முன்னாள் போராளி இன்று இலங்கை இராணுவ வீரர்
சுமார் மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் நடை பெற்று வந்த யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த யுத்தத்தில் மக்கள் இழந்தவை ஏராளம். வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பங்களை பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவித்துள்னர். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்போதைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பல துன்பங்களுக்கு முகங்கொடுப்பதை காணக்கூடியதாக இருந்தது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் பலருடைய வாழ்வு இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
தமக்கு விருப்பமில்லாத தொழிலாக இருந்தாலும் கூட குடும்ப சூழ்நிலையை கருதியும், தவறான பாதைக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் கிடைத்த தொழிலை செய்துகொண்டு இருக்கின்றார்கள்.
அந்த வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 13 வயதில் இணைந்து இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் பெண் போராளி ஒருவர் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன.
முன்னாள் பெண் போராளியும் தற்போது இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் அண்டர்சன் பிரதா (Anderson Pradha) என்பவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/interviews/01/146906
http://www.tamilwin.com/interviews/01/146906?ref=view-latest
Leave a Reply
You must be logged in to post a comment.