வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா – எது சரியானது?

வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா – எது சரியானது?

கீழே உள்ள கட்டுரை ஒரு பத்திரிக்கையில் வந்தது. உங்களின் தகவலுக்காக அதை அப்படியே கொடுத்துள்ளேன்!
———————————————————————————————————————
அதிசாரம் எனப்படும் இந்த சனியின் நகர்வு திருக்கணிதப்படி மட்டுமே நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் இன்னும் விருச்சிக ராசியிலேயே ஜென்மச்சனியாக நிலை கொண்டிருக்கிறார்.

வாக்கியப் பஞ்சாங்கங்கள் பிழையானவை. கிரகங்களின் உண்மை இருப்பு நிலையை அவை சொல்லவில்லை என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். பொதுவாக அனைத்து பெயர்ச்சிகளிலும் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையே வித்தியாசங்கள் உண்டு. இவற்றில் சனி விஷயத்தில் அதிகமான வித்தியாசங்கள் ஏற்படும்.

எந்தவிதமான பஞ்சாங்கமாக இருந்தாலும் அவற்றை வெளியிடுபவர்கள் கிரகங்களின் அருகில் போய் நின்று கொண்டு அதன் இயக்கத்தை கண்டுணர்ந்து குறிப்பது இல்லை. இதற்கென சில கூட்டல், கழித்தல் முறைகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு மூலச் சமன்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதை ஜோதிடப்படி சித்தாந்தம் என்று சொல்லுவோம்.

அதன்படி முந்தைய ஆண்டுகளில் சனி இந்த இடத்தில் இருந்தது, பூமி இங்கே இருந்தது. இந்த வருடம் சனி இவ்வளவு நகர்ந்திருக்கிறார், பூமி இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறது. எனவே சனி, பூமியில் இருந்து இவ்வளவு தூரம் இருக்கிறார் என்பதை மூலச் சமன்பாட்டின் தொடக்கத்தை வைத்து கணக்கீட்டு முறையிலேயே வாக்கிய, திருக்கணித, பஞ்சாங்க கர்த்தாக்கள் கிரக நிலையை அறிவிக்கிறார்கள்.

இதில் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஆதியில் ஏற்பட்ட சிறு வித்தியாசங்கள் திருத்தப்படாமல் கூடிக் கொண்டே போய், அதாவது நூற்றாண்டுகளுக்கு முன்பு நிமிடக் கணக்கில் ஆரம்பித்த ஒரு வித்தியாசம் இன்றைக்கு ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே போய் நிமிடம், மணியாகி, மணி நாளாகி, நாட்கள் மாதங்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

இவைதான் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகநிலைகள் மாறுபடுவதற்கான காரணம். சமன்பாடுகளின் மூலங்களில் மட்டுமே கிரக வித்தியாசத்தை திருத்த முடியும் என்பதால் இதை எப்படி நேர் செய்வது என்ற குழப்பத்தில் வாக்கியப் பஞ்சாங்கள் தெளிவற்ற ஒரு நிலையில் இருக்கின்றன.

சில ஜோதிடர்கள் வாக்கியம் ஞானிகள் அருளியது. திருக்கணித முறைகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. எனவே ஞானிகள் உருவாக்கிய வாக்கியத்தை மாற்றியமைப்பதற்கு யாருக்கும் அருகதை இல்லை என்று தவறாக நினைக்கிறார்கள்.

உண்மையில் வாக்கியத்தை விட திருக்கணிதமே காலத்தால் முற்பட்டது. திருக்கணிதமே பழமையானது. ஜோதிடத்தின் ஆதி பிதாமகர்களான ஆரியபட்டர் வராகமிகிரர் போன்ற ஞானிகள் உபதேசித்தது திருக்கணித முறையைத்தான்.

நமது வானவியல் சாஸ்திரத்தின் ஆதிஞானிகளில் ஒருவரான ஆரியபட்டர் தன்னுடைய பெருமைமிகு நூலான சூரிய சித்தாந்தத்தின் முதல் ஸ்லோகத்திலேயே தான் பிரம்மாவின் வழித்தோன்றல் எனவும் இரண்டாவதில் மயன், நம்முடைய மேலான இந்துமதத்தின் ஆதிநாயகனான சிவம் எனும் சூரியனை நோக்கித் தவமிருந்து இந்த பிரபஞ்சத்தின் சூட்சுமங்களையும், சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். இந்த மயன்தான் மேற்குறிப்பிட்ட பிரபஞ்ச ரகசியங்களை நாரதர் உள்ளிட்ட ஏழு ரிஷிகளுக்கும் தெரியப் படுத்தினார் என்றும் ஆரியபட்டர் தெளிவாகச் சொல்கிறார்.

13-ம் நூற்றாண்டு வரை ஆரியபட்டரின் திருக்கணித முறையே நம்முடைய பாரதத்தில் இருந்து வந்தது. 13-ம் நூற்றாண்டுக்குப் பிறகே தவறான வாக்கிய முறை இங்கே கையாளப்பட்டது. ஆரியபட்டரை அடுத்து வந்தவரான வரருசி அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய வாக்கிய சித்தாந்தத்தை வெளியிட்டார். இந்த வாக்கியத்திலும் காலத்திற்கேற்ப மாறுதல்களை செய்து கொள்ளவும் சொன்னார்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் கிரக இருப்பில் ஏற்படும் மாறுதல்களை மாற்றிக் கொள்ள ஞானிகள் நம்மை அனுமதிக்கவே செய்திருக்கிறார்கள். ஆனால் வரருசியின் வாக்கிய சித்தாந்தம் அவ்வப்போது திருத்தப்படாமல் விடப்பட்டதால் இன்றைக்கு திருத்தவே முடியாத ஒரு தவறான நிலையில் வந்து நிற்கிறது.

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திருக்கணிதப்படியான கிரக இருப்புகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் நாசாவிற்கே விண்வெளி சமன்பாடுகளில் மூலக் கணிதங்களை அளித்தது திருக்கணித முறைகள்தான்.

வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் உள்ள முரண்பாட்டை இன்னும் துல்லியமாக ஆராயப் போவோமேயானால், பூமி ஒரு வருடத்தில் சூரியனைச் சுற்றி வரும் நிரூபிக்கப்பட்ட துல்லியமான கால அளவான 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம் என்பதை, வாக்கியங்களில் 3 நிமிடத்தை கூட்டி 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம் என கணக்கிடுவதால் வித்தியாசம் வருகிறது.

தங்களுடைய கணிப்புகள் தவறுவதை உணர்ந்து வாக்கிய பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் தங்கள் முறையின் ஆதார கர்த்தரான வரருசியின் மூல முறையில் கணிப்பதை இப்போது கைவிட்டு விட்டனர். இது கிட்டத்தட்ட வாக்கிய முறை தவறு என்பதை ஒத்துக்கொண்டதற்கு சமம்தான்.

ஆனால் பலநாள் தவறை ஒரே முறையில் திருத்துவது எப்படி என்பதுதான் தற்போது பெரிய குழப்பத்தில் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களினால் சனிப்பெயர்ச்சி சில சமயம் இரண்டு பஞ்சாங்கங்களிலும் மூன்றரை மாத வித்தியாசம் வர ஆரம்பித்து விட்டது. எனவே அனைவரும் கிரக இருப்பின் உண்மையான நிலைமையை கூறுகின்ற திருக்கணித முறைக்கு மாறி அதனைக் கடைப்பிடிப்பது மட்டுமே இதற்கு ஒரு தீர்வாக இருக்கும்.

இந்த குழப்பங்களால் பாதிக்கப்படுவது ஜோதிடம் அறியாத பொதுமக்கள் தான். நட்சத்திர இறுதி நேரங்களில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு இரண்டு பஞ்சாங்கங்களும் வேறு வேறு நட்சத்திரத்தை சொல்லும் போது சாதாரண பொது மக்கள் ஜோதிடத்தையே குறை சொல்லும் நிலைமை ஏற்படுகிறது.

தவறான கணிப்பால் வாக்கிய பஞ்சாங்கப்படி சில நேரம் ஜாதகரின் லக்னமே மாறி விடுகிறது. இது சாஸ்திர துரோகம். இதை மாற்ற அனைத்து ஜோதிடர்களும் துல்லியமான கிரக இருப்பை சொல்லும் திருக்கணித பஞ்சாங்கங்களை மட்டுமே பின்பற்றுவது நல்லது.

மற்ற மாநிலங்களில் வாக்கியமா? திருக்கணிதமா? எது நடைமுறையில் உள்ளது?

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் இருக்கும் வான சாஸ்திர நிபுணர்கள், பஞ்சாங்க கணிதர்கள் ஆந்திர மாநில திருப்பதியில் ஒன்று கூடி இனி இந்தியாவில் திருக்கணித அடிப்படையில் மட்டும்தான் பஞ்சாங்கங்களை வெளியிட வேண்டும். திருக்கணிதமே சரியானது மற்றும் துல்லியமானது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதையொட்டி இப்போது தமிழ்நாட்டை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் திருக்கணித முறை மட்டுமே பின் பற்றப்படுகிறது. உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தவறு என்று தெரிந்தும் வாக்கிய பஞ்சாங்கங்கள் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நமது பக்கத்து மாநிலங்களான கேரளத்திலும், ஆந்திரத்திலும் கூட திருக்கணித முறைப்படிதான் கோவில் திருவிழாக்கள், ராகு-கேது, குரு, சனி ஆகிய பெயர்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தை கோவில்களில் பின்பற்றும் முறை தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.

ஜன.27, 2017 மாலைமலரில் வெளியான கட்டுரை!

நமக்கு அறியத் தந்தவர் நமது வகுப்பறை மாணவரான ஆனந்தமுருகன்
பத்திரிக்கைக்கும், அறியத்தந்த மாணவருக்கும் நமது நன்றி உரித்தாகுக!

http://classroom2007.blogspot.com/2017/02/blog-post_9.html
——————————————————–

வாக்கியம், திருக்கணிதம்… சனிப்பெயர்ச்சி குறித்து ஜோதிடர்கள் சொல்வது என்ன?

சைலபதி

சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி

திருக்கணித முறைப்படி நாளை சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இரு பஞ்சாங்கங்களின் அடிப்படையில் சாதாரணமாக ஓரிரு மாத இடைவெளிகளில் நிகழும் சனிப்பெயர்ச்சிகளுக்கிடையே ஏன் இந்த முறை ஏறக்குறைய ஓராண்டு கால இடைவெளி?

ஒரு நாளைத் தொடங்குவதற்கு முன் அந்த நாள் எப்படி அமையும் என்று அறிந்துகொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அதனடிப்படையில்தான் அதிகாலையில் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் ஜோதிடர்கள் தோன்றி ராசிபலன் சொல்கிறார்கள்.

சனிபகவான்
சனிபகவான்

நம்பிக்கை இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்று வேறுபாடின்றி அனைவரும் அதை விரும்பிக் கேட்கவும் வாசிக்கவும் செய்கின்றனர். அதேபோன்று முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் குறித்தும் அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் உண்டு. குறிப்பாக, குருப்பெயர்ச்சி, ராகு -கேதுப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகிய பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானவை. குரு ஆண்டுக்கொரு முறையும் ராகு -கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆவார்கள்.

அவ்வாறு பெயரும் நாள் ஒவ்வொரு பஞ்சாங்கத்தின் அடிப்படையிலும் மாறுபடும். சில நாள்களோ, ஓரிரு மாதங்களோ வித்தியாசப்படும். ஆனால், இந்த முறை சனிப்பெயர்ச்சி குறித்த பஞ்சாங்கக் குறிப்புகள் கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளியைக் காட்டுகின்றன. திருக்கணிதப்படி நாளை (24.1.2020) சனிப்பெயர்ச்சி. வாக்கியப் பஞ்சாங்கப்படி 26 டிசம்பர் 2020 அன்று சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. எதனால் இவ்வளவு கால வித்தியாசம் ஏற்படுகிறது, என்பதை அறிந்துகொள்ள பஞ்சாங்கங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் 
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் 
பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்ச அங்கங்கள் சேர்ந்த குறிப்பே பஞ்சாங்கம். ஒருநாளுக்குரிய வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து பற்றிய அடிப்படைக் குறிப்புகளே பஞ்சாங்கம் எனப்படும்.

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் இருப்பிடம் அவற்றின் நகர்வு ஆகியன வற்றைக் கணக்கிட்டு ஒருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இதில் கிரக நிலவரங்களை அறிந்துகொள்ள பஞ்சாங்கத்தையே ஜோதிடர்கள் நாடுகிறார்கள். அப்படி ஜோதிடர்கள் பயன்படுத்தும் பஞ்சாங்கங்கள் பல உள்ளன. இவற்றுள் வாக்கியப் பஞ்சாங்கம் பழைமையானது என்று கருதப்படுகிறது. இதை உருவாக்கியவர்கள் ரிஷிகள் என்று கருதப்படுகிறது. ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்கப் புத்தகங்களாகும். தமிழகத்தில் பெரும்பாலான ஆலயங்களில் வாக்கியப் பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது.

சனி
சனி

வாக்கியப் பஞ்சாங்கத்தைப் போன்றே முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாங்கங்களாகக் கருதப்படுவது திருக்கணிதப் பஞ்சாங்கம். சந்திரனின் அயனாம்சத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் இந்தத் திருக்கணித முறையும் பழங்காலத்திலிருந்தே உருவானது என்றும் வாக்கியப் பஞ்சாங்கத்தில் காணப்படும் குறைகள் நீக்கப்பட்டு 15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. திருக்கணிதத்திலும் பல்வேறு பஞ்சாங்கங்கள் காணப்படுகின்றன. வாக்கியத்துக்கும் திருக்கணிதத்துக்கும் ஒருநாளில் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது 6 மணி 48 நிமிஷம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். திருக்கணிதமே திருத்தப்பட்ட துல்லியமான பஞ்சாங்கம் என்று சொல்கிறார்கள் இதைப் பின்பற்றுபவர்கள்.

அத்தகைய திருக்கணித முறைப்படி நாளை சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இரு பஞ்சாங்கங்களின் அடிப்படையில் சாதாரணமாக ஓரிரு மாத இடைவெளிகளில் நிகழும் சனிப்பெயர்ச்சி ஏன் இந்த முறை ஏறக்குறைய ஓராண்டுக்கால இடைவெளியைக் காட்டுகின்றன. இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி குறித்து ஜோதிட வல்லுநர்கள் சிலரிடம் கேட்டோம்.

ஆதித்ய குருஜி

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி, ஏன் திருக்கணிதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

1935-ம் ஆண்டு காஞ்சிப் பெரியவர் ஒரு வித்வத் சதஸினைக் கூட்டினார். `சதஸ்’ என்றால் `விவாதிக்கும் சபை’ என்று பொருள். அந்தச் சபையில் வாக்கியப் பஞ்சாங்கம் திருக்கணிதப் பஞ்சாங்கம் குறித்த விவாதம் நடைபெற்றது. அதில் இந்தியா முழுவதுமிருந்து ஜோதிடர்கள் கலந்துகொண்டு விவாதம் செய்தனர். அந்த சதஸின் முடிவில் மகாபெரியவா திருக்கணிதப் பஞ்சாங்கமே சரி என்று தீர்ப்பு சொன்னார்.

அன்று முதல் காஞ்சி ஶ்ரீமடத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கமே பின்பற்றப்பட்டுவருகின்றது. இந்தியாவின் அண்டை மாநிலங்கள் அனைத்துமே திருக்கணிதப் பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கம் தமிழ்நாட்டில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. மத்திய அரசு அங்கீகரித்துள்ள ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் திருக்கணிதத்தால் ஆனது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருக்கணிதப் பஞ்சாங்கத்தை ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்துவருகிறது.

கிரக இருப்பை மிகச் சரியாகப் பூமியில் நாம் உணர உதவுவது கிரகணம். நிழல் கிரகங்களான ராகு – கேது பூமியை மறைக்கும்போதுதான் கிரகணங்கள் உருவாகின்றன. ராகு கேதுவின் இருப்பு நிலை பற்றிய கணக்குகள் தவறானால் கிரகண தினங்கள் நேரங்கள் குறிப்பதில் சிக்கல் ஏற்படும். இந்தக் கணிதம் திருக்கணிதப் பஞ்சாங்கத்தில் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்படுவதை நாம் அறிவோம். இதை ஏன் சொல்கிறோம் என்றால், திருக்கணிதப் பஞ்சாங்கமே சரி என்று வாதிடுவதற்காக அல்ல, குறிப்பிட்ட பெயர்ச்சி நாளில் பக்தர்கள் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட வேண்டும் என்பதற்காகவே சொல்கிறோம்.

இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்படி 24.1.2020 அன்று காலை 10.03-க்கு நடைபெறுகிறது. சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் செல்கிறார். எனவே, பக்தர்கள் இந்த நாளில் ஆலய வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.

இந்த ஆண்டு திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி ஏன் இத்தனை பெரிய இடைவெளி என்ற கேள்வியை ஜோதிட மாமணி முருகு. பாலமுருகன் முன் வைத்தோம்.

“பொதுவாக வாக்கியப் பஞ்சாங்கத்துக்கும் திருக்கணிதத்துக்கும் இடையிலான சனிப்பெயர்ச்சி குறித்த இடைவெளி ஒருசில மாதங்கள் மட்டுமே இருக்கும். இந்த ஆண்டு பன்னிரண்டு மாத இடைவெளிக்குக் காரணம் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த சனிப்பெயர்ச்சி.

வாக்கியப்படி டிசம்பர் 19, 2017-ல் தான் நிகழ்ந்தது. ஆனால், திருக்கணிதப்படி 2017-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியே சனி பகவான், மூல நட்சத்திரம் தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிவிட்டார். அதன் பிறகு, 2017 ஜூன் 21-ம் தேதி வக்கிரமாகி விருச்சிக ராசிக்கு வந்த சனிபகவான் மீண்டும் தனுசு ராசிக்கு அக்டோபர் மாதம் பெயர்ச்சியாகிவிட்டார்.

2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு  பொற்காலம் பிறக்கப் போகிறது | 2020 New year Rasi Palangal Viruchigam Rasi  palangal parikarangal - Tamil ...

—————————————————————————————————————

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

பொதுவாக, ஒரு ராசியிலிருந்து சனிபகவான் முதல்முறை எப்போது பெயர்ச்சியாகிறாரோ அதுவே பெயர்ச்சிக் கணக்கு. எனவே, 2017 ஜனவரியிலேயே சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துவிட்டது. ஆனால், இந்தமுறை மகர ராசிக்குள் பிரவேசிக்கும் சனிபகவான் வக்கிரமாகி தனுசுக்கு வராமல் மகரத்திலேயே தங்கிவிடுகிறார். அதனாலேயே இந்தப் பன்னிரண்டு மாத வேறுபாடு நமக்குத் தெரிகிறது.

இந்த ஆண்டு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 24.1.2020 அன்றுதான் சனிப்பெயர்ச்சி. திருக்கணிதத்தை நம்புபவர்கள் அன்றுதான் சனிப்பெயர்ச்சிக்குரிய வழிபாடுகளைச் செய்ய வேண்டும். தமிழகக் கோயில்களில் பெரும்பாலும் வாக்கியப் பஞ்சாங்கமே கடைப்பிடிக்கப்படுவதால், அன்று சிறப்பு வழிபாடுகள் கோயில்களில் நடைபெறாது என்பது கொஞ்சம் வருத்தம்தான். இதை நாம் குறை சொல்லவே முடியாது” என்றார்.

வாக்கியப் பஞ்சாங்கம் என்பது ரிஷிகளின் வாக்கு என்கிறார் ஆஸ்ட்ரோ முரளி. அவரிடம் இதுகுறித்துக் கேட்டோம்.

“திருக்கணிதம் துல்லியமானது என்கிறார்கள். சில நேரங்களில் அது சரியாகவும் இருக்கிறது. ஆனால், வாக்கியப் பஞ்சாங்கம் என்பது ரிஷிகளின் வாக்கு. இந்த உலகில் அறிவியலும் வானியலும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாக இந்தப் பிரபஞ்சத்தில் இயக்கத்தையும் கிரக நிலவரங்களையும் கண்டு தெளிந்தது. எனவே, அதை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ள முடியாது. மேலும், எனது 25 ஆண்டுக்கால ஜோதிட வாழ்வில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்பட்ட ஜாதகங்கள் துல்லியமான பலன்கள் தருவதைப் பார்த்திருக்கிறேன். ரிஷிகளின் வாக்கு என்பதால்தான் இன்றளவும் கோயில்களில் வாக்கியப் பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது. தனிப்பட்ட முறையில் எந்தப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றுவது என்பது அவரவர் விருப்பம். நான் வாக்கியத்தை மதிக்கிறேன். எனக்குத் திருநள்ளாறில் என்று சனிப்பெயர்ச்சியோ அன்றுதான் சனிப்பெயர்ச்சி” என்று முடித்துக்கொண்டார்.

பஞ்சாங்கங்கள் பலவாயினும் பரம்பொருள் ஒருவரே. அவரை வழிபட்டு நல்லருளைப் பெறுவோம்.

https://www.vikatan.com/spiritual/astrology/why-there-is-a-time-difference-between-vakya-panchangam-and-thirukanitha-panchangam

——————————————————————————————————————-

திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்கம் இவற்றில் எதை நம்புவது, இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

Aravindhan K 

 05 Sep 2020

புகழ் பெற்ற திருக்கோயில்களான திருப்பதியில் திருக்கணிதம் பஞ்சாங்கம், திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கம் பின்பற்றப்படும் ஆச்சர்யம் நடக்கிறது. இப்படி இருக்க இன்று சனிப்பெயர்ச்சி 2020 ஜனவரி 24ல் நடக்குதா இல்லை, டிசம்பர் 26ல் நடக்க உள்ளதா என்பதை ஜோதிடத்தை தெரிந்துகொள்ள விரும்பும் சாமான்யர்களின் கேள்வியாக உள்ளது. திருக்கணிதம் பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என்றால் என்ன, அதன் வித்தியாசம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்…

புகழ் பெற்ற திருக்கோயில்களான திருப்பதியில் திருக்கணிதம் பஞ்சாங்கம், திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கம் பின்பற்றப்படும் ஆச்சர்யம் நடக்கிறது. இப்படி இருக்க இன்று சனிப்பெயர்ச்சி 2020 ஜனவரி 24ல் நடக்குதா இல்லை, டிசம்பர் 26ல் நடக்க உள்ளதா என்பதை ஜோதிடத்தை தெரிந்துகொள்ள விரும்பும் சாமான்யர்களின் கேள்வியாக உள்ளது. திருக்கணிதம் பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என்றால் என்ன, அதன் வித்தியாசம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்…

சனிப்பெயர்ச்சி எப்போது?

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு -கேது பெயர்ச்சி ஆகிய கிரகப் பெயர்ச்சியில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது சனிப்பெயர்ச்சி. அந்த வகையில் சனிப்பெயர்ச்சி 2020ல் நாளை அதாவது ஜனவரி 24ல் நடக்கிறதா, டிசம்பரில் 26ல் நடக்கிறதா என்ற பெரிய குழப்பம் நிலவுகிறது.

ஜோதிடர்கள் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி 2020 ஜனவரி 24 என்றும், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 26ல் தான் சனிப்பெயர்ச்சி என குறிப்பிடுகின்றனர்.

எது சரியானது, எதை நம்புவது என வாசகர்கள் பலரும் புலம்பும் நிலை உள்ளது. சரி அது என்ன திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என்பதும், நாம் எதைப் பின்பற்றினால் சரியாக வரும் என்பதைப் பார்ப்போம்…

வாக்கிய பஞ்சாங்கம் என்றால் என்ன?

சனிபகவானுக்கு சிறப்பு வாய்ந்த திருநள்ளாறு உள்ளிட்ட கோயில்களில் நடக்கும் திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் தான் இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.

​திருக்கணித பஞ்சாங்கம் என்றால் என்ன?

வாக்கிய பஞ்சாங்கம் தான் பழமையானது, திருக்கணிதம் புதியது என்ற எண்ணம் வேண்டாம். வாக்கிய பஞ்சாங்க முறை வருவதற்கு முன்னரே திருக்கணித பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

ஆரியபட்டா, பாஸ்கரா உள்ளிட்டோரின் காலத்திலேயே திருக்கணித பஞ்சாங்கம் நடைமுறையில் இருந்தது. ஆனால் அதை கணிக்க சற்று கடினமாக இருந்ததால், அதை எளிமையாக்கும் பொருட்டு வரருச்சி என்ற ஜோதிடர் வாக்கிய பஞ்சாங்கம் என பஞ்சாங்கத்தை எளிமைப்படுத்திக் கொடுத்தார்.

அவர் சூரிய சித்தாந்தம், ஆரிய சித்தாந்தத்தைக் கொடுத்தார். சூரிய சித்தாந்தம் வட இந்தியாவிலும், ஆரிய சித்தாந்தம் தென் பகுதியிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு சித்தாந்தங்களும் சில கால இடைவெளிக்கு இடையே கிரக நிலையை சரியாக மீண்டும் கணித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

சனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது… யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா?

​திருக்கணித பஞ்சாங்கம் ஏன் ஏற்க வேண்டும்?

அயன அம்சத்தால் தான் இந்த வேறுபாடு ஏற்படுகிறது. பஞ்சாங்கத்தில் இருக்கக் கூடிய நேர மாறுபாடு, கிரகங்களின் இயக்கம் உள்ளிட்டவற்றை சரிசெய்யும் பொருட்டு காஞ்சி மகா பெரியவரின் உத்தரவின் பெயரில்

ஜோதிடர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு ஜோதிடர்களை அழைக்கப்பட்டிருந்தனர்.

அந்த கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள திருக்கணித பஞ்சாங்கம் தான் சரி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பதியில் பின்பற்றப்படும் திருக்கணிதம்:

இதன் காரணமாக திருமலை திருப்பதில் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி தான் அனைத்து கோயில் விழாக்களும், நிகழ்வுகளும் தற்போது நடத்தப்பட்டு வருகின்றது.

Also Read: சனிப்பெயர்ச்சியை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி?: அஷ்டமத்து சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன? – பரிகாரங்கள் இதோ

காஞ்சி பெரியவர் கொடுத்த தீர்வு:

பஞ்சாங்கத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்தில் காஞ்சி பெரியவர் ஒரே வார்த்தையில் சரியான தீர்வு சொல்லும் பொருட்டு, கோயில்களில் நடக்கும் அனுஷ்டானங்கள், நிகழ்வுகளுக்கு வாக்கிய பஞ்சாங்க முறைப்படியும்,

மனிதர்களுக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின் படியும் பின்பற்றுவது சரியானது என கூறி சென்றுள்ளார்.

சனிப்பெயர்ச்சி ஆகும் ராசி

தற்போது பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பெரும்பாலும் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி தான் ஜாதாகம் கணிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணத்தால் திருக்கணித முறைப்படியிலான கிரக பெயர்ச்சி பின்பற்றுவது அவசியமாகிறது.

சனிப்பெயர்ச்சியால் ரஜினி கட்சி தொடங்குவாரா? தமிழகத்தில் ஆட்சி பிடிப்பாரா?

https://tamil.samayam.com/astrology/planets-in-retrograde/difference-between-thirukanitha-panchangam-and-vakya-panchangam-what-impact-on-sani-peyarchi-2020-palangal/articleshow/73552226.cms?story=5

About editor 3120 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply