FACE BOOK

FACEBOOk

Langes Tharmalingam Brampton, Ontario 

2 பிப்ரவரி,

யாழ்ப்பாண அரச வரலாறு!இலங்கையின் வடபகுதியில் உள்ளது யாழ்ப்பாணம். இப் பெயர் தற்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தையும் குறிக்கப் பயன்படுவது என்றாலும், நாம் “யாழ்ப்பாண அரசு” என குறிப்பது இவற்றிலும் பெரிய ஒரு நிலப்பகுதியை ஆகும்.அதாவது, இன்றைய வடமாகாணம் முழுவதையும், கிழக்கின் பகுதிகளையும், புத்தளம் வரையிலான மேற்குக் கரையோரங்களையும் உள்ளடக்கி இருந்தது. இதனுடைய எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது ஆயினும், இதனுடைய தலைமை இடமும், மக்கட்செறிவும் யாழ்ப்பாணக் குடானாட்டிற்கு உள்ளேயே இருந்து வந்திருக்கிறது. இதனாலேயே யாழ்ப்பாண அரசு எனப்படுகிறது.பல நூற்றாண்டு காலமாக மாறி மாறி அந்த அரசாட்சிகள் அனைத்தும் இவ்வாறே செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் பல உள்ளன.யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றான “வையாபாடல்” இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது.

இவ்வாறு இலங்கையில்இதுவே பிற்காலத்தில் (20ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் 21ம் நூற்றாண்டின் முதல் 8 ஆண்டுகள் வரை) வேலுப்பிள்ளை பிரபாகரனின் (தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்) தலைமையில் நடைமுறையில் இருந்த நிழல் அரசிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருந்தது. இருப்பினும் அப்போதய “யாழ்ப்பாண அரசாக” கருதப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பே வேலுப்பிள்ளை பிரபாகரனின் காலத்தில் “தமிழீழம்” என பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது. பெயரில் மாற்றம் வந்ததைப் போல் தமிழீழத்தின் நடுப்பகுதியான திருகோணமலையை தலை நகராக அறிவித்திருந்த போதும், அரசியல், மற்றும் போரியல் சூழல் கருதி வன்னிப்பகுதியை தலைமையாக கொண்டு ஆட்சி நடாத்தி வந்திருந்தனர்.

யாழ்ப்பாண வரலாற்றை வசதி கருதிப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம்.ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்டகாலம். (கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்)ஆரியச் சக்கரவர்த்திகளின் காலம் (கி.பி 12 ஆம் நூஆ – கி.பி 1620)குடியேற்றவாத ஆட்சிக் காலம் (கி.பி 1620 – கி.பி 1948)ஆங்கிலேயர் ஆட்சிகளுக்குப் பிற்பட்ட காலம். ( கி.பி 1948 க்குப் பின்)பிரபாகரன் ஆட்சிக் காலம் (கி.பி 1972 – கி.பி 2009 வரையான தமிழீழ நிழல் ஆரசுக் காலம்)

வெளிப்புறங்கள் மற்றும் நினைவிடம் இன் படமாக இருக்கக்கூடும்

04-02-2021

——————————————————————————————————————-

Sriskand Subramaniam

வீரமாமுனிவர்

என்ற பெஸ்கி பாதிரியார்அவர்களின் #நினைவுதினம் இன்று 04/02.அவரின் தமிழ் பணியை போற்றுவோம்..தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறிஸ்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத இவர்கள் தமிழைப் பயின்று, அம் மொழிக்கே வளம் சேர்த்தனர். சமயப் பணியாற்ற வந்த அவர்கள் தமிழின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து தமிழ்ப்பணியையே முழுநேரப் பணியாகக் கொண்டனர். அவர்களுள் தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத ஒருவர் வீரமாமுனிவர்.இத்தாலியில் இவர் பிறந்தது 1680 நவம்பர் 9ஆம் நாள். கான்சுடாண் டைன்யுசேபியுசு சோசப்பு பெசுகி என்பது இவரது இயற்பெயர். இந்தியாவில் கிறித்துவ சமயப்பணி புரிவதற்காக வந்த முனிவர், 1711 மதுரை மறைப்பணிக் களத்துக்கு வந்தார்.மதுரைப் பகுதியில் 1606 முதல் 1645 வரை பணியாற்றிய இராபர்ட் தெ நொபிலி அடிகளார் ஐரோப்பிய வாழ்க்கை முறைகைளைக் கைவிட்டு, தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில் வாழ்ந்தார். காவியுடை அணிந்து, சைவ உணவு உண்டு வாழ்ந்தார்.

வீர மாமுனிவரும் இவரது வாழ்க்கை முறையையே பின்பற்றினார். பெசுகி என்ற தம் பெயரை ‘தைரியநாதர்’ என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே ‘வீர மாமுனிவர்’ என பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத் தொடங்கினார்.வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் ‘அடியார் வரலாறு’ என்னும் நூல் அச்சிடப்பட்டது.

ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் ‘ஏ’ ‘ஓ’ போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் ‘எ’ ‘ஒ’ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. ‘தேம்பாவணி’ என்னும் பெருங்காப்பியமும், ‘திருக்காவலூர் கலம்பகம்’ முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை.

கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண ‘நிகண்டு’களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த ‘சதுரகராதி’ முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.6.இது தவிர, ‘தமிழ் – இலத்தீன் அகராதி’, போர்த்துகீசியம் – தமிழ் – இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் – இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார்.

போர்த்துகீசியம் – தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று”தமிழ் உரைநடைக்குத் தந்தை தத்துவ போதகரே என்பர். அது உண்மை எனினும், இவரால் அது வளம் பெற்று மிக்குயர்ந்தது” என்று தவத்திரு. தனிநாயகம் அடிகளார் கூறுவதை யாரும் மறுக்க இயலாது.”18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருள் வீரமாமுனிவரும் ஒருவர்” என்று ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எழுதிய அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ளார்.

திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சி.யு.போப்(G.U.Pope), இவரைத் ‘தமிழறிஞருள் மிகச் சிறந்தவர்’ என்று போற்றியுள்ளார்.”திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடி வீர மாமுனிவரே” என்று செக் நாட்டுத் தமிழறிஞர் ‘கமல் சுவலமில்’ பாராட்டியுள்ளார். எமிலியோ தேவி என்ற இத்தாலி அறிஞர், ”கீழ்த்திசை அறிஞருள் மிகவும் புகழ் பெற்றவர் வீர மாமுனிவர்” என்று கூறியுள்ளார்.இவ்வாறு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பலரும் புகழ்ந்து போற்றியுள்ளனர். மைக்கேல்ராஜ்.

——————————————————————————————————————-

காலைக்கதிரின் இரண்டு முகம்

நக்கீரன்

ஒரு பக்கம் “இத்தகைய திருப்புமுனையை ஏற்படுவது என்றால் மக்கள் எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுப்பது என்றால் தமிழர் தரப்பில் புதுப் புதுமுகங்கள்.

தலைமைகளுக்கு வரவேண்டும், துடிப்புள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், நீண்ட காலம் நாடாளுமன்றக் கதிரைகளை சூடேற்றிக் கொண்டிருப்பவர்கள் ஒதுங்கி இடமளிக்க வேண்டும் என்று கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் பல தடவைகள் வற்புறுத்தி வந்தார் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன். ஆனால் நாடாளுமன்றக் கதிரையை சூடேற்றி அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை”  என்று

ஒரு பக்கம் அனல் பறக்க எழுதிவிட்டு மறுபுறம் வீட்டில் சாய்மனைக் கதிரையில் இருந்து  சூடேற்றிக் கொண்டிருக்கும் செல்லாக்காசு – ஈணவும் தெரியாது நக்கவும் தெரியாத – அரசியல்வாதி விடும் உப்புச்சப்பற் ஊடக அறிக்கையை 4 அங்குலத்தில்  தடித்த தலைப்பிட்டு – கோதாக்குறைக்கு படத்தையும் போட்டு – முழுப்பக்கத்தில் பிரசுரிப்பது எந்த ஊர் நியாயம் – எப்படிப்பட்ட ஊடக அறம்  என்பது விளங்கவில்லை?

போர் முடிந்த பின்னர் தமிழர் தரப்பு ஏதாவது உருப்படியாகச் செய்திருந்தால் அது தமிழ்த் தேசிய சிறுபான்மை இனம் பற்றிய சிக்கலை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளது உதவியுடன் – ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டு முதல் காத்திரமான  தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியதுதான்! இலங்கையின் இனச் சிக்கல் இன்று ஐநா மட்டத்தில் பேசு பொருளாக இருக்கிறது. அந்தத் தீர்மானங்கள் இலங்கைப் பேரினவாத அரசின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் வாளாகும். ஆசிரியர் அடிக்கடி சொல்லும் பழமொழியில் சொல்வதானால் காலைச் சுற்றிய பாம்பு. கடிக்காது விடாது.

ஆனந்தசங்கரிக்கு மாதம் ஒரு அறிக்கைவிடத் தெரியுமே ஒழிய  உருப்படியாக ஒன்றும் செய்யத் தெரியாது.

மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் செய்யும் நா.உறுப்பினர்கள் நாற்காலியில் உட்காரத்தான் செய்வார்கள். அதனை சூடாக்கத்தான் செய்வார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? நாடாளுமன்றம் என்ன மல்யுத்தம் செய்யும் மேடையா? அது ஒரு பேச்சுக் கச்சேரி நடக்கும் அவை என்பது எல்லோருக்கும் தெரியும். மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 10-14 எமது பிரதிநிதிகள் தங்கள் சக்திக்கு அப்பால் செய்துவருகிறார்கள்.

ஆனந்தசங்கரியின் சாதனை என்ன? எதை வெட்டிப் புடுங்கி வேரோடு சாய்த்தார்? அவர் கடந்த 30 ஆண்டுகள் சாதித்தது என்ன? 2004 ஆம் ஆண்டு  நடந்த நாடாளுமமன்றத் தேர்தல் தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்.  

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த நா. தேர்தலில் ஆனந்தசங்கரியாரின் தமிழர் ஐக்கிய விடுதலை  முன்னணிக்கு வட கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் கிடைத்த வாக்குகள் வெறுமனே 9,856 (0.08) மட்டுமே! யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் (அவரது சொந்த மாவட்டத்தில்) கிடைத்த வாக்குகள் 1,318 (0.37) மட்டுமே!

‘காலைக்கதிர்’  போன்ற நாளேடுகள்  சேடம் இழுக்கும் அவரது கட்சிக்கும் அவருக்கும்  கொடுக்கும் விளம்பரம் காரணமாகவே  ஆனந்தசங்கரி அரசியலில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி இடுப்பொடிந்தவர்களுக்கு கொடுக்கும் விளம்பரம் காரணமாக அவரைப் போன்றவர்கள் ஆளாளுக்குக்  கட்சிகளை தொடங்கி தங்களைத் தாங்களே செயலாளர் நாயகம் என்றும் பொதுச் செயலாளர் என்றும் அறிவித்துவிட்டு  தமிழ்த் “தலைவர்”களாக பவனி வருகிறார்கள்! அவர்களுக்குக்  காலைக்கதிர் விளம்பரம் கொடுக்கிறது. அவர்களுக்குப் பின்னால் ஆனை, சேனை, அணிதேர், புரவிப் படைகள் இருக்கின்றன என்ற மாயையை காலைக்கதிர் தோற்றுவிக்கிறது!

2020 இல யாழ்ப்பாணத் தேர்தலில்  மாவட்டத்தில் நின்று எண்ணி 2,128 (0.59) வாக்குகள் எடுத்து கட்டுக்காசைப் பறிகொடுத்த அரசியல்வாதி தனது தோல்விக்கான சப்புக்கட்டை -தோல்விக்கான விளக்கத்தை – காலைக்கதிர் அரைப்பக்கதில் வெளியிடுகிறது.

இப்படித் துரும்பை தூணாக்கிக் காட்டும்  இரசவாதவித்தை காரணமாகவே நேற்றுப்  பெய்த மழைக்கு அடுத்த நாள் முளைக்கும் காளான்கள் போல் கட்சிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்  முளைக்கின்றன!

மேலும் “ரணில் அரசுடன் கொஞ்சிக் குலாவிய சுமந்திரன் தரப்பு, கோட்டா அரசுடன் கோபாவேசம் கொள்ளவும் தயார் என்பது நல்லதோர் செய்தி” என்ற கிண்டல் வேறு.

அரசியலில் சூழ்ச்சிகள் தேவை. நால்வகை உபாயங்களை சூழ்நிலைக்கு  ஏற்பப் பயன்படுத்த வேண்டும். ஒரு நாள்  ஒரு அடி பின்னுக்கு வைத்துவிட்டு இன்னொரு நாள் இரண்டு அடி முன்னுக்கு வைப்பதற்குப் பெயர்தான் சாணக்கியம். இதனைத்தான் ததேகூ இன் தலைமை செய்தது!

இரணில் அரசை ஏன் சுமந்திரன் தரப்பு அதரித்தது என்பதற்கான காரணம் அப்போது தெரிந்திருக்காவிட்டாலும் இப்போது தெரியவில்லையா? முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவம் இன்று தமிழ்மக்கள் மீது பாய்ந்து பிராண்டுவது கண்ணுக்குத் தெரியவில்லையா? இந்துக் கோயில் நிருவாகிகள் நீதிமன்றம் வீடு என்ற அலைவது தெரியவில்லையா?  தனியார் காணியில் விகாரை கட்ட  சவேந்திர சில்வா பவுத்த தேரர்கள் புடைசூழ தையிட்டிக்கு வந்து அத்திவாரக் கல் நாட்டியது கண்ணுக்குப் படவில்லையா? இரணில் அரசு  இராணுவும் பிடித்து வைத்திருந்த மொத்தம் 47,604 ஏக்கர் காணியை விடுவித்ததே? இது சாதனை இல்லையா? மயிலட்டி மீன்பிடித்துறைமுக அபிவிருந்தி, காங்கேசன்துறை அபிவிருந்தி, யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலைய அபிவிருத்தி, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடம் யார் காலத்தில் நடந்தது? மொத்தம் 217 அரசியல் கைதிகளில் 136 பேர் யாரது ஆட்சியில் விடுவிக்கப்பட்டனர்? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நக்கீரன் 03-02-2021

————————————————————————————————————-

1 நபர் மற்றும் , ’சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் கமல் குணரத்ன தெரிவிப்பு இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 06’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
Shankeerthanan Kugathasan

8 மணி நேரம்  · ஜனாதிபதியோ பிரதமரோ பௌத்தமத தலைவர் கதிரையில் இருக்க அவர்களின் கால்களில் வீழ்ந்து ஆசி பெறுகிறார்கள் எங்கட மத தலைவர்கள் ஓடிப்போய் கால்களில் வீழ்கிறார்கள் மிடுக்கு என்பது தனக்குத்தானே வரவேண்டும்

10 பேர் மற்றும் நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் இன் படமாக இருக்கக்கூடும்

Arunakiri, Jayamathan Gnanakanthan மற்றும் 31 பேர்19 கருத்துக்கள்விரும்புகருத்துத் தெரிவி

Shankeerthanan Kugathasan

8 மணி நேரம்  · ஜனாதிபதியோ பிரதமரோ பௌத்தமத தலைவர் கதிரையில் இருக்க அவர்களின் கால்களில் வீழ்ந்து ஆசி பெறுகிறார்கள் எங்கட மத தலைவர்கள் ஓடிப்போய் கால்களில் வீழ்கிறார்கள் மிடுக்கு என்பது தனக்குத்தானே வரவேண்டும்

33Yogoo Arunakiri, Jayamathan Gnanakanthan மற்றும் 31 பேர்19 கருத்துக்கள்விரும்புகருத்துத் தெரிவி


About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply