முதல் பார்வை: ஜெய் பீம் – பெருமித சினிமா!

முதல் பார்வை:  ஜெய் பீம் – பெருமித சினிமா!
jai-bhim-movie-review

காவல் நிலையத்திலிருந்து காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கப் போராடும் பழங்குடிப் பெண்ணின் போராட்டமே ‘ஜெய் பீம்’.

இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ராஜாகண்ணு (மணிகண்டன்). செங்கல் சூளையில் வேலை, பாம்பு பிடித்து வனப் பகுதியில் விடுதல் என்று தன் குடும்பத்தை முன்னேற்ற எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறார். அவரின் மனைவி செங்கேணி (லிஜோமோல் ஜோஸ்) கணவன் மீது உயிராய் இருக்கிறார். கல் வீடு கட்டித் தருவதே தன் வாழ்நாள் லட்சியம் என்று மனைவியிடம் சொல்கிறார் ராஜாகண்ணு. இந்நிலையில் ஊர்த் தலைவர் வீட்டில் பாம்பு புகுந்துவிட அதைப் பிடித்து வனத்தில் விடுகிறார். கல் வீடு கட்டும் கனவில் ஊர் மக்களுடன் இணைந்து மாவட்டம் தாண்டி செங்கல் சூளையில் வேலை செய்யச் செல்கிறார். பாம்பு பிடித்த இடத்தில் நகைகள் காணாமல் போய்விட, அவர் மீது திருட்டுப் பழி விழுகிறது.

ராஜாகண்ணுவின் நண்பர்கள், மனைவி, சகோதரி என அனைவரும் காவல்துறை அதிகாரிகளின் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள். ராஜாகண்ணுவும் போலீஸாரின் பயங்கரத் தாக்குதலால் பாதிக்கப்படுகிறார். பிறகு ராஜாகண்ணுவும், அவரது நண்பர்கள் இருட்டப்பன், மொசக்கட்டியும் காவல் நிலையத்திலிருந்து தப்பி விடுகின்றனர். இந்நிலையில் கணவனின் நிலை அறியாது கையறு நிலையில் கர்ப்பிணிப் பெண்ணாகத் தவிக்கிறார் செங்கேணி.

கணவனைக் கண்டுபிடிக்க முடிந்ததா, அவர் தப்பித்தது உண்மையா, நகைகள் திருட்டுக்கு யார் காரணம், உண்மையான குற்றவாளி யார் போன்ற கேள்விகளுக்கு உண்மையும் நேர்மையுமாக பதில் சொல்கிறது திரைக்கதை.

பொய் வழக்குகளில் கைது செய்யப்படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் குறித்து மிக காத்திரமான ஒரு படத்தைக் கொடுத்து, அவர்களின் வலிகளை உணர வைத்துள்ளார் இயக்குநர் த.செ.ஞானவேல். ‘கூட்டத்தில் ஒருத்தன்’படத்தை இயக்கிய அவர், 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது படமான ஜெய் பீம் மூலம் தடம் பதித்துள்ளார். 4 ஆண்டு உழைப்பு படத்தின் திரைக்கதையில் பளிச்சிடுகிறது.

காடு, மேடுகளில் சுற்றித் திரிந்து, கனவைக் கண்ணுக்குள் சுமந்து, கல்வீடு குறித்து மனைவிக்கு உறுதிமொழி தந்து, கடைசி வரை திருட்டுப் பழியை ஏற்க மறுத்து, காவல்துறையின் அத்துமீறிய வன்முறைகளில் அங்கம் சிதைந்து ராஜாகண்ணுவாக வாழ்ந்துள்ளார் மணிகண்டன். எலியைப் பிடிப்பதில் தொடங்கி பாம்பு பிடிப்பது வரை லாவகமான நடிப்பை வழங்கியுள்ளார். கான்செப்ட் சினிமா, சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் மணிகண்டனை நம்பி நாயகனாக்கலாம்.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக நடித்த லிஜோமோல் ஜோஸ் இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு செங்கேணியாகவே பாத்திர வார்ப்புக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் தரதரவென இழுத்துச் செல்லப்படும் கணவனைக் கண்டு கதறும்போதும், போலீஸாரின் அடக்குமுறைகளில் பயந்து ஒதுங்கும்போதும், டிஜிபி சமரசம் செய்ய முயலும்போதும் விடாது போராடும் குணத்தை வெளிப்படுத்தும்போதும் தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார்.

கமர்ஷியல் சினிமா பக்கமே கவனம் செலுத்திய சூர்யா அப்படியே யூ டர்ன் அடித்து சமூக அக்கறையுள்ள படத்தைத் தயாரித்ததும், சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்ததும் அவர் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத, மறக்கக்கூடாத பெரும்பேறு. நாயகி, டூயட், அடிதடி – சண்டைக்காட்சி என அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி திரைக்கதைக்குத் தேவையான நியாயங்களுக்குத் துணை நின்றதற்கே சூர்யாவைப் பாராட்டலாம். பரிசோதனை முயற்சிகள் தொடர்பான படங்களுக்கும் சூர்யாவின் பங்கு தொட்டுத் தொடரட்டும்.

பிரகாஷ்ராஜ், ஜெயப்பிரகாஷ் போன்ற சீனியர் நடிகர்களும் பக்குவமான நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறார்கள். சிரித்து மழுப்பியே கவனம் ஈர்க்கும் குரு சோம சுந்தரமும், சிவாய நமஹ சொல்லியே இருப்பை அர்த்தப்படுத்தும் எம்.எஸ்.பாஸ்கரும், எஸ்.ஐ.யாக எரிச்சல் மிக்க கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்யும் தமிழும் படத்தின் பக்க பலங்கள். இருட்டப்பனாக நடித்த சின்ராசுவும், மொசக்குட்டியாக நடித்த ராஜேந்திரனும், அறிவொளித் திட்ட ஆசிரியராக நடித்த ரஜிஷா விஜயனும், சிபிஎம் தோழர்களாக வரும் பவா செல்லத்துரை, காளீஸ்வரன் போன்றோரும், வழக்கறிஞர் பிரகதீஸ்வரன், சூப்பர் குட் சுப்பிரமணியும் அளவெடுத்தது போன்று மிகையில்லாமல் நடித்து மனதில் நிற்கிறார்கள்.

1995 காலகட்டம், குடிசைகள், செங்கல் சூளைகள், காவல் நிலையம், நீதிமன்றம் என அத்தனையிலும் கலை இயக்குநர் கதிரின் உழைப்பு தனித்துத் தெரிகின்றன. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு காவல் நிலைய வன்முறையை, லாக்கப் கொடூரத்தைப் பதைபதைக்க நம் கண்களுக்குள் கடத்துகிறது. ஷான் ரோல்டன் இசையில் செண்டு மல்லி தவிர அனைத்துப் பாடல்கள் பொருத்தமான இடத்தில் உணர்வுகளுக்கு வலு சேர்க்கின்றன. பிலோமின் ராஜ் செண்டு மல்லி பாடலை மட்டும் இயக்குநர் ஒத்துழைப்புடன் கத்தரித்திருக்கலாம்.

கொஞ்சம் தவறினாலும் பிரச்சார நெடி அடித்துவிடும் சூழலில், ஆவணப் பட சாயலை அப்படியே தவிர்த்து நேர்த்தியான திரைக்கதையால் உணர்வுபூர்வமான படத்தை இயக்கியுள்ளார் த.செ.ஞானவேல். உண்மைச் சம்பவத்தை இவ்வளவு உருக்கமாகவும், நெருக்கமாகவும் எடுக்க முடியுமா என்று ஆச்சரியப்படுத்துகிறார். கூடுதல் திரைக்கதை எழுதிய கிருத்திகாவும் பாராட்டப்பட வேண்டியவர்.

”சட்டம் வலிமையான ஆயுதம், யாரைக் காப்பாத்துறதுக்காக அதைப் பயன்படுத்துறோம்ங்கிறது முக்கியம்”, ”ஒரு ஆள் மேல ஒரு கேஸ் தான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேஸைப் போட்டு விடுங்க”, ”நீங்க பாராட்டும்போதுதான் இந்த கேஸைத் தப்பா ஹேண்டில் பண்ற மாதிரி தோணுது”, ”ஒரு உண்மையை ஒத்துக்கிறாங்கன்னா பல உண்மைகளை மறைக்கிறாங்கன்னு அர்த்தம்”, ”தப்பு பண்றவங்களுக்கு பதவி, பணம், சாதின்னு நிறைய இருக்கு… பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதானே இருக்கோம்”, ”ஜனநாயகத்தை நிலைநிறுத்தணும்னா சில நேரங்கள்ல சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்துதான் ஆகணும்”, ”இருக்கிறதுலயே ரொம்ப மோசமானவன் போலீஸ்தான்னு நினைக்கிற வக்கீலும், ரொம்ப மோசமானவன் வக்கீல்தான்னு நினைக்கிற போலீஸும் சேர்ந்து இந்த கேஸ்ல உண்மையைக் கண்டுபிடிக்கப் போறோம்” போன்ற அளவான, அழகான வசனங்கள் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.

அன்பை, ஒளியை, நம்பிக்கையை, இருளிலிருந்து இருளர்கள் வாழ்வுக்கு வெளிச்சம் போடும் பாதையை, இருளர் பாதுகாப்பு சங்கம் தொடங்கிய பின்னணியைப் பெரும் உழைப்புடன் பதிவு செய்த விதம் செம்ம. அந்த வகையில் ‘ஜெய் பீம்’ நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு சிறந்த சினிமாவாக உயர்ந்து நிற்கிறது.

https://www.hindutamil.in/news/ott-platform/ott-review/733055-jai-bhim-movie-review-3.htmlhttps://www.hindutamil.in/news/ott-platform/ott-review/733055-jai-bhim-movie-review-3.html


Viruthagiri A

ஜெய் பீம்…பல நண்பர்கள் பாராட்டிய ஜெய் பீம் திரைப்படம் நேற்று பார்த்தேன்….பாராட்ட – விவரிக்க – வார்த்தைகள் இல்லை…அற்புதமான .- அருமையான காவியம்… இது கதையல்ல நிஜம்… உண்மை… நடந்த கதை…தமிழ்த் திரைப்பட வரலாற்றில் யாரும் துணிந்து எடுக்க முடியாத கதை… வெறும் கதை மட்டுமல்ல… விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை…. போராட்டங்கள்… அவலங்கள் மனதை நெகிழ – கனக்க வைக்கின்றன…தயாரிப்பாளர் – இயக்குநர் – நடிக நடிகைகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் – வாழ்த்துக்கள்…சரி… இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சிலர் ஏன் பொங்குகிறார்கள்… எதிர்க்கிறார்கள்… அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் – சாதி வெறி தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

தன்னை அறிவு ஜீவி – இலக்கிய வாதி – ஊடகவியலார் – என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரைவேக்காடுகளின் பதிவுகளைப் படித்தேன்… வேடிக்கையாக இருந்தது… இப்படிப்பட்ட கூ முட்டை மாங்கா மடையர்களின் கருத்துக்கள் எந்த மாற்றத்தையும் ’ஏற்படுத்தி விட முடியாது என்பது உண்மை…. (மாங்காய் என்றவுடன் எப்படி எங்கள் சின்னத்தை சொல்லலாம் என்று கூட கொதிப்பார்கள்)அவர்களுக்கு கடைசியில் பதில் சொல்லலாம்…முதலில் கதைக்கு வருவோம்…

முதல் காட்சியே – சிறையில் இருந்து வெளி வருபவர்களை சாதி கேட்டு – நீ அப்படி நில்… நீ அப்படி போ – என்னும் காவலர் பிரிப்பதில் இருந்தே – சாதி வெறியர்களையும் – இந்த சமூகத்தையும் செருப்பால் அடிப்பது போல் இருக்கிறது… சபாஷ்… சரியான காட்சி… காரணம் எல்லா சாதியானும் குற்றம் புரிந்துதான் உள்ளே வருகிறார்கள்… இதுதான் யதார்த்தம்…

இருளர் சமூகம்… பின்தங்கிய சமூகம்… கல்வி அறிவு இல்லை… எலி பாம்பு பிடிப்பவர்கள் …ஒட்டைக் குடிசை.. அதற்குள்ளும்… காதல் மகிழ்வு பாசம்….நகை திருடியதாக குற்றச்சாட்டு… பிடித்து வருகிறார்கள்.. போலீஸ் லாக் அப்… பார்ப்பவர்களை உறைய வைக்கும் அடி… சித்ரவதை… இம்சைகள்… கொடுமைகள்…. அவர்கள் சார்ந்த பெண்களை மானபங்கம்… இவை அனைத்தும் வெறும் நடிப்பல்ல… உண்மை… காவல் நிலையங்களில் நடப்பவை… இல்லை என்று சொல்ல முடியுமா?விளாத்திகுளம் காவல் நிலைய மரணங்கள் ஒன்று போதாதா? அவர்களின் அராஜகங்களை அட்டூழியங்களைப் பறைசாற்ற…? அந்த ஏழை மக்களுக்காள வக்கீலாக வருகிறார் சந்துரு என்றும் சூர்யா…

ஒரு வழக்கில் எத்தனை தில்லுமுல்லுகள்… கோல்மால்கள்… நாடகங்கள்…அத்தனையையும் துப்பறிந்து உடைக்கிறார் போராளி வழக்கறிஞர்…இறுதியில் நியாயம் வெல்கிறது… வழக்கறிஞரின் போராட்டம் வெற்றி பெறுகிறது… பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது… அரசு அங்கிகாரம் கிடைக்கிறது…இழப்பீடு கிடைக்கிறது… இது ஒரு உண்மைக் கதை என்பது இருக்கட்டும்…எத்தனை ஆயிரம் குற்றமற்றவர்கள் சிறைகளில் விசாரணைக் கைதிகள் என்ற பெயரில் அடைத்து வைக்கப் பட்டிருக் கிறார்கள்? அவர்களின் குடும்ப கதி என்ன? இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்—இந்தப் படத்தில் காவல் துறை உயர் அதிகாரி பிரகாஷ் ராஜ் சொல்வார் — ஈவு இரக்கம் இல்லாமல் குற்றம் செய்பவர்களை அடித்துதான் உண்மையை வரவழைக்க வேண்டியுள்ளது….

இதுவும் சிந்திக்க வேண்டிய உண்மை.குழந்தை கடத்துபவர்களை – கடத்தி ஊனமாக்கி பிச்சை எடுக்க வைப்பவர்களை – கொலை கொள்ளை வழிப்பறிக் காரர்களை….பாலியல் வன்புரை செய்பவர்களை… எப்படி அன்போடு நடத்த முடியும்? குற்றத்தை அறிய முடியும்?இதுவும் நியாயமான நல்ல கேள்வி… இதற்கு பதில்…சட்டங்கள் படித்தவர்களும் – மனநல மருத்துவர்களும் சமுக ஆர்வலர்களும்தான் சொல்ல வேண்டும்….

ஆனால் சிறைக் கூடங்களில் காவல் நிலையங்களில் அப்பாவிகள் ஏழை எளிய மக்கள் துன்பறுத்தப்படுவது தர்ன் கொடுமைப்படுத்தப்படுவதுதான் அதிகம் நடக்கிறது. கம்யூனிஸ்டுகள் போராடுவது ஏழை எளிய மக்களுக்காகத்தான்… அதை நாம் போற்றுவோம்…சரி…இனி குரைப்பவர்களைப் பற்றி பார்ப்போம்…ஜெய் ஸ்ரீராம் கோஷங்களுக்கு அடி வருடிகள்தான் இந்த ஜெய் பீம் படத்தை எதிர்க்கிறார்கள்… காரணம் சாதி வெறி…..குரு பெயர் இருந்தால் – இவர்கள் கட்சி சின்னம் இருந்தால் இவர்களுக்கு ஏன் பற்றி எரிகிறது? வன்மம் என்று எழுதுகிறார்கள் – எந்த ஜென்மத்திலும் திருந்தாதவர்கள்….சமூக அவலங்களை காட்சிப்படுத்துவது குற்றமா? என்ன மாற்றம் வரப் போகிறது என்று கேட்கிறார்கள்? வீரப்பன் படத்தால் வந்த மாற்றத்தை சொல்ல வேண்டும்.. குறி சொல்லும் கோவிலுக்குள் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் வந்த விதம் சொல்லுங்களேன்… அரசியலில் பச்சோந்தியாக மாறி அணிக்கு அணி தாவிய கொள்கை பற்றி சொல்லுங்களேன்… அதற்கெல்லாம் பம்மி விடுவார்கள்…தாழ்த்தப்பட்டவர்கள் கொத்தடிமைகளாகவே வாழ வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை… கனவு…. அப்படி இல்லலை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எழுத வேண்டும்?

ஆண்ட பரம்பரை….. பரம்பரை என்பதை எல்லாம் விட்டு விட்டு எல்லோரும் ஒரு மக்கள் – ஒரு இனம் – ஒரு சாதி – என்பதற்காகத்தானே போராட வேண்டும்? உன் கட்சியிலேயே எத்தனை பிரிவுகள்? சண்டைகள் – சச்சரவுகள் அடிதடிகள்…. மேடையில் சமூக நீதி – சமத்துவம் – வெங்காயம் பேசி எழுதி என்ன பயன்? உண்மையிலேயே மக்கள் நலன் என்றால் சாதிக் கட்சியைத் துறந்து வெளி வர வேண்டும் அல்லவா? வர முடியாது… காரணம் சாதிக்கு அடிமை…ஜெய் பீம் பற்றி என் நண்பர் காவல் துறையில் துணை ஆணையராக இருந்து ஒய்வு பெற்ற திரு தாமோதரன் நாராயணசாமி எழுதுகிறார் – “ஜெய் பீம் படம் பார்த்தேன்..மிகச் சிறந்த படம்… சூர்யா மிகவும் பாராட்டிற்குறியவர்..

எவ்வளவு யதார்த்தமாக தாயாரித்து நடித்திருக்கிறார்…இவர்தான் நடிகருக்கான உச்சபட்ச விருதுக்கு தகுதியானவர்… அரசியல் வசனம் பேசுவதில்லை… 100 பேரை ஒரே ஆளாக அடிப்பதில்லை துப்பாக்கியில் இருந்து சீறி வரும் குண்டை கையால் பிடிப்பதில்லை…பேராசிரியர் – பட்டிமன்ற பேச்சாளர் – திரு சிவகாசி ராமச்சந்திரன் அய்யா எழுதுகிறார் –ஜெய் பீம் திரைப்படம் பார்த்தேன்…அந்தப் படம் பற்றி கம்யூனிசியத்தை மையமாக இருக்கக் கூடிய படத்திற்கு ஜெய் பீம் என்று ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்கிற கிறுக்கர்களும்,இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லுகிற சூர்யா ஜெய்பீம் படத்தை ஏன் 5 மொழிகளில் வெளியிட்டார் என்று கேட்கிற பைத்தியக்காரர்களுக்கும் ஒரு பணிவான விண்ணப்பம் –

ஒன்று அழக் கற்றுக் கொள்ளுங்கள்…அல்லது அழ வைக்காமல் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..ஒன்று மனிதனாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்இல்லை மனிதர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்ஞானவேலை மதிக்கத் தெரியாத நீங்கள் கந்தர் சஷ்டி கவசத்தை காப்பாற்றப் புறப்பட்டததுதான் உச்ச பட்ச நகைச் சுவை….கடைசியாக ஒரு வார்த்தை… ஜெய்பீம் என்றால் அலற வேண்டாம்… வயிறு எரிய வேண்டாம்… பொங்க வேண்டாம்… ஜால்ரா போட வேண்டாம் – ஜெய்பீம் என்றால் – ஒளி…ஜெய்பீம் என்றால் அன்புஜெய்பீம் என்றால் இருளில் இருந்துவெளிச்சத்திற்குப் பயணம்…ஜெய்பீம் என்றால்பல கோடி மக்களின் கண்ணீர்த் துளிகள்…—– மராத்திய கவிதை…குரைப்பவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்…

https://www.hindutamil.in/news/ott-platform/ott-review/733055-jai-bhim-movie-review-3.html

David Krishnan

4 ம  · படம்…ஐெய் பீம்…♥இது அரசியல் படமாசத்தியமாக இல்லைஇது ஒரு சமூகபாடம்….படத்தின் நாயகன் சூரியாஅடிதடி நாயகன் அமைதியாகநடித்துள்ளார் குறை சொல்லமுடியாதளவுக்கு நடிப்புதிறன்.

நாயகி யாரய்யா இந்த பெண்அழுவதில் பேசுவதில் நேரத்தைபோக்காது கண்களாலேயே படம்பார்ப்போர் கண்களை குளமாகமாற்றுகிறார் மீண்டும் ஒரு சரிதாசினிமாதுறைக்கு கிடைத்துள்ளார்..வில்லன் தமரைகனியை நினைவுபடுத்துகிறார் ஆனால் அவர் நடிப்பைதிருடாமல் தன்வழி தனிவழியாகசெல்லவே விரும்பி நடிக்கிறார் இவர்பொது இடங்களில் மக்களிடம் சொலடி கல்லடி வாங்கபோவது உறுதிஇதுவே இவரது நடிப்புக்கான சிறந்தவிருதாக அமையும்……பிரகாஸ்ராஐ் முன்னநாள் காவல்துறைஅதிகாரி மோகனதாஸை நினைவுபடுத்துகிறார் அருமை…மணிகண்டன் நடிக்கவில்லைசாமிகண்ணாக வாழ்ந்துள்ளார்…கண்டிப்பாக விருதுகள் வரலாம்.

கோடிசெலவுகள் இன்றி கேடிஅரசியல்வாதிகள் இல்லாமல் மிக மிகஅருமையான ஒரு சமூகநீதி படம் இசை இயற்க்கையுடன் கலந்துவிட்டதால் யார் இந்த இசைவேந்தர்என தேட தோன்றுகிறது அருமையானஇசையும் பாடலும்…. இத்தனை பேரையும் தனதுகட்டுபாட்டில் வைத்து தான்விரும்பியதை சேதாரம் இன்றி அருமையான ஒரு படத்தைஉருவாக்கியமை இயக்குணர்ஞானவேல் பெருமை கொள்ளலாம்சார் சென்னைக்கு வராமல்கிராமபுற படங்கள் எடுங்கஎன சொல்ல தோன்றுகிறது..ஔிபதிவு… நாடுநாடாக திரியாதுநாலு சுவருக்குள் நாலு கண்களைவைத்து நாலே நிமிடத்தில் மிக மிகஅழகான ஒரு காதலை ஔிபதிவாளர்படத்துக்கு வலு சேர்த்துள்ளார்…அட போங்கடா அருமையான படம். அம்முட்டுதான் இது விமர்சனம் அல்லஎனது பார்வை மட்டுமே.

38Jeevan Prasad, Sivaji Elayathamby மற்றும் 36 பேர்47 கருத்துகள்விரும்புகருத்துத் தெரிவி

——————————————————————————————————————–

About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply