புதிய சனாதிபதி கோட்டாவிடம் பாடம் கற்க வேண்டும்!

புதிய சனாதிபதி கோட்டாவிடம் பாடம் கற்க வேண்டும்!

ஓஸ்டின் பெர்னாண்டோ

ஜே.ஆர் ஜெயவர்த்தனா முதல் கோட்டாபய இராசபக்ச  வரை இலங்கையின் அனைத்து நிறைவேற்று சனாதிபதிகளுக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் நான் பணியாற்றியுள்ளேன் என்பதில் பெருமையடைகிறேன். அப்படிச் செய்த ஒரே பொது ‘அதிகாரி’ நான்தான். மகிந்த இராசபக்சவுடன் அது இரண்டாம்பட்சம், ஆனால் நான் இரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து அவரது ‘உயிர்க்காப்பான்’. (See ‘My Belly is White’ (2008) pages 140 to 142). எனவே, நான் ஒரு கலவையான அனுபவங்களைக் குவித்துள்ளேன் என உரிமை கோருகிறேன்.

Sri Lanka crisis: President Gotabaya Rajapaksa lands in Maldives amid  political unrest

நான் என்னை ஒரு பண்டிதர் என எண்ணவில்லை. அடுத்த சனாதிபதியை எச்சரிப்பதற்காக  கோட்டாபய இராசபக்ச செய்த சில (பலவற்றில்) தவறுகளை மட்டுமே நான் குறிப்பிட விரும்புகிறேன். அவற்றில் இரண்டு தவறுகளை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். புதிய சனாதிபதி அவற்றை மீண்டும் செய்தால், அவர் ஒரு இராணுவ முகாமில் அடைக்கப்படுவார் அல்லது ஞானக்காவின் கோவில் அல்லது கதிர்காமம் அல்லது திருப்பதி, வத்திக்கான் அல்லது மெக்காவில் பிரார்த்தனை செய்ய வேண்டிவரும்.

ஒரு அரசியல் வம்சத்தைத் தயக்கமின்றி அவர்கள் செய்த  தவறுகளுக்காக குப்பைத் தொட்டியில் தள்ளக்கூடிய, உணர்வுள்ள, விவேகமுள்ள வாக்காளர்கள் மற்றும் சமூகமாக நாம் இருப்பதால், அடுத்த சனாதிபதியை எச்சரிக்க வேண்டிய தேவை எழுகிறது. 2019 சனாதிபதித் தேர்தலில் 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர்  ஒரு வகையில் மன்னரானார். வருங்கால சனாதிபதிகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

பிரபலத்தை மிகைப்படுத்துதல்

கோட்டாபயவின் பரிதாபகரமான தோல்விகளை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். அவை அவரிடம் பாரிய ஆணை மற்றும் வீரம் இருந்தபோதிலும் மக்கள் சக்தி இயக்கத்தால் அவர் பதவியிலிருந்து  வெளியேற வேண்டி வந்தது. அவரது புகழ் அவருக்கு அசாதாரண தைரியம், நம்பிக்கை மற்றும் ‘ நான் அரசபரம்பரையைச் சேர்ந்தவன்’ என்ற எண்ணத்தை உருவாக்கியது.  ஆனால் அவர் பகுத்தறிவு, சனநாயகப் பிணைப்புகள், சமத்துவ அக்கறைகள், பொதுமக்களோடான ஊடாடல் போன்றவற்றில் ஈடுபடவில்லை. மேலும் ஆணவம், இராணுவ நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை அவர்களின் தகுதிகளைப் பொருட்படுத்தாமல் அதிகாரப் பதவிகளுக்கு நியமித்தல் மற்றும்  கருத்து வேறுபாடுகள்பற்றிய சகிப்புத்தன்மை அவரிடம் இருக்கவில்லை. பிரபல்யம் நிரந்தரமானது அல்ல என்பதை கோட்டாபய எண்பித்துள்ளார். இந்த உண்மையை புதிய சனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து கோட்டாபயவின் புகழ் அதிகரித்தது. பவுத்த மதம் மட்டுமல்ல, கோவிட்-19 நோயினால் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது போன்ற விடயங்களிலும் கோட்டாபய மீது உரத்துக் கூக்கிரல் இடுகிற பவுத்த மதகுருமார்கள் செல்வாக்குச் செலுத்தினர். பல்கலைக்கழக வேந்தர் பதவி வழங்குதல், இரசாயன உரத்தடை,  ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ திட்டம் போன்றவற்றில் இருந்து பாடங்கள் கற்க வேண்டும்.

கோட்டாபயவின் அனுபவத்திலிருந்து ஒருவர் அறிந்து கொள்வது என்னவென்றால், தேர்தல் பரப்புரைகளும், அரசாங்கமும் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும். புதிய சனாதிபதி தேவைப்படும்போது மதத் தலைவர்களின் ஆலோசனையைப் பெறக்கூடாது என்பதல்ல. ஆனால் ஒரு வரம்பு இருக்க வேண்டும். 2019 நொவெம்பர் சனாதிபதித் தேர்தலில் தனக்கு உதவிய கொழும்பு பேராயர் மால்கம் கர்தினால் இரஞ்சித்திடம் கூட கோட்டாபய அந்தக்  கோட்டை வரையத் தவறி, அவரை ஏமாற்றினார்.

கோட்டாபய சிந்தனைக் குழுக்களின் உறுப்பினர்களான வியத் மக மற்றும் எலியா மற்றும் இலத்திரனியல் ஊடக மொகலாயர்களின் (Moghuls) ஆதரவைப் பெற்றதோடு தனிப்பட்ட வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளை அதிகம் நம்பியிருந்தார். கோட்டாபயவுக்கு நம்பிக்கையான  பவுத்த மதகுருமார்களைப் போலவே, இவர்களும் பொதுச் சேவை ஆணைக்குழு, தொற்றுநோய்களின் போது பணம் புரளும் தொழில்கள், தொலைத்தொடர்பு, அமைச்சின் செயலாளர் பதவிகள், சட்டப்பூர்வ அதிகாரிகள், இராசதந்திர பணிகள் போன்ற நிபுணத்துவம் இல்லாத துறைகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவை வைத்திருந்தார். தனிப்பட்ட நலன்களை மேம்படுத்த முயல்பவர்களிடமிருந்து எவ்வாறு வழிகாட்டுதலைப் பெறக்கூடாது என்பதை புதிய சனாதிபதி கற்றுக் கொள்ள வேண்டும்.

Singaporeans hold 'muted protests' as Gotabaya Rajapaksa enters country- The  New Indian Express

பழைய சுமைகள்!

கோட்டாபய தனது இராணுவப் பின்னணியையும்,  போர் வெற்றியில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் பயன்படுத்தித் தன்னைப் பாதி மனிதனாகவும் பாதி கடவுளாகவும்  காட்டிக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் மகிந்த இராசபக்ச சனாதிபதியாக இருந்ததால், பாதுகாப்புச் செயலாளராகச் சுதந்திரமாக இயங்கும் பெறும் நல்வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தக் காரணிகள் அனைத்தும் அவரைப் போரின் போது பாதுகாப்பு அமைச்சின் ஆட்சியைப் போலவே அரசின் விவகாரங்களையும் நிருவகிக்க முடியும் என எண்ணினார். மகிந்த சொன்னதைக் கூட கோட்டாபய கேட்கவில்லை என மகிந்த இராசபக்சவின் உதவியாளரை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. நிபுணரின் ஆலோசனைக்கு செவிசாய்க்காமல் மிக முக்கியமான முடிவுகளை எடுத்தார். அனேகமாக, அனைவரும் இணங்கி பின்னர் புகார் செய்யலாம் என்று இராணுவ பாணியில் நடந்து கொண்டார். இம்முறை நாடாளுமன்றத்தில் சனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் வெவ்வேறு அனுபவங்களையும் திறமைகளையும் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் ‘தலைகளை’ ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளையும் ஆற்றலையும் ஒருங்கிணைத்தால், அவர்களால் எங்கள் சிக்கல்களைத் தீர்க்க முடியும். மேலும் கோட்டாபய சனாதிபதியாக இருந்தபோது இல்லாத ஒரு குழு முயற்சியின் அவசரத் தேவை உள்ளது.

இம்முறை நாடாளுமன்றத்தில் சனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் வெவ்வேறு அனுபவங்களையும் திறமைகளையும் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் கருத்துக்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளையும் ஆற்றலையும் ஒருங்கிணைத்தால், அவர்களால் எங்கள் சிக்கல்களைத் தீர்க்க முடியும். மேலும் கோட்டாபய சனாதிபதியாக இருந்தபோது இல்லாத ஒரு குழு முயற்சி அவசரத் தேவையாக உள்ளது.

கோட்டாபயவின் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்தவர் (அவரைப் பார்த்து)   கேள்வி கேட்கவே இல்லை.   ‘கிராமப்புற மக்களை மேம்படுத்துதல்’ (கம சமகின் பிலிசந்தரா’வில்) என்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் தனது வார்த்தையே அரசாங்கச் சுற்றறிக்கை என்று சிரித்துக் கொண்டே அறிவித்ததும், அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு நிர்வாகச் சேவை மூத்த அதிகாரி வழிமொழிந்து  சிரித்தது எனக்கு நினைவிருக்கிறது!

ஆலோசகர்கள், வல்லுநர்கள் நேர்மையான நபர்களாகவும்,  என்ன ஆபத்துகள் அல்லது சிரமங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும், உண்மையைப் பேசும் அளவுக்கு தைரியமாகவும் இருந்திருக்க வேண்டும். அது அவருக்கு இல்லை. அப்படிச் செய்திருந்தால், கோட்டாபய அவர்களின் கருத்துக்குச் செவி சாய்த்திருந்தால் இன்றும் அவர் சனாதிபதியாக இருந்திருப்பார். புதிய சனாதிபதிக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என நம்புகிறேன்.

புதிய சுமைகள்

கோட்டாபய உருவாக்கிய சிந்தனைக் குழுக்களில் இருந்து புதிய ஆலோசகர்கள் உருவாகியுள்ளனர். அவர்கள் புதிய சுமைகள்! அவர்கள் பொறுப்பானவர்கள், படித்தவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் வழங்கிய அறிவுரைகள் மூலோபாய சிந்தனை மற்றும் பன்னாட்டு  உறவுகளைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்கவில்லை. Millennium Corporation Compact (US)  இலகு இரயில் திட்டம் (யப்பான்), கிழக்கு கொள்கலன் முனைத் திட்டம் மற்றும் கெரவலப்பிட்டி LNG திட்டம் (யப்பான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டும்) அத்தகைய ஆலோசகர்களின் வேண்டுகோளின் பேரில் கைவிடப்பட்டன. கைவிடப்பட்டதற்கு சில நியாயங்கள் இருந்திருக்கலாம். கோட்டாபய தனது இராணுவ பாணியில், சில சமயங்களில் பொதுவான இராசதந்திர மரியாதைகளுக்குச் செவிசாய்க்காமல், திடீரென அவற்றை அகற்றினார். இதன் விளைவாக கோட்டாபய அரசாங்கம் சர்வதேச ஆதரவை இழந்தது. இது கோட்டாபயவின் அனுபவத்திலிருந்து அடுத்த சனாதிபதி கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

Sri Lanka: Lawmakers set to replace ex-President Gotabaya Rajapaksa | News  | DW | 16.07.2022

எவ்வாறாயினும், செயலாளர் அருணி விஜேவர்தன யப்பானுடன் ஆன உறவைச் சரியான திசையில் நகர்த்தத் தொடங்கியுள்ளதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புதிய சனாதிபதி மற்ற நாடுகளுடன் கூட அவரது முயற்சிக்கு உதவ வேண்டும். 13 ஆவது திருத்தப்பட்டியல் II இல் கொடுக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகளின்படி செல்வது சரியான பாதையாகும்.

இலங்கை தனது இறையாண்மையை இழக்க நேரிடும் என்று நான் கூற வரவில்லை.  ஆனால் இதுபோன்ற சிக்கல்களைக் கையாள்வதில் ஒரு அதிநவீன அணுகுமுறை தேவை. கோட்டாபயவின் சனாதிபதி பதவி உயர்வு நிர்வாகத்தில் பீட்டர் கோட்பாட்டை (Peter Principle) எடுத்துக்காட்டுகிறது. இதில் பதவி உயர்வு மூலம் படிநிலையில் உயரும் ஒருவர் அந்தந்த திறமையின்மை நிலையை அடைகிறார்! எதிர்காலத்தில் எப்படித் தலைவர்களை தேர்ந்தெடுப்பது என்பது வாக்காளர்களுக்குப் புதிய பாடமாக அமையலாம். கோட்டாபய விமர்சனங்களுக்கு ஆளாகாதவராக இருந்தார் மற்றும் முழுமையான தோல்வி நெருங்கும் வரை அவரது முடிவுகளை மறுபரிசீலனை செய்வதில் அக்கறை காட்டவில்லை. இதனைப்  புதிய சனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்.

மவுனமான மற்றும் மவுனப்படுத்தப்பட்ட  ஊடகங்கள்

தற்போதைய சனாதிபதி மற்றும் அவரது நடவடிக்கைகள் எவ்வளவு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அரச கட்டுப்பாட்டிலுள்ள  ஊடகங்கள் எப்போதும் புகழ்ந்து பேசுவது அனைவரும் அறிந்ததே.  இராசபக்சக்கள் உள்ளும் புறமும் காணப்பட்ட அனைத்து எதிர்ப்பையும் சரிக்கட்டுவதில்  சாணக்ய நீதியியில் சொல்லப்பட்ட  சாம, பேத,  தான மற்றும்  தண்டம் என்ற நால்வகை உத்திகளுக்கு ஏற்ப வற்புறுத்தல், வாங்குதல், தண்டித்தல் மற்றும் சூழ்ச்சிகள் ஆகியவற்றைக் கையாண்டனர்.  அவர்கள் தனியார் ஊடகத்தை “சொந்தமாக”, “பதிலி-உரிமை”, “வேறு வழியில்லாத சூழ்நிலையில் அந்த நபரை வைத்து ஒருவரை ஏதாவது செய்யும்படி கட்டாயப்படுத்துவது” அல்லது “பேரழிவு” மூலம் கட்டுப்படுத்தினர்.

இத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  சட்டநிறைவேற்ற ஆட்சித்துறையின் கீழ் இருப்பதால், உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற முறையில், ஊடகங்கள் பெரும்பாலும் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிகின்றன. கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது லசந்த விக்கிரமதுங்க, போத்தல ஜயந்த, பிரதீப் எக்னேலிகொட, குகன் மற்றும் பலர், சிராசா, சியாத்த, லங்காநியூஸ் மீதான தாக்குதல்கள் காரணமாக ஊடகங்கள் மவுனம் காத்தன. யூலை 09 2022 அளவில்  அனைத்தும் முடக்கப்பட்டன. இது புதிய சனாதிபதிக்குப் பாடமாக அமைய வேண்டும். (ஆங்கில மூலம் https://www.colombotelegraph.com/index.php/the-new-president-must-learn-from-gota/. தமிழாக்கம் நக்கீரன். மிகுதி அடுத்தவாரம்.)

புதிய சனாதிபதி கோட்டாவிடம் பாடம் கற்க வேண்டும்!

ஸ்டின் பெர்னாண்டோ

சென்றவாரத் தொடர்ச்சி ……………..

மவுனமான மற்றும் மவுனப்படுத்தப்பட்ட  ஊடகங்கள்

தற்போதைய சனாதிபதி மற்றும் அவரது நடவடிக்கைகள் எவ்வளவு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அரச கட்டுப்பாட்டிலுள்ள  ஊடகங்கள் எப்போதும் புகழ்ந்து பேசுவது அனைவரும் அறிந்ததே.  இராசபக்சக்கள் உள்ளும் புறமும் காணப்பட்ட அனைத்து எதிர்ப்பையும் சரிக்கட்டுவதில்  சாணக்ய நீதியியில் சொல்லப்பட்ட  சாம, பேத,  தான மற்றும்  தண்டம் என்ற நால்வகை உத்திகளுக்கு ஏற்ப வற்புறுத்தல், வாங்குதல், தண்டித்தல் மற்றும் சூழ்ச்சிகள் ஆகியவற்றைக் கையாண்டனர்.  அவர்கள் தனியார் ஊடகத்தை “சொந்தமாக”, “பதிலி-உரிமை”, “வேறு வழியில்லாத சூழ்நிலையில் அந்த நபரை வைத்து ஒருவரை ஏதாவது செய்யும்படி கட்டாயப்படுத்துவது” அல்லது “பேரழிவு” மூலம் கட்டுப்படுத்தினர்.

லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 13 வருடங்கள்! - Global Tamil News

இத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  சட்டநிறைவேற்ற ஆட்சித்துறையின் கீழ் இருப்பதால், உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற முறையில், ஊடகங்கள் பெரும்பாலும் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிகின்றன. கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது லசந்த விக்கிரமதுங்க, போத்தல ஜயந்த, பிரதீப் எக்னேலிகொட, குகன் மற்றும் பலர், சிராசா, சியாத்த, லங்காநியூஸ் மீதான தாக்குதல்கள் காரணமாக ஊடகங்கள் மவுனம் காத்தன. யூலை 09 2022 அளவில்  அனைத்தும் முடக்கப்பட்டன. இது புதிய சனாதிபதிக்கு பாடமாக அமைய வேண்டும்.

தம்மபதத்திலிருந்து கற்றல்

கோட்டாபய இராசபக்ச  வெளியேறிய பிறகு, சுவையான மின்னணு ஊடகக் குறிப்புகளைக் கண்டேன். மாலைதீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மொஹமட் நஷீத்தின் ஒன்றை மேற்கோள் காட்டுகிறேன். அது சொன்னது:

“சனாதிபதி  கோட்டாபய இராசபக்ச  சனாதிபதி பதவியில் இருந்து விலகிவிட்டார். இலங்கை இப்போது முன்னேற முடியும் என்று நம்புகிறேன். அவர் இன்னும் இலங்கையில் இருந்திருந்தால், தனது உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் சனாதிபதி பதவி விலகியிருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்.” (14-7-2022 அன்று காலை 07.36 மணிக்கு)

Sri Lanka Crisis Protesters claimed huge amount of cash recovered from  President Gotabaya Rajapaksa residence | Sri Lanka Crisis: आर्थिक संकट के  बीच प्रदर्शनकारियों का बड़ा दावा, राष्ट्रपति ...

கோட்டாபய, போரின் போது எடுத்த கடுமையான நிலைப்பாடுகளை வெளிப்படையாகக் மேற்கோள் காட்டி வந்தார். அவரது தொனியும், அப்படிப் பேசுவதும் அச்சுறுத்தலாக இருந்தது. மேலும் அவர் கண்களில் சிமிட்டும் நரித்தனம் இருந்தது. அவர் மோதலின் வலிகளைப் பற்றி அலட்சியமாக இருந்தார்.  போராட்டங்களை இராணுவத்தால் நசுக்க முடியும் என்று நினைத்தார். அவர் விரும்பினால், இராணுவத்தை ஈடுபடுத்தி நெல்வயல்களைப் பயிரிடும் திறனை ஒருமுறை அவர் குறிப்பிட்டார்! ஆனால் மேற்கண்ட மேற்கோள் அவர் தப்பியோடுவதற்கு முன் அவரது பலவீனமான மனநிலையைக் காட்டுகிறது. மரண பயத்தில் இருந்த  அவரை நான் குறை கூறவில்லை. தம்மபதம் கூறுவது இதுவே:

தம்மபாதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சப்பே தசந்தி தண்தஸ்ஸா
சப்பே பயந்தி மச்சுனோ
அத்தானம் உபமம் கத்வா
ந ஹநேய ந கதயே             (தம்மபதம் – தண்ட வாகை – சரணம் 129)

தண்டனையைக் கண்டு அனைவரும் நடுங்குகிறார்கள்; எல்லோரும் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். தன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஒருவரைக் கொல்லவோ, மற்றொருவரைக் கொல்லவோ கூடாது.

சப்பே தசந்தி தண்தஸ்ஸா
சப்பேசம் ஜீவிதம் பியாம்
அத்தானம் உபமம் கத்வா
ந ஹநேய ந கதயே    (தம்மபதம் – தண்ட வாகை – சரணம் 130)

Buddha Purnima—chasing enlightenment on the Buddha trail | Times of India  Travel

தண்டனையைக் கண்டு அனைவரும் நடுங்குகிறார்கள்; வாழ்க்கை அனைவருக்கும் பிரியமானது. தன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஒருவரைக் கொல்லவோ, மற்றொருவரைக் கொல்லவோ கூடாது.

இரண்டரை ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் புத்தர் பிரசங்கித்த நித்திய உண்மை இதுவே.  இதனைக் கோட்டாபய நினைவில் வைத்திருந்தார், இன்று தெரிவு செய்யப்படும் புதிய சனாதிபதி இதனை மறந்துவிடக் கூடாது.

தச ராஜ தர்மம் (දස රාජ ධර්ම)

ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தச ராஜ தர்மத்தைப் பற்றிப் பவுத்த இலக்கியங்கள் பேசுகின்றன. கோட்டாபய ஓரளவிற்கு அதைச் செய்தார் என்று நான் நினைக்கிறேன். தானத்தைக் கருத்தில் கொண்டால், அன்னதானம், நன்கொடைகள், கோயில்கள் போன்றவற்றில் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தான கோட்பாடு என்பது இன்னும் பலவற்றைக் குறிக்கிறது— பொது நலனுக்காகவும் ஈகை செய்தல். உழவர்களின் நல்வாழ்வைப் பாதித்த உரத்தடை போன்ற சில சிக்கல்களை அவர் கையாண்டதில் இதன் எதிரொலி வெளிப்பட்டது.

மேலும் பரிச்சக தர்மமும் நினைவுக்கு வருகிறது. கோட்டாபாய  கூட்டுக்குற்றச்சாட்டு; பொதுமக்களின் செலவில் நண்பரின் நலனுக்காக சர்க்கரை மீதான வரியை இல்லாது ஆக்குவது கேள்விக்குரியது. சர்க்கரை வரி ஊழல் அஜ்ஜவா (நேர்மை) தரத்தை மீறியதாகக் கருதப்படலாம். இருப்பினும் அவர் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்தார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஆனால், திறைச்சேரிக்கு ஏற்பட்ட இழப்பு  16 பில்லியன்  ரூபாயை அறவிட வேண்டும் என்று கணக்காய்வாளர் பரிந்துரைத்தாலும் கோட்டாபய அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது அவர் மோசடி செய்தவருக்கு பக்க சார்பாக நடந்து கொண்டதைக் காட்டுகிறது.  புதிய சனாதிபதியும் இதை ஒரு நல்ல பாடமாக நினைவில் வைத்து, ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுக்க வேண்டும்.

கோட்டாபயவுக்கு மத்தவ குணம் இல்லை என்பது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியிலும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். மத்தவ என்பது மென்மையான குணம்,  பிறரை அவதூறு செய்தல் அல்லது அதனைத் தவிர்த்தல், (எ.கா. மத்திய வங்கி ஆளுநர் டபிள்யூ.டி. இலக்ஷ்மண் மற்றும் அவரது குழுவினர், வீடியோ கிளிப்பில் இருந்து பார்க்கும்போது,  ‘வாய்மொழியாக திட்டப்பட்டனர்.) ஒரு இளைய நிர்வாகி கூட, “பொதுவெளியில் பாராட்டுங்கள், தனித்தனியாக கண்டியுங்கள்!” என்று சொல்லியிருப்பார். ஒருவேளை, அவர் சனாதிபதி இரணசிங்க பிரேமதாசவைப் பின்பற்றியிருக்கலாம். தன்னைப்  பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீளக் கூடியபோது அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். அப்போது தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். 2018 ஆம் ஆண்டு தோல்வியடைந்த அரசியலமைப்பு சதியின் பின்னர் இரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததன் பின்னர் (திருமதி மைத்திரி விக்கிரமசிங்க முன்னிலையில்) கடுமையான வார்த்தைத் தாக்குதலை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டிருந்தார்.

A retreat from the precipice. For now. (19 December 2018) - Sri Lanka  Campaign for Peace and Justice

மற்றொன்று அக்கோதா (கோபமில்லாத) குணம், அதிலிருந்து விடுபட்டு அமைதியாக இருப்பது. கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது பன்னாட்டு  ஊடகங்களுடன் உரையாடியபோது, ​​“லசந்த யார்?” மற்றும் “நான் அவரைத் தூக்கிலிடுவேன்”  (சரத் பொன்சேகாவைக் குறிப்பிட்டு) என்றார். ஒரு இராணுவ வீரர்  என்ற நிலையில், அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் துப்பாக்கித் தோட்டா போன்றது, திரும்ப வராது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். புதிய சனாதிபதிக்கும் இது ஒரு பாடம்.

அவிஹிம்ச குணம் கோட்டாபயவுக்கு அந்நியமானது என்பது அவர் மீதான மோசமான குற்றச்சாட்டுகளில் இருந்து தெளிவாகியுள்ளது. இரசாயன உரத் தடை, கடன் மறுசீரமைப்பு மற்றும் விடயங்களைப் பிரதிநிதித்துவம் செய்வது குறித்து வேளாண்மை வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் பிரதிநிதித்துவத்திலிருந்து பார்க்கக்கூடிய சாந்தி தரம், மற்றும் அவிரோதனா அல்லது நேர்மையான தரம், மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் பாகுபாட்டைத் தவிர்ப்பது ஆகியவையும் அவருக்கு இல்லை. முறையே பன்னாட்டு நாணய நிதியம் (IMF). தனிப்பட்ட தப்பெண்ணம் மற்றும் ஆணவத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் இலங்கைத் தூதராக  இருந்த எனது தனிப்பட்ட அனுபவம் எனக்கு உண்டு, ஆனால் நான் அவரை மன்னித்துவிட்டதால் விரிவாகக் கூறுவதைத் தவிர்க்கிறேன். அவரைவிட நான் முதிர்ச்சியடைந்தவன்!

தனது உயிரை இழக்க நேரிடும் என்று பயம் அவரிடம் இருந்தது வெளிப்படை.  யாருக்குத்தான் பயம் இல்லை? சனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தலாமா என வினவியபோது, ​​தான் உண்மையான ஆபத்தில் இருந்த போதிலும், துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அவரது நடத்தை பாராட்டப்பட வேண்டும். உயிரை பணயம் வைத்தும் கூட, வருங்கால சனாதிபதிகளுக்கும், இராணுவத்துக்கும் பாடம் புகட்டியுள்ளார்.

கோட்டாபயவை கேலி செய்கின்றனர்

கோட்டாபய கேலி செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அண்மையில் கோத்தபாய பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் Frederica Jansz (முன்னாள் சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியை)  நகைச்சுவையாக கோட்டாபய சியாட்டிலில் (Seattle,) ஒரு கோப்பை காப்பிக்கு அழைத்தார்.  அங்குதான் கோட்டாபய அவர்கள் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர் (Jansz) ஓடித்தப்பினார்.  இத்தகைய கேலிக்கூத்துகளை கோட்டாபய புறக்கணித்திருக்கலாம் என நான் கருதுகிறேன். ஆனால் வரவிருக்கும் சனாதிபதிகளுக்கு சொல்லப்படும் பாடம் என்னவென்றால், வாழ்க்கை மிகவும் மதிப்புமிக்கது, மரணம் மிகவும் வெறுக்கத்தக்கது என்பதாகும், மேலும் அவர்கள் இந்த நித்திய உண்மையை மதிக்க வேண்டும்.  குறிப்பாக வாழ்க்கை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாள் விடியும்  போது அவர்கள் அதை உணர்வார்கள்.   புதிய சனாதிபதி அவர்களே இது உங்களுக்குச் சமர்ப்பணம்

சனாதிபதிகளுடனான எனது அனுபவத்தின் மூலம், இரண்டு சனாதிபதிகள் பொதுமக்களால் அதிகமாக கேலி செய்யப்பட்டதை நான் நினைவுகூர விரும்புகிறேன். சனாதிபதி பிரேமதாசவைப் பற்றிச் சில கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டன.  ஆனால்  நல்வாய்ப்பாக அவை சமூக ஊடகங்களுக்கு முந்தைய நாட்கள். சமூக மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் விரிவாக்கத்துடன், சனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவ்வாறான ஏளனங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.  நிச்சயமாக, கனேடிய பிரதமர் மல்ரோனியைப் போல யாரும் அவர்களைப் பற்றிய பகிடிப் புத்தகங்களை வெளியிடாதது நல்லதாகப்  போயிற்று. அந்தளவில் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

வரவிருக்கும் சனாதிபதிகளுக்கு வழங்கக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், அவர்கள் மக்களின் வேட்கைகளை நிறைவேற்றத் தவறினால், அவர்கள் கோட்டாபயவை அடிப்பார்கள்.  இராணுவம், தடியடி, நீர்ப் பீரங்கி, கண்ணீர்ப் புகை குண்டுகள் அல்லது தோட்டாக்கள் நிறுத்தப்படாது அல்லது கைப்பற்றப்படாது. “மக்கள் போராட்டங்கள்” அல்லது “அறகலயாக்கள்” இவற்றைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால், கடைசியாக அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற  ஓட வேண்டியிருக்கும் – சில சமயங்களில் நாடோடிகளாக, ஒரு நகரத்திலிருந்து மற்றொன்றுக்கு பாய வேண்டி நேரிடும். அப்பொதும் விசா இல்லாததால். அவர்கள் வாழ விரும்பும் இடத்திலிருந்து நிராகரிக்கப்படுவார்கள்.   கோட்டாபயவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய இறுதிப் பாடம் இதுதான்.

இன்று புதிய சனாதிபதியாக பதவியேற்கும் நபருக்கு வாழ்த்துக்கள்! (ஆங்கில மூலம் https://www.colombotelegraph.com/index.php/the-new-president-must-learn-from-gota/. தமிழாக்கம் நக்கீரன். முற்றும்.)

——————————————————————————————————————–

The New President Must Learn From Gota!

Austin Fernando

I am proud that I have served all Executive Presidents of Sri Lanka from Presidents JR Jayewardene to Gotabaya Rajapaksa at some stage or another. I may be the only public ‘officer’ to have done so. With Mahinda Rajapaksa, it was secondary, but I was his ‘lifesaver’ along with Ranil Wickremesinghe. (See ‘My Belly is White (2008) pages 140 to 142). Hence, I claim I have accumulated a mixed bag of experiences.

I do not intend to sound like a Pundit; I only mention a few (out of several) mistakes made by Gotabaya Rajapaksa, who has owned up to two of them, to caution the next President. If the new President repeats them, he will also end up being holed up in a military camp or praying at Gnanakka’s Kovil or Kataragama or Tirupati, Vatican, or Mecca.

The need for cautioning the next President arises from the fact that we are a sensitive, sensible electorate and society, which can unhesitatingly dump a political dynasty into the dustbin for their wrongs. The Gotabaya Rajapaksa government crashed within two and half years although Rajapaksa is a war hero who polled 6.9 million votes at the 2019 presidential election, mustered a two-thirds majority in Parliament, and became a monarch of sorts by introducing the 20th Amendment to the Constitution. This should serve as a warning to future Presidents.

Overestimating popularity 

Everyone may agree on Gotabaya’s miserable failures, which led to his ouster by a People Power Movement despite his massive mandate and heroism. His popularity infused him with extraordinary courage, confidence, and what is known as a ‘royalty feel.’ But he was impervious to reason, democratic bonds, equality concerns, common touch, etc., and given to arrogance, militaristic cronyism, and even intolerance of dissent. Gotabaya proved that popularity was not permanent. The new President will have to be mindful of this fact.

Gotabaya’s popularity increased following the Easter Sunday bomb attacks. Vociferous Buddhist clergy exerted influence on Gotabaya over matters that were not only Buddhistic but also others such as the burial of the Muslims who died of Covid-19. There are lessons to be drawn from the ‘one-country-one-Law’ project, granting university chancellorship, chemical fertilizer ban, etc.

What one gathers from Gotabaya’s experience is that election campaigns and government must be kept free from religion. It is not that the new President should not seek the advice of religious leaders when required but there should be a limit. Gotabaya failed to draw that line even with Archbishop of Colombo Malcolm Cardinal Ranjith who helped him in the 2019 November presidential election, disappointing him.

Gotabaya enlisted the support of the members of the think tanks, Viyath Maga and Eliya, and the electronic media Moghuls, and relied more on personal foreign contacts and senior military officers. Like the Buddhist clergy loyal to Gotabaya, these persons also ventured into fields where they lack expertise such as Public Service Commission, money-spinning businesses allegedly during the pandemic, telecommunications, Ministry Secretary-postings, Statutory Authorities, diplomatic assignments, etc. The new President can learn how not to seek guidance from those who seek to further their personal interests, in that way.

Old baggage!

Gotabaya used his military background and his contribution to the war victory to project himself as a demi-god. He was lucky to have a free hand as the Defence Secretary because his elder brother, Mahinda Rajapaksa, was the President. All these factors may have made him try to manage the affairs of the state just like those of the Defence Ministry during the war. Al Jazeera has reported, quoting an aide of Mahinda Rajapaksa that Gotabaya did not listen even to Mahinda. He took very crucial decisions without heeding expert advice. Probably, he thought in the military style that everyone could comply and complain later.

The three candidates contesting for the presidency in Parliament this time have different experiences and capacities. If they put their heads together and pool their talents and energies, they will be able to solve our problems, and there is a pressing need for a team effort that was absent during Gotabaya’s presidency.

The hangers-on never asked questions from Gotabaya. I remember, at a ‘Gama Samagin Pilisandara’ when he declared with a chuckle that his word was the government circular, and an Administrative Service senior seated next to him, smiled approvingly! Advisors, experts, and consultants should have been persons of integrity and courageous enough to speak the truth at any cost, which was not the case with him. If they had done so and Gotabaya had taken their views on board, he would have been the President even today. I hope this will serve as a lesson for the new President and his advisors.

New baggage

New advisors emerged from the Think Tanks Gotabaya created. They were the new baggage! They were responsible, educated, and experienced but the advice they proffered lacked strategic thinking and an understanding of international relations. The Millennium Corporation Compact (US), the Light Railway Project (Japan), the East Container Terminal Project, and Kerawalapitiya LNG Project (both Japan and India) were scrapped at the behest of such advisors. There may have been some justifications. Gotabaya in his military-style scrapped them abruptly, sometimes even without heeding common diplomatic courtesies, as alleged. The consequence was that the Gotabhaya government lost international backing.  This is a lesson that the next President has to draw from Gotabaya’s experience.

However, I am happy to note Secretary Aruni Wijewardena has commenced moving the ball in the right direction with Japan. The new President should assist her in her endeavour even with other countries. It is the correct path to move, going by the functions of the Ministry of Foreign Affairs given in the 13th Amendment List II.

This is not to say that Sri Lanka should risk losing its sovereignty, but handling such issues requires a sophisticated approach. A wag says Gotabaya’s rise to the presidency exemplifies the Peter Principle in management, wherein a person rising in the hierarchy through promotion reaches a level of respective incompetence! It may be a new lesson for the electorate on how to elect leaders in the future. Gotabaya remained impervious to criticism and did not care to review his decisions until total failure was imminent. The new President should take notice of this.

Silent and silenced media

It was well known that the State Media always praises the incumbent President and his actions, however controversial they may be. The Rajapaksas neutralized all opposition, both within and without, through persuasion, purchasing, punishing, and intrigue in line with Chanakya Neethi’s methodology of saam, damm, dand, and bhed. They controlled the private media by “owning,” “proxy-ownership,” “holding to ransom,” or “devastating!”

With such controls and the Criminal Investigation Department being under the thumb of the Executive, officially and unofficially, the media mostly succumbed to political pressure. The media remained silent because of what befell Lasantha Wickremathunge, Poddala Jayantha, Prageeth Ekneligoda, Kugan, et al when Gotabaya was the Defence Secretary, and also attacks on SIRASA, SIYATHA, Lankaenews. By 09 July 2022, all were muted. This should serve as a lesson for the new President.

Learning from Dhammapada

After his departure, I came across interesting electronic media references. I quote one from the Maldivian Parliament’s Speaker Mohamed Nasheed. It said:

“President GR has resigned. I hope Sri Lanka can now move forward. I believe the President would not have resigned if he were still in Sri Lanka, and fearful of losing his life.” (07.36 am on 14-7-2022)

Gotabaya used to openly quote serious tough stands taken by him during the war. His tone and delivery of such were threatening, and the wink in his eyes were foxy. He was heedless of the pains of conflict and thought the protests could be crushed by the military. He once indicated his capacity to cultivate paddy fields engaging the military, if he so desired! But the above quote shows his weak mental frame before he fled. I do not blame him for fear of death. Dhammapada has this to say:

Sabbe tasanti daṇḍassa

Sabbe bhāyanti maccuno

Attānaṃ upamaṃ katvā

Na haneyya na ghātaye

(Dhammapada – Danda Vagga – Stanza 129)

Everybody trembles at punishment; everybody fears death. Having made the comparison with oneself, let one not kill, nor cause another to kill.

Sabbe tasanti daṇḍassa

Sabbesaṃ jīvitaṃ piyaṃ

Attānaṃ upamaṃ katvā

Na haneyya na ghātaye

(Dhammapada – Danda Vagga – Stanza 130)

Everybody trembles at punishment; life is dear to everybody. Having made the comparison with oneself, let one not kill, nor cause another to kill.

This is the eternal truth the Buddha preached more than two and a half millennia ago, remembered by Gotabaya, and must not be forgotten by the new President to be elected today.

Dasa Raja Dharma

Buddhist literature speaks of the Dasa Raja Dharma that should be abided by rulers. I think Gotabaya did that to some extent. If Dana is considered, I have seen him at almsgivings, donations, temples, etc. But the Dana principle means much more— sacrificing for the public well-being and serving public interests. The obverse of this became evident in his handling of some issues like his fertilizer ban that took its toll on the well-being of farmers.

One is also reminded of Pariccaga Dharma. Gotabaya was accused of cronyism; the questionable abolition of duty on sugar for the benefit of a friend at the expense of the public. The sugar duty scam could be considered a violation of Ajjava (honesty) quality too, though there was no evidence that he personally gained from it. However, his reluctance to have the loss amounting to Rs. 16 billion recovered even though the Auditor General recommended such action, showed his partiality to the scammer. The new President also should remember this as a good lesson and must recover the losses.

It was well known even among parliamentarians, ministers, and officials that Gotabaya lacked Maddava, the gentle temperament or avoidance of arrogance, and defaming others, (e. g., Central Bank Governor WD Lakshman and his team were ‘verbally abused’ as seen from a video clip.) Even a junior administrator would have told him, “Praise publicly, criticize individually!” Perhaps, he emulated President Ranasinghe Premadasa, who launched into a tirade against his political opponents in addressing the Parliament after the prorogation following an abortive bid to impeach him, and President Maithripala Sirisena, who carried out a scathing verbal attack on Ranil Wickremesinghe (in the presence of Madam Maithree Wickremesinghe) after reappointing him as the Prime Minister after the failed Constitutional Coup of 2018.

Another was Akkodha (non-anger) quality, being free from hatred and remaining calm amid confusion. Gotabaya lacked it as was seen when he was the Secretary of Defence interacting with the international media who well remember the quotations such as “Who is Lasantha?” and “I will hang him” (meaning Sarath Fonseka). As a military person, he ought to have known that a word spoken was like a bullet fired, never to return. This is also a lesson for the new President.

That Avihimsa quality is alien to Gotabaya has become evident from damning allegations against him. He also lacked Kshanthi quality, and Avirodhana, or quality of uprightness, respecting others’ opinions, and the avoidance of prejudice as could be seen from the representation made by agriculture professionals and economists on chemical fertilizer ban, and debt restructuring and representing matters to the IMF respectively. As for personal prejudice and arrogance, I have had my personal experience as High Commissioner in India, but I refrain from elaborating, as I have forgiven him. I am more mature!

It is obvious he feared losing his life. Who does not? To his credit, media reports are saying that when the President’s House was surrounded and inquired whether to open fire, he had ordered them not to although he was in real danger. His conduct must be appreciated. Even at the risk of his life, he has imparted a lesson to future Presidents and the Military.

Ridiculing Gotabaya

There have been instances where Gotabaya was ridiculed. Recently after Gotabaya was deposed Frederica Jansz jokingly invited Gotabaya to a cup of coffee in Seattle, where she ran for her dear life having been threatened by him. I presume Gotabaya may have ignored such ridicule. But the lesson for the incoming Presidents is that life is the most valuable, and death is the most abhorred, and they must respect this eternal truth, especially since realization will dawn the day when faced with the threat of life. Over to you, Mr. New President!

With my experience with Presidents, I may recall that here two Presidents were excessively ridiculed by the public. Some yarns were coined about President Premadasa, but fortunately for him, those were the pre-social media days. With the expansion of social and electronic media, President Gotabaya Rajapaksa had to stomach ridicule. Of course, they are fortunate that no one has published Joke Books about them like on Canadian Prime Minister Mulroney!

One message that could be given to the incoming Presidents is that if they fail to meet the aspirations of the people, they will beat Gotabaya, and no amount of military, batons, water cannons, tear gas canisters, or bullets shall cease or seize “peoples’ struggles” or “Aragalayas.” If action is pursued with these they may have to finally run for dear life- sometimes as fugitives, jumping from one city to other, being rejected from the dearest place they wish to live, for want of visas. This is the final lesson to be learned from Gotabaya.

Best wishes to the person who becomes the President today!

Print Friendly, PDF & Email

FacebookTwitterWhatsAppShare


About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply