தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!

தீபாவளி   கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!

நக்கீரன்

‘தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்’ என்று மகாகவி பாரதியார் மனம் நொந்தும் வெந்தும் சொன்னது இற்றைவரை சரியாக இருக்கிறது.

இன்று உலகம் 21 ஆம் நூற்றாண்டில் நடை போடுகிறது. இருந்தும் உலர்ந்த தமிழனை மருந்துக்கும் பார்க்க முடியாமல் இருக்கிறது.

‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என பாரதி கண்ட கனவை அமெரிக்கர்கள் 1969 இல் நனவாக்கினார்கள்.

இன்று செவ்வாய் மண்டலத்தையும் சனி மண்டலத்தையும் அமெரிக்க விண்கலங்கள் ஆய்ந்து கொண்டிருக்கின்றன!

ஆனால் தமிழனோ அதே சந்திரன், சனி, செவ்வாய் கோள்களை கோயில்களில் சுற்றி வந்து கொண்டிருக்கிறான்.

தமிழர்கள் எதையும் சிந்தித்து எது சரி, எது பிழை, எது நல்லது, எது கெட்டது என்று முடிவு செய்வதில்லை. அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதையே குடித்துக் கொண்டு உயிர் வாழ விரும்புகிறார்கள்.

தமிழர்கள் தீபாவளியை ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். ஊடகங்கள் அதனைப் பெரிது படுத்துகின்றன. வணிகர்கள் விற்பனையை அதிகரிக்க தீபாவளியைப் பயன்படுத்துகிறார்கள்.

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிட்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

விரித்த உலகம் (பூமி) அப் பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
ஆசைக்கு இணங்கிய பன்றி (விட்ணு)   பூமியுடன் கலவி செய்தது.
அதன் பயனாய் பூமிகர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
தேவர்களுக்காக விட்ணு நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

விட்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. காரணம் நரகாசூரன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான்.

உடனே காத்தல் கடவுளான விட்ணு பெரிய சதித் திட்டம் தீட்டினார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசூரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே விட்டுணு மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார்.

உண்மையில் அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. அப்படி நடித்தார். இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து விட்டுணுவின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறாள். இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

உயிர் போகும் தருவாயில் நரகாசூனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறாள். ‘எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்” என்கிறான் நரகாசூரன்.

தனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கின்ற ஒருவரை கடவுள் என்று அழைக்க முடியுமா? ஆனால் புராணிகர்கள் அப்படித்தான் ‘பரம்பொருளை’ சித்தரித்திருக்கிறார்கள்.

எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும்;, தேவர்களை மீட்கக் கடவுள் அவதாரம் செய்ததாகவும் சொல்கின்றன.

உண்மையில் இவையெல்லாம் அன்றைய ஆரிய திராவிட இனங்களுக்கு இடையிலான போரையே குறிக்கும்.

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, பன்றி, முயல், உடும்பு இவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் ‘அவிர்ப்பாகம்’ என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப் பட்டார்கள். குதிரை, மாடு, ஆடு, முயல், உடும்பு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

மகாவிட்ணுவின் அவதாரங்களுள் பரசுராமன் அவதாரம் என்பது முழுக்க முழுக்க அசுரர்களை கொன்றொழித்த கதைதான். பூலோகத்தில் அசுரர்கள் செய்துவரும் கொடுமைகளினால் பூமாதேவி பாரம் தாங்க முடியாமல் தனது கணவன் விட்ணுவிடம் முறையிட்டாள். உடனே ‘பூமியில் அவதாரம் செய்து பூமிபாரத்தைத் தீர்த்து வைப்பேன்’ என்று கூறி தக்னி முனிவருக்கும் அவரது பத்தினி ரேணுகைக்கும் பரசுராமனாகப் பிறக்கிறார் விட்ணு. தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய ‘வீரன்” என்று பெயர் எடுக்கிறான்.

காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர்களையும் (அசுரர்களை) ஒரு காலத்திலும் தலைதூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமி பாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், சகோதரனைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்? இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்? பூலோகத்தில் அரசனாக ஆண்டவர்கள் எல்லாம் அசுரர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா?

இராம இராவண யுத்தம் ஆரிய திராவிடர் இருசாராருக்கும் இடையிலான மோதல்தான். இப்படி நேரு தான் எழுதிய Discoery of Inida  என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராமன் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று ஒழிப்பதாக வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாவும் சொல்கிறான். ( ஆரண்ய காண்டம், 10  வது சருக்கம்)

‘தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று” என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

‘தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை'” எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாம் எழுதிய “” மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு”” என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

‘தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால நாளே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை’ (தீபம் – விளக்கு, ஆவலி – வரிசை) என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்”என்ற நூலில் சொல்லியிருக்கிறார்.

‘ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி” என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தாம் எழுதிய “தமிழர் மதம்”” என்ற நூலில் எழுதியுள்ளார்.

மேலும் அவர்-

“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்.’ (வேளாளர் நாகரிகம் – பக்கம் 60)

‘மறைமலை அடிகள் தமிழர், அதிலும் தனித் தமிழ் வெறியர் அவர் அப்படித்தான் எழுதுவார்’ என்று சிலர் சொல்லக் கூடும். அவர்களுக்காக இதோ இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதைத் தருகிறேன். படியுங்கள்.

‘தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்’ (இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் -587-589)

இவ்வாறு நடைமுறை உண்மைக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்துவராத, முரண்பட்டு இருக்கிற பொய்களை, கலையுரைத்த கற்பனைகளை எல்லாம் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் தமிழர்களைத் தாழ்வுபடுத்தும் இந்தத் தீபாவளியை இன்னும் எத்தனை காலத்துக்கு எப்போதும் ஈரத்திலேயே படுக்க விரும்பும் எருமைகளைப் போல தமிழர்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?

இனிமேலாவது பாரதி விரும்பிய உலர்ந்த தமிழனாக வாழக் கற்றுக் கொள்வோமாக.

 மானம் உணரும் நாள்! நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவைக ளைநாம் எண்ண வேண்டும். எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம். ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது! ‘உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம் நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா? என்றுகேட் பவனை, ‘ஏனடா குழந்தாய்! உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள். தீவா வளியும் மானத் துக்குத் தீபாவாளி ஆயின் சீஎன்று விடுவிரே!

– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்-

தீபாவளி தத்துவமும் இரகசியமும்!

சித்திரபுத்திரன்

(சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தந்தை பெரியார் எழுதியது. தீபாவளிபற்றி சித்திரபுத்திரன் எழுதியுள்ள ஆராய்ச்சி உரையாடலைக் கீழே தருகிறோம். பாமரர்களில் பல்லாயிரவர் உண்மை தெரிந்து வெறுத்துத் தள்ளியுள்ள தீபாவளியைப் படித்த கூட்டத்தார் கூடக் கொண்டாடுகிறார்களே! அதுதான் வெட்கக்கேடு! சைவர்கள் என்பவர்கள் கூடக் கொண்டாடுகிறார்களே! அது இன்னும் பெரிய வெட்கக்கேடு! எல்லோருமே இதைப் படித்துப்பார்க்கட்டும்! -ஆசிரியர் ‘விடுதலை’)

வளவன் – சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே.

ராம் – சரி கேள்.

வளவன் – வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் சரிதான்?

ராம் – சரி.

வளவன் – இது இரண்டும் எப்படி கலவி புரியும்? எப்படி கருத்தரிக்கும்?

ராம் – பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது. கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யுமல்லவா?

வளவன் – என்னப்பா இராமானுஜம் பாத்தியா பாத்தியா என்று சாய்பு மாதிரி பாத்தியா கொடுக்கிறே. இது ஒரு பெரிய செக்சுவல் சையன்சு சங்கதி இதைக் கேட்டால் போக்கிரித்தனமான கேள்வி என்கிறாய். சரி! இதைப்பற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?

ராம் – அந்தப் பிள்ளைதான் நரகாசூரன்.

வளவன் – இந்தப் பெயர் அதற்கு யார் இட்டார்கள் தாய் தந்தையர்களா?

ராம் – யாரோ அன்னக்காவடிகள்! இட்டார்கள்? அதைப் பற்றி என்ன பிரமாதமாய் கேட்கிறாய்? எனக்கு அவசரம் நான் போகவேண்டும். என்னை விடு.

வளவன் – சரி போகலாம், சீக்கிரம் முடி அப்புறம்?

ராம் – அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான் அவனை மகாவிஷ்ணு கொன்றார்.

வளவன் – அட பாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர்கள் என்ன அவ்வளவு அயோக்கியர் களா?

ராம் – இல்லேப்பா, இந்த நரகாசூரனின் பொல்லாத வேளை தேவர்கள்கிட்டே இவன் வாலாட்டினான். அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா?

வளவன் – அதற்கு ஆக தகப்பன் மகனுக்கு புத்திசொல்லாமல் ஒரே அடியாகக் கொன்று விடுவதா?

ராம் – அது அவர் இஷ்டம் அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர் கயவர் அவரும் தாம் மேவன செய்தொழுகலான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார் ஆதலால் நாம், அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?

வளவன் – சரி கொன்றார். அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

ராம் – அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காக, அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது.

வளவன் – தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?

ராம் – வான் தேவர்கள் வானத்தில் (மேல் லோகத்தில்) இருக்கிறார்கள்; பூதேவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள்!

வளவன் – இந்தப் பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ராம் – அடமுட்டாள்! அது கூடவா தெரியாது. அதுதான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள்தானே அகராதியைப்பார்.

வளவன் – பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு?

ராம் – என்ன வகுப்பு? நாங்கள்தான்?

வளவன் – நீங்கள் என்றால், நீ அய்யங்கார் நீங்களா?

ராம் – நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா, நாங்களும் அய்யர், ஆச்சார், சாஸ்திரி சர்மா தீட்சதர் முதலியவர்கள்.

வளவன் – அப்படி என்றால் பார்ப்பனர்கள் யாவரும் ப+தேவர் என்கிறாய்.

ராம் – ஆமா! ஆமா!! கல்லாட்டமா ஆமா!!!

வளவன் – சரி, தொலைந்துபோகட்டும், நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், இராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களை எதற்கு ஆக பயப்படுத்த தீபாவளி கொண்டாடவேண்டும்?

ராம் – இங்கேயே அசுரர் இராட்சதர் இல்லை என்கிறாய.; இந்த கருப்புச்சட் டைக்காரர்கள் சு.மக்குகள், திராவிட கழகத்தார்கள் இவர்கள் எல்லாம் யார்? பிராமணர்களைப் பார்த்து பொறாமைப் படுகிறவர்கள். அவர்களைப் போல் வாழ வேண்டுமென்பவர்கள். வேதசாஸ்திர புராண இதிகாசங்களைப் பகுத்தறிவில் ஆராய்ச்சி செய்கிறவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராக்கதப் பதர்கள். இரக்கமே இல்லாத அரக்கர்கள் தெரிந்ததா? அவர்களுக்கு பாபம் உண்டாக்கு வதற்கு ஆக தேவர்களுக்கு இடயூறு செய்தால் நாசமாய்ப் போய் விடு வாய் என்று அறிவுறுத்துவதற்கு ஆகத்தான் தீபாவளி கொண்டாடுவதாகும் இதுதான் இரகசியம். மற்றபடி கதை எப்படி இருந்தால் என்ன?

வளவன் – அப்படியா? நீங்கள் 100க்கு 3 பேர். நீங்கள் அல்லாதவர்கள் 100க்கு 97 பேர் எப்படி எத்தனை நாளைக்கு இப்படி மிரட்டமுடியும்?

ராம் – அதைப் பற்றிக்கவலைப் படாதே! காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. அந்தத் தொண்ணூறு பேர்களில் ஒரு பகுதி விபீஷணர்களாக அனுமார்களாக இருந்து பிராமண தொண்டாற்றவும் எதிரிகளை ஒழிக்கவும் பயன்படுத்துவதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம் படித்துவிட்டு உத்தியோகத்துக்குக் காத்துகிடக்கும் கூட்டம் கோவில் மடம் தர்மஸ்தாபனத்தில் இருக்கும் கூட்டம் பூசாரிக் கூட்டம், பிரபுக்கூட்டம், பாதிரிக் கூட்டம், மேற்பதவி வகிக்கும் உத்தியோகஸ்தர் கூட்டம், நாடகைப் பிழைப்புக் கூட்டம், கலைவித்துவான்கள் கூட்டம், அரசியல் பிழைப்புக்காரர் கூட்டம், தேசபக்தர்கள், தியாகிகள் கூட்டம் இப்படியாக இடறிவிழும்படி சர்வம் பிராமண அடிமையாம் என்பது போல் இருக்கும்போது 100-க்கு 3 100-க்கு 97 என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.

வளவன் – ஓஹோ! அப்படியா? சரி சரி தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்து கொண்டேன், நன்றி வணக்கம்.

ராம் – சரி நமஸ்தே, ஜெய்ஹிந்த்!

தீபாவளி என்றால் என்ன? தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மானக்கேட்டை உணரவில்லை!

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! 

வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்குக் கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை – விரதம், நோன்பு – உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்! எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூடச் செவிப் புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லையே!

இப்படி நடப்பவர்கள் பாமரமக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் ஆங்கில வேதாந்தத்தில், ஆங்கில விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப் பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்? நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்கவில்லை என்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் – பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில்தான் மானமும் அறிவும் விளைய முடியும்? தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1) ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2) தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3) விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4) ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5) அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6) அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7) தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8) விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.

9) இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10) இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இவற்றை இப்போது ஆராய்வோம்.

இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமிதட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று ப+மியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்? பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது.

மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட

இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?

தீபாவளி கொண்டாடும் தமிழா! உன் சிந்தனைக்குச் சில வினாக்கள்!! முடைநாற்றம் வீசிடும் மூடப் பண்டிகையாக தீபாவளி பற்றிய கதை எந்த அளவுக்கு அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், உலக நடைமுறைச் செயல்பாட்டுக்கும் ஒவ்வாதது என்பதை விளக்கும் கட்டுரை இது.

இரண்யாட்சதன் ப+மியைப் பாயாகச் சுருட்டினான் என்ற தீபாவளிக்கு ஆதாரமான புராணக் கதையை நம்புகிற பக்த கோடித் தமிழா! உலகம் உருண்டை என்பதுதானே நீ படித்த பால பாடம்?

உருண்டை வடிவமான உலகத்தைச் சுழற்றினான் என்று சொன்னால்கூட (எங்கிருந்து கொண்டு கழற்றினான் என்ற வினா எழ நியாயமுண்டு) வாதத்திற்காக வேனும் ஒப்புக் கொள்ளலாமே தவிர, சுருட்டினான் என்று சொன்னால் அதனை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளமுடியும்?

உலகம் பாயைப் போன்று-போர்வையைப் போன்று, வேட்டியைப் போன்று-புடைவையைப் போன்று-பலகையைப் போன்று-கட்டிலைப் போன்று தட்டையாக இருந்தால்தானே அதைச் சுருட்ட முடியும்-அல்லது மடக்கமடிக்க முடியும்? பூமியைப் பாயாகச் சுருட்டினான் என்கிற கதையை ஒத்துக்கொண்டுநம்பிக் கடைப்பிடிக்கிற தமிழா! நீ உலகம் தட்டை என்கிற காட்டுமிராண்டிக் காலக் கற்பனைக் கதைகளோடு தொடர்பு கொண்டு ஏன் உன்னை இழிபடுத்திக் கேவலம் செய்து கொள்கிறாய்?

“அச்சமும், அறியாமையும் சேர்ந்து பெற்றெடுத்த பிள்ளைகளே மதமும், கடவுளும் என்கிற நமது அறிவுப+ர்வமான நாத்திக வாதத்தைத் தீபாவளி பற்றிய மூடக்கதை மெய்ப்பித்துவிட்டதே!

பள்ளியில் பாடம் பயின்ற காலத்தில் உலகம் உருண்டை என்ற கருத்தை ஒப்பியும், படித்தும் தேர்வு எழுதி வெற்றி பெற்ற நீ, வெளியுலகில், மத வாழ்வு கொண்ட மனிதனாக விளங்குகிற போது மட்டும், தீபாவளி கொண்டாடுவதன் மூலம் உலகம் தட்டை ஏன்? அறிவாராய்ச்சி அனுபவ நடைமுறைக்கொவ்வா அறியாமை இருட்டில் விளைந்த குருட்டுக் கருத்தை முரட்டுத் தனமாக நம்புகிறாயே, ஏன் இந்த இரட்டை வேடம்? வாழ்க்கையில் இரட்டை வேடம் புனைகிற நாடக நடிகனாக உன்னை ஆக்கி, உலக அறிவரங்கில் உன்னைத் தாழ்வுபடுத்துகிற இந்து மதமும், இந்து மதக் கடவுள்களும், அவர்தம் புராணக் கதைகளும் உனக்குத் தேவைதானா?
தமிழ்நாடுதான் பூமியா? இரண்யாட்சதன் மியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூதமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த பாரத புண்ணிய ப+மியாம் இந்திய நாடு மட்டுமா? அல்லது பல்வேறு கண்டங்களும், அவற் றில் அடங்கிய நாடுகளும் இணைந்த ஒருமித்த மொத்த உலகமா? பூ என்பது அனைத்துலகும் ஒருமித்து என்றால், ரஷியாவில், ஜப்பானில், இங்கிலாந்தில், அமெரிக்காவில் இன்னபிற நாடுகளில் ஏன் இக்கருத் தும், கொள்கையும், இதற்கு ஆதாரமான தீபவாளித் திருவிழாவும் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை? நம்பப்படவில்லை? கொண்டாடப்படவில்லை?
ரஷியா, சீனா, சப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் நீங்கலாக, அனைத்துப் பிற நாடுகளும் நீங்கலாக தமிழ்நாட்டை-திராவிட நாட்டை- இந்தியாவை மட்டும் பாயாகச் சுருட்டினானோ?

உலகின் அனைத்துக் கண்டங்களையும் தன்னுள் அடக்கிய உலகப் ப+மியை ஒட்டு மொத்தமாக இரண்யாட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால், இக்கதைக்கு ஆதாரமான விழா மட்டும் இந்தியாவுக்கும், இந்து மதத்திற்கும் மட்டும் சொந்தம் ஆவானேன்?

எங்கும் ஞாயிறு இன்றும் கும்பகோணத்தில் இருக்கிற எனக்கு ஞாயிற் றுக்கிழமை என்றால், அமெரிக்காவில் இருக்கின்ற மருத்துவர் சோம இளங்கோவன் அவர்களுக்கும், இலண் டனில் இருக்கின்ற தமிழ்மணி அரங்க முருகையன் அவர்களுக்கும், குவைத்தில் இருக்கின்ற ச. செல்லப் பெருமாள் அவர்களுக்கும், மலேசியாவில் இருக்கின்ற நாராண திருவிடச் செல்வன் அவர்களுக்கும் ஞாயிற்றுக் கிழமைதானே! நாம் ஞாயிறு என்று தமிழில் சொல்வதை அவர்கள் ளுரனேயல என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் வேறுபாடு இதுதானே ஒழிய பொருள் ஒன்றுதானே! இதில் ஒன்றும் எந்த மாற்றமும், வேறுபாடும் இல்லையே!

அனைத்த நாடுகளிலும் நேரம் மட்டுமே வேறுபடும் அனைத்து நாடுகளிலும் நேரம் மட்டுமே மாறுபடும் என்பது பூகோள ரீதியான, அறிவியல் பூர்வமான தவிர்க்க முடியாத உண்மை என்பது யாராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட செய்தி ஆனால், தீபாவளிப் பண்டிகையும், அது தொடர்பான கருத்துகளும் உலகம் தழுவிய அளவில் அனுசரிக்கப்படவில்லையே! இதிலிருந்து தீபாவளி பற்றிய கதை பொய்-புரட்டு-பித்தலாட்டம்-கற்பனை என்பது புலப்படவில்லையா?

கேவலம் ஞாயிற்றுக் கிழமைக்கு இருக்கிற ஒற்றுமையும், ஓர்மையும், மதிப்பும், மரியாதையும், சீர்மையும், சிறப்பும் பகவான் விஷ்ணுவுக்கு இல்லாமல் போய் விட்டதே!

ஏசு கிறிஸ்துவை முன்னிலைப் படுத்தியும், முதன்மைப் படுத்தியும், மய்யப்படுத்தியும், ஆதாரப்படுத்தியும் 2005-ஆம் ஆண்டு இன்று உலக முழுவதும் உலா வருவது போல, நமது காக்கும் கடவுள், உலக இரட்சகர், படிய ளக்கும் பரந்தாமன் மகா விஷ்ணுவை முன்னிலைப்படுத் தியும் ஆதாரப்படுத்தியும் ஏற்பட்ட தீபாவளி மட்டும் உலகஉலா வராமைக்கு என்ன காரணம்? கதையும், கதைக்கு ஆதாரமான கருப்பொருளுக்கு உண்மை அல்ல என்பதுதானே யதார்த்தம்?

சரித்திரமா – அதிசயமா? தீபாவளி என்பதும், அது பற்றிய காரணக் குறிப்புகளும் உலக வரலாற்றில் இடம் பெறுகின்ற-பெற்ற-பெற வேண்டிய சரித்திர வரலாற்றுச் சான்று செய்திகளா அல்லது ஒரு குறிப்பிட்ட ஒரு தனி மதத்திற்கும், கடவுளுக்கும் சம்பந்தப்பட்ட புராணக் கற்பனை அதிசய அற்புதச் செய்தியா?

மகாவிஷ்ணுவின் தோன்றலாகிய (தமிழில்) கண் ணனோ அல்லது (வடமொழியில்) கிருஷ்ணனோ சரித்திர வரலாற்று நாயகர்களா? அல்லது அவர்கள் மாயாஜால வித்தைக்காரர்களான வெறும் வேடிக்கை அற்புத அவதாரப் புருஷர்களா? வரலாற்று சரித்திர நாயகர்கள் என்றால் அது உண்மைச் செய்தி அவதாரப் புருஷர்கள் என்றால் அது கற்பனை கலந்த பொய்ச் செய்தி என்பதுதானே யதார்த்தம்? அக்பரும், பாபரும், அசோகனும், நெப்போலியனும், அலெக்சாந்தரும், ஏசுநாதரும், நபிகள் நாயகமும் சரித்திரப் புகழ் பெற்ற வரலாற்று நாயகர்கள் என்றிருக்ககண்ணணும், கிருஷ்ணனும் கற்பனையில் வரையறுக்கப்பட்ட கட்டுக்கதை நாயகர்கள்தாமே?

பூமி வேறு – கடல் வேறா? பூமியைப் பாயாகச் சுருட்டிய தீபாவளிப் பற்றிய அறிவிப்புகள் உலக வரலாற்றில் பதிந்த உண்மைச் செய்திகள் எனில், ஏன் இவ்விழாவும், இவ்விழா பற்றிய கருத்துகளும் அனைத்து நாட்டினராலும், அனைத்து மொழியினராலும், அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை? கொண்டாடப் படவில்லை?

இரண்யாட்சதன் பாயாகச் சுருட்டிய  பூமியுடன் கடலுக்குள் புகுந்தான் என்று சொல்லுகிற ப(க்)த தமிழா! அந்தக் கடல் ப+மியில் அல்லாது வேறு எங்கு இருந்தது? வேறு எங்கே இருக்க முடியும்?

கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை, காடு, மேடு, பள்ளம், குன்று, மலை, சமவெளி ஆகிய அனைத்தும் ஒரு சேர அமைந்த முழுப் பகுதியே உலகம் – பூமிஎன்று கொள்ளப்பட்டிருக்க-சொல்லப்பட்டிருக்க பாயாகச் சுருட்டிய பூமியோடு கடலில் புகுந்து ஒளிந்தான் இரண்யாட்சதன் என்றால், எந்தக் கடலில் எப்படிப் புகுந்தான்? எப்படிப் புகமுடியும்?

ப+மியை மீறிய கடல் ஒன்று ஆகாய அந்தரங்கத்தில் தொங்குகிறதோ! கடலை யும் தன்னுள் உள்ளடக்கியதுதானே பூமிஎன்பது?

கிறித்தவத்திலும் மடமை அகிலம் முழுவதும் வியாபித்துப் பரவியுள்ள மிகப் பெரிய மதமான கிறித்துவின் மத நூலான, மறை நூலான, வேத நூலான விவிலியத்தில்-பைபிளில் உலகம் தட்டை என்று கருத்து உரைக்கப் பட்ட நேரத்தில் கிறித்தவ மதத்தில் தோன்றிய அறிவியல் அறிஞர் கலிலியோ என்பவர் உலகம் தட்டை என்பதை மறுத்து உலகம் உருண்டை என்று சொன்னார் என்ப தும், தன் கருத்தை மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே வர லாற்றில் பதித்து நிறுவினார் என்பதும்தானே உண்மை!

உலகம் உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங் கண்டு செத்தொழிந்து மறையுமே என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்?

உலகமதம் என்ற அந்தஸ்தைப் பெற்ற கிறித்தவ மதத்தின் யோக்கியதையே சந்தி சிரிக்க-ஊர் மதமான இந்து மதத்தின் யோக்கியதை எவ்வாறு இருக்கும்?
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இந்து மதம் ஆனாலும் அல்லது உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்து ஆதிக்கம் செலுத்தும் கிறித்தவ மதம் ஆனாலும், இசுலாமிய மதம் ஆனாலும் மதம் என்று வந்தால் அவை அனைத்தும் மடமையைப் பரப்பும் மூடச் சாதனங்களோ என்பது புலனாகிறது அல்லவா?

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? எல்லாமும் ஒன்றுதானே! பாம்புக்கு நச்சுத் தன்மை உண்டு என்கிறபோது, அதில் குட்டிப் பாம் பென்ன? குஞ்சுப் பாம்பென்ன? எல்லாமும் ஒன்றுதானே!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது என்றும், அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்றும் தமிழ்ப் பெரும்புலவர் பேராசிரியர் சைவப் பெரியார் கா சுப்பிரமணி (பிள்ளை)யன் தாமெழுதிய தமிழர் சமயம் என்று நூலில் குறிப்பிட்டிருப்பதைப் பக்தத் தமிழா நீ அறிவாயா?

தீபாவளி என்பது வடநாட்டுக் குஜராத்தி மார்வாரிகளுக்குப் புத்தாண்டு புதுக்கணக்கு விழாவாகும் என்றும், தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்றும் பேராசிரியர் சைவத் தமிழ் அறிஞர் அ.கி பரந்தாமனார் தாமெழுதிய மதுரை நாயக்கர் வரலாறு என்னும் நூலில் எழுதி இருப்பதைப் பக்தத் தமிழா! நீ அறிவாயா? அதற்கு நீ அளிக்கும் விளக்கம்தான் யாது?

தீபாவளி சமண சமயப் பண் டிகை என்றும், பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்காலை தினமே தீபாவளிக்கு ஆதாரம் என்றும், தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும், நரகாசுரன் கதைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றும், தீபாவளி என்பதன் பொருள் (தீபம் ஸ்ரீவிளக்கு ஆவலி ஸ்ரீவரிசை) விளக்கு வரிசை என்றும் முதுபெரும் வரலாற்று ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி தாமெழுதிய சமணமும் தமிழும் என்ற நூலில் வெளிப்படுத்தி இருப்பதைப் பக்தத் தமிழா! நீ படித்து அறிந்தது உண்டா?

மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஒவ்வொரு மதத்தோடும் தமிழை இணைத்தும், இயைந்தும் ஆய்வு செய்து பல புத்தகங்கள் வெளியிட்ட வரலாற்றுப் புகழ் மிக்க சரித்திரப் பேரறிஞர் என்பது குறிப்பிடத் தக்கது கிறித்தவமும் தமிழும், பவுத்தமும் தமிழும், இசுலாமும் தமிழும், சமணமும் தமிழும் என்பன இவர் எழுதிய அரிய ஆராய்ச்சி நூல்கள் ஆகும்.
ஆரியப் பார்ப்பனர் கட்டுவித்தப் பொய்க் கற்பனைக் கதையே தீபாவளி என்றும், தீபாவளிக் கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும் சைவத் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தாம் எழுதிய தமிழர் மதம் என்ற நூலில் பகர்ந்திருப்பதைப் பக்தத் தமிழா நீ படித்ததுண்டா? பார்த்ததுண்டா?

தந்தை பெரியாரின் தன்மானப் பகுத்தறிவியக்கத் திற்குச் சிறிதும் தொடர்பில்லாத நூற்பெரும் நற்றமிழ் அறிஞர்கள் தீபாவளியை மறுத்துள்ளனரே-ஒருவருக்கொருவர் மாறுபட்ட, வேறுபட்ட, முரண்பட்ட கருத் துகளையும், கதைகளையும் சொல்லுகின்றனரே! ஏ தமிழா! குதர்க்கத்திற்கும், குழப்பத்திற்கும் வழிகோலு கின்ற தீபாவளிப் பண்டிகை உனக்கு ஒரு கேடா?

மலம் தின்னும் பன்றி

பூமியும், பன்றியும் புணர்ந்து கலவி செய்ய முடி யுமா? ப+மிக்கும், பன்றிக்கும் புணர்ச்சிய்யின் விளை வால் குழந்தை பிறக்குமா? அப்படிப் பிறந்த குழந்தை ப+மியின் சாயல் உடையதா? அன்றி, பன்றியின் சாயல் உடையதா?

உலகத்தில் இருப்பது ஒரு ப+மிதானே! அப்படி இருக்க இந்த வரலாற்றுக் கதை மற்ற நாட்டவர்களால் ஏற்றுக் கொண்டு அனுசரிக்கப்படவில்லையே! எப்படி எனில் தமிழ்ப் பூமிஎன்று தனியாக ஒன்று இருந்ததா? பூமிஒன்றுதான் நாடுகளே பலப்பல”அப்படி இருக்க இரண்யாட்சதன் சுருட்டியது ஒருமித்த உலக ப+மியையா? அல்லது உலக ப+மியில் அங்கம் வகிக்கும் தனித்த ஒரு நாட்டையா?

அது எப்படி உலக பூமியில் அங்கம் வகிக்கும் தனித்த ஒரு நாட்டை மட்டும் தனியாகப் பிரித்து சுருட்ட முடியும்?

பன்றியின் அவதாரம் மகாவிஷ்ணு எடுத்தார் என்றால், ஆஞ்சநேய அனுமார் குரங்குக் குட்டிச் சாமிக்குக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கும்பிட்டு மகிழ்ந்து கும்மாளம் அடிக்கும் பக்தர் கூட்டம் பன்றிக்கும் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கும்பிட்டு மகிழத்தானே வேண்டும்.

பக்தர் குழாமே! உங்கள் மன்னிப்பை வேண்டி இவ்வினாவைத் தொடுகின்றேன் மகாவிஷ்ணு எடுத்த அவதாரமாகிய பன்றி மலம் தின்னுகிறது என்றால் மகாவிஷ்ணுவை வணங்கும் பக்தர்களும், தீபாவளி கொண்டாடி மகிழும் தமிழர்களும் மலம் தின்னுவதில் தவறில்லை அல்லவா? தின்னுவார்களா? தின்னத் தயாரா?

சைவப் பெரியார் சிங்காரவேலு முதலியார் தொகுத்து எழுதி வெளியிட்ட ®அபிதான சிந்தாமணி”யில் பக்கம் 93 இல் நராகாசுரன் வராக (பன்றி) உருக்கொண்ட மகாவிஷ்ணுவிற்குப் பூதேவியிடம் பிறந்த அசுரன் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறாரே!

இராட்சசனா?

கடவுள் பெறுவது ராட்சசனா? மகாவிஷ்ணுவுக்கும், ப+மா தேவிக்கும் பிறந்த குழந்தை எப்படி அரக்கனாக-அசுரனாக-ராட்சசனாக இருக்கமுடியும்? மகாவிஷ்ணுவோ மக்களைக் காக்கும் படி அளிக்கும் பரந்தாமக் கடவுள், பூமாதேவியாகிய நிலமகளோ துச்சனர்களையும் பொறுத்துக் கொண்டு தாங்குகிற பொறுமைக் குணமும், தாய்மைக் குணமும் கொண்ட பேரறப் பெருந்தெய்வம் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை எங்ஙனம் கொடூரமிக்கதாக இருக்கமுடியும்?
எதற்கெடுத்தாலும் திருக்குறளை ஆதாரப்படுத்த முந்துகிறவாழ்வியல் நூல் என்று வள்ளுவத்தைக் காட்டி மகிழ்கிற மூத்த குடியாம் தமிழினமே! தீபாவளி பற்றிய கருத்துக்கு வள்ளுவத் திருக்குறளாம் உலகப் பொதுத் தமிழ் மறையில் ஆதாரம் ஏதும் உள்ளதோ?

அவதாரம் எங்கே?

தேவர்களைசுரர்களைத் துன்புறுத்தினான் என்பதற்காக இரண்யாட்சதனை நரகாசுரனைக் கொல்ல, அவதாரம் எடுத்து பன்றி வேடம் புனைந்த மகாவிஷ்ணு, சேலத்திலே இராமனைச் செருப்பால் அடித்து அவமானப்படுத்திய (இவ்வாறு பக்தி வேஷம் போட்ட போலி அரசியல்வாதிகளால் வலியச் சொல்லப்பட்டபடுகிற இக்கருத்தை நாம் வாதத்திற்காக ஏற்றுக் கொள்கிறோம்) தந்தை பெரியாரை-அன்னை மணியம்மையாரை விடுதலை ஆசிரியரும் கழகத் தலைவருமான கி வீரமணி அவர்களை இன்ன பிற கருஞ்சட்டைத் தொண்டர்களை தோழர்களை திராவிட இயக்கத்தவர்களை சம்ஹரித்து, போரிட்டு அழித்துக் கொல்ல ஏன் இன்று இது காறும் எந்த அவதாரமும் எடுக்கவில்லை? எடுப்பதாகத்தான் ஏதேனும் உத்தேசம் உண்டா?

நாயன்மார்கள் 63 பேர் என்பதோடும், ஆழ்வார்கள் 12 பேர் என்பதோடும், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதோடும் முடிந்துவிட்டதா? இனி நாயன்மார்களும், ஆழ்வார்களும், அவதாரங்களும் கிடையாதா?

பக்த கே(h)டிகளே! நீங்கள் அனைவரும் சேர்ந்து ஆண்டவனிடம் அவதரிக்க வேண்டிபெரியாரியக்கத்தவர்களை சம்ஹரிக்க வேண்டி வேண்டக் கூடாதோ!

64-ஆம் நாயன்மாரும், 13-ஆம் ஆழ்வாரும், 11-ஆம் அவதாரமும் பாவப் பட்டவைகளா?
கட்டை வண்டி காலத்திலேயும், அகல் விளக்கு காலத்திலேயும் மக்களைக் காக்க-துஷ்டர்களைச் சம்ஹரிக்க அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு மகானுபாவர் தற்போதைய இந்தக் கார் (பேருந்து, மின் விளக்குக் காலத்திலேயும்) காலத்திலே அவதாரம் எடுக்க ஏன் தயங்குகிறார்?
நரகாசுரனைச் சம்ஹரிக்க அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அண்மையில் நடந்த இந்தியா-சீனா-பாகிஸ்தான் படை எடுப்பின்போது எதிரியைக் கொல்ல நம்மைப் பாதுகாக்க ஏன் அவதரிக்கவில்லை?

ஏன், இன்றைய இலங்கைப் போரையாவது தடுத்து நிறுத்தி இலங்கைத் தமிழர்களையாவது காத்து அருள் பாலிக்க மகாவிஷ்ணு அவதாரம் செய்திருக்கலாமே! ஏன் செய்யவில்லை?
பெரியார் இயக்கத்தின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை இனி மகாவிஷ்ணுவின் அவதாரம் எக்காலத்திலும் கிடையாது என்பதுதானே உண்மை! இது பெரியாரின் பகுத்தறிவுக் காலம், எனவே, இனிப் பொய்ப் பிரச்சாரக் கட்டுக் கதைகள் செல்லுபடி ஆகாது என்ற தெளிவான முடிவுக்கு ஆரியம் வந்துவிட்டது என்பதுதானே உண்மை.

திராவிட மக்களை-திராவிட மன்னர்களை ஆரியர்கள் தம் சூழ்ச்சியின் திறனால் அடிமை கொண்டு இழிவுபடுத்திய நாளே தீபாவளிக் கதையின் (ஆரியர்களின் புராணக் கதைக் கருத்துப்படி) கருப்பொருளாக இருக்க, இவ்விழாவைத் திராவிடத் தமிழ் மக்கள் கோலாகலக் களிப்பு, கும்மாள மகிழ்வோடு கொண்டாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

அசுரர் யார்? தங்களுக்கு உடன்பாடான யாகம் செய்தல் என்னும் வேள்விக் கொள்கைக்கும், பலி இடுதல் என்னும் உயிர்க் கொலை கொள்கைக்கும் மாறுபட்ட அன்பு, அருள், கருணை, இரக்கம், ஈவு, ஒழுக்கம், சமரசம், சன்மார்க்கம், ஜீவகாருண்யம் முதலிய நன்னெறிக் கொள்கைகளைக் கைக்கொண்டு ஒழுகிய தமிழ்த் தலைவர்களை-தமிழ் மன்னர்களை ஆரியர்கள் அரக்கர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் இழிவுபடுத்தி உரைத்தனர் என்பதை உலக வரலாறு எழுதிய நேருப் பெருமகனார், அறிவுக் கடல் மறைமலை அடிகளார், தமிழ் அறிஞர், ந.சி கந்தையா (பிள்ளை), தனித் தமிழ்ப் பற்றுக் கொண்ட ஆரியத் தமிழ் அறிஞர் வி.கோ சூரிய நாராயண சாஸ்திரி என்னும் பரிதிமாற் கலைஞர், பசுமலை கணக்காயர் நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர் தௌ்ளத் தெளிவாய் எடுத்துரைத்து விளக்கிய பின்னருமா, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி முத்தமிழா! நீ ஆரியர்க்கு லாலிபடி அவர்தம் கீழ்மைக் கயமை சுயவாளித்தன காலித்தனக் கொள்கைகளுக்கு ஆட்பட்டு, நடை, பாவாடை விரித்து அமைத்து, எடுபிடி ஆளாய், முன்னோடும் பிள்ளையாய்-எடுப்பார் கைப்பிள்ளையாய் இருந்து முனைப்போடு முன்னின்று தீபாவளி கொண்டாடி மகிழ்கிறாய்.
யதார்த்த உண்மைக்கும், வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்து வராத-முரண்பட்டு இருக்கிற-பொய்ச் செய்திகளை எல்லாம் மதத்தின் பேராலும், கடவுளின் பேராலும் சொல்லி நம்மை இழிவுபடுத்துகிறஉலக அரங்கில் தாழ்வு படுத்துகிற இந்தத் தீபாவளியும், தீபாவளி பற்றிய கதைகளும் தமிழா! உனக்குத் தேவையா?

நீ பேயா! உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்துள் அலகையாய் வைக்கப்படும் என்ற குறளின் மூலம் வள்ளுவர் உலகத்து மக்கள் அனைவரும் உண்டு என்று ஒருமித்து, ஒத்துக் கொள்கிற ஒரு கருத்தை இல்லை என்று காரண காரிய விளக்கம் இன்றி மறுத்துப் பேசுபவன் பேயாக் கருதப்படுவான் என்று விளக்கினாரே, அந்த வகையில் அளவீடு செய்து பார்த்தால் உலகத்து மக்கள் அனைவரும் ஒருமித்த மனத்தவராய், காரணகாரிய அறிவு விளக்க அனுபவ ஆராய்ச்சி அடிப்படையில் உலகம் உருண்டை என்ற கருத்தை ஏற்றிருக்கும் வேளையில், தமிழா! நீ மட்டும் தீபாவளி கொண்டாடுகிற காரணமாக உலகம் தட்டை என்று சொல்லி உலகம் உருண்டை என்கிற உண்மைக் கருத்தைக் காரண காரியமின்றி மறுக்கிறாய் என்றால், நீயும் ஒரு பேய்தானே! பேய் என்னும் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் வாதத்திற்காகக் கேட்கிறோம்!
பெரியார் கொள்கையே நமக்கு வேண்டும்!

அதுவே நம்புகழ் வாழ்வைத் தூண்டும்!
மதக் கருத்தால் மடமையே அண்டும்!
மதவாதப் பொய்யை மாய்ப்போமே யாண்டும்!

தீபாவளி என்றால் என்ன?

புராணம் கூறுவது

 1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
 2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
 3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
 4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
 5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.
 6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
 7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனுடன் போர் துவங்கினார்.
 8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசுரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.
 9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
 10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாடவேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது.

பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?

சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?

எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித்ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.

வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்துகொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்கவேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர்.

புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தையும், உடலையும் பார்த்து பலர் அவர்களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணையுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர்.

ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர்களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரிவிக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தையும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத்திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி, ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப் பட்டுள்ளன.

மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந்திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக்கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர்களின் மணிக்கட்டை முறி, தோலைக் கிழி, முழங்கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப் படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண்டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படுபாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாச மாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளையடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்கின்றனர்.

இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திர ஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவிடர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்களுக்கு உதவிய துரோகிகளை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவிடர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுர குலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர் களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூதனர், பிசாசு, பூதம் என்று குறித் துள்ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப்பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்து பவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.

பழந்தமிழ் இலக்கியத்தில் தீபாவளிக்கு ஆதாரம் உண்டா? வினா எழுப்புகிறார் பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம்= விளக்கு; ஆவலி= வரிசை; தீப-ஆவலி=தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

நூல்: மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம்: 433,434

இடையில் புகுந்த இந்த மூடப் பண்டிகை தமிழ்நாட்டில் பரவலாகக் கொண்டாடப்படுவது எப்படி? இந்த வடநாட்டுப் பண்டிகையைத் தென்னாட்டுத் தமிழன் கொண்டாடலாமா? சிந்திப்பீர்!

இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர்.

இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறி வும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

விடுதலை, 27.10.2005

தீபாவளி என்றால் என்ன?

தந்தை பெரியார் – ‘உண்மை’

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமு மான காரியம் என்று 50 ஆண் டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப் பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும் இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மானத்தைக் கைவிட்டு அதனைக் கொண்டாடி வருகிறார்கள்.

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெறவிருப்ப மில்லாத மானங்கெட்டவர்கள் என்பதையும் காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன் அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்” என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி!

வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டு மிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம் மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை – விரதம், நோன்பு – உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள். இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும் வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக்கூட செவிப் புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லையே!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக்காட்டாகக்கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்கவில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமை யையும் மானமற்ற தன்மையை யும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் – பயி லும் மாணவர்களுக்கு எந்த விதத்தில்தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

 1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண் டான். 2. தேவர்களின் முறையீட் டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவ னைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார். 3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. 4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. 5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. 6. அந்தப் பிள்ளை தேவர் களை வருத்தினான். 7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார். 8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ் ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள். 9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டா டும்படி செய்கிறதே அல்லா மல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாரா வது சொன்னார்களா?

இதை ஆராய்வோம். இக் கதை எழுதிய ஆரியர்களுக் குப் பூமிநூல்கூடத் தெரிய வில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பார்ப்பான் சொன்னால் நம்ப வேண்டுமா?

பூமி தட்டையா? உருண் டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட் டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்கு வது? கடலில் ஒளிந்து கொள் வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக் கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமா வது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந் திக்க வேண்டாமா?

நரகாசூரன் ஊர் மாகிஷ் மகி என்ற நகரம். இது நர் மதை ஆற்றின் கரையில் இருக் கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர் களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற் காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?” என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும் அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) 1 ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2 தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிட்ணு பன்றி அவதார (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3 விரித்த உலகம் (ப+மி) அப் பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4 ஆசைக்கு இணங்கிய பன்றி (விட்ணு) ப+மியுடன் கலவி செய்தது.
5 அதன் பயனாய் ப+மி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6 அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7 தேவர்களுக்காக விட்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8 விட்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விட்ணுவின் மனைவி சத்தியபாமா நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.
9 இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10 இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?
இதை ஆராய்வோன் இக்கதை எழுதிய ஆரியர்களுக் குப் ப+மிநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது?
ப+மி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கக்கத்திலோ தலை மீதோ எடுத்துப் போக முடியுமா? எங்கிருந்து கொண்டு தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
விட்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று ப+மியை விரித்ததால் ப+மிக்கு பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
ப+மி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைப் பற்றிக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதிஷா என்று சொல்லப்படுறது. இது வங்காளத்தில் விசா மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுச் சாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து “கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும்” நாம் ‘ஆமா” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவது என்றால், இதை என்னவென்று சொல்வது?

தீபாவளி – ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பே! கி. வீரமணி எம்.ஏ., பி.எல்.

‘தீபாவளி’ பண்டிகைக்கும் தமிழர் – திராவிடர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. இது ஆரியப் பண்பாட்டு படையெடுப்பினால் திராவிடர் களிடையே தொத்திக் கொண்டு, பகுத்தறிவையும், பொருளையும் பாழ்படுத்தி, நம்மைக் காட்டுமிராண்டிக் காலத்திற்கு இழுத்துச் செல்லும் பின்னோக்கிய பயண முயற்சியாகும்.

இதைப்பற்றிக் கூறுகையில், சங்கராச்சாரிகள் முதல் அரசியல் தலைவர்கள்வரை ‘கிளிப்பிள்ளை’ப் பாடங்களைப்போல் ஆண்டுதோறும் செய்திகளைப் பரப்பும்போது, இது தீய சக்திகளை வென்று நன்மைகள் உண்டாகக் கொண்டாடப்படும் விழா என்று உளறிக் கொட்டுகின்றனர்!

அந்த மேதாவிகள், சேற்றை – மணம் கமழும் சந்தனம் என்று கருதி, பூசிக்கொண்டு கூத்தடித்துக் கும்மாளம் போடும் பக்தி போதையாளர்கள் – கொஞ்சம் நிதானத்துடன் சிந்தித்தால், இந்தத் தீபாவளிப் புரட்டு உடைவது உறுதி.

மறைமலை அடிகளாரின் கருத்தும் – கணிப்பும்!

பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் இவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் என்று எளிதில் எவரும் அலட்சியப்படுத்திட முடியாத ஒருவர். “அசுரர்கள்”, “அரக்கர்கள்” என்பது யாரைக் குறித்து, ஆரியப் பார்ப்பனர்கள் எழுதி வைத்துள்ளனர் என்பதை “தமிழ்க்கடல்” மறைமலை அடிகள் ‘வேளாளர் நாகரிகம்’ என்ற தமது ஆராய்ச்சி நூலில் (பக்கம் 61) எழுதியுள்ளதைப் படியுங்கள்.

“வேள்விகள்” (யாகங்கள்) எல்லாம் ஆரியரால் செய்யப்பட்ட வெறியாட்டு நாத்திக வேள்விகளேயாம். அவ்வேள்விகளை (யாகங்களை) அழித்து அவற் றைப் புரிந்த ஆரி யரை ஒறுத்து (தண் டித்து) அவர்தம் செருக்கினை அடக் கின பிட்சாடனருத் திரர், வீரபத்திரர் ருத்திரர் முதலியோரின் செயல்கள் எல்லாம் தமிழ் மக்களின் செயற்கருஞ் செயல்களேயாம்.

ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த சூரன் இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர், என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்” என்கிறார் தமிழ்க்கடல் மறைமலைஅடிகளார்.

சுரர் யார்? – அசுரர் யார்?

சுரபானத்தைக் குடித்தவர்கள் சுரர்கள்.  சுரபானத்தைக் குடிக்காதவர்கள், குடிக்க மறுத்தவர்கள் (திராவிடர்கள்)  அசுரர்கள் – அதாவது சுரர் அல்லாதவர்.

திருஷ்டம் பார்வை – அதிருஷ்டம் என்றால் பார்வையற்றது  குருட்டுத்தனம் என்பதுபோல எதிர்மறைப் பொருட்சொல்லேயாகும்!

பண்டித ஜவகர்லால் நேருவிலிருந்து பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் பலருடைய கருத்துகளையும் இதற்குச் சான்றாகப் பல மேற்கோள்களைக் காட்ட நம்மால் முடியும்.

தீயசக்தி “நரகாசுரன்” என்று கூறப்படுகிறான்; அவனைக் கொல்லுவதற்காகவே அவதாரங்களில் ஒன்றான “கிருஷ்ணன்” அவதாரத்தினையும் எடுத்தார் மகாவிஷ்ணு என்று எழுதி அறிவுக்குப் பொருந்தாத கதைகளை காலங்காலமாய்ப் பரப்பி வருகின்றனரே!

கிருஷ்ணனைவிட பெரிய தீய சக்தி வேறு உண்டா? புராண இதிகாச கதைப்படியே!

சின்ன வயதில் வெண்ணெய்த் திருடியவன் திருட்டுக் குற்றத்தினைச் செய்தவன் நல்ல சக்தியா? தீய சக்தியா?

‘பெண்கேலி’ கடவுள் கிருஷ்ணனே!

பெண்களை பதினாயிரத்திற்குமேல் மனைவியாகக் கொண்டவன் – கோபிகாஸ்திரீகள் என்ற மற்றவன் மனைவிகளையெல்லாம் தன் உடைமையாக தான் விரும்பியபோதெல்லாம் அழைத்தவுடன் வரவேண்டிய (Call  Girls)  என்பது மாதிரி நடந்துகொண்டவன் தீய சக்தியா? நல்ல சக்தியா?

பெண்கள் குளிக்கும் குளத்திற்கு அருகே சென்று கரைமீது அவர்கள் வைத்திருந்த புடைவைகளைத் திருடி வைத்துக்கொண்டு, மரத்தின்மீது ஏறி உட் கார்ந்து, அந்தப் பெண்களை உடையில்லாக் கோலத்தில் பார்க்க விரும்பி, அவர்கள் தங்கள் உடலைத் தண்ணீருக்குள் மூழ்கிப் பாதுகாத்துக்  கெஞ்சியபோது, மேலே வாருங்கள் என்று கூறிய படுகேவலமான, அசிங்கம், ஆபாசம், அருவருப்பு நிறைந்த செயலுக் குரியவன் தீய சக்தியா? நல்ல சக்தியா?

இன்று Eve- teasing   என்ற பெண் கேலியைச் செய்யும் வக்ரபுத்தி கொண்ட இளைஞர் களுக்கு வழிகாட்டியே, இந்த கிருஷ்ணன் என்றால், அதை எவரே மறுக்க முடியும்?

போரைத் தூண்டிய கடவுள்!

“போரற்ற உலகு தேவை” என்கிறபோது, போர் செய்ய மறுப்பவனைக்கூட, போர் புரிந்தே ஆக வேண்டும்; அப்போதுதான் உன் குலதர்மம் காப்பாற்றப் படும்; உன் குலப்பெண்கள் பிற வர்ணத்தாருடன் கலந்து விட்டால், வர்ணாசிரம தர்மம் அழிந்துவிடும் என்று கீதையில் போர்க் களத்தில் உபதேசித்த இந்த யோக்கிய சிகாமணியைவிட பெரிய தீய சக்தி வேறு உண்டா?

தன்னைப் பெற்ற தாயைக்கூட கொச்சைப்படுத்தும் வகையில் ‘பெண்களும், சூத்திரர்களும் பாவயோனியி லிருந்து பிறந்தவர்கள்’ என்று கூறியவன் தீய சக்தியா? நல்ல சக்தியா?

பொய் சொல்லத் தூண்டியவன்!

பாரதப் போரில் பாண்டவர் அணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கோயபெல்சுக்கு முன்னோடியாக, “அஸ்வத்தமா அதாகுஞ்சரா” என்று பொய் சொல்லும்படி யோசனை சொன்ன கண்ணன் தீயசக்தியா? நல்ல சக்தியா?

(இந்தக் கதை பீஷ்மரை ஜெயிக்க அவர் மகன் அசுவத்தாமன் இறந்ததாகச் சொல்லு என்கிறான். உண்மையில் அசுவத்தாமன் என்ற யானைதான் கொல்லப்பட்டது. இதை மாற்றி ஏமாற்றியவன் பகபவனா? நல்லவனா?)

இப்படி எத்தனையோ எழுதலாம். எவரும் மறுக்க முடியாது!

தந்தை பெரியார் கேட்கிறார்

தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் நாள் தீபாவளி என்பது சரியானதுதானா? பகுத்தறிவு உரைகல்லில் வைத்து உரைத்துப் பார்க்கச் சொல்லுகிறார்; பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார்.

“சகோதரிகளே, இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ, அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள்! விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணர முடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்! இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்பதேயில்லை. அப்பண்டிகையைக் கொண் டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவு செய்து துன்பப்படுகிறான். தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது – கடன் என்றால், ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது.

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர் போதலும், பட்டாசு சுடும்போது திடீரென வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப் பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவோ பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள்! இவைகளை எந்த இந்தியப் பொருளாதார – தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன். (‘குடிஅரசு, 20.10.1929)

பொருள்கள் நாசம்!

நமது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டுப் பற்றுதலால், தீபாவளியின்போது ஏராளமான பொருள்கள் நமது நாட்டில் வீண் விரயமாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட வீண் செலவுகளில் பட்டாசு முதலிய வெடிகள் சுடுதல், பலகார வகைகளை அளவுக்கு மிஞ்சிச் சாப்பிடுதல், புதுத்துணிகள் வாங்குவதில் தன் நிலைமைக்கு அதிகமாகச் செலவு செய்தல் முதலியன முக்கியமாகும். இவற்றில் வெடிகள் சுடுவதன்மூலம் நமது நாட்டுப் பொருள் சீனா முதலிய அந்நிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அவ்வந்நிய நாடுகளில் நமது நாட்டிலுள்ள மூட மக்கள் தேவைக்கு வெடிகள் செய்வதென்று மனித நன்மைக்கு உபயோகிமில்லாத ஒரு தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது. தீபாவளியில் தின்பண் டங்கள் தின்னவேண்டும் என்றிருக்கும் வழக்கத்தால் மக்களிடையே நோய் விருத்தியாகிறது. தின்பண்டங்களை ஒவ்வொருவரும் தனது தேக நிலைக்குத் தகுந்த அளவு நிரந்தரமாகப் புசித்து வரவேண்டுமேயொழிய – வருஷத்தில் சில தினங்களில் மாத்திரம் பண்டிகைகள் கொண்டாடும் விசேஷ தினங்களென ஏற்படுத்திக் கொண்டு – அந்த நாட்களில் மாத்திரம் அதிகமாகப் புசித்தால் நோயடைவது நிச்சயம். தமிழ்நாட்டில் அஜீரணத்தால் ஏற்படும் ‘காலரா’ என்னும் தொத்து நோய் ஒவ்வொரு வருஷமும் ஆரம்பமாவது தீபாவளி காலத்தில்தான் என்பதை அனைவரும் அறிவர்.

தீபாவளியில் புதுவஸ்திரம் கட்டியாகவேண்டி யிருக்கும் வழக்கம் மேற்கண்ட மற்ற இரண்டு தீங்குகளைவிட மிகவும் பாதகமானது. மக்களுக்குத் துணி அவசியம் எனக் கொண்டாலும் ஒவ்வொரு வரும் தனக்கு வேண்டிய துணிகளை நாளடைவில் அந்தந்தச் சமயத்திலுள்ள தேவைக்குத் தக்கவாறும், தனது பொருள் நிலைமைக்குத் தக்கவாறும் வாங்கிக் கொள்ளவேண்டும். பழைய துணிகள் கிழியாமல் வேண்டிய அளவு இருக்கும்போது, புதிதாய் வாங்க வேண்டியதில்லை. பொருள் கஷ்டம் ஏற்படும் காலத்தில் கிழிந்த ஆடைகளைக் கூடியவரையில் மறுபடியும் செப்பனிட்டுத் தைத்து உபயோகப் படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டுமேயொழிய, புதுப் புதுத் துணி வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற நியதியைக் கைக்கொள்ளக் கூடாது. ஆனால், தீபா வளிக் கொண்டாட்டம் என்னும் மூட சம்பிரதாயத் தின் காரணமாய் ஒருவன் தன் வசத்தில் ஏராளமான ஆடைகள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த போதிலும் – தற்சமயம் அவசிய செலவுக்கே பணமில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த போதிலும், பண்டிகைக் காலத்தில் புத்தாடை வாங்கி உடுத்தவேண்டுமென்று கட்டாயப் படுத்தப்படுகிறான். இதன் பயனாய் ஏழை மக்கள் தங்களுக்குவேண்டிய துணிகளைத் தீபாவளிச் சமயத்தில் தவிர வேறு சமயங்களில் வாங்காமலி ருக்கிறார்கள். துணி வியாபாரத்தில் ஒரு வருஷத்திய வியாபாரம் முழுவதும் ஒரு தினத்தில் நடத்தவேண் டியிருப்பதால், ஒரு நெருக்கடி ஏற்பட்டுத் துணி விலை அதிகப்பட்டு, ஏழைகளுக்கு நஷ்டமுண்டாகிறது. ஆகையால், நமது நாட்டு மக்கள் இவ்வித நெருக்கடி யிலும், கஷ்டத்திலும் பட்டு உழலாமலிருக்க வேண்டு மானால், தீபாவளிப் பண்டிகையைக் கைவிடவேண் டியதவசியம். தேச நலத்தை விரும்புகிறவர்களும் – ஏழை மக்களின் அறியாமையை அகற்றப் பாடுபடுப வர்களும் தங்கள் செய்கையில் தீபாவளியைக் கொண் டாடாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதிலும் – தீபாவளியைப் பகிஷ்கரிக்க வேண்டுமெனப் பொது மக்களிடையே தீவிரப் பிரச்சாரம் செய்வதிலும் முன்னிற்க வேண்டியது அவசியமாகும். பொது நன்மையைக் கோரும் அறிவாளிகளிடத் தில் இவ்விஷயத்தைப்பற்றி அபிப்பிராய பேதமிருக்க வேண்டியதில்லை. (‘குடிஅரசு’, தலையங்கம், 1.11.1931)

அறிவு ஆசான் தந்தை பெரியார் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

சிந்திக்க ஏன் தயக்கம்?

“பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவுதனை சிறிதுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் சிக்கனம் காட்டுகிறீர்கள்? பார்ப்பனரல்லாதவர்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? கோடிக் கணக்கான மக்கள் நாணமற்று, மானமற்று, கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.” – தந்தை பெரியார்.

இப்போது, ஆர, அமர, யோசித்துச் சொல்லுங்கள். தீமை எங்கே? நன்மை எங்கே இருக்கிறது? என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!
இவர்களின் பார்வையில்… அசுரன் செயல்களுக்கு யார் பொறுப்பு?

– இரா. செழியன்

பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் போய் ஒளிந்தான் என்று நரகாசுரன்பற்றிய கதையாகக் கூறப்படுகிறது. பூமியை உருண்டை என்று அறியாத ஒரு காலத்தில் உண்டான மூடக் கதைதான் இது!

அந்தக் கதைப்படிகூட திருமாலுக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் எப்படி அசுரன் ஆனான் என்று தெரியவில்லை.

ஓர் உண்மை தெளிவாகிறது. கடவுள்களுக்குப் பிறந்த நரகாசுரனும் ஒரு கடவுளாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் கடவுள் எப்படி மற்றவர்களுக்குத் தொல்லை கொடுத்தான் என்பதை விளக்க வேண்டும்.

அல்லது பிறந்தவன் அசுரன் (நரகாசுரன்) என்றால், அவனின் பெற்றோர்களும் (திருமாலும், பூமாதேவியும்) அசுரர்களாகத்தான் இருக்க வேண்டும். இரண்டில் எது உண்மை என்று இதுவரை விளக்கப்படவில்லை.

அன்று முதல் இன்றுவரை ஏதாவது அசுரர்கள் குற்றம் செய்திருந்தால் அதற்கு முழுப்பொறுப்பு அந்தக் கடவுள்களின் பொறுப்பே தவிர பிள்ளையாகிய அசுரர்களின் பொறுப்பல்ல!

தீபாவளியைக் கொண்டாடும் நாளில் இதுபற்றிச் சிந்திப்பார்களாக!

இனவுணர்வை அழிக்கும் சதி!

பண்ருட்டி ச. இராமச்சந்திரன்

தீமையை நன்மை வெல்லும் என்ற பெயரால் நரகாசுரன் வதை என்று நம்மை எல்லாம் ஏமாற்றி இனவுணர்வை அழிப்ப தற்காக ஏற்பட்டதே தீபாவளிப் பண்டிகை.

கட்டுக்கதைகளையும், மூடநம்பிக் கைகளையும் நம் ஆழ் மனத்தில் பதிய வைத்து, நம்மையே நம்ப வைத்து, நம் தலையிலேயே மிளகாய் அரைக்கும் போக்குதான் இது.

தெரிந்ததை உண்மை என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் இயல்பான அறிவைக் கொண்டதே திராவிடர் இனம். கண்ணுக்கும், புலனுக்கும் தெரியாத கடவுள்பற்றி அன்று கவலைப்படவில்லை. ஆனால், பின்னர் கண்மூடித்தனமாக கட்டுக்கதைகளைச் சொல்லி, நம்ப வைத்து இன அழிவுக்கு வித்திட்டது ஆரிய மாயை.

உண்மை இனப்பற்றாளர்கள் தீபாவளியைக் கொண்டாடாதீர்கள், நரகாசுரன் என்ற கதையளப்பை நம்பாதீர்கள்!

தந்தை பெரியார் காட்டிய வழியில், உண்மையை மட்டும் ஒப்புக் கொள்ளுங்கள்.

உண்மையே உயர்வு தரும்!

தீபாவளியைத் தவிர்ப்பது அறிவுக்கு நல்லது!

“இனமுரசு” சத்யராஜ்

தீபாவளி என்பது முட்டாள்தன மான பண்டிகை என்பது எனது கருத்து. தொழிலாளர்களுக்குப் போனஸ் என்பதுதான் இதில் முக்கிய மாகும். அரசு மனது வைத்தால் தமிழ்ப் புத்தாண்டான பொங்கலுக்கு இந்தப் போனசைக் கொடுக்கலாம்.

நாம் எதைச் செய்தாலும் அதன் வரலாற்றை, காரணத்தைத் தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். தீபாவளியைக் கொண்டாடுபவர்கள் அதற்காகக் கூறப்படும் கதைகளைச் சிந்தித்துப் பார்த்தார்களா? (இது வரலாறு அல்ல என்பது வேறு செய்தி).

தந்தை பெரியாரின் நூல்களை, கருத்துகளைப் படிக்காமலேயே தந்தை பெரியார் அவர்களைக் குறை கூறுகிறவர்கள் நாட்டில் இருக்கிறார்கள்.

அதுபோலவே தீபாவளி பற்றிக் கூறப்படும் அறிவுக்குப் பொருத்தமற்ற கதையினைத் தெரிந்து கொள்ளா மலேயே அல்லது தெரிந்து கொண்டாலும் பக்திச் சமாச்சாரம் என்பதால் அதுபற்றிச் சிந்திக்க மறுப்பதாலேயே இந்த மூடப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி என்பது கவுரவம் பார்க்கும் சடங்காகி விட்டது! பணத்தை வீண் விரயம் செய்கிறார்கள்.

திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்டது.  அதற்காக 20 வருட உழைப்பால் கிடைக்கும் பணத்தை வீணாகச் செலவு செய்வதில்லையா? அதுபோலவே பண்டிகை என்ற பெயராலே தீபாவளிக்கு வீண்செலவு செய்து உழைப்பையும் பொருளையும் வீணாக்குகிறார்கள்.

இதனைத் தமிழர்கள் தவிர்ப்பது அறிவுக்கும், உழைப்புக்கும் பொருளாதாரத்துக்கும் நல்லது என்பது என் கருத்து!

இரக்கமற்றவரா அரக்கர்?

அண்ணா

(அறிஞர் அண்ணா எழுதிய “நீதிதேவன் மயக்கம்” என்ற நாடகத் தில் ஒரு காட்சி. இராவ ணனைப் பார்த்து கம்பன் இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாத அரக் கன் என்ற குற்றச்சாட்டுக்கு இராவணன் மறுமொழி இதோ!)

இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாதார் அரக்கர்! உமது இலக்கண மல்லவா அது? கைகேயி அம்மையிடம் அந்த இரக்கம் ஒரு துளியும் இல்லையே! ஏன், அரக்கர் குலமாக்கவில்லை அம் மையை! இரக்கமென்ற ஒரு பொருள் இல்லாத காரணத்தாலேயே நானி ருந்த இலங்கை அழிந்தது என்றீரே, இரக்கத்தை எள்ளளவும் கொள்ளாத இந்த அம்மையார் இருந்தும், அயோத்திக்கு அழிவு வராத காரணம் என்ன? என் தங்கைக்குப் பங்கம் செய்தவர்களைப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் என் கண்முன், சீதை கதறிய போதிலும் இரக்கப்படக் கூடாது – இரக்கத்துக்காக வேண்டி, அரக்கர் குல அரச மங் கையின் அங்கத்தைத் துண்டித்த ஆரியர்களை வதைக்காது விட்டோமா னால், அரக்கர் குலத்தையே ஆரிய குலத்தின் அடிமையாக்கி வைக்கும் இழி செயல் புரிந்தவனாவோம் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தின் முன் இரக்கம் தலைகாட்டவில்லை. இரக்கம் காட்டாததற்காக நான் அழிந்து படுவதா! இரக்கமின்றி என் தங்கையைப் பங்கப்படுத்தி, வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன், தெய்வ மென்று கொண்டாடப்படுவது,

தேன் தமிழிலே இந்தக் கம்பனுக்குப் பாட்டு கட்டத் தெரிந்ததால், நீதி தேவா! இது சரியா? சீதையை நான் களவாடிச் சிறை வைத்தேன். மூவர்கள் இதுபோல் பலமுறை செய்திருக்கிறார்களே! நான் சீதையின் சம்மதம் கிடைக்கட்டும் என்று சிந்தையில் மூண்ட காமத்தைக்கூட அடக்கினேன். மூவர்கள் அழகிகளைக் கண்ட நேரத்தில், அடக்க முடியாத காமத்தால் ஆபாசங்கள் செய்திருக்கின்றனரே! எந்தத் தேவன் கற்பை மதித்தான்? எத்தனை ஆஸ்ரமங்கள் விபச்சார விடுதிகளாக இருந்ததற்குச் சான்று வேண்டும்? மானைக் காட்டி மயக்கி னேன் என்று கூறினர். முருகன் யானையைக் காட்டி மிரட்டினானே வள்ளியை! இங்கே உள்ள தேவரும் மூவரும் செய் யாததை நான் செய்ததாக ருஜுப் படுத்தும் பார்ப் போம்!

சீதை போன்ற ஜெகன்மோகினி என் கரத்திலே சிக்கியும் சீரழிக் காது நான் விட்டதுபோல எந்தச் சிங்காரியையாவது தேவரும் மூவரும் விட்டி ருப்பாரா? கூறுங்கள்! இரக்கம் இல்லை என்று குற்றம் சாற்றினது அக் ரமம்! அதற்காக இலங் கையை அழித்தது அநீதி! என் வேலை தீர்ந்தது. இனி நீதியின் வேலை நடக்கட் டும்..

(இராவணனின் நியாய மான வாதங்களை ஏற்று தீர்ப்புக்கூற இயலாமல் நீதிதேவன் மயங்கி விழு கிறான் என்று நாடகம் முடிகிறது)

கங்கா ஸ்நானம் ஆயிற்றா?”

மின்சாரம்  

தீபாவளியன்று ஒவ்வொரு வருடமும் ‘ஒழுக்கச் சீலரான’ காஞ்சி ஜெயேந்திரர் தொலைக்காட்சியில் ‘அருளுபதேசம்’ பொழிவார். ‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’ என்று கேட்பார்.

அது என்ன கங்கா ஸ்நானம்? தீபாவளியன்று விடியற்காலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தீபாவளியன்று எண்ணெய்யில் லட்சுமியும், நீரில் கங்கையும் வாசம் செய்கின்றாளாம்.

தீபாவளியன்று எந்த ஊரில், எந்த இடத்தில் எண்ணெய்த் தேய்த்து வெந்நீரில் குளித்தாலும் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்குமாம்.

புண்ணிய நதிகள் ஏழு; யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி. இதில் கங்கை முதலிடத்தைப் பெறுகிறாளாம். காரணம், கங்கை மண்ணுலகில் உற்பத்தியாகவில்லை. அதற்கு “ஆகாச கங்கை” என்று பெயர். கங்கை உற்பத்தியாகும் இடத்திற்குப் பெயர் விஷ்ணு பாதம்.

விண்ணுலகில் ஓடிக் கொண்டிருந்த கங்கையை மண்ணுலகில் கொண்டு வந்தவன் பகீரதன். கடும் தவமிருந்து இந்தக் காரியத்தைச் சாதித்தான். அவன் தவ வலிமை காரணமாக கங்கை விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு வேகமாக ஓடி வந்தாள். வந்த வேகத்தைத் தாங்காதே மண்ணுலகு!

சிவபெருமான் என்ன செய்தான்? கங்கையைத் தன் தலைமுடியால் தாங்கிக் கொண்டான். பகீரதன் வேண்டிக் கொண்டதால், சிவனின் சடா முடியிலிருந்து கங்கையின் ஒரு துளி பூமியில் விழுந்தது. அந்த ஒரே ஒரு துளிதான் இப்பொழுது பூமியில் ஓடிக் கொண்டிருக்கும் கங்கை.

உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் கங்கையில் குளித்துப் பாவங்களைப் போக்கிக் கொள்வதால், கங்கை பாவத்தின் பாரங்களைச் சுமப்பவள் ஆகிவிட்டாள். இதற்கு என்ன செய்வது என்று கங்கை பிரமனைக் கேட்க, “பூலோகத்தில் துலா மாதத்தில்” காலையில் நீராடினால் நீ செய்த பாவங்கள் எல்லாம் கரைந்து போய்விடும்? என்றானாம் பிர்மன். மாயூரத்தில் காவிரி நதிக்கரை ஓரம் உள்ள விஷ்ணு கட்டத்திலும் அதுபோல திருவரங்கத்தில் ரெங்கநாதர் கோயிலுக்கு அருகில் ஓடும் காவிரியிலும் துலா மாதத்தின் கடைசி நாளில் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும். இவ்வாறு இந்து புராணங்கள் அளந்து கொட்டு கின்றன.

ரொம்ப சரி. துலா மாதத்தில் காவிரியில் குளிக்கலாம் தான்… ஆனால், காவிரியில் மணல்தான் இருக்கிறதே தவிர, தண்ணீரைக் காண வில்லையே – எங்கு சென்று குளிப்பது?

கடவுள், சாத்திரம் சம் பந்தப்பட்ட விஷயமாயிற்றே – துலா மாதத்தில் காவிரியில் தண்ணீர் ஓடாமல் இருக் கலாமா? மனிதர்கள் பாவங் களைப் போக்கிக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும்; கங் கையின் பாவங்கள் எப்படி போவது?

தீபாவளி நாளில் அந்தப் பகீரதன் எங்கு இருக்கிறான் என்று தேடிக் கொண்டு வந்து நிறுத்துவாரா – தீபாவளியன்று – ‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’ என்று கேட்கும் சங்கராச்சாரியார்?

புண்ணிய நதிகள் அரசின் கட்டுத் திட்டத்திற்குள் முடங்கிவிடக் கூடுமா? கருநாடக முதல்வரின் கனவில் தோன்றி புனிதவதி காவிரி மிரட்டவேண்டியதுதானே? காவிரியால் முடியாவிட்டால், விஷ்ணுவின் கட்டை விரலில் பிறந்த கங்கையாவது கருநாடக முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைப் பணிய வைக்கலாமே!

புராணம் எழுதிய ‘புண்ணியவான்கள்’ புகல்வார் களா? சிறப்பு இதழ்கள் வெளியிடும் பத்திரிகை வியாபாரிகள்தான் கூறுவார்களா?

உலகம் பூராவும் ஆறுகள் ஓடிக்கொண்டுதானி ருக்கின்றன. அந்த ஆறுகளுக்கெல்லாம் இல்லாத புனிதம் இந்தியாவில் ஓடும் ஆறுகளுக்கு மட்டும் எப்படி வந்தது?

புவியியல் படித்த அறிஞர்கள்தான் கூறுவார்களா? புனிதம் பேசும் அந்தக் கங்கையின் உண்மையான நிலைதான் என்ன?

கங்கை ஆற்றின் மொத்த நீளம் 2,525 கிலோ மீட்டர். இந்த நதியில்தான் காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கலக்கிறது. துல்லியமாகச் சொல்லவேண்டும் என்றால், 20 மில்லியன் கலன் சாக்கடை நாள்தோறும் கங்கையில் சங்கமமாகிறது. நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரையும், குறையுமாக எரிக்கப்பட்டு கங்கையில் விசிறி எறியப் படுகின்றன. 9,000 கிழடாகிப் போன பசுக்கள் ஆண்டு ஒன்றுக்கு இந்தக் கங்கையில் உயிரோடு தள்ளப்பட்டுக் கொல்லப்படுகின்றன. (கோமாதா சீலர்கள் இதைப் பற்றியெல்லாம் வாய் திறப்பதில்லையே!)

காசியில் 2 லட்சம் மக்கள் பட்டுத் தொழிலில் ஈ டுபடுகிறார்கள். பட்டுத் தொழிலின் அத்துணை இரசாயனக் கழிவுகளும் ஆலிங்கனம் செய்வது இந்தப் ‘புனித’ கங்கையில்தான்.

இந்த அசிங்கமான அசுத்தமான கங்கையில் குளித்தால்தான் பாவங்கள் பஸ்பமாகும் என்ற நம்பிக்கையில் நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பேர் முழுக்குப் போடுகிறார்கள்.

1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் இந்தப் புனித கங்கையால் காசியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் தொற்றுநோய் வெடித்துக் கிளம்பி பல்லாயிரக் கணக்கானவர்களைக் காவு கொண்டது.

இன்னொரு புள்ளி விவரமும் மிக முக்கியமானது. இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தை கள் மரணம் ஆயிரத்துக்கு 94 என்றால், காசி வட் டாரத்தில் மட்டும் 133.94 ஆகும். இதற்குக் காரணம் வெளிப்படை – எல்லாம் புனித கங்காதேவியின் புன்னகைக் கடாட்சம்தான்!

பீகாரில் துர்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும், உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அம்மோனியா, சயனைடு, நைட்ரேட், நைட்ரேட்பினால் முதலிய நச்சுக் கழிவுகள் ஏராளமாகக் கலக்கின்றன.

பீகாரின் தலைநகர் பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு அவை மோட்சம் அடைவதற்காகக் கங்கையில் கரைக்கப்படு கின்றன.

கொல்கத்தா நகரில் மட்டும் 296 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் அத்தனைக் கழிவுகளும் கால் கழுவும் இடம் இதே கங்கைதான்! இவ்வளவுக்குப் பிறகும் காஞ்சி சங்கராச்சாரியார் கேட்கிறார் தீபாவளியன்று: “என்ன கங்காஸ்நானம் ஆயிற்றா?” என்று.

உங்கள் விடை என்ன?

இன்னொரு செய்தி தெரியுமா? இந்தியாவில் புனித நதிகளின் கரைகளில்தான் விபச்சாரம் வெகு ஜோராக நடைபெறுகின்றனவாம்! “எய்ட்ஸ்” நோய்கள் பரவுவதும் அங்குதானாம்!

“என்ன கங்கா ஸ்நானம் ஆயிற்றா?”

“ஆரியத்தின் வஞ்சக வலைக்கு அப்பட்டமான எடுத்துக்காட்டே தீபாவளி”

‘தினமணி’ கூறும் உண்மை!

“ஒளிமயமான இந்தப் பண்டிகை உற்சாகத்தையும் நம்பிக்கையும் அளிக்கிறது. நரகாசுரன் என்ற அரக்கன் வதம் செய்யப்பட்டதைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என புராணங்கள் கூறுகின்றன.

சிறீ கிருஷ்ணன் அவதாரம் எடுத்தபோது, சிறீதேவி, ருக்குமணியாகவும், பூதேவி – சத்திய பாமாவாகவும் அவதரித்தனர். பூதேவி மகனான நரகன் பிறந்தான். அவன் குணத்தால் செய்கையில் நரகாசுரன். ஆனால், மனிதக் குணங்களை இழந்தான். தீய குணங்களின் மொத்த வடிவமாகத் திகழ்ந்தான். தன் தாயால் மட்டுமே தனக்கு இறப்பு வரவேண்டும் என வரம் பெற்றிருந்த நரகாசுரன் – தேவர், துறவியர் உள்ளிட்ட அனைவரையும் துன்புறுத்தினான். ஆன்மீகப் பணிகள் தடைபட்டன. நரகாசுரனின் கொடுமையை சிறீகிருஷ்ணனிடம் முறையிட்டனர்.

நரகாசுரனை அழிப்பதற்கான காலம் வந்துவிட்டதை உணர்ந்தார் கிருஷ்ணன். அவனிடம் பணிந்து போவது போல ஒரு தோற்றத்தை அவர் உருவாக்கினார்.

இதைக் கண்ட சத்தியபாமா – நரகாசுரனை வதம் செய்கிறார். நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.”

மேற்கண்ட செய்திகள், “மகிழ்வுடன் வாழ வழிவகுக்கும் தீபாவளி” என்ற தலைப்பில் 22-10-2003 அன்றைய தினமணி – தீபாவளி சிறப்பு மலரில் வெளியாகியுள்ளது.

“சத்தியபாமா – பூமாதேவிக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்தவன் எப்படி நரக அசுரனாக இருக்கமுடியும்?

அந்த அசுரன் சொத்தெல்லாம் என்ன? யாகம் என்ற ஆரிய கலாச்சாரத்தை அவனது மண்ணில் தேவர்கள் செய்யவும் அவர்களது கலாச்சாரத்தைப் புகுத்த முயற்சித்ததும்தானே!

‘ஆன்மிகப் பணிகள்’ என்றால் என்னவென்று விவரிக்கப்படவில்லையா?

அது மட்டுமா? சூழ்ச்சியால்தான் இவன் ‘வாலி வதம்’ போல, பெண்ணை ஏவி கொன்றிருக்கிறான். இது ஆரியத்தின் கைவந்த புராணகாலம் தொட்ட நிலை. மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை ஏமாற்றி, அவர்களுக்கு வரவேண்டிய பங்கை தேவர்களே ஏகபோகமாக்கிக் கொண்டது போன்ற சூழ்ச்சிக் கதை பொய்யும் புரட்டும் ஆகும்.

‘தேவர் அனையர் ‘கயவர்’ என்ற திருவள்ளுவர் வாக்கினை மெய்ப்பிப்பது அல்லவா?

இதை மானமுள்ள, அறிவுள்ள தமிழர்கள் கொண்டாடலாமா?

தீபாவளி தமிழர்களுக்கு உரியதா?

தமிழறிஞர்கள் கருத்து!

தொகுப்பு: குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்

தீபாவளிப் பண்டிகை – தமிழர்க்கு எவ்வகையிலும் ஒவ்வாதது என்றும் – காட்டுமிராண்டிக் கால கற்பனைகள் நிறைந்தது என்றும் – அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், உண்மை நிலைக்கும், இயற்கைத் தன்மைக்கும் முரணானது என்றும் தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கத்தவர்களாகிய நாமும் முக்கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நாட்டிலே பேசியும், ஏட்டிலே எழுதியும் அறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம். என்றாலும், நாம் எதிர்பார்த்தவாறு மக்கள் இன்னும் திருந்தி தெளிந்த அறிவு பெற்றார்கள் இல்லை. தீபாவளி மோகம் மக்களை இன்னமும் வாட்டி வதைத்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் நமது பகுத்தறிவு நாத்திக இயக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடான, வேறுபாடான எண்ணம் கொண்ட தமிழக ஏழு பெருந்தமிழ் அறிஞர்களின் கருத்துரைகள் நமது கொள்கைக்கு வலுவூட்டி அரண் செய்வதாக அமைந்திருக்கின்றன. மொத்தத்தில் அத்தமிழறிஞர்களின் கருத்துரைகள் தீபாவளி தமிழர் விழா அன்று என்பதையும், தீபாவளிக்கு இலக்கியச் சான்றுகள் ஏதும் இல்லை என்பதையும், தீபாவளி வடநாட்டுப் பண்டிகை என்பதையும், தீபாவளி சமண சமயப் பண்டிகை என்பதையும் நன்கு தெளிவுபடுத்துகின்றன. தீபாவளி கொண்டாடி மகிழும் பக்த அன்பர்களாம் தமிழ்ப் பெருமக்கள் மதி நலமும், மான உணர்வும் பெற வேண்டும் என்ற நன்னோக்கில் அத்தமிழ் அறிஞர்களின் கருத்துகள் ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன.

 1. தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற் காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படு கிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயி னும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.  (ஆசிரியர்: கா. சுப்பிரமணிய (பிள்ளை), நூல்: ‘தமிழ் சமயம்” பக்கம்: 62. )

 1. வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியா வின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படு கிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக்கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என் பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜயநகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வரு கிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங் காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப ஆவலி=தீபா வலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுது கிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை – செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்த தில்லை.

(ஆசிரியர்: பேராசிரியர் அ.கி. பரந்தாமனார், நூல்: ‘மதுரை நாயக்கர் வரலாறு’ பக்கம்: 433-434)

 1. பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!

வடநாட்டில் அக் காலத்திலிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திரு விழா கொண்டாடி வந்த னர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வட நாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமி ழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களா லும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறி குறியாகத் தீபாவளித் திரு நாள் கொண்டாடப்படு வதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நர காசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக்கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும் கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீப ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்… ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக் குச்சிறிதும் இசைவது அன்று.

(ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள். நூல்: “தமிழர் மதம்” பக்கம்: 200-201)

 1. வாரியாரும் மறுக்கிறார்!

தீபாவளியின் உண்மை அறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பா லோர் நரகாசுரனைக் கண் ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார் கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தால் கொண்டா டப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசு ரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படி யானால் இரணியன், இராவணன், இடும்பன் மகன், சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண் டாட்டம் இருக்கவேண்டும். ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவ ளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகா சுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டது அன்று. (ஆசிரியர்: திருமுருக கிருபானந்தவாரியார், நூல்: “வாரியார் விரிவுரை விருந்து” பக்கம்: 95)

 1. அகராதிக் குறிப்பில்…

இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவ ராக (பன்றி)வுருக்கொண்டு கொம்பினால் இவன் மார் பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தி னார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறி வியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மத வாதத்தை வற்புறுத்து கிறது) (169) நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணு விற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934) சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப் பெயர் அடைந்த தேவர் (705) அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப் பார்ப் பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட் டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)

(ஆசிரியர்: சைவப் பேரறிஞர் ஆ. சிங்காரவேலு முதலியார், நூல்: “அபிதான சிந்தாமணி”)

 1. சமண சமயப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண் மனையிலே தங்கி இருந்த போது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறி வுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடை பெற்ற இந்தச் சொற் பொழிவு விடியற்காலை யில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆன படியினாலே சொற்பொழி வைக் கேட்டுக் கொண் டிருந்த மக்கள் அனை வரும் தத்தம் இல்லம் செல் லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல் லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்ப தைக்கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வர வழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத் திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக் கள் நினைவு கூர்ந்து வழி படும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற் பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை : தீபாவளி) மகாவீரர் விடி யற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற் காலையில் கொண்டாடப் படுகிறது. விடியற்காலை யில் நீராடிய பின்னர் திரு விளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடு வது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர் கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டி கையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதா யிற்று. ஆனால் பொருத்த மற்ற புராணக் கதை களைக் கற்பித்துக் கொண் டார்கள். திருமால் நரகா சுரனைக் கொன்றார் என் றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறை யில் கொண்டிருந்த பழக் கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்ய மில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல் லாமல் புதிதாகக் கற்பித் துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

(ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி நூல்: “சமணமும் தமிழும்” பக்கம்: 79-80)

தீபாவளி: அறிவுக்குப் பொருத்தமற்ற கதை

வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக் களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த கார ணத்தால் மக்கள் அவ் விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்தி லேயே வீடு பேறு அடைந் தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந் தனர். மகாவீரர் வாழ்வு நீத் ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன்கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை, தீபாவளி = விளக்கு வரிசை) மகாவீரர் விடி யற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலை யில் மக்களால் கொண்டா டப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக் கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக் களால் கட்டி விடப்பட் டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத் தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவி னர். அந்நிலையிலும் தீபா வளியைக் கொண்டாடி னர். அப்பழக்கம் பிற சம யத்தாரிடையேயும் நாள டைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத் திகள் முதலியோர் இன் றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும். (ஆசிரியர்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் நூல்: ‘தமிழர் நாகரிகமும், பண்பாடும்” பக்கம் 33-34)

ங்கராச்சாரியார் மடம்

ஆதிசங்கரர் நாற்றிசைகளுக்கும் நான்கு மடங்கள் தாபித்தனர். அவை வடக்கு அரித்வாரம், கிழக்கு ஜகந் நாதம், தெற்கு சிருங்கேகிரி, மேற்கு துவாரகையாம். இவைகளுள் சிறந்தது சிருங்கேரியாம். ³ சிருங் கேரியின் கிளைமடம் விருபாக்ஷமாம். வித்தியாரண்ய சுவாமிகள் காலத்துப் புஷ்பகிரிமடம் உண்டாயிற் றென்ப. பின்னிருந்தவர்களால் கும்பகோணம், ஆம்நி சிவகங்கை, காகர்ல மடங்களுண்டாயின (‘அபிதான சிந்தாமணி” பக்கம் 1604) ஆதிசங்கரரால் உண்டாக்கப்பட்டதல்ல காஞ்சீபுரம் மடம் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் தேவை?

மகாவீரரை மறைப்பதற்கு நரகாசுரன் கதை

கு.வெ.கி. ஆசான்

எல்லாம் வல்ல இறை வன் மும்மூர்த்திகள் ஆகி றான் என்பது இந்துக் களின் நம்பிக்கை. அந்த மூவர், பிரும்மா, விஷ்ணு, சிவன் என்பவர்கள். விஷ்ணு எடுத்த அவதாரம் அவர்களில் விஷ்ணு, பன்றி அவதாரம் எடுத்து நரகாசுரனைப் பெற்றெடுத்தான். பெற்ற பிள்ளை யைக் கிருஷ்ணாவதாரத் தில் கொன்றான். நரகா சுரன் கொல்லப்பட்டதை எண்ணெய் தேய்த்துக் குளித்தும், புத்தாடை உடுத் தியும், பட்டாசு வெடித் தும் கொண்டாடுகிறார்கள். ஓர் அவதாரத்தில் பெறுவதும், மறு அவ தாரத்தில் பெற்றதைக் கொல் வதுமான ‘லீலையை’ வெறுத்து ஒதுக்காமல் கொண்டாடுவது கேலிக் குரியது அல்லவா எனச் சிந்திக்காத மூடர்களாக மக்களை எவ்வாறு ஆக்க முடியும் என்பதை ஆரியர் வழிவந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் பார்ப்ப னர்கள் ஒரு கலையாகக் கற்றுள்ளனர்.

சிவன் தாங்கிய வடிவம்

மும்மூர்த்திகளில் இன் னொரு கடவுள் சிவன். அவனும் அவனுடைய மனைவியான பார்வதியும் யானை வடிவம் எடுத்துக் கலந்ததால், கணேசன் எனும் யானை முகம் கொண்ட பிள்ளை பிறந்தது என்பது புராணம். அந்தப் பிள்ளையாரை ஊரெங்கும் அரச மரத்தடி யில் அமர்த்தி விளம்பரப் படுத்தி, வேடிக்கைப் பொரு ளாகப் பாமரர்களுக்கு அறிமுகப்படுத்தி, இப்பொழுது, விநாயகர் எனப்படும் அந்த கணபதி பொம்மைகளைத் தூக்கிக் கொண்டு, மதவெறி ஆட்டம் போடு வதற்கு இந்நாட்டு வெகு மக்களைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

புத்தர்

சித்தார்த்த கவுதமன், அரச மரத்தின் அடியில் அமர்ந்து, ஆழ்ந்த சிந்த னையில் மனங்குவித்து, அறிவுத் தெளிவு பெற்று, புத்தன் எனும் நிலையை அடைந்தான். புத்தரின் அறிவு சார்ந்த அன்பு நெறி உலகத்திற்குப் பண்பாட்டைத் தந்தது. பாமரர்கள் உயர்வதற்கு வழிவகுத்தது. அந்த நெறியால் மனவளம் பெற்ற மக்கள், புத்தரின் வடிவை அரச மரத்தின் கீழ் வைத்துப் போற்றினார்கள். ஆனால், வேதியப் பார்ப்ப னர்கள் அதை விரும்ப வில்லை. ஏனென்றால், புத்தர் வேதத்தில் கூறப்பட்டுள்ள வருண தருமத்தையும், அதனால் பிராமணர்கள் எனச் சொல்லப்படும் பார்ப்பனர்கள் உயர்வைக் கொண்டாடுவதையும் திட்டவட்டமாக மறுத்தார். ஆகையால் பவுத்த நெறியின் செல்வாக்கை ஒழிப்பதற்கு, யானைத் தலையுடன் கூடிய தொந்தியை வளர்த்துக் கொண்ட சிரிப்பை உண்டாக்கத் தக்க சிலையை அரச மரத்தின் கீழ் வைத்து, அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நகைச் சுவையும் ஆபாசமும் கலந்த கதைகளைக் கட்டி, அதில் மக்களை மயக்கி, அவர்களின் பண்பாட்டு வளர்ச்சியைக் குலைத்தனர். இப்பொழுது புத்தரை மறந்து விக்னேஸ்வரன் எனும் கணபதி (கஜபதி)யை மூடமக்கள் பற்றிக் கொண்டு சீரழிக்கிறார்கள்.  பார்ப்பனர்கள் பலன் பெறுகிறார்கள்!

மகாவீரர்

புத்தருக்குச் சற்று இளையவர் மகாவீரர் (கி.மு. 539-467), புத்தரைப் போலவே கடும் தவத்தாலும், ஆழ்ந்த சிந்தனையாலும் அறிவுத் தெளிவு பெற்று, மக்கள் மத்தியில் வாழ்ந்து, அவர்களுடைய மொழியில், எளிய முறை யில் உயர்ந்த கருத்துக் களைச் சொன்னவர். உலல் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் ஆன்மா உண்டு எனச் சொன்னவ ராயினும், கடவுளை மறுத் தவர். வேதங்களை புத்தரைப் போன்றே எதிர்த்தவர். வருண தருமத்தை ஏற்காதவர். ஆகையால் அவரைப் பார்ப்பனர்கள் வெறுத்தனர். கடவுளை மறுத்தவர்களை அவர்கள் ஏற்றது உண்டு. ஆனால் வேதம் பொய் என்றும், வருண தருமம் கூடாது என்றும், பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்றும் சொல்கிறவர்களின் கருத் துக்கள் பரவாமல் தடுப்ப தற்குப் பார்ப்பனர்கள் அனைத்துச் சூழ்ச்சிகளையும் செய்வார்கள்.

மகாவீரர் எல்லா மக்களும் ஒன்று எனும் அன்பு நெறியைப் பரப்பியபடியே, பெருந்திரளான மக்களுக்கு அறிவுரைகள் கூறிக் கொண்டே ஒரு நாள் மறைந்தார். ஆனால், உடலால் மறைந்தாலும், அவருடைய நெறி ஒளியாய் இருந்து வழிகாட்டுகிறது என்பதை என்றும் நினைவில் கொள்ளுவதற்கு அடையாளமாக, மகா வீரர் மறைந்த நாளான விளக்கு ஏற்றிவைத்துக் கொண்டாடினார்கள்.

தீபாவளி

அரச மரத்தை எவ்வாறு கணபதியுடன் தொடர்பு படுத்திப் புத்தரை மக்களிடமிருந்து மறைத்தார்களோ, அதைப் போன்றே ஒளியுடனும் தொடர்புடைய மகாவீரரை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்கு தீபாவளிக்கு வேறு கதையைக் கட்டிவிட்டார்கள்.

தீபம்

ஆவளி என்பது தீபாவளி. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளை வரி சையாக வைத்து மகாவீரருக்கு மரியாதை செலுத்தி, அவர் உபதேசித்த சமு தாயச் சமனிய நெறியைப் போற்றுவது. இந்த உண் மையை மறைப்பதற்கு, ஆபாசமும் மூடத்தனமும் மிக்க பன்றி அவதாரக் கதையைக் கூறி மக்களை வேதியர் ஏமாற்றினர். அது இன்றுவரை தொடருகிறது.

ஆனால், இனிமேலும் நகைப்பதற்கும் அவமா னத்திற்கும் இன இழிவுக் கும் உரிய நரகாசுரன் கதையை நம்பி, தீபாவளி யைக் கொண்டாடலாமா? அசுரர்கள் யார்? அரக்கர்கள் யார்?

அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும் புரா ணங்களில் சொல்லப்படு கின்றன. நாகாசுரன் என் னும் சூரபத்மன், இரண் யாட்சதன் என்பவர்கள் எல்லாம் வதை செய்யப் பட்டார்கள் என்றும் கூறப்படுவதோடு மட்டு மன்றி, இந்த வதைகளை கோயில் திருவிழாக்களாக வும், பண்டிகைகளாகவும் ஆக்கப்பட்டு விட்டன. உண்மையிலேயே வர லாற்று ரீதியாக இந்த அரக்கர்களும் அசுரர் களும், இராட்சதர்களும் யார்? இதோ வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அவர்கள் எழுதிய “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” என்ற நாடக நூலில் முகவுரைக் குறிப்புகள் என்ற பகுதியில் இடம் பெற்ற வரலாற்றுக் குறிப்புகள் இங்கே தரப் படுகின்றன.

“ஆரியப் பார்ப்பனர்கள் அவசிய நிமித்தமே தமிழை உபயோகிக்கிறார் கள். அதாவது, ஆங்கி லத்தைக் கற்றுக் கொள் வதுபோல. அவர்களுக்குச் சொந்தமொழி சமஸ்கிருத மாகும். ‘தமிழைவிட சமஸ் கிருதமே மேல்’ என்பதே அவர்களின் முடிந்த முடிபு. ஆகையால் பார்ப்பனர்கள் தமிழரல்லர்” ஸர். ஏ.டி. பன்னீர்செல்வம், வேலூர் சொற்பொழிவு – 27.12.38)

“இராமன் காலத்தில் தென் இந்தியா ‘தஸ்யூக்கள் ‘ராக்ஷஸர்களுக்கு’ச் சொந்தமாயிருந்தது. இவர் கள் ஆரிய முனிவர்கள் செய்து வந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலி ருந்து வந்த ஆரியர் களைப் போலவே இந்த ‘ராக்ஷஸர் கள்’ என்பவர்களும் நாகரி கமடைந்திருந்தார்கள்.” – பி.டி.சி. சீனிவாசய்யங்கார் ”இந்திய சரித்திரம், முதற்பாகம்” – பக்கம் – 19

“ஓ! இந்திரனே! இடியை வைத்திருப்பவனே! எங் களுடைய பிரார்த்தனை யைக் கேள்! ‘தஸ்யூக்களின்’ மீது இடியைப் போடு! ‘ஆரிய’ருடைய பலத்தை யும் கீர்த்தியையும் அதிகப் படுத்து.” “ரிக்வேதம்” அதிகாரம் – 1 (103:3) “நம்மைச் சுற்றி நாலா பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் இருக்கிறார் களே, அவர்கள் யாகம் செய்வதில்லை. அவர்கள் ஒன்றையுமே நம்புவ தில்லை. அவர்களு டைய பழக்க வழக்கங்களே வேறாயிருக்கின்றன. அவர் கள் மனிதர்களே அல்லர் ஓ! எதிரிகளை அழிப்ப வனே! அவர்களைக் கொல்லு; ‘தஸா’ வம்சத்தை அழித்து விடுவாயாக!” “ரிக்வேதம்” அதிகாரம் 10 (52-8)

“ஆதிகாலத்துப் பிராமணர்கள் இரத்தத்தைத் தொடுவதில் அவமானப் படவில்லை. அவர்களு டைய கடவுள்களுக்கு மிரு கங்களைக் கொன்று யாகஞ் செய்தார்கள்.” டி.ஸி. ஆலன், ”இந்திய சரித்திரம்” – (பக்கம் 8) “காடுகளிலிருந்த மக் கள் யாரென்பது ராமருக் கும் அவரைச் சேர்ந்த ஆரியர்களுக்கும் தெரி யாது. அழகில்லாதவர் களைக் ‘குரங்கு’ களென்று அழைத்தார்கள். அவர்க ளிலேயே மிகுந்த பலமும் தைரியமும் செல்வாக்கு முடைய வர்களை ‘அரக் கர்க’ளென்று அழைத்தார் கள். தென் இந்தியாவில் வசித்த மக்களே இப்பெய ரால் அழைக்கப்பட்டார் கள்.” சுவாமி விவேகாநந்தர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்; ”ராமாயணம்” (பக்கம் – 587, 589) “இராமாயணக் கதை யென்பது வடஇந்திய ஆரி யர்கள் தென் இந்திய’ தஸ்யூ’க்கள் அல்லது திரா விடர்கள் மீது படையெ டுத்து வெற்றி பெற்றதைச் சித்திரிப்பதாகும்.” பி. சிதம்பரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்., ”திராவிடரும் ஆரியரும்’ (பக்கம் – 24) “ஆரியர்களின் ஒழுக்க ஈ னமான செயல்களில் குடிப் பதும் சூதாடுவதும் சிறந்த வைகளாகும். இவை இரண்டையும் நிரூபிக்க ரிக் வேதத்தில் அதிகச் சான் றுகள் இருக்கின்றன.” – ராகோஸின், “வேதகால இந்தியா”

“இராமாயணக் கதை யானது, புரோகித வகுப்பாருக்கும் யுத்தவீரர் கூட்டத்திற்கும் உண்மையா கவே நடந்த சச்சரவையும் சண்டையையும் குறிப்ப தாகும். இவ்விஷய மானது இலக்கிய உருவத்தில் உப நிஷத்துகளிலுமிருக்கிறது. இராமன் தென் இந்தியாவிலுள்ள ஆரியரல்லாத கூட் டத்தோடு நட்புக் கொண்டான். அவர்களே குரங்குகளென்றும், கரடிகளென்றும் வர்ணிக்கப்படுகிறார்கள்.”

– ரொமேஷ் சந்தர்தத்  (‘பண்டைய இந்தியாவின் நாகரிக வரலாறு – பக்கம் 139, 141)

 1. “இராமாயணக் கதை காலத்தில் தென் இந்தியா முழுவதும் ஆரியரல்லாதார் வசித்து வந்தார்கள். “இவர்களைத்தான் இராமாயணத்தின் ஆசிரியர் குரங்குக ளென்றும், கரடிகளென்றும் இலங்கையிலுள்ள ஆரியரல்லாத மக்களை அசு ரர்களென்றும் வர்ணித்து எழுதி வைத்தார்.” ரொமேஷ் சந்தர்  ”புராதன இந்தியா” (பக்கம் 52)

“ஆரியரல்லாத தேச மக்கள் காடுகளுக்குள் விரட்டப்பட்டார்கள். அதுவும் போதாதென்று அவர்களை ‘ராக்ஷசர்கள்’ என்றும், அரக்கர்கள் என்றும் ஆரியக் கவிகளும், ஆரியப் புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதவர்களுக்கு ஏற்கனவே இருந்த ‘தஸ்யு’ அல்லது ‘விரோதி’ என்ற பெயர் நாளடைவில் பிசாசு, பூதம், ராக்ஷஸன் என்ற பெயர்களாக மாற்றப் பட்டு விட்டன.”

ஸர் வில்லியம் வில்ஸன் ஹண்டர்  ”இந்திய மக்களின் சரித்திரம்” (பக்கம் 41)

“திராவிடர்கள் தங்கள் மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரிய வேண்டியிருந்தது. இத்தகைய சண்டைகளின் வேகத்தையும், கடு மையையும் குறிக்கக்கூடிய பல ஸ்லோகங்களை ரிக் வேதத்தில் காணலாம்.” டாக்டர் ரமேஷ் சந்த்ர மஜும்தார் ஆ.ஹ., ஞா.ன. ப்ரொபஸர், டாக்கா யுனிவர்ஸிட்டி ”பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்” (பக்கம் 22)

“இராமாயணக் கதையானது ஆரியர்களுடைய பலத்தைக் குறிப்பிடவும், அவர்களுடைய எதிரிகளும், விரோதிகளுமாகிய திராவிடர்கள் எவ்வளவோ உயர்ந்த நாகரிகத்தை அடைந்திருந்துங்கூட, அவர்களை மிக மோசமான கேவலமான முறையில் சித்திரித்துக் காட்டுவதற்காகவும் எழுதப்பட்டதாகும்.” புலவர் டி. பொன்னம்பலம் பிள்ளை ”மலபார் க்வார்டலி ரெவ்யூ”

“வெற்றி பெற்றவர்களுக்கு இயற்கையாக ஏற்படும் அகங்காரத்தில் பிராமணர்கள் தங்கள் விரோதிகளாகிய ‘தஸ்யூக்களை’க் குரங்குகளென்றும், கரடிகளென்றும், ராக்ஷசர்களென்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இவ்வாறு இழிவுபடுத்தப்பட்ட வகுப்பார்களிட மிருந்து பல நாகரிகங்களை இப்பிராமணர்களே கற்றுக் கொண்டார்களென்பது குறிப்பிடத் தக்கதாகும்.” ஜோஷி சந்தர் தத், ”இந்தியா – அன்று இன்று” (பக்கம் 15) “இந்திரனையும் இதர கடவுள்களையும் பூஜித்தவர்களும், அவைகளைப் பின்பற்றியவர்களும் ‘தேவர்கள்’ என்று சொல் லிக் கொண்டார்கள். இந் திரவணக் கத்தை எதிர்த்த வர்களையும், யாகங் களை எதிர்த்தவர்களையும் ‘அசு ரர்கள்’ என்று அழைத் தார்கள். இவ்விரு கூட் டத்தாருக்கும் விடாப் பகை இருந்துகொண்டே வந்தது.”  (ஏ.ஸி. தாஸ் ஆ.ஹ., க்ஷ.டு., சரித்திர ஆசிரியர், கல்கத்தா சர்வகலாசாலை ”ரிக்வேத காலத்து இந்தியா – முதற்பாகம்” (பக்கம் 151)

 

 

About editor 3015 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply