‘ஆராய்ச்சியால் பார்வையைப் பறிகொடுத்த அறிவியல் மேதை’ கலீலியோ கலிலி நினைவு நாள்!
இன்னொரு ரொம்ப ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, இந்த நவீன அறிவியலின் தந்தையான கலீலியோ கிட்ட முறையான பட்டப்படிப்பு இல்லை.
Telescope-அ கண்டுபிடிச்சது யாருனு நம்மகிட்ட கேட்டா டப்புனு ஸ்கூல்ல கோரஸ்ஸ்ஸா ’Galileo Galilei’ னு சொன்னது நியாபகம் வரும். ஆனா அதுல சின்ன சட்ட சிக்கல் இருக்கு. டெலெஸ்கோப்ப முதன்முதலா கண்டுபிடிச்சது கலீலியோ கலிலி இல்லை. அதை அவரே ஒத்துக்கிட்டாரு. Hans Lippershey ங்கிற ஒரு லென்ஸ் மேக்கர்தான் telescope-அ முதல்ல கண்டுபிடிச்சிருக்காங்க. இவங்க கண்டு பிடிச்ச டெலெஸ்கோப் வழியா பாத்தா பொருட்கள் எல்லாம் தலைகீழாக தெரிஞ்சது. அதை மாற்றி பொருட்கள் நேராகத் தெரியும் படியும் மேலும் சில திருத்தங்களும் செஞ்சி, இப்போ நம்ப பயன்படுத்திட்டு இருக்க டெலஸ்கோப்க்கு வித்திட்டவர்தான் Galileo. அவர் டெலெஸ்கோப்ப கண்டுபிடிச்சக் கதை சுவாரஸ்யமானது .
Galileo இத்தாலில இருக்க பிளாரென்ஸ்-ங்கிற ஊர்ல இருக்க ஒரு யூனிவர்சிட்டில சேர்ந்து படிக்கிறதுக்காக வர்றாரு. அந்த ஊருல இருக்க சர்ச்லாம் ரொம்ப அழகா இருக்கும். பெரிய பெரிய கோபுரங்கள் கலை நயம்மிக்க சிலைகள்னு அந்த சர்ச்கள் மிகச்சிறந்த கலைப்படைப்பா இருக்கும். அங்க வர்றவங்கெல்லாம் குட்டி குட்டியா கைல ஒரு லென்ஸ்ஸ வச்சுக்கிட்டு அந்த கலை படைப்புகளை நுணுக்கமா பார்த்துட்டு இருப்பாங்க. அப்போ அதை கவனிச்ச நம்ப Galileo இதே மாறி நம்பளும் ஒண்ணு செய்யலாமேனு நினச்சு ஆராய்ச்சி பன்னதின் விளைவுதான் அந்த டெலஸ்கோப். ஆனா அவர் அந்த டெலஸ்க்கோப்பை வச்சுக்கிட்டு சர்ச்-அ பாக்கல, இன்னும் கொஞ்சம் மேல தூக்கி வானத்த பார்த்தாரு. அதுதான் வானியல் புரட்சியின் ஆரம்பமா இருந்துச்சு. தன்னுடைய படைப்ப வச்சி விண்ணுலகை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சார் கலீலியோ. அப்போதைய இவருடைய கண்டிபிடிப்புகள் பெரும் பரபரப்பையும் புரட்சியும் ஏற்படுத்தியது. கத்தோலிக்கர்கள், பூமிதான் அனைத்து கோள்களுக்கும் மையம்னு எல்லாருக்கும் போதிச்சுட்டு இருந்தாங்க. ஆனா கலீலியோவும் கோப்பர்நிக்கஸும் உண்மையை அறியும் நோக்கில் தீவிரமா ஆராய்ச்சி செஞ்சாங்க.
தகுந்த அறிவியல் கோட்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் வழி, பூமி உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனை மையமாக கொண்டுதான் சுழல்கிறது-னும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றுகிறது என்றும் நிரூபிச்சாரு. கத்தோலிக்க கிறித்துவ ஆட்சி காலத்திலேயே பைபிள் விண்ணுலகத்துக்கு எப்படி போலாம்னுதான் சொல்லுமே தவிர விண்ணுலகம் எப்படி செயல்படும்னு சொல்லாதுனு சொன்னவர். இன்னும் பிரமிப்பான விஷயம் என்னன்னா, அறிவியல் கோட்பாடுகள் கணித சூத்திரங்கள், வானியல் ஆராய்ச்சிகள்னு செஞ்சிட்டிருக்கும்போதே, பல்வேறு சின்ன சின்ன கண்டுபிடிப்புகளையும் செஞ்சிட்டு இருந்தாரு கலீலியோ. தன் தந்தை இறந்தபிறகு ஏற்பட்ட கடன்சுமைய ஈடுகட்ட இதுமாதிரியான சின்ன சின்ன கண்டுபிடிப்புகளை செஞ்சு விற்பனை பன்னினதா சொல்லியிருக்காரு கலீலியோ. தானியங்கி தக்காளி தேர்ந்தெடுப்பான், பாக்கெட் சீப்பு, ரானுவத்திற்கு பயன்படுத்தக்கூடிய சின்ன சின்னக் கருவிகள், நாம இப்போ பயன்படுத்துற கடிகாரங்கள் உருவாவதற்கு அடிப்படையான கண்டுபிடிப்பை நிகழ்த்தியதும் Galileo தான்.
அதென்ன கண்டுபிடிப்புனு பாக்கறதுக்கு முன்னாடி ஒரு குட்டி கதை. நம்ம Galileo இத்தாலி ல இருக்க ஒரு சர்ச்க்கு போயிருந்தப்போ அங்க அவர் தலைக்கு மேல ஒரு Sandlegun candleஅ தொங்க விட்ருந்தாங்க. அது எப்படி இருக்கும்னா, நீளமா கீழமட்டும் அகல்விளக்கு மாதிரி இருக்கும். காத்து அடிச்சதுல அந்த விளக்கு ஆட ஆரம்பிச்சிருக்கு. அந்த விளக்கின் ஆட்டம் ஒரே சீரா இருந்திருக்கு. அது எப்படி சீரான வேகத்துல ஆடுதுனு கண்டுபிடிக்க ஆர்வமானார் கலீலியோ. நொடிக்கு எத்தனை முறை அவை ஆடுகிறது என்பதை தெரிந்துகொள்ள தன் கை நாடியை பிடித்து கவனிக்க ஆரம்பிச்சார். அப்படி அவர் கண்டுபிடிச்சதுதான் சிம்பிள் பெண்டுலம், நமது கடிகாரங்களை அடித்தளமான கண்டுபிடிப்பு. நவீன கருவிகள் இல்லாத காலத்திலேயே, அந்த ஆரம்பக்கட்ட உருவாக்கத்துல இருந்த டெலஸ்கோப்பை வெச்சே, நம் பால்வெளியில் ஜூபிடர்னு கிரகத்தை சுத்தி 3 நிலா இருக்குனு முதன் முதலில் கண்டு பிடிச்சு உலகத்துக்கு தெரியப்படுத்தினார் கலீலியோ. அந்த 3 நிலாக்களுக்கும் இவர் பெயரையே வச்சி Galilean moonsனு கௌரவப்படுத்துச்சு அறிவியல் உலகம். அன்று வரை அறிவியல் மேதைன்னு போற்றப்பட்டு வந்த அரிஸ்டாட்டிலின் தத்துவத்தையே தப்புனு சுட்டி காட்டிய பெருமைக்குரியவர் Galileo. அறிவியலையும் மத்ததையும் ஒண்ணா பாக்கக்கூடாதுனு 1600-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மிகத்தெளிவாக விளக்கியவர் கலீலியோ. அறிவியல் ரீதியாக ஒரு விஷயம் நிரூபிக்கப்பட்டால், அந்த கருத்து மத நூல்கள்லயே இருந்தாலும் அதை மாற்றியமைக்கனும்னு மூட நம்பிக்கைகளுக்கு எதிரா அறிவியல் ஒளி பாய்ச்சியவர் இவர்.
இவருடைய இந்த செயலை, மத விரோத செயல்னு சொல்லி அவரை சிறையில அடைச்சாங்க கத்தோலிக்கர்கள். தன் வாழ்நாளின் கடைசி வருடங்களை சிறையிலேயே கழித்தார் Galileo. சிறையில் இருந்த நாட்களில்கூட அவர் அவருடைய ஆராய்ச்சிகளை “The Discourses and Mathematical Demonstrations Relating to Two New Sciences “னு ஒரு புத்தகமா வெளியிட்டார். கலீலியோ பற்றி அதிகம் தெரிந்திராத தகவல்கள் சிலவற்றை பார்க்கலாம் Galileo வின் தந்தையும் சகோதர்களும் அக்காலத்தின் சிறந்த இசை மேதைகளாக இருந்தவங்க. Galileo தனது இளமை பருவத்தில் தனது தந்தைக்கு ஒலியியல்(accoustics) குறிப்புகளுக்கான கணித சூத்திரங்களை உருவாக்குவதில் துணையாக இருந்தார். இந்த அனுபவம்தான் பின்னாட்களில் அவரோட கணித அடிப்படையிலான ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையா அமைந்தது.
இன்னொரு ரொம்ப ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, இந்த நவீன அறிவியலின் தந்தைகிட்ட முறையான பட்டப்படிப்பு இல்லை. 1585லயே படிப்பை நிறுத்திட்டு சுயமாகவே கணிதமும் தத்துவமும் படிக்க ஆரம்பிச்சாரு. இவரோட திறமையை பார்த்து வியந்த பைசா பல்கலைக்கழகம் இவரை கௌரவ கணித பேராசிரியரா நியமிச்சாங்க. பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள், வானியல் ஆராய்ச்சிகள், மதப் புரட்சி, அதை தொடர்ந்த சிறைவாசம்னு ஆச்சர்யமான வாழ்வை வாழ்ந்த கலீலியோ, ஜனவரி 8, 1642ஆம் ஆண்டு தனது 77வது வயசுல காலமானார் . அவர் இறக்கும்போது அவருக்கு பார்வை பறிபோயிருந்தது. இடைவிடாத வானியல் ஆராய்ச்சில ஈடுபட்டிருந்ததன் காரணமாதான் அவர் பார்வை பறி போச்சுன்னு மக்கள் நம்புனாங்க . கடைசியா ஒரு விஷயம் Galileoவுக்கு நவீன அறிவியலின் தந்தை னு பட்டம் கொடுத்தது யார் தெரியுமா? கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவியல் மேதையாக கொண்டாடப்பட்ட albert einsteinதான். எல்லோரும் கலீலியோவ வானியலின் தந்தை, இயற்பியலின் தந்தை சொல்லிட்டிருக்கும்போது, அவரை நவீன அறிவியலின் தந்தை என்றே அழைக்கவேண்டும்னு சொன்னவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
https://www.vikatan.com/technology/nostalgia/galileo-galelei-history-and-the-story
Leave a Reply
You must be logged in to post a comment.