உலகைப் புரட்டிப் போட்ட விஞ்ஞானிகள்

உலகைப் புரட்டிப் போட்ட விஞ்ஞானிகள்

கிரேக்க நாட்டு விஞ்ஞானிகள்

1. பைதகரஸ்கி.மு 580மெய்யியல், கணிதம், வானியல்

  • கேத்திர கணிதத்தில் உள்ள பைதகரசின் தேற்றம் இவரால் முன்வைக்கப்பட்டது.
  • எண்களின் முக்கியத்துவம், குணாதிசயம் பற்றி கூறியுள்ளார்
  • சங்கீதத்திற்கும் கணிதத்திற்கும் இடையிலான தொடர்பைக் காட்டியுள்ளார்
  • இரவு பகல் ஏற்படுவதற்குக் காரணம் தீக்கோளம் ஒன்றை பூமி சுற்றி வருவதாகும் எனக்கருதினார்

2. ஹிப்போகிரட்டிஸ்கி.மு 460 – 377 மருத்துவம்

  • மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை 
  • மருத்துவர்கள் எடுக்கவேண்டிய ஒழுக்க சத்தியப்பிரமானத்தை அமைத்தார். இது ஹிப்போகிரட்டிஸ் சத்தியப்பிரமானம் எனப்படுகிறது  
  • மருத்துவ நூல் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்

3. பிளேட்டோ கி.மு 427 – 347 தத்துவம்

  • சோக்கிரட்டீஸின் முதல் மாணவன் 
  • அரிஸ்டோட்டிலின் குரு 
  • நீதி, சட்டம், கல்வி முறைகள், அரசியல் பற்றிய கருத்துக்களை வெளியிட்டார் 
  • தத்துவம், கணிதம் என்பனவற்றை கற்பித்தார்.

4. அரிஸ்டோட்டில்கி.மு 384 – 322 மெய்யியல்

  • அளவையியலின் தந்தை 
  • உய்த்தறி அளவையியல் முறையை முன்வைத்தார், தொகுத்தறி முறையை ஏற்றார் 
  • உளவியல், ஒழுக்கவியல், அரசியல், பௌதீகம், பௌதீகவதீதம் போன்ற துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டார் 
  • விஞ்ஞானமனிதன்’
  • உயிரியல் விஞ்ஞானத்தின் தோற்றத்திற்கும் வழிவகுத்தார் 
  • இவரது ‘தர்க்க நூல்’ பிரபலமானது 

5. இயூக்கிளிட்கி.மு 330 – 226 கணிதம்

  • கேத்திர கணிதத்தின் தந்தை 
  • இந்த கேத்திர கணிதம் உய்த்தறி தர்க்கமுறையை அடிப்படையாகக் கொண்டது.  
  • பகுபடா என்களை முடிவிலி என்றார் நிறுவியவர்
  • The element என்ற கேத்திர கணித நூலை எழுதினார்  

6. ஆக்கிமிடிஸ்கி.மு 287 – 212 பௌதீகம், கணிதம்

  • விஞ்ஞான பரிசோதனை முறையின் தந்தை 
  • ஆக்கிமிடிசின் மிதப்பு விதி 
  • கப்பித் தொகுதி, நெம்புகோல் தொகுதிகளை கண்டுபிடித்தார் 
  • பை (π) யின் பெறுமானத்தை (π=22/7) நிர்ணயித்தார் 
  • இவை வட்டம், நீள்வட்டம் என்பனவற்றின் பரப்பளவை அறியஉதவின
  • (நீர்இறைக்கும் இயந்திரத்தின்) நீர்த்திருகை கண்டுபிடித்தார்

7. தொலமி கி.பி 100 – 170 வானியல், புவியியல்
புவிமையக் கொள்கையை முன்வைத்தார் 
முதன் முதல் தேசப் படத்தை வரைந்தார்

 மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்
ஆங்கிலேய நாட்டு விஞ்ஞானிகள்

8. கலென்கி.பி 130 – 200 உடலியல், மருத்துவம்  உடலியல் பரிசோதனையின் தந்தை மிருகங்களை வெட்டி ஆய்வு செய்தார் நாடியில் இரத்தம் உண்டு என்பதையும், இதயத்தில் குருதி அசைந்தோடிக் கொண்டிருப்பதையும் கண்டுபிடித்தார்

9. பிரான்சிஸ் பேக்கன் (Francis Bagen) .பி1561 – 1626 மெய்யியல்விஞ்ஞானமுறை  தொகுத்தறி முறையியலின் தந்தை   ‘புதிய முறைகள்’ என்ற நூலில் தொகுத்தறிமுறைஅறிமுகம் இயற்கை பற்றிய உண்மைகளை அறிய அனுபவ ஆய்வு முறைகளே உகந்தவை என்றார் புலமை வாதிகளின் மரபையும், கைவினையாளர் மரபையும் ஒன்றிணைக்கும் கருத்தை முன்வைத்தார் அரிஸ்டோட்டிலின் நியாயத்தொடையில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டினார்.

10. வில்லியம் ஹாவே (William Harvey) கி.பி1578 – 1657 மருத்துவம்  குருதிச் சுற்றோட்டத் தொகுதியை கண்டுபிடித்தார்.  இரத்தம் ஈரலில் இருந்து உற்பத்தியாகிறது, இதயம் 2அவுன்ஸ் இரத்தத்தை கொள்ளக்கூடியது, நிமிடமொன்றிற்கு 72 தடவைகள் துடிக்கின்றது, இதயம் சுருங்கி விரிதலே குருதிச் சுற்றோட்டத்திற்கு காரணம் என்ற உண்மைகளை கண்டறிந்தார்.

11. தோமஸ் ஹொப்ஸ் (Thomas Hobbes) கி.பி1588 – 1691 அரசியல்மெய்யியல்  இவர் சமூக ஒப்பந்தக் கொள்கையை முன்வைத்தார் (வரம்பற்ற முடியாட்சி) இவரது ‘லெவியதன்’ அரசியல் நூல் பிரபலமானது சமூகவியல், ஒழுக்கவியல் போன்ற துறைகளிலும் முக்கியத்துவம் பெறுகின்றார்.

12. ஜோன் லொக் (John Locke ) கி.பி1632 – 1704 அரசியல்மெய்யியல் சிவில் அரசாங்கத்தின் இரண்டு உடன்படிக்கைகள் என்ற நூலில் சமூக ஒப்பந்தக் கொள்கையை முன்வைத்தார் (வரம்புடைய முடியாட்சி)   அரசியல் சமத்துவம் (Pழடவைiஉயட நுஙரயடவைல) பற்றி வலியுத்தினார்.  அனுபவ வாதத்தின் தந்தை (அனுபவத்தின் வாயிலாகவே அறிவு பெறப்படுதல்)

13. ஐசக் நியூட்டன் ( Isaac Newton) கி.பி 1642 – 1727 பௌதீகம்கணிதம்விஞ்ஞானமுறை அரியத்தைப் பயன்படுத்தி சூரிய ஒளியில் 7 நிறங்கள் உண்டு எனக்காட்டினார்.  ஒளியின் நுண்துகள் கொள்கை, புவியீர்ப்பு விதி, இயக்க விதிகள், தொகையீட்டு நுண்கணிதம், வகையீட்டு நுண்கணிதம், ஈருறுப்புத் தேற்றம் என்பன வற்றை கண்டுபிடித்தார்   நேர்வுகளை விளக்கும் முறை, விஞ்ஞானத்தில் கணித விளக்கமுறை, விஞ்ஞான கருது கோள்களையும் விஞ்ஞான கொள்கைகளையும் அமைப்பதற்குரிய வழிமுறை, நுண்கணிதமுறைகளை விருத்திசெய்தார்

14. எட்மண்ட் ஹெலி (Edmund Halley) கி.பி1656 – 1742 வானியல் வால்வெள்ளி களின் இருப்பிடங்களை பதிவுசெய்து பாதைகளை கணக்கிட்டார்.   76 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் உள்ளோருக்கு தென்படும் வால்வெள்ளி பற்றி கணித்தார் இது ஹெலியின் வால் வெள்ளி எனப்படுகிறது

15. ஜோசப் பிறீஸ்ற்லி(Joseph Priestley) கி.பி1733 – 1804 இரசாயணம்  ஒட்சிசன் உட்பட பல வாயுக்களைக் கண்டுபிடித்தார் இரச ஒட்சைட்டை வெப்பமேற்றி ஒட்சிசனை பெற்றார். பாபோனிக் அமில வாயுவை நீரில் கரைத்து பருகக்கூடிய சோடா நீரைக் கண்டுபிடித்தார்

16. மைக்கல் பரடே(Michael Faraday) கி.பி1761 – 1867 பௌதீகம்இரசாயணம்  மின்காந்தக் கோட்பாட்டிற்கு மூலகர்த்தா.  ஒளி,காந்தவிசைக்கிடையிலான தொடர்புகளைக்கூறினார். மின் பகுப்பு விதி , தங்கமுலாம், வெள்ளிமுலாம் பூசும் முறைகளையும் கண்டுபிடித்தார்.

17. ஜோன் டோல்டன் (John Dolton) கி.பி1766 – 1844 பௌதீகம்இரசாயணம்  முதன் முதல் அணுக் கொள்கையைக் கணித்தார் அணுவின் அணுத்திணிவை சரியாகக் கணித்தார்

18. மல்தூஸ் (Malthus ) கி.பி1766 – 1834 பொருளியல்  சனத்தொகை பற்றிய தத்துவம் என்ற புகழ் பெற்ற கட்டுரையை எழுதினார். இதில் சனத்தொகை அதிகரிப்பானது பெருக்கல் தொடரிலும், உணவு உற்பத்தியானது கூட்டல் தொடரிலும் அதிகரிக்கின்றது என்றார்.

19. ஹம்பிறி டேவி Humphrey Davy) கி.பி1778 – 1829 இரசாயணம்பௌதீகம் பொட்டாசியம், சோடியம், கல்சியம், பேரியம், மக்னீசியம், போரான், ஸ்ரோன்டியம் எனும் மூலகங்களைக் கண்டுபிடித்தார்   சுரங்கத் தொழிலாளர்களுக்கான காவல் விளக்கு,   நைதரசன் ஒட்சைட் ( சிரிப்பூட்டும் வாயு ) கண்டுபிடித்தார்.    மின்னோட்டத்தை நீரினுள் செலுத்தி      கூட்டுப் பொருட்களை தனிப்பொருட்களாக பிரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்

20. ஜே.எஸ்.மில் (J.S.Mill ) கி.பி1806 – 1873 மெய்யியல் விஞ்ஞானமுறை  காரண காரிய தொடர்புகளை கண்டறிய உதவும் முறைகளை (மில்லின் பரி) கண்டுபிடித்தார். இது விலக்கல் முறையை அடிப்படையாகக் கொண்டது. மில்லின் முறைகளில் அவதானம், பரி என்பனவும் உள்ளன.

21. சாள்ஸ் டார்வின்(Charles Darwin) கி.பி1809 – 1882 உயிரியல் கூர்ப்புக் கொள்கையை முன்வைத்தார் இங்கு கூர்ப்பைத் தீர்மானிக்கும் காரணி சூழல் ஆகும் இதில் தாழ்மட்ட அங்கிகளில் இருந்து உயர்மட்ட அங்கிகள் தோற்றம் பெறுகிறது எனக்கூறினார். இதை மாறல், மிகை உற்பத்தி, வாழ்க்கைப் போராட்டம், தக்கணப் பிழைத்தல், இயற்கைத்தேர்வு மூலம் விளக்கினார்

22. அல்பிரட் வொலஸ் (Alfred Wallace) கி.பி 1823 – 1913 உயிரியல் தன் தனித்துவமான ஆய்வின்படி கூர்ப்புக்கொள்கை உண்மைகளைப் பெற்றார். வொலசும் டார்வினும் 1858 ல் கூட்;டாக கூர்ப்புக் கொள்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டனர். விலங்குப் புவியியலுக்கு அடிகோலியவர்.

23. கெல்வின் பிரபு ( Lord Kelvin) கி.பி1824 – 1907 மருத்துவம்உடலியல் வெப்பவியலில் தனிவெப்பநிலை என்ற கருத்தை வெளியிட்டார். செம்மையான வெப்ப அளவீடுகளை மேற்கொள்ள வாயுவெப்ப மானி உதவும் என்றார். கடலுக்கூடாக கடற்தந்தி அமைத்தார்.    கடல்மட்டத்தை அறியும் கருவியைக் கண்டுபிடித்தார். மாலுமிகளுக்கு உதவும் திசைகாட்டியை திருத்தியமைத்தார்

24. ஜோசப் லிஸ்டர் பிரபு (Joseph Lister) கி.பி1827 – 1912 மருத்துவம்சத்திர சிகிட்சை  வெட்டுக்காயங்கள் உயிராபத்துக்களை ஏற்படுத்துவதற்குக் காரணம் கிருமிகள், காபோலிக் அமிலம் இக் கிருமிகளை அழிக்கவல்லது எனவும், தசையோடு தசையாக சேர்ந்து மறையக்கூடிய நூல் என்பனவற்றை கண்டுபிடித்தார்.;

25. ஜே.சி.மெக்ஸ்வெல் ( J.C. Maxwell) கி.பி1831 – 1879 கணிதம்பௌதீகம் மின்காந்த கதிர்ப்புக் கோட்பாடு, மின்காந்தவியல் சமன்பாடு என்பனவற்றை அறிமுகப்படுத்தி யிருந்தார். மின்சாரத்தின் இயக்கம், வாயுக்களின் இயக்கப்பண்புக் கொள்கை என்பன தொபர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

26. றொனால்ட் றொஸ் (Ronald Ross ) கி.பி1857 – 1932 மருத்துவம்  நுளம்பு பற்றியுனம், மலேரியா நோய் பற்றியும் ஆய்வு செய்தார் மலேரியா நோய் அனோபிலிஸ் எனப்படு;ம் நுளம்பு வாயிலாகப் பரவுகிறது என்பதையும் கண்டுபிடித்தார். இவ் ஆய்வுக்காக நோபல் பரிசும் பெற்றார்.

27. ஏ.என்.வைட்கெட் (A.N. Whitehead) கி.பி1861 – 1947 அளவையியல்கணிதம் பேட்டன் ரசலுடன் இணைந்து எழுதிய Principia Mathematica நவீன அளவையியலின் வளர்ச்சிக்கு உதவியது   கணிதநுட்பத்தினால் Logic ஐ வளர்த்தார் கணிதம், மெய்யியலுக்கிடையிலான அளவையியல் தொடர்பைக் காட்டினார்.

28. இறதபோட்(Rutherford) கி.பி1871 – 1937 பௌதீகம் அணுக்கொள்கையை வெளியிட்டார்.   அணுக்களில் உள்ள அல்பா கதிர், பீற்றா கதிர், புரோத்தன், அணுமாறல் கொள்கையை கண்டுபிடித்து விளக்கினார் அணுவின் கட்டமைப்பை ஞாயிற்றுத்தொகுதியின் கட்டமைப்புடன் விளக்கினார்

29. பேட்டன்ட் றசல் (Bertrand Russel) கி.பி1872 – 1970 அளவையியல் கணிதம் வைட்கெட்டுடன் இணைந்து எழுதிய Principia Mathematica ஆயவாயஅயவiஉய நவீனஅளவையியலின் வளர்ச்சிக்கு உதவியது    கணிதம், மெய்யியலுக்கிடையிலான அளவையியல் தொடர்பைக்காட்டினார். கணித நுட்பத்தினால் டுழபiஉ ஐ வளர்த்தார்

30. அலெக்சாந்தர் பிளமிங்  (Alexander Fleming) கி.பி1881 – 1655 மருத்துவம் இரசாயணம் நுண்ணுயிரியல் தற்செயவான நிகழ்ச்சி மூலம் பென்சிலின் எனும் விஷ நுண்ணுயிர்க் கொல்லியை கண்டுபிடித்தார். மனிதனின் கண்ணீர் கிருமியை அழிக்கவல்லது என்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவத்துறையில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக நோபல் பரிசைப் பெற்றார்

31. ஜே.எம்.கெயின்ஸ் (J.M. Keyns) கி.பி1883 – 1946 பொருளியல்  நவீன நாணயக் கணியக் கோட்பாட்டின் மூலகர்த்தா எனப்படுகிறார்.   பணம், தொழில், வட்டி பற்றிய தத்துவங் களைக் கூறி அரசும், மத்திய வங்கியும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு நன்கு திட்டமிட்ட முறையில் பணநிரம்பலை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார். நிகழ்தகவு, தொகுத்தறி அளவையியல் பற்றி ஆய்வுசெய்தார்.

32. ஜோன் வென் 1834 – 1923 அளவையியல் கணிதம் வென்னின் வரைபடங்களை அறிமுகப்படுத்தினார் குறியீட்டளவையியல் சந்தர்ப்ப அளவையியல், தொகுத்தறி அளவையியலின் தத்துவங்கள் என்ற நூல்களைஎழுதினார்   குறியீட்டளவையியலின் வளர்ச்சிக்கு உதவினார்

33. நேகல் ( Negal) கி.பி1910 – 1973 மெய்யியல்விஞ்ஞானமுறை உய்த்தறி முறையியலாளர். கருதுகோள் உய்த்தறிமுறை (HIII/H), விதி உய்த்தறிமுறை இரண்டினதும் பயன்பற்றிக் கூறியவர். இவை இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் இரண்டிலும் பயன்படக்கூடியது என்றார்.

34. பிரான்சிஸ் கிறிக் (Francis Crick) கி.பி1916 – ? உயிரியல் DNA/RNA பற்றி ஆய்வு செய்தார். DNA இன் அமைப்பு, RNA பரம்பரை அலகுகளை கடத்துதல் பற்றிவிளக்கினார். RNA ஆனது RNA யை உருவாக்கி புரதத் தொகுப்பை கட்டுப்படுத்துகிறது என்றார். இதற்காக நோபல்பரிசு பெற்றார்

35. ஆதர்.சீ.கிளாக் (Arthur C Clarke) கி.பி1917 – ? விஞ்ஞான புனைகதை இலங்கையில் குடியுரிமை பெற்றுள்ளார். ஸ்டான்லி கிறிக் என்பவருடன் இணைந்து விண்வெளிப்பயனம் பற்றி திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். எதிர்கால விஞ்ஞானப்பயனம், கடல் வாழ் உயிரினம் பற்றியும் எழுதியுள்ளார்.

அமேரிக்க நாட்டு விஞ்ஞானிகள்

36. பெஞ்சமின் பிராங்ளின்(Benjamin Franklin) கி.பி1706 – 1790 பௌதீகம் அரசியல் வெப்ப அடுப்பு, மூக்குக்கண்ணாடி, மின்தாங்கி (இடிதாங்கி), மின்னல் ஒரு மின்சாரம் என்பனவற்றை கண்டுபிடித்தார்.     அமேரிக்க சுதந்திரப் பிரகடனம், அரசியல் சாசனம், பிறநாட்டு ஒப்பந்தம் என்பனவற்றில் கையெளுத்திட்டார்.

37. வில்லியம் ஜேம்ஸ் (Williams James) கி.பி1842 – 1920 மெய்யியல்உளவியல்  பயன்பாட்டு வாதத்தை (பயனுடைய எடுப்பே உன்மை) முன்வைத்தார்.   உளவியலில் செய்நிலைக் கோட்பாடை முன்வைத்தார். நூல் :- உண்மையின் பொருள், பல்வேறுவகையான சமய அனுபவங்கள், உளவியல் தத்துவங்கள்

38. தோமஸ் அல்வா எடிசன் (Thomas Alva) கி.பி1847-1931 பௌதீகம்பொறியில்  மின் குமிழ், பன்னல் பதிவுக் கருவி (கிரமபோன்), சினிமா படம் எடுக்கும் கமரா, என்பனவற்றைக் கண்டுபிடித்தார்.

39. கிறஹம் பெல்( Graham Bell ) கி.பி1847 – 1922 தொலைத்தொடர்பு மனிதனின் குரல் ஒலியை கம்பியினூடாக செலுத்தும் தொலைபேசிக் (Telephone) கருவியைக் கண்டுபிடித்தார்.

40. வோல்டர் றீட் ( Walter Reed ) கி.பி1851 – 1902 மருத்துவம் இராணுவ வைத்திய அதிகாரி    நெருப்புக் காய்ச்சல், மஞ்சட் காய்ச்சல் என்பனவற்றைக் கட்டுப்படுத்;தும் முறையைக் கண்டுபிடித்தார்.

41. ஜே.பி.வாற்சன் (T. B. Watson) கி.பி1878 – 1958 உளவியல் உளவியலில் புரட்சிகரமான நடத்தை வாதக் கோட்பாட்டை தோற்றவித்தார். உளவியலில் பரிசோதனை முறைகளை கையாண்டார். குழந்தை உளவியல், மிருக உளவியல் பற்றியும் ஆய்வை மேற்கொண்டார்.

42. காரென் ஹேர்ணி (Karen Harney) கி.பி1885 – 1952 மருத்துவம்உளவியல்  சிக்மன் புரொய்ட்டின் கருத்துக்களுக்கு ஆதரவளித்த இவர் பெண்கள் மீது எதிர்ப்பால் உணர்வு ஏற்படுகிறது என்ற கருத்தை நிராகரித்தார். ஒருவரது ஆளுமையைத் தீர்மானிக்கும் காரணி சமூகச்சூழல் என்றார் -வைத்திய கலாநிதி

43. லீனஸ் போலிங் (Linus Pauling) கி.பி1901 – ? இரசாயணம்  இரசாயணம், சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்றுள்ளார்.  அணுக்களின் வடிவ ஒழுங்கமைப்பை கண்டுபிடித்து அதன்படி பொருட்களின் பண்பு பற்றிய முடிவைப் பெற்றார்.

44. தோமஸ் கூன் ( Thomas Kuhn) கி.பி1922 – ? மெய்யியல்விஞ்ஞானமுறை  தொடர்பு வாதத்தின் முன்னோடி விஞ்ஞான வரலாற்றை சாதாரணகாலம், புரட்சிக்காலம் எனப்பாகுபடுத்தினார்.   

ஜேர்மன் நாட்டு விஞ்ஞானிகள்

45. கெப்ளர் (Kepler) கி.பி1571 – 1630 வானியல்  சூரினைப்பற்றியும், ஏனய கோள்களைப்பற்றியும் ஆராய்ந்து 3விதிகளை முன்வைத்தார். இவையே கெப்ளரின் விதிகள்  தைகோடி பிறாகே திரட்டிய தரவுகளை பயன்படுத்தினார். கொப்பனிக்கஸின் சூரியமையக் தொள்கையை ஏற்றார்

46. இலைபினிஸ் (Leibniz) கி.பி1646 – 1716 அளவையியல்கணிதம் அறிவு முதல் வாதி (சிந்தனை மூலமே அறிவைப்பெற முடியும்) குறியீட்டளவையியல் முறைகளை உருவாக்கினார்   போதிய நியாய விதியை முன்வைத்தார். நுண்கணித வளர்ச்சிக்கு உதவினார் கணிக்கும் கருவி கண்டுபிடித்தார்

47. ஹெகல்( ர்நபநட ) கி.பி1770 – 1831 மெய்யியல்  கருத்து முதல்வாதி(ஆன்மா அல்லது எண்ணமே முதற்காரணம்)   அளவையியல் நூல் ஒன்றை எழுதினார்.  இயக்கவியல் முறைபற்றி விளக்கினார். மெய்யியலின் வாலாற்றை ஆய்வு செய்தார்.

48. காள் மாக்ஸ் ( Karl Markx) கி.பி1818 – 1883 அரசியல்மெய்யியல்  ஜனநாயக சோசலிஸம், புரட்சிக் கம்யூனிஸம் என்பனவற்றினை முன்வைத்தார். ஏங்கல்ஸ் உடன் இணைந்து ‘கம்யூனிஸ்ட் அற்கிகை’ எனும் நூலை வெளியிட்டார். இவரது மாக்சிஸத்தில் இயக்கவியல் பொருள் முதல் வாதம், வரலாற்றுப் பொருள் முதல் வாதம், அந்நியமாதல் பற்றி விளக்கியுள்ளார்.    இவரது நூல் ‘மூலதனம்’

49. ஏங்கெல்ஸ் (Angels) கி.பி1820 – 1895 அரசியல்  கால்மாக்ஸ் உடன் இணைந்து ‘கம்யூனிஸ்ட் அற்கிகை(ஊழஅஅரnளைவ ஆயnகைநளவழ)’ எனும் நூலை வெளியிட்டார்    பாட்டாளி வர்க்கத்திற்காகப் பாடுபட்டார்.

50. வில்லியம் வூண்ட்ற்( ஏiடாநடஅ றுரனெவ) கி.பி1832 – 1920 உளவியல்  நவீன உளவியலின் தந்தை.  அமைப்பு நிலைக் கோட்பாட்டினை முன்வைத்தவர்களில் ஒருவர் உளவியலில் முதன்முறையாக 1879 ல் லிப்சிக்நகரில் ஆய்வுகூடப் பரிசோதனைக்காக ஆய்வுகூடம் ஒன்றை நிறுவினார்

51. பிறாகே 1848 – 1925 கணிதம்,அளவையியல்,மெய்யியல்  நவீன கணித அளவையியலின் தந்தை அளவையியலில் ஆராயப்படும் வாக்கியங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றார் கணிதக்குறியீடுகளை பயன்படுத்தி குறியீட்டு அளவையியலின் வளர்ச்சிக்கு உதவினார்

52. மக்ஸ் பிளங்( Max Plenkk) கி.பி1858 – 1947 பௌதீகம்  வெப்ப இயக்கவியல் பற்றிய ஆய்வு செய்தார்   பௌதீகத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் குவாண்டம் கொள்கைக்கு அடிப்படையான கதிர்ப்பு விதியை முன்வைத்தார்

53. மக்ஸ் வெபர் (Max Weber) கி.பி1864 – 1920 சமூகவியல்  சமயச் சமூகவியல் பற்றி எழுதியவர்    சமூகவியலுக்கான முறைகளை உருவாக்க முயன்றார். சமூகச் செயற்பாடுகள் அனைத்தும் முழுமைப் பொருளாதாரம் சார்ந்தவை என்பதை மறுத்தார்.

54. அல்பேட் ஐன்ஸ்ரைன்(Albert Einstein) கி.பி1879 – 1955 பௌதீகம்கணிதம்  சார்புக் கொள்கையை வெளியிட்டார்.   ஒளி மின் விளைவை (பொட்டாசியம், தங்குதன் மீது ஒளி அலைகள் விழும் போது இலத்திரன் வெளியிடப்படுதல்) பற்றி ஆய்வு செய்தார் இதற்காக நோபல் பரிசு பெற்றார் சடப்பொருள்-சக்தி சமன்பாடடு (நுஸ்ரீஆஊ2) , பிறவ்னியன்; அசைவு என்பனவற்றை முன்வைத்தார்

55. ரூடோல்ப் கானப்(Rudolf Carnap) கி.பி1891 – 1970 மெய்யியல் விஞ்ஞானமுறை  வியன்னா வட்டத்தைச் சேர்ந்த முன்னனி தர்க்கப் புலனறி வாதி மொழிப் பகுப்பாய்வு, நிகழ்தகவுக் கோட்பாடு என்பனவற்றிற்குப் பங்களிப்புச் செய்துள்ளார்.

56. ஹைசன்பேக்( Heisenberg ) கி.பி1901 – 1976 பௌதீகம் நிர்ணயமின்மைத் தத்துவத்தை முன்வைத்தார். குவாண்டம் பொறிமுறையை உருவாக்கினார்.  இதற்காக நோபல் பரிசைப் பெற்றார்.

57. காள் ஹெம்பல் (Carl Hempel) கி.பி1905 – 1971 மெய்யியல்விஞ்ஞானமுறை  விஞ்ஞானத்தில் உய்த்தறி வாய்ப்புப் பார்த்தல் வாதம், விதி உய்த்தறி விளக்கத்தை அறிமுகம் செய்தார்    இவர் ஒரு உய்த்தறி முறையியளாளர் அனுபவ விஞ்ஞானங்களுடன் அளவையியல்தொடர்புடைய விஞ்ஞானமுறையை முன்வைத்தார்          பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள்

58. டேக்காட்( Descartes) கி.பி1596 – 1656 மெய்யியல்பௌதீகம்  அறிவு முதல் வாதத்தின் தந்தை    பொறிமுறைவாத உலகநோக்கின் முன்னோடி இவரது இருமை வாதம் (உடலும் மனமும் வௌ;வேறானது) உளவியலுக்கு அடிப்படையானது ஒளியியல் பற்றி ஆய்வு செய்துள்ளார்

59. பாஸ்கல் 1623 – 1662 கணிதம்பௌதீகம்  கணிக்கும் பொறியைக் கண்டுபிடித்தார் ,பாரமானியின் தொரிசொல்லியின் பரிசோதனையை முன்வைத்தார்    கேத்திரகணிதம் , நிகழ்தகவு பற்றிக்கூறினார் வெற்றிடம், வழியமுக்கம் போன்ற கொள்கைகளை முன்வைத்தார்

60. ரூஸோ( Rousseau ழரளளநயர ) கி.பி1712 – 1776 அரசியல்மெய்யியல்  சமூக ஒப்பந்தக் கொள்கையை முன்வைத்தார் (குடியாட்சி)   கல்வியியல் பற்றிக் கூறியுள்ளார் ‘எமிலி’ என்ற இவரது நூல் மாணவர்களின் கல்வி பற்றியதாகும்.

61. இலவோசியர் (Lavoisier கி.பி1743 – 1794 இரசாயணம் ஒட்சிசன் வாயுவைக் கண்டுபிடித்தார்.   தகனத்திற்குக் காரணம் ஒட்சிசன் எனக்கூறி புளோஜிஸ்தன் கொள்கையை நிராகரித்தார்  திணிவுக் காப்பு விதியை முன்வைத்தார். நீரில் H2O உள்ளதெனக் காட்டினார்.

62. லாமார்க்(Lamarck ) கி.பி1744 – 1829 உயிரியல் முதன் முறையாக உயிரியல் பரிநாமக் கொள்கையை முன்வைத்தார்.   உயயோகமும் உபயோகமின்மையும், பெற்ற உரிமைகள் தலைமுறையுரிமை அடைதல் போன்ற முக்கியமான விடயங்களின் மூலம் விளக்கினார்.

63. லாபிளாஸ்( Laplce) கி.பி1749 – 1827 வானியல்கணிதம்  வான்புகையுருக் கோட்பாட்டினை முன்வைத்து அதன்மூலம் ஞாயிற்றுத் தொகுதியின் தோற்றம் பற்றிக் கூறியுள்ளார்.  நியூட்டனின் புவியீர்ப்பை சூரிய குடும்பத்திற்கு பிரயோகித்தார். கணித ரீதியான வானியல் ஆய்வுக்கு வழிவகுத்தார்.

64. லூயி பாஸ்டர்(Louis Pasteur) கி.பி1822 – 1895 நுண்ணுயிரியல்மருத்துவம்  நொதித்தல், பட்டுப்பூச்சி நோய் என்பனவற்றிற்குக் காரணம் நுண்ணுயிர்கள் என்பதைக்கண்டுபிடித்தார். பால், வைன் முதலிய பொருடகள் பழுதடையாமல் பாதுகாக்கும் முறையான பாஸ்டர் முறையைக் கண்டுபிடித்தார்    விசர்நாய்க்கடியால் ஏற்படும் நீர்வெறுப்புநோய், அம்மை நோய் என்பனவற்றுக்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தார்   தன்னிச்சைப் பிறப்புக் கொள்கையை பொய்ப்பித்தார்    கட்டுப்பாட்டுக் குளு முறையை பயன்படுத்தினார்

65. அல்பிரட்பீனே (Alfred Pinay) 1857 – 1911 உளவியல்  நுண்ணறிவு ஈவு அளவீட்டு முறையை முன்வைத்தார் கிரகித்தல், கண்டுபிடித்தல், நெறிப்படுத்தல், திறனாய்தல் ஆகிய திறன்களே நுண்ணறிவு என்றார்.          ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானிகள்

66. கிறகர் மென்டல் (Gregor) Mendel கி.பி1822 – 1884 பிறப்புரிமையியல்பாதிரி பிறப்புரிமையியலின் தந்தை   மென்டலின் பாரம்பரியம் பற்றிய கொள்கையானது தனிப்படுத்துகை விதி, தன்வயத்த விதி என்ற இரு விதிகளை உள்ளடக்கியது.

67. ஏர்னஸ்ட் மாஹ் (Ernest Mach) கி.பி1838 – 1916 பௌதீகம்விஞ்ஞானமுறை  விஞ்ஞானம் புலக்காட்சிக்கு உட்படக்கூடிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே செயற்படவேண்டும் என்றார். பௌதீகவதீதத் தன்மையை விமர்சித்த இவர் யதார்த்த வாதக் கோட்பாட்டை முன்வைத்தார். விமானப் பறப்பு வேகத்தை அளவிடும் மாஹ் இலக்கம் (Mach Number) எனும் அளவீட்டுக் கருவியை கண்டுபிடித்தார்.

68. சிக்மன் பிராய்ட்(Sigmund Feud) கி.பி1856 – 1936 உளவியல்உளமருத்துவம்  மன இயக்க ஆராட்சியின் தந்தை   உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு, ஆளுமை விருத்திக்கோட்பாடு கனவுகளின் வியாக்கியானம் என்ற நூலில் கனவுகள் நனவிலி மனதிலிருந்து தோற்றம் பெறுவதாக கூறுகின்றார்.   மனிதநடத்தையை பாலியலும் தீர்மானிக்கின்றது என்றார்

69. காள் பொப்பர்( Karl Popper) கி.பி1902 – 1994 விஞ்ஞான முறைமெய்யியல்  உய்த்தறி பொய்ப்பித்தல் கோட்பாட்டை முன்வைத்தார். (HI \I,\H). இதன்படி விஞ்ஞானக் கோட்பாடுகள் அனுபவச்சோதனைகளின் மூலம் பொய்ப்பிக்கப்படலாம் (நீக்குதல் மூலம் விஞ்ஞானம் முன்னேற்றம் அடையும்) இக்கோட்பாட்டின் படி மாக்சிசக்கோட்பாடும் உளப்பகுப்புக்கோட்பாடும் விஞ்ஞானமல்லாதவை எனநிராகரிக்கப்பட்டது

70. கர்ட் கடெல் ( Kurt Godel) கி.பி1906 – 1978 கணிதம்அளவையியல் கடெல் நிரூபனம் (Godel Proofs) என்ற வெளிப்படை உண்மைகளை முன்வைத்தார் (அளவையியல் கணித முறைக்குள்ளும் உண்மை அல்லது பொய் என நிறூபிக்க முடியாத எடுப்புக்கள் உள்ளன.)

71. சிம்மெல்வைஸ் (Semmelweis )———– மருத்துவம் வைத்தியர்கள் நோய்க்கிருமி எதிர்ப்பு முன்னாயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிடின் நோயாளிகளுக்கு நோய் பரவக்கூடும் எனக்கூறினார்.         

இந்திய நாட்டு விஞ்ஞானிகள்

72. ஜே.சி.போஸ் ( J.C Bose) கி.பி1858 – 1937 பௌதீகம்கணிதம்  மின்சாரம், ஒளி பற்றிய ஆய்வு, தாவர வளர்ச்சிக் கருவியான கிறெஸ்கோகிறாவ் (Cresco Graph) கருவியைக் கண்டுபிடித்தார்.    விலங்குகளைபோலவே தாவரங்களுக்கும் புலனுணர்ச்சி, தூண்டல் துலங்கல் உண்டு எனக்காட்டினார்.

73. இராமானுஜன் ( Ramanujan) கி.பி1887 – 1920 கணிதம் கணிதத் தேற்றங்கள் சிலவற்வைக் கண்டுபிடித்தார்   பல கணிதப் புதிர்களை தோற்றுவித்தார். கேம்பிறிச் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆனார்   .

74. சி.வி.இராமன்( C.V. Raman) கி.பி1888 – 1970 பௌதீகம் இராமன் விளைவு என்பதைக்கண்டுபிடித்தார் – திண்ம ஃ திரவ ஃ வாயு ஊடகங்களுடாக ஒளியை செலுத்தும் போது சிதறலடைந்து அதன் அலைநீளம், அதிர்வெண் என்பனவற்றில் மாற்றம் ஏற்படுகின்றது அணுவைப் பற்றியும் , ஒளியைப்பற்றியும் ஆய்வுசெய்தார். நோபல் பரிசு பெற்றார்.

75. சந்திரசேகர் (Chandrasegar) கி.பி1910 – ? பௌதீகம், கணி தம், வானியல் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் ஆராட்சியாளராக பணிபுரிந்தார். வானம் நீலநிறமாகக் காணப்படுவதற்குரிய காரணத்தை விளக்கினார். பால்வீதியில் உள்ளநட்சத்திரங்களின் இயக்கம் பற்றிகூறியுள்ளார்   நோபல்பரிசுபெற்றார்

76. அமத்திய சென் ———— பொருளியல் மனிதனின் ஆற்றலுக்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் இடையிலான தொடர்பைக் காட்டினார் பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்றார்

77. அப்துல் கலாம் கி.பி1931 – ? பௌதீகம்அணுவிஞ்ஞானம் செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பும் ரொக்கட் தயாரிப்பு , நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தயாரிப்;பு      1997 இல் இந்தியாவின் உயர்விருதான பாரதரத்னா விருது பெற்றார்,  2002 முதல் இந்தியாவின் குடியரசு தலைவர்

78. இராதாகிருஸ்ணன் (Radhakrishnan) தத்துவம் கீழைத்தேய தத்துவத்தில் முக்கிய பங்குவகிக்கின்றார் , வேதாந்த தத்துவத்தின் ஒழுக்க நெறிகளை வெளிப்படுத்தினார்

இரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள்

79. மென்டலீவ் (Mendeleev) கி.பி1834 – 1907 இரசாயணம்  மூலகங்களின் இயல்புகளுக்கேற்ப ஆவர்த்தன அட்டவணையை அமைத்தவர்.   இதன்படி இன்னும் அறியப்படாத மூலகங்கள் இருப்பதாக எதிர்வு கூறினார்.

80. பவ்லோவ் ( Pavlov) கி.பி1849 – 1936 உளவியல்உடலியல் தூண்டல் துலங்கல் கோட்பாடு எனும் உளவியல் கோட்பாட்டை முன்வைத்தார். இவர் ஒரு நடத்தை வாத உளவியளாளர் நோபல் பரிசு பெற்றவர் உடலியலில் சமிபாடு, நரம்புத் தொகுதி, மூளையின் தொழிற்பாடு பற்றி ஆராய்ந்தார்

81. லெனின்( Lenin) கி.பி1870 – 1924 அரசியல்கம்யூனிஸம் ரஷ்ய ஒக்டோபர் புரட்சிக்கு (1917) தலைமை தாங்கி பின்னர் ரஷ்ய அரசாங்கத்திற்குத் தலைம தரங்கினார்   மாக்ஸிசத்தை முன்னெடுத்தார். பொருள் முதல் வாதமும் அனுபவ வாதமும் என்றை நூலை எழுதினார்.

82. லைசெங்கோ( Lysenko) கி.பி1898 – 1976 தாவரவியல் பிறப்புரிமையியல் பற்றி ஆய்வை மேற்கொண்டார் சூழல் மாற்றங்களுக்கேற்ப பழைய பயிரினங்களிலிருந்து புதிய பயிரினங்களை பெறலாம். பரம்பரை அலகுகளின் தன்மையிலே பரம்பரை இயல்பு கடத்தப்படாது என்றார்          இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள்

83. லியனாடோ டாவின்சி (Leonardo Da Vinci) கி.பி1452 – 1519 பொறியியல் ஓவியம்  விமானம் , பரசூட் என்பனவற்றிற்கான வடிவ அமைப்புக்களை வரைந்தார். புலமையாளரின் முறைகளையும் கைவினையாளர்களின் முறைகளையும் ஒன்றினைத்தவர்களில் ஒருவர் மோனலிசா, கடைசி இராப் போசனம் போன்ற ஓவியங்களை வரைந்தவர்

84. கலிலியோ( Galileo) கி.பி1564 – 1642 பௌதீகம்கணிதம்  கலிலியோவின் விதி (சுயாதீனமாக விழும் பொருட்கள் புவியின் மேற்பரப்புக்கருகில் நிலையான வேகததைக் கொண்டிருக்கும்)    ஊசல் தத்துவத்தைக் கண்டுபிடித்தார் வானியல் தொலைகாட்டியைக் கண்டுபிடித்தார்.

85. மார்க்கோனிஆயசஉழni 1874 – 1937 பௌதீகம்  வானொலியெக் கண்டு பிடித்தார்.   கம்பியில்லாத் தந்தியைக் கண்டுபிடித்தார்.         

போலந்து நாட்டு விஞ்ஞானிகள்

86. கொப்பனிக்கஸ் (Copernicus) கி.பி1473 – 1543 வானியல் சூரிய மையக்கொள்கையை முன்வைத்தார். இதன்மூலம் தொலமியின் புவிமையக் கொள்கையை நிராகரித்தார்.    பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்றார். வானியல் புரட்சி செய்தவர்

87. மேரி கியூரி (Mary Curie) கி.பி1867 – 1934 இரசாயணம் தனது கணவரோடு இணைந்து உயர் கதிர் இயக்கத்தைக் கொண்ட ரேடியம், பொலோனியம் என்ற மூலகங்களை கண்டுபிடித்தார். இந்த ரேடியம் புற்றுநோய்க்கான சிகிட்சைகளுக்கு உதவுகிறது  1903,1911 இல் நோபல்பரிசு பெற்றார்          சுவிற்சலாந்து நாட்டு விஞ்ஞானிகள்

88. அல்பிரட் நோபல் (Alfcred Nobel ) 1833 – 1896 இரசாயணவியல்  டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தார்   இவரின் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது

89. காள் யுங் (Carl Yung ) கி.பி1875 – 1961 உளவியல்உளமருத்துவம் பகுப்பு உளவியல் என்னும் புதிய உளவியல் கோட்பாட்டை முன்வைத்தார் ஆரம்பத்தில் சிக்மன் புரொய்ட் இன் கருத்திற்கு ஆதரவளித்hர்பின்னர் ‘உணர்விலி மன உளவியல்’ என்றநூலில் எதிரான கருத்துக்களையும் முன்வைத்தார்   கூட்டு நனவிலி மனது –அறிமுகம் ஆளுமையின் அடிப்படையில் மனிதர்களை அகமுகிகள், புறமுகிகள் எனவகுத்தார்.

90. ஜீன் பியாஜே (Jean Piaget) கி.பி1896 – 1980 உளவியல் அறிகை (அறிவுசார்) உளவியல் , குழந்தை உளவியல்களை வளப்படுத்தினார் பிறப்பு முதல் கட்டிளமைப்பருவம் வரையான நுண்ணறிவு வளர்ச்சியை மூன்று கால கட்டங்களாக வகுத்தார். கல்வி உளவியல் அறிவாராட்சியியல் போன்றன வற்றில் ஆய்வுமேற்கொண்டார்          அயர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள்

91. றொபேட் பொய்ல் (Robert Boyle) கி.பி1627 – 1691 பௌதீகம்இரசாயணம் பொய்லின் விதி (வெப்பநிலை மாறாதிருக்கையில் ஒரு குறிப்பிட்ட திணிவுடைய வாயுவின் கனவளவு அதன் அமுக்கத்திற்கு நேர்மாறுவிகித சமனாகும்)  குறைந்த அமுக்கநிலையில் திரவங்களின் கொதிநிலை, உறைநிலை, பாரமானியின் செயற்பாடு பற்றி ஆய்வுசெய்தார்காற்றடிக்கும் பம்பியைக் கண்டுபிடித்தார்

92. ஜோர்ஜ் பூல்( புழசபந டீழழடந ) கி.பி1815 – 1864 அளவையியல் கணிதம்  அளவையியல் கூற்றுக்களை குறியீட்டில் அமைக்கும் குறியீட்டளவையியலின் வளர்ச்சிக்குஉதவியவர் பூலியன் அட்சரகணிதம் (Boolean Alga) மூலம் பல துறைகளில் பிரச்சினைகளை தீர்த்தார்          ஸ்கெட்லாந்து நாட்டு விஞ்ஞானிகள்

93. ஜேம்ஸ் வாட் (James Watt) கி.பி1736 – 1819 பொறியியல் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் (1769)   நட்சத்திரங்களுக்கிடையிலான தூரத்தை அளக்கும் கருவி , நகல் எடுக்கும் இயந்திரம் என்பனவற்றைக் கண்டுபிடித்தார். கினெஸ்கோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்

94. டேவிட் ஹியூம் (David Hume) கி.பி1711 – 1776 மெய்யியல்  அனுபவ வாதியும் , ஐயவாதியும் ஆவார்   காரண காரிய முறையை விமர்சித்து தவறு எனக்கூறினார்   தொகுத்தறி அனுமானம் உய்த்தறி சார்ந்ததல்ல எனக் கூறினார். இங்கிலாந்தின் வரலாறு, ஒழுக்கவியல், சமயம், மனிதஇயல்பு, தற்கொலை, பற்றி நூல்எழுதியுள்ளார்          டென்மார்க் நாட்டு விஞ்ஞானிகள்

95. தைகோ டீ பிறாகே (Tycho De Brahe) கி.பி1546 – 1601 வானவியல்கணிதம்  மினோவா என்னும் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார்  கெப்ளரின் கண்டுபிடிப்புக்களுக்கு இவர் திரட்டிய தரவுகளே பெரிதும் உதவின.   கோள்கள் சூரியனைச்சுற்றி வலம் வருகின்றன ஆனால் சூரியனும் ஏனய கோள்களும் பூமியைச் சுற்றி வலம் வருகின்றது என்ற ஞாயிற்றுத் தொகுதி பற்றிய விளக்கத்தை முன்வைத்தார்.

96. நீல்ஸ் போர் (Niels Bohr) கி.பி1885 – 1962 பௌதீகம் அணுக்கொள்கையை விருத்தி செய்து அணுநிறமாலை, எக்ஸ் கதிர்கள் பற்;றி விளக்கினார் இலத்திரன்கள் ஓர் ஒழுக்கிலிருந்து மற்றொரு ஒழுக்கிற்குச் செல்லும் போது சக்தி காவப்படலாம் என்றார்    நோபல் பரிசு பெற்றார்          ஏனைய நாட்டு விஞ்ஞானிகள்

97. ஸ்பினாசோ ( Spinoza) கி.பி1632 – 1677 மெய்யியல்  நெதர்லாந்து    அறிவுமுதல் வாதி, அனுபவ வாதத்தை நிராகரித்தார்  சமயச்சிந்தனையாளர் , மொனாட் என்ற ஆன்மக்கொள்கையை முன்வைத்தார்   ஒழுக்கவழிமுறைகளை எடுத்துக்காட்டியவர்

98. கரலோஸ் லினேயஸ் (Carolus Linnaeus) கி.பி1707 – 1778 தாவரவியல்  சுவீடன்   தாவரங்களையும் விலங்குகளையும் வகைப்படுத்தி தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் (சாதிப்பெயர், இனப்பெயர் மூலம்) பெயரிடும் நவீன விஞ்ஞான முறையை உருவாக்கினார்

99. இம்மானுவல் கான்ற்(ஐஅஅயரெநட முயவெ) கி.பி1724 – 1804 மெய்யியல் பிறஷ்யா  அறிவாராட்சியியலில் ஆய்வுமேற்கொண்டு அறிவைப்பி ரதிபலிக்கும் எடுப்புக்களை 4 வகைப்படுத்தினார்   அறிவுமுதல் வாதத்தையும் அனுபவ வாதத்தையும் ஒன்றினைத்து மெய்யியல் கருத்துக்களை முன்வைத்தார்.

100. வில்லியம் றொன்ஜன் (William Rontgen) கி.பி1845 – 1923 பௌதீகம் ஒல்லாந்து   சாதாரண ஒளி ஊடுருவிச் செல்லமுடியாத ஊடகங்களினூடாக செல்லக்கூடிய  கதிர்களைக் கண்டுபிடித்தார் (ஓ – கதிர்கள்) , எக்ஸ் கதிர் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றார்.

101. கிரான்ட் பேன்டிங் 1891 – 1941 மருத்துவம்  டயபிற்றிக் என்ற நோயைக்கட்டுப்படுத்தும் இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தார், இதற்காக 1923 நோபல் பரிசு பெற்றார்

102. யூக்காவா( லுரமயறய ) கி.பி1907 – ? பௌதீகம்  யப்பான்   அணுவில் ‘மீசன்’; நுண் அணுத்துனிக்கை உள்ளது எனஎதிர்வு கூறினார் பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டது     பௌதீகத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.

103. கிறிஸ்டியன்பேனாட்(Cristian Bernard) கி.பி1922 – ? மருத்துவம் சத்திரசிகிட்சை  தென்னாபிரிக்கா   மனித இதயமாற்று சிகிட்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட முதல் வைத்தியர் , மீண்டும் 11வது சிகிட்சையில் பழைய இதயத்தை நீக்காமல் புதிய இதயத்தைப் பொருத்தி இரட்டைப்பம்புதல் ஏற்படுத்தினார்

104. அப்துஸ் சலாம் (Abdus Salam) ——— பௌதீகம்  பாக்கிஸ்தான்    நுண் அணுப் பௌதீகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். அணு ஆயுத கட்டுப்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்தார் பௌதீகத்தில் மேற்கொண்ட ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார்.

105. என்.ஆர்.ஹன்சன்( N.R. Hansson) ———- விஞ்ஞானமுறை விஞ்ஞானமுறையில் இருவகைஉண்டு எனக்காட்டினார் (1 – கண்டுபிடிப்புக்கான தர்க்கம்,   2 – நியாயப்படுத்தலுக்கான தர்க்கம்) விஞ்ஞான முறையியலாளர்களின் பணி நியாயப்படுத்தலுக்கான        தர்க்கத்தை விளக்குதல் என்றார்

106. இமயர்லக்காதொஸ்   (Imre Lakatos) ———- விஞ்ஞானமுறை ஒரு விஞ்ஞானத்துறையில் ஈடுபடுகின்ற அனைவரும் பொதுவான ஓரு ஆய்வுத்திட்டத்தின் படி செயற்படுதல் வேண்டும் என்பதை முன்மொழிந்தார்

About editor 3150 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply