மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கடந்துள்ளது
நக்கீரன்
தமிழ்க் கடல் மறைமலை அடிகளால் திருவள்ளுவர் ஆண்டு 1947 இல் (ஆங்கில ஆண்டு 1916) தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் திருவள்ளுவர் ஆண்டு 2047 (2016)இல் நூற்றாண்டைக் கண்டுள்ளது. இந்த நூற்றாண்டு விழா தமிழகத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்கள், பேரவைகள் மாநாடுகள், பட்டிமன்றங்கள் நடத்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.
மறைமலை அடிகள் “தனித்தமிழ்த் தந்தை” எனப் போற்றப்படுகிறார். மறைமலை அடிகளாரின் இயற்பெயர் தேவாசலம். பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் “மறைமலை” என்று மாற்றிக்கொண்டார்.
மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக இருந்த வெ.நாராயணசாமிப் பிள்ளையின் நட்பு இவரது தமிழ் அறிவுக்குப் பெரிதும் உதவியது. மாதம்தோறும் ஐம்பது ரூபாய்க்கு புதிய நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மறைமலையடிகள். இப்படித் தானே ஒரு நூலகமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றையும் அமைத்துத் தந்தார். பின்னாளில் பெரிய அளவில் “மறைமலையடிகள் நூலகம்” அமைய அது உதவியது.
மறைமலை அடிகளார் மாமன் மகளான செளந்தரவல்லியை மணமுடித்தார். அவர்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகள். மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளையின் காப்பியத்திற்குப் பாடல்களாலேயே நயவுரை எழுதி அனுப்பினார். சுந்தரம்பிள்ளையை அது மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக உண்டான நட்பு மறைமலை அடிகளாரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திருவனந்தபுரத்தில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் அடிகளுக்குச் சுந்தரம்பிள்ளை மூலம் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆனால், சில காலம் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகிவிட்டார்.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட மறைமலையடிகள், ஒரு சைவசிந்தாந்தி. சைவ சமயத்தின் கொள்கையில் அளவிட முடியாத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இலங்கைக்குச் சென்று பலமுறை சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1911இல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் சமரச சன்மார்க்க நிலையத்தைத் தோற்றுவித்து சமயப்பணிகளைச் செய்துவந்தார்.
தமிழ், சைவம் இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதினார் மறைமலையடிகள். வட மொழியில் கற்றுத் தேர்ந்த அடிகளார் முண்டகம், ஆரண்யகம், ஈசாவாசி, கேனோ தைத்தீரியம்,
அதர்வசிகை, கைவல்யம், சாந்தோக்கியம், சுவேதாசுவதாரம், போன்ற உபநிடத நூல்களைக் கற்றதோடு மட்டுமன்றி அவற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகளும் எழுதினார். மறைமலை அடிகள் மூடப்பழக்க வழக்கங்களும், போலிச் சடங்குகளும் அறவே ஒழிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். உயிர்ப் பலியை கடிந்ததோடு சமுதாயம் நன்னெறியில் உய்வதற்குச் சமய உணர்வு இன்றியமையாதது என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.
தமிழ் மொழியிலேயே எண்ணற்ற சொற்கள் இருக்க, வடமொழிச் சொற்கள் தமிழின் இடத்தைப் பிடித்துக் கொள்ள எப்படி முடிந்தது? எதனால் இப்படி நடந்தது? தமிழில் சொற்களுக்குப் பஞ்சமா? பஞ்சம் இல்லை. தமிழ் மொழியை அதன் அழகிய வடிவத்துடன் காக்க வேண்டும் என்ற எண்ணத்துக்குத்தான் பஞ்சம் இருந்தது.
தனித்தமிழ் என்றால் என்ன? தனித்தமிழ் ஏன்? எதற்கு? தனித்தமிழின் வரலாறு யாது? தனித்தமிழ் வெற்றி பெற்றுள்ளதா? தற்காலத்திற்குத் தனித்தமிழ் பொருந்துமா? தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா?
இப்படியாகத் தனித்தமிழ் பற்றிய பல்வேறு ஐயங்கங்கள் தமிழரிடையே நிலவி வருகின்றன. குறிப்பாக, தமிழ் கற்றோர், கற்பிப்போரிடையே இத்தகைய ஐயப்பாடுகள் நிலவி வருகிறது. தமிழ்மொழியைப் படிப்பிக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பாடநூலாசிரியர்கள், எழுத்தாளர்கள், பாவலர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ‘தனித்தமிழ்’ என்பதைப் பெரும்பாலும் தவறாகவே கணித்து வைத்துள்ளனர்.
தமிழுடன் சமக்கிருத மொழியைக் கலந்து பேசிய மணிப்பிரவாள நடை கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்றுண்டு. அதனால் தமிழ்ச் சொற்கள் மெல்ல மெல்லச் சிதைந்து வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களின் இடத்தை வலுவாகப் பிடித்துக் கொண்டபோது அதனை மாற்றியமைக்க முனைந்த பலருள் மறைமலை அடிகளார் மிகவும் முக்கியமானவர் ஆவார். இவர் மனதில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியதற்கு முக்கிய காரணம் இவருடைய மகள் நீலாம்பிகை அம்மையார் ஆவர்.
ஒரு நாள் தோட்டத்தில் மலைமலை அடிகளார் நீலாம்பிகையுடன் நடந்து கொண்டிருந்தார். தமிழ்ப் பாடல்களை இசைக்கவும் வல்லவர் அவர். அப்படித்தான் அன்று, மகளிடம் வள்ளலாரின் பாடலைப் பாடிக் கொண்டிருந்த போது அப்பாடலில் தேகம் என்ற சொல் வந்தது. அடிகள் சொன்னார்: தேகம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக யாக்கை என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமே என்று மகளிடம் கூறினார்.
தனித்தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்று உறுதி பூணவேண்டியது நம் கடமை என்று தோன்றியது அடிகளாரின் மகளான நீலாம்பிகைக்கு. மகளின் எண்ணம் தந்தையாரையும் தொற்றிக்கொண்டது. தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கும் எண்ணம் அவர் மனதில் அன்று தோன்றியது. அது முதல் அடிகளாரின் எல்லாத் தமிழ்ப்பணிகளுக்கும் துணைநின்று அவரை ஊக்குவித்தவர் அவரது மகளே. ஆவர். மொழியை அவரவர் விருப்பபடியெல்லாம் மாற்றிக்கொள்ளும்படியான நிலை இருக்கக்கூடாது…..அதற்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்று அடிகளார் வலியுறுத்தினார். அப்படி 1916 ஆம் ஆண்டு தோன்றியதுதான் தனித்தமிழ் இயக்கம்.
மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆளுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.
மறைமலையடிகள் பெரும்பாலும் எதிர்நீச்சல் அடித்தே வெற்றி கண்டவர். தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த போது கடுமையான கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு என்பதனாலேயே “தனித்தமிழ்” என்றார் அடிகள். ஆனால் இதை எதிர்த்த சிலர், தனித்தமிழ் என்பது தனித்து அமிழ்கின்ற அதாவது மூழ்கிப்போகிற மொழி என்றே பொருள் தருவதாக உள்ளது. அப்படியென்றால் தமிழ் தனித்து செயலாற்றினால் மூழ்கிப் போய்விடுமா? என்று ஏளனம் செய்தனர். ஆனால் அடிகள் தன் சீரிய செயல்பாட்டினால் எள்ளி நகைத்தவரின் கூற்றுக்களை பொய்யாக்கிக் காட்டினார்.
இவர் 54 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுவதற்கு இவரே காரணமாக இருந்தார். தன் வாழ்நாளில் சேகரித்த நான்காயிரம் நூல்களைக் கொண்டு “மணிமொழி நூல் நிலையம்” என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.
முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை
தமிழர் மதம்
பழந்தமிழ்க் கொள்கையே சைவம்
சிறுவருக்கான செந்தமிழ் நூல்
மாணிக்கவாசகர் காலமும், வரலாறும்
மரணத்தின் பின் மனிதர் நிலை
தனித்தமிழ்மாட்சி
பண்டைக்காலத் தமிழரும், ஆரியரும்
உரைமணிக்கோவை
இவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்
சமயநெறி, இலக்கியத்தில் தாழ்த்தப்பட்டோர் என அழைக்கப்பட்டவர்கள் பின்தங்கியிருப்பதைக் கண்டு அவர்களை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார். அவர்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கக் கூடாது; ஆலயங்களிலும் பள்ளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றெல்லாம் பேசி அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்வர் மறைமலை அடிகள்.
1937 இல் இராஜாசி முதல்வராக பதவி வகித்த போது உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கினார். இதைக் கண்டு தமிழகம் வெகுண்டெழுந்தது. அப்போது இந்தியை எதிர்ப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார் அடிகளார். எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராய் இல்லாத, தமிழையே மூச்சாக கொண்ட அடிகள், இந்தி எதிர்ப்புத் தொடர்பான மறியலில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
தமிழ்மொழி சீர்கெட்டு தாழ்வுற்று விளங்கிய காலத்தில் வீறுகொண்டு எழுந்து பணியாற்றினார் அடிகள். வடமொழியை எதிர்க்காமல், வடமொழிக் கலப்பை எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் கடவுள் வழிவந்த கற்பனைக் கதைகளை எதிர்த்து நடுநிலை தவறாமல், பிறழாமல் வாழ்ந்து காட்டிய அடிகளின் சித்தாந்தத்தை இன்றைய தலைமுறை கண்டிப்பாகத் தேடிப்பிடித்துப் படிப்பதும், அவர் நெறிமுறைகளைக் கடைபிடிப்பதும் மிகவும் அவசியம்.
மறைமலை அடிகள் “தனித்தமிழ்த் தந்தை” எனப் போற்றப்படுகிறார். மறைமலை அடிகள். மறைமலை அடிகளாரின் இயற்பெயர் தேவாசலம். பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் “மறைமலை” என்று மாற்றிக்கொண்டார்.
மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக இருந்த வெ.நாராயணசாமிப் பிள்ளையின் நட்பு இவரது தமிழ் அறிவுக்குப் பெரிதும் உதவியது. மாதம்தோறும் ஐம்பது ரூபாய்க்கு புதிய நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மறைமலையடிகள். இப்படி தானே ஒரு நூலகமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றையும் அமைத்துத் தந்தார். பின்னாளில் பெரிய அளவில் “மறைமலையடிகள் நூலகம்” அமைய அது உதவியது.
மாமன் மகளான செளந்தரவல்லியை மணமுடித்தார். அவர்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகள். மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளையின் காப்பியத்திற்குப் பாடல்களாலேயே நயவுரை எழுதி அனுப்பினார் மறைமலை. சுந்தரம்பிள்ளையை அது மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக உண்டான நட்பு மறைமலையின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திருவனந்தபுரத்தில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் அடிகளுக்குச் சுந்தரம்பிள்ளை மூலம் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆனால், சில காலம் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகிவிட்டார்.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட மறைமலையடிகள், ஒரு சைவசிந்தாந்தி. சைவ சமயத்தின் கொள்கையில் அளவிட முடியாத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இலங்கைக்குச் சென்று பலமுறை சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1911இல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் “சமரச சன்மார்க்க நிலையத்தைத் தோற்றுவித்து சமயப்பணிகளைச் செய்துவந்தார்.
தமிழ், சைவம் இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதினார் மறைமலையடிகள். வட மொழியில் கற்றுத் தேர்ந்த அடிகளார் முண்டகம், ஆரண்யகம், ஈசாவாசி, கேனோ தைத்தீரியம்,
அதர்வசிகை, கைவல்யம், சாந்தோக்கியம், சுவேதாசுவதாரம், போன்ற உபநிடத நூல்களைக் கற்றதோடு மட்டுமன்றி அவற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகளும் எழுதினார். மறைமலை அடிகள் மூடப்பழக்க வழக்கங்களும், போலிச் சடங்குகளும் அறவே ஒழிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். உயிர்ப் பலியை கடிந்ததோடு சமுதாயம் நன்னெறியில் உய்வதற்குச் சமய உணர்வு இன்றியமையாதது என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.
தமிழ் மொழியிலேயே எண்ணற்ற சொற்கள் இருக்க, வடமொழிச் சொற்கள் தமிழின் இடத்தைப் பிடித்துக் கொள்ள எப்படி முடிந்தது? எதனால் இப்படி நடந்தது? தமிழில் சொற்களுக்குப் பஞ்சமா? பஞ்சம் இல்லை. தமிழ் மொழியை அதன் அழகிய வடிவத்துடன் காக்க வேண்டும் என்ற எண்ணத்துக்குத்தான் பஞ்சம் இருந்தது.
தமிழுடன் சமக்கிருத மொழியைக் கலந்து பேசிய மணிப்பிரவாள நடை கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்றுண்டு. அதனால் தமிழ்ச் சொற்கள் மெல்ல மெல்லச் சிதைந்து வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களின் இடத்தை வலுவாகப் பிடித்துக் கொண்டபோது அதனை மாற்றியமைக்க முனைந்த பலருள் மறைமலை அடிகளார் மிகவும் முக்கியமானவர் ஆவார். இவர் மனதில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியதற்கு முக்கிய காரணம் இவருடைய மகள் நீலாம்பிகை அம்மையார்.
ஒரு நாள் தோட்டத்தில் மலைமலை அடிகளார் நீலாம்பிகையுடன் நடந்து கொண்டிருந்தார். தமிழ்ப் பாடல்களை இசைக்கவும் வல்லவர் அவர். அப்படித்தான் அன்று, மகளிடம் வள்ளலாரின் பாடலைப் பாடிக் கொண்டிருந்த போது அப்பாடலில் தேகம் என்ற சொல் வந்தது. அடிகள் சொன்னார்: தேகம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக யாக்கை என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமே என்று மகளிடம் கூறினார்.
தனித்தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்று உறுதி பூணவேண்டியது நம் கடமை என்று தோன்றியது அடிகளாரின் மகளான நீலாம்பிகைக்கு..மகளின் எண்ணம் தந்தையாரையும் தொற்றிக்கொண்டது. தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கும் எண்ணம் அவர் மனதில் அன்று தோன்றியது; அது முதல் அடிகளாரின் எல்லாத் தமிழ்ப்பணிகளுக்கும் துணைநின்று அவரை ஊக்குவித்தவர் அவரது மகளே. ஆவர். மொழியை அவரவர் விருப்பபடியெல்லாம் மாற்றிக்கொள்ளும்படியான நிலை இருக்கக்கூடாது…..அதற்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்று அடிகளார் வலியுறுத்தினார். அப்படி 1916 ஆம் ஆண்டு தோன்றியதுதான் தனித்தமிழ் இயக்கம்.
மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.
மறைமலையடிகள் பெரும்பாலும் எதிர்நீச்சல் அடித்தே வெற்றி கண்டவர். தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த போது கடுமையான கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு என்பதனாலேயே “தனித்தமிழ்” என்றார் அடிகள். ஆனால் இதை எதிர்த்த சிலர், தனித்தமிழ் என்பது தனித்து அமிழ்கின்ற அதாவது மூழ்கிப்போகிற மொழி என்றே பொருள் தருவதாக உள்ளது. அப்படியென்றால் தமிழ் தனித்து செயலாற்றினால் மூழ்கிப் போய்விடுமா! என்று ஏளனம் செய்தனர். ஆனால் அடிகள் தன் சீரிய செயல்பாட்டினால் எள்ளி நகைத்தவரின் கூற்றுக்களை பொய்யாக்கிக் காட்டினார்.
இவர் 54 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுவதற்கு இவரே காரணமாக இருந்தார். தன் வாழ்நாளில் சேகரித்த நான்காயிரம் நூல்களைக் கொண்டு “மணிமொழி நூல் நிலையம்” என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.
முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை
தமிழர் மதம்
பழந்தமிழ்க் கொள்கையே சைவம்
சிறுவருக்கான செந்தமிழ் நூல்
மாணிக்கவாசகர் காலமும், வரலாறும்
மரணத்தின் பின் மனிதர் நிலை
தனித்தமிழ்மாட்சி
பண்டைக்காலத் தமிழரும், ஆரியரும்
உரைமணிக்கோவை
இவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்.
சமயநெறி, இலக்கியத்தில் தாழ்த்தப்பட்டோர் என அழைக்கப்பட்டவர்கள் பின்தங்கியிருப்பதைக் கண்டு அவர்களை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார். அவர்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கக் கூடாது; ஆலயங்களிலும் பள்ளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றெல்லாம் பேசி அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்வர் மறைமலை அடிகள்.
1937 இல் இராஜாசி முதல்வராக பதவி வகித்த போது உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினார். இதைக் கண்டு தமிழகம் வெகுண்டெழுந்தது. அப்போது இந்தியை எதிர்ப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார் அடிகளார். எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராய் இல்லாத, தமிழையே மூச்சாக கொண்ட அடிகள், இந்தி எதிர்ப்புத் தொடர்பான மறியலில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
தமிழ்மொழி சீர்கெட்டு தாழ்வுற்று விளங்கிய காலத்தில் வீறுகொண்டு எழுந்து பணியாற்றினார் அடிகள். வடமொழியை எதிர்க்காமல், வடமொழிக் கலப்பை எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் கடவுள் வழிவந்த கற்பனைக் கதைகளை எதிர்த்து நடுநிலை தவறாமல், பிறழாமல் வாழ்ந்து காட்டிய அடிகளின் சித்தாந்தத்தை இன்றைய தலைமுறை கண்டிப்பாகத் தேடிப்பிடித்துப் படிப்பதும், அவர் நெறிமுறைகளைக் கடைபிடிப்பதும் மிகவும் அவசியம்.
மறைமலை என்றொரு மனிதன் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இன்றைய தமிழின் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்வியை கேட்க முடியாமல் செய்த அவரை தமிழ் உலகம் என்றென்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை. தனித் தமிழ் இயக்கம் தோன்றியதன் காரணமாக வட மொழிச் சொற்கள் களையப்பட்டு அதற்கு ஈடான இனிய தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
அக்கிராசனர் போய் தலைவர் வந்துவிட்டார்.
காரியதரிசி கைவிடப்பட்டு செயலாளர் வந்துவிட்டார்.
பொக்கிதாசர் மறைந்து பொருளாளர் வந்து விட்டார்.
இதேபோல் *பிரதமர்/ தலைமை அமைச்சர்,
*அபிஷேகம்/ திருமுழுக்கு,
*கும்பாபிஷேகம்/குடமுழுக்கு,
*தேகம், சரீரம்/யாக்கை, உடல்,
*சருமம்/தோல்,
*ரத்தம்/குருதி,
தம்பதியர்/வாழ்விணையர்,
*Coffee/குளம்பி,
*Tea/தேனீர்,
*சந்திரன்/நிலா, மதி,
*பூஜை/வழிபாடு, *விபூதி/திருநீறு, *ஜலதோஷம்/தடிமன், *மாமிசம்/இறைச்சி, *போஜனம்/விருந்து *வீரம்/மறம், *வேதம்/மறை, *சிருஷ்டி/படைப்பு, *அங்கம்/உறுப்பு, *தேசம்/நாடு, நாசம், *சேதம்/அழிவு, *பலம்/ஆற்றல், *சம்பந்தி/மருவினோர், *ஜாதி/வகுப்புப் பிரிவு, *ஜாதகம்/பிறப்புப் குறிப்பு, *மரணம்/இறப்பு, *ஜனனம்/பிறப்பு, *நட்சத்திரம்/விண்மீன், *யோகம்/நல்லோரை, *லக்னம்/நன்முழுத்தம், *சித்தம்/உள்ளம், *பக்ஷி/பறவை, *விருக்ஷம்/மரம், *நதி/ஆறு, *லாபம்/வருமானம், *லஞ்சம்/கையூட்டு, -பாக்கியம், புண்ணியம்/நற்பேறு, *அதிர்ஷ்டம்/நல் ஊழ், *சூரியன்/கதிரவன், பரிதி, ஞாயிறு, *துர்திஷ்டம்/தீயூழ், *ஷணம்/நொடிப் பொழுது, *நிபுணர்/வல்லுநர், *கிரி/குன்று, *கர்மம்/வினை, *சக்கரம்/திகிரி, *யாகம்/வேள்வி, *சோதனை/ஆய்வு, *வாயு/வளி, காற்று, *சகோதரர்/உடன் பிறப்பு, *சகோதரி/உடன்பிறந்தாள், *உதிரம்/குருதி, *ஞாபக சக்தி/நினைவாற்றல், *ஓதுதல்/படித்தல், *கல்யாணம், விவாகம்/திருமணம், *இரட்சித்தல்/பாதுகாத்தல், *பிரார்தனை/வேண்டுதல், *நமஸ்காரம்/வணக்கம், *வார்த்தை/சொல், கிளவி, மொழி, *தினம்/நாள், *ஆசிர்வாதம்/அருள், *சாஸ்திரி/கலைஞர், *சபை/அவை, *ராசா/அரசன், மன்னன், *ஸ்நானம்/குளியல், *ஆஸ்தி/சொத்து/உடைமை, *பிரதி வாரம்/வாரந்தோறும், *குஞ்சித பாதம்/தூக்கிய திருவடி, *புத்தகம்/நூல், *வியாபாரம்/வணிகம், *தாமதம்/காலம் தாழ்த்துதல், *சேவை/தொண்டு, *சகாயம்/உதவி, *ஆகாயம்/வானம், *கிரகம்/கோள், *ராத்திரி/இரவு, *மத்தியானம்/நண்பகல், *சப்தம்/ஒலி, *கரகோஷம்/கைதட்டல், கையொலி, *ஆகாரம்/உணவு, *விமானம்/வானூர்தி, *திருஷ்டி/கண்ணேறு, *ஜனாதிபதி/குடியரசுத் தலைவர், *விஞ்ஞானம்/அறிவியல், *வாக்கியம்/சொற்றொடர், *பிரசங்கம்/சொற்பொழிவு, *துவிபாஷி/இருமொழியாளர், *துவஜஸ்கம்பம்/கொடிமரம், *மஹோற்சவம்/திருவிழா, *ராஜா/அரசன், மன்னன், *ராணி/அரசி, *மந்திரி/அமைச்சர், *வாகனம்/ஊர்தி, *புத்தி/அறிவு, *சிரம்/தலை, *அலங்காரம்/அணி, *வீரம்/மறம், *தானம், தருமம்/கொடை, *கனிஷ்ட புத்திரி – இளைய மகள், * சிரேஷ்ட புத்திரி/மூத்த மகள், *புத்திரன்/மகன், *வருஷம்/ஆண்டு, *சமூகம்தந்து/வருகை தந்து, *பந்துமித்திரர் /உறவினர், *விஜயம்/வருகை, செலவு.
தனித்தமிழை முன்னெடுப்பவர்கள் ‘தமிழ் வெறியர்கள்’ என முத்திரைக் குத்தப்படுகிறது. ஆட்சி அதிகார பலம் பெற்றவர்களால் தனித்தமிழ் நயவஞ்சகமாக ஓரங்கட்டப்படுகிறது. தனித்தமிழ் பண்டிதர்களுக்கே சொந்தமானது என்ற தவறான கருத்து வலிந்து பரப்பப்படுகிறது. தனித்தமிழ் மாணவர்களுக்குப் புரியாது என்றும் அவர்களின் சிந்தனையாற்றலை மட்டுப்படுத்தும் என்றும் பொய்ப் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. தனித்தமிழைப் பற்றிய நம்பிக்கையின்மை தமிழ்ப்பகைவர்களால் மட்டுமின்றி தமிழ்க் கற்றோர்களாலும் விதைக்கப்படுகின்றன.
‘நயனம்’ என்ற வலைப்பதிவில் நாக.இளங்கோவன் அவர்கள் எழுதியுள்ள பின்வரும் செய்திகள் மிகுந்த பயனாக அமையும். திருத்தமிழ் அன்பர்கள் கண்டிப்பாக அவர் எழுதிய கட்டுரைகளைப் படிக்க வேண்டும். (http://thirutamil.blogspot.ca/2008/04/blog-post_28.html)
தனித்தமிழ் என்பது தனியான ஒரு தமிழ் அல்ல; தனித்தமிழ் என்பது தமிழ்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பிற மொழிக் கலப்புத் தமிழ் மொழியில் ஏற்பட்டு மொழியும் பேச்சும் சிதைந்து போகின்ற சூழல் ஏற்பட்டுவிடாமல், மொழியின் தனித்தன்மை குன்றாது தமது எழுத்தைக் காத்துக் கொள்ளும் தமிழை தனித்தமிழ் எனலாம்.
செந்தமிழ்க்காப்பியம் தோன்றிய சேரநாட்டில், தொல்காப்பியம் தோன்றிய சேரநாட்டில், திருக்குறள் தோன்றிய நாஞ்சில்நாட்டருகே உள்ள சேரநாட்டில், பிறமொழிக் கலப்பு கங்கு கரையின்றி ஏற்பட்டதாலும், அதைத் தடுத்து நிறுத்த அப்போதைக்கு ஏலாததாலும், அரசியல் மீது ஏறிப் பிறமொழி நுழைந்ததாலும் தமிழின் தனித்தன்மை சேரநாட்டில் குன்றியது, அதன்விளைவு மலையாளம் என்ற மொழி தோன்றியது 1100 ஆண்டுகளுக்கு முன்னர். ஏறத்தாழ கிபி 1300 க்குப் பின்னர்அது தனி நாடாகவும் ஆகிப்போனது.
தமிழ்நாட்டில் இன்று தமிழ்மொழி வீட்டில் பிள்ளைகள் வேலைக்காரியோடு பேசும் மொழி எனத் தாழ்ந்துவிட்டது. கற்கை மொழி ஆங்கிலமாக இருக்கிறது. திரைப்பட நடிக, நடிகர்கள், ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள் தமிங்கிலம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் வெளிவரும் யூனியர் விகடன் அளவுக்கு அதிகமாக ஆங்கிலச் சொற்களை கையாள்கிறது.
மாசுக்கட்டுப்பாடு காற்றுக்கும் நீருக்கும் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது, மொழிக்கு மாசுக்கட்டுப்பாடு வேண்டுதல்.
தமிழ்மொழியின் தூய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றால்,
1. தமிழ்நாட்டில் ஆட்சிமொழி, கல்விமொழி, உயர்நீதிமன்ற மொழி, வழிபாட்டுமொழி ஆகியவற்றை உடனடியாகச் செயற்பாட்டுக்குத் தமிழக அரசு கொண்டுவரவேண்டும்.
2. தமிழில் ஆங்கிலம் உட்பட பிறமொழிக் கலப்பை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும்.
3. மொழித் தூய்மை காக்க, இரான், உருசிய நாடுகள் போல் சிறப்புக் காவல் படையை உருவாக்க வேண்டும்.
4. உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, நுண்கலைகள் ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கத் தமிழக அரசு ஆசிரியர்கள், பாடநூல்கள் போன்றவற்றை கொடுத்து உதவ வேண்டும்.
தனித்தமிழ் இயக்கம் தோன்றியிருக்கா விட்டால் தமிழ்நாடு என்பது வரலாற்றில் கரைந்திருக்கும். இன்றைக்கு இந்த அளவு கூட தமிழ் இருந்திருக்காது. இன்றைய தமிழ்நாடு கேரளம் போல் மணிப்பிரவாள மாநிலதாக மாறியிருக்கும்.
மறைமலை என்றொரு மனிதர் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இன்றைய தமிழின் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்வியை கேட்க முடியாமல் செய்த அவரை தமிழ் உலகம் என்றென்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை.
பெற்றோர்கள் குறைந்த பட்சம் தங்களது குழுந்தைகளுக்கு அழகான, பொருளுள்ள தூய தமிழ்ப் பெயர்களை தங்களது பிள்ளைகளுக்கு வைக்கமாட்டோம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் சரி, தமிழீழத்தில் சரி பெற்றோர்கள் சமஸ்கிருதம் கலந்த பொருள் விளங்காத பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். சுகாஷ், சுபாஷ், அகிலேஷ், நிரோஷ், நாகேஷ்,சொபீசன், மதீசன், அஜித்குமார், தனஞ்சன், ரஜீவன், தேனுஜன், விதுஷன், டிலக்ஷ்ன், ஸ்கந்தா, சுதாகரன், யசீந்திரன், யசிவண்ணன், வாகீசன், பவீ கோபிநாத், சகிலா, அனுஜா, சிந்துஜா, விம்சியா, விதூஷா, விதுசா, நீரஜப்பிரியா, யசீதா, யுரேனியா, ஜென்சிகா, தீபிகா, டிலானி, டிலோசினி, கஜிந்தினி, அபினோசா, அஸ்மிலா, பவீனா, சர்மிளா, தர்ஜிகா, ஷஜிதா, றோமிலா, றோஜனா, பிரசாளினி, நிரோஜினி. இந்தப் பெயர்கள் ஒரு யாழ்ப்பாணக் கல்லூரி முகநூலில் இருந்து திரட்டியவை. தமிழ்த் தேசியம் பேசும் பெற்றோர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு வடமொழிப் பெயர்களை (ஜ,ஜி,ஷ,ஸ், ஸ்ரீ) சூட்டுகிறார்கள். பெயர்தான் ஒருவனது அல்லது ஒருத்தியின் அடையாளம். அதை நாம் இழந்து வருகிறோம். ஒரு முஸ்லிம் தனது பிள்ளைகளுக்கு பொறுக்கி எடுக்கப்பட்ட அராபு மொழிப் பெயர்களையே வைக்கிறான். அதில் மாற்றம் கிடையாது. அதன் காரணமாக உலகில் அதிகமானவர்களுக்கு உள்ள பெயர் மொகமது!
தமிழ்ப் பண்பாட்டை ஒழிப்பது தினமலர், துக்ளக் ஆக இருக்கலாம். ஆனால் தமிழர்களும் தமிழ்ப் பண்பாட்டை கைவிட்டு வருகிறார்கள். மொழி எங்களது அடையாளம். அது போலவே எமது பெயர்களும் எமது அடையாளம். பெயரை வைத்து ஒருவர் தமிழரா அல்லது தமிழர் அல்லாதவரா எனக் கண்டு பிடித்து விடலாம். இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறம்புறம் சிதம்பரமாகப் பெயர்கள் வைக்கிறார்கள். தமிழ்-சைவ கலாச்சாரத்தின் தலைநகரம் எனக் கொண்டாடும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு நாளேடு சிறுவர்களுக்கு சித்திரப் போட்டி நடத்துகிறது. அதில் கலந்து கொண்டு தரமான சித்திரங்களைத் தீட்டியவர்களது பெயர்களை வெளியிடுகிறது. அதில் காணப்பட்ட ‘தமிழ்’ப் பெயர்களில் உதாரணத்துக்குச் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரியேஷ், பவிசான், கிதுஷா, அஷா, சகானா, சம்யுக்தா, கனுபன், திகேசன், ஜரினி, தர்சன், அவின்யா, அயிஷிகன், சிந்தூரிகா, அயினித், ஐகிஷ், ரஞ்சன், ரோஷித், ஹரிஷ், ஹரிஷ்மன், ரிஷானன், அக்சன்யா.
உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் இந்தச் சிறார்கள் தமிழர்களா?
புலம் பெயர் தமிழர்களின் பிள்ளைகள் பிட்டு, தோசை, இட்லி சாப்பிடுவதில்லை. மாறாக பிற்சா, பேர்கர், சான்ட்விச் சாப்பிடுகிறார்கள்!
இந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் தேர்வில் வடக்கு மாகாணத்தில் 9 மாணவர்கள் 195 இற்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா (198),
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் (195),
கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாவணவன் மதியழகன் மகிர்சன் (195), சென் ஜோன் பொஸ்கோ
பாடசாலை மாணவி அன்ஜிதன் அஜினி (195),
அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி சிவநாதன் லிவின்சிகா (195) ஆகியோர் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாலய மாணவி முரளிதரன் அஸ்விகன் (196), வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி ஜெயந்தன் அஸ்வின்யா (196),
கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் இல.1 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவன் ரவீந்திரன் நிதுசன் (195),
மன்னார் மாவட்டத்தில் சென்.சேவியர் பெண்கள் கல்லூரி மாணவி ரவீந்திரன் றொசானா சைலின் (195)
ஆகியோர் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் வடமாகாண கல்வி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தி எய்திய மாணவ, மாணவிகளின் பெயர்களில் ஒன்றேனும் தமிழ் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவதில் ஏதாவது பொருள் உண்டா? புதுமை செய்கிறோம் என நினைத்துக் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறம் புறமாகப் பெயர்களை வைத்து தமிழ்மொழிக்கு கேடு தேடுகிறார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.