இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!

பேராசிரியர் சுனில் ஜே. விமலவன்ச


(பகுதி 24: இலங்கை—தலைவலியைக் குணப்படுத்த தலையணைகளை மாற்றுதல்: சர்வாதிகாரி சனாதிபதிக்குப் பதிலாக இலங்கையில் ஒரு கொடுங்கோலன் நியமிக்கப்பட்டார்.)

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக  திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.

ஒரு பொருள்பொதிந்த மற்றும் நிலையான அமைப்பு மாற்றத்திற்கான ஒரே வழி பெரியளவிலான அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் ஆகும். இதைத் தொடர்ந்து புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, நாட்டை நியாயமாக ஆள 12 அமைச்சர்கள் உட்பட 60 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட முற்றிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வர வேண்டும். அரசியல் அமைப்பில் அவர்களில் எவரேனும் திறமையற்றவர்களாகவோ அல்லது அழிவுகரமானவர்களாகவோ இருந்தால், அல்லது ஊழல்வாதிகளாகக்  காணப்பட்டால் அவர்களைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் (வாக்காளர்களுக்கு) வழங்கப்பட வேண்டும்.   நீதித்துறையை அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலுமாக  விடுவிக்கப்பட வேண்டும்.

Sri Lanka's Financial Meltdown Could Be End Of The Road For Rajapaksa Family  - ரெலோ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

படுமோசமாகத் தோல்வியுற்ற ஜேஆர் ஜெயவர்த்தனா அவர்களின் 1977 அரசியலமைப்பைத்  திருத்தங்களுடன் இணைப்பது நாட்டுக்கு நன்மை பயக்காது. அதே நேரம், ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து அரசியலமைப்பிற்கு முரணான உத்தரவுகளைப் பெறுவதை காவல்துறையும் இராணுவமும் நிறுத்த வேண்டும். அதற்கான நேரம் இது. சட்டவிரோதமாகக் கைது செய்தல் மற்றும் குற்றச்சாட்டுக்களைச் சோடித்தல்,  எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுதல் மற்றும் மக்களுக்குத் தீங்கு விளைவித்தல் ஆகியவை அடங்கும். அவ்வாறு செய்வது அரச ஆதரவு பயங்கரவாதம் ஆகும், அது சட்டப்படி தண்டனைக்குரியது.

திருத்தங்கள் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை நீக்குதல்
 

அண்மைய அரசியலமைப்புத் திருத்தங்களில் மிகவும் கசப்பான விடயங்களில் ஒன்று நீதித்துறையின் அதிகாரத்தை நீக்கி நிறைவேற்று சனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டதாகும். இன்று அரசியல்வாதிகள் நீதித்துறையை முடக்கி, நாட்டில் அழிவுகளை ஏற்படுத்த  வழிகோலியுள்ளனர்.  அரசியல்வாதிகள்,   சனநாயகத்தின் முக்கிய அம்சத்தை அகற்றியுள்ளது:  நீதித்துறையை  சட்டமன்றம் மற்றும் நிறைவேற்றுத்  துறைகளில் இருந்து பிரிக்கத் தவறிவிட்டது.

அண்மைக் காலத்தில் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் திட்டமிட்ட முறையில்  பறிக்கப்பட்டது. அயோக்கியத்தனமான 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டதன் மூலம், நீதி/நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை இலங்கையில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து – சட்டமற்ற சமூகமாக மாற்றியுள்ளது.
 

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி

 

துன்புறுத்தப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள், விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் தேசிய வளங்களை (ஒருவேளை, அதிட்டப் பகிர்வு) கொள்ளையடிப்பதற்கு நிறைவேற்று சனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒரு சரியான அமைப்பை உருவாக்கியது. தவறான தகவல், சுயநல சனாதிபதிகள் நேர்மையற்ற ஆலோசகர்கள், அதிகாரிகள் மற்றும் வணிகர்களால் ஏமாற்றப்பட்டனர்: சிறிலங்கா ஒட்டாண்டி ஆவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

இருபதாவது திருத்தத்திற்குப் பின்னர், பொதுமக்களின் அவலங்கள் அதிகரித்தன. 20 ஏ ஆவது  நீதித்துறை உட்பட, சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட அரசாங்கத்தின் சட்டமன்ற மற்றும் நிர்வாகக் கிளைகளை மேற்பார்வையிடும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களையும் அகற்றுவதற்காக வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் அரசியலமைப்பு சபைக்குள் ஊடுருவி, அரசியல்வாதிகள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு இலவச அனுமதிச் சீட்டுக்களை வழங்கி, பொருளாளர் மற்றும் தேசிய சொத்துக்களைக்  கொள்ளையடிக்க வாய்ப்பளித்தனர். இந்த முறைகேடுகளால், சராசரி மனிதர்கள் இப்போது பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகளுக்கு மிக அதிக விலை கொடுத்து உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றனர். அதன் விளைவு மக்களின் துன்பம் அதிகரித்துள்ளது.

அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடான நடத்தை

இப்போதெல்லாம், நடைமுறையில் அதிக பணம் உள்ள எவரும் நாடாளுமன்ற உறுப்பினராகலாம்.  அரசிதழின்  அறிக்கையின்படி, நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் வியாபாரிகள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் எனத் தண்டனை பெற்றவர்கள் உள்ளனர். முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சில சமயங்களில் ஒரு பழைய ஆனால் விலையுயர்ந்த வட்டரங்கில் (circus) வரும் கோமாளிகளைப் போலச் செயல்பட்டனர் – சட்டத்தை மீறுகிறார்கள். மற்ற நேரங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தொலைநாடகமாக  மாற்றினர் – பொது பொழுதுபோக்கு. ஒரு எடுத்துக்காட்டு  2018 இல் அரசியல் நெருக்கடியின் போது; அவர்கள் குண்டர்கள் போல் பகுத்தறிவற்ற முறையில் நடந்து கொண்டு பொதுச் சொத்துக்களை தண்டனைக்குப் பயமின்றி அழித்தார்கள். இந்த அரசியல் குண்டர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும், பொதுச் சொத்துக்களை அழித்ததற்காகவும் ஏன் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பதை பொதுமக்கள் அறிய விரும்புகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைகள்?
 

தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருமே நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குண்டர்களாக மாறி, அரை – பாதுகாப்பின் கீழ்  ஒரு திசைதிருப்பலை உருவாக்க அல்லது யாரோ  ஏதோவொன்றிலிருந்து கவனத்தை ஈர்க்க தங்கள் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள்.  நாடாளுமன்றம் பொதுமக்களுக்கு ஒரு பயனற்ற ஆனால் விலையுயர்ந்த விவகாரமாகவும், கேவலமான எடுத்துக்காட்டுக்களை வழங்கும் அழிவுகரமான நிறுவனமாகவும் மாறியுள்ளது: குறிப்பாக குழந்தைகளுக்கு. ஒரு மோசமான எடுத்துக்காட்டு.  பயனற்ற மாகாணசபைகளைப் போல, பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி  ‘நகைச்சுவை நடிகர்களால்’  பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி  ‘நகைச்சுவை’ நடிகர்களால்  இந்த மதிப்பற்ற வட்டரங்கு நடத்தப்படுகிறது.

ஊழல் மன்னர்கள்

அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்ல, அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள்  மத்தியில் வெட்கப்படத்தக்க வகையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது நகராட்சிகள், சுங்கத் திணைக்களம், உள்நாட்டு வருவாய்த்துறை , உரிமம் வழங்கும் முகவர்கள், கடவுச்சீட்டு அலுவலகங்கள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றில் பரவியுள்ளது. அரசாங்க அதிகாரிகள் எதையாவது வழங்கினாலும் அல்லது மக்களுக்கு ஒப்புதல் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் ஊழல் உள்ளது – இலஞ்சம் வாங்குபவர்கள் இல்லாத எந்த அரசாங்க அலுவலகமும் இல்லை. மத்திய வங்கிப் பணமுறிவு ஊழல் போன்ற பெரிய ஊழல்களில் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதியின் முன் நிறுத்தப்படுவதற்குப் பதிலாக, இப்போது அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவிகளுக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். மேலும் பலர் கொண்டு வரப்படுகிறார்கள். இது மிகவும்  வேடிக்கையானது.

LitroGas, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, போக்குவரத்துப் பிரிவுகள் (தொடர்வண்டிகள் மற்றும் பேருந்துகள்), ஸ்ரீலங்கன் விமான சேவை, போன்ற பல அரசாங்க நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதற்கும் இதே காரணம்தான்: ஊழல் மற்றும் உறவினர், நண்பர்களுக்குப் பதவிகள் கொடுப்பது. இந்த நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் அனைத்தும் வருவாய்  ஈட்டக்கூடிய திறன் கொண்டவை, ஆனால் அப்படி அவை இன்று இல்லை. திறமையின்மை, அதிகரித்த செலவுகள், நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் திருட்டுப் போன்றவற்றால், இவை பாரிய இழப்புகளைப் சந்திக்கின்றன. கணக்கியல், தணிக்கை மற்றும் இலஞ்ச ஆணையம் உள்ளிட்ட மேற்பார்வைகளை அகற்றுவது, விளைவுகள் இல்லாமல் நிதியை திருடுவதற்கான சரியான களத்தை உருவாக்கியுள்ளது.

நிர்வாகக் குழுவால் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் தொடர்வது

இதற்கிடையில், முன்னாள் சனாதிபதி சட்டவிரோதமாக கொலைகாரர்கள் மற்றும் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்ததுடன் அவர்களுக்கு உயர் அரசாங்க பதவிகளையும் வழங்கினார்! அரசாங்கக் குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்தத் திறனும் அல்லது நம்பகத்தன்மையும் இல்லாத நபர்களை அவர் நியமித்தார், மேலும் சிலரை தூதர்களாகவும், மூத்த தூதரக ஊழியர்களாகவும் வெளிநாடுகளுக்கு அனுப்பினார் – உறவினர், நண்பர்களுக்குப் பதவிகள் கொடுப்பதின் உன்னதமான எடுத்துக்காட்டுக்கள். தற்போதைய சனாதிபதியைப் போன்று தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், போட்டியிடாதவர்கள் அல்லது “தேசியப் பட்டியலில்” கூட இடம் பெறாதவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக நுழைவதற்குத் தற்போதைய ஊழல் அனுமதித்தது. இலங்கையில் மாத்திரமே இவ்வாறான அதீத ஊழல் இடம்பெற்று  உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் (Guinness Book of world records) இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசியல்வாதிகளின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் வெட்கக்கேடானது.

நாடாளுமன்றத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்டவிரோத நியமனங்களைத் தடுக்க அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், நீதித்துறையும் ‘தோல்வியடைந்தது’ : யாரும் அவற்றை எதிர்க்கவில்லை! இதன் விளைவாக, அவர்களில் சிலரை நா.உறுப்பினர்கள் மட்டுமல்ல, அமைச்சர்கள், பிரதமர்கள் மற்றும் சனாதிபதியாகவும் கூட அனுமதித்தார்கள்! இதன் விளைவாக நாட்டிற்கு எதிர்மறையான முடிவுகள் வெளிப்படையானவை. என்ன ஒரு அபத்தம்! பெரும்பாலான 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்தே இந்த மோசடி மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு பங்களித்துள்ளனர். இலங்கையில் மட்டும்தான் இவ்வாறான சூழ்ச்சிகள் நடக்கின்றன.
 

இலங்கையின் ஒட்டாண்டிநிலைக்கான பாதை 

ஊழல், மோசமான தீர்ப்புகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளுடன் இணைந்து, இந்த அமைப்புகள் இலங்கையில் ஒட்டாண்டிநிலைக்கு பாதை அமைத்தன. இரண்டாவது முக்கிய சிக்கல் விதிவிலக்காக அதிக பொதுச் செலவுகள்—1.5 மில்லியன் பொது ஊழியர்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள்.

நம்பமுடியாத வகையில், 12 ஆண்டு அமைதிக்குப் பிறகும் கூட, தேவையில்லாமல் மிகைப்படுத்தப்பட்ட இராணுவத்தை பராமரித்தது. இந்தக் கட்டுரைத் தொடரின் 9 முதல் 11 வரையிலான பகுதிகள் “செலவுகளைக் குறைப்பதன் முக்கியத்துவம்” என்பதன் கீழ் இந்த நடவடிக்கைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. அதிக வேலையில் இருக்கும் ஆயுதப் படைகளின் மனித பலத்தை பாதியாகக் குறைப்பதும் இதில் அடங்கும். இருப்பினும், அரசாங்கம் அவ்வாறு செய்கிறது என்பதற்கான குறிப்புக்  கூட இல்லை – நிர்வாகத்தின் அபத்தம்.

Sri Lanka Latest: Succession in Focus After Tumultuous Weekend - Adaderana  Biz English | Sri Lanka Business News


கடந்த தசாப்தத்தில், அரசாங்கங்கள் படிப்படியாக இராணுவத்தின் பலத்தை ஆண்டுக்கு 10% குறைத்திருக்க வேண்டும் (முதன்மையாக இயற்கைச் சிதைவுகள் மூலம்); அது குறிப்பிடத்தக்க வகையில் செலவினங்களைக் குறைத்து, ஆண்டு வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்கு உதவியிருக்கும், ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. அடுத்தடுத்து வந்த அரசுகள் தங்கள் செலவுகளைக் குறைக்க எதுவும் செய்யவில்லை.

நடைபாதை கட்டுவதற்கும், அழகுபடுத்துவதற்கும், கட்டிடம் கட்டுவதற்கும், மூத்த இராணுவ அதிகாரிகளின் வீடுகளை பழுதுபார்ப்பதற்கும் (அதாவது, இலவச தொழிலாளர்களாகப் பயன்படுத்துவதற்கு) இராணுவ உழைப்பு மிகவும் ஒறுப்பானது: அது இராணுவத்தின் வேலையல்ல. தற்போதைய மற்றும் முன்னாள் இராணுவத் தலைவர்களுக்கு (பொதுமக்கள் அனுபவிக்காத) எரிபொருள், மின்சாரம் போன்றவற்றுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட கொடுப்பனவுகள் அனைத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து தேவையற்ற சலுகைகளும் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்.
 

சட்டத்தை  நடைமுறைப்படுத்துங்கள், எதேச்சதிகார சக்திகளை அல்ல

ஆதாரமற்ற அவசரகால பிரகடனத்தால் வலுவூட்டப்பட்ட சனாதிபதி, எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களை தன்னிச்சையாக கைது செய்யத் தள்ளினார். அரசியல் சாசனத்தின்படி, இந்தத் தோல்வியடைந்த, சனநாயகமற்ற அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்களுக்கு 100% உரிமை உள்ளது. தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சட்டவிரோதக் கைதுகளை திருப்திப்படுத்தவும், நேர்மையற்ற அரசியல்வாதிகள் சிலரின் உத்தரவை நிறைவேற்றவும், தங்கள் உயர் அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றவும், போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறை குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகத் தெரிகிறது.

சனாதிபதியை திருப்திப்படுத்துவதற்காக இராணுவம் அரசியலமைப்பிற்கு முரணான இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவுவதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் மற்றும் ஏனையோரையும் நிபந்தனையின்றி சனாதிபதி விடுவிக்க வேண்டும்.  இராணுவ புலனாய்வு மற்றும் பிற மனித உரிமை மீறல்களைப் பயன்படுத்தி மிரட்டாமல் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும். (இந்தக் கட்டுரை  Colombo Telegraph இணையதளத்தில் (https://www.colombotelegraph.com/index.php/the-despot-president-was-replaced-by-a-tyrant-in-sri-lanka/) வெளிவந்தது. மொழிமாற்றம் நக்கீரன்.)

The Despot President Was Replaced By A Tyrant In Sri Lanka

Prof Sunil J. Wimalawansa

Part 24: Sri Lanka—Changing Pillows to Cure HeadachesThe Despot president was replaced by a Tyrant in Sri Lanka

As demonstrated over the years, the current politicians have no interest in the welfare of constituents and the country. Hardly anyone seems to put the country first. Instead of proper planning and developing the country and bringing legislation to support it, the young and old politicians systematically promoted ethnic and religious divisions and animosities within groups as distracting tactics for self-gain.Ads by FatChilli

The only way to have a meaningful and sustainable System Change is through major political and social changes. This must be followed by introducing a new constitution, bringing in an entirely new set of members of parliament, restricted to 60, including 12 ministers to govern the country fairly. It is crucial that the constitution include recalling any, in the event anyone of them is inefficient or destructive, or become corrupt and completely removing the judiciary from politician control.

Patching up the miserably failed JRJ’s-1977 constitution with amendments will not help the country. Meanwhile, it is time for the police and the military to stop taking unconstitutional orders from corrupt politicians. The latter includes illegally arresting and manufacturing charges, engaging in violence against protesters and harming people. Doing so is state-sponsored terrorism, which is punishable by law.

Removal of accountability and the independence of the judiciary via amendmentsAds by FatChilli

One of the most damming things in recent constitutional amendments was removing the judiciary’s power and bringing it under the executive president. Today, it paralysed the judiciary leaving politicians to cause havoc in the country. It removed a critical element of a democracy: the separation of power between the three branches of the government—the separation of the judiciary from the legislature and executive branches.

The independence of the judiciary was systematically taken away via recent constitutional amendments. With the enacting of the scoundrel 20th amendment, justice/judiciary, law and order, and accountability virtually disappeared from Sri Lanka—turning into a lawless society.

Economic downhill of Sri Lanka

Tormented constitutional amendments created a perfect system for the executive presidents and ministers to pilfer national resources (perhaps, fortune-sharing) without fear of consequences. Misinformed, selfish presidents were hoodwinked by unscrupulous advisers, bureaucrats, and businessmen: one of the critical reasons for bankruptcy.

Following the 20th amendment, misfortunes for the public escalated. 20th A purposefully designed to remove all independent commissions that oversaw the legislative and executive branches of the government that had the legal power to prosecute law-breakers, including the judiciary. Politicians infiltrated the Constitutional Council, providing the opportunity for the politicians and senior administrators free tickets to ransack the treasurer and national property. Because of these malfeasants, the average person is now paying much higher prices for goods and services and commodity prices, causing shortages of food and medicine. The result is people’s suffering.

Bad behaviour of politicians

Nowadays, practically anyone with much money can become an MP. As per the Hansard report, there are drug dealers, murderous, and convicted criminals in the parliament. Leading politicians and political party leaders sometimes acted like clowns in an old but expensive circus—breaking the law. Other times, MPs turned the parliament into a teledrama for TV appearances—public entertainment. One example was during a political crisis in 2018; they behaved irrationally as thugs and destroyed public property with impunity. The public wants to know why none of these political thugs was brought to justice for violent behaviour and destroying public property. Why are these double standards?

Both elected and unelected MPs have become thugs within and outside the parliament, abusing their powers under smoke screens of quasi-protection. The parliament has become an ineffective but costly affair to the public and a destructive institution that gives lousy behavioural examples: a poor role model, especially for children. This worthless circus is run by ‘comedians,’ abusing public funds, just like useless provincial councils.

Kings of corruptions

Corruption is not only among politicians but is embarrassingly rampant among administrators in all government agencies and institutes. It has spread across municipalities, customs, inland revenue, agencies issuing licenses, passport offices, universities, etc. There is corruption wherever governmental authorities issue something or people need approvals—no government office where there are no bribe takers. Ironic that those who are accused as culprits of major scams like Bond Scam, instead of bringing to justice, are now promoted to the highest positions in the government, and more are brought in.

It is the same reason why many government institutions like LitroGas, petroleum corporation, Ceylon Electricity Board, Transport sections (trains and buses), SriLankan airline, etc. running at a loss: full of corruption and nepotism. All these institutes and corporations have a higher potential to make a profit, but they don’t. Due to inefficiencies, escalated expenses, misappropriations of funds and pilferage, these report massive losses. Removing oversights, including accounting, auditing, and bribery commissions, created a perfect storm for stealing funds without consequences.

Continuation of unconstitutional activities by the executive branch

Meanwhile, the former president illegally pardoned and released murderers and criminals and even gave them higher government positions! He also appointed persons with no capability or credibility to governmental Committees and institutes and even sent some abroad as ambassadors and senior embassy staff—classic cases of nepotism. Ongoing corruption also allowed people who lost elections, those who were not contested, or not even on the “national list,” like the current president, to enter as members of the parliament (MPs). Such extreme corruption happened only in Sri Lanka and is being documented in the Guinness Book of world records. These continuing acts by Sri Lanka politicians are disgraceful.

The leaders of all opposition parties and the judiciary ‘failed’ to block these illegal appointments of MPs to the parliament: no one even objected to them! Consequently, they allowed some of them to become not only MPs but also ministers, prime ministers, and even the president! The resultant negative results for the country are apparent. What an absurdity! Most 225 parliamentarians knowingly contributed to these ongoing fraudulent and unconstitutional activities. Such ploys are happening only in Sri Lanka.

Pathway to the bankruptcy of Sri Lanka

In conjunction with corruption, bad judgments, and harmful policies, these organisations paved the path to bankruptcy in Sri Lanka. The second major issue is exceptionally high public expenses—1.5 million public employees and maintenance costs. Incredibly, even after 12 years of peace, unnecessarily maintaining the over-blown military. These measures were discussed in detail under “the importance of the reduction of costs,” parts #9 through 11th of this article series. This must include slashing the human strength of the highly over-employed armed forces by half. However, not even a hint that the government is doing so—sheer absurdity of the administration.

Over the past decade, the governments should have gradually reduced the strength of the military by 10% per year (primarily through natural attritions); that would have markedly reduced expenses and helped to correct the annual budget deficits, but the government failed to do so. Successive governments did nothing to reduce their expenses.

Military labour is too expensive to use for construct pavement, beautification and building construction, and repairing homes of senior military officers (i.e., use as free labour): that is not the military’s job. All unnecessary privileges given to current and former military leaders (that do not enjoy by civilians) like personal allowances given for petrol, electricity, etc., must be revoked immediately, so as for politicians and government administrators.

Enforce the law, not autocratic forces

Fortified with an unfounded emergency declaration, the president pushed arbitrary arrests of protesters and activists. As per the constitution, people have 100% right to protest against this failing, undemocratic government. Although unclear, the police seem to manufacture charges against the protesters to satisfy unlawful arrests and fulfil the orders from a handful of dishonest politicians directed to them through their superiors.

Evidence suggests that the military is aiding this illegal activity to satisfy the president, which is unconstitutional. President must unconditionally release all political prisoners and others arrested illegally and allow the freedom of expression without intimidating and exploiting using military intelligence and other human rights abuses.

The Despot President Was Replaced By A Tyrant In Sri Lanka


 

About editor 3015 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply