குறுக்கும் நெடுக்குமாக 13 ஏ ஒழித்தல்

குறுக்கும் நெடுக்குமாக 13 ஏ ஒழித்தல்

ஒஸ்ரின் பெர்னாந்து

இராசபக்ச அரசு கடந்த செப்தெம்பர் முதல் வாரத்தில் ஒரு புதிய யாப்பை வரைவதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளது. ஒன்பது பேர்  கொண்ட இந்தக் குழுவில் 7 சிங்களவர், ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் இடம் பெற்றுள்ளார்கள்.

This image has an empty alt attribute; its file name is djkdk.jpg

சனாதிபதி  சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா  (தலைவர்)
சனாதிபதி  சட்டத்தரணி காமினி மாரப்பன,
சனாதிபதி  சட்டத்தரணி மனோகாரா டி சில்வா,
சனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவா ஜெயவர்த்தன
பேராசிரியர் நசீமா கமால்தீன்
கலாநிதி  ஏ. சர்வேஸ்வரன்
சனாதிபதி சட்டத்தரணி சமந்தா இரத்வத்த
பேராசிரியர் வசந்தா செனெவிரத்தின
பேராசிரியர் ஜி.எச்.பீரிஸ்.

அரசாங்கம் ஓர் ஆண்டுக்குள் ஒரு புதிய யாப்பை  உருவாக்கிவிட  தீர்மானித்துள்ளது. இந்த நிபுணர் குழுவில் இடம் பெற்றிருப்பவர்களில் பெரும்பான்மையினர் தீவிர  சிங்கள – பவுத்த  தேசிய கடும்போக்காளர்கள் ஆவர். குறிப்பாக அதன் தலைவர் சனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா, சனாதிபதி  சட்டத்தரணி காமினி மாரப்பன, சனாதிபதி  சட்டத்தரணி மனோகாரா டி சில்வா ஆகிய மூவரும் அப்படியானவர்கள்.

இப்போது நடைமுறையில் இருக்கும் யாப்பு 1978 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட யாப்பாகும். அதற்கு முன்னர் 1947 இல் கொண்டுவரப்பட்ட சோல்பரி யாப்பு 1972 இல் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க கொண்டு வந்த யாப்பு மூலம் நீக்கப்பட்டது. எனவே இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இப்போது எடுத்துள்ள முயற்சி  நான்காவது தடவை ஆகும்.

சோல்பரி யாப்பு 24 ஆண்டுகள் நீடித்தது. லங்கா என்ற பெயரை ஸ்ரீ லங்கா என மாற்றி, சிறுபான்மையரது பாதுகாப்புக்கு கொண்டுவரப்பட்ட  விதி 29 (1) ஒழித்து,  பவுத்தத்துக்கு முதன்மை இடம் கொடுத்த 1972 ஆண்டில் இயற்றப்பட்ட யாப்பு  6 ஆண்டுகள் மட்டும் உயிர் வாழ்ந்தது. 1978 இல் இயற்றப்பட்ட யாப்பு நாடாளுமன்ற சனநாயகத்துக்குப் பதில்  நிறைவேற்றதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையை கொண்டு வந்தது. இப்போது அதன் ஆயுளும் முடிவுக்கு வர இருக்கிறது.

மேற்கூறியவற்றை விட  அற்ப ஆயுளில் உயிரை விட்ட அரசியல் யாப்பு வரைவுகளும் உண்டு. இனச் சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு 1991 இல்  மங்கள முனசிங்க தலைமையில் நியமிக்கப்பட்ட 45 பேர்  அடங்கிய தெரிவுக் குழு மொத்தம் 49 முறை கூடி 1993 ஆம் ஆண்டு ஒரு இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. அதில் பின்வரும் முன்மொழிவுகள் காணப்பட்டன.

1. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இரண்டு தனித்தனி நிருவாக அலகுகளை நிறுவுதல்;

2. இந்திய அரசியலமைப்பில்  காணப்படுவது  போன்று அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்வது (மாநில அரசுகளைக் கலைப்பதற்கும் சனாதிபதி ஆட்சியை கொண்டுவருவதற்கும் இந்தியாவின் மத்திய அரசு அதிகாரங்களைத்  வைத்துள்ளது);

3. 13 வது திருத்தத்தின் பட்டியல் III  இல் (ஒரே நேரத்தில் பட்டியல்)  அதிக அதிகாரங்களை பகிர்ந்தளித்தல்  அல்லது அந்தப் பட்டியலை மொத்தமாக நீக்குதல்.

இருந்தும்  இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. இதற்கு முன்னர் ஐந்து முறை மட்டுமே  அதிகபட்சமான தீர்வுக்குச்  சிங்கள ஆட்சியாளர்கள் இறங்கி வந்திருந்தார்கள்.

1.  1987 இல் எழுதப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை காரணமாக  உருவான 13 ஆவது யாப்புத் திருத்தம்.

 2. 2000 ஆம் ஆண்டு சனாதிபதி சந்திரிகாவால்  கொண்டு வரப்பட்ட இலங்கை   பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற முக்கிய இணைப்பாட்சி கோட்பாட்டிளைக் கொண்டதும் தமிழ்மக்களுக்கு உச்சபட்ச அதிகாரத்தை வழங்கும் தீர்வுத் திட்டம். இந்த அரசியலமைப்பை ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் தீ வைத்துக் கொழுத்திய போதும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்கு எதிராக வாக்களிக்காததால் அது தோல்வியுற்றது.  

3. 2002 டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுகளின் முடிவில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தொடக்க ஏற்பாடாகத் தங்களுக்குள் ஏற்பட்ட இணக்கம் குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் வெளியிட்ட கூட்டு அறிவிப்பு. அதில் குறிப்பிட்ட “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை தழுவிய தீர்வு ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

4. 2005 ஆம் ஆண்டில் இரணில் விக்ரமசிங்க சனாதிபதியாக வந்திருந்தால் ஒஸ்லோ புரிந்துணர்வு அடிப்படையில் இணைப்பாட்சி அரசியல் யாப்பு உருவாக்குவதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் சனாதிபதி தேர்தலை வி.புலிகள் புறக்கணித்த  காரணத்தினால் அந்த வாய்ப்பு  தவறிப் போய்விட்டது.

5. 9 மார்ச்,  2016 இல்  நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.  அதன்  முதலாவது அமர்வு 06 ஏப்ரில், 2016  அன்று இடம்பெற்றது.  புதிய அரசியலமைப்பை வரையும்  நாடாளுமன்ற வழிப்படுத்தும் குழுவுக்கு இரணில் தலைவராக நியமிக்கப்பட்டார். வழிப்படுத்தும்  குழுவுக்குப் பொறுப்பாக கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ணவும், எம் ஏ சுமந்திரனும் நியமிக்கப்பட்டார்கள்.  இந்த வழிநடத்தும் குழு மொத்தம் 73 தடதை கூடி விவாதித்தது. 12 முக்கிய துறைகள் தொடர்பாகக்  கவனம் செலுத்தப்பட்டது.  ஆறு உப குழுக்கள் தமது அறிக்கைகளை 19 நொவெம்பர், 2016  இல் சமர்ப்பித்தன.  வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை 21  செப்தெம்பர்,  2017 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் சனாதிபதி சிறிசேனாவுக்கும் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க இருவருக்கும் இடையில் ஒரு பனிப்போர் தொடங்கியது. அதன் உச்சகட்டமாக  21 ஒக்தோபர் 2018 இல் பிரதமர் விக்கிரமசிங்க,  சனாதிபதி சிறிசேனாவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது இடத்தில் மகிந்த இராசபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு  09 நொவெம்பர் இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.  இவற்றை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ன. உயர் நீதிமன்றம் இந்த நடவடிக்கைகள்  அரசியல் யாப்பு அடிப்படையில் செல்லுபடியற்றது எனத் தீர்ப்பளித்தது. மீண்டும் இரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். ஆனால் 16 நொவெம்பர், 2019 அன்று நடந்த சனாதிபதி தேர்தலில் கோத்தபய இராசபக்ச வெற்றி அடைந்ததை அடுத்து அரசியல் நிலைமை தலைகீழாக மாறியது.

அரசியலமைப்பு உருவாக்கம் தடைப் பட்டது.  19 ஆவது சட்ட திருத்தம் மின்னல் வேகத்தில் கொண்டு வரப்பட்டு நான்கு மாதங்களில் நிறைவேற்றப்பட்டது. அதே போல் யாப்பு உருவாக்கத்தில் அதேயளவு வேகம், அவசரம்  காட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காட்டப்படவில்லை.  அதனால் இலவு காத்த கிளியின் கதைமாதிரி அமைந்துவிட்டது. அது மட்டுமல்ல பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பதற்கு ஒப்ப 13 ஏ திருத்தத்தை முற்றாக ஒழிக்க சிங்கள – பவுத்த தேசியவாதிகள் கடும் போர் தொடுத்துள்ளார்கள்.

இது தொடர்பாக ஒஸ்ரின் பெர்னாந்து  அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரை ஐ லாண்ட நாளேடு உட்பட (https://island.lk/crisscrossing-13a-abolition/9 பல ஊடகங்களில்  கடந்த  13 நொவேம்பர், 2020 அன்று   வெளிவந்தது.

ஒஸ்ரின் பெர்னாந்து இலங்கை நிருவாக சேவையில் நீண்ட காலம் பணியாற்றியவர். தற்சமயம் புது தில்லியில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக இருக்கிறார். அதற்கு முன்னர் முன்னாள் சனாதிபதி சிறிசேனாவின் செயலாளராகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் கிழக்கு மாகாண ஆளுநராகவும் பதவி வகித்தவர். முற்போக்குச் சிந்தனையுடையவர். 

கட்டுரையில் தலைப்பு Crisscrossing 13A Abolition  (குறுக்கும் நெடுக்குமாக 13 ஏ ஒழித்தல்) என்பதாகும்.

 2017 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட தமிழ்த் தேசியக்  கூட்டணி (ததேகூ) தலைவர் ஆர். சம்பந்தன் ஆற்றிய உரையை நான் அண்மையில்  படித்தேன். அவரது சொற்பொழிவு அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை (13 ஏ) ஆதரிப்பதாக இருந்தது. அவரது புத்திசாலித்தனமான வாதங்களைப் பாராட்டுகிறேன்.   13ஏ   சம்பந்தமாக அவரது சிந்தனையோடு நான் உடன்படுகிறேன். 13 ஏக்கு நான் ஆதரவு திரட்டப் போவதில்லை. ஆனால் மறந்துவிட்ட ஒன்றுடன் ஒன்றான குறிப்புகளுடன் விவாதத்தை விரிவுபடுத்த விரும்புகிறேன்.

13A  இன் நிலை

1987 இல் கைச்சாத்திடப்பட்ட  இந்திய – இலங்கை உடன்படிக்கையின் விளைவாக அதிகாரப் பகிர்வு எங்கள் மீது திணிக்கப்பட்டது.  பின்னர், சில குழுக்கள் இந்த உடன்படிக்கையையும் மற்றும்  13ஏ  யையும் நிராகரித்தன.  இன்றுவரை அவர்களின் நிலை  மாறாமல் உள்ளது.

தொடக்கத்தில், மோதல் போக்கைக் குறைப்பதற்கு அதிகாரப் பகிர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் ஒரு பகுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நேரத்தில் 13ஏ சட்டப்பூர்வமாக்கப்பட்டது என்று சிலர் வாதிடலாம்.  ஆனால்,  தற்போதைய அரசாங்கம் பழைய பாதையில் செல்ல வேண்டிய அவசியமில்லை.

ததேகூ  அரசியல்வாதிகள் பயங்கரவாதம் இன்று இல்லாவிட்டாலும் மோதலுக்கான காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் உள்ளன என்று வாதிடுகிறார்கள்.

மாகாண சபைகளின் செயல்திறன் பல விடயங்களில் திருப்திகரமாக இல்லை. சில விமர்சகர்கள் அவற்றை ‘வெள்ளை யானைகள்’ என்று வருணிக்கிறார்கள். இதுபோன்ற தீவிர விமர்சனங்களை நான்  ஆதரிக்கவில்லை, ஏனெனில் மாகாண சபைகளின் பலவீனத்திற்கு ஒரு காரணம் ‘மத்திய – மாகாண ஒத்துழைப்பு’ இல்லாதது. பல தசாப்தங்களுக்கு முன்னர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மாகாணங்களுக்கு நிதி,  தாபன மேலாண்மை மற்றும் சட்டத்தை உருவாக்குவதற்கு அதிகாரம் தேவை என்று வலியுறுத்தினார். இன்றுவரை, இந்த விடயங்கள் சிக்கல்களாகவே இருக்கின்றன.

அதிகாரப் பகிர்வில் உள்ளார்ந்த தவறான வரிகளைக் காணும் சிலர் கருத்து, உள்ளடக்கம் மற்றும் அரசியல் ஆகியவற்றின் அடிப்படையில் மாககாணங்களை எதிர்க்கின்றனர். பொலீஸ் மற்றும் நில அதிகாரங்களை பகிர்ந்தளித்தல், மாகாணங்களை ஒன்றிணைத்தல் போன்றவை இறையாண்மையை மீறுவதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். 

13ஏ ஐ ஒழிப்பதற்கான கடுங்கோபம் கலந்த அழைப்பு அரசியல்வாதிகளிடமிருந்தும் ஊடகவியலாளர்களிடமிருந்தும்,  பிக்குகளில் ஒரு பகுதியினரிடம் இருந்தும் வருகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது  மாகாணங்களின் வளர்ச்சியைத் தடுக்க சில செயல்பாடுகளை (எ.கா. நிலம் மற்றும் பொலீஸ் அதிகாரங்கள்) திரும்பப் பெறுவது மற்றொரு மாற்று முன்மொழிவு ஆகும்.(வளரும்)

13ஏ ஐ ஒழிப்பது,  மோதல் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்! 

 ஒஸ்ரின் பெர்னாந்து 

(குறுக்கும் நெடுக்குமாக 13 ஏ ஒழித்தல் என்ற தலைப்பில் சென்ற வாரம் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி……. தமிழாக்கம்  நக்கீரன்)

இந்தியர்களும் 13ஏ யும்

அதே நேரத்தில், 13 ஏ வீணாகத் தலையிட்டால் இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும் என்று சிலர் எதிர்கூறல் கூறியுள்ளனர். அதிகாரப் பகிர்வு தொடர்பான இந்திய தலையீடுகளுக்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதில் ஒரு காரணம் என்னவென்றால், இந்தியா உடன்படிக்கையைக்  கடைப்பிடிக்கத் தவறிவிட்டது  (எ.கா. விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களையத் தவறியது) என்பதாகும்.  எனவே, அதிகாரப் பகிர்வை நாங்கள் (இலங்கை) முழுமையாகச்  செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது.

இரண்டாவதாக, நமது அரசியலமைப்பு செயல்முறைகளில் வெளிநாட்டுத் தலையீடு பொருத்தமற்றது என்று அவர்கள் வாதிடுகின்றனர். குடியுரிமை, சொத்துரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீர் சட்டங்களைப் பாதிக்கும் வகையில், 2019 ஆம் ஆண்டில் 35 ஏ பிரிவுடன் 370 வது பிரிவை இந்திய அரசு இரத்து செய்தது. மேலும் இது ஒரு “இந்திய உள் விவகாரம்” என்று கூறி விமர்சகர்களை மவுனனமாக்கியது. எனவே, 13A ஐ ஒழிப்பதை இந்தியா எதிர்த்தால்   ஜம்மு-காஷ்மீர் எடுத்துக்காட்டை இலங்கை பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் (சிங்கள தீவிர தேசியவாதிகள்)  வாதிடுகின்றனர்.

மூன்றாவதாக, வளர்ச்சி / முதலீட்டை ஈர்ப்பதற்காக மத்திய அரசு இந்தியர்களுக்கு நிலங்களை விடுவிக்க அனுமதிக்கும் வகையில் இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் விதிகளை மாற்றியது என்றும் எனவே நாங்கள் நில நிர்வாகத்தை மையப்படுத்தினால் இந்தியா எதிர்க்க முடியாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

நான்காவதாக, மையப்படுத்தப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக, இமாச்சல மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இந்தியர்கள் சமச்சீரற்ற நிர்வாகத்தை செய்கிறார்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர், எனவே, 13A ஐ திருத்துவதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களிலும் இதேபோல் செய்ய முடியும்.

இந்தியத் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டுள்ளபடி இந்தியா, இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும்  ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை ஆதரிக்கிறது. கூடுதலாக, சிறுபான்மையினருக்குச் சமமான அந்தஸ்து அளிப்பதை ஊக்குவிக்க இந்திய, இலங்கைத் தலைவர்கள் மற்றும் அனைத்துலக நிறுவனங்கள் ஆகியோருக்கு கடப்பாடுகள் இருக்கின்றன.
எனது முயற்சி யாதெனில்,  மேற்கோள் காட்டப்பட்ட உரையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சிலவற்றைக் குறிப்பிடுவதே ஆகும். எனது அனுபவங்கள் சிலவற்றிலிருந்து   13A ஐ ஒழிப்பது,  மோதல் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாகும். மேலும் இனச் சிக்கல்களைத் தீர்க்க   வேறு தீர்வுகள் இருக்கக்கூடும் என்பதை எண்பிப்பதாகும்.

இந்திய – இலங்கை தொடர்புகளை ஆய்வு செய்தல் 

ததேகூ இன் தலைவரின் பேச்சுக்கு வருவோம். நொவம்பர் 2006 இல், இந்திய வெளியுறவுச்  செயலாளர் சிவசங்கர் மேனன் சனாதிபதி மகிந்த இராசபக்சவுக்கு வெளிப்படுத்தியுள்ளார்:  “இனப்பிரச்சினையின் தொடக்க கால” விரிவான அரசியல் தீர்வை ’இந்தியா எதிர்பார்க்கிறது. இது தமிழர்கள் உட்பட அனைத்துப் பிரிவுகளின்  குறிக்கோள்களையும் (இலங்கை)  கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ”

இது உடன்படிக்கை எழுதிக் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னரும் மோதல் நடந்து கொண்டிருந்த போதும் இடம்பெற்றது. இதற்குப் பதிலளித்த சனாதிபதி மகிந்த இராசபக்ச அனைத்துக் கட்சி சார்பாளர்கள் ((APRC)   மற்றும் நிபுணர்களின் குழு ஆகியவற்றின் பணிகளை விரிவாகக் கூறியுள்ளார். ஆனால் இந்த வெளியீடுகள் அவரது அரசாங்கத்திற்கு ஒரு பொருட்டல்ல என்பது அனைவரும் அறிந்ததே. மோதலின் போது 13A ஐ செயல்படுத்துவதற்கான இந்திய எதிர்பார்ப்புகளுடன் இதை ஒப்பிடலாம்.

ஒரு கட்டத்தில், சனாதிபதி மகிந்த இராசபக்ச  ‘அதிகாரப் பகிர்வுக்கு’ அதிக ஆதரவளித்தார். ஏபிஆர்சி மற்றும் வல்லுநர்கள் குழுவின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “நம் நாட்டின் ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.  மேலும் கூறுகையில்  “எங்கள் நோக்கம் ஒரு பிரிக்கப்படாத இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.” நன்று. இதுதான் மக்களது பொதுவான குறிக்கோள் ஆகும்.  இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இந்தியாவின் பொதுவான குறிக்கோள். சாலைத் தடைகளை அடையாளம் காணும் அதே வேளையில், தங்கள் வட்டாரங்களில் உள்ள மக்கள் “அவர்களின் விதியைப் பொறுப்பேற்று அவர்களின் அரசியல் – பொருளாதார சூழலைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று அவர் (சனாதிபதி மகிந்த இராசபக்ச) எதிர்பார்த்தார். இது செயலில் துணைத்தன்மைக் கொள்கை ஆகும்.
 

மகிந்த இராசபக்ச கூறினார்: “எந்தவொரு தீர்வும் நாட்டின் இறையாண்மையைத்  தியாகம் செய்யாமல், அதிகபட்ச அதிகாரப் பகிர்வு வரை நீட்டிக்கப்பட வேண்டும். நிலத்தின் சூழ்நிலையைப் பொறுத்தவரை, மோதலுக்கான பின்னணியைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக, பெரும்பான்மை சமூகத்தினர் சமாதானத்திற்காக பாடுபடுவதில் முனைப்புடன் இருக்க வேண்டும்…. ” இது இந்தியர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்  அமிர்தமாக இருந்திருக்க வேண்டும்!

அடுத்து, அமைச்சர் பசில் இராசபக்ச இந்தியாவுக்குச் (ஒக்தோபர் 2008) சென்றார் ஒரு அறிக்கை கூறியது: “வடக்கு உட்பட தீவில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அரசியல் தீர்வை நோக்கி நகர வேண்டியதன் அவசியம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்…. 13A ஐ நடைமுறைப்படுத்தவும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை அதிக அளவில் வழங்கவும் இந்திய தரப்பு அழைப்பு விடுத்தது. அமைச்சர் பசில் இராசபக்ச, இலங்கை சனாதிபதியும் அவரது அரசாங்கமும் ஒரு நிலையான தீர்வுக்கு வழிவகுக்கும் ஒரு அரசியல் செயல்முறைக்கு உறுதியளித்துள்ளார் ”என்று வலியுறுத்தினார். மீண்டும் அமிர்தம்!

இந்தியாவிற்கு அவர் அளித்த செய்தி, நாங்கள் ஒரு அரசியல் செயல்முறைக்கு உணர்ச்சிபூர்வமாக அர்ப்பணித்துள்ளோம். அவர் (ஜெய்சங்கர்) விரைவில் அமைச்சரவையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்திய வெளியுறவு அமைச்சர் முனைவர்  ஜெய்சங்கர் வழிகளைப் பற்றி தனிப்பட்ட முறையில் அறிந்து கொண்டவன் என்ற முறையில் அவரது செய்தியை  நினைவுபடுத்தலாம் என நான் எதிர்பார்க்கிறேன்.

அமைச்சர் பசில் இராசபக்சவின் (நொவெம்பர் 2008) இந்த விஜயத்தின் பின்னர், தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், சனாதிபதி மகிந்த இராசபக்சவுக்கு, கொழும்புத் தமிழர்களின் “நியாயமான அரசியல் குறிக்கோள்களை” அதிகாரப் பகிர்வுப் பொதியின் (13 ஏ) கீழ் நிறைவேற்றுவதற்கான நிலைமைகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். உள்நாட்டு அரசியலைப் பொருட்படுத்தாமல் இந்தியர்கள் கோரிக்கைகளில் சீராக இருந்தனர்; நிறைவேறாத நம்பிக்கையை அறிவிப்பதில் இலங்கையர்கள் சீராக இருந்தனர்!

பேராசிரியர் பீரிஸ் இந்தியாவுக்கு (மே 2011) வருகை  செய்தார், “13 ஆவது திருத்தத்தின் மீது அதிகாரப் பகிர்வு தொகுப்பு கட்டிடம் அத்தகைய நல்லிணக்கத்திற்கு தேவையான நிலைமைகளை உருவாக்குவதற்கு பங்களிக்கும்.” மேலும், கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் (எல்.எல்.ஆர்.சி) பணிகளை அவர் குறிப்பிட்டார், இது மிகவும் கவர்ச்சிகரமான, அமைதிக்குச் சார்பான மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பரிந்துரைகளை வழங்கியது. 13ஏ குறித்து வெளியுறவு அமைச்சர் பீரிஸ் மிகவும் சாதகமாகப் பேசியபோது அதையிட்டு ஆச்சரியப்படுவதற்கில்லை, இந்தியர்கள் தொடர்ச்சியாகவும் மனத் தடங்கல்கள்  இல்லாமலும்  அதை செயல்படுத்துவதில் ஊக்கமளித்தனர்.

”பிரதம அமைச்சர் சிங் (யூன் 2011) மக்களவையில் கூறினார்: “விடுதலைப் புலிகளின் அழிவு நல்லதுதான். ஆனால் விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தமிழ்மக்களின் சிக்கல் மறைந்துவிடாது. தமிழ் மக்களுக்கு முறையான குறைகள் இருக்கின்றன.    தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக குறைக்கப்படுவதாக அவர்கள் உணர்கிறார்கள். எங்கள் முக்கியத்துவம் என்னவென்றால், நாங்கள் ஒரு புதிய நிறுவன சீர்திருத்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதாகும். அப்போதுதான் அங்கு தமிழ் மக்கள் தாங்கள் இலங்கையின் சம குடிமக்கள் என்ற உணர்வைப் பெறுவார்கள். அப்போதுதான்   அவர்கள் கண்ணியத்துடனும் தன்மானத்தோடும் வாழ முடியும். இது எளிதானது அல்ல. ”

ஆயினும்கூட, 2019 க்கு மாற்றியமைத்த போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்களின் தேசிய பதிவு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவுச் சட்டங்கள் தொடங்கப்பட்டபோது, இந்திய அரசியல்வாதிகளின் மனதில் அவர்களின் முஸ்லீம் சகோதரர்கள் செய்த முறைப்பாடு  அளித்த குறைகளுக்கு / ஏற்றத்தாழ்வுகளுக்குப் பதிலளித்தார்களா என்று ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும்.

தலைமை அமைச்சர்  சிங் அவர்களது அறிக்கைக்குப் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் மக்கள் அவையில் பேசும் போது “இலங்கையில் ஆயுத மோதலின் முடிவு தமிழர்கள் உட்பட இலங்கையில் உள்ள   சிறுபான்மை சமூகங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள அனைத்து சிக்கல்களையும் தீர்க்க ஒரு வரலாற்று வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்ற  நிலைப்பாட்டை அரசாங்கமும் வெளிப்படுத்தியுள்ளது. இந்திய – இலங்கை  மே 17, 2011 இல் வெளியிட்ட  கூட்டுச் செய்திக்குறிப்பு, இதுபோன்ற நிலுவையில் உள்ள அனைத்து சிக்கல்களும் உண்மையான தேசிய நல்லிணக்கத்தை நோக்கி செயற்படுவதற்கான அரசியல் பார்வையுடன் ஊக்கமளிக்கும் ஒன்றுக்கொன்று தங்குமிடத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இலங்கை அரசுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்து வரும் உரையாடலில் விரைவான மற்றும் உறுதியான முன்னேற்றத்தை உறுதி செய்வதில் தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இலங்கை வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தினார், மேலும் 13 வது திருத்தத்தின் பின்னர் அதிகாரப் பகிர்வுப் பொதியை மேம்படுத்தத்  தேவையான நிலைமைகளை உருவாக்குவதற்குப் பங்களிக்கும் அத்தகைய நல்லிணக்கம்தேவை. ”  இதனை புத்திசாலித்தனதோடு நாம் ஒப்புக் கொள்ளலாம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission, LLRC) வின்  அறிக்கையின் பின்னர் இந்திய உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்: “இந்தச் சூழலில், கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தால், ஒரு அரசியல் செயல்முறையைத் தொடர்வதற்கான அதன் உறுதிப்பாட்டை, அனைவருடனும் ஒரு பரந்த உரையாடலின் மூலம் எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கும் அதையும் மீறிச் செல்வதற்கும் வழிவகுக்கிறது. எனவே, இந்திய எதிர்பார்ப்பு ‘13ஏ க்கு அப்பால்’ என்ற உறுதிமொழியின் அடிப்படையில் சரியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதாகும்.

எளிதில் செயல்படுத்தக்கூடிய எல்.ஆர்.ஆர்.சி பரிந்துரைகள் கூட அதை நியமித்த அரசாங்கத்தால் செயல்படுத்தப்படாதபோது, நல்லிணக்கத்திற்கு இந்தியா மேலும் பங்களிப்புகளை எதிர்பார்க்க முடியுமா என்பது ஒரு சிக்கல்.  ஒவ்வொரு இலங்கை அரசாங்கமும் நம்பிக்கையைத் தூண்டிவிட்டன, ஆனால் அது நிறைவேறவில்லை என்று இந்தியர்கள் கருத்து தெரிவிக்கலாம். எல்.எல்.ஆர்.சி -யு.என்.எச்.ஆர்.சி தீர்மானம் (2012) ஆக்கபூர்வமான எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை அமல்படுத்தவும் அதிகாரப் பகிர்வை வலுப்படுத்தவும் கோரியது, ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டோம்.

இந்திய வெளியுறவு அமைச்சர் (சனவரி 2012) எங்கள் வெளியுறவு அமைச்சர் முன்னிலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் இருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்: “இலங்கை அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கான அதன் உறுதிப்பாட்டை எங்களுக்கு உணர்த்தி வந்துள்ளது. இலங்கை அரசியல் அரசியல் யாப்பின் திருத்தம் 13 ஏ முழுமையாக அமல்படுத்தப்படுவதோடு, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுகளை அடைவதற்கு அதைக் கட்டியெழுப்பவும் வேண்டும்.” இந்திய அமைச்சர் அப்பட்டமான யதார்த்தத்தை எதிரொலித்துள்ளார். (மிகுதி அடுத்த வாரம்)

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் (யு.என்.எச்.ஆர்.சீ).யின் 19வது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். எங்களுக்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் அவரது உள்நோக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரதமர் சிங் கருத்துப்படி, அதன் நோக்கம் நமது இறையாண்மையை மீறவிரும்பவில்லை, “…ஆனால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும், கௌரவமான வாழ்க்கை வாழவும் வேண்டும்” என்று கரிசனையை  அவர் கூறினார். கிட்டத்தட்ட எல்லா இந்திய அறிக்கைகளிலும் ‘சமத்துவம், மதிப்பு, நீதி, தன்மானம், அரசியல் செயல்முறை, அமைதி  ‘ போன்ற சில வாலாயமான சொற்கள் ( Buzz words) இருக்கும்.

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க 13ஏ ஐ செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஈடுபாட்டையும் உறுதிப்படுத்துகின்ற வகையில் இந்தியா மற்றும் இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்துவத்தினரால் மேலும் பல அறிக்கைகள் வெளியிடப்படலாம். ஆனால் நமது குடியரசுத் தலைவர் 2017 இல் அவரது சகோதரர்களைப் போல, மற்ற அமைச்சர்களைப் போல செயலூக்கமான அரசியலில் ஈடுபடாதகாரணத்தால், இந்த அறிக்கைகளில் சில அவருக்கு புதியதாக இருக்கலாம். எனினும், 13ஏ பற்றிய இந்திய அணுகுமுறைகளைப் புரிந்து கொள்ள, அவருக்கு நன்கு தெரிந்த இரண்டு அண்மித்திய  அறிக்கைகளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சனாதிபதி கோத்தபாய இராசபக்சவின் அரச  செலவின் போது  பிரதமர் நரேந்திர மோடி, “சமத்துவம், நீதி, அரமைதி, மரியாதை ஆகிய தமிழர்களின் வேட்கைகளை நிறைவேற்றுவதற்காக நல்லிணக்க நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என நான் நம்புகிறேன். அதில் 13வது திருத்தத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். வாலாயம்ப்பான  சொற்களைக் கவனியுங்கள். சனாதிபதி கோத்தபாய இராசபக்ச நேரடியாகப் பதிலளிக்காமல்  “இன, மத மற்றும் வாக்களிப்பு பேதமின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் சனாதிபதி” என்று கூறினார்.

இந்தியா இலங்கை இருதரப்பு உச்சி மாநாடு குறித்து இணைச் செயலாளர் அமித் நரங் வெளியிட்டுள்ள மேற்கோள் “அமைதியையும் நல்லிணக்கத்தையும் அடைய இலங்கை தனது 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த வேண்டும்” என பிரதமர் மோடி, பிரதமர் மகிந்த இராசபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார். சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியநோக்கங்களை நிறைவேற்ற இலங்கையின் புதிய அரசு செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.” வாலாயச் சொற்கள். அரசியல் அறத்தை ஒதுக்கி, அது ‘அதன் 13ஏ செயல்படுத்த வேண்டும்’ மற்றும் ‘மே’. மேலே கூறப்பட்ட பல சாதகமான மேற்கோள்களுடன் நான் இந்த வலியுறுத்தலால்  வியப்படையவில்லை.

இவை ‘அடுப்பில்-புதிய’ அறிக்கைகள் (பிந்தையது வெறும் பதினைந்து நாட்கள் பழையது) மற்றும் பிரதமர் மோடியின் நினைவுகளில் நன்கு பதிக்கப்பட்ட எண்ணங்கள். பிரதமர் மோடி எளிதில் மறந்துவிடுவார், இந்தியாவை மீண்டும் மீண்டும் ஏமாற்றினால், கோரிக்கைகளை கைவிடவோ, மன்னிக்கவோ செய்வார் என நம்பி  நம்மை நாமே ஏமாற்றக்கூடாது! அது மோடியா, சிங்கா அல்லது கிருஷ்ணாவா அல்லது மேனனா எவரானலும்  சரி, அந்த  வாலாயச்    சொற்கள் ஒன்றே.

இங்கு, பிரதமர் மோடி, பிரதமர் சிங் (2012 இல்) போல தனது “கவலைகளை” வெளிப்படுத்தினார்.  யு.என்.சி.எச்.ஆர் 2021 ஐ பொறுத்தவரை, பிரதமர் சிங் போல் அவர் செயல்படுவதைத் தவிர்ப்பார் என நான் விரும்புகிறேன். அரசியல் பிளவுகள், அரசியல் ஆதாயங்கள், அரசியல் பிளவுகள், அரசியல் ஆதாயங்கள் எதுவாக இருந்தாலும்  இந்திய அரசியல்வாதிகள் தமிழ் வேட்கைகளை மூலதனமாக்குவார்கள்  என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியில், சனாதிபதி கோத்தபாய இராசபக்ச 19 ஏ இல் சனாதிபதி கடமைகளை நிறைவேற்றுவதற்கு 33(1)(ஆ) உறுப்புரையை இல்லாது செய்வதன் மூலம் “தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்தையும்” ஊக்குவிப்பதில் இருந்து விலகியுள்ளார். இந்த இரண்டு கடமைகளையும் அவர் ஏற்கத் தயாராக இல்லை என்று அது தீவிரமாகக் கூறுவாரேயானால் 13ஏ ஐ ஒழிப்பது நிச்சயமாக விரும்பத்தகாத எதிர்விளைவை ஏற்படுத்தும்.

சர்வதேச பொறுப்புகள்

இந்தியர் மட்டுமின்றி,  திம்புவிலிருந்து தொடங்கி,  பான் கீ மூன் மற்றும் ஐநாமஉ அவை போன்றவற்றுடன் சமாதானப் பேச்சுவார்த்தையின் போது சிறிலங்கா சமாதானத்தை உருவாக்குதல் அதிகாரப் பகிர்வு குறித்து சர்வதேசத்தின் கழுகுப் பார்வையில் இருந்து வந்திருக்கிறது.

அமைதிப் பேச்சுவார்த்தையின் போது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு ஒஸ்லோ அறிவிப்பு ஆகும். பேராசிரியர் பீரிஸ் அரசாங்க தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கினார்.  விடுதலைப் புலிகள் பிரிவினையைக் கைவிட்டு அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும் என்று அன்டன் பாலசிங்கத்தை நம்பவைக்க  அவரது (பேராசிரியர் பீரீஸ்) தெளிவான வெளிப்பாட்டை உண்மை வாதங்கள் மற்றும் பரந்த அறிவைக் கண்டேன். பேராசிரியர் பீரிஸின் ஈடு இணையில்லாத கல்விசார் கல்வித் தாக்குதலுடன் (நான் போற்றுகின்ற) உரையாடினார்.  அன்டன் பாலசிங்கம் கலந்துரையாடலைக் குறைத்து  -அநேகமாக பிரபாகரனுடன் – வெளிப்புற ஆலோசனைகளைப் பெறப்  பின்வாங்கினார் என்பதை நான் நினைவுபடுத்துகிறேன்.

ஒஸ்லோ அறிவித்தலை (Oslo Communique)  என்ற அமைப்பின் சார்பில் பேராசிரியர் பீரிஸ் (அன்றைய நாயகன்)தான். “ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட்டாச்சி கட்டமைப்பின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்களில் உள்ளக சுயாட்சிக்  கோட்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்ட  ஒரு  இணைப்பாட்சித் தீர்வை ஆராய்வதற்கு” கட்சிகள் உடன்பட்டன.

ஊடக மாநாட்டில் பேசிய பேராசிரியர் பீரிஸ் ஒருமித்த நாட்டுக் கட்டமைப்பிற்குள் – பிரிவினை நீங்கலாக –  பரந்த அதிகாரப் பகிர்வைப் பாராட்டினார்.  “நாம் யுத்தத்தைக் கைவிட்டு ஒரு அரசியல் தீர்வை  நம்பினால் இப்போது நாம் ….அதிகாரப் பகிர்வு தவிர வேறு எந்த கிராமப்புற பழங்குடி அரசியல் தவிர  வேறு இருக்க முடியாது   – கூட்டாட்சி தீர்வின் தன்மை பற்றிய அடிப்படையைத் தவிர.”

13ஏ  என்பது வரலாற்று உறைவிடம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பைப் பற்றிப் பேசும் இந்திய – இலங்கை உடன்பாட்டோடு ஒப்பிடும்போது  ஒஸ்லோ அறிவித்தல்  குறைவான அதிகாரப் பரவலாக்கல் மற்றும் கூட்டாட்சித்தன்மை  உடையதாகும். எனவே, ஒஸ்லோவை மறந்து விட்டு, 13ஏ க்கு எதிரான எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்துவதில் பேராசிரியர் பீரிஸ் தலைமை வகிக்க முடியும். அமைச்சர் அலி சாப்ரிக்கு எந்த அவமரியாதையும் இல்லாமல், பேராசிரியர்  ஜி.எல். பீரிஸ் தனது அனுபவத்துடன்  (குறிப்பாக இந்தியர்களுடன்) 13ஏ ஐ சமாளிக்கப் பொருத்தமானவர் என என்னால் கூறமுடியும். முரண்பாடாக, இது அவரது தகுதியின்மையும் ஆகும். ஏனெனில் அவரது கடந்தகால  நிலைப்பாடு 13ஏ ஐ ஒழிக்க வேண்டும் என்ற அழைப்புகளுக்கு ஏற்ப இல்லை!

விடுதலைப் புலிகளைத்  தோற்கடித்த பின்னர், சனாதிபதி மகிந்த இராசபக்ச, “13ஏ ஆவது திருத்தத்தைச்  செயல்படுத்துவது மற்றும் புதிய சூழ்நிலைகளில், தமிழ் கட்சிகள் உட்பட, சகல கட்சிகளுடனும் ஒரு பரந்த கலந்துரையாடலைத்  தொடங்க வேண்டும் என்பது  எனது தீர்க்கமான நிலைப்பாடு” என அறிவித்தார்.மேலும்இந்தச் செயல்முறையை மேம்படுத்தவும் இலங்கையில் நீடித்த சமாதானத்தையும் அபிவிருத்தியையும் கொண்டு வருவதற்கும் நான் உறுதியோடு இருப்பதாகக்” கூறினார்.  மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜெனீவாவின் ஐநாமஉ அவையில்  பான் கீ மூனுக்க கொடுத்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்தும் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. 13ஏ ஐ  செயல்படுத்துவதில் கொடுக்கப்பட்ட கடப்பாடு அது ஆகும். முதல் முறையாக, அவர் 13ஏ க்கு  ஒரு பன்முக உறுதிப்பாட்டைச் செய்தார்.

ஜனாதிபதி சிறிசேன – பிரதமர் விக்கிரமசிங்க அரசாங்கம் இன்னம் ஒருபடி மேலே சென்று 2015 ஒக்டோபர் மாதம் ஐநாமஉ அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதனை உள்ளடக்கி இருந்தது. ஆனால் புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றவோ அல்லது 13ஏ உடன் செல்லவோ அவர்கள் தவறிவிட்டனர்.13ஏ க்கு அதிக சர்வதேச கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சாத்தியமான அரசியல் தந்திரங்களைக்  கையாளுதல்

1990 களின் பிற்பகுதியில், பிராந்திய சபைகளை (RCs) உருவாக்குவதற்கான அரசாங்க முன்மொழிவுகள்  – அதாவது வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்திய சபைகள்  மற்றும் மத்திய  கட்டுப்பாட்டிலான அம்பாறை தேர்தல் தொகுதியை ஒரு பிராந்திய சபையாக உருவாக்கவும் – யோசனைகள் இருந்தன.  தொடர்ச்சியில்லாத முஸ்லிம்கள் வாழும் பகுதியில்  பிராந்திய சபையை உருவாக்குவதற்கும் கூட இன்னொரு யோசனை இருந்தது. சிறிலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் திரு. அஸ்ராப் இந்த முன்மொழிவுகளின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

13ஏ  ஐ ஒழிப்பது ஒரு வெற்றிடத்தை உருவாக்கும். 20 ஏ ஐ ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் அலி சப்ரி மற்றும் ரொமேஷ் டி சில்வா குழு, உத்தேச அரசியல் யாப்பில் முன்மொழியப்பட்டுள்ள பிராந்திய சபைகளின்  பிரேரணையை இணைப்பார்கள்   என எதிர்பார்க்கலாம். சில வேளை திருத்தங்களுடன், முஸ்லிம்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கலாம். இது ஒரு கற்பனையான சூழ்நிலை, ஆனால் 13ஏ ஐ ஒழிக்க வேண்டும் என்று கோருபவர்கள் கவனமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் அரசியல் சூழ்ச்சிகளையிட்டு  எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் தவறான தீர்ப்பு 13ஏ விட அதிக சிக்கலை ஏற்படுத்தும்.

முடிவுரை      

சுருக்கமாக, 13ஏ ஐ ஒழிக்கக் கோரும் எதிர்ப்பாளர்கள், உள்நாட்டு அரசியலமைப்பு, அரசியல், நிறுவன அமைப்புகள், இந்தியாவுடனான இருதரப்பு உடன்பாடு, குறிப்பாக இந்தியாவிற்கும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள சர்வதேச நிறுவனங்களுக்கும் அளித்த பல உறுதிமொழிகளை நன்கு  அறிந்து வைத்துள்ளனர். 13ஏ  ஒழிக்கப்படாவிட்டால், அரசியல், பாதுகாப்பு, பொருளாதார மற்றும் அரசியல் நிறுவன அமைப்பு ரீதியான ஆபத்துக்களை முன்கணிக்கும் தேசியவாத கூறுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டிவரும்.

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதால், அதன் சர்வதேச பரிமாணங்கள் மிகவும் முக்கியமானவை. கலாநிதி ஜெகன் பெரேரா எழுதுவது போல்: “சர்வதேச அரசாங்கங்களை கையாள்வதில், அதே போல்  இன்னும் அதிகமாக இல்லை என்றாலும்   உறுதிப்பாடுகளை நடைமுறைப்படுதுவதும் முக்கியமானது. அடிக்கடி வாக்களிக்கும் அப்பாவி பொது மக்களைப் போல சர்வதேச அரசாங்கங்களை ஏமாற்ற முடியாது.”  இது மகிந்த இராசபக்ச ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டது. இப்போது நடப்பது கோத்தபாய இராசபக்ச ஆட்சி. ஆனால், அரசாங்க மாற்றங்களைப் பொருட்படுத்தாமல், சர்வதேச சமூகத்தின் சிந்தனை இலங்கையின்  பொறுப்புக்களைப் போலவே உள்ளது.

இந்தியாவில் ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகள் 13ஏ மற்றும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சீரான நிலைப்பாடு உள்ளது. ஆயினும்கூட, இந்தியாவின் கவனம் இந்திய – பசிபிக், சீன அச்சுறுத்தல்கள், சுதந்திர வர்த்தகம், முதலீடுகள் போன்ற வற்றிற்கு மாறியுள்ளதுடன், நிலுவையில் உள்ள பிரச்சினைகளை பரஸ்பர நன்மைக்காக  (கிருஷ்ணா கூறியது போல்)  ஒரு அரசியல் பார்வை யுடன் ஒரு புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர இணக்க உணர்வுடன் தீர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம்.”

13ஏ ஐ ஒழிப்பது புவிசார் அரசியல், அரசியல், பொருளாதார, இராஜதந்திர, பாதுகாப்பு வாரியாக செலுத்த வேண்டிய விலையை ஏற்படுத்தக்கூடும். 13ஏ ஐ ஒழிக்க நினைப்பவர்கள் சாத்தியமான இருப்புநிலைகளை மதிப்பீடு செய்ய வேண்டும், பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்கள் மூலம் மாற்று வழிகளை எடைபோட வேண்டும். கிடைக்கக்கூடிய இந்த விருப்பங்களை மறந்து விடுவதும், அவற்றின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதும், 13ஏ ஐ ஒழிக்கப் பயன்படும். ஆனால் இது மகிழ்ச்சியான செயல்  அல்லது  மகிழ்ச்சியான முடிவு என்று அர்த்தமல்ல. (முற்றும்)
 ————————————————————————————————————————————

Crisscrossing 13A Abolition

By Austin Fernando

 November 13, 2020

I have recently read a speech by Tamil National Alliance (TNA) Leader R Sampanthan, delivered in 2017. This excellent presentation supported the Thirteenth Amendment (13A) to the Constitution. In appreciation of his intelligent arguments, I share his thinking not to canvass for 13A but to broaden the discussion with forgotten overlapping references that need to be factored in.

 Status of 13A

Devolution was thrust upon us, consequent to the Indo-Sri Lanka Accord of 1987. Then, certain groups rejected this pact as well as 13A. Their position remains unchanged.  

  At the outset, we must remind ourselves that devolution was introduced to facilitate conflict resolution. Someone may argue that 13A was legalized at a time when terrorists held sway, and, therefore, the incumbent government need not stick to the beaten track. TNA politicians may argue that the reasons for, and the outcomes of, the conflict remain although terrorism is no more. 

The performance of the Provincial Councils (PCs) is barely satisfactory in many respects. Some critics have dubbed them ‘white elephants.’ I do not subscribe to such extreme criticisms because one reason for the weakness of the PCs is the lack of ‘center-periphery cooperation’. Decades ago, Professor GL Peiris emphasized that the PCs needed empowerment for financing, establishment management, and statute making. To date, these matters remain as issues.    

Some others who see intrinsic fault lines in devolution oppose PCs based on concept, content, and politics. They contend that devolving police and land powers, the amalgamation of provinces, etc., trespass the sovereignty and endanger national security.  

The vehement call for abolishing the 13A has originated from politicians, supported by media personnel, and a section of the Buddhist monks. Another alternative proposition is to withdraw certain functions (e.g. land and police powers) to impede PCs when drafting a new Constitution.   

Indians and 13A

Concurrently, there are some predicting that India will take up cudgels if the 13A is tampered with. Arguments are submitted against Indian interventions on devolution.

One reason adduced is that India failed to adhere to the Accord (e.g. disarming the LTTE) and therefore, its demand that we fully implement the devolution of power is unfair.

Secondly, they argue that foreign interference with our constitutional processes is inappropriate. They point out that the Indian Government repealed Article 370 with Article 35A in 2019, affecting Jammu-Kashmiri laws, including citizenship, property ownership, and fundamental rights, and silenced critics by stating it was an “Indian internal affair.” Hence, they argue that Sri Lanka should follow suit if India objects to abolishing the 13A.  

  Thirdly, they contend that the Indian government changed Jammu Kashmir rules to allow the Union Government to release lands to Indians to attract development/investment and hence India cannot object if we centralize land administration.

Fourthly, they argue that Indians perform asymmetrical administration in Himachal and Uttarkhand States, as against centralized Jammu-Kashmir, and therefore, by amending 13A, we could do similarly in selected Provinces.   

India stands for sovereignty, independence, and the territorial integrity of Sri Lanka, as repeatedly mentioned by Indian leaders. Additionally, there have been commitments made by Indian and Sri Lankan leaders and internationals to promote equal treatment to minorities.

My attempt is to refer to some such, extracted from the quoted speech, add a few more experiences to demonstrate that abolishing 13A will be considered a negative action in resolving conflict-related issues and there could be other solutions.   

Probing Indo-Lanka interactions  

 Let us turn to TNA Leader’s speech. In November 2006, Indian Foreign Secretary Shivashankar Menon has expressed to President Mahinda Rajapaksa: “India looks forward to an early ‘comprehensive political settlement’ of the ethnic issue. It must take into account the aspirations of all sections, including the Tamils.” 

This was nearly twenty years after the Accord and while the conflict was ongoing. Responding, President Mahinda Rajapaksa has detailed the work by the All-Party Representatives Committee (APRC) and the Committee of Experts. But it is well-known that these outputs did not matter to his government. It can be likened to the Indian expectations to implement the 13A during the conflict. 

At one stage, President Mahinda Rajapaksa was excessively supportive of ‘power-sharing.’  Addressing the inaugural Meeting of the APRC and the Experts Committee, he said: “The unity, territorial integrity, and sovereignty of our country must be preserved” and added, “Our objective must be to develop a just settlement within an undivided Sri Lanka.” Great. This is the common aspiration of people, TNA, and India. While identifying the roadblocks, he expected the people in their localities must “take charge of their destiny and control their politico-economic environment.” This is the Principle of Subsidiarity in action. 

He said: “Any solution must be seen as one that stretches to the maximum possible devolution, without sacrificing the sovereignty of the country. Given the ground situation, given the background to the conflict, it, therefore, behooves on particularly the majority community to be proactive in striving for peace ….”  This must have been an elixir to Indians and TNA! 

Next, Minister Basil Rajapaksa went to India (October 2008) and a statement said: “Both sides discussed the need to move towards a peacefully negotiated political settlement on the island including the North …. The Indian side called for the implementation of the 13A and greater devolution of powers to the Provinces. Minister Basil Rajapaksa emphasized that the President of Sri Lanka and his Government were committed to a political process that should lead to a sustainable solution”. Elixir again!

His message to India was that we had passionately committed to a political process. He is expected to be in the Cabinet soon and knowing the Indian External Affairs Minister Dr. Jaishankar’s ways personally, I may expect a reminder of his message.

PM Manmohan Singh, after this visit of Minister Basil Rajapaksa, (November 2008), informed President Mahinda Rajapaksa that Colombo must create conditions for meeting “legitimate political aspirations” of the Tamils under the devolution package (13A). Irrespective of domestic politics Indians were consistent in demands; Sri Lankans were consistent in declaring unfulfilled hopes!

Prof. Peiris visited India (May 2011) and mentioned “A devolution package building upon the 13th Amendment would contribute towards creating the necessary conditions for such reconciliation.” Further, he referred to the work of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC), which made extremely attractive, pro-peace, and reconciliation-oriented recommendations. No wonder when Foreign Minister Peiris spoke so favourably on the 13A, Indians continuously and without reservations harped on its implementation.

PM Singh (June 2011) said in Lok Sabha: “The decimation of the LTTE was something good. But the Tamil problem does not disappear, with the defeat of the LTTE. The Tamil population has legitimate grievances. They feel they are reduced to second-class citizens. And our emphasis has been to persuade the Sri Lankan Government that we must move towards a new system of institutional reforms, where the Tamil people will have a feeling that they are equal citizens of Sri Lanka, and they can lead a life of dignity and self-respect. It is not easy.”

Nevertheless, reverting to 2019, one may question whether the Indian politicians’ minds were responsive to the grievances/inequalities their Muslim brethren complained of when the Citizenship Amendment Act, National Register of Citizens, and National Population Register laws were launched.  

Two months after PM Singh’s statement, Indian External Affairs Minister S. M. Krishna said in Lok Sabha: “The Government has also articulated its position that the end of the armed conflict in Sri Lanka created a historic opportunity to address all outstanding issues relating to minority communities in Sri Lanka, including Tamils. The Joint Press Release of May 17, 2011 states that all such outstanding issues had to be settled in a spirit of understanding and mutual accommodation imbued with a political vision to work towards genuine national reconciliation.

The External Affairs Minister of Sri Lanka affirmed his Government’s commitment to ensuring expeditious and concrete progress in the ongoing dialogue between the Government of Sri Lanka and representatives of Tamil parties and that a devolution package building upon the 13th Amendment would contribute towards creating the necessary conditions for such reconciliation.” Sensibly we may agree.

The Indian Official Spokesman made a statement after the LRRC Report: “In this context, we have been assured by the Government of Sri Lanka on several occasions in the past, of its commitment towards pursuit of a political process, through a broader dialogue with all parties, including the TNA, leading to the full implementation of the 13th Amendment to the Sri Lankan Constitution, and to go beyond, so as to achieve meaningful devolution of powers and genuine national reconciliation.” Thus, Indian expectation rightly settled on an assurance ‘beyond 13A.’  

  When even the easily implementable LRRC recommendations were not executed by the government that appointed it, whether India could await further contributions to reconciliation was an issue. Indians may comment that every Sri Lankan government has only kindled hopes, but not delivered. The post-LLRC- UNHRC Resolution (2012) demanded the implementation of constructive LLRC recommendations and strengthening devolution, but we failed to do so.

The Indian Minister of External Affairs made a statement (January 2012) in the presence of our Minister of Foreign Affairs, from which I quote: “The government of Sri Lanka has on many occasions conveyed to us its commitment to move towards a political settlement based upon the full implementation of the 13A to the Sri Lankan Constitution  and building on it so as to achieve meaningful devolution of powers.” The Indian Minister has echoed the stark reality.

Then again, the Indian Prime Minister Manmohan Singh said that India was inclined to vote in favour” of a resolution on promoting reconciliation and accountability in Sri Lanka at the 19th session of the UNHRC. His inclination was adopted by voting against us. According to PM Singh, its objective was not wanting to infringe our sovereignty, “…. but concerns should be expressed so that Tamil people can get justice and lead a life of dignity.” In almost all Indian statements a few buzz words- ‘equality, dignity, justice, self-respect, political process, peace’ appear.

 There could be many more statements by Indian and Sri Lankan politicians and bureaucrats, unknown to us, confirming the need and commitment to implement the 13A to resolve the Tamils’ difficulties. But since our President was not in active politics per se in 2017 like his brothers and other Ministers, some of these statements may be new to him. However, I may remind two recent relevant statements, most probably known to him, worthy of consideration to understand the Indian attitudes on 13A.

PM Narendra Modi during President Gotabaya Rajapaksa’s State Visit, like other interlocutors, said: “I am confident that the Government of Sri Lanka will carry forward the process of reconciliation, to fulfill the aspirations of the Tamils for equality, justice, peace, and respect. It also includes the implementation of the 13th amendment.” Note the buzz words. President Gotabaya Rajapaksa, without responding directly kept aloof, imaging him “the President of all Sri Lankans, irrespective of ethnicity or religion or voting choices.”

Joint Secretary Amit Narang’s quote on India Sri Lanka Virtual Bilateral Summit – October 26th, 2020- stated that PM Modi has insisted on PM Mahinda Rajapaksa that “Sri Lanka must implement its 13th constitutional amendment to achieve peace and reconciliation…. PM Modi called on the new Government in Sri Lanka to work towards realizing the expectations of Tamils for equality, justice, peace, and dignity.” Buzz words: setting apart political ethics, it is ‘must implement its 13A’ and not ‘may.’ With so many positive quotes stated above I am not surprised of this insistence.  

These are ‘oven-fresh’ statements (latter only a fortnight old) and thoughts well embedded in PM Modi’s memory. We should not dupe ourselves into believing that PM Modi forgets easily and will give up demands or forgive when one repeatedly frustrates India! Whether it is Modi or Singh or Krishna or Menon, the buzz words are the same.

Here, PM Modi, like PM Singh (in 2012) expressed his “concerns”. I wish he will refrain from acting like PM Singh as regards the UNCHR 2021. We must remember that irrespective of political divides, for political expediency, Indian politicians capitalize on the Tamil aspirations.

Against this background, President Gotabaya Rajapaksa has withdrawn from promoting “national integration and reconciliation” by repealing Article 33(1)(b) under the mandated presidential duties in 19A. If it seriously conveys his unwillingness to undertake these two duties, abolishing 13A will surely lead to an undesirable reaction.  

International commitments

Besides Indians, Sri Lanka has been under the international microscope regarding peacemaking and power-sharing, commencing from Thimpu, extending to Peace Talks, with Ban Ki-Moon, and UNHRC, etc.

A notable event during the Peace Talks was the declaration of the Oslo Communique. Prof. Peiris led the government delegation, and I witnessed his excellent exposition with clarity, resonating factual arguments, and vast knowledge to convince Anton Balasingham that LTTE should agree to power-sharing, without separation.  In a lighter vein, I am reminded how with Professor Peiris’s unmatched academic onslaught (which I adored), Anton Balasingham cut-short the discussion and retreated for external consultations—probably with Prabhakaran.

It was Prof Peiris -the Man of the Day- who pushed for the Oslo Communique. The parties agreed “to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking people, based on a federal structure within a united Sri Lanka.”

At the media conference, Prof Peiris praised extensive power-sharing within a one-county framework, sans cessation, and added, “Now if we believe in a political solution if we are renouncing war…. there could not be any other rural tribal except power-sharing – except the basis, the character of a federal solution.”

 The 13A is less devolutionary and federalist in content than the Oslo Communique that spoke of historical habitation and federal structure. Therefore, Prof. Peiris could now forget Oslo and take the lead in calming down protesters against 13A. Without any disrespect to Minister Ali Sabry, I may say that Prof. GL Peiris is the best bet to deal with 13A with his experience (especially with Indians). Paradoxically, it is also his disqualification, for his past stance is not in line with calls for abolishing 13A!

After  defeating the LTTE, President Mahinda Rajapaksa stated to UN Secretary-General Ban Ki-Moon that his firm resolve was ‘to proceed with the implementation of the 13th Amendment, as well as, to begin a broader dialogue with all parties, including the Tamil parties in the new circumstances, to further enhance this process and to bring about lasting peace and development in Sri Lanka.” After three days, a resolution was submitted at the UNHRC, Geneva confirming his stances with Ban Ki-Moon. It was a commitment to implementing the 13A. For the first time, he made 13A a multilateral commitment.  

President Sirisena – PM Wickremesinghe government went a step further by incorporating it in October 2015 UNHRC Cosponsored Resolution. They failed to pass a new Constitution or move-on with 13A. More international attention was drawn to 13A.

Potential political manipulations

In the late 1990s, there were government proposals to create Regional Councils (RCs) – i.e. North-Eastern and South-Eastern RCs and even to create a center-controlled Ampara Electorate, to enable the establishment of the latter RC. Non-contiguous Muslim RC was another concept floated. SLMC Leader Mr. Ashroff was one keen supporter of those proposals.

The abolition of 13A will create a void. Muslim Parliamentarians who supported the 20A may expect Minister Ali Sabry and Romesh de Silva Committee to incorporate the said RCs proposal in the proposed Constitution, sometimes with revisions more favourable to the Muslims. This is a hypothetical situation, but those who call for abolishing 13A should take careful note of. They must be alert to political manipulations because the wrong judgment will cause more trouble than 13A.

Conclusion           

In summary, the opponents of 13A, who demand its abolition had better heed the domestic constitutional, political, institutional formations, bilateral agreement with India, many commitments made especially to India and international stakeholders in multilateral agencies. etc. If the decision is not to abolish, the government will be answerable to nationalistic elements who predict political, security, economic, and political organizational risks.  

Since the country is faced with a severe economic crisis, the international dimensions thereof are extremely important. As Dr. Jehan Perera writes: “In dealing with international governments, it is equally, if not more, important to keep commitments. The international community of governments is not as gullible as the voting public often is.”  This was written during Mahinda Rajapaksa Regime. Now, it is Gotabaya Rajapaksa regime. But irrespective of government changes, the thinking of the international community remains the same as for Sri Lanka’s commitments.

 Policies of the political parties that have been in power in India have been consistent as regards 13A and the issues Tamils are faced with. Nevertheless, India’s focus has shifted from devolution to Indo-Pacific, Chinese threats, free trade, investments, etc. and the possibility may exist of settling outstanding issues to mutual benefit (as Minister Krishna has said) “in a spirit of understanding and mutual accommodation imbued with a political vision.”

Abolishing 13A may entail a price payable geopolitically, politically, economically, diplomatically, security-wise, etc. Those who push for abolishing 13A must evaluate the potential balance sheet, weigh alternatives through negotiations and compromises. Forgetting these available options and to be overenthusiastic about their two-thirds majority, which can be used to abolish 13A may not mean happy hunting or a happy ending.

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply