அண்டத்தொகுதிக்குள் சூரியன்

அண்டத்தொகுதிக்குள் சூரியன்
என்பது ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்ற பல்லாயிரம் வின்மீன்கள் நமது அண்டத் தொகுதிக்குள் உள்ளன. சூரியக் குடும்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வரை கோள்களின் எண்ணிக்கை 9 .அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ. ஆனால் புளூட்டோ கோள்கள் என்னும் வரையறுக்குள் வராத காரணத்தால் அறிவியலாளர்களால் நீக்கப்பட்டுள்ளது. எனவே மேலே சொன்ன வற்றுள் புளூட்டோ நீங்கலாக 8 கோள்கள் மட்டுமே கோள் கள் என்னும் தகுதியைப் பெற் றுள்ளன.
சூரியன் கோள் அல்ல விண்மீன். சந்திரன் கோள் அல்ல துணைக் கோள். ஆனால் ஜாதக ஜோதி டத்தில் 9 கிரகங்கள், கை ரேகை . ஜோதிடத்தில் 7 கிரகங்கள் என்றால் சீன ஜோதிடத்தில் 5 கிரகங்கள் மட்டுமே. கைரேகை ஜோதிடத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் சீன ஜோதிடத்தில் கிரகங்கள் அல்ல. இவை எப்படி உருவாக்கப்பட்டன? என்ன அடிப்படை? வெறும் கண்ணால் வானத்தில் உலா வரும் சூரியனை,சந்திரனை நாம் பார்ப்பது போல சில கோள்களையும் நம்மால் பார்க்க இயலும்.
சூரியன் மறைவதற்கு முன்போ அல் லது தோன்றுவதற்கு முன்போ புதன் கோளை நம்மால் பார்க்க இயலும். வெள்ளிக் கோளை மேற்கு அடிமானப் பகுதியில் மாலை விண் மீனாக, கிழக்கு அடிமானப் பகுதியில் காலை விண் மீனாகப் பார்க்கலாம். செவ்வாய் கோளை ஆண்டு முழு வதும் அநேக நேரங்களில் பார்க்கலாம். பூமியிலிருந்து நோக்கும்பொழுது செவ்வாய் கோள் வானத்தில் சூரியன் இருக்கும் இடத்திற்கு எதிர் திசையில் இருக்குமானால் அது தெளிவாகத் தெரிகிறது. வெற்றுக் கண்களால் செவ் வாய் கோளினைப் பார்க்கும் பொழுது .அதனுடைய நிறம் சிவப்பாகத் தோன்றுகிறது . வானத்தில் மேகங்களால் வியாழன் கோள் மூடப்பட் டுள்ளது .
இத்தகைய மேகங் களில் மிகப்பெரிய சிவப்பு புள்ளி ஒன்றைப் பார்க்க இயலும். சனிக் கோளினை வெற்றுக் கண்களால் பார்க் கும்போது மஞ்சள் நிறமாகத் தெரியும் கலிலியோ தொலை நோக்கியைக் கொண்டு 1610ம் ஆண்டில் சனிக் கோளை உற்று நோக்கினார். யுரேனஸ் கோளினை தொலை நோக்கி யினைக் கொண்டு பார்த்தால் பச்சை நிறமாகத் தெரியும்.
வெறும் கண்ணால் வானத்தைப் பார்த்தபொழுது நகர்ந்த கோள்களை தெய் வங்கள் என கிரேக்க மற்றும் ரோமானியர்கள் நம்பியுள் ளனர். அவற்றிற்கு ரோம் கட வுள்கள் பெயரையே சூட்டி யுள்ளனர். கைரேகை ஜோதிடம் தோன்றிய நேரத்தில் 5 கோள்களை மனிதனால் காணமுடிந்திருக்கிறது-அத்தோடு சூரியனையும் சந்திர னையும் சேர்த்து 7 கிரகங்கள் என்று கூறியிருக் கின்றான். ஜாதக ஜோதிடம் சமீபத்தில் புனையப் பட்டது எனவே 9 கிரகங்கள் என்று கூறியிருக்கின்றான். சீன ஜோதிடத்தில் கண்ணுக்குத் தெரிந்த 5 கிரகங்களை மட் டும் வைத்துக்கொண்டு ஜோதிடம் சொல்லியிருக் கின்றார்கள்-
ஆனால் அவர் கள் இந்த 5 கிரகங்களும் சூரியன், சந்திரனிலிருந்து வேறுபட்டது என்று உணர்ந்திருந்திருக் கின்றார்கள். விண்மீன்களைப் பார்த்த மனிதன் தனக்குப் பழக்கப் பட்ட விலங்குகளின் பெயரைக் கொடுத்திருக்கின்றான். சீன ஜோதிடத்தில் எலி, காளை மாடு, புலி, முயல், முதலை, பாம்பு, குதிரை, குரங்கு, செம்மறி ஆட்டுக் கிடா, சேவல், நாய், பன்றி என்ற 12 விலங்குகள் ராசி களாகக் கொள்ளப்பட்டுள்ளன.
நகரும் கோள்கள் மற்றும் நகராத ஏதோ ஒரு உருவ அமைப்புள்ள விண்மீன் கூட்டங்கள் – இவைதான் ஜோதிடத்தின் அடிப்படை. நகராது நிலையாக இருக்கும் விண்மீன் கூட்டங்களுக்குள் நகரும் கோள்கள் – 12 விண்மீன் கூட்டங்களுக்குப் பெயர் சீனாவில் எலி, காளை, மாடு, புலி, முயல், முதலை, பாம்பு எனக் கொடுத்திருப்பது போல மேலை நாடுகளில் ஏரிஸ், டாரஸ், ஜெமினி, கேன்சர், கஸ்ப், விர்கு,லிப்ரா, ஸ்கார்பியோ, சகாட்டியாரி யஸ், கேப்ரிகார்ன், அக்கியுரி யஸ், பிஸ்சியஸ் என ஆங்கிலப் பெயர் கொடுத்திருக்கின்றார் கள் . நமது ஆட்கள் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயர் கொடுத்திருக் கின்றார்கள்- இதற்கான சில உருவப் படங் களையும் கொடுத்திருக்கின்றார்கள்.
ஆனால் மேலை நாடுகளில், சீனாவில் இருந்த ஜோதிடத்தில் இல்லாத தன்மை அசுவினி எனத் தொடங்கி ரேவதி வரை முடியும் நட்சத்திரங்களாகும். கோள்கள் சூரியனைச் சுற்றி வருவது அறிவியல். ஆனால் சனிக் கோள் நகர் வதை சனிப் பெயர்ச்சி என்றும் அதனால் தனிப்பட்ட மனி தர்கள் வாழ்வில் மாற்றங்கள் வரும் என்கிறார்களே எப்படி? சனிப் பெயர்ச்சி என்னும் புரட்டுக்கு கூட்டம் சேர்கிறது, படித்த பாமரர்கள் பலரும் பரிகாரம் என்னும் பெயரில் கோயிலுக்கும் அது சார்ந்த கொள்ளைக் கும்பலுக்கும் அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றவுடனே குருப் பெயர்ச்சி மற்றும் சமீப காலமாக ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி என்கிறார்களே?. இது அறி வியலா?
பத்திரிக்கைகள் பக் கம் பக்கமாக குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி என வெளியிடு கின்றார்களே- இது அறிவு டமையா? ஒரு அறிவுடமைச் சமுதாயம் அமையவிடாமல் தடுக்கும் முயற்சியில்லையா இது? இதற்கு ஊடகங்கள் துணை போகலாமா? என்பதே நமது கேள்வி.இதோ தந்தை பெரியார் பேசுகின்றார். ” ஜோசியம் மெய்யென்றோ, அது மனித சமூகத்துக்குப் பயன்படக் கூடியதென்றோ இருக்குமானால், காற்று அலைகளில் இருக்கும் சப்தத் தையும், அசைவையும் கண்டு பிடித்த சையன்சுக் காரர்களும், கம்பியில்லாத் தந்தியில் சப்தம், கம்பியில்லாத் தந்தியில் உருவம், கம்பியில்லாத்தந்தி யில் அசைவு ஆகியவகை களைக் கண்டுபிடித்த நிபுணர் களும், கல், புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றில் உள்ள உயிர்களைக் கண்டு பிடித்த நிபுணர்களும், ஆகாயத்தில் மேலாக பல கோடி மைல் தூரமும்,கீழாகப் பல லட்ச மைல் தூரமும் கண்டு பிடித்தவர்களான வான ஞானிகளும், பெரும் பெரும் அரசாங்கமும் இப்படிப்பட்ட பெரும் லாபகரமான விஷயத்திற்குப் பெருத்ததொரு ஆராய்ச்சிசாலை வைத்துப் பரிசீலனை செய்து, சோதிட சாத்திரத்தை மக்களுக்குப் பயிற்சி செய்து, மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங் களை அடியோடு ஒழித்திருக்க மாட்டார்களா என்பது மிகவும் யோசிக்கத்தக்க விஷயமாகும்” என்கின்றார். (சோதிட ஆராய்ச்சி – பக்கம் 2)
நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள் கூட்டாக
ஜோதிடம் என்பது பொய் என அறிவித்த பிறகும், ஜோதிடம் விஞ்ஞானம் என சில ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? 
—–வா.நேரு
About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply