போலி ஜோதிடர்ரிகளிடம் ஏமாறும் குடும்பப் பெண்கள்!
Published:Wednesday, 24 May 2017
பெங்களூரில் இளம் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்ததோடு அவரது நகைகள், பணத்தையும் அபேஸ் செய்த போலி ஜோதிடரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர், விஜயநகர் பகுதியிலுள்ள ஆர்.பி.சி லேஅவுட்டை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆதரவற்றோர் அமைப்பு நடத்துவதாக கூறிக்கொண்டு டொனேஷன் வாங்க இவரது வீட்டுக்கு வந்தவர் தான் பிரசன்ன குமார் (31).
இரக்கப்பட்ட ஐஸ்வர்யா, ரூ.200 நன்கொடை கொடுத்துள்ளார். மேலும் தனது போன் நம்பரை ரசீதில் எழுதியுள்ளார். இந்த நிலையில் திடீரென, உங்கள் மகனுக்கு உள்ள பிரச்சினையை நான் தீர்த்து வைக்கிறேன் என பிரசன்னகுமார் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யாவின் மகனுக்கு வலிப்பு நோய் பிரச்சினை இருந்துள்ளது. இதை குறிப்பிட்டு கூறிய பிரசன்னகுமார், தான் அதை குணப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். ஐஸ்வர்யாவுக்கு ஆச்சரியமாகிவிட்டது. இவர் எப்படி சரியாக தனது மகனின் பிரச்சினை கூறினார் என்ற வியப்பு காரணமாக, ஜோதிடர் மீது நம்பிக்கை பிறந்துள்ளது.
இதையடுத்து அவ்வப்போது வீட்டுக்கு வந்து பூஜைகள் செய்வதாக கூறி ஏதோ செய்துள்ளார். அதிலும், ஐஸ்வர்யாவின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்தான் பிரசன்னகுமார் வருவது வழக்கமாம்.
ஒருநாள் வந்திருந்தபோது, போதை பொருள் கலந்த சிகரெட்டை திடீரென, ஐஸ்வர்யா வாயில் வைத்து, கட்டாயமாக உறியச் சொல்லியுள்ளார். இதை உறிந்ததும், ஐஸ்வர்யாவுக்கு போதை தலைக்கு ஏறியது. இதனால் பாதி மயக்கமான நிலைக்கு சென்றார் ஐஸ்வர்யா.
இந்த நிலையை பயன்படுத்திய பிரசன்னகுமார், ஐஸ்வர்யாவுடன் உறவு கொண்டுள்ளார். போதை தெளிந்ததும், தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி ஐஸ்வர்யா வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் பிரசன்னகுமாரோ இது ஒரு வைத்தியம் என கூறியுள்ளார்.
தன்னுடன் 7 முறை உறவு வைத்துக்கொண்டால், உனது மகன் உடல்நிலை நன்றாக ஆகிவிடும். என்னிடம் உள்ள சக்தி மூலம், உனது மகனை குணமாக்க இது ஒரு வழி என கூறியுள்ளார். இதற்கு ஐஸ்வர்யா ஒப்புக்கொள்ளாத நிலையில், ஏற்கனவே உறவு வைத்தபோது எடுத்த நிர்வாண போட்டோக்களை காட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் கணவன் இல்லாத நேரத்தில் ஐஸ்வர்யாவுடன் உறவு வைப்பதை வாடிக்கையாக்கியுள்ளார் பிரசன்னகுமார்.
போட்டோவை வெளியே காட்டிவிடுவார் என்ற பயத்தால், உடலுறவுக்கு ஐஸ்வர்யா ஒத்துழைக்க தொடங்கியதும், பிரசன்னகுமாருக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது. போட்டோவை காண்பித்து மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார். ஐஸ்வர்யா செய்யப்பட்டுள்ளார்.தனது நெக்லஸ், மோதிரம் என பல நகைகளை பிரசன்னகுமாருக்கு கொடுத்துள்ளார்.
தொந்தரவு அதிகரித்ததால், கணவரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பிரசன்னகுமாருக்கு வாங்கி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா. பணம் குறைவதால் சந்தேகமடைந்த ஐஸ்வர்யாவின் கணவர், மனைவியிடம் கேள்விகளை அடுக்கியதால், விவரம் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யாவின் கணவர், மனைவியை நைய புடைத்துள்ளார். இதுகுறித்து விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பிரசன்னகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.