தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்

தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்

தொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர் சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது என்பதை உணர ஆரம்பித்த நிலையில், கடவுள் கோட்பாடு உருவாகியது என்பர். தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முறையே புலப்படாத உட்படாதவற்றின் மீதான அச்சம் காரணமாக மனிதன் முதலில் இயற்கையை வழிபடத் தொடங்கி பின்னர் கடவுள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான். அவை வழிபாட்டு மரபாய் மாறியது.
அவ்வடிப்படையில் பண்டைய தொல்காப்பிய காலத் தமிழ்ச்சமூக தெய்வக் கோட்பாடுகள் ஐநில மக்கள் வாழ்வியலுக்கேற்ப உருவாகி இருக்கின்றன. அவை இன்றைய மத நிறுவனங்கள், பெரும் சடங்குகள் அடிப்படையிலான இறைவழிபாடுகளைப் போல அன்று இருந்திருக்கவில்லை.

தெய்வம்

என்பது தொல்காப்பியம்.

      ஐந்திணைகளாகப் பகுக்கப்பட்டிருந்த பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சிக்குச் ‘சேயோன்’ என்ற முருகனும், முல்லைக்கு ‘மாயோன்’ என்ற திருமாலும், மருதத்திற்கு ‘வேந்தன்’ என்று குறிப்பிடப்படுகின்ற இந்திரனும், நெய்தலுக்கு வருணன் (வாரணன் என்று அழைப்பர்) என்ற தெய்வமுமாக நானிலக் கடவுளைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகின்றார்.

      பாலை நிலத்திற்குக் கொற்றவையும் (காளி என்றும் அழைப்பர்) தெய்வமாய் இருந்துள்ளது. வேறு கடவுளைப் பற்றியோ, மத நிறுவனத்தைப் பற்றியோ குறிப்புகள் இல்லை.

போர் மரபில் வழிபாடுகளும், நம்பிக்கைகளும்

பண்டைய காலப் போர்மரபில் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்துள்ளதைத் தொல்காப்பியம் உறுதி செய்கிறது.

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர|| (தொல். நூ. 1006)

என்று தொல்காப்பியம், போர்க்களத்தில் இறந்துபட்ட வீரரை நினைத்து நடுகல் நட்டு வழிபட்ட முறையை குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களிலும் இத்தகு நடுகல் வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது. குறிப்பாக குறிஞ்சித் திணையில், மலையும் மலை சார்ந்த வாழ்வில் ஆநிரை கவர்தல், மீட்டலில் ஈடுபட்டு, வீரமரணம் அடைந்தவர்களுக்கே ‘நடுகல்’ நட்டு வழிவழியாக வழிபாடு நிகழ்ந்திருக்கின்றது.

      நடுகல் வழிபாட்டு முறை பல்வேறு இடங்களில் காணப்பட்டுள்ளது. “இறந்தவனது ஆன்மாவை சில சடங்குகள் மூலம் ஓர் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கலாம். அங்குள்ள ஒரு பொருளில் நுழைந்து கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கை உலகமெங்கும் பண்டைய மக்களின் பண்பாட்டில் காணப்படுகிறது” என்பர். புறநானூற்றிலும் (பா. 265, 264, 232, 329) சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்து வழிபட்ட செய்தியைக் காண முடிகிறது. சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில் விஞ்சி நிற்கும் வழிபாட்டுச் செய்திகளும் காதைகளின் பெயர்களும், நடுகல் வழிபாட்டு மரபை உணர்த்தும். மேலும்,

      “வெற்றி சிறப்பின் வெவ்வாய் வேலன்” (தொல். நூ. 1004) என்ற அடிகள் போருக்கு செல்லும் போது வெற்றி கருதி சிவந்த வாயினையுடைய வேலனை வழிபட்டதையும், “மாயோன் மேய மன்பெறு சிறப்பின்” (தொல். நூ. 1006: 9) மாயோனைத் தெய்வமாகக் கொண்ட மண்ணின் சிறப்பினை எண்ணியும் கரந்தை வீரர்கள் போருக்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, “உடல்வேந் தடுக்கிய உன்னநிலையும்” (தொல். நூ. 1006:8) போருக்குச் செல்லும் போது நல் நிமித்தம் பார்ப்பதையும் கரந்தை வீரர்கள் கொண்டிருந்தனர் என்பார் தொல்காப்பியர். “உன்னமென்பது ஒரு மரம். நல்லதாயின் தளிர்த்தும் தீயதாயின் உலறியும் அது நிமித்தங் காட்டு மெனலால், அதைக் கண்டு அதனொடு சார்த்தி நிமித்தம் பார்க்கும் குறிப்பு நுவலப்பட்டது” (தி.சு.பாலசுந்தரம் உரை. பக் 265) என்பர். மேலும், தாம் வழிபடுகின்ற தெய்வம் ஊரைக் காக்கும் என்ற நம்பிக்கை தொல்காப்பியர் கால மக்களின் நம்பிக்கையாக இருந்ததை, “வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப” (தொல். நூ. 1367) என்ற நூற்பாவின் அடிகள் உணர்த்துகின்றன.

பேய் பற்றிய நம்பிக்கை

      தொல்காப்பியர் காலத்தே மக்களிடத்தே பேய்கள் பற்றிய நம்பிக்கை இருந்திருக்கிறது. “பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்” (தொல். நூ. 1025) பேஎத்த மனைவி ஆஞ்சியானும்” (தொல். நூ. 1025) என்ற அடிகளின் வழியாக, போரில் இறந்துவிட்ட அல்லது விழுப்புண்பட்ட வீரர்களை பேய்கள் நின்று பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும், பழந்தமிழக மக்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் ஃ துறந்த ஒழுக்கங் கிழவோற் இல்லை” (தொல்.நூ.1081) என்ற நூற்பாவில் ‘ஓரை’ என்ற சொல்லிற்கு பல பொருட்களை குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, நாழிகை, விளையாட்டு, முகூர்த்தம், ராசி என்று குறிப்பிடுகின்றனர். “நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” (தொல்.1060) என்ற நூற்பாவில் ‘புள்’ என்ற சொல்லிற்கு முன்னர் பறவை யென்றும், பிற்காலத்தே சகுனம் என்றும் குறிப்பிடுவர். இதன் வழி, பொதுவாக பண்டைய மக்களிடம் ‘நிமித்தம்’ பார்க்கும் வழக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. பண்டைய காலத்தில் ‘நிலையாமை’ கருத்துக்களும், ஊழ்வினை நம்பிக்கையும் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.

கடவுள்

      “காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல். நூ. 1029) என்ற நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். மேலும்,

“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங் (தொல். நூ. 1034)
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். நூ. 1034)

என்று கொடிநிலை, கந்தழி, வள்ளி-மூன்று துறையும் கடவுள் வாழ்த்தோடே பொருந்தி வரும் என்றும், “அமரர்கண் முடியும் அறுவகை யானும்” (தொல். நூ. 1027) என்று, தேவர் நிலைமையில் வைத்து வாழ்த்துதற்குரிய அறுவகை நிலையான சான்றோர், புலவர், வேந்தர், ஆன், மழை, உலகம் என அறுவகையில் வாழ்த்துதல் மரபெனவும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். இவை கடவுளை வாழ்த்தும் வகை பற்றிய குறிப்பாகும். இதன் வழி கடவுளை பாடும் மரபை பண்டையோர் கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது.

      திணைத் தெய்வங்கள் வழிவழி வணங்கப்பெற்று, காலவோட்டத்தில் தமிழர் வழிபாட்டு மரபில் மாற்றங்கள் நிகழ்ந்து புறச்சமயங்கள் வந்து கலந்து கலப்பு வழிபாட்டு மரபு தோன்றிவிட்டது. ‘தெய்வம்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் ஒன்பது இடங்களில் இடம்பெற்றுள்ளன. ‘இறை’, ‘இறைவன்’ என்ற சொற்கள் பண்டைய காலத்தில் தலைவனை குறிக்கும் சொல்லாகவும் காணப்படுகிறது.

      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிலக்கியங்களில் ‘சமயம்’ என்ற சொல்லே இல்லை. அதற்குப் பிற்பட்ட நூல்களில் தான் சமயம், மதம் என்ற சொற்கள் காணப்படுகின்றன. எனவே, சங்க காலத்தில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பினும் அவர் சிவன், திருமால் போன்ற கடவுளர்களை வழிபட்டாலும் சைவ சமயம், வைணவ சமயம் போன்ற சமயப்பற்று வேறூன்றவில்லை என்பது தெரிகின்றது.

      ‘தெய்வம்’ என்பது கருப்பொருளிலேயே கூறப்பட்டுள்ளது. கருப்பொருளானது நிலத்தில் காலத்தால் கருக்கொள்ளும் பொருளாகும். இவை தோன்றி நின்று மறைவனவே யாகும். இதன் மூலம் ‘தெய்வம்’ என்று குறிப்பிடப்படுவது இறந்த முன்னோர்களே எனக் கருதவும் இடமுண்டு. தெய்வ வழிபாடே அன்றி நிலையான ‘கடவுள்’ என்ற கொள்கைப் பற்றி தொல்காப்பியத்தில் எங்கும் சுட்டப்பெறவில்லை என்பது ஆராயத்தக்கதாகும்.

      ஐந்திணைத் தெய்வம் பற்றி பலர் விளக்கம் தந்திடினும் தேவநேயப்பாவாணர் தெளிவுறச் சுட்டுகின்றார்.

      ‘குறிஞ்சி நிலத்து மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாகக் கொண்டதால் சேந்தன் (சிவந்தவன்) சேயோன் என்று பெயரிட்டு அழைத்தனர். முல்லைநிலத்து மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக முதற்கண் மழையே இருந்ததால் முகிலையே தெய்வமாகக் கொண்டு ‘மால்’ என்று தம் தெய்வத்திற்கு பெயரிட்டு வழிபட்டனர். மருத நிலத்து மக்கள் இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழும் கொள்கை கொண்டோராக, இம்மையில் வேந்தனாக அறவாழ்க்கை நடத்தினால், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்ற கொள்கை கொண்டு தேவர்கோனைத் தேவர் ‘வேந்தன்’ என்றனர். மேலும், உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழையானது விண்ணிலிருந்து பொழிகிறது. இவ்விண்ணுலக வேந்தனே ‘இந்திரன்’ ஆயினான். நெய்தல் நிலத்து மக்கள் கடலை நம்பியே வாழ்க்கை நடத்தியதால் தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு அதற்கு ‘வாரணன்’ அல்லது ‘வருணன்’ என்று பெயரிட்டு வணங்கினர். பாலை நிலத்து மக்களின் வாழ்வு வறட்சியும், போர்க்களங்களும், பிணங்களும், பிணந்திண்ணிப் பேய்களும் கொண்டதால் பேய்களுக்குத் தலைவியாகிய ‘காளி’யை தெய்வமாகக் கொண்டனர். இத்தகைய ஐந்நிலத்து மக்களும் தம் வாழ்வியலோடு ஒன்றி வந்த இயற்கையை பொருத்தி தெய்வத்தை தோற்றுவித்தனர். மேற்கூறிய கருத்தை தேவநேயர் தமிழர் மதம் நூலில் தெளிவுற குறிப்பிடுகின்றார்.

      மேலும், பண்டைய தமிழரின் தெய்வ வழிபாட்டு முறைகளுக்குக் காரணமாக 1. அச்சம், 2. முற்காப்பு, 3. நன்றியறிவு, 4. பாராட்டு, 5. அன்பு, 6. கருதுகோள், 7. அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இறை வழிபாடு தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

      ‘தீயும், இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோராவிகட்கும், பேய்கட்கும் அஞ்சிய அச்சத்தால் தெய்வ வணக்கம் முதற்கண்ணாகத் தோன்றியது. கொள்ளை நோய், பஞ்சம், இயற்கை சீற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குமாக முற்காப்பு அடிப்படையில் அச்சம் தோன்றியது. இவை தெய்வங்களின் சீற்றத்தால் நேர்பவையென எண்ணி அச்சம் கொண்டனர். மேலும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கதிரவன், மதி, மரம், ஆ, இன்ன பிறவற்றையும் தெய்வமாக நன்றியறிவின் பொருட்டு வணங்கினான். மறவனையும், மழை வரவழைத்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரினை எரித்தும், உடன்கட்டை ஏறியும், கடுங்கற்பைக் காத்தப் பத்தினிப் பெண்டிற்கும்; கல்நட்டு விழாவெடுத்தது பாராட்டே ஆகும். இவ்வடிப்படையிலும் தெய்வம் தோற்றம் பெற்றது. அரசன் இறந்த பின்னர் அன்பு மிகுதியால் அவனை வழிபட்டதும், கண்ணால் காணும் இயற்கைக் கூறுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தெய்வங்கள் கருதுகோளின் அடிப்படையிலும் தோற்றம் பெற்றன. அதுமட்டுமன்று அறிவு வளர்ச்சி பெற்ற பின்னர் மறுமையும், கடவுள் உண்மையும் கண்டு நம்பிக்கையின் அடிப்படையிலும் ‘தெய்வம்’ தோன்றிற்று என்று தேவநேயப்பாவாணர் அவர்கள் பழந்தமிழரிடம் உருவாகிய ‘தெய்வம்’ பற்றிய சிந்தனையை பற்றி விளக்குவதைக் காண முடிகிறது. இத்தகைய வழிபாட்டு முறையே பழந்தமிழரின் வழிபாட்டு முறையாம். மேற்கூறப்பட்டவையே தொல்காப்பியம் குறிப்பிடும் வழிபாட்டு முறையாம்.

      இதன் வழியாக, தொல்காப்பிய காலப் பழந்தமிழகத்தில் நில அடிப்படையில் கடவுள் கோட்பாடுகள் தோன்றியிருப்பினும் நிலைத்த மதமோ, சமயமோ தொல்காப்பியத்தில் காணப்படவேயில்லை. இடைக்காலச் சூழலே மதங்கள் தோன்றுவதற்குரிய காலமாக இருந்துள்ளன எனலாம். இதன் வழி நிலத்திற்கு ஏற்ப உருவ வழிபாடு, இயற்கை வழிபாடு ஆகிய இரண்டும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளன என்பதும் போர் மரபில் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தோன்றியிருக்கின்றன என்பதும் தொல்காப்பியத்தில் காணும் வழிபாட்டு மரபு கோட்பாடுகளாம்.

சான்றெண் விளக்கம்

 1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, திசு.பாலசுந்தரம் உரை.
 2. தமிழர் மதம், தேவநேயப்பாவாணர்.
 3. நடுகற்களும் நம்பிக்கைகளும், நா. வானமாமலை (ஆராய்ச்சி மலர்)
 • பா.பிரபு, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தமிழர் வரலாற்றில் கடவுள்கள் கடவுள் வழிபாடு பற்றிய தேடலில் சில குறிப்புகள்/மதத்தை பற்றிய உங்கள் கேள்விக்கு பதிலும்
எந்த பெரும் நூல்களை(தமிழ்) எடுத்தாலும் கடவுள் வாழ்த்து இல்லாமல் தொடங்கியேதே இல்லை ஆனால் நூால்களுக்கெல்லாம் ஆதியான தொல்காப்பியம் கடவுள் வாழ்த்து இல்லாமலேயே இருக்கிறது. ஆனால் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்துப்பற்றிக் குறிப்பிடுகிறது.
“கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’
என்பது தொல்காப்பிய நூற்பா. தொல்காப்பியத்தில் சமயம் அல்லது மதம் என்ற சொல் இல்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருள் என்ற ஒரு பொருள் படியான கடவுளை தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படவில்லை.
ஆனா் தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”

விளக்கம் மாயோன் மேவுவது காடுடைய நிலம்.சேயோன் மேவுவது மேகம் சூழ்ந்த மலை உள்ள நிலம் .தேவர் குல மன்னன் மேவுவது மிகுதியான நீர் உள்ள நிலம்.வருணன் மேவுவது மணல் நிறைந்த நிலம்.இந்த நான்கு நிலங்களும் முல்லை,குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர் சொன்ன முறைப்படி சொல்லப்படும். ‘மேய’ என்பதின பொருள் விரும்பிய என்பதாகும்
முல்லையும் குறிஞ்சியும் திரிந்து காணக்கிடத்த பாலைப் பகுதியில் “கொற்றவை” வழிபாடு நிகழ்ந்ததாக சிலப்பதிகாரம்தான் சொல்கிறது தொல்காப்பியத்தில் எந்த குறிப்பும் இல்லை இந்த கொற்றவைத்தான் இன்றைய பெண் தெய்வ வழிபாடு முன்னர் குறிப்பிட்ட காளிக்கெல்லாம் ஆதி இறைவி………..
அது போல ஆதி என்ற வார்த்தை எடுத்தால் எல்லாம் எங்கிருந்து தொடங்கிட்டு என பார்த்தால் உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக தொல்காப்பியம் சொல்லவில்லை.”நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று”அதாவது சமகால அராய்ச்சியாளர்களின் கூற்றை அன்றே தொல்காப்பியம் முன்மொழிகிறது…….
“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
ஆதலால் தான பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை இயற்கை வழிபாடு பின் நடுகல் வழிபாடாக மாறியது சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே வேரூன்றி இருந்தது நடுகல் வணக்கமாகும் அல்லது வழிபாடு……..
“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.”-
-புறநானூறு
அதாவது நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ/பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்று இருக்கிறது.
“தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
♥வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்♥
பேஎய்க் கொளீஇயள் இவள் எனப் படுதல்
நோதக் கன்றே தோழி…”-
-குறுந்தொகை
இந்த பாடல் தமிழர் கலாச்சாரம் , பண்பாடான சடங்கு ,தியாகம் , பலிகளை பற்றிி கூறுகின்றது .மேலும் இந்த பாடல்கள் மதச்சார்பின்மைக் கோட்பாடு(பாடலில் குறிக்கப்பட்ட பகுதி) அல்லது உலகியல்வாதம் அந்த காலத்தில் நிலைவியதை காட்டுகிறது……….
சங்க கால தமிழர்கள் ஆன்மீக சார்ந்த,தத்துவ ஞானம் சார்ந்த குறிப்பிட்ட உண்மைகளை அறிந்தது இருந்தார்கள் .உதாரணமாக உயர் உடம்பு பற்றிய கோட்பாடுகள் , ஊழ் , விதிகளின் முதன்மை, ஒரு புனிதமான நோக்கம் காரணத்திற்காக மரணிப்பது போன்றவைகளை.
அதுபோல நாம் சொல்லும் கோயில் எனும் சொல்் சங்க காலத்தில் ஆலயம் -நகர் ,கோயில் ,கோட்டம், புரை அல்லது தேவாலயம் என அழைக்கப்பட்டது .
கோவில் என்பது அரசன் வீடு என பொருள் படும் – கோ + இல்-.
‘வேறு பட்ட வினை ஓவத்து வெண்கோயில்’ என பட்டினப்பாலை கூறுகிறது இதன் கருத்து பல நிற பூச்சு ஓவியங்களை உடைய வெள்ளை அரச மாளிகை ஆகவே சங்க காலத்தில் இது அரச மாளிகைக்கான சொல் ஆகும் .
அரசனுக்கான இன்னும் ஒரு சொல் இறைவன். ஆகும் .
“நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசைத் தொழில் மாக்கள்” என பட்டினப்பாலயும் ,
“நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” எனபுறநானூறும் கூறுகிறது .மேலும் தொல்காப்பியர் மூவேந்தரை “புகழ் மூவர்” என அழைக்கிறார் பண்டைய தமிழர் அரசனையே கடவுளாக அல்லது கடவுளின் தூதுவராக வழி பட்டனர் என அறிய முடிகிறது ………..
இப்படி தொல்காப்பியம் முதல் பரிப்பாடல் முதலான நூல்களின் மூலம் பண்டைத்த தமிழர் வழிபாடு என்பது இயற்கையையும், சமகாலப் போர் வீரனயும் முன்னோரயும் மட்டுமே வழிபட்டு வந்தது எடுதுக்காட்டாக இன்றைய தென் மராட்டியம் தொட்டு தமிழகம் இலங்கை மலாயம் வரை உள்ள இந்துக்களை உங்கள் குலதெய்வம் யாரென கேட்டால் முருகனோ மாடனோ எல்லம்மாவோ இசக்கியே ஐயனாரோ முனீசுவரனோ என முன்னோர் வழிபாடுதான் (இந்த பதில்களை கேக்கமே்போது நான் வணங்கும் அந்தோனியாரும் ஜார்ஜியாரும் செபத்தியாரும் குழந்தை தெரசாவும் தாய் மரியும் தான் என் நினைவில் வந்து போவார்கள்) பதிலாக வரும்.இப்படி மதம்பீடிக்காமல் வாழ்ந்த நம் மண்ணில் இன்று மதங்கள் பரப்பும் அன்பும் அறமும் அன்றும் மக்களிடம் வியாபித்திருந்து தமிழரின் திருமறையாம் வள்ளுவத்தை படித்தால் அன்பை போற்றும் இடங்கள் பல இருக்கும்……..
ஆக அன்பும் அறணுமாய் மதமற்ற புனித நிலையில் வாழ்ந்த தமிழ்நிலத்தில் மதம் வந்ததெல்லாம் இன்றைய ஆப்பிரிக்காவில் இருந்து அதாவது இன்றைய துருக்கி எகிப்து இஸ்ரேல் போன்ற நிலப்பரப்பில் இருந்து ஆடு மாடுமேய்த்தபடி ஈரான் பலுச்சிஸ்தான் வழி கைபரும் போலனும் திறந்திருந்ததால் சிந்து சமவெளியல் குடிகொண்ட ஆரிய படையெடுப்புடன் தொடங்கியது தான் இந்தியாவின் மதமும் மதச்சண்டைகளும் …….
முதலில் சைவம் வந்தது அதன் பின்னே வைணவமும் வந்தது இங்கே சைவமும் வைணவமும் முட்டி மோதிக்கொண்டன தசாவதாரம் திரைப்படுத்தை தொடக்ககாட்சி அதைத்தான சித்தரித்திருக்கும்(அதில் நெப்போலியனை தமிழ் மன்னனாக காட்டி பெருமாளை கடலில் துாக்கி போட வைத்தது கூட கமலின் ஆரிய மேதாவிதனத்தின் உச்சநிலல).பின்னர் பௌத்தமும் சமணமும் வந்தது சோழ மன்னர்கள் துனையுடன் பௌத்தம் வளந்தது அதுபோல சமணம் சேர நாடு வரை பரவி இருந்தது குமரியின் சிதறால் மலைக்கோவில்தான் அதன் சான்று.முகமதியர்கள் கொண்டு வந்த இஸ்லாமும் வந்தது…………
கிறுத்தவம் வந்தது சமாதானத்தயும் அமைதியையும் போதித்த ஒரு மாசற்ற மார்க்கமாக திகழ்ந்து இன்று சுயநலவாதிகளிடம் சிக்கி கிறுத்துவ மதம் படும் பாட்டை பார்க்கும்போது இந்துத்வா வாதிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகும் பெரும் வாழ்வியல் முறையான இந்து மதம் தான் நியாபகம் வரும்……..
இன்று பெங்களூர் வரை சாத்தானிசம் எனும் இலுமினாட்டிகள் உருவாக்கிய சர்ச் ஆப் சாத்தான் எனும் மதம் வந்திருங்கியாகிவிட்டது.அந்த இரகசிய மதக்குழுவில் இருந்து மீண்டெழுந்த நன்பர் ஒருவர் சொன்ன கதைகளை கேட்டால் நெஞ்சடைத்துவிட்டது………..
ஆக மதங்களெல்லாம் காலமாற்றத்தில் உருவானதுதான் நான் மேலேச் சொன்ன சாத்தானிசத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் பண்டைத் தமிழரின் அன்பையும் அறத்தயும் தான் போதிக்கிறது.மதங்களை தெரிந்துக்கொள்வதில் தவறில்லை மதவெறியர்களாக இருப்பதுதான் தவறு……..
இஸ்லாத்தை படித்து பாருங்கள் அதன் வேதநூலான குரானை படித்தால் விவிலியம் படித்த ஒரு உணர்வு கிடைக்கும நாம் தியாகம் என வெறும் சொல்லாக சொல்வதை அவர்கள் ஈகைத்திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள் ஒரு மாத ஒறுத்தலோடு ஈகையை கடைப்பிடிப்பார்கள் ஈகைத்திருநாள் காலெங்களின் எனக்கு எம்பெருமான இயேசுநாதர் செயத தியாகம் தான் நினைவிற்கு வரும். நமது இறுதி தீர்ப்பு நாளுக்கும அவர்களது இறுதி தீர்ப்பு நாளுக்கும் பெரும் வித்தியாசம் ஒன்றுமில்லை…. ……….
அர்த்தமுள்ள இந்து மதம் படித்து பாருங்கள் இந்து மதம் புரியும் அவர்களின் கீதையை படித்து பாருங்கள் தர்மத்திறகு விளக்கும் கிடைக்கும்…..
மதத்தை மதமாக பார்க்காமல் வாழ்வியல் முறையாக பாருங்கள் எல்லாம மதமும் உரக்கச் சொல்லும் உண்மை புலப்புடும்……… அந்த உண்மை புரியாமல் தான் மாற்று மதங்களை மத நம்பிக்கையை குறை காண முடிகிறது அவர்களது நம்பிக்கை முறையை நகையாட முடிகிறது ஆனால் கண்ணை மூடிக்கொன்டு ஏஞ்சல் டிவியில் லயித்துக்கிடக்குறீர்கள் ஒருவேளை அதன் முதலாளி சாது சுந்தர் செல்வராஜ் கடவுள் சிடி குடுத்தார் என சொல்லித்திரியும் பொய்தான் உங்களை ரசிக்க வைக்கும்போல ……………
சத்திய கிறுத்ததுவர்களாக உங்களை நீங்கள் ஏமாற்றிக்கொண்டு ஒரு வட்டத்தினுள் சிக்கி கிடக்கும்போது உலக வாழ்க்கையில் ரசிக்க முடியாமல் போகும் விடயங்கள் பல உண்டு அதில் ஒன்று தான் மாற்று மதங்களின் அழகியல்.அந்த அழகியல் என்பது ஒருவித உணர்வு அது அகக்கண் திறந்தால் மட்டுமே காணக்கிடைக்கும் கண்கொள்ளா காட்சி.உங்களை அந்த உணர்வுக்குள் இழுத்துச்செல்லவில்லை தயவு செய்து அதை கொச்சைபடுத்தாதீர்கள் அவர்களது வழிபாட்டு முறைகளை பழித்துரைக்காதீர்கள்.அந்த அழகியலை ரசித்தவாரே கிறுத்தவனாக வாழ்ந்துக்கொள்கிறேன் அது பாவம் என்றோ அது பெரும்பிழையென்றோ நீங்கள் சொல்லலாம் ஆனால் தேவமகன் சொல்லமாட்டார்……….
மதங்களை பிடித்து தொங்குங்கள் பைபிளில் மட்டும் மூழ்கி கிடங்கள் ஆனால் மதவியாபாரிகளிடம் கவனமாக இருங்கள்……….

https://devapriyaji.activeboard.com/t66439415/topic-66439415/

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply