தேர்தல் ஆண்டு: பொருளாதார மீட்சியை சீர்குலைக்குமா?

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 விழுக்காட்டால்  விரிவடைந்து, ஒன்றரை ஆண்டு கால சுருக்கத்திலிருந்து மெதுவாக மீண்டு வந்துள்ளது. சேவைத் துறையும், உற்பத்தித் துறையும் ஏற்றம் கண்டு வரும் நிலையில், நான்காவது காலாண்டில் 7-8 விழுக்காடு  வளர்ச்சியைப் பதிவு செய்யலாம், இது முதல் இரண்டு காலாண்டுகளின் எதிர்மறையான வளர்ச்சியை ஓரளவு ஈடுசெய்யும்.  இறுதியாக இந்த உந்துதல் வந்துவிட்டது, இருப்பினும் முதல் பாதியில் பொருளாதார வீழ்ச்சியின் அளவைப் பார்க்கும்போது, 2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும்.

அந்த உந்துதல்  அடுத்த ஆண்டும் அதற்கு அப்பாலும்  எந்த அளவுக்குத் தொடரும் என்பது வெறும் பொருளாதார செயல்பாடு மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு அரசியல் கேள்வியும் ஆகும்.  செல்வந்த உலகின் ஏற்ற இறக்கமான வளர்ச்சிக் கணிப்புகளை கணக்கிட்டுக் கொண்டாலும், இலங்கையின் புதிய பொருளாதார மீட்சிக்கு பெரும் ஆபத்து உள்நாட்டில்தான் இருக்கும். எல்லாவற்றையும் விட மிகப் பெரியது அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகும், இது அடுத்த ஆண்டு- தேர்தல் ஆண்டு – அரசியல் கட்டங்களில் மிகவும் தனித்துவமான அம்சமாக இருக்கும்.

தேர்தல் ஆண்டு

அடுத்த ஆண்டு செப்தெம்பர் மாதத்திற்குள் சனாதிபதித் தேர்தல் நடைபெற வேணடும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். பிற்போடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் ஒரு கட்டத்தில் நடத்தப்பட வேண்டும், அது எந்தவொரு தேசிய தேர்தலுக்கும் முன்னதாக நடத்தப்பட வாய்ப்பில்லை.  ஏனெனில் அது வாக்காளர் உணர்வின் அளவுகோலாக இருப்பதை அரசியல் தலைமை விரும்பாது.

எல்லாவற்றிற்கும் மேலாக,  எதிர்கால பொருளாதார பாதையை தீர்மானிப்பது சனாதிபதி தேர்தல் ஆகும். இது மற்றவற்றுக்கு முன்னதாகவே  இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு சனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், நாடாளுமன்றத் தேர்தலின் தொடக்க வேகத்தை மாற்றுவார்கள்.

முதலாவதாக, இது போட்டியாளர்களைப் பற்றியது: சனாதிபதி பதவிக்கான சாத்தியமான போட்டியாளர்களைக் கவனியுங்கள்.


தற்போதைய இரணில் விக்கிரமசிங்க ஒரு பொருளாதார மேதை என்று அவரது கூட்டாளிகளால் புகழப்படுகிறார்.  ஆனால் அவரது அரசியல் வாழ்க்கை முழுவதும், அது சரியானது என்பதை ஏண்பிக்கப்  பல வாய்ப்புக்கள் இருந்தபோதிலும், அவர் ஒரு குறைந்த சாதனையாளராக இருந்தார். தென்கிழக்கு மற்றும் கிழக்காசியாவில் மிகவும் வெற்றிகரமான பொருளாதார சீர்திருத்தவாதிகள் தங்கள் பொருளாதார பார்வைகளை யதார்த்தமாக மாற்றியது போன்று விக்கிரமசிங்கவிடம் மந்திரக் கோல் எதுவும்  இல்லை.

ஆனால், இலங்கையை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த பெருமையை அவரிடம் இருந்து யாரும் பறிக்க  முடியாது. அவரது கடந்தகால செயல்திறன் அதிக வெற்றிகரமான பன்னாட்டு சகாக்களுக்கு எதிராக ஈர்க்கமுடியாததாக இருந்தால், அவரது சமீபத்திய சாதனை அர்ஜென்டினா முதல் லெபனான் வரை இதேபோன்ற இக்கட்டான சிக்கல்களில் உள்ள சகாக்களை விட அதிகமாக இருக்கும்.Image result for Ranil, Anura, Sajith. Size: 179 x 185. Source: en.newswave.lk

அது பாராட்டத்தக்க சாதனை. எவ்வாறாயினும், கருத்துக் கணிப்புகளில் திரு விக்கிரமசிங்க மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடன் கூட்டணி இல்லாமல், சனாதிபதி பதவிக்கான தேர்தலில்  அவர் நம்பத் தகுந்த வெற்றியைப் பெற வாய்ப்பில்லை. பொருளாதார முன்னேற்றம் அவரது வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்றாலும்,  இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது.

கருத்துக் கணிப்புகளில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அனுரகுமார திசநாயக்காவை விட இரண்டாவது இடத்தில் இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இது பொருந்தும். இதுபோன்ற கணக்கெடுப்பு தரவுகளை  முழுமையாக நாம் நம்ப முடியாது. என்றாலும், பொருளாதார நெருக்கடியின் கோரத்தாண்டவம் பொதுமக்களின் கருத்தை கணிசமாக மாற்றியுள்ளது. பைத்தியக்காரத்தனமான விடயங்கள் நடக்கக் கூடும்.

ஐக்கிய மக்கள் சக்தி யதார்த்தமான மாற்றுக் கொள்கைகளின் தொகுப்பை வழங்க வேண்டிய அவசியமில்லை. ஆயினும்கூட, அரசாங்கத்தின் கொள்கைளை கடுமையாக எதிர்ப்பதிற்குப் பதில் அது மவுனமாக நடந்து கொள்கிறது. மொட்டுக் கட்சியின்  பிளவுபட்ட குழுவின் சில விளிம்பு மூலைகளிலும், அரசின் கொள்கையை எதிர்ப்பதில்  மவிக இன்  தொழிற்சங்கங்களும் அதன் வழக்கமான எதிரியான முன்னிலை சோசலீச கட்சியும்  மவுனமாக உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு தேர்தல் முன்னணிக்காக முன்னணி சோசலிசக் கட்சியின் அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதற்குப் பதிலாக ஒரு பொதுவான  சனாதிபதி வேட்பாளரை களமிறக்க  ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த அது முன்வர வேண்டும்.மூன்றாவதாக அனுரகுமார திசநாயக்க மக்கள் அதிருப்தி அலையில் சவாரி செய்து கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கிறார். அவர் கொள்கையளவில் எதையும் வழங்கவில்லை, ஆனால் எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், கோட்டபய இராசபக்சே தனது கொள்கைகளால் பொருளாதாரத்தைச் சீரழித்த ஒரு நாட்டில், அதை மீட்பதற்காக வாக்காளர்கள் அதே போன்ற மற்றொரு நபரிடம் பந்தயம் கட்டுகின்றனர்.

நான்காவதாக ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் சாத்தியமான வேட்பாளர், கோடீஸ்வர தொழிலதிபரான தம்மிக்க பெரேராவாக இருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன சனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி சனாதிபதி இரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எதிர்ப்பதற்கா எதிர்ப்பது: மாற்று வழி எங்கே?

இரண்டாவது கொள்கைகளைப் பற்றியது: தேர்தல்கள் மாற்றுக் கொள்கைத் தேர்வுகளை விவாதிக்க ஒரு தளத்தை வழங்குவதாகக் கருதப்படுகிறது.

எவ்வாறெனினும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான தற்போதைய பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டப்பட்ட சூத்திரத்திற்குப் பகுத்தறிவு ரீதியான மாற்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, உடனடி கேள்வி என்னவென்றால், பன்னாட்டு நாணய நிதியத்தின்  இலக்குகளைத் தாக்குவதற்கு குறைவான வலியுடைய வழி இருக்கிறதா என்பதுதான்.  அத்தகைய வலி தற்காலிகமானது.  உள்நாட்டுப் போட்டித்தன்மையை அதிகரிப்பது, தொழிலாளர் சந்தையின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது, மனித மூலதனத்தைப் பயிற்றுவிப்பது, தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது, உலகளாவிய விநியோக சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பது போன்ற பன்னாட்டு நாணய நிதியத்தின் வழிகாட்டுதலுக்கு அப்பாற்பட்ட கொள்கைகள் பரந்த மற்றும் மிகவும் பொருத்தமான கேள்வியாக இருக்கும்.

ஆனால், அதை ஒத்த எதையும் தொலைதூரத்தில் நீங்கள் காண்பது அரிது. இலங்கையர்கள் கொள்கைகளுக்கு வாக்களிக்காததே இதற்குக் காரணமாக இருக்கலாம். வாக்குறுதிகளுக்காக வாக்களிக்கிறார்கள்.

ஆயினும்கூட, பன்னாட்டு நாணய நிதியத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட வருவாய் நடவடிக்கைகளுக்கு இடைவிடாத எதிர்ப்பு உள்ளது. மேலும் இலங்கை இலங்கையாக இருப்பதால், நெருக்கடியான பொருளாதார சிகிகளுக்குத்  தீர்வு காண்பதற்கு யதார்த்தமான மாற்றீட்டை வழங்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல்கள் இந்த சுய – சேவை சந்தர்ப்பவாதத்தை அதிகரிக்கும்,  பொருளாதார யதார்த்தங்களை சிதைக்கும். மற்றும் எதிர்கால பொருளாதார சீர்திருத்தங்களை கடுமையாக சவாலுக்கு உட்படுத்தும்.

ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவின்(SLPP) திறமையான இளம் அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானவர்களால் ஆதரிக்கப்படக்கூடிய திரு விக்கிரமசிங்க, வணிக நட்பு மற்றும் பொருளாதாரத்தை தாராளமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட பரந்த கொள்கைகளின் தொகுப்பை முன்வைக்கிறார். ஆனால் அவருக்கு அவசர உணர்வு இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி அந்தக் கொள்கைகளிலிருந்து திசைதிருப்ப வேண்டிய அவசியமில்லை – அவர்கள் இன்னும் ஒரு மாற்றுத் திட்டத்தை வெளியிடவில்லை

மக்கள் விடுதலை முன்னணி  ஒரு வேறுவிதமான – வித்தியாசமான –  அரசியல் கட்சி.  அவர்கள் எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள். வெறும் விளம்பரத்திற்காக மட்டும் அல்ல.  இதில் இருந்து ஐக்கிய மக்கள் சக்திக்கும் விலக்கு இல்லை.  மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தியல் சார்பு,  அவர்களின்  கூடாரத்திற்கு அப்பால் வெகுமக்களை கவர்ந்திழுக்கும் வகையில் தற்போது மௌனமாக இருந்தபோதிலும், ஒரு வரையறுக்கப்பட்ட பாத்திரத்தை வகிக்கிறது. மக்கள் விடுதலை  முன்னணி நாட்டை வழிநடத்தும் முனைப்பு ஏற்பட்டால் இந்த முரண்பாடுகள் நடைமுறைக்கு வரும்.

அதுவரை, பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கான அற்பமான, சுய – சேவை திருத்தங்களை நீங்கள் கேட்கிறீர்கள். ஒன்று, ஊழலை ஒழிப்பது. அதனால் , பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.  ஊழல் என்பது தனி நபர்களின் செயற்பாடு மட்டும்மல்ல, மாறாக அதிக ஒழுங்குபடுத்தப்பட்ட அதிகாரத்துவ அமைப்புகளின் செயல்பாடு என்று கருதுவது ஒரு உயர்ந்த வாக்குறுதியாகும். ஊழல் விரும்பத்தகாதது, ஏனெனில் அது தேசிய கொள்கையை சிதைக்கிறது. மற்றும் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஊழலுக்கும் இடையிலான தொடர்பு சர்ச்சைக்குரியது- பெரும்பாலான தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் அவற்றின் உயர் வளர்ச்சி தசாப்தங்களில் சமமாக ஊழல் செய்தன.

ஊழலை ஒழிப்பது தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். இருப்பினும், இது மட்டுமே முதலீடு அல்லது வளர்ச்சியை ஊக்குவிக்காது அல்லது சிறப்பு  செயற்பாட்டு அதிகாரி (SOE) களின் சுமையைக் குறைக்காது. பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் உள்ள தடைகளை நீக்க விரிவான பொருளாதார சீர்திருத்தங்களை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அத்தகைய கொள்கைகள் மக்கள் விடுதலை முன்னணிக்கும் அதன் தொழிற்சங்கங்களுக்கும் அருவருப்பானவை.

திருடப்பட்ட நிதியை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் அரசாங்க வருவாய் பற்றாக்குறையை தீர்ப்பது என்பது அரசியல் மேடைகளில் வெளிப்படும் மற்றொரு தவறான கருத்தாகும். இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல, கடைசி முறையும் அல்ல.

பன்னாட்டு  ஒத்துழைப்புடன் கூடிய ஒரு விரிவான மீட்புத் திட்டம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தில் சிலவற்றை மீண்டும் கொண்டு வர முடியும் என்றாலும், அது கருவூலத்தில் பெயரளவிலான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது சிலரால்  சித்தரிக்கப்படுவது போல, பாரிய  ஊழல் மற்றும் பொது நிதியைக்  கொள்ளை அடித்ததின் காரணமாக உருவானதல்ல. பொருளாதார நெருக்கடி என்பது தொலைநோக்கு பார்வையற்ற சனரஞ்சகத்தின் ஒட்டுமொத்த விளைவு.  மகிந்த இராசபக்ச  2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், கோட்டாபய இராசபக்ச  5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்புகளையும் காலி பண்ணியதன்  மொத்த விளைவே பொருளாதார நெருக்கடியாகும்.

பொருளாதார நெருக்கடி என்பது வளர்ச்சியை உருவாக்குவதற்கான கடின உழைப்பைச் செய்வதற்குப் பதிலாக, பொதுமக்களை திருப்திப்படுத்தும் பொருட்டு  இல்லாத பொருளாதார வளங்களை வழங்குவதற்கான அரசியல் விருப்பத்தின் விளைவாகும்..

ஆனால் தேர்தல் மேடைகளில், நீங்கள் அதைக் கேட்க மாட்டீர்கள். அதற்கு பதிலாக, உரையின் பெரும்பகுதி பழைய வழிமுறைகளுக்கு திரும்புவதாக உறுதியளிக்கும். (ஆங்கில மூலம் – Daily Mirror. Election Year: Would it wreck the economic recovery? – Opinion | Daily Mirror தமிழாக்கம் நக்கீரன்)


Sri Lankan economy expanded by 1.6 per cent in the third quarter of this year, slowly emerging from one and half years of contraction. With the service sector picking up and manufacturing showing a seasonal hike, the fourth quarter may log 7-8 per cent growth, partially compensating for the first two quarters of negative growth. The momentum is finally here, though given the extent of the economic rout in the first half, the economic growth of 2024 would be negative.

How much of that momentum would continue to next year and beyond is not just an economic function- more than anything, it is a political question. Even after one counts the volatile growth projections in the rich world, the greater danger to the nascent economic recovery of Sri Lanka would be within. And the biggest of all is the marauding political opportunism, likely to be the most distinguished feature in the political stages next year- the election year.

Election year

The presidential election should be held by September next year, and Parliamentary polls should follow. Postponed local government elections should also be held at some point, though it is unlikely to precede either of the national polls, for the political leadership would not want it to be a barometer of voter sentiment.

Most of all, Presidential elections would decide the future economic trajectory. Considering that it would precede the rest, anyone who wins the presidential election would convert the early momentum at the Parliamentary polls. 

First, it is about personnel: consider the likely contenders for the presidency.

Incumbent Ranil Wickremesinghe is exalted by his acolytes as an economic maestro, but throughout his political life, despite numerous opportunities to prove them right,  he has been an underachiever. He probably lacked that iron the most successful economic reformers in South East and East Asia had in them to convert their economic visions into reality.

But, one cannot deny him the credit for lifting Sri Lanka from its worst-ever economic crisis. If his past performances were unimpressive against more successful international peers, his recent feat would loom large over peers in similar predicaments from Argentina to Lebanon. 

That is a commendable achievement. However, Mr Wickremesinghe languishes in a distant third in opinion polls. Without an alliance with the Samagi Jana Balawegaya (SJB), he is unlikely to have a credible shot at the presidency. Though the likely improvement of the economy may increase his chances, there is much to be seen.

The same applies to the SJB leader Sajith Premadasa, who is in a distant second to JVP’s Anura Kumara Dissanayake in opinion polls. Though one may advise such survey data to be taken with a pinch of salt, the throes of the economic crisis have significantly altered public opinion- and crazy things could happen. 
SJB does not necessarily offer a set of realistic alternative policies. Still, it is also muted in the most excessive form of opposition to the government policies, as seen in some of the fringe corners of Pohottuwa’s splinter group and usual antagonists of the Peratugamis and the JVP trade unions. 

 SJB is negotiating with Pohottuwa’s dissidents for an electoral front. Instead, it should talk to the UNP to form an electoral alliance and field a common presidential candidate. Third is Anura Kumara Dissanayake, who rides on a wave of popular discontent and leads the opinion polls. He offers nothing in principle but has harvested the protest vote.

Funny enough, in a country where Gotabaya Rajapaksa decimated the economy with his pie-in-the-sky policies, voters are betting on another of the similar ilk to rescue it.

Fourth is a potential SLPP candidate, which some reports suggest may be billionaire businessman Dhammika Perera. However, SLPP is more likely to use the threat of fielding a presidential candidate to extract concessions from President Ranil Wickremesinghe than running and losing handsomely.

Protesting for the sake of it: where is the alternative? 

Second is about policies:  elections are supposed to offer a platform to debate alternative policy choices.
However, there appears to be no rational alternative to the current IMF-guided formula to stabilize the economy. Therefore, the immediate question is whether there is a less painful way to hit the IMF targets- though such pain is temporary. The broader and more pertinent question would be the policies beyond the IMF guide- to increase the domestic competitiveness, upgrade the productivity of the labour market, train human capital, build private universities, integrate with global supply chains and build an export-led economy. But you hardly see anything remotely resembling as such. It’s probably because Sri Lankans do not vote for policies. They vote for promises. 

Yet, there is relentless opposition to the IMF-mandated revenue measures. And Sri Lanka being Sri Lanka, it is not necessary to offer a realistic alternative to address the pressing economic problems. Elections would amply this self-serving opportunism, distorting existential economic realities and even seriously challenging future economic reforms.

Mr Wickresminghe, who may be backed by most of the seemingly capable young SLPP  cabinet ministers, presents a set of broad principles that are business-friendly and aimed at liberalizing the economy. But he lacks a sense of urgency. The SJB may not necessarily divert from those principles- they have yet to divulge an alternative program.

The JVP is a different kettle of fish. They oppose everything,  not just for publicity, which the SJB is not necessarily immune from. JVP’s ideological leaning, though kept muted at the moment to appear more appealing to the masses beyond their tent, plays a defining role. These contradictions would come into play when/ if JVP has a shot at running the country. 

Until then, you hear flimsy, self-serving fixes to rejuvenate the economy. One is the promise to end corruption so that the economy would grow. That is a lofty promise considering corruption is not a function of individuals alone but of over-regulated bureaucratic systems. Corruption is undesirable, for it distorts national policy and robs the public of money. However, the correlation between economic growth and corruption is disputed- most Southeast and East Asian countries were equally corrupt during their high-growth decades. 

Eradicating corruption should be a national priority. However, it alone does not promote investment or growth or reduce the burden of the SOEs. Sri Lanka should implement comprehensive economic reforms to remove bottlenecks in each area of the economy. But, such policies are anathema for the JVP and its trade unions.

Another fallacy flaunted in the political stages is resolving the shortage of government revenue by bringing back stolen funds. This is not the first time such offers were made, nor would it be the last time. While a comprehensive recovery programme with international cooperation may manage to bring back some of the looted wealth, that would have only a nominal impact on the treasury. Nor is Sri Lanka’s economic crisis a  result of runaway corruption and pillage of public funds as it is portrayed in some corners. The economic crisis is the aggregate effect of short-sighted populism- Mahinda Rajapaksa burnt through  US$ 2.5 billion and Gotabaya Rajapaksa US$ 5 billion of foreign reserves just to hold on to an unsustainable rupee peg. Billions of dollars were wasted on subsidized fuel, electricity, and gas.

The economic crisis results from a political preference to give away non-existent economic resources to appease the public rather than do the hard work to create growth. But in the election platforms, you wouldn’t hear that. Instead, much of the discourse would promise a revert to old ways. 

Election Year: Would it wreck the economic recovery? – Opinion | Daily Mirror

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply