நல்லிணக்க செயல்முறைக்கு நேர்மை மற்றும் சமமான நடத்தை தேவை

நல்லிணக்க செயல்முறைக்கு நேர்மை மற்றும் சமமான நடத்தை தேவை

எழுதியவர் ஜெஹன் பெரேரா

பெரும்பாலான சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் அதிகாரத்தைப் பற்றிய ஒருவித அச்சத்தில் வாழ்கின்றனர். மிக மோசமான நிலையில், பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் மீது கலவரம் போன்ற வன்முறைகளைக் கட்டவுழ்த்துவிட முடியும்.  சிறுபான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், அவர்கள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். சனநாயக நாடுகளில், சிறுபான்மையினர் எப்போதும் பெரும்பான்மை ஆட்சியின் சிக்கலை எதிர்கொள்வார்கள். ஏனெனில் எது முக்கியம் என்பது குறித்த பெரும்பான்மையினரின் பார்வை சிறுபான்மையினர் முக்கியமானதாகக் கருதுவதை விட முன்னுரிமை பெறுவார்கள்.  எனவே, சிறுபான்மையினர் சமமான குடிமக்களாக நடத்தப்படுவதற்கு சட்டத்தின் ஆட்சி மற்றும் நேர்மையான  கருத்துக்கள் மிக முக்கியமானவை, 19 ஆம் நூற்றாண்டின் அரசியல் கோட்பாட்டாளர் யோன் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) “பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மைக்கு” எதிராக எச்சரித்தார்,  மேலும் “ஒரு மாநிலத்தின் மதிப்பு, நீண்ட காலத்திற்கு, அதை உருவாக்கும் தனிநபர்களின் மதிப்பாகும்” என்றும் வலியுறுத்தினார்.

அனைத்துக் குடிமக்களுக்கும் சனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் நிறுவன ரீதியிலான பாதுகாப்புகள் மூலம் சமத்துவத்தையும் நீதியையும் உறுதி செய்வது மிக முக்கியமானது. இலங்கையின் அண்மைய நிகழ்வுகள் இன மற்றும் மத சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் தோற்றுவித்துள்ளன. ஞாயிறு உயிர்த்தெழுந்த நாள் குண்டுவெடிப்புத் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபையின் கவலைகளைப் புறக்கணித்தல், போதகர் ஜெரோம் ஃபெனாண்டோவின் கைது மற்றும்  அரசமைப்புப் பேரவைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு எதிரான எதிர்ப்பு ஆகியவை இதில் அடங்கும். போதகர் ஜெரோம் கைது என்பது ஒரு சிறிய சிக்கலாகவும், பிற மதங்களைப் பற்றியும், குறிப்பாக பெரும்பான்மை மதத்தைப் பற்றியும் அவர் பேசியதில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு நபரின் சிக்கலாகவும் தோன்றலாம். ஆனால் மத வெறுப்புணர்வைப் பரப்பியதற்காக ஐசிசிபிஆர் சட்டத்தின் (ICCPR Act) கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அனைத்து மத மற்றும் இனச் சிறுபான்மையினருக்கும் அரசாங்கம் அவர்களை அடக்கிப், பெரும்பான்மை சமூகத்தை நடத்துவதை விட, கடுமையாக நடத்தலாம் என்ற செய்தியைச்   சொல்கிறது.

போதகர் ஜெரோம் முக்கிய கிறித்தவ தேவாலயங்களால் கூட சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் சுவிசேஷ கிறித்தவர்களின் எண்ணிக்கையில் ஒரு சிறிய குழுவைச் சேர்ந்தவர். ஆனால் அவர் கைது செய்யப்பட்ட சூழ்நிலையானது சில நேரங்களில் இன மற்றும் மதச் சிறுபான்மையினர் மீதான அரசாங்கத்தின்  வளர்ப்புத்தாய் மனப்பான்மையைக் குறிக்கின்றன. நாடு திரும்பியதும் கைது செய்யப்பட மாட்டார் என்று உயர் நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவு  பெற்றிருந்த போதிலும் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான நிதியை முடக்கக் கூடாது என்ற நீதித்துறை பிறப்பித்த உத்தரவை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலைப்பாடு நீதித்துறை உத்தரவுகளை அலட்சியப்படுத்துவதற்கு அரசாங்கம் அணியமாக இருப்பதைக் காட்டியுள்ளது. சட்டம் அனைவரையும் சமமாகப் பாதுகாக்கிறது என்ற அடிப்படையில் பொது மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் அமைத்துள்ள பல “நல்லிணக்கப் பொறிமுறைகள்” செய்ய முயற்சிக்கும் நல்ல பணியை இது சிதைக்கிறது.   இது மிகவும் வருந்தத்தக்கது.

சமச்சீரற்ற நீதி

போதகர் ஜெரோம் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் தனது மதத்தை நிறுவியவர் மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய  முன்மாதிரியாக இருப்பதாகக் கூறிப்  பெரும்பான்மை மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தினார் என்பதாகும். அதனடிப்படையில், மத நல்லிணக்கத்திற்கு மாறாக ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் தனக்குச் சொந்தமான அற்புத குவிமாடத்தில் (Miracle Dome) செய்த பிரசங்கம் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்திருப்பதற்குப் போதுமான உண்மைகள் நீதிமன்றத்தில் அணைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டிருந்தார். சந்தேக நபரின் வாக்குமூலம் பவுத்தர்களுக்கும் ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரச தரப்பு  அதற்கான உண்மைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும்  நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், ஒரு மரியாதைக்குரிய பவுத்த துறவிக்கு இழைக்கப்பட்டதை விட  போதகர் ஜெரோம் நடத்தப்பட்ட விதம் மிகவும் கடுமையானது. தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட்டதாகக்  கூறப்படும் சுமனரத்தின தேரருக்கு எதிராக காவல்துறை  நடவடிக்கை எடுக்காதது ஏன் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் சுமனரத்தின தேரர் இன வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டியிருந்தார். “வணக்கத்திற்குரிய அம்பிட்டிய சுமனரத்தின (Ampitiya Sumanarathana  Thera.) தேரர் கூறுகிறார்…”இல்லையென்றால் ஒவ்வொரு தமிழனும் வெட்டிக் கொல்லப்படுவார்கள். தெற்கில் உள்ள ஒவ்வொரு தமிழனையும் வெட்டிக் கொன்று விடுவோம்”. இது ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் பிரிவு 3 ஐ தெளிவாக மீறுகிறது அல்லவா? இது சனாதிபதிக்கு” என நா.உ கணேசன் எக்ஸ் ( X)  இல் இடப்பட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரின் உணர்வு அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும் மேலும் இரண்டு முக்கியமான சிக்கல்கள் உள்ளன. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச்  சம்பவம் தற்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. முறையான விசாரணை எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள போப் பிரான்சிஸ், உண்மை மற்றும் நீதிக்கான தேடலைக் கைவிட வேண்டாம் என்று இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபையை வலியுறுத்தியுள்ளார். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த விவகாரத்தை விசாரிக்கக் குழுக்களை நியமித்துள்ளன. தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்வதாக உறுதியளித்துள்ள போதிலும் குற்றவாளிகளைக் கைது செய்வதில் கணிசமான முன்னேற்றம் இல்லை. இக்குழுக்களின் அறிக்கைகளில் தங்கள் கடமைகளில் அலட்சியமாக இருந்தவர்கள் என்று பெயரிடப்பட்டவர்கள் பதவிகளில் தொடர்ந்து இருக்கின்றார்கள்.  பதவி உயர்வுகளும் பெற்று வருகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், Verite Research நிறுவனம் நடத்திய  அண்மைய  பொது கருத்துக் கணிப்பு, இலங்கை மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் – 53% –  2019 ஆம் ஆண்டில்  நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டதாக நம்புகின்றனர்.

தொலைதூர அடிவானம்

சிறுபான்மையினரின் உணர்வுகள் புறக்கணிக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட மற்றொரு சிக்கல் அரசியலமைப்புப் பேரவையில் நிரப்பப்படாத வெற்றிடம் தொடர்பானது. உயர் நீதித்துறை, தேர்தல்கள் ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, அரசாங்க சேவைகள் ஆணைக் குழு மற்றும் இலஞ்சம் போன்ற சக்திவாய்ந்த மற்றும் முக்கியமான அரச நிறுவனங்களில் நேர்மையுள்ள சுயாதீனமான நபர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நாட்டின் மிக உயர்ந்த தரவரிசை கண்காணிப்பு அமைப்பாகும். எவ்வாறெனினும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நிரப்பப்பட வேண்டிய அரசியலமைப்பு சபையில் உள்ள வெற்றிடம்,  பிற மூன்றாவது பெரிய அரசியல்  கட்சிகள் உள்ளன என்ற அடிப்படையில் அதற்கு வழங்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “அரசியலமைப்புப் பேரவையில் இழுபறி நிலை காணப்படுகின்றது, இது அனைவருக்கும் தெரியும். இன்னும் ஒரு இடம் காலியாக இருக்கும் போது, ஒரு முட்டுக்கட்டை நிலைமை நிலவுகிறது.  அந்த இடம் நிரப்பப்பட்டிருந்தால்  முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்காது. எனவே, இந்த நாட்டில் அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான பிரதிநிதித்துவம் உள்ளது என்று நீங்கள் கூறினாலும், மிக முக்கியமான அமைப்பான அரசியலமைப்புப் பேரவையில் நீங்கள் இன்னும் எங்களின் இடத்தைப் பறித்துள்ளீர்கள் என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எப்படி யாரையும் நேருக்கு நேர் பார்த்து, இது சரியான ஆளுகை என்று கூற முடியும்? எனவே இன்று நான் இதை ஒரு தீவிரமான சிக்கலாக எழுப்புகின்றேன். அரசியலமைப்புப் பேரவையில் வெற்றிடத்தை நிரப்புவது மாத்திரமன்றி, ஒரு பாரதூரமான தேசியச் சிக்கலாகவும் இது உள்ளது. இந்த நாட்டின் தேசிய வாழ்க்கையில் இருந்து நாங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளோம் என்று நாங்கள் பல தசாப்தங்களாக முறையிட்டு வருகிறோம். அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலக்கி வைக்கப்படுவது மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.”

அரசியலமைப்பு பேரவையில் அனைத்து இன, மத சமூகங்களும் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறும் ஒரு பல்லின, பன்முக மதம் மற்றும் பன்மைத்துவ சமூகத்தின் அடிப்படைக் கொள்கை, தேசிய நல்லிணக்க செயன்முறை அதன் உண்மையான அர்ப்பணிப்புக் குறித்து சர்வதே  சமூகத்தை நம்பவைக்க கடுமையாக முயற்சிக்கும் அரசாங்கத்தால் மறுககப்படுகிறது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் போன்ற புதிய சட்டங்களைக் அது கொண்டு வரவுள்ளது. ஆனால் நல்லிணக்கத்திற்கான அடிப்படை முன்நிபந்தனை, அதாவது சட்ட அமுலாக்க அதிகாரிகள் தங்களை நடத்தும் விதத்திலும் அந்த நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குபவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதத்திலும்  நம்பிக்கையும் சிறுபான்மைக் கண்ணோட்டத்தில் திருப்திகரமாக இல்லை. என்னதான் வார்த்தைகள், புதிய சட்டங்கள் இயற்றப்பட்டாலும், நிறுவப்பட்ட நிறுவனங்களைப் பொருட்படுத்தாமல், நியாயம் இல்லாத நிலையில், அனைவரும் சமமாக நடத்தப்படாத நிலையில் தேசிய நல்லிணக்கம் என்பது தொலைதூரத்தில் உள்ள  ஒரு கனவு போலவே இருக்கும்.

(இந்தக் கட்டுரையின ஆங்கில மூலத்தை https://www.colombotelegraph.com/index.php/reconciliation-process-requires-fairness-equal-treatment/ என்ற இணையதளத்தில் படித்துக் கொள்ளலாம். தமிழாக்கம் கனடா நக்கீரன்.)

————————————————————————————————————–

Reconciliation Process Requires Fairness & Equal Treatment

By Jehan Perera –

Minorities for the most part live in some apprehension of the power of the majority. At their worst, majorities can inflict violence on minorities, such as in the form of riots. While minorities may resist, they tend to be at the receiving end. In democracies, minorities will invariably face the problem of majority rule, as the majority’s view of what is important will tend to take precedence over what the minority thinks as being important. Therefore, concepts of rule of law and fairness are most important to minorities so that they are treated as equal citizens in practice. The 19th century political theorist John Stuart Mill, who warned against the “tyranny of the majority” also asserted that “The worth of a state, in the long run, is the worth of the individuals composing it.”

Ensuring equality and justice through institutional safeguards becomes paramount in upholding the principles of democracy for all citizens. Recent developments in Sri Lanka are generating apprehension and anxiety amongst the ethnic and religious minorities. These include the disregard for the concerns of the Catholic Church regarding the Easter bombing, the arrest of Pastor Jerome Fenando and the resistance to the TNA;’s nominee to the constitutional council. The arrest of Pastor Jerome may seem a small problem and a problem of an individual who went too far in what he said about other religions and in particular about the majority religion. But his arrest under the ICCPR Act for spreading religious hatred sends a message to all religious and ethnic minorities that the government can clamp down on them and treat them more strictly than it treats those of the majority community and in a way that violates the principle of equality of treatment.

Ads by FatChilli
Pastor Jerome belongs to a numerically small group of evangelical Christians who are viewed as controversial even by the mainstream Christian churches. But the circumstances of his arrest is indicative of the sometimes step motherly attitude of the government towards ethnic and religious minorities. He was arrested despite obtaining a ruling from the higher judiciary that he would not be arrested upon his return. The government has shown itself willing to disregard judicial orders previously too, when it did not heed the judicial order not to block funds for the local government election. This is most unfortunate as it erodes the good work that numerous “reconciliation mechanisms” set up by the government are trying to do to bring about reconciliation among the general population on the basis that the law protects all equally.

Asymmetric Justice

Powered by FatChilli Ads

The main accusation against Pastor Jerome was that he hurt the sentiments of the majority religion by claiming that the founder of his religion was the model for others to follow. Accordingly, he was arrested by the Criminal Investigation Department (CID) on charges of making offensive statements that led to religious disharmony. The Magistrate had noted that sufficient facts have been filed before Court suggesting that the suspect had committed an offence under the ICCPR by delivering a sermon at the Miracle Dome which belongs to him. The Magistrate had also noted that the prosecution had filed facts before the Court that the suspect’s statement had caused tension between Buddhists and followers of other religions.

Ads by FatChilli
On the other hand, the treatment meted out to Pastor Jerome was more severe than that to a venerable Buddhist monk. TNA Member of Parliament (MP) M.A. Sumanthiran has questioned the lack of action by the Police against Ven. Sumana Thera for allegedly making threatening statements against the Tamil community. MP Sumanthiran had questioned why the Police had not taken immediate action against Ven. Sumana Thera. Tamil Progressive Alliance (TPA) Leader MP Mano Ganesan had also accused the Thera of inciting racial hatred and violence. “Ven. #Ampitiya #Sumanarathana Thero says… “If not every Tamil person will be cut and killed. We will cut every Tamil in the south and die”. Isn’t this in clear breach of ICCPR Act Section 3? Over to Mr. President!” MP Ganesan said in a post on X.

There are two other important issues on which minority sentiment is being disregarded by the government. The Easter bombing is now coming into its fourth year with no proper investigation which has been noted by Pope Francis who urged the Catholic Church in Sri Lanka not to give up on the search for truth and justice. Successive governments have appointed committees to investigate the matter and the present one has pledged to do so but with no substantive progress in apprehending the culprits. Those who had been named in the reports of these committees as being derelict in their duties have continued in office and to their promotions. Significantly, a recent public opinion survey by Verite Research shows that more than half the Sri Lankan population – 53% – believes local political forces were involved in the Easter Sunday attacks carried out in 2019.

Far Horizon

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply