இமாலயப் பிரகடனம்: இது தேசிய விவாதத்திற்கு தகுதியானதா?

விஸ்வாமித்ரா

“இன்னும் ஒவ்வொரு தீமைக்கும்,  அதைவிட மோசமான ஒன்று உள்ளது.” ~ தொமஸ் ஹார்டி

உள்ளூர் தமிழ்த் தலைமைகள் ஒரு சிங்கள அரசியல் தலைவரைக் கூட நம்பவில்லை.  எமது வரலாற்றின் ஒவ்வொரு  கட்டத்திலும் ஒவ்வொரு தீர்க்கமான தருணத்திலும், அவர்களின் உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கப் பெற்றபோது, தமிழ்த் தலைமைகள் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள்.  1921 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை தேசிய காங்கிரசின் கூட்டுத் தலைமையே ஏமாற்றமும் கைவிடப்பட்ட நிலையும் நிறைந்த நீண்ட வரிசையில் முதல் குற்றவாளியாக இருந்தது.

Image result for இமாலய பிரகடனம்

சேர் பொன்னம்பலம் அருணாசலம் 1875 இல் இலங்கை சிவில் சேவையில் இணைந்த முதலாவது இலங்கையர் ஆனார். ஒரு அரசு ஊழியராக மிகவும் இலாபகரமான வாழ்க்கைக்குப் பிறகு, அருணாசலம் அரசியலில் நுழைந்து இலங்கை தேசிய காங்கிரிசின் (CNC)  உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியதோடு, அதன் நிறுவனத் தலைவராகவும் இருந்ததால், இன, சாதி அல்லது மத வேறுபாடின்றி அனைத்து இலங்கைத் தலைவர்களாலும் மிக உயர்ந்த மரியாதைக்குரியவராக இருந்தார்.

யாழ்ப்பாணத்தின் ‘அரச குடும்பம்’ என்று அழைக்கப்படுவதைச் சேர்ந்த அருணாசலம் மற்றும் அவரது மூத்த சகோதரர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர் அப்போதைய சுதந்திரத்திற்கு முந்தைய இலங்கையிலும் அவரது சிங்கள மேலாதிக்க தலைமையிலும் பல முயற்சிகளுக்குப் பெருமை சேர்த்துள்ளர்.  அவர்கள் சிங்களத் தலைவர்களுடன் கைகோர்த்து புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட்டனர்.

எவ்வாறாயினும், சட்ட சபையில் இனவாத பிரதிநிதித்துவம் பற்றிய சர்ச்சைககளைத் தொடர்ந்து 1921 இல் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து அருணாசலம் வெளியேறினார்.  1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் மேற்கு மாகாணத்தில், சிங்கள அரசியல்வாதிகளின் உடந்தையோடு,  தமிழர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படாததால் 1923 இல் இலங்கைத் தமிழ்க் கழகத்தை அவர் நிறுவினார்.

எப்.ஆர். மற்றும் டி.எஸ்.சேனநாயக்க மற்றும் சேர் ஜேம்ஸ் பீரிஸ் உட்பட அனைத்துச் சிங்கள ‘ஜாம்பவான்களும்’ அந்த நேரத்தில் அருணாசலத்திற்குக் கூட்டாக வழங்கிய வாக்குறுதிகளை மீறியதற்கான பொறுப்பைச் சுமக்க வேண்டும். ஆயினும் 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த போது, தமிழ்த் தலைமைகள் கைமாறியது. Hulftsdorp முன்னணிச் சட்டத்தரணி ஜி.ஜி.பொன்னம்பலம் இலங்கையின் தமிழர்களின் தலைவராக இருந்தார்.  அவர் டி.எஸ்.சேனநாயக்காவின் இரண்டாவது அமைச்சரவையில் ஒருவராக இருந்தார்.

மலைநாடு மற்றும் பிற தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பணியாற்றிய மற்றும் வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் 1948 ஆம் ஆண்டு இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், தேசிய அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டது.  இரண்டு உடன்படிக்கைகள் (பண்டாரநாயக்க – செல்வநாயகம் மற்றும் டட்லி சேனநாயக்க – செல்வநாயகம்)   இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களின் தலைமைகளுக்கு இடையில் இரண்டு  தோல்வி அடைந்த (SWRD பண்டாரநாயக்கா  மற்றும் டட்லி சேனநாயக்கா – செல்வநாயகம்) ஒப்பந்தங்கள்  தமிழ் சமூகத்திற்குப்  பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதன் பின்னர் சிங்கள சமூகத்தின் மேலாதிக்கக் கனவுகளை அவை  மங்கச் செய்தது.

முப்பது ஆண்டு யுத்தம் நடந்து இரு தரப்பிலும் பல உயிர்கள் பலியாகின. தீவிரமான நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, சிங்களப் பெரும்பான்மையினர் வெறித்தனமான வெற்றிக் களிப்பில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினர். இராசபக்ச சகோதரர்கள் சிறுபான்மையினர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான எல்லையற்ற போக்கை வெளிப்படுத்தினர்.  அப்போதைய இரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சியினர் இந்த தீவிர அதிகாரத்துவ சூழ்ச்சிகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தனர்.

சிங்களவர்கள் தலைமையிலான இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து அருணாசலம் வெளியேறிய பின்னர்,   தமிழர்களின் பெரும் ஏமாற்றம் இன்றுவரை தொடர்கிறது. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும், இரு சமூகங்ககளுக்கு இடையிலான  அவநம்பிக்கையும் அய்ய  உணர்வும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறவில்லை.

இன இனவாரியான அவநம்பிக்கையின் காட்டுமிராண்டித்தனம் வெறித்தனமான உயிரிழப்பை எடுத்துள்ளது. இதன் விளைவாக, நாடாளுமன்றத்தின் அரங்குகளுக்குள்ளோ அல்லது அதற்கு வெளியேயோ, விவாதம் அல்லது சாந்தப்படுத்துவதற்கான நாட்டம் இரு சமூகத்தினராலும் முற்றாகத் தூக்கி எறியப்படுகிறது, ஏனெனில் அது திருப்திப்படுத்துவதாக  சித்தரிக்கப்படுகிறது. தமிழர்களின் தேசியச் சிக்கலில் பின்னணியில், எந்த ஒரு அரசியல் தலைவரும், சிங்களவர் அல்லது தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த எந்தவொரு அரசியல் தலைவரும் அந்தந்த வாக்காளர்களால் ஒரு திருப்திப்படுத்துபவராக அழைக்கப்படுவதற்குத்  தயாராக இருக்க மாட்டார்கள்.

இந்தப் பின்னணியில்தான் இமாலயப் பிரகடனம் ஒரு முன்முயற்சியாக முன்வைக்கப்பட்டுள்ளது. ‘போரின்’ முடிவைத் தொடர்ந்து வரவிருக்கும் சனாதிபதி  தேர்தலுக்கான ஒரு தூண்டுதலாக வாக்காளர்கள் பரிசீலிக்கவும் மறுபரிசீலனை செய்யவும் பல முயற்சிகளில் இது முதன்மையானது. பொருளாதார குழப்பம் மற்றும் கிட்டத்தட்ட நிதி வீழ்ச்சிக்கு மத்தியில், அத்தகைய துருவமுனைப்பு சிக்கலை மீண்டும் அறிமுகப்படுத்துவது நாட்டின் இரண்டு முக்கிய சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கம் பற்றிய சிக்கலை ஆர்வமுள்ள வாக்காளர் பரிசீலிக்க அழிவுகரமானதாக அல்லது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கலாம். இது ஒரு இரட்டை முனைகள் கொண்ட கத்தி, அதைப் பயன்படுத்துபவர் பழத்தைப் பாதியாக வெட்டலாம் அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளலாம். அதன் காயங்கள் இறுதியில் அவரது உயிரைப் பறிக்கக்கூடும்.

இமாலயப் பிரகடனம் நல்லிணக்கத்தை நோக்கிய முதல் படி என்று கட்டுரையாளருக்கு நம்பத்தகுந்த வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு தனிநபரும் கண்ணியத்துடனும், நம்பிக்கையுடனும், அச்சமோ அய்யமோ இல்லாமல் சம உரிமைகளை அனுபவித்து நிம்மதியாக வாழக்கூடிய ஒரு இலங்கை” என்று தொடக்கத்திலேயே அது அழைப்பு விடுக்கிறது. எவ்வாறாயினும், அத்தகைய ஒரு சமூகத்தையும் அத்தகைய புறநிலை நிலைமைகளையும் நிறுவுவதை நோக்கி, பிரகடனம் ஆறு (6) தனித்தனி அறிக்கைகளில், ஒரு அடிப்படை செயல்முறை (MO) ஐ விவரிக்கிறது. இந்த அறிக்கைகள் நமது தற்போதைய அரசியலமைப்பில் ஏற்கனவே உட்பொதியப்பட்டிருக்கலாம். சில வேறுபட்ட சொற்களுக்குப் பதிலாகச் சட்ட ரீதியானதல்லாத அர்த்தத்தில் மாற்றுவது, ஒரு நோக்கத்திற்கு உதவக்கூடும், ஒரு பொதுவான அரசியலமைப்பின் சட்டரீதியான சொற்களஞ்சியம் சாதாரண மனிதனுக்குப் புரியாமல் இருக்கலாம். இருந்தபோதிலும், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கெனவே உள்ளவற்றை மீண்டும் மீண்டும் செய்வது தேவையற்றது என்றே கருதலாம்.

இமாலயப் பிரகடனம் இரண்டு தனித்துவமான  அம்சங்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக நம் மக்களில் பெரும்பான்மையினரால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டால். ஒன்று, திருத்தங்கள், கூட்டல் மற்றும், கழித்தல்களுக்குப் பிறகு அது இறுதியானதாக இருந்தால், அரசியலமைப்பு, சட்ட மற்றும் சிவில் நிபுணர்கள் கொண்ட குழுவால் உன்னிப்பாக ஆராயப்பட வேண்டும். இரண்டாவதாக, இது நமது முன்னணி அரசியல் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட வேண்டும், அவர்கள் இறுதி உறுதி செய்பவர்களாக இருப்பார்கள், அதே போல் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நடைமுறையில் செயல்படும் நிர்வாகிகளாகவும் இருக்க வேண்டும்.

நான் அரசியலமைப்புச் சட்ட விவகாரங்களில் வல்லுநர்களின் முதல் வகையைச் சேர்ந்தவன் அல்ல.  அந்தந்த துறைகளின் வல்லுநர்களுக்கு அதை மகிழ்ச்சியுடன் விட்டுவிடுகிறேன். இருப்பினும், அரசியல் விளக்கங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல்களின் நடைமுறைகள் என்று வரும்போது, நான் சேர்க்க சில ஆலோசனைகள் இருக்கலாம்.

30 ஆண்டுகாலப் போருக்குப் பின்னர், மேற்கூறிய இரண்டு முக்கிய சமூகங்களின் துருவமுனைப்பு ஆழமடைந்துள்ளதுடன், துருவமுனைப்பின் ஆழம் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இணக்கமான வாழ்க்கை முறைக்குப் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. பொன்னம்பலம் சகோதரர்கள், சேனநாயக்க சகோதரர்கள், ஜெயவர்த்தனாக்கள், பண்டாரநாயக்காக்கள் ஆகியோர் இப்போது உயிருடன் இல்லை. அமைச்சரவையால் நடத்தப்படும் அரசாங்கத்தில் சமமானவர்களில் முதன்மையானவராக இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் ஆட்சி முறையும் (Westminster system of governance) இல்லை.  அப்படியான ஆட்சிமுறையில்  அமைச்சரவையில் உள்ள சமமானவர்களில் பிரதமரே முதன்மையானவராக இருப்பார்.  அவர் செல்வாக்கைப் பெறவோ அல்லது இழக்கவோ முடியும். அடுத்த தேர்தல்களில் மாற்றப்படலாம்.   நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையானது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளை அகற்றி, அதிகாரவர்க்கத்தின் பொறுப்புக்கூறும் தன்மையை அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் பதிலாக அனைத்தையும் அறிந்த சனாதிபதிக்கு மாற்றியுள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்படாத எமது முதலாவது சனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சனாதிபதி செயலகத்தில் தங்கியிருக்கவில்லை. அவ்வளவு பிரம்மாண்டமான தலைமைச் செயலகம் அவருக்கு இல்லை. அவரது ஆலோசகர்கள் அப்போதைய அமைச்சரவையில் இருந்த சில புத்திசாலித்தனமான அமைச்சர்களின் தொகுப்பாக இருந்தது. பிரதமராக இருந்த ஆர். பிரேமதாச, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி, ரொனி டி மெல் மற்றும் நிஸ்ஸங்க விஜேரத்ன ஆகியோர் ஆட்சி தொடர்பான அவரது ஆலோசகர்களாக இருந்தனர்.  சிரில் மத்தியூ நிர்வாக விடயத்திற்கு வெளியே உள்ள விடயங்களில் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவும் ஆளுகை விடயத்திற்கு வெளியே ஆலோசகராகவும் இருந்திருக்கலாம்.  ஆனால் அவரது உள் அமைச்சரவையின் ஒரு பகுதியாக அவர் இருக்கவில்லை. ஜே.ஆரின் அரசியல் சார்பற்ற ஆலோசகர்களில் என்.ஜி.பி பண்டிதரத்ன, அவரது சகோதரர் லால் ஜெயவர்தன, புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன மற்றும் ஜே.எல்.குரே போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். உண்மையில், செல்வநாயகத்தின் மருமகனான பேராசிரியர் எஸ்.ஜே.வில்சன், அரசியலமைப்பு விவகாரங்களில் அவரது நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராவார்.

பிரேமதாச யுகத்தின் வருகை எல்லாவற்றையும் நன்மைக்காக மாற்றியது. பிரேமதாச தனது அரசியல் போட்டியாளர்களைத் துன்புறுத்துவதற்காக லோரன்ஸ் மாஃபியாவை (Lawrence Mafia) உள்ளடக்கிய ஒரு பாரிய சனாதிபதி செயலகத்தை நிறுவினார். சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் (CBK) அரசாங்கம் எதையும் சிறப்பாகச் செய்யவில்ல. அது முற்றாக மறந்துவிடக்கூடிய அரசாங்கம். அவருக்குப் பின் வந்த மகிந்தாவும் கோட்டாபயவும் சனாதிபதி அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தினர். ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் முதன்முதலில் ‘நிறைவேற்று சனாதிபதி முறை’  உருவாக்கப்பட்ட அந்தக் குழிக்குள் நாம் இப்போது முழுமையாகப் வேரூன்றிவிட்டோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையை நீக்குவதற்கான வழிமுறை எதுவும் இமாலயப் பிரகடனத்தில் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் எமது தலைவர்களின் நம்பகத்தன்மை மிகவும் அடிப்படையானதும் இன்றியமையாததும் ஆகும். நமது அரசியலமைப்பில் நிறைவேற்று சனாதிபதி முறைமையை ஒழிப்பதை உறுதிப்படுத்தும் துணை உட்பிரிவு அல்லது துணை அறிக்கையை உள்ளடக்குவது எல்லாவற்றிற்கும் முன்னதாக இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியை மாற்றியமைத்து, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும் என்பது அறகலய  காலப்பகுதியில் அது எண்பிக்கப்பட்டது.

சனாதிபதி, பிரதமர், அமைச்சர், மாகாண சபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர், பொது அதிகாரவர்க்கம் என ஒவ்வொரு மட்டத்திலும் நிறைவேற்று அதிகாரத்தைப்  பயன்படுதுபவரே எமது அனைத்துச் சிக்கல்களுக்கும்  அடிப்படையாக இருக்கின்றார். ஒழுக்கச் சீர்குலைவு, நிதி மற்றும் நிர்வாக இலக்குகளைப் பின்தொடராது,  சோம்பேறித்தனம், அதிகமான தாமதம், கட்டுப்பாடற்ற ஊழல் மற்றும் பாரபட்சம் ஆகிய அனைத்தும் நிர்வாகத்தின் அடிப்படை வலிமை அல்லது அதிகாரங்களுக்கு ஆதாரமாக இருக்கலாம்.

எனவே, இமாலயப் பிரகடனத்தின் முக்கிய நோக்கம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உந்துதலாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் ஆகும்.

சட்டங்கள் (Acts)  சட்டங்கள் (laws)   சட்டவாக்கம் (legislations) மற்றும் பல்வேறு மசோதாக்களின் அறிமுகம் சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதாகவும், வலுவூட்டுவதாகவும் இருக்க வேண்டும். அத்தகையதொரு சமூகம் உண்மையான தலைவர்களை உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கும் வாய்ப்பைப் பெறலாம். அதிகளவில்  இல்லையென்றாலும், குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு பேர் தடியை எடுத்துக்கொண்டு இறுதிக் கோட்டை நோக்கி ஓடுவார்கள்.

அப்போதுதான் மகத்தான சிற்பிகளும், கவிஞர்களும், முன்னோடிப் பொறியாளர்களும், கட்டடக் கலைஞர்களும், எல்லாவற்றிற்கும் மேலாக எளிய ஆண்களும் பெண்களும் இருப்பார்கள். வெட்கமோ பயமோ இன்றி அவர்கள் காலடியில் விழ முடியும்.  (ஆங்கில மூலம் – https://www.colombotelegraph.com/index.php/himalaya-declaration-is-it-worthy-of-national-discussion-a-communitys-journey-from-arunachalam-to-prabhakaran-to-sumanthiran/. தமிழாக்கம் கனடா நக்கீரன்)

*The writer can be contacted at vishwamithra1984@gmail.com

Himalaya Declaration: Is It Worthy Of National Discussion? A Community’s Journey From Arunachalam To Prabhakaran To Sumanthiran

By Vishwamithra –

“And yet to every bad, there is a worse.” ~Thomas Hardy

Local Tamil leadership doesn’t trust a single Sinhalese political leader. At every juncture and every decisive moment of our history, when their rights and privileges were on line, Tamil leadership insists that they were disenchanted with successive Sinhalese politicians. In a long line of disappointments and abandonment, the maiden culprits were the collective leadership of the then Ceylon National Congress in 1921.

Sir Ponnambalam Arunachalam, in 1875 became the first Ceylonese to enter the Ceylon Civil Service. After a very lucrative career as a Civil Servant, Arunachalam entered politics and was instrumental in the formation of Ceylon National Congress (CNC) and as its founder President, was held in highest esteem by all Ceylonese leaders irrespective of ethnicity, caste or religion. Hailing from the so-called ‘Royal Family’ of Jaffna, Arunachalam and his elder brother Sir Ponnambalam Ramanathan could be credited for many an initiative in then pre-independent Ceylon and her Sinhalese-dominated leadership; they worked with hand-in-glove understanding and cooperation with Sinhalese leaders. The Ponnambalam brothers’ engagement in nationally significant issues has never been matched by the successive generations of Tamil leaders.

However, Arunachalam left the CNC in 1921 following disputes about communal representation in the Legislative Council, which Arunachalam opposed, and the connivance of Sinhalese politicians which resulted in no Tamils being elected from Western Province at the 1921 legislative council election. He founded the Ceylon Tamil League in 1923. 

All those Sinhalese ‘giants’, including FR and DS Senanayake and Sir James Peiris must bear the brunt of responsibility for reneging on the pledges they collectively gave Arunachalam at the time. Yet when Ceylon gained Independence in 1948, Tamil leadership has changed hands and GG Ponnambalam, the leading lawyer at the Hulftsdorp was the leader of Ceylon’s Tamils and he was part of DS Senanayake’s second Cabinet of Ministers. After the introduction of the Ceylon Citizenship Act of 1948 whereby disenfranchisement of Indian Tamils who worked and lived in the Hill Country and other tea plantation areas came into effect, the national political landscape changed. The distrust that occurred in 1921 was unmistakably justified; after two abortive pacts (Bandaranaike-Chelvanayakam Pact and Dudley Senanayake-Chelvanayakam Pact) between the leaderships of the Sinhalese-dominated governments of SWRD Bandaranaike and Dudley Senanayake and SJV Chelvanayakam had rendered much hope for the Tamil community also served to dim the dreams of domination by the Sinhalese community.

A thirty-year war ensued and many lives were lost on both sides. Instead of undertaking serious reconciliation efforts, the Sinhalese majority resumed their indulgence in abject triumphalism. The Rajapaksa brothers displayed infinite tendency to dominate the minority and the then Opposition led by Ranil Wickremesinghe kept aloof of these radical bureaucratic machinations and political intrigues.       

Tamil’s disillusion with the Sinhalese-led Ceylon National Congress after the departure of Arunachalam has continued to date. Even after the cessation of hostilities between the Liberation Tigers of Tamil Elam (LTTE) led by Velupillai Prabhakaran and Sri Lankan military forces, the distrust and the feel of suspicion between the two communities have not advanced towards reconciliation. The savagery of racial mistrust has taken its murderous toll. Consequently, either within the Halls of Parliament or outside of it, discussion or propensity for propitiation is outright cast-off by both communities as it is portrayed as appeasement. In the context of the National Question of Tamils, no political leader, either of Sinhalese or Tamil origin, would be willing and ready to be called by their respective electorate as an appeaser.

This is the context within which the Himalaya Declaration has been presented as an initiative, a first of so many initiatives to follow the end of the ‘war’ for the electorate to consider and reconsider as a stimulation for the forthcoming Presidential or Parliamentary Elections. In the midst of economic chaos and near-financial collapse, reintroduction of such a polarizing issue could be either destructive or even more meaningful for the eager voter to consider- the issue of reconciliation between the two main communities in the country. It’s such a double-edged knife and its user may cut the fruit in half or injure himself the wounds of which may ultimately cost his life.

The writer has been reliably informed that this initiative, Himalaya Declaration, is a first step towards reconciliation. At the very outset it calls for: “A Sri Lanka where every individual can live peacefully with dignity, trust, and no fear or suspicion, enjoying equal rights.” However, towards the establishment of such a society and such objective conditions, the Declaration spells out in six (6) separate Statements, a basic modus operandi (MO). These Statements may be already embedded in our present Constitution; substitution of some different words with a more non-legal sense may serve a purpose in that legalistic verbiage of a typical Constitution may not be understandable to the ordinary man. Nevertheless, the repetition of what is already existent in our Constitution might be considered redundant at best.

Himalaya Declaration has two distinct aspects, especially if and when it is accepted by a majority of our people. One, it has to be, if final after amendments, additions and subtractions, closely scrutinized by a panel of constitutional, legal and civil experts. Two, it has to be acceptable and endorsed by our leading political parties who will be the ultimate ensurers as well an executives who would put into action and practice when and if they come to power.

I do not belong to the first category of experts on constitutional affairs and gladly leave it to the luminaries of respective subjects. However, when it comes to political interpretations and practicalities of implementations, I might have some cents to add.

In the aftermath of the 30-year War, the aforementioned polarization of the two main communities has deepened and that depth of polarization has caused immense destruction to the harmonious style of living in the first half of the twentieth century. The Ponnambalam brothers, the Senanayake brothers, Jayewardenes and the Bandaranaikes are no more. Nor is the Westminster system of governance where the Prime Minister, the first among equals in a Cabinet-run government, could gain or lose popularity and could be replaced at the next elections. The Executive Presidency has displaced commonly accepted norms and replaced the answerability of the bureaucracy to the Cabinet of Ministers and Parliament to an all-knowing President.

J R Jayewardene, our first President did not depend on a non-elected Presidential Secretariat. He did not have such a massive Secretariat. His advisors were a collection of some smart Ministers of the then Cabinet. R Premadasa who was the Prime Minister, Gamini Dissanayake, Lalith Athulathmudali, Ronnie de Mel and Nissanka Wijeratne were his advisors on governance. Cyril Mathew may have been  one of his close friends and advisors on subjects outside the governance subject, but was not part of his inner Cabinet. Amongst J R’s inner non-political advisors were such giants as NGP Panditharatne, Lal Jayawardene his brother the eminent lawyers HW Jayewardene and JAL Cooray. In fact Professor SJ Wilson, Chelvanayakam’s son-in-law was one of his closest advisors on constitutional affairs.

The advent of the Premadasa-era changed everything for good. Premadasa instituted a massive Presidential Secretariat that included among others a Lawrence Mafia to persecute his political rivals. Chandrika Bandaranaike’s (CBK) thoroughly forgettable government did not do any better and her successors, Mahinda and Gotabaya further expanded on the Presidential powers; we are now totally entrenched in that pit that was first created by JR Jayewardene as ‘Executive Presidency’.

Himalaya Declaration does not spell out a method of doing away with Executive Presidency. In such a circumstance, it is most fundamental and vital that, in order to establish and expand on reconciliation between Tamils and Sinhalese, the trustworthiness of our leaders matters and it matters most profusely. Inclusion of a sub-clause or sub-statement endorsing abolition of Executive President system from our Constitution must precede everything. In the absence of a replacement of Executive President and reintroduction of a Prime Minister-led government might arrest the attention of the masses and it was evidenced during the Aragalaya-22 period.

At every level, whether President, Prime Minister, Minster, Provincial Councilor or a Pradesheeya Sabha member and the general bureaucracy, the one who exercises executive power is at the core of all our issues. Breakdown of discipline, non-pursuit of financial and administrative goals, lethargy,  rampant tardiness, rearing and uncontrolled corruption and nepotism can all be sourced to the basic prowess or powers of the Executive.

Hence, my submission is that the Himalaya Declaration’s main thrust should be to society as a whole. Introduction of Acts, laws, legislations and various Bills need to empower and buttress the foundation of society at large. Such a society might have the chance to create conditions from which shall emerge real leaders, if not dozens at least one or two who will take the baton and run to the finish-line.

Then we will have those great sculptors and poets, those pioneering engineers and architects and above all simple men and women at whose feet one can fall without shame or fear.                           

*The writer can be contacted at vishwamithra1984@gmail.com

A Common Presidential Candidate From A Fractured Tamil Identity?
Who Accounts For The Law Keepers When They Become The Law Breakers?

Latest Comments

  • Lester / January 4, 2024 10 11“Instead of undertaking serious reconciliation efforts, the Sinhalese majority resumed their indulgence in abject triumphalism.”Tamils had two chances for federalism. The first time was when the IPKF came to Sri Lanka under the the auspices of the Indo-Lanka Accord. The LTTE actively sabotaged this process by directly attacking the IPKF. The second occasion was when the LTTE assassinated Neelan Tiruchelvam (a world class lawyer) and attempted to assassinate CBK, both of whom were keen on devolution. Devolution is the first step to federalism. The reason Rajapakse came to power is because CBK negotiated from a position of weakness. Devolution is a major concession that should only be offered under stringent conditions, such as complete laying down of weapons/disarmament by the LTTE. Anyway, the point is that the LTTE was never interested in devolution, only separatism. They wanted 29% of the island, including the entire Trincomalee, Batticaloa, and Mannar, which makes no sense from an economic standpoint.
About editor 3150 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply