துவதே ஒவ்வொரு முஸ்லிம்களின் புனித கடமையாகும். இஸ்லாம்  மதத்துக்காக   உயிர் துறப்பவர்களுக்கு அல்லா சொர்க்கத்தின் கதவைத் திறக்க தங்க திறப்பு கொடுப்பார்.  இந்த உலகத்தில் இருக்கும் இனத்தவர்களில் யப்பான் இனத்தவரே புத்திசாலிகள். நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் மதம் அந்த நாட்டில் தடைசெய்யப்பட்டு விட்டது. உலகத்தில் யப்பான் நாடு ஒன்றுக்கு மட்டுமே இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலால் அச்சம் இல்லை. முஸ்லிம்கள் இஸலாமியர் பெரும்பான்மை இல்லாத நாடுகளில் வாழக்கூடாது. ஆனால் பொருளாதார காரணத்துக்காக மேற்கு நாடுகளில் முஸ்லிம்கள் இலட்சக் கணக்கில் குடியேறியுள்ளார்கள். இன்னும் 11 வருடங்களில் நெதர்லாந்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாதிக்குமேலாக அதிகரித்துவிடும். 1970 இல் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்தனர். ஆனால் 2008 இல் 9 மில்லியனாக அதிகரித்தனர். இன்னும் சில ஆண்டுகளில் ரஸ்யா இராணுவத்தில் 40 சதவீதம் முஸ்லிம்களே இருப்பர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் 1911 ஆம் ஆண்டு முதன் முறையாக இலங்கைத் தமிழர்‚ இந்திய வம்சாவழித் தமிழர் என்று தமிழர்கள் பாகுபடுத்தப்பட்டு குடித் தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்து இரு தமிழ் இனங்களின் வீதம் குறைந்துவரும் அதே வேளை சிங்களவர்களினதும் முஸ்லிம்களினதும் வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துவந்துள்ளது. மேற்கு நாடுகள் முஸ்லிம்களின் குடிவரவை தடை செய்ய வேண்டும். (Nakkeeran)

——————————————————————————————————————————————————————-

மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் குடும்பம் தொடர்பாக வெளியான தகவல்

பிரித்தானியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.Image result for manchester attack 2017

மான்செஸ்டர் நகரில் கடந்த திங்கள் அன்று Salman Abedi என்ற தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பொலிசார் 9 பேர் வரை கைது செய்துள்ளனர். இவர்களில் தீவிரவாதியின் உறவினரும் அடங்குவர்.

பிரித்தானிய நாட்டை உலுக்கிய இத்தாக்குதல் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியபோது தீவிரவாதியின் குடும்பம் தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் நடத்திய தீவிரவாதி லிபியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் பயிற்சி பெற்றவன் எனவும், பாரீஸ் மற்றும் பிரஸ்சல்ஸ் நகரில் நிகழ்ந்த தாக்குதலுக்கும் இவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும், தீவிரவாதியின் சகோதரரான Hashem என்பவனுக்கு மான்செஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும் எனவும் பொலிசார் சந்தேகம் எழுப்பி இவனையும் கைது செய்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் தந்தையான Ramadan(51) என்பவர் அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர் எனவும், இந்த அமைப்பிற்கு ஆதரவாக அவர் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்துள்ளார் எனவும் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இத்தகவலை தொடர்ந்து தீவிரவாதியின் தந்தையும் லிலியாவில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், தன்னுடைய மகன் அப்பாவி எனவும், இந்த தற்கொலை படை தாக்குதலுக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ரமதான் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/uk/03/125820?ref=rightsidebar-tamilwin

———————————————————————————————————————————————–

இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக சமுதாயமருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார் ! 

சமுதாயமருத்துவ நிபுணர்வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்
யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கம் 26.06.2014 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்த ‘தமிழரின் எதிர்காலம்:ஒரு குடித்தொகையியல்நோக்கு’ என்றகருத்தரங்கில் உரையாற்றிய சமுதாயமருத்துவ நிபுணர்வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் இலங்கையில் தமிழினம்அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சி வீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கம் 26.06.2014 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்த ‘தமிழரின் எதிர்காலம்:ஒரு குடித்தொகையியல்நோக்கு’ என்றகருத்தரங்கில் உரையாற்றிய சமுதாயமருத்துவ நிபுணர்வைத்திய கலாநிதி முரளிவல்லிபுரநாதன் இலங்கையில் தமிழினம்அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சி வீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தெரிவித்தார்.2008 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு மதிப்பீட்டின்படி உலகில் 50 நாடுகளில் 75 மில்லியன் தமிழர்கள் பரந்து வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. ஆயினும் ஒரு இனத்தின் எதிர்காலம் அவர்களின் கருவளத்திலேயே பிரதானமாக தங்கி இருக்கிறது. ஒரு இனம் தன்னை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனின் அவ்வினத்தின் மொத்தகருவள வீதம்2.1இலும் அதிகமாக இருக்கவேண்டும். அதாவது சராசரியாக ஒரு பெண் 2 பிள்ளைகளுக்கு மேலாக 2.1 அளவில் பெற்றால் மாத்திரமே அதை மாற்றீடு செய்யும் கருவளவீதம் அதாவது குடித்தொகை குறையாமல் இருக்கும்ஒருநிலை என்று கூற முடியும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட இனத்தில் ஒரு சோடி பெற்றோர் 2 பிள்ளைகளுக்கு அதிகமாக பெறுவரெனில் மாத்திரமே இருபிள்ளைகள் ஆவது இளம் வயதை அடைந்து குடித்தொகையை தக்கவைக்க முடியும்.
மேலும் 2008 இல் வெளியிடப்ட்ட முஸ்லீம்களின் குடித்தொகைப் பரம்பல் ‘Muslim demographics’ (https://www.youtube.com/watch?v=6-3X5hIFXYU) என்னும்youtube விடியோ உலக அளவில் முஸ்லிம்களின் குடித்தொகை அவர்களது அதிகரித்தகருவளம் காரணமாக அதிகரிப்பதைக் காட்டுகிறது. ஏனைய இனங்களின் கருவளவீதம் நன்றாககுறைந்து விட்டநிலையில் அதிகரித்து வரும் முஸ்லிம்களின் குடிதொகையும் பரம்பலும் 2050 இல் உலகில் பெரும்பான்மையான நாடுகளில் முஸ்லீம்களே பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்று காட்டுகிறது. பிரான்சு நாட்டில் பிரான்சியர்களின் கருவள வீதம் 1.8 ஆக இருக்க அங்கேகுடி பெயர்ந்து சென்ற முஸ்லிம்களின் கருவளவீதம் 8.1 ஆகக்காணப்படுகிறது. இந்தநிலை தொடர்ந்தால் இன்னும் 34 வருடங்களில் பிரான்ஸ் இஸ்லாமியக்குடியரசாகமாறிவிடும். கடந்த 30 வருடங்களில் ஐக்கிய இராச்சியத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 மடங்காக அதிகரித்துஇருக்கிறது. இன்னும் 11 வருடங்களில் நெதர்லாந்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாதிக்குமேலாக அதிகரித்துவிடும். 1970 இல் ஒரு இலட்சம் முஸ்லிம்கள்அ மெரிக்காவில் இருந்தனர். ஆனால் 2008 இல் 9 மில்லியனாக அதிகரித்தனர். இன்னும் சில ஆண்டுகளில் ரஸ்யா இராணுவத்தில் 40 சதவீதம் முஸ்லிம்களே இருப்பர்.இலங்கையைப் பொறுத்தவரையில் 1911 ஆம் ஆண்டு முதன் முறையாக இலங்கைத் தமிழர்‚ இந்திய வம்சாவழித் தமிழர் என்று தமிழர்கள் பாகுபடுத்தப்பட்டு குடித் தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்து இரு தமிழ் இனங்களின் வீதம் குறைந்துவரும் அதே வேளை சிங்களவர்களினதும் முஸ்லிம்களினதும் வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துவந்துள்ளது.

இந்தநிலை நீடித்தால் புள்ளிவிவரவியல் எதிர்வு கூறலின்படி இன்னும் 12 வருடம்அளவில் இலங்கையில் முஸ்லிம்களின் குடித்தொகை தமிழரின் குடித் தொகையை விட அதிகமாகிவிடும். அதாவது 2031 இல் குடித்தொகைக்கணிப்பீடு மேற்கொள்ளப்படும் போது தமிழர்கள் மூன்றாவது சிறு பான்மையினமாகிவிட்டதை வெளிப்படுத்தும். இலங்கையில் முஸ்லிம்களின் அதிகரிப்புக்குக் காரணம் பல தாரமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் இளம் வயதிலேயே திருமணம் செய்து அதிகமான பிள்ளைகளைப் பெறுவது மேயாகும்.

மருத்துவநிபுணர் மேலும் தெரிவிக்கையில் வடகிழக்கில் கடந்தசில ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் கட்டாய கருத்தடையையும் அதற்கு வடக்குமாகாணசபை மக்கள்பிரதிநிதிகள் உண்மைக்குமாறான அறிக்கைகள்வெளியிட்டமையையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். வலைப்பாடு‚ வேரவில்‚ கிராஞ்சி முதலான இடங்களில் பெண்கள் போசாக்குத் தொடர்பான மருத்துவ முகாம் என்று கூறிஅழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு கருத்தடை செய்ய சம்மதிக்கவைக்கப்பட்டார்கள் என்பதை பாதிக்கப்பட்ட பெண்களின் நேர்காணல் ஆதாரத்துடன் தனது கருத்துரையின் போது வெளிப்படுத்தினார்.

அரச புள்ளிவிவரத்தின் படி 2012 இல் 2877 சிங்களவர்களுக்கும் 1035 தமிழர்களுக்கும் 450 முஸ்லிம்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டது. இருப்பினும் இன விகிதாசார அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகமாகவே கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கடந்த பல தசாப்தங்களாகத் திட்டமிட்ட முறையில் கருத்தடை செய்யும் நடை முறை இருந்து வருகின்றமையையும் நிரந்தரக் கருத்தடைக்கு 500 ரூபா சன்மானமும் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். இதேவேளை 2009 இலிருந்து அனைத்து ஆயுதப்ப டையினருக்கும் மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக் கொண்டால் ஒரு இலட்சம் ரூபா ஊக்கத் தொகையை அரசு வழங்கி இனத்தை பெருக்குகிறது.

தமிழனத்தின் பிறப்பு வீதம் குறைந்தமைக்கு மேலும் பல காரணங்களை வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் முன்வைத்தார். தமிழ் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பெண்கள் தமக்குப் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு குறையக் காரணமாக உள்ளது. பெண்கள் பலர் உயர்கல்வி முதலான காரணங்களால் 30 வயதிற்குப் பின்னரே திருமணம் செய்கின்றனர். இயற்கையாக பெண்களின் கருவளம் 30 வயதுக்கு பின்னர் வீழ்ச்சி அடைவதனால் தாமதமாகத் திருமணம் செய்வோருக்கு பிள்ளைகள் பெறுவதற்கான வாய்ப்புக் குறைகின்றது. தமிழ்ச் சமூகத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ள சாதியப்பாகுபாடுகள், உயர்வடைந்து செல்லும் சீதனம் முதலானவையும், இடப்பெயர்வுகளும் வாழ்வாதாரம் அற்ற நிலையும் திருமணமாதவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது அல்லது தாமதமான திருமணத்துக்கு இட்டுச் செல்லுகின்றது.

போருக்குப் பின்னரான குழந்தைகளின் பிறப்பு வீத அதிகரிப்பு (Baby Booming) தமிழ்ப்பகுதியில் நிகழவேயில்லை. அதிகமான ஆண்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டமையும் அதிகமானோர் காணமற் போயிருப்பதும் இந்நிலைக்குக்காரணமென வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

வடகிழக்கில் 89000 பெண்கள் ஆண்துணையை இழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்ச் சமூகம் இவர்களுக்கு கோழிவளர்ப்பு முதலான சுயதொழில் வாய்ப்புப் பற்றியே சிந்திக்கிறது. 18 – 40 வயது வரையான பெண்களுக்கு மறுவாழ்வு அழிப்பது பற்றி சமூக சமயத் தலைவர்களோ அரசியல் வாதிகளோ சிந்திப்பதில்லை. இப்பெண்களுக்கான இயற்கையான பாலியல்தேவை பற்றி தமிழ்ச் சமூகம் சிந்திக்க மறுக்கிறது. இப்பெண்கள் மாற்று இனத்தவர்களால் விபசாரத்துக்கு உட்படுத்துவது பற்றி கதைப்பது சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையே காண்பிக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு உள்ள சட்டங்களைப் போல் தமிழர்களும் போருக்குப் பின்னரான நிலையை எதிர்கொண்டு சமூகத்தை நிலைநிறுத்த சட்டங்களை உருவாக்க வேண்டும். பலதாரமண திருமணச் சட்டத்தை பெண்களுக்கான பாதுகாப்புடன் உருவாக்கல் குறித்து சிந்திக்க வேண்டும். இந்திய வரலாற்றில் இந்து சாம்ராஜ்ஜியங்கள் தோல்வியடைந்த போது தீவளர்த்து பெண்கள் கூட்டாகத் தீயில் பாய்ந்து அழித்துக் கொண்ட வரலாறுகள் உண்டு. இதே வேளை முஸ்லிம்கள் போரின் பின்னர் கணவனை இழந்த அனைத்துப் பெண்களையும் மறுமணம் செய்தார்கள். பிரிட்டிஸ்காரர் இந்தியாவைக்கைப்பற்றியிருக்காவிடில் இன்று இந்தியா இஸ்லாமியக்குடியரசாக இருந்திருக்கும் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுவதும் நோக்கத்தக்கது.

ஏனைய இனங்கள் தங்கள் பிறப்பு வீதத்தை அதிகரிக்க‚ இனத்தைப் பாதுகாக்க அக்கறை காட்டும் வேளையில் போரினால் அழிவடைந்துள்ள தமிழினத்தின்தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர் தமிழினத்தின் அழிவுகுறித்து இதுவரை சிந்திக்காதிருப்பது இனத்தின் துரதிஷ்டம் என்கிறார்.
அழிவடைந்த தமிழனத்தின் பிறப்பு வீதத்தைக் கூட்ட மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக்கொள்வோருக்கு ஊக்குவிப்பு வழங்க தமிழரசியல்தலைமையோ அல்லது வேறு எவருமோ இதுவரை முன்வரவில்லை. இலங்கையில் இந்நிலை நீடிக்குமெனில் கடந்த காலத்தில் பெருமையுடன் வாழ்ந்து தற்போது அழிவு அபாயத்தை எதிர்நோக்கும் காட்டுயானை, சிறுத்தை, திமிங்கிலம் முதலான உயிரினங்கள் இனங்கள் போல் தமிழினமும் ஆகிவிடும் என்று கூறி தனது கருத்துரையை நிறைவு செய்தார்.

இந்த கருத்துக்கள் யாவும் – சமுதாயமருத்துவ நிபுணர்வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்களுடையதே….

https://amudu-gowripalan.blogspot.ca/2016/07/blog-post_30.html?m=1

 

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply