வட கிழக்கில் இருந்து புகைப்படங்கள் கண்காட்சி பாம் ரூட்ஸ் 2017 | மே 7 |

பாம் ரூட்ஸ் என்பது  புகைப்படம் எடுத்து அதனை சேகரிப்பு/ ஏலம் அடிப்படையில் விற்று நிதிசேகரிக்கும் நிறுவனமாகும். .  இது 2013 ஆம் ஆண்டில் புகைப்படக்காரர் ஜனனி பாஸ்கரனால் தொடங்கப்பட்டது, இது சிறிலங்காவில் வடக்கு / கிழக்கில் வாழும் குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதை நோக்கமாக் கொண்டது. இதற்காக. ஜனனி தனது பங்களிப்பை ஆற்ற  விரும்பினார், சமூகத்தின் பிரதிநிதிகளாகவுள்ள குழந்தைகளுக்கு முறையான கல்வி மற்றும் சுற்றுச் சூழலை உருவாக்க விரும்பினார். இதன் மூலம் குழந்தைகளின்  தற்போதைய வாழ்க்கை நிலையை மாற்றவும் எதிர்காலத்தில் அவர்கள் வலுவான தலைவர்களாக வரவும் வழிகோலும் என நம்புகிறார்.
பாம் ரூட்ஸ் இப்போது நான்காவது ஆண்டில் தடம் பதித்துள்ளது. சிறிலங்காவின்  வடக்கு / கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவாக 20,000 டொலர்களை வெற்றிகரமாக சேகரித்துள்ளது.   அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை வழங்கியுள்ளது.  பாதுகாப்பான சூழலில் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.   அன்றாட வாழ்க்கை செலவினங்களுக்காக போராடும் கைம்பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.
2016 ஆம் ஆண்டில், பாம்  ரூட்ஸ் நிறுவனத்தோடு பணியாற்றி வருவதற்காக இ-குருவி பிஸ்தா மார்கெட்டிங் எக்ஸ்செலன்ஸ் வழங்கும் Connecting Roots என்ற விருதை ஜனனி வென்றார்.
மே மாதம் 7 ஆம் நாள்  ஸ்காபரோ கொன்வென்ஷன் சென்டரில் மீண்டும் பாம் ரூட்ஸ் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இதன்போது சிறிலங்காவில் இருந்து குறிப்பாக வட கிழக்கில் இருந்து  புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படும். கனடாவை தளமாகக் கொண்ட Miracle Family Care  என அழைக்கப்படும் கனடியத் தமிழர் தொண்டு நிறுவனத்தின் ஊடாக நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டப்படும்.   $ 10 மற்றும் $ 50   பெறுமதியான நுழைவுச் சீட்டுக்களை நிகழ்ச்சி நடைபெறும் மண்டப வாசலில்வாங்கலாம்.

12928353_763603138303_5870775381829946381_nSJ-Photography_191_
https://www.eventbrite.ca/e/palm-roots-2017-tickets-33167252144?aff=ebdsorderfbbutton
About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply