2024 தேர்தலுக்கு முன்னதாக இலங்கையில் அரசியல் மற்றும் தேர்தல் இரண்டிலும் நிச்சயமற்ற நிலை
எழுதியவர் உடிதா தேவபிரியா
டிசம்பர் 23, 2023
இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அணியமாகி வருகின்றன. அவர்களில் பலர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மற்றவர்கள் அவ்வாறு செய்ய அணியமாகி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டில் இனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நாடு அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சனாதிபதியே அவற்றை முன்னெடுத்துச் செல்வதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் பிரபலமான ஆனால் இப்போது கேலிக் கூத்தாக்கப்பட்ட குடும்பமான இராசபக்சகளுடன் தொடர்புடைய ஆழமான செல்வாக்கற்ற கட்சியால் அரசாங்கம் வழிநடத்தப்படுகிறது. இது ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறது. மேலும் தேர்தல்கள் எப்போது நடத்தப்படும், அல்லது அவை நடத்தப்படுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தவில்லை. உண்மையில், எதிர்க்கட்சியின் ஒரு பிரிவினர் தாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம் என்று மறைமுகமாகக் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், இராசபக்சக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன (SLPP) தேர்தல் வெறியில் இணைவதை இது தடுக்கவில்லை. டிசம்பர் 15 அன்று, கொழும்பில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் அதன் ஆண்டு மாநாட்டை நடத்தியது. கட்சி நா.உறுப்பினர்களும் அதிகாரிகளும் தங்கள் எதிர்ப்பாளர்களை விமர்சிக்கும் அதே வேளையில் தங்கள் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் சிந்திக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு முக்கிய அதிகாரி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மேடையேறினார். ஆயினும் இந்நிகழ்வு ஓரளவு வெற்றிகரமானதாக முடிந்தாலும், கட்சி தொடர்ந்து சவால்களாலும் முரண்பாடுகளாலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது பொதுசன பெரமுன நாடாளுமன்றத்தில் தெளிவான மற்றும் வசதியான பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் அதன் பிடி பலவீனமாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில், அப்போதைய சனாதிபதி கோட்டாபய இராசபக்ச பெரிய அளவிலான ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து பதவியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்குப் பின் இரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தார்.
2019 சனாதிபதித் தேர்தலிலும் 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவுக்கு எதிராக பரப்புரை செய்த கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் விக்கிரமசிங்க ஆவார். எவ்வாறெனினும், இன்று, பொதுசன பெரமுன விக்கிரமசிங்கவிற்கும் அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) இடமளித்துள்ளது. ஆயினும் அவர்களுக்கிடையில் முக்கியமான வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த வேறுபாடுகள் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவை அதன் எதிரியாக மாறிய நண்பருக்கு எதிராக மீண்டும் நிலைநிறுத்த கட்டாயப்படுத்தக்கூடும்.
ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தொடர்ந்தும் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி வருகின்றது. நாடாளுமன்றத்தில் சட்டங்கள் மற்றும் வரவுசெலவுத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான எண்ணிக்கையை அது அவருக்கு வழங்கி வருகிறது. எடுத்துக்காட்டாக, ஏப்ரல் மாதத்தில், நாட்டின் சர்வதேச நாணய நிதியம் (IMF) குறித்த ஒரு தீர்மானம் இலகுவாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய அதன் 120 நா.உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு சில கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நிலையில், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன அதற்கு ஆதரவாக வாக்களித்தது.
இன்று சனாதிபதியைத் தொழிற்சங்கங்களும் குடிசார் சமூகமும் பரவலாகக் கண்டிக்கின்றன. எனினும் பொதுசன பெரமுன இந்த நடவடிக்கைகளைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது. அண்மையில் இது 2024 வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற உதவியது, இந்த ஆவணத்தை ஒரு பொருளாதார நிபுணர் “மாயக் கதை” என்று அழைத்தார்.
இந்த இணைப்புகள் இருந்தபோதிலும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவும் ஐதேக யும் பரப்புரையை முன்னெடுத்தது. பிரதமர் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை விற்று அதன் இறையாண்மையில் சமரசம் செய்து கொண்டதாக கட்சி குற்றம் சாட்டியது. இது 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வலுவடைந்தது.
ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தனது பரப்புரையில் குறிவைத்த முக்கிய விடயங்களில் ஒன்று இனச் சிக்கல்களை ஐதேக கையாண்ட விதம் ஆகும். தேசிய உணர்வைத் தூண்டிவிட்ட ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன சிங்கள மத்தியதர வர்க்கத்தினரை அரவணைத்தது. எவ்வாறெனினும், இன்று ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன, அன்று பிரதமராகவும் ஐதேக யின் தலைவராகவும் பணியாற்றிய விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்துள்ளது. விக்கிரமசிங்க சிறுபான்மைக் கட்சிகளை பகிரங்கமாக ஆதரித்து, பவுத்த பிக்குகளையும் தமிழ் அமைப்புகளையும் ஒரே மேசைக்கு கொண்டு வந்துள்ளார்.
தனது நல்லிணக்க நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி, சனாதிபதி என்ற வகையில், விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன இவ்வாறான பேச்சுக்களை எதிர்த்துள்ளதுடன், இந்த விடயங்களில் சனாதிபதியின் நிலைப்பாட்டை பகிரங்கமாக விமர்சித்துள்ளது. மறுபுறம், சிறுபான்மை கட்சிகளும் குடிசார் சமூகமும் அவரது நடவடிக்கைகளை வரவேற்றுள்ளன. இரதீந்திரா குருவித்த ((Rathindra Kuruwita)) The Diplomat இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, விக்கிரமசிங்க அடுத்த தேர்தலில் ஆதரவை உறுதிப்படுத்த சிறுபான்மை கட்சிகளை, அவற்றில் பெரும்பாலான தமிழ் கட்சிகளைப் பயன்படுத்தலாம். இதன் காரணமாகவோ என்னவோ, அரசாங்கத்தின் நல்லிணக்க நிகழ்ச்சி நிரல் குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டாம் அல்லது அதை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருக்கலாம்.
இந்தியாவுடனான அரசாங்கத்தின் உறவுகள் சனாதிபதிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் மற்றொரு பிளவை ஏற்படுத்தியுள்ளன. விக்கிரமசிங்க இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளுக்கு ஆதரவளித்தார். ஒரு படகு சேவையைத் தொடங்குவதற்கும், புது தில்லியுடன் நாணய ஒருங்கிணைப்புக்கான சாத்தியத்தை உயர்த்துவதற்கும் ஆதரவாக இருந்துள்ளார். ஆனாலும் இலங்கையர்கள், குறிப்பாக ஆதிக்கம் செலுத்தும் சிங்கள இனத்தவர்கள், இத்தகைய நடவடிக்கைகள் குறித்து வரலாற்று ரீதியாக எச்சரிக்கையாக உள்ளனர். இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணி போன்ற எதிர்க்கட்சிகள் இந்த முன்மொழிவுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவே கோட்டாபய இராசபக்சவின் கீழ் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளையும் அதிக ஈடுபாட்டையும் ஆதரித்த போதிலும், நாட்டின் இறையாண்மையை கீழறுப்பதாகக் காணக்கூடிய கொள்கைகளை ஆதரிப்பதில் அது ஆர்வம் காட்டவிலலை.
இதனால், ஆளும் கட்சிக்கும், சனாதிபதிக்கும் இடையில் அரசாங்கம் பிளவுபட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்த விரிசல் வெளியே வரவில்லை. அப்படி நடந்தால், அது முதன் முறையாக இருக்காது. 2001 முதல் 2003 வரையிலும், மீண்டும் 2015 முதல் 2018 வரையிலும், நாட்டை இரண்டு வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஒரு சனாதிபதியும் பிரதமரும் வழிநடத்தினர். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இணைந்து செயற்பட்ட ஒரு காலகட்டத்தைத் தொடர்ந்து வந்த காலப்பகுதி நிலைகுலைந்த அல்லது முறிவடைந்த காலகட்டமாகும். இறுதியாக சனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி மற்றத் தரப்பினரை வெளியேற்றினார். இரண்டு சந்தர்ப்பங்களிலும், விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்தார். மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது பதவியிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.
இன்று நிலைமை வேறு. இரணில் விக்கிரமசிங்கே சனாதிபதி, பிரதமர் அல்ல. அவர் அடிக்கடி குறிப்பிடுவது அல்லது சுட்டிக்காட்டுவது போல, வேறு யாரும் முன்வராத நேரத்தில் அவரை கோட்டாபய இராசபக்ச பிரதமராக நியமித்தார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன, 2022 எதிர்ப்புகளின் பின்னடைவில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றாமல் காப்பாற்றிய மனிதராகவும், அவர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற நேரத்தில் தலையிட்டு அவர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறியாமல் காப்பாற்றிய மனிதராக விக்கிரமசிங்க பார்க்கப்படுகிறார். அவர் என்ன செய்தார் அல்லது செய்ததாகக் காணப்படுவதன் காரணமாக, விக்கிரமசிங்க தனது நிலைப்பாடுகளுடன் உடன்படாவிட்டாலும் கூட, ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவில் உள்ள மிகவும் சாத்தியமற்ற அரசியல் சக்திகளைத் தன்னைச் சுற்றி அணிதிரட்ட முடிந்தது.
ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தேசிய உணர்வின் மீது ஏகபோக உரிமையைக் கொண்டிருக்காத ஒரு பாதகத்தையும் எதிர்கொள்கிறது. கிட்டத்தட்ட நிபந்தனையின்றி விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஒரு முக்கிய பிரிவினருக்கும், மற்றக் கட்சிகளுடன் ஒரு தனியான குழுவை உருவாக்கியுள்ள ஒரு அதிருப்தி பிரிவுக்கும் இடையில் கட்சியே பிளவுபட்டுள்ளது. மேலும், இலங்கையில் தேசியவாத அரசியலுக்கு இப்போது அதிக ஈர்ப்பு இல்லை. பொருளாதாரச் சிக்கல்கள் இன்றைய ஒழுங்காக மாறிவிட்டன. மறுபுறத்தில், பல்வேறு எதிர்க்கட்சிகள் விக்கிரமசிங்கவின் நல்லிணக்க நிகழ்ச்சி நிரல் மீதான தேசியவாத விமர்சனங்களையும், அவரது பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த மக்கள் இரசிக்கும் விமர்சனங்களையும் தங்கள் அடையாளத்தை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் சில கட்சிகளை மற்றவர்களை விட முன்னிலையில் வைத்துள்ளன. நல்வாழ்வுக் கொள்கை நிறுவகத்தின் சனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நோக்கம் குறித்த அண்மைய கருத்துக்கணிப்பில் இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணி ((JVP) முதலிடத்தில் உள்ளது. பதிலளித்தவர்களில் 51 விழுக்காட்டினர் அதற்குத் தங்களது ஆதரவைப் பதிவு செய்துள்ளனர். ஐதேக யில் இருந்து பிரிந்து போன முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya) 30 விழுக்காடு வாக்குகளையும், விக்கிரமசிங்க 13 விழுக்காடு வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் வேட்பாளர் இன்னும் பெயரிடப்படாத நிலையில், 6 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளனர். கணக்கெடுப்பு நடத்தியவர்கள் குறிப்பிடுவது போல, இந்த எண்ணிக்கைகள் மக்கள் விடுதலை முன்னணிக்கான ஆதரவைக் காட்டவில்லை. மாறாக நிறுவன அரசியல்கட்சிகளை நிராகரிக்கும் நிலைப்பாட்டைக் காட்டுகிறது. ஆயினும் அத்தகைய நிராகரிப்பின் விளைவாக மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவு அலை அதிகரித்து வருகிறது.
வேத்தியல் உரங்கள் மீதான தடை போன்ற இராசபக்சவின் கொள்கைகள், அவரது அரசாங்கத்தையும் அவரது கட்சியையும் 2019 இல் ஆட்சியில் அமர்த்திய வாக்காளர்களின் ஆதரவை இழக்கச் செய்தன. இதில் விவசாயிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் அடங்குவர். இன்று அவை எதிரணிக்கு நியாயமான ஆட்டமாக மாறிவிட்டன. இது குறிப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் பின்னணியில் உள்ளது. இது மாற்றியமைக்க மிகவும் முக்கியமானது என்று அரசாங்கம் முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் இது பலரின் செலவில் ஒரு சிலருக்குப் பயனளிக்கும் என்று பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் மீதான பரந்த அதிருப்தியின் விளைவாக, தீவிர மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள், இளைஞர்கள் மற்றும் முடிவெடுக்காதவர்களிடையே ஆதரவை பெருக்கியுள்ளன.
இறுதியில், அடுத்த ஆண்டு இலங்கையின் எதிர்காலம் குறித்து இளைய வாக்காளர்களே தீர்மானிப்பார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் வெற்றிப் பாதையை அவர்கள் வலியுறுத்தும் அதே வேளையில், அவர்களில் பலர் பொதுசன பெரமுனவின் செல்வாக்கற்ற தன்மையைப் பயன்படுத்த ஐதேக யின் வினைத்திறனையும் ஒப்புக் கொள்கின்றனர். அதே நேரத்தில், அவர்கள் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் பிரமாண்டமான வடிவமைப்புகளில் நிச்சயமற்றவர்களாக இருக்கிறார்கள், மேலும் கட்சி அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதில் ஐயம் கொண்டுள்ளனர்.
இளம் அரசியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளரான உத்பால விஜேசூரிய (Uthpala Wijesuriya) இந்த நிச்சயமற்ற தன்மைகளையும் கவலைகளையும் நன்கு எதிரொலித்தார். “ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன யாரை சனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது இராசபக்சவாகவோ அல்லது வேறு ஒருவராகவோ இருக்கலாம். விக்கிரமசிங்க தலைமையிலான ஐதேக நீண்ட காலக் கொள்கைகளின் செலவில் குறுகிய கால, ஒப்பனை சீர்திருத்தங்களை நடைப்படுத்துவதில் திருப்தி அடைந்துள்ளது” என்று விஜேசூரிய கூறினார். மறுபுறம், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவுடன் ஒரு காலத்தில் தொடர்புடையவர்கள் தங்கள் சொந்த வழிகளில் சென்று அதற்கு எதிராகப் போட்டியிடுகின்றனர். அரசியல் மன்னர்களை உருவாக்குபவர்கள் தாங்களே மன்னர்களாக வருவதற்கான முயற்சியில் மும்முரமாக உள்ளனர்.
விக்கிரமசிங்க தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார். ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன மீள்பிரவேசம் செய்ய விரும்புகிறது. இலங்கை வாக்காளர்கள் தீவிரமான மாற்றத்தை விரும்புவதாகத் தெரிகிறது.
(ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை The Diplomat என்ற ஏட்டில் வெளிவந்தது. https://thediplomat.com/2023/12/political-and-electoral-uncertainty-in-sri-lanka-ahead-of-2024-elections/ என்ற இணைய முகவரியில் அதனைப் படிக்கலாம். தமிழாக்கம் நக்கீரன்)
——————————————————————————————————-
Political and Electoral Uncertainty in Sri Lanka Ahead of the 2024 Elections
Wickremesinghe wants to keep his job; the SLPP wants to mount a comeback. Sri Lanka voters seem to want radical change.
By Uditha Devapriya
December 23, 2023
In Sri Lanka, political parties are getting ready for presidential elections scheduled for some time next year. Many of them have named their candidates; others are preparing to do so. The country is constitutionally mandated to hold presidential polls in 2024, and the president himself has hinted that he will go ahead with them.
But the government is led by a deeply unpopular party associated with a once popular but now derided family, the Rajapaksas. It faces an uncertain situation and has yet to confirm when elections will be held, or if they will be held at all. Indeed, a section of the opposition has implied that they will not.
This, however, has not prevented the Rajapaksas’ party, the Sri Lanka Podujana Peramuna (SLPP), from joining the election frenzy. On December 15, it organized its annual convention at a sports stadium in Colombo. Party MPs and officials took the opportunity to reflect optimistically on their future while criticizing their detractors, with one prominent official taking the stage to threaten the public. Yet though the event ended on a somewhat triumphalist note, the party continues to be overwhelmed by challenges and contradictions.
At present, the SLPP holds a clear and comfortable majority in Parliament. But its hold on the legislature is tenuous. In 2022, then-President Gotabaya Rajapaksa was forced to vacate office in the aftermath of large-scale anti-regime protests. He was succeeded by Ranil Wickremesinghe.
Wickremesinghe was, and remains, the sole MP from a party that the SLPP campaigned against in the 2019 presidential elections and 2020 parliamentary polls. Today, however, the SLPP has accommodated Wickremesinghe and, by implication, his party, the United National Party (UNP). Yet important differences have crept up between them, differences that may compel the SLPP to reassert itself against its foe-turned-friend.
To be sure, the SLPP continues to lend Wickremesinghe support. It has given him the numbers he needs to pass laws and budgets in Parliament. In April, for instance, its MPs made up the bulk of the 120 votes that ensured the smooth passage of a resolution on the country’s International Monetary Fund (IMF) program. While a few party MPs absented themselves from the vote, the SLPP went ahead and voted for it.
Today the president remains widely censured by trade unions and civil society. Yet the SLPP has chosen to ignore these developments; recently it helped pass the 2024 budget, a document that one economist called a “fairytale.”
Despite these alignments, the SLPP and UNP don’t see eye to eye on everything. In 2019, the SLPP led a highly charged campaign against the then-government’s economic and foreign policies. The party accused the government, then led by Prime Minister Wickremesinghe, of selling out the country and compromising on its sovereignty, allegations that gained weight after the 2019 Easter attacks.
One of the key areas that the SLPP targeted in its campaign was the UNP’s handling of ethnic issues. Whipping up nationalist sentiment, the SLPP ended up courting the ethnic Sinhalese middle classes. Today, however, the SLPP has joined hands with Wickremesinghe, who served as prime minister and leader of the UNP then, a man who openly courts minority parties and has brought to the same table Buddhist monks and Tamil outfits.
In pursuit of his reconciliation agenda, as president, Wickremesinghe has spoken in support of the devolution of power. The SLPP has opposed such rhetoric and has publicly criticized the president’s stance on these issues. Minority parties and civil society, on the other hand, have welcomed his moves. As Rathindra Kuruwita noted in an article in The Diplomat, Wickremesinghe may be leveraging minority parties, most of them Tamil, to ensure support at the next election. Perhaps because of this, opposition parties have chosen not to comment on the government’s reconciliation agenda, or have snidely criticized it.
The government’s ties with India have driven another wedge between the president and the ruling party. Wickremesinghe has been supportive of closer relations with India, to the extent of launching a ferry service and raising the possibility of currency integration with New Delhi. Yet Sri Lankans, in particular the dominant ethnic Sinhalese, have historically been wary of such measures. Opposition parties, such as the left-wing Janatha Vimukthi Peramuna, have censured these proposals. While the SLPP itself did advocate closer ties and greater engagement with India under Gotabaya Rajapaksa, it may not be keen on advocating policies that can be seen as undermining the country’s sovereignty.
As a result, the government is divided between the ruling party and the president. Yet, so far, this rift has not come out to the open. If it does, it would hardly be the first time. From 2001 to 2003, and again from 2015 to 2018, the country was led by a president and a prime minister from two different parties. In both cases a period of cohabitation was followed by a period of breakdown and breakup, until finally the president used executive powers to expel the other party. In both instances, it was Wickremesinghe who served as prime minister, and in one case he found himself prematurely relieved of his job.
The situation is different today. Ranil Wickremesinghe is the president, not the prime minister. As he frequently implies or points out, he was appointed as prime minister by Gotabaya Rajapaksa at a time when no one else was willing to come forward.
The SLPP, moreover, is still reeling from the backlash of the 2022 protests. Wickremesinghe is seen as the man who saved them from being ousted from power, the man who intervened at a time when political parties and activists were marching against them to Parliament. Because of what he did or is seen to have done, Wickremesinghe has been able to rally the most unlikely political elements in the SLPP around him, even if they disagree with his stances.
The SLPP also faces a disadvantage in that it no longer has a monopoly on nationalist sentiment. The party itself is fragmented between a main faction, which supports Wickremesinghe almost unconditionally, and a dissident faction, which has formed a separate association with other parties. Moreover, nationalist politics no longer holds much appeal in Sri Lanka; economic issues have become the order of the day. On the other hand, various opposition parties have made use of nationalist criticisms of Wickremesinghe’ s reconciliation agenda and populist criticisms of his economic reforms to reinforce their identity.
These shifts have put some parties ahead of others. A recent survey on presidential election voting intent by the Institute of Health Policy places the left-wing Janatha Vimukthi Peramuna (JVP) at the top, with 51 percent of respondents registering support for it. The main opposition Samaja Jana Balawegaya, an offshoot of the UNP, clocks in at a distant 30 percent, Wickremesinghe shows a poor 13 percent, and the SLPP’s candidate – yet to be named, despite much speculation following the recent convention – an even poorer 6 percent. As the authors of the survey note, these numbers show not so much support for the JVP as a rejection of the establishment. Yet the result of such rejection has been a swelling tide of support for the JVP.
Rajapaksa’s policies, such as his ban on chemical fertilizers, ended up depriving his government and his party of the voting bloc that put them in power in 2019. These include the peasantry and the middle classes. Today they have become fair game for the opposition. This is particularly so in light of ongoing economic reforms, which the government highlights as too important to reverse but which are seen as benefiting a few at the cost of the many. As a result of widespread disaffection with the establishment, parties like the JVP, which call for radical change, have endeared themselves to the young and the undecided.
Ultimately, it is the younger voters who will decide on Sri Lanka’s future next year. Yet while they emphasize the JVP’s winning streak, many of them also acknowledge the UNP’s potential to make use of the SLPP’s unpopularity. At the same time, they remain uncertain of the SLPP’s grand designs, and are suspicious of what the party will do next.
Uthpala Wijesuriya, a young political and history researcher, echoed these uncertainties and anxieties well. “It is not clear who the SLPP will nominate as its presidential candidate. It may be a Rajapaksa or even someone else. The UNP under Wickremesinghe has been content in enforcing short-term, cosmetic reforms at the cost of long-term policies,” Wijesuriya said. “On the other hand, those once associated with the SLPP are taking their own routes and are contesting against it. Political kingmakers are busy trying to become political kings.”
All political alliances are ultimately marriages of convenience. Sri Lankan politics has always been rooted in such alliances, which have dissolved even in the best of times. In the face of a deeply polarized political climate, and with an even more polarizing election season on the way, one thing thus remains clear: the days of the SLPP’s marriage with the UNP are numbered. It is not a question of whether it will end, but when, and how.
Leave a Reply
You must be logged in to post a comment.