சீனாவைக் காட்டி சுண்டங்காய் நாடான சிறிலங்கா இந்தியாவுக்குத் தண்ணி காட்டுகிறது!
நக்கீரன்
ஒரு உறைக்குள் இரண்டு வாள்கள் இருக்க முடியாது. ஒரு உறைக்குள் ஒரு வாள்தான் இருக்க முடியும். ஆனால் சிறிலங்காவின் அரசியல் நிலைப்பாட்டைப் பார்க்கும் போது ஒரு உறைக்குள் இரண்டு வாள்கள் இருப்பது தெரிகிறது. ஒன்று சனாதிபதி கோட்டாபய இராசபக்ச. இரண்டு பிரதமர் மகிந்த இராசபக்ச.
கொழும்புத் துறைமுகத்தில் 3 முக்கிய முனையங்கள் இருக்கின்றன. இதில் தென்னாசியாவின் கேட்வே முனையம் (South Asian Gateway Container Terminal) சீனாவுக்கு கொடுக்கப்பட்டு விட்டது. சீனாவுக்கு 80 விழுக்காடு உரிமம், சிறிலங்கா துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்கு 20 விழுக்காடு உரிமம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதே சமயம் கடந்த மே 2019 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை (ECT) மேம்படுத்த இந்தியா, ஜப்பான் மற்றும் சிறிலங்கா துறைமுக அதிகார சபை ஒன்றிணைந்து ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை (Memorandum of Understanding) எழுதியிருந்தன. இது முன்ளைய சிறிசேனா – விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்க காலத்தில் எழுதப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ் 51 விழுக்காடு உரிமம் சிறிலங்கா துறைமுக அதிகார சபைக்கும் எஞ்சிய 49 விழுக்காடு உரிமம் இந்தியா – ஐப்பான் இருநாடுகளுக்கும் கொடுக்கப்பட்டது. இந்தியத் தரப்பிலிருந்து அதானி நிறுவனம் இந்தத் திட்டத்தின் அபிவிருத்தியை மேற்கொள்ள இருந்தது.
இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு சனாதிபதி கோட்டாபய தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். அதற்கான முதல் காரணம் சிறிலங்கா அரசு எற்கனவே எழுதப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு ஒரு சர்வதேச உடன்பாடு என்பதால் அதனை சிறிலங்கா கவுரவிக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது காரணம் இது பூகோள அரசியல் தொடர்பானது. அதாவது அண்டைநாடான இந்தியா – சிறிலங்கா உறவு தொடர்பானது என்பதாகும்.
ஆனால் கோட்டாபய இராசபக்ச அவர்கள் தெரிவித்த கருத்துக்குப் பல திசைகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு அலைகள் எழுந்தன. முக்கியமாக சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுகிற 23 தொழிற்சங்கங்கள், சிறிலங்கா பொதுசன பெரமுன ஆட்சியில் இடம்பெற்றுள்ள 10 பங்காளிக் கட்சிகள் மற்றும் பவுத்த தேரர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதை தீவி்ரமாக எதிர்த்தன. நாட்டிற்குள்ள எவ்வாறான அரசியல் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும், நாட்டிற்குரிய சொத்துக்களை வெளிநாட்டவருக்கு தாரைவார்த்துக் கொடுக் கூடாது, நாடு அந்தச் சொத்துக்களால் உச்ச பயனை அடைய வேண்டும் என்பது எதிர்ப்பாளர்களின் கோரிக்கையாக இருந்தது.
துறைமுகத் தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்தல் என்ற தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்தன. அதற்கு முன்னோடியாக சனவரி 29, 2021 அன்று துறைமுக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஊழியர்களால் நடத்தப்பட்டது. எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் காலி துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
ஆனால் இதே தொழிற்சங்கங்கள், பவுத்த தேரர்கள், பொதுசன அரசில் இடம்பெற்றுள்ள 10 பங்காளிக் கட்சிகள் கொழும்பு துறைமுகத்தின் முக்கிய 3 முனையங்களில் அதிமுக்கிய தென்னாசியாவின் கேட்வே முனையத்தின் (எஸ்.ஏ.ஜீ.ரி எ) அபிவிருத்தி 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போது வாய்மூடி மவுனமாக இருந்து விட்டன. தெற்காசியாவில் தற்போது காணப்படும் ஒரேயொரு ஆழமான முனையம் தென்னாசியாவின் கேட்வே முனையம் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாசியாவின் கேட்வே முனையத்தின் 85 விழுக்காடு உரிமம் சீனாவுக்கும் 15 விழுக்காடு உரிமம் கொழும்பு துறைமுக அதிகார சபைக்கும் பங்கிடப்பட்டது.
இதனால் இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ( ECT) மேம்படுத்துவதற்கு இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் எழுதிக்கொண்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மூன்று நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சனாதிபதி கோட்டாபய இராசபக்ச கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தாலும் நாட்டின் பிரதமர் மகிந்த இராசபக்ச அதனை முழுவீச்சில் எதிர்த்தார். இது பற்றி அவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது கொழும்புத்துறை முகத்தின் கிழக்கு முனையம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கோ வழங்கப்படாது என்றார்.
இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னணியிலும் துறை தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை.
இவ்வாறான நிலையில், பெப்ரவரி 1 ஆம் தேதி மாலை கூடிய அமைச்சரவை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை 100 விழுக்காடு இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு ஒப்புதல் வழங்கியது.
ஆனால் இந்த முடிவை உத்தியோக முறைப்படி இந்தியாவுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியானாலும் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி இந்தியாவுக்குக் கொடுக்கப்பட மாட்டாது என்பது உறுதியாகியுள்ளது. அப்படிக் கொடுப்பதை சிங்கள – பவுத்த தீவிரவாத சக்திகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டா என்பதே யதார்த்தமாகும்.
சீனாவைப் பொறுத்தவரை, இலங்கையின் கொழும்புத் துறைமுக நகர் அதன் பட்டுப் பாதை முன்முயற்சியின் முக்கிய அம்சமாகும்.
இப்போது மட்டுமல்ல இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சுமுகமான உறவு இருந்ததில்லை. தமிழீழப் போராளிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி கொடுத்தது, 1987 இல் எழுதப்பட்ட இந்திய – இலங்கை உடன்பாடு, முக்கியமாக தமிழர் சார்பு இந்திய வெளியுறவுக் கொள்கை போன்றவை காரணங்களாகும். ஆனால் இராசிவ் காந்தி கொலைக்குப் பின்னர் இந்தியா வி. புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டது. போரில் சிறிலங்கா அரசுக்கு புலனாய்வு, உதிரிப்பாகங்கள், போர் உத்திகள் போன்றவற்றை வழங்கியிருந்தது.
இப்போது இந்தியாவுக்குச் சவால் விடுவது போல சீனாவின் பங்களிப்புடன் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மின்சக்தி அமைச்சருடன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தியாவின் நன்கொடையுடன் இந்தக் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும் அதற்கான முழுச் செலவான அ.டொலர் 12 மில்லியன் நிதியை இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்குவதாகவும் அறிவித்தார். அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் பிந்திய செய்திகள் இந்தத் திட்டத்தை சீனாவுக்குக் கொடுத்தது கொடுத்ததுதான் அதில் மாற்றம் இல்லை எனத் தெரிவிக்கின்றன. அனலைதீவு இந்தியாவின் தென்முனையிலிருந்து 49 மைல் தூரத்தில் உள்ள தீவாகும்.
இத்தகைய அவமதிப்புக்களை இந்தியா எவ்வளவு காலத்துக்குப் பொறுத்துக் கொண்டு போகும் என்பது தெரியவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர், இலங்கைக்கான இந்திய தூதுவர் போன்றோர் சிறிலங்கா அரசோடு நாளும் பொழுதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றைச் சிறிலங்காவின் அதிகார வர்க்கம் காதில் போடுவதாக இல்லை. நாங்கள் பேசுகிறோம் அவர்கள் செவிகொடுப்பதாக இல்லை (We are talking but they are not listening) என்ற நிலைப்பாடே தொடர்கிறது.
இந்தியாவிடம் இருந்து இலங்கை மத்திய வங்கி அ.டொலர் 400 மில்லியனை கடனாக சென்ற ஆண்டு பெற்றிருந்தது. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு அவகாசம் கேட்கும் என்றுதான் பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் சொன்ன தவணைக்கு இலங்கை மத்திய வங்கி வாங்கிய கடனை அடைத்துவிட்டது. எப்படி? சிறிலங்கா சீனாவிடம் இருந்து அ.டொலர் 1.5 பில்லியனை கடனாகப் பெற்று அந்தக் கடனில் இந்திய மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை அடைத்துள்ளது. அதாவது கடன் வாங்கிக் கடனை அடைத்துள்ளது.
இப்படிச் சீனா கடன்களை கொடுத்து, அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றி சிறிலங்கா அரசின் மீது செல்வாக்குச் செலுத்தி வருகிறது. கடந்த சனவரி மாதத்தில் இந்தியா 5 இலட்சம் கொவிசீல்ட் தடுப்பூசிகளை அன்பளிப்பாகக் கொடுத்தால் சீனா அதே தொகை தடுப்பூசிகளை சிறிலங்காவுக்குக் கொடுக்கிறது.
——————————————————————————————————
இலங்கைக்கு எழில் சேர்க்கும் கொழும்பு துறைமுக நகரம்
Thursday, January 16, 2020
உல்லாசப் பயணத்துறைக்கு பெயர்போன இலங்கை அண்மைக் காலமாக எத்தனையோ விதமான சம்பவங்களை எதிர்கொண்டிருந்தாலும் தன் இயற்கை அழகாலும், வரலாற்றுப் பெருமையாலும் வெளிநாட்டவர்களை கவர்ந்திழுக்கத் தவறியதில்லை. அத்தகு இலங்கையின் தலைநகர் கொழும்பானது சர்வதேச அளவில் பெயர்பெற்று வரும் நவீன நகரமாக மாற்றமடைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. தாமரைத் தடாகம், தாமரைக் கோபுரம், வானுயர் கட்டடங்கள் மற்றும் வரலாற்றுக் கட்டடங்கள் என தன் எழிலினை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த ஹைடெக் சிட்டியினை மேலும் அலங்கரிக்கும் விதமாக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தொகுதிகளைக் கொண்டது தான் கொழும்புத் துறைமுக நகரம் (Colombo Port City) ஆகும்.
கொழும்புத் துறைமுகப் பகுதியில் சர்வதேச வசதிகள் நிறைந்த கட்டடத்தொகுதிகளை அமைக்கும் நோக்கில் தான் இத்துறைமுக நகரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையின் மேற்குபுறத்தில் அமைந்திருக்கும் கொழும்பு துறைமுகத்தின் தென்பகுதியில் மணல் கொண்டு கடலை நிரப்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கியே இந்நகர் உருவாக்கப்படுகின்றது. இலங்கை வரலாற்றில் இவ்வாறான ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பாரிய அபிவிருத்தித் திட்டத்திற்கு அடித்தளமிட்டவர் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.
சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப வைபவத்தில் சீன ஜனாதிபதி ஜின் பிங்கினால் நிர்மாணப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது. என்றாலும் இத்திட்டம் 2011மார்ச்சில் ஆரம்பிக்கப் படவிருந்த போதிலும் பலவிதமான தடங்கல்களால் இத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் தாமதமாகியமை தெரிந்ததே.
1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமைக்கப்படும் இந்நகரின் அமைவிடமானது கொழும்பு துறைமுகத்தின் தென்முனையிலுள்ள அலைதாங்கியுடன் கூடிய இடமாகும். இப்பிரதேசத்தின் கடலை மணல் கொண்டு நிரப்பி 269ஹெக்டேயர் பரப்பில் இந்நகர் உருவாக்கப்படுகின்றது. இதன் நிமித்தம் கடலை நிரப்பும் பணிகள் 2018ஆம் ஆண்டில் நிறைவுற்றுள்ளன. இவ்விடத்தில் நவீன நகரமொன்று அமைக்கப்படுவதால் கொழும்பு நகரின் மத்திய வர்த்தக பிரதேசமாக இது எதிர்வரும் காலங்களில் மாற்றமடையும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வர்த்தக கேத்திரங்களின் தரத்திற்கு இலங்கையின் இந்த துறைமுக நகர் உருவாகும். இதனை நோக்காகக் கொண்டு தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டன.
இலங்கைக்கு இது ஒரு புதிய திட்டம் என்பதால் கடல் பகுதியை மணல் கொண்டு நிரப்பி இவ்விடம் உருவாக்கப்படுவது தொடர்பில் ஆரம்ப காலப்பகுதியில் பலர் விமர்சனங்களைத் தெரிவித்தனர். ஆனாலும் இத்திட்டத்தின் பெறுமதியும் அதன் ஊடாக இலங்கை அடைந்து கொள்ளக்கூடிய நன்மைகள் குறித்தும் பகிரங்கப்படுத்தப்பட்டதும் விமர்சனங்கள் முற்றுப்பெற்று விட்டன. தற்போது இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்களவிலான வேலைபாடுகள் நிறைவடைந்துள்ளதுடன் மீதமுள்ள வேலைகளை முழுமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2.69கிலோமீட்டர்கள் பரப்பளவில் உருவாகின்ற இந்நகரத்தினுள் வர்த்தக நிலையங்கள், பாரிய கோபுரங்கள், உல்லாச ஹோட்டல்கள், கடைத்தொகுதிகள், பூங்காக்கள், கொல்ப் விளையாட்டு மைதானம் என அனைத்து வசதிகளும் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகின்றன. கண்கவர் எழில்மிக்க வகையில் அமைக்கப்படும் இந்நகர் உலகிலுள்ள முக்கியத்துவம் மிக்க நகர்களில் ஒன்றாக திகழும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீனாவின் CCC எனப்படும் China Communications Construction மற்றும் CHEC எனப்படும் இலங்கையின் துறைமுக நகர நிறுவனங்கள் இணைந்து தான் இதன் கட்டுமான வேலைப்பாடுகளை மேற்கொள்கின்றன. கொழும்பு துறைமுகத்தை ஒரு புறமாகவும் பிரபலமான காலிமுகத்திடலை மறு புறமாகவும் கொண்டதாக இந்த ஹைடெக் நகரம் உருவாகி வருகின்றது.
———————————————————————————————————–
இலங்கைக்கு எழில் சேர்க்கும் கொழும்பு துறைமுக நகரம்
Thursday, January 16, 2020
உல்லாசப் பயணத்துறைக்கு பெயர்போன இலங்கை அண்மைக் காலமாக எத்தனையோ விதமான சம்பவங்களை எதிர்கொண்டிருந்தாலும் தன் இயற்கை அழகாலும், வரலாற்றுப் பெருமையாலும் வெளிநாட்டவர்களை கவர்ந்திழுக்கத் தவறியதில்லை. அத்தகு இலங்கையின் தலைநகர் கொழும்பானது சர்வதேச அளவில் பெயர்பெற்று வரும் நவீன நகரமாக மாற்றமடைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. தாமரைத் தடாகம், தாமரைக் கோபுரம், வானுயர் கட்டடங்கள் மற்றும் வரலாற்றுக் கட்டடங்கள் என தன் எழிலினை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த ஹைடெக் சிட்டியினை மேலும் அலங்கரிக்கும் விதமாக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தொகுதிகளைக் கொண்டது தான் கொழும்புத் துறைமுக நகரம் (Colombo Port City) ஆகும்.
கொழும்புத் துறைமுகப் பகுதியில் சர்வதேச வசதிகள் நிறைந்த கட்டடத்தொகுதிகளை அமைக்கும் நோக்கில் தான் இத்துறைமுக நகரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையின் மேற்குபுறத்தில் அமைந்திருக்கும் கொழும்பு துறைமுகத்தின் தென்பகுதியில் மணல் கொண்டு கடலை நிரப்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கியே இந்நகர் உருவாக்கப் படுகின்றது. இலங்கை வரலாற்றில் இவ்வாறான ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பாரிய அபிவிருத்தித் திட்டத்திற்கு அடித்தளமிட்டவர் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.
சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப வைபவத்தில் சீன ஜனாதிபதி ஜின் பிங்கினால் நிர்மாணப்பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது. என்றாலும் இத்திட்டம் 2011மார்ச்சில் ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும் பலவிதமான தடங்கல்களால் இத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் தாமதமாகியமை தெரிந்ததே.
1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமைக்கப்படும் இந்நகரின் அமைவிடமானது கொழும்பு துறைமுகத்தின் தென்முனையிலுள்ள அலைதாங்கியுடன் கூடிய இடமாகும். இப்பிரதேசத்தின் கடலை மணல் கொண்டு நிரப்பி 269ஹெக்டேயர் பரப்பில் இந்நகர் உருவாக்கப்படுகின்றது. இதன் நிமித்தம் கடலை நிரப்பும் பணிகள் 2018ஆம் ஆண்டில் நிறைவுற்றுள்ளன. இவ்விடத்தில் நவீன நகரமொன்று அமைக்கப்படுவதால் கொழும்பு நகரின் மத்திய வர்த்தக பிரதேசமாக இது எதிர்வரும் காலங்களில் மாற்றமடையும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வர்த்தக கேத்திரங்களின் தரத்திற்கு இலங்கையின் இந்த துறைமுக நகர் உருவாகும். இதனை நோக்காகக் கொண்டு தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டன.
இலங்கைக்கு இது ஒரு புதிய திட்டம் என்பதால் கடல் பகுதியை மணல் கொண்டு நிரப்பி இவ்விடம் உருவாக்கப்படுவது தொடர்பில் ஆரம்ப காலப்பகுதியில் பலர் விமர்சனங்களைத் தெரிவித்தனர். ஆனாலும் இத்திட்டத்தின் பெறுமதியும் அதன் ஊடாக இலங்கை அடைந்து கொள்ளக்கூடிய நன்மைகள் குறித்தும் பகிரங்கப்படுத்தப்பட்டதும் விமர்சனங்கள் முற்றுப்பெற்று விட்டன. தற்போது இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்களவிலான வேலைபாடுகள் நிறைவடைந்துள்ளதுடன் மீதமுள்ள வேலைகளை முழுமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2.69கிலோமீட்டர்கள் பரப்பளவில் உருவாகின்ற இந்நகரத்தினுள் வர்த்தக நிலையங்கள், பாரிய கோபுரங்கள், உல்லாச ஹோட்டல்கள், கடைத்தொகுதிகள், பூங்காக்கள், கொல்ப் விளையாட்டு மைதானம் என அனைத்து வசதிகளும் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகின்றன. கண்கவர் எழில்மிக்க வகையில் அமைக்கப்படும் இந்நகர் உலகிலுள்ள முக்கியத்துவம் மிக்க நகர்களில் ஒன்றாக திகழும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீனாவின் CCC எனப்படும் China Communications Construction மற்றும் CHEC எனப்படும் இலங்கையின் துறைமுக நகர நிறுவனங்கள் இணைந்து தான் இதன் கட்டுமான வேலைப்பாடுகளை மேற்கொள்கின்றன. கொழும்பு துறைமுகத்தை ஒரு புறமாகவும் பிரபலமான காலிமுகத்திடலை மறு புறமாகவும் கொண்டதாக இந்த ஹைடெக் நகரம் உருவாகி வருகின்றது.
ஆகவே இந்நகரின் நிர்மாணப் பணிகள் நிறைவுற்றதும் தெற்காசியாவில் இல ங்கையின் புகழ் மேலோங்கும் அதே நேரம் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் முதலீடுகளையும் கவர்ந்திழுக்கும் இடமாக இது அமையும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
கொழும்பு கிழக்கு துறைமுக முனையம் மேம்பாட்டு திட்டம் இலங்கையில் இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனா
2020-07-04
கொழும்பு: இலங்கையில் இந்தியாவும், ஜப்பானும் சேர்ந்து புதிய கன்டெய்னர் முனையத்தை அமைக்கும் திட்டத்தை சீர்குலைக்க சீனா முயற்சிக்கிறது. சீனாவின் முனையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத துறைமுக ஊழியர்கள், இந்தியாவின் திட்டத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதன் பின்னணியில், சீனா இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. ஏழை நாடுகளுக்கான இவற்றுக்கு, பண ஆசை காட்டி இந்த அதை செய்கிறது. இலங்கை, பாகிஸ்தான் போன்றவற்றை தனது பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் அது வசப்படுத்தி இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ், இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தை சீனா அபகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடியை கடனாக வழங்கியுள்ள அது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பொருளுாதார பாதையை அமைத்து வருகிறது. சமீபத்தில், நேபாளத்தையும், வங்கதேசத்தையும் கூட அது வளைத்து விட்டது. இதைத் தொடர்ந்தே, லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை பிரச்னையை தொடங்கி, இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்த பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
சீனாவின் தூண்டுதல் காரணமாக, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தனது அத்துமீறிய தாக்குதலை அதிகரித்து இருக்கிறது. இந்தியாவுக்கு சிறந்த நட்பு நாடாக இருந்த நேபாளமும், எல்லையில் பிரச்னையை கிளப்பி, ராணுவத்தை நிறுத்தும் அளவுக்கு சென்று விட்டது. வங்கதேசமும் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறது. ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு சீனாவால் கொடுக்கப்படும் இந்த பிரச்னைகளின் பின்னணியில், ஏதோ பெரிய சதித்திட்டம் இருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றன.
இந்நிலையில், இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா, ஜப்பான் நாடுகளுடன் இலங்கை போட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. கப்பலில் கொண்டு வரப்படும் கன்டெய்னர்களை கையாளக் கூடிய இந்த கிழக்கு முனையம், இலங்கையின் மிகவும் ஆழமான துறைமுகமாகும். மிகப்பெரிய கப்பல்களை கூட இங்கு எளிதாக நங்கூரமிட்டு நிறுத்த முடியும். இந்த முனையத்தை மேம்படுத்துவதற்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த சிறிசேனா ஆட்சியின்போது செய்யப்பட்டது.
இந்த முனையம், சீனாவால் நடத்தப்பட்டு வரும் கொழும்பு சர்வதேச கன்டெய்னர் முனையத்துக்கு அருகே அமைந்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு முடிந்து விட்டது. கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்கான முறையான ஒப்பந்தம், மூன்று நாடுகள் இடையிலும் இன்னும் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில், சீனாவின் முனையத்துக்கு ஆதரவு அளிக்கும் இங்குள்ள துறைமுக சங்கமும், ஊழியர்களும் இந்தியா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, இந்த முனையத்துக்கான அபிவிருத்தி பணிகள் அனைத்தையும் இலங்கை அரசே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தின. மேலும், மிகப்பெரிய ஆழ்கடல் முனையத்தை இலங்கை உருவாக்குவதை தடுப்பதற்கு இந்தியா முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றன.
இலங்கை அரசே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பணிகளை வேறு நாடுகளிடம் கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாகவும் துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் அறிவித்தன. அவர்களுடன் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று காலை தனது இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக துறைமுக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கையில் இந்தியா எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவே, இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதில், பிரதமர் ராஜபக்சேவும் அவருடைய தம்பியான அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
* சீனா அனுப்பிய ராட்சத கிரேன்கள்
கடந்த வாரம் இலங்கை துறைமுக ஆணையத்தால் நிர்வகித்து வரப்படும் ஜெயா துறை முனையத்துக்காக சீனாவில் இருந்து 3 மிகப்பெரிய கிரேன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இந்த கிரேன்களை கிழக்கு முனையத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி துறைமுக ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தியா – ஜப்பான் – இலங்கை உடனானவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தடுக்கவே, அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்தனர். இதையடுத்து, இந்த ராட்சத கிரேன்களை கிழக்கு துறை முனையத்தில் நிறுவும்படி பிரதமர் ராஜபக்சே உத்தரவிட்டார். கடந்த புதன்கிழமை ராஜபக்சே அளித்த பேட்டியில், ‘துறை மேம்பட்டு பணி தொடர்பாக கடந்த ஆட்சியின்போது அதிபர் சிறிசேனா – இந்திய பிரதமர் மோடி இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, துறைமுக மேம்பாட்டு பணிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை,” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
* சீனா, பாகிஸ்தானில் இருந்து மின் சாதனம் வாங்க கூடாது
மத்திய மின்சக்தி துறை அமைச்சர் ஆர்கே சிங் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ‘‘சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து மின்சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பாக ஆய்வின் அடிப்படையில் அனுமதிக்கப்படாது. உபகரணங்கள் இறக்குமதி செய்வதற்கு சீன நிறுவனங்களுக்கான ஆர்டர்களை மாநிலங்கள் வழங்க கூடாது. நாம் அனைத்தையும் இங்கேயே உற்பத்தி செய்கிறோம். இந்தியா சீனாவிடம் இருந்து மொத்தம் 71 ஆயிரம் கோடிக்கு மின்சாதன உபகரணங்களை இறக்குமதி செய்கிறது. அது நமது எல்லைக்குள் அத்துமீறும்போது, அதனிடம் நாம் இப்பொருட்களை வாங்கக் கூடாது. மின்சாதன பொருட்களை சீனா, பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்ய கூடாது. இறக்குமதி செய்யவும் அனுமதிக்க மாட்டோம்,’’ என்றார்.
https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598266
2021 இல் திறக்கப்படவுள்ள கொழும்புத் துறைமுக நகரின் கடற்கரை பகுதியின் அழகிய தோற்றம்!
June 22, 2020
கொழும்புத் துறைமுக நகரின் பொது மக்களுக்கான, கடற்கரை பொழுதுபோக்குப் பகுதி, அடுத்த ஆண்டில் திறக்கப்படும் என, நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை இப்போது உருவாக்கப்பட்டு வருவதுடன் கடற்கரை அரங்கம், கடற்கரை பூங்கா, குழந்தைகள் பூங்கா, சிறிய உணவகங்கள், படகு போக்குவரத்து சேவைகளுக்கான மெரினா உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பசுமை வலயம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதி, நீர்சார் விளையாட்டுகள், இதர வசதிகளைக் கொண்டமைந்த இந்தப் பகுதியில், தென்னை, பாம் மரங்கள், சூழலுக்கு நட்பான பகுதியாக மாற்றியமைக்கும் வகையில், பல்வேறு வகையான இதர சுதேச தாவரங்களையும் கொண்டதாக இப்பகுதி உள்ளது.
அத்துடன் பொழுதுபோக்குப் பகுதியில் நடைபகுதி, சைக்கிள் பாதைகள் போன்றனவும் காணப்படும்.
காலி முகத்திடலைப் போன்று மூன்று மடங்கு பெரிதானதாக இந்தப் பொழுதுபோக்குப் பகுதி அமைந்திருக்கும்.
இதேவேளை துறைமுக நகர அபிவிருத்திப் பணியில் மொத்தமாக ஈடுபட்டிருந்த 1,600 பணியாளர்களில், தற்போது நிர்மாணத் துறைக்கான கொவிட்-19 பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய, சுமார் 500 பேர் மாத்திரமே பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் நிலையில், எஞ்சியுள்ள ஊழியர்களுக்குப் ‘பிசிஆர்’ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களையும் பணிகளில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
னாவின் பிடியில் இலங்கைத் துறைமுகம்: பட்டுப் பாதையா… படையெடுக்கும் பாதையா? – ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் ( பகுதி – 8)
சீனத் தொல்லைக்கு நேருவின் வரலாற்றுத் தவறு காரணமா? – ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.. பகுதி -7
ஒரே ஒரு பாதையை உருவாக்குவதன்மூலம், ஒரு தேசம் உலகின் வல்லரசு ஆகிவிட முடியுமா? ஜின்பிங் தலைமையிலான சீன அரசு அப்படித்தான் நம்புகிறது. கூடவே அந்தப் பாதையை பாகிஸ்தான் மற்றும் இலங்கை துறைமுகங்களுடன் இணைப்பதன் மூலம் இந்தியாவின் புழக்கடைக்கே வந்து நின்று அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
அருணாச்சல பிரதேசம் உள்பட ஏற்கெனவே சீனாவுடன் இந்தியாவுக்கு இருந்து வரும் எல்லைத் தகராறு உள்ளிட்ட தாவாக்களின் உச்சமாக டோக்லாம் பிரச்னை, கடந்த ஆண்டு ஜூலையில் வெடித்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுவிடுமோ என்ற அளவுக்கு நிலைமை மோசமானதையும், இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்ததையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதே சமயம், சீனா இப்போதைக்கு அமைதியாக பின்வாங்கினாலும், டோக்லாமிலோ அல்லது அருணாச்சலப் பிரதேசத்திலோ மீண்டும் தனது அத்துமீறலைத் தொடரக்கூடும் என்றும், அது சீனாவின் குணாதிசயங்களில் ஒன்றாகிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தோம். நாம் சொன்னபடியே கடந்தவாரம் அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட நிலையில், இந்திய ராணுவத்தின் கடும் எதிர்ப்புக் காரணமாக பின்வாங்கினர்.
இத்தகைய சூழலில்தான் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் விதமாக, சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை’ பொருளாதார வழித்தட திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஓர் அம்சமாக இலங்கையின் அம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்பதைவிட திட்டமிட்டு கைப்பற்றிவிட்டது சீனா என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த அம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவின் கைகளுக்குச் சென்றதன் மூலம் இந்தியக் கடல் பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சீனா வசமான அம்பாந்தோட்டை துறைமுகம்
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், அவரது சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை நகரில் மிகப் பெரிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக இலங்கை அரசு சீனாவிடம் பெருந்தொகையைக் கடனாக வாங்கி, கடந்த 2008-ம் ஆண்டு அந்தத் துறைமுகத்தை அமைக்கும் பணிகளைத் தொடங்கியது. பிறகு துறைமுகத்தின் கொள்திறன் மேலும் அதிகரிக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், எதிர்பார்த்தபடி வர்த்தக நடவடிக்கைகள் எதுவும் நடக்காததால், இலங்கை துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டு, சீனாவுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் சுமை அதிகரித்தது. துறைமுகம் அமைத்ததில் சீனாவுக்கு 800 கோடி டாலர் கடன் பாக்கி இருப்பதாக அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயகே கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்காக இலங்கை அரசு வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு சீனா நெருக்கடி கொடுத்தது. இலங்கையால் இந்தக் கடனை அவ்வளவு சுலபத்தில் திருப்பித் தர முடியாது என்று நன்கு தெரிந்தேதான் இலங்கைக்கு அவ்வளவு பெரிய தொகையை இலங்கைக்கு சீனா கடனாகக் கொடுத்தது. எதிர்பார்த்தபடியே அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை விழிப்பிதுங்கியது.
இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனா சென்றபோது, கடன் தொகைக்குப் பதிலாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவிகித பங்குகளைத் திருப்பித் தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், துறைமுகத்தை சீன நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகை விட இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.
இதன் மூலம், துறைமுகத்தின் உரிமை இலங்கை துறைமுகப் பொறுப்புக் கழகத்திடம் இருந்தாலும், அதன் மீதான முழு கட்டுப்பாடும் சீன நிறுவனங்களிடம் வரும் நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இதனையடுத்து சீன நிறுவனத்துக்கு அளித்த 80 சதவிகித பங்குகளை 70 சதவிகிதமாகக் குறைத்துக் கொண்டது இலங்கை அரசு. இதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டதையடுத்து கடந்த 2017 டிசம்பர் 9-ம் தேதியன்று, சீனாவின் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகச் சேவை நிறுவனங்களிடம் அந்தத் துறைமுகத்தை இலங்கைத் துறைமுகப் பொறுப்புக் கழகம் முறைப்படி ஒப்படைத்தது. இதையடுத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வர்த்தக மண்டலங்கள் அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்தன.
இந்த நடவடிக்கை மூலம், துறைமுகத்துக்காக வாங்கிய கடனை சீனாவுக்குத் திருப்பியளிக்கத் தொடங்கியுள்ளதாகவும், அந்தத் துறைமுகத்தால் பொருளாதார மேம்பாடும், சுற்றுலா வளர்ச்சியும் ஏற்படும் என்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்ப்பு…
ஆனால், மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, அம்பாந்தோட்டை துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக அம்பாந்தோட்டையையொட்டியுள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடம் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும், வெளியேற்றப்படுபவர்களுக்கு மாற்று இடம் தரப்படும் என்றும் தகவல் வெளியானதால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த ஆவேசமடைந்தனர்.
இத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலைக்கிடையே, இம்மாதம் 7-ம் தேதியன்று அம்பாந்தோட்டை தொழில் மண்டல அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இலங்கைப் பிரதமர் ரணில் உரையாற்றுவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு அருகே மோதல் வெடித்தது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்த பிக்குகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து புத்த பிக்குகளையும் கிராம மக்களையும் அரசு ஆதரவாளர்கள் தாக்கினார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கினார்கள். இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்களை விரட்ட முயன்றனர். இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். போராட்டத்தின்போது, அம்பாந்தோட்டைப் பிரதேசத்தை சீனக் காலனியாக மாற்றுவதற்காக தங்களை வெளியேற்ற அரசு முயல்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த மோதலுக்கு இடையே, திட்டமிட்டபடி இந்த முதலீட்டு திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அரசு நிலங்கள் மட்டுமே இந்தத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படுமென்றும், இந்த அபிவிருத்தி திட்டத்துக்காக தென் மாகாணத்தில் 1235 ஏக்கர் நிலம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்களின் வீடுகள் மற்றும் புத்த விஹாரைகள் உடைக்கப்பட மாட்டாதென்றும் கூறினார். ஆனாலும் பிரதமரின் வாக்குறுதி எந்த அளவுக்கு உண்மை என்பது வரும் நாள்களில் நிலம் கையகப்படுத்தப்படும்போது தெரியவரும்.
பட்டுப் பாதையா… படையெடுக்கும் பாதையா?
அம்பாந்தோட்ட துறைமுகம் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில், சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள சாலைகளையும் துறைமுகங்களையும் இணைக்கும் வகையில், புதிய பட்டுப் பாதை என்று அழைக்கப்படும் புதிய வழிகளை உருவாக்கும் முயற்சியில் சீனா தற்போது ஈடுபட்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலை நோக்கியபடி அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் புதிய பட்டுப் பாதை திட்டத்துக்கு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைவிட சீனா அந்தத் துறைமுகத்தைத் தனது கடற்படைத்தளமாகப் பயன்படுத்தக்கூடும் என்று இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டபோதிலும், அப்படியெல்லாம் அமையவிட மாட்டோம் என்று இலங்கை அரசு மறுக்கிறது. ஆனால், இந்திய எல்லைப் பகுதிகள், டோக்லாம் போன்ற பகுதிகளில் சீனா மேற்கொண்ட அத்துமீறல், திபெத், ஹாங்காங், தென்சீனக் கடல் போன்ற இடங்களில் சீனா நடந்துகொண்ட விதம் போன்றவற்றை அறிந்த யாரும், எதிர்காலத்தில் சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனது கடற்படைத்தளத்தை அமைக்காது என உறுதியாகச் சொல்ல மாட்டார்கள்.
ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்ட எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து இந்தியா – சீனா இடையே மோதல்போக்கு வெடித்த சூழ்நிலையில், தனது இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொழும்பு துறைமுகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது சீனா. இது, அப்போது இந்தியாவுக்கு சீனா விடுத்த மறைமுக மிரட்டலாகவே கருதப்பட்டது.
அதே சமயம் அந்தத் துறைமுகம் வர்த்தகப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். சீனா கடற்படைத் தளம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். ஆனால், ” இலங்கை அவ்வாறு அனுமதிக்க மாட்டோம் என மறுத்தாலும், சீனாவின் முதலீடும், அதன் மூலமாகக் கிடைக்கும் வளர்ச்சியும் இலங்கைக்குத் தேவையாக உள்ளது. இலங்கை இனி தன்னை மட்டுமே நம்பி வளர்ச்சியை எட்டிப் பிடிக்க முடியாது. அதற்குப் பொருளாதார சீர்திருத்தமும், அந்நிய முதலீட்டைத் தாராளமாக திறந்துவிடுவதற்கான கொள்கை மாற்றமும், அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும் இலங்கைக்குத் தேவையாக உள்ளது. தற்போதைய சீன முதலீடு மூலம் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் ஷென்சென் பொருளாதார வலயத்தைப் போன்று நல்ல வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கான விலையைக் கொடுக்கவும் அது தயாராகவே இருக்க வேண்டும். உலக வல்லரசாகப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கும் சீனா, அங்கு கடற்படை தளம் அமைத்தால் அதனை எதிர்த்து இலங்கையால் எதுவும் செய்ய முடியாது.
கடனில் சிக்கவைக்கும் ராஜதந்திரம்
அம்பாந்தோட்டை துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலம் அமைக்கும் திட்டத்துக்கான செலவு இலங்கையைச் சேர்ந்ததுதான் என்றாலும் அத்திட்டத்துக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் சீன நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்படும். இதன்மூலம் இத்திட்டத்தின் பெரும்பாலான தொகை சீனாவுக்கே திரும்ப வந்துவிடும். மேலும் சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் மட்டுமல்ல, அதனைச் சுற்றியுள்ள சுமார் 2000 ஏக்கர் நிலமும் சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை சீனா நிச்சயம் அதனை தன் ராணுவத் தளமாக மாற்றிக்கொள்ளும். இதன்மூலம் இலங்கையின் இறையாண்மை மிகப்பெரிய கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அதே சமயம் சீனாவின் இந்தக் கடன் கொடுத்து கவிழ்க்கும் திட்டத்தை ‘கடனில் சிக்கவைக்கும் ராஜதந்திரம்’ ( Debt Trap Diplomacy ) என்றும் சர்வதேசக் கொள்கை வகுப்பாளர்கள் கூறுவார்கள் ” என்கிறார் சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கடல் பாதுகாப்பு நிபுணரும் பேராசிரியருமான கால்லின் ஹோ.
” இதுநாள் வரை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள்தாம் பல, ஏழை எளிய நாடுகளிடம் இந்தக் கடனில் சிக்க வைக்கும் கொள்கையைப் பயன்படுத்தி அந்த நாடுகளின் வளங்களைச் சூறையாடி வந்தன. தற்போது சீனா அந்தப் பாதையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இப்போது வரை இந்தியாவை தனது நட்பு நாடாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இலங்கைதான் சீனா உடனான உறவை எந்த அளவுக்கு வளர்த்துக்கொள்வது, தனது பிரதேசத்தில் அதன் இருப்பை எவ்வளவு அனுமதிப்பது என்பதை தனது நாட்டு மக்களின் எதிர்ப்பையும் கவனத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். அதே சமயம், இலங்கையில் இனி சீனாவின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது என்பதையும் இந்தியா உணர்ந்துள்ளது” என்கிறார் சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளர் ராஜீவ் ரஞ்சன்.
ஆக மொத்தத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கால்பதித்ததன் மூலம் சீனா, இந்தியாவின் புழக்கடையில் வந்து குத்தவைத்து அமர்ந்து கொண்டுவிட்டது. இதனால், நிலப்பகுதி வழியாக இந்தியாவை இதுவரை சீண்டிக்கொண்டிருந்த சீனா, இனிமேல் கடல் மார்க்கமாகவும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். எனவே, சீனாவின் சீண்டல்களை ராணுவ ரீதியாகவும் ராஜ்ஜிய ரீதியாகவும் எதிர்கொள்ள இந்தியா தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியதான்!
ஜின்பிங் வருவார்…
———————————————————————————————————————————————-
அது என்ன பட்டுப் பாதை பொருளாதார வழித்தட திட்டம்?
உலகின் எந்த மூலைக்குப் போனாலும், எந்த வணிக வளாகத்துக்குப் போனாலும், அது சீனாவில் தயாரான பொருள்களால் நிரம்பி வழியும். ஆனாலும், சீனாவுக்கு இது போதவில்லை. சுமார் 55 பில்லியன் டாலர்கள் மதிப்பில், பாகிஸ்தானுடன் இணைந்து சீனா -பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC – China-Pakistan economic corridor) என்ற திட்டத்தை மேற்கொண்டுவருகிறது சீனா. இதைத் தொடர்ந்து, ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் சீனா உருவாக்கியிருப்பது, One Belt-One Road (OBOR) எனப்படும் ‘ ஒரு சூழல் – ஒரு பாதை’ என்ற திட்டம். பண்டைக்காலத்தில் ・பட்டுப்பாதை・என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளையும் ஆசியாவையும் இணைக்கும் வணிகப்பாதை ஒன்று இருந்தது. அதை மீண்டும் உருவாக்குவதுதான், புதிய பட்டுப் பாதை・(New Silk road) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தத் திட்டம்.
இது தொடர்பான மாநாட்டை, பெய்ஜிங்கில் கடந்த ஆண்டு மே 14, 15 தேதிகளில் சீனா நடத்தியது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதுதவிர அமெரிக்கா உள்பட 130-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் பாதை செல்வது பிரச்னைக்குரிய வழியில்! பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள நம் காஷ்மீரில் உள்ள கில்கிட் – பல்டிஸ்தான் வழியாக இந்தப் பாதை செல்கிறது. நமக்குச் சொந்தமான ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்க, அந்த நாட்டோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அங்கு சீனா சாலை அமைக்கிறது. இதில் எப்படி இந்தியா பங்கேற்க முடியும்?
ஆனால், எப்படியாவது இந்தியாவைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. ஆனாலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்தத் திட்டத்தால் உலகளாவிய அளவில் சீனாவின் பொருளாதார, வணிக ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதால் ஏற்கெனவே அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பும் புறக்கணிப்பும், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதை சீனா, பாகிஸ்தான் தலைவர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையிலேயே வெளிப்படுத்தினர். மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய சீன அதிபர் ஷி ஜின் பிங், “இது இந்த நூற்றாண்டின் முக்கியமான திட்டம். இது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பயனளிக்கும்’’ என்றார். ஆனால் சீனாவின் இந்தத் திட்டம் அதன் ஆதிக்கத்துக்கு வழிவகுப்பதாகவே உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.
—————————————————————————————————————————————————–
Leave a Reply
You must be logged in to post a comment.