ஐக்கிய நாடுகள் சபையில் வைகுந்தவாசன்
Sinnakuddy Mithu
எழுபதுகளில் தமிழ் ஈழ நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என வைகுந்தவாசன் என்பவர் ஜ .நா வுக்குள் புகுந்து பேசியது ஞாபகம் இருக்கலாம்
அறிஞர் அண்ணா ஒரு முறை கூறினாராம் தமிழனின் குரல் ஜநாவில் ஒலிக்க வேண்டுமென. தான் அதை நிறைவேற்றி இருக்கிறேன் என தமிழ் நாட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார் வைகுந்தவாசன்
விழாவில் வைகுந்தவாசன் பேசும்போது கூறியதாவது:-
ஈழந்தமிழர் பிரச்சினையை ஐ. நா. சபையில் பேச வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக அங்கு அடிக்கடி சென்று அங்குள்ள நடைமுறைகளை அறிந்து கொண்டேன்.
பிறகு இலங்கை வெளிவிவகார மந்திரி என்றைக்கு பேச இருக்கிறாரோ அந்த நாளையும் அறிந்து கொண்டேன்.
அதே நாளில் ஐ. நா சபைக்குள் பிரதிநிதிகளோடு நானும் உள்ளே நுழைந்தேன். பாதுகாப்பு அதிகாரிகள் என்னை ஏற்கனவே அடிக்கடி பார்த்து இருந்ததால் நானும் ஒரு பிரதிநிதிதான் என்று உள்ளே அனுமதித்து விட்டார்கள்.
3 நிமிடம் பேசினேன்
ஐ. நா சபை தலைவர் ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளையும் அழைத்து பேசச் சொல்லி கொண்டே இருந்தார். ஒருவர் பேசி முடித்த உடனே தலைவர் அடுத்து பேசுபவரை அழைப்பார்
ஆனால் ஏற்கெனவே பேசியவர் மேடையில் இருந்து சென்று அவரது இருக்கையில் அமர்ந்த பிறகுதான் அடுத்து பேசுபவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து வருவார். பேசி முடிந்தவர் கள் தன் இருக்கைக்கு செல்ல இரண்டு மூன்று நிமிடம் இந்த இடைவெளி நேரத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன். ஒருவர் பேசி முடித்ததும் சபை இலங்கை வெளி விவகார மந்திரியை பேச அழைத்தார். தலைவர்
உடனே அவர் எழுந்திருப்பதற்கு முன்பே நான் மேடைக்கு சென்றேன்.
மந்திரி என்று நினைத்து கொண்டனர். நான் 3 நிமிடம் ஈழ தமிழர் பிரச்சினையை பேசினேன். சபையில் இருந்த இலங்கை வெளிவிவகார மந்திரி அப்படியே என்ன செய்வது என்று தெரி யாமல் இருந்து விட்டார்.
கடைசியில் தான் நான் யார் என்று தெரிந்தது.
பிறகு என்னிடம் தலைமை பாதுகாப்பு அதிகாரி விசாரித் தார். எப்படி உள்ளே வந்தீர்கள் என்று கேட்டார்.
ஒரு இடத் திலும் தடையில்லை வந்தேன் என்றேன். ஏன் பேசினீர்கள் என்று கேட்டார். தலைவர் அழைத்தார் பேசினேன் என்றேன்.
தமிழர் குரல் ஐ. நா சபையில் ஒலிக்க வேண்டும் என்றார் அறிஞர் அண்ணா. நான் அதை சாதித்து முடித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.