சென்றது இனி மீளாது மூடரே!
நக்கீரன்
(கடந்த யூலை 4, 5ம் நாட்களில் அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 16வது ”தமிழர் திருவிழா” நியூ யேர்சி மாநிலத்தில் Trenton நகர் யுத்த நினைவு அரங்கில் வெற்றிகரமாக நடந்தேறியது. இந்த மாநாடு தொடங்கு முன்னர் கொழும்பில் இருந்து வெளியாகும் The Island
வி.புலிகளுக்கு நிதி திரட்டுவதற்கே இந்த மாநாடு நடைபெறுவதாக ஒரு பொய் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்திக்கு மேலும் மெருகூட்டி The Hindustan மற்றும Times Of India செய்தி வெளியிட்டன. இந்தப் பின்னணியில் நடந்த மாநாட்டை மனம்போன போக்கில் திரு. கவுதம் என்பவர் ”தமிழோவியம்” என்ற இணைய தளத்தில் ஒரு கட்டுரை வரைந்திருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்கைப்படுத்துவற்கென்றே ஒரு பார்ப்பனியக் கூட்டம் எப்போதும் காத்திருக்கிறது தெரிந்ததே. இதில் துக்ளக் சோ, இந்து ராம், இந்துஸ்ரான் ரைம்ஸ் பாலச்சந்திரன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். புதிதாக அதில் திரு. கவுதம் கூட்டுச் சேர்ந்திருக்கிறார். அவர் எழுதிய கட்டுரைக்குப் பதில் கட்டுரையே இது);
வணக்கம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “The voice is the voice of Jacob, but the hands are the hands of Esau.”
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைபற்றி திரு. கௌதம் என்பவர் தன் கைப்பட எழுதியிருந்தாலும் அவரது கருத்துக்கள் துக்ளக் சோ, இந்து ராம், இந்துஸ்தான் ரைம்ஸ் பி.கே. பாலச்சந்திரன் போன்ற தமிழ்ப் பகைவர்களின் குரலாக இருக்கிறது.
திரு. கௌதம் தனது கருத்துக்களை நேரடியாகச் சொல்ல தைரியம் இல்லாமல் பெயர் குறிப்பிடப்படாத லொஸ் ஏன்ஜல்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவரின் பின்னால் ஒளிந்து கொண்டு தனது கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
திரு.கௌதமனின் திறனாய்வில் இரண்டு முக்கிய கருத்துக்கள் இளையோடுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
அ) திராவிட அல்லது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான, இந்துத்துவா மற்றும் இந்திய தேசியத்துக்கு சார்பான வக்காலத்து.
ஆ) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிரான பகை உணர்வு.
தனது கருத்துக்களுக்கு எந்த வகையிலும் வலு சேர்க்க திரு.கௌதம் எதையும் செய்யக் கூடியவர் என்பதற்கு திரு.சங்கரபாண்டி எழுதிய 38 வரிகளைக் கொண்ட கவிதையில் இரண்டே இரண்டு வரிகளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு அவரை ஒரு இந்திய தேசியத்தின் எதிரி என்று சித்தரிக்க முனைந்தது சான்று பகருகிறது. தனி மனித அல்லது குழுப் பயங்கரவாதம் எங்கு நிகழ்ந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே. குஜயராத் பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சி உட்பட எல்லா எதிர்க்கட்சிகளும் கண்டித்தன. அப்படிக் கண்டிப்பது எந்தவகையிலும் இந்தியாவிற்கு எதிரான தேச விரோதம் ஆகாது.
”மக்களாட்சி போக்கிரியின் கடைசிப் புகலிடம்” (Democracy is the last refuge of the scoundcrel) என்பதுபோல தேசபக்தியும் திரு.கௌதம் போன்றோரது கடைசிப் புகலிடமாக இருக்கிறது!
”திரு. திலீபன். திரு. வைகோ ( திரு. வைகோ தனது பெயரை பல ஆண்டுகளுக்கு முன்னரே மாற்றிக் கொண்ட சங்கதிகூட திரு.கௌதம் அவர்களுக்குத் தெரியாது இருக்கிறது) திரு. நெடுமாறன் போன்றோரைப் புகழந்து கவிதை வரிகள் வாசிக்கப்பட்டன” என்று கௌதம் மெத்தவும் வயிற்றெரிச்சல் படுகிறார். தமிழ்த் தேசியம் எவ்வளவு தூரம் அவருக்கு கசக்கிறது, உறுத்துகிறது என்பதற்கு இது தக்க சான்று. திரு. சங்கரபாண்டி மட்டுமல்ல நடிகர் மயில்சாமி கூட தான் விரும்பும் ‘சுப்பர்ஸ்டார்” நால்வரில் திலீபன் ஒருவர் என்று மேடையில் பேசினார். அது கௌதம் காதில் விழவில்லையா?
தமிழ்நாட்டில் இருந்து வந்த திரு. சொலமன் பாப்பையா, திரு. வா.செ.குழந்தைசாமி போன்ற தமிழ் அறிஞர்களுக்கு தகுந்த நேரம் போதிய நேரம் ஒதுக்கப்படாதது ஒரு குறையே. ஆனால் அது வேண்டும் என்று செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை. பலரை அழைத்துவிட்டு போதிய நேரம் ஒதுக்காது விடுவது முன்னைய மாநாடுகளிலும் காணப்பட்ட குறை.
இனி திரு. கௌதம் அவர்களது வயிற்றெரிச்சல் சிலவற்றை தனித்தனியாகப் பார்ப்போம்.
”கற்கால சாதி அரசியில், பிறமொழி எதிர்ப்பு, யாரையும் புண்படுத்தாத முறையில், குறுகிய மனப்பான்மையுடன்… ” இந்த வார்த்தைத் தோரணங்கள் பார்ப்பனியத்துக்கும் வடமொழிக்கும் அ.த.ச.பேரவை லாலி பாட வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர்களால் வீசப்படும் கண்டனக் கணைகளே அல்லாமல் வேறொன்றும் இல்லை. கற்காலத்தில் சாதி இருக்கவில்லை. வேதகாலத்தில்தான் சாதி வந்தது. அந்தச் சாதியொழிய வேண்டும் என்று பேசுவதும் எழுதுவதும் பிற்போக்கல்ல. அது முற்போக்கு. சாதிக்குப் பாடை கட்டுவதில் முன்னணியில் நிற்பது தமிழ்த் தேசியம். சாதி எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடாகவே புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அ.த.ச.பேரவையின் மாநாட்டில் கலந்து கொண்டார். இது திரு. கௌதத்துக்கு தெரியாதா?
”குநவுயே இந்தியாவிலும் அமெரிக்கவிலும் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்ட நடை பெறும் நிகழ்ச்சி என்கிற வண்ணம் கட்டுரைகள் வெளிவந்திருந்தன. இந்தச் செய்தி உண்மையா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ”விஷயமுள்ள ரிப்போட்தான்” என்ற பதில் பாம்புக்கு பல்லில் மட்டும் நஞ்சு தமிழ்ப் பகைவர்களுக்கு உடல் முழுதும் நஞ்சு என்ற கூற்றை மெய்ப்பிக்கிறது.
முதலில் ர்iனெரளவயn வுiஅநள ஏடோ அல்லது வுiஅநள ழக ஐனெயை ஏடோ கட்டுரை எதனையும் வெளியிட வில்லை. செய்திதான் போட்டன. ஆனால் அந்தச் செய்தி எங்கே உற்பத்தியானது என்பது நோக்கத் தக்கது. நாய்க்கு எங்கே கல் எறிந்தாலும் காலை மட்டும் தூக்குவது போல தமிழீழத் தமிழர்கள் எதைச் செய்தாலும் அதில் உள்நோக்கம் கற்பிப்பதையே தனது முழு நேரப் பணியாகக் கொண்டுள்ள டீயனெரடய துயலயளநமநசய என்ற சிங்களவரே அந்தச் செய்தியை முதலில் தயாரித்தார்.
அதனை முதலில் வெளியிட்ட செய்தி ஏடு கொழும்பில் இருந்து வெளியாகும் வுhந ஐளடயனெ. அது சிங்கள-பவுத்த பேரினவாதத்திற்கு கொடி பிடிக்கும்; அல்லது ஆலவட்டம் வீசும் ஏடு. எனவே அதில் வந்த அந்தச் செய்தியின் நோக்கம் என்ன என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் திரு. பாலச்சந்திரன் போன்ற பார்ப்பானுக்கு அப்படிப்பட்ட செய்தி சர்க்கரைப் பொங்கல் போன்றது. எனவேதான் அதற்கு மேலும் கண், காது வைத்து அதனை மீளப் பிரசுரித்து (சநஉலஉடந) வழக்கம்போல் தனது அரிப்பை நிறைவு செய்து கொண்டார். இது பார்பனியமும் சிங்கள-பவுத்தமும் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு எதிராகக் கைகோர்த்து நிற்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது!
அ.த.ச.பேரவை வி.புலிகளுக்கு நிதி திரட்டுவதற்கு மாநாடு நடத்துகிறது என்பது கேழ் வரகில் நெய் வடிகிறது என்ற கதை போன்றது. அ.த.ச.பேரவை மாநாடு இலாபம் வேண்டாம் இழப்பில்லாமல் நடந்தாலே அது பெரிய சாதனை என்ற நிலையில் இருக்கிறது. அப்படி இருக்க வி.புலிகளுக்கு நிதி சேர்ப்பது என்பது நடக்கிற காரியமா? பொய்யைச் சொன்னாலும் அதனைப் பொருந்தச் சொல்ல வேண்டாமா?
ஒன்று மட்டும் தெரிகிறது. பாலச்சந்திரன், கௌதம் போன்றோர் தங்களை அறியாமல் ஒரு உண்மையை மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள். அது என்னவென்றால் அமெரிக்க-கனடிய தமிழர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வி. புலிகளது ஆதரவாளர்கள் என்பதே! இந்த உண்மையை மறைமுகமாக ஒப்புக் கொண்டதற்கு அவர்களைப் பாராட்டுகிறேன்;!
திரு.கௌதமத்தின் இன்னொரு வயிற்றெரிச்சல். திரு. பழநெடுமாறனின் கட்டுரை முதலாவதாக மலரில் போடப்பட்டு விட்டதாம்! ஏன் போடக்கூடாது? அவர் என்ன தொழுநோயாளியா? ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் ஊசியா போட்டுக் கொள்கிறார்?
இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் வி.புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கலாம். ஆனால் அமெரிக்காவில் அப்படியல்ல. அமெரிக்காவில் அது ஒரு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் என்று பெயர்சுட்டப்பட்ட ((Designated as a foreign based terrorist organization) தடை செய்யப்பட்ட (banned) இயக்கம் அல்ல!
பெயர் சுட்டப்பட்டதன் விளைவு என்னவென்றால் வி.புலிகள் இயக்கம் அல்லது அதன் சார்பு இயக்கங்கள் அமெரிக்காவில் ஆயுதங்கள் வாங்குவதற்கு நிதி திரட்ட முடியாது. ஆனால் மருத்துவம் போன்ற மனிதாபிமான செயல்பாடுகளுக்கு தாராளமாக நிதி திரட்டலாம். மேலும் வி.புலிகள் இயக்கம் ஒரு அரசியல் அமைப்பாக செயல்படலாம். அப்படிச் செயல்படுவதற்கு எந்தத் தடையும் கிடையாது. அமெரிக்க யாப்பிற்கு செய்யப்பட்ட முதலாவது திருத்தம் பேச்சுச் சுதந்திரத்தை, கூட்டம் கூட்டும் சுதந்திரத்தை (Article [I.] Congress shall make no law respecting an establishment of religion, or prohibiting the free exercise thereof; or abridging the freedom of speech, or of the press; or the right of the people peaceably to assemble, and to petition the Government for a redress of grievances) மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வி.புலிகள் உட்பட ஆறு அமைப்புக்கள் அமெரிக்க அரசுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பின்வருமாறு கூறியுள்ளார்.
“Both parties appealed to the 9th Circuit Court of California, which on 3rd March 2000 upheld the lower court decision. The Circuit Court Judge, in affirming the lower court decision, made certain statements that are highly pertinent to the performance of Tamil activists in the US. The Circuit Judge Kozinski, said,
“The statute does not prohibit being a member of one of the designated groups or vigorously promoting and supporting the political goals of the group. Plaintiffs are even free to praise the groups for using terrorism as a means of achieving their ends. What AEDPA prohibits is the act of giving material support, and there is no constitutional right to facilitate terrorism by giving terrorists the weapons and explosives…”
“Plaintiffs here do not contend they are prohibited from advocating the goals of the foreign terrorist organizations, espousing their views or even being members of such groups. They can do so without fear of penalty…”
அந்தத் தீர்ப்பின் பெறுபேறுகளையிட்டு வழங்கறிஞர் திரு. விசுவதாதன் உருத்திரகுமாரன் கொடுத்த விளக்கம் பின் வருமாறு:
V. Rudrakumaran, one of the attorneys who represented Tamils in this legal action, clarified and summarized the end result of this legal proceedings as follows:
1. Political campaigns on behalf of or under the direction of the LTTE or independent of the LTTE, in furtherance of LTTE’s political program are permitted. Public support for the LTTE’s armed struggle is also permitted.
2. U.S. citizens and permanent residents can function as LTTE representatives.
3. LTTE members are eligible for asylum, provided they were not involved in terrorist activities.
Prohibited Activities:
1.
G Giving money to the LTTE is prohibited. [Contributions to humanitarian organizations, such as the TRO is allowed. Providing Medical supplies and religious material to the LTTE are also allowable].
Members or Representatives of the LTTE can be denied visitors’ visa to enter the U.S.
திரு. கௌதம் பாலச்சந்திரன் போன்ற தமிழ்ப் பகைவர்களுக்கு இந்தச் சங்கதிகள் தெரியாது என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு அது தெரியும். தெரிந்தும் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு திரைபோட்டு மறைக்கிறார்கள். உண்மையிலேயே இந்தச் சங்கதிகள் திரு. கௌதம் போன்றோருக்கு தெரியாவிட்டால் தெரியாத சங்கதிகளை எழுதித் தங்களது சொந்த அறியாமையை தண்டோரா போட்டு ஊருக்கும் உலகுக்கும் (pரடிடiஉ நஒhiடிவைழைn ழக pசiஎயவந பைழெசயnஉந) பறையறைந்திருக்கக் கூடாது!
”மாதவன் வருகிறார் என்கிற ஆவலில் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்த அவரது ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்திற்குள்ளானார்கள். இனிமேல் முன்பதிவே செய்ய மாட்டேன். நிகழ்ச்சி அன்று வந்து, சொன்னவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்களா என்று பார்த்த பின்தான் டிக்கட் வாங்கப் போகிறேன்…”
மேற்கண்ட வாசகம் கௌதத்தின் சொந்தப் புலம்பல் என்றே நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அழைக்கப் படுபவர்கள் அனைவருமே வந்து சேருவார்கள் என்று நினைப்பது மடத்தனம். பல காரணங்களுக்காக அழைத்தவர்களில் சிலர் வராமல் போவது வழக்கமான நிகழ்வு. ஒரு சினிமா நடிகர் வராததால் இனிமேல் அவர் வந்ததை நிச்சயிக்கப்பட்ட பின்னர் தான் நுளைவுச் சீட்டு வாங்குவேன் என்று சொல்கிற தமிழர்கள் அ.த.ச.பேரவை நடத்தும் தமிழர் விழாவிற்கு வராமல் வீட்டில் இருப்பதே நல்லது! அது சரி. மாதவன் மேல் ஏன் இவ்வளவு அக்கறை? அவர் ஒரு பார்ப்பான் என்பது காரணமா?
”பிள்ளையார் வட இந்தியக் கடவுள், அந்தச் சிலை இங்கெதற்கு…. பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாளும் கலந்து” என்று தமிழ்ப்பாட்டி அவ்வை பாடிய பிள்ளையார் வடஇந்தியக் கடவுள் என்கிற கூற்று சிரிப்பை வரவழைத்தது…. ஏனெனில் வள்ளி, தெய்வானை, முருகன் வேடமிட்டு குழந்தைகள் நிற்க, முருகனைப் பாடும் காவடி ஆட்டம் வைத்தது சரியல்ல என்று வாதிடுவது இதைச் சொன்ன நோக்கமல்ல. பிள்ளையார் சிலையைவடஇந்தியக் கடவுள் என்று சொல்லி நீக்கியது தவறு என்று சொல்வதே இதன் நோக்கம்.”
பிள்ளையாரில் திரு.கௌதமுக்கு எவ்வளவு வாஞ்சை? தமிழ்மொழிதான் தமிழனின் தேசிய அடையாளம். எனவேதான் அ.த.ச.பேரவை சமயத்துக்கு அப்பால் நின்று இயங்குகிறது. பிள்ளையாரை மாநாட்டில் வைக்க யாராவது எத்தனித்திருந்தால் அது தவறு. அதனைத் தடுத்து நிறுத்திய நிர்வாகிகள் பாராட்டுக்கு உரியவர்கள். கண்டனத்துக்கு உரியவர்கள் அல்ல.
மேலும் கௌதம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிள்ளையார் வட நாட்டுக் கடவுள்தான். இன்னும் சொல்லப் போனால் முருகன் ஒருவரே தமிழ்க் கடவுள். மற்ற இந்துமதக் கடவுளர் எல்லோரும் தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஆரியக் கடவுளரே!
முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668) காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு பிள்ளையார் குடிபெயர்ந்தார். வாதாபி மீது படையெடுத்துப்போன தளபதி பரஞ்சோதியே திரும்பி வரும்போது ‘வாதாபி’ கணபதியைத் தன்னோடு எடுத்து வந்தார். சேக்கிழாரின் பெரிய புராணம் இதற்கு சான்றாகும். திரு. கௌதம் அவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ அந்தக் கணபதிக்கு தொடக்கத்தில் அர்ச்சகர்கள் பூசை செய்ய மறுத்துவிட்டார்கள்!
”தமிழ் ஆட்சிமொழி ஆகாததற்குக் காரணம் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ”அண்ணா” என்று திரு.சி.என். அண்ணாதுரையின் பெயர் விவாதங்களில் சொல்லப்பட்டது….”
இங்கேதான் திரு. கௌதமத்தின் சின்னத்தனமும் உண்மை உருவமும் பளிச்சென்று வெளிப்படுகிறது! அண்ணா என்ற பெயரை அடைப்புக் குறிக்குள் போட்டதன் மூலமும் அவரது பெயரை ”திரு.சி.என். அண்ணாதுரை” என்று எழுதியதன் மூலமும் திரு. கௌதம், துக்ளக் சோ, இந்து ராம் போன்ற தமிழ்ப் பகைவர்களது பட்டியலில் தானும் ஒருவர் என்பதை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் காட்டி விட்டார்.
அறிஞர் அண்ணா கௌதம் போன்றோருக்கு ”திரு.சி.என். அண்ணாதுரை” ஆக இருக்கலாம். ஆனால் ஏழு கோடி தமிழர்களுக்கு அவர் நேற்றும் இன்றும் நாளையும் அறிஞர் அண்ணாதான்! இந்த எண்ணத்தை திரு.கௌதம் மட்டுமல்ல வேறு எந்தக் கொம்பனும் அழித்து எழுத முடியாது1
நேர நெருக்கடி, இடநெருக்கடி காரணமாக எனது கருத்துரையை இத்தோடு முடிக்க ஆசைப்படுகிறேன். திரு. கௌதம் எனது கருத்துரைக்கு மறுப்புரை எழுத விரும்பினால் அப்படிச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இறுதியாக கௌதம் அவர்களுக்கும் அவர் போன்றவர்களுக்கும் நான் பணிவோடு சொல்லிக் கொள்வது யாதெனில்-
”சென்றது இனி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமமையாதீர்…… (மகாகவி பாரதியார்)
அதே நேரம் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தமிழர்களுக்கு நான் ஞாபகப் படுத்த விரும்புவது-
”தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும் ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.”
இப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும் இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுப்பாடுகளிலிருந்தும், கூட்டுக்களிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும் இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.” (பெரியார்- குடியரசு 1939)
Leave a Reply
You must be logged in to post a comment.