தமிழ்மக்களுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளையே மீண்டும் கொடுத்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர்!

தமிழ்மக்களுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளையே மீண்டும் கொடுத்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர்!

நக்கீரன்

‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்ற பழமொழிக்கு ஒப்ப 13 ஏ போதாது அந்தத் திருத்தச் சட்டம் மேம்படுத்தப்பட்டு மத்திய அரசுக்குள்ள அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே பகிரப்பட்ட காணி அதிகாரம், பொலீஸ் அதிகாரம் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்றும்  தமிழர் தரப்பு நாடாளுமன்றத்துக்கு  உள்ளேயும் வெளியேயும் குரல் எழுப்பி வருகிறது. இலங்கை அரசு  சமத்துவத்தின் அடிப்படையில் (equality)  – நீதியின் அடிப்படையில் (justice) –கெளரவத்தின் (dignity) அடிப்படையில் – சமாதானத்தின் (peace) அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் திரு சம்பந்தன் போன்றோர்  இடித்துரைக்கிறார்கள்.

மே 19, 2009 இல் போர் முடிந்த கையோடு மே 25 இல் இலங்கைக்கு வருகை தந்த அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களுக்கு இன்றைய பிரதமர் மகிந்த இராசபக்ச இனச் சிக்கலுக்குத் தீர்வாக 13 ஏ சட்ட திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளித்தார். பொதுச் செயலாளர் பான் கீ மூன் – சனாதிபதி மகிந்த இராசபக்ச இருவரும் மே 26 இல் விடுத்த கூட்டறிக்கையில் கூறியிருந்தார்கள்.

அனைத்து சமூகங்களின் அபிலாசைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்வதும்  நீடித்த அரசியல் தீர்வை நோக்கிப் பணியாற்றுவதும் நீண்டகால சமூக – பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கு அடிப்படை என்று ஜனாதிபதி இராசபக்சனவும் பொதுச்செயலாளரும் ஒப்புக்கொண்டனர். அனைத்து பிரிவுகளுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தேசிய தீர்வு உருவாகும் என்று இலங்கை சனாதிபதி 2009 மே 19 அன்று நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கையில் உள்ள உறுதிமொழியை பொதுச்செயலாளர் வரவேற்றார். 13ஏ ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும், புதிய சூழ்நிலைகளில் தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் ஒரு பரந்த உரையாடலைத் தொடங்குவதற்கும்  இந்த செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கும் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கும் சனாதிபதி  இராசபக்ச தனது உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்தினார்.

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின் அடிப்படையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பது மற்றும் பாதுகாப்பதிலும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை பாதுகாப்பதிலும், தாம் உறுதிபூண்டிருப்பதாக  தெரிவித்தது.  (https://www.un.org/press/en/2009/sg2151.doc.htm)

ஆனால் இராசபக்ச ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன் வரவில்லை. “13ஏ + என்று தான் சொல்லியது ஒரு மேல்சபையை உருவாக்குவதற்குச் சொன்னது” என்று விளக்கம் கொடுத்தார்.  இன்று அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்ல அவரது அமைச்சரவை அமைச்சர்களே 13ஏ திருத்தத்துக்கு எதிராக  போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.

“இந்த இலங்கை – இந்திய உடன்பாடு எம்மீது திணிக்கப்பட்ட உடன்பாடு. அந்த உடன்பாட்டில் வி.புலிகளது ஆயுதங்கள்  களையப்படும் என்று இந்தியா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது. எனவே அந்த உடன்பாடு இன்று இறந்துவிட்டது. 13 ஏ திருத்தத்தையும்  அரசியல் யாப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் ” என உள்ளுராட்சி மாகாண சபைகள் இராசாங்க அமைச்சரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான கடல்படைத் தளபதி  றியர் அட்மிரல் சரத் வீரசேகரா நாளும் பொழுதும்  பேசி வருகிறார்.

மாகாண சபை முறைமை, 13 ஆவது திருத்தச்சட்டம், இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிர்மறையான கருத்துக்களை சொல்லிவருகிறார்.  பொஸ்னிய நிலைமைகளை சிறிலங்காவில் உருவாக்குவதற்கு தமிழர்கள் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்னொரு அமைச்சர் “சனாதிபதி கோத்தாபய இராசபக்ச அவர்களையோ அல்லது அவர் தலைமையிலான அரசையோ வெருட்டி – மிரட்டித் தீர்வு பெற முயற்சிப்பது பயனற்றது. இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புரிந்துகொள்ள வேண்டும்” என இராசபக்ச அரசின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹலிய இரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கை அரசை மீறி சர்வதேசம் எதையும் செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பவுத்த தேரர்களும் 13ஏ சட்ட திருத்தத்தை அரசியல் யாப்பில் இருந்து அகற்ற வேண்டும் என ஓங்கிக் குரல் கொடுக்கிறார்கள்.  சிலங்கா அரசாங்க மருத்துவர் அதிகாரிகள் சங்கம் “மாகாண சபையிடம் இருக்கும்  சுகாதார திணைக்களத்தை” மத்திய அரசு திருப்பி எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியன்  ஜெயசங்கர் இலங்கைக்கு  சனவரி 05 ஆம் திகதி முதல் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் அழைப்பில் பேரில்  இரண்டு நாள் அரச செலவை மேற்கொண்டு சென்றிருந்தார்.

கடந்த 10  ஆண்டுகளாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது முதல், இந்தியா – இலங்கை இடையேயான உறவில் விரிசல் ஏற்படத்  தொடங்கியது. இதைச்  சரிப்படுத்தி இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் ஜெய்சங்கரின் இந்த  செலவு  இருக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

மேலும்  கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றியும்  மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும்  என்று அமைச்சர்கள் உட்பட சிங்கள – பவுத்த பேரினவாதிகள் ஓங்கிக் குரல் கொடுப்பது பற்றியும் வெளியுறவு அமைச்சர் சனாதிபதி கோத்தாபய இராசபக்சா அவர்களோடு பேசியிருக்கலாம்.

கடந்த சனவரி 06 ஆம் திகதி பிரதமர் இராசபக்சா “கொழும்பு கிழக்கு முனையத்தின் ஓர் அங்குலத்தைக் கூட   எந்த நாட்டுக்கும்  விற்க  மாட்டோம்” என்று    நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.

பேச்சு முடிவில் இரண்டு நாடுகளும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டன.  இந்திய வெளியுறவு அமைச்சரின் செய்திக் குறிப்பில் தமிழர்களின் நீதி, நியாயமான அபிலாசைகளை நிறைவு செய்வதில் இருந்து அரசமைப்பின் 13ஏ ஆவது திருத்தம் உள்ளடங்கலாக இலங்கை அளித்த அதிகாரப் பகிர்வு வாக்குறுதிகள் அனைத்தும்  நிறைவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சனாதிபதி செயலக அறிக்கையில் இந்த விடயங்கள் பற்றிய குறிப்பு  எதுவும் காணப்படவில்லை.

வெளியுறவு  அமைச்சர் ஜெயசங்கர் அவர்களைத் ததேகூ இன் தலைவர்கள் திரு சம்பந்தன் தலைமையில் சந்தித்து தமிழ்மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை எடுத்துக் கூறியுள்ளார்கள். அவற்றுக்குப்  பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர்  “தமிழருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்! அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை”  எனக் கூட்டமைப்பிடம்   உறுதிபடக் கூறியுள்ளார்.

“இலங்கைத் தமிழர்களுக்கு நீதி – நியாயம் கிடைக்க வேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் எதையும் இந்தியா ஏற்படுத்தாது. இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் கவனம் தொடர்ந்து இருக்கும்.

ஒருமித்த நாட்டுக்குள்தான் தமிழர்கள் தீர்வு கேட்கின்றார்கள். எனவே, அவர்களின் அபிலாசைகளான நீதி, சமாதானம், சமத்துவம், கெளரவம் உள்ளடங்கலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது இலங்கை அரசின் பிரதான கடமை என்பதை சனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்பில் நான் எடுத்துரைத்துள்ளேன்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதை நீங்களும் (கூட்டமைப்பும்) வலியுறுத்துங்கள். இந்திய – இலங்கை இரண்டு நாடுகளதும் இணக்கத்தின் அடிப்படையில்  உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஏ ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இதை இலங்கை அரசின் கவனத்துக் கொண்டு வந்துள்ளேன். வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளைச் செய்யும். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனில் இந்தியா அதிக சிரத்தை கொண்டுள்ளது” என்றார்.

 இதற்கு முன்னர் இலங்கையின் அதிபராக கோத்தபய இராசபக்சே  நொவெம்பர் 19,  2019 ஆம் ஆண்டு  பதவியேற்றார்.  அடுத்த நாளே இலங்கைக்கு ஜெய்சங்கர்  செலவு மேற்கொண்டார். அப்போதும் வெளியுறவு  அமைச்சர் ஜெயசங்கர்  போதும் இதே வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனால் இராசபக்சா அரசு அவர் சொல்வதை செவிமடுத்துவதாக இல்லை!  

தமிழ்மக்களுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளையே மீண்டும் கொடுத்திருக்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர்!

அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

——————————————————————————————————————–

joint statement by un Secretary-General, the government of Sri Lanka

26 May 2009

Following is the joint statement by the Government of Sri Lanka and the United Nations at the conclusion of UN Secretary-General Ban Ki-moon’s visit to Sri Lanka on 23 May:

At the invitation of Mahinda Rajapaksa, President of Sri Lanka, the Secretary-General of the United Nations, Ban Ki-moon, paid a visit to Sri Lanka.  During the course of his visit, he held talks with the President, Foreign Minister as well as other senior leaders of Sri Lanka.  During his stay, he also consulted other relevant stakeholders, members of international humanitarian agencies and civil society.  The Secretary-General visited the internally displaced persons (IDP) sites at Vavuniya and overflew the conflict area, near Mullaitivu that was the scene of the conflict.

President Rajapaksa welcomed the Secretary-General as the highest dignitary to visit Sri Lanka in the post-conflict phase.  This was a reflection of the close cooperation between Sri Lanka and the United Nations as well as Sri Lanka’s commitment to work with the United Nations in the future.

President Rajapaksa and Secretary-General Ban Ki-moon agreed that following the end of operations against the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Sri Lanka had entered a new post-conflict beginning.  In this context, the Government of Sri Lanka faced many immediate and long-term challenges relating to issues of relief, rehabilitation, resettlement and reconciliation.  While addressing these critical issues, it was agreed that the new situation offered opportunities for the long-term development of the north and for re-establishing democratic institutions and electoral politics after 2 ½ decades.  The Government expressed its commitment to ensure the economic and political empowerment of the people of the north through its programmes.  

President Rajapaksa and the Secretary-General agreed that addressing the aspirations and grievances of all communities and working towards a lasting political solution was fundamental to ensuring long-term socio-economic development.  The Secretary-General welcomed the assurance of the President of Sri Lanka contained in his statement in Parliament on 19 May 2009 that a national solution acceptable to all sections of people will be evolved.  President Rajapaksa expressed his firm resolve to proceed with the implementation of the 13th Amendment, as well as to begin a broader dialogue with all parties, including the Tamil parties in the new circumstances, to further enhance this process and to bring about lasting peace and development in Sri Lanka.

President Rajapaksa and Secretary-General Ban Ki-moon discussed a series of areas in which the United Nations will assist the ongoing efforts of the Government of Sri Lanka in addressing the future challenges and opportunities.  

With regard to IDPs, the United Nations will continue to provide humanitarian assistance to the IDPs now in Vavuniya and Jaffna.  The Government will continue to provide access to humanitarian agencies.  The Government will expedite the necessary basic and civil infrastructure as well as means of livelihood necessary for the IDPs to resume their normal lives at the earliest.  The Secretary-General welcomed the announcement by the Government expressing its intention to dismantle the welfare villages at the earliest, as outlined in the Plan to resettle the bulk of IDPs and call for its early implementation.  

The Government seeks the cooperation of the international community in mine clearing, which is an essential prerequisite to expediting the early return of IDPs.

The Secretary-General called for donor assistance towards the Common Humanitarian Action Plan (CHAP) jointly launched by the Government of Sri Lanka and the United Nations, which supports the relief, shelter and humanitarian needs of those in IDP sites.

President Rajapaksa and the Secretary-General recognized the large number of former child soldiers forcibly recruited by the LTTE as an important issue in the post-conflict context.  President Rajapaksa reiterated his firm policy of zero tolerance in relation to child recruitment.  In cooperation with the United Nations Children’s Fund (UNICEF), child-friendly procedures have been established for their “release and surrender” and rehabilitation in Protective Accommodation Centres.  The objective of the rehabilitation process presently underway is to reintegrate former child soldiers into society as productive citizens.   The Secretary-General expressed satisfaction on the progress already made by the Government in cooperation with UNICEF and encouraged Sri Lanka to adopt similar policies and procedures relating to former child soldiers in the north.

President Rajapaksa informed the Secretary-General regarding ongoing initiatives relating to rehabilitation and reintegration of ex-combatants.  In addition to the ongoing work by the Office of the Commissioner-General for Rehabilitation, a National Framework for the Integration of Ex-combatants into Civilian Life is under preparation, with the assistance of the United Nations and other international organizations.  

Sri Lanka reiterated its strongest commitment to the promotion and protection of human rights, in keeping with international human rights standards and Sri Lanka’s international obligations.  The Secretary-General underlined the importance of an accountability process for addressing violations of international humanitarian and human rights law.  The Government will take measures to address those grievances.

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply