வெடுக்குநாறி மலையும் அண்மைய சர்ச்சைகளும்

வெடுக்குநாறி மலையும் அண்மைய சர்ச்சைகளும்

வவுனியா வடக்கின் நெடுங்கேணி நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கின்றஎல்லைக்கிராமங்களில் ஒன்றுதான் ஒலுமடு. ஒலு என்று சொல்லப் படுகின்ற ஒரு வகைத் தாவரச் செடிகள் இங்குள்ள குளத்தில் அதிகமாக வளர்ந்து நின்ற காரணத்தினால் ஒலுமடு என்ற காரணப் பெயரைப் பெற்றது இந்தக் கிராமம்.

எளிமையும் இயற்கை அழகும் நிறைந்திருக்கின்ற கிராமத்தின் மையப்பகுதியிலிருந்து வண்டில் பாதை வழியாக சுமார் நான்கு கிலோமீற்றர்கள் வனப்பகுதிக்குள் பயணப் படுகின்ற போது இயற்கை அரணென நிமிர்ந்து நிற்கின்ற வெடுக்குநாறி மலைத் தொடர் பகுதியின் ஆரம்பப் பகுதியைக் காணலாம். பெரும் கற்கள் உருண்டு திரண்டு காட்டின் பெரு மரங்களின் இடையே உருட்டி விடப்பட்டதைப்போல காட்சியளிக்கும் சிறு குன்றுப் பகுதிகளும், ஓங்கி வளர்ந்து நிற்கின்ற காட்டு மரங்களும் அவற்றின் கீழ் உள்ள சிறு புதர்களும் கொடிகளும் செடிகளுமாக அந்த வனமும் இணைந்த மலைக்குன்றுகளும் காட்டுகின்ற காட்சிகள் அற்புதமானவை.

காட்டின் மணத்தை நுகர்ந்துகொண்டும், காட்டின் ஒலியை செவிமடுத்துக் கொண்டும் நடந்து செல்ல வெடுக்குநாறி மலையின் முதற் பகுதியை காணலாம்.

மலையின் முன்னும் பின்னுமாக ஒரு வகை நாற்றம் கொண்ட மரங்கள் காணப் படுவதால் வெடுக்குநாறி மலை என்கின்ற காரணப்பெயரை இந்த மலை பெற்றுக்கொண்டதென அறிய முடிகிறது.

இந்தப்பகுதியில்தான் இந்த மலையின் இக்காலத்து சர்ச்சைக்குரிய தொல்லியல் எச்சங்கள் வெளித்தெரிய ஆரம்பிக்கின்றன. இங்குள்ள மலையின் முகப்புப் பகுதியில் புராதன பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு அவ்எழுத்துக்கள் மழை மற்றும் வழிந்தோடும் நீரினால் அரிப்பிற்கு உள்ளாகாத வகையில் எழுத்துக்களின் மேற்பகுதியில் மலையைக் குடைந்து சிறு ஆழத்தில் நீரோட வழி செய்யப்பட்டிருக்கிறது. இங்கு வினாயகர், அம்மன், வைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிலை வைத்து வழிபடுகின்றார்கள் கிராம மக்கள்.

உன்னிப்பான அவதானத்திற்குரிய மலையின் இந்த முதற்பகுதியைக் கடந்து மேலும் சில பல அடிகள் பயணப்பட மலைத்தொடரின் அடுத்த பகுதி வரவேற்கிறது. மென் சாய்வு கொண்ட இப்பகுதியால் மலையில் மேல் ஏறிச்செல்ல ஒரு அகழி போன்ற சிறிய நீர்த் தடாகம் வரவேற்கிறது. ஒரு மனிதனை மூடக்கூடிய அளவிற்கு நீர் நிறைந்து காணப்படுகின்ற சிறு நீர்த்தடாகத்தில் நீர் வற்றாமல் எப்பொழுதும் நிறைந்திருக்கும் என்கின்கின்றார்கள் கிராம மக்கள். அந்த நீர்த்தடாகத்திற்கு மேலே மலையின் சற்று
உயரமான பகுதியில் நாகத்தை பிரதிபலிக்கும் கற்தெய்வ வழிபாடு இடம்பெறுகிறது.

வெடுக்குநாறி மலை விவகாரம் : இந்து அமைப்புக்கள் ஆர்வம் காட்டாமை குறித்து  மக்கள் விசனம் | Virakesari.lk

நீர்த்தேக்கத்தில் இருந்து பார்க்கின்ற போது மலைநோக்கிச் செல்லும் இடப்பகுதியின் உயரமான ஓரிடத்தில் மலையோடு தொடர்பற்ற, எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டது போன்ற பாரிய கல் ஒன்று சிறு சிறு சதுர வடிவான கற்களை அடித்தளத் தாங்கிகளாக முண்டு கொடுக்கப்பட்டு நிமிர்த்தி வைக்கப்பட்டுள்ளது. புராதன தொழில் நுட்பத்தின் இன்னும் ஒரு வடிவத்தை பறைசாற்றுகின்ற இப்பகுதியை கடந்து மலையில் மேல் நோக்கிச் செல்லுகின்ற போது ஒரேசீராக குடையப்பட்ட சிறிய சிறிய குழிகள் தென்படுகின்றன. மருந்துகள் மற்றும் பச்சிலைகளை அரைப்பதற்கான குழிகளாக அவை காணப்பட்டிருக்கலாம் என்கின்ற ஐதீகத்தையும் நம்பிக்கையையும் இக்குழிகளோடு இணைத்துப் பார்க்க இடமிருக்கிறது.

குழிகள் காணப்படுகின்ற அப்பகுதியை கடந்து இன்னும் மேற்சென்று கீழிறங்க மலைத்தொடரில் இயற்கையாகவே அமையப்பெற்ற சிறு குன்றொன்று தென்படுகின்றது. பார்ப்பதற்கு நாகத்தின் தலை போன்று தென்படுகின்ற அந்தக் குன்றில் பாம்பின் முகத்தில் தெரிகின்ற பக்க வளைவுகள் விளிம்புச் சதைகளைப்போன்ற உன்னிப்பான அவதானத்திற் குரிய கற் சிற்ப வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன. நாக பாம்புகள் அவ்விடத்தில் உலவுவதாகவும் தாங்கள் பிரசாதமாக படைக்கின்ற பாலை அவை குடிப்பதாகவும் நம்புகின்றார்கள் கிராம மக்களும் பக்தர்களும்.

ஆடு,மாடு மேய்க்கும் வீர இடைச்சி|அழகு முனியம்மா பாடல்|தல சாரதி| - YouTube

அந்தப்பகுதியில் இருந்து மலையில் செங்குத்தாக இன்னும் மேல் நோக்கிச்செல்ல மலையின் உச்சிப்பகுதிக்குச் செல்வதற்குரிய சிறு சமவெளிப் பகுதி தென்படுகின்றது. இச் சமவெளிப்பகுதிக்கு செல்வதற்காக அலுமினிய வேலைப்பாடுகளுடை படிகளை ஆலய நிர்வாகத்தின் முயற்சியால் அமைத்திருக்கிறார்கள். ஆனால் முழுமையாக அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதியை வழங்காத நிலையில் அச் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கினையும் தொடர்ந்திருக்கிறது திணைக்களம்.

மலையின் சிறு சமவெளிப்பகுதியிலிருந்து அப்பகுதியின் இரம்மியமான வனப்பையும் சூழலையும் அனுபவிக்க முடிகிறது. பின்னர் அங்கிருந்து மலையின் அடுத்த உச்சிக்கு ஏறிச் செல்வதற்கான எவ்விவிதமான படிகளோ, அமைப்புக்களோ அற்ற நிலையில் இயற்கையாக அமைக்கப்பட்டிருக்கின்ற சிறிய மரக்குற்றியிலான தாங்கிகளையும், பெருங் கொடிகளையும், மரங்களையும் பற்றிக்கொண்டு மேலே ஏற முடிகின்றது. பெரும் பிராயத்தனத்தின் பின் மேல் நோக்கி ஏறிச்செல்ல மலையின் உச்சியில் கற் பாறைகளை அடுக்கி அவற்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கின்ற புராதன ஆதி இலிங்கேச்சரர் கண்களில் தென்படுகிறார்.

கூம்பு வடிவிலான பாறைய சதுரக்கற்களின்மேல் அடுக்கி ஒட்டி நிமிர்த்தி வைக்கப் பட்டிருப்பது போன்று தென்படுகின்றது மக்களின் நம்பிக்கைக்குரிய ஆதி இலிங்கேச்சரர் சிவலிங்கம்.

இந்தச் சிவலிங்கம் இராவணன் காலத்திற்குரியதாக இருக்கலாம் என்கின்ற நம்பிக்கைய
வெளிப்படுத்துகின்றனர் கிராமமக்கள்.

இயற்கை மூலிகைகள் நிறைந்த அந்தப் பகுதியிலிருந்து இன்னும் சற்று மேல் நோக்கி
ஏறிச்செல்ல அந்த மலையின் சமவெளி தென்படுகின்றது. அங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிட்டை செய்து வழிபடுகிறார்கள் கிராம மக்கள்.

சுமார் முன்நூறு அடிகளுக்கு மேற்பட்ட மலையுச்சியின் சமவெளியில் ஏறிநிற்க காட்டின் காற்று மேனியைத் தழுவ அங்கிருந்து வன்னிப் பிராந்தியத்தின் அழகை கண்டுகொள்ள முடிகின்றது. ஒரு பக்கம் வவுனியாவின் காட்சிகளும், மறுபக்கம் மதவாச்சியின் காட்சிகளும், இன்னும் ஒரு பக்கம் பதவியா போன்ற பிரதேசங்களும் தென்படுகின்றன என்பது கிராம மக்களின் கணிப்பு.

புவியின் பௌதீகவியல் ரீதியில் இப்படியான மலை உருவாக்கச் செயற்பாட்டிற்கு பல்வேறு காரணிகள் துணை புரிகின்றன.

புவியின் உட்பகுதியில் இயங்குகின்ற மேற்காவுகளை ஓட்டங்களின் காரணமாகவும், புவித்தகடுகளின் ஒருங்குதல் செயற்பாட்டின் காரணமாகவும் மலை உருவாக்கச் செயற்பாடுகள் வெடுக்குநாறி மலையும் அண்மைய சர்ச்சைகளும்!

About editor 3042 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply