புலிக் கொடியோடு போராட்டம் செய்தவர்கள் மாவீரர்களுக்குப் பெரிய துரோகம் செய்கிறார்கள்

புலிக் கொடியோடு   போராட்டம் செய்தவர்கள்  மாவீரர்களுக்குப் பெரிய துரோகம் செய்கிறார்கள்

வணக்கம் அன்பான உறவுகளே!  இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமந்திரன் ஏற்படுத்திய மக்கள் சந்திப்பில் – அந்தச் சிறு கூட்டத்தில்  ஏற்பட்ட குழப்பநிலை – உண்மையிலே அந்த குழப்ப நிலை சம்பந்தமாக பலருக்கு உடன்பாடில்லை. இன்றைக்குப் புலம்பெயர் தேசத்திலே  உள்ள தமிழர்கள் சுமந்திரனை ஓடோட விரட்டினார்கள் என்ற பதிவுகளைப் பலர் பதிந்து கொண்டிருக்கிறார்களே ஒழிய உண்மையிலேயே  அந்தக் குழப்ப நிலையில் பலருக்கு உடன்பாடில்லை. ஆனால் அது தவறு என்றெழுதுவதற்குப் பலபேருக்கு விருப்பமில்லை. விருப்பமில்லை என்பதற்கான காரணம் என்னவென்றால் சுமந்திரனுக்கு  ஆதரவாக அந்தப் பதிவைப் போட்டால் தேசத்துரோகி,  காட்டிக் கொடுக்கிறவன் எனனனப் பலர்  விமரிசனம் செய்வார்கள்  என்ற பயத்திலேயே அது தவறு  என்று பதிவு செய்வதற்குப் பலருக்கு மனநிலை இல்லாத நிலையில் இன்றைக்கு இருக்கினம்.

ஆனால் அது உண்மையிலேயே நடந்த அந்தச் சம்பவம்  மிகவும் கேவலமானதொன்று. சுமந்திரனுக்கு எதிராக அவர்கள் பாவித்த வார்த்தைகள், வெளியிலே புலிக்கொடியோடு நின்று கொண்டு ஒரு பெண்மணி சுமந்திரன் கூட்டிக் கொடுத்தவன் அப்படியான தவறான வார்த்தைகள்,  தூசணங்கள், கள்ளன்,  திருடன் இப்படியான வார்த்தைகள்.

உண்மையிலேயே ஒரு விடயத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இன்றைக்கு இலங்கையில் இருக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் உண்மையில் எங்களுடைய மக்களிடத்தில் பற்று இருக்கிறதென்றால் மக்கள் வாக்களித்துத் தங்களுடைய தலைவர்களாக தெரிவு செய்தவர்கள்தான் அவர்கள்.  எங்கள் மக்கள் மீது பற்றிருக்குமே ஆனால்  அவர்கள் மீது கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு  மரியாதை ஒன்றிருக்க வேண்டும்.

முதல்லே எமது இனத்துக்கு ஆன பண்பு ஒன்று இருக்கிறது. எப்படி ஒருவரோடு பேசுவதென்ற பண்பு இருக்கிறது.  அந்த மரியாதை கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த இடத்திலே நடந்த  ஒரு விடயம் உண்மையிலே மிகவும் மனக் கசப்பான சம்பவமாகவே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைப் பார்த்தீர்கள் என்றால் புலிக் கொடியோடுதான் – வெளியிலே புலிக்கொடியோடு நின்றவர்கள்தான் –  அந்த எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.  

மற்றது இந்தப் புலிக் கொடி என்பது புனிதமானது. தமிழ் மக்களுக்காகப் பல வலிகளைச் சுமந்த கொடி அது.  அந்தக் கொடியை எல்லாரும் தூக்கி வைத்துக் கொண்டு யாரும் எதையும் செய்யலாம் என்று  ஒரு கருத்தைச் சொல்வதற்கு இன்றைக்கு  ஒரு தயக்க நிலையில்தான் மற்ற ஆட்கள் இருக்கினம்.  அந்தக் கொடிக்கு ஒரு மரியாதை இருக்கிறது.  அந்தக் கொடியில்லாமல் உங்களுடைய தனிப்பட்ட கருத்தை  –  உங்களது விருப்பத்தைச் சொல்வதாக இருந்தால்  கண்டிப்பாக அதற்கு  நிறைய எதிர்ப்பு வரும்.  புலிக் கொடியோடு நிற்பதால் அதற்கு தங்கள் எதிர்ப்பைச் சொல்ல முடியாமல் இருக்கிறது. 

மற்றது இந்தப் புலம்பெயர் தேசத்தில் இருக்கக் கூடிய பிரச்சனை  என்னவென்று சொன்னால் இங்கே இருந்து கொஞ்சக்  காசை அனுப்பிப் போட்டுத் தாங்கள் சொன்னபடி அங்குள்ள அரசியல்வாதிகள் மட்டுமல்ல அங்கிருக்கிற எல்லாரும் – அரசியல்வாதிகள் மட்டுமல்ல பள்ளிக்கூட அதிபர்களில் இருந்து சகலரும், கிராம சேவகர் (ஜி.எஸ்) என  எல்லாருமே தங்களுடைய சொல்லின்படி நடக்க வேண்டும் என்ற மனநோய் ஒன்று இந்த வெளிநாட்டில் இருக்கிறவர்களுக்கு இருக்கு. இந்த மனநோயில் இருந்து இந்த வெளிநாட்டுக்காரர்கள்  விடுபட வேண்டும். நாங்கள் சொல்கிறபடிதான் நீங்கள் நடக்க வேண்டும் என்று.

உண்மையில் வெளிநாட்டிலிருந்து கொண்டு இன்றைக்கு இந்தப் புலிக் கொடியோடு   போராட்டம் செய்தவர்கள்  இந்த மாவீரர்களுக்கும்  – உண்மையிலே நாட்டுக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்களுக்கும் செய்யக்கூடிய மிகப் பெரிய துரோகம்தான்  இப்படியான தவறான வழியில் கொண்டு போவது.   இங்கு இருக்கக் கூடிய  உண்மையிலே அந்த  வி.புலிகளுக்கு  ஆதரவாக இங்கு செயல்படக் கூடியவர்கள் இதனை நீங்கள் வலிமையாகக் கண்டிக்க வேண்டும். கண்டிக்காத பட்சத்தில் நீங்கள்தான் இத்தகைய வன்முறைகளைத்  தூண்டிவிடக் கூடியவர்களாக இருக்கிறீர்களோ என்ற எண்ணம் வர இடமிருக்கிறது.     

இங்கே இருக்கிற நீங்கள் சொல்கிறபடிதான் அவர்கள் அரசியல்  நடக்க  வேண்டும் என்றால் – இலங்கையில் நடைபெற வேண்டும் என்றால் – நீங்கள் இங்கிருந்து கொண்டு – சனநாயகமுறையில் உங்கள் சார்பாக ஒருவரை நிறுத்துங்கள். நாங்கள்தான் (வேட்பாளர்களை) நிறுத்தியிருக்கிறோம் என்று மக்களிடம் பிரசாரம் செய்யுங்கள்.  அவர் வென்றுவாராரா – மக்கள் ஆதரிகிறார்களா – என்று பரருங்கள்.  நாட்டிலே உள்ளவர்கள் ஆதரிக்கிறார்களா என்று பாருங்கள். இல்லை நீங்கள் மக்கள் மீது பற்று நாட்டின் மீது பற்றுள்ள காரணத்தினால்தான் இப்படியான போராட்டங்களை  – இப்படியான வார்த்தைகளை பயன்படுத்துவதாக இருந்தால்  – நீங்கள் இங்கிருந்து கொண்டு உழைக்கக் கூடிய வசதிகள் இருக்கு – உங்கள் பிள்ளைகள் எல்லாரையும் சொந்த நாட்டுக்கு அனுப்புங்கள். சொந்த நாட்டுக்கு அனுப்பிப்போட்டு  அங்கை வைத்துப் படிப்பியுங்கள்.  இங்கு இருந்து உழைக்கும் காசுகளை அங்கை அனுப்புங்கள். அப்படிச் செய்தால் ஆவது  ஓரளவு யோசிக்கலாம் –  நாட்டுப் பற்றினால்தான் நீங்கள்  செய்கிறீர்கள் என்று.

இப்படி எதுவுமே செய்ய முடியாத நீங்கள் இப்படித்  தவறான வேலைகளைச் செய்வது பலருக்கு  மன வேதனையை ஏற்படுத்தக் கூடிய நிலைமையாக இருக்கும். இன்றைக்கு சுமந்திரனின் அமெரிக்க வருகை  அதன் பிறகு கனடா  அவரைப்பற்றிய கன (பல)  விமர்சனங்கள் இருக்கு. அதெல்லாவற்றையும் விடுவம்.  

ஆனால் எங்களுடைய மக்கள் வாக்களித்து தெரிவு செய்தவர்கள் அவர்கள் விடக்கூடிய தவறுகள் என்ன? அவர்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படியான விடயங்களைச் செய்யலாம் என்று ஒரு மேசையில் இருந்து நீங்கள் கதைக்கலாம் வடிவா.

ஆனால் உங்களுக்கு அப்படியான எண்ணம் வரவில்லை என்றால் நீங்கள்தான் ஏதோ குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்.  இலங்கையில் இருக்கக் கூடிய அரசியல் தலைவர்களும்  புலம்பெயர் தேசத்திலுள்ள மக்களும் ஒன்றிணையக் கூடாது என்பதை  இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் யாரோ ஒருவர்  மிகத் தெளிவாக இருக்கிறார் என்பதை இப்படியான சம்பவங்கள் காட்டுகின்றன. 

உண்மையில் அங்கிருக்கிற மக்கள் மீதும் அந்த நாட்டின் மீதும் பற்றிருந்தால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இப்படியான சந்திப்புக்களில் வந்து அவர்கள் விடக் கூடிய தவறுகளை சுட்டிக் காட்டி இன்ன தவறுகளை விடாதீர்கள் என்று சொல்ல வேண்டும்.

மற்றது ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கக் கூடிய அரசியல்வாதிகளுக்கு –  எங்களுடைய அரசியல் வாதிகளுக்கு என்ன அதிகாரங்கள் இருக்கிறதென்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அண்மையில் மதிப்புக்குரிய அண்ணன் சிறிதரன் (நா.உ) அவர்களை ஒரு பொலீஸ் அதிகாரி           தள்ளிவிடக் கூடியதை வீடியோ பதிவுகளில் பார்க்கக் கூடியதாக இருந்தது. அப்ப எங்களுடைய பிரதிநிதிகளுக்கு  இருக்கக் கூடிய அதிகாரங்கள் என்னவென்பதை இப்படியான சம்பவங்கள் காட்டுகின்றன. இதை வைச்சுத்தான் அவர்களால் எதைச்  செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என்றதை நாங்கள் யோசிக்க வேண்டும். எங்கடை எண்ணப்படி புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்கள் எங்கள் எண்ணப்படிதான்  அவர்கள்  நடக்க வேண்டும் வேண்டும் என்றெல்லாம் நினைப்பது மிகவும் முட்டாள்த்தனமான செயல்.

தயவு செய்து இனிமேல் இப்படியான செயல்களை விட்டு எல்லோரையும் ஒன்றிணைக்கிற வழிகளை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் (எனது) தாழ்மையான வேண்டுகோளாக இருக்கிறது.

உங்களுடைய கருத்தென்ன உங்களுடைய செயல் என்னவென வெளிப்படையாகச் சொல்லி அவர்களோடு பேசி ஒரு ஒற்றுமையான வழிகளைச் செய்ய வேண்டுமேயொழிய இப்படிக் கேவலமான வார்த்தைகள் – வெளியிலே நின்று கூட்டிக் கொடுத்தான்   என்ற கேவலமான வார்த்தைகளைக் கேவலமான செயல்களைத் தயவு செய்து செய்யாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் ………..2009 ஆம் ஆண்டுக்கு முன்னால் புலிக்கொடியைப் பிடித்துக் கொண்டு கடைசிவரை நீங்கள் இப்படிச் செய்திருக்க முடியாது.

2009 க்குப் பிறகுதான் நீங்கள்  அந்தக் கொடியை வைத்து இப்படியான  தவறான  வழிக்கெல்லாம் பயன்படுத்துகிறீர்கள்.  உண்மையில் இது வேதனைக்குரிய விடயம் கண்டிக்கத்தக்க விடயம்.

இந்தக்  கொடியைத் தேவையில்லாமல் வைத்துக் கொண்டு அசிங்கமான வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள்,   தூசண வார்த்தைகள் பேசிக்கொண்டு  அந்தக் கொடியை கையிலே தூக்கிக் கொண்டு  திரிவது மிகவும் கேலமான ஒரு விடயம்.   தயவு செய்து இப்படிச் செய்யாதீர்கள். நன்றி. வணக்கம். (எழுத்துருவம் – கனடா நக்கீரன்)

https://www.facebook.com/KrishnaLiveTelecast/


file:///C:/Users/User/Videos/VID-20211123-WA0039.mp4

State_SCA (@State_SCA) | Twitter The latest Tweets from State_SCA (@State_SCA). Welcome to the official @StateDept account for the Bureau of South and Central Asian Affairs (SCA). RT ≠ endorsement twitter.com

TNA, GTF jointly call for more U.S. engagement 

https://www.dailymirror.lk/breaking_news/TNA-GTF-jointly-call-for-more-U-S-engagement/108-225498

————————————————————————————————–

GTF Press Release 

TNA-GTF joint delegation to US State Dept/ 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply