Bhikkhus behaving badly?

பவத்த தேரர்கள் மோசமாக நடந்துகொண்டார்களா? 

மருத்துவர் உபுல் விஜயவர்த்தன

புத்தர் உபதேசித்த ஆழமான உண்மைகளைக் கூறுவதற்குப் பதிலாக, சில தேரர்கள் கதைகள் சொல்லுவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள். இன்னும் மோசமான முறையில் அவர்கள் பொய்களைக் கூறிவருகிறார்கள். இதில் அண்மைக் காலமாக  புத்தர் இலங்கையில் பிறந்தார் என்ற புரளியைப் பரப்பி வருகிறார்கள்.   அது உண்மையாக இருக்க நான் ஆசைப்படுகிறேன். என்றாலும், துரதிட்ட வசமாக, புத்தர் இங்கே பிறந்தார் என்பதை விட்டு விட்டு இலங்கைக்கு வருகை தந்தார் என்பதற்கு எந்த  தொல்லியல் சான்றுகளும்  இல்லை.

அவுஸ்திரேலியாவின் பண்டே தம்மிகா அவர்கள் எழுதிய சிறந்த கட்டுரையில், இந்த நாளேட்டில் (த ஐலண்ட்)  அச்சிடப்பட்டு வெளிவந்த கட்டுரை  புத்தர் உண்மையில் எங்கே பிறந்தார் என்பதற்கான  தொல்லியல் சான்றுகளுடன் எண்பிக்கிறது (புத்தர் இலங்கையில் பிறந்தாரா? சண்டே ஐலண்ட், 25 ஒக்டோபர்).  ஆனால் இந்தத் தேரரும் அவரது  ஆதரவாளர்களும் தொல்பொருள் சான்றுகளைப் புறக்கணித்து விட்டு,  சொந்தமாகக்   கட்டுக்  கதைகளைப் புனைந்து அவற்றை சான்றுகளாகக்   காட்டுவார்கள்  என நான் உறுதியாக நம்புகிறேன்.

அதிட்டவசமாக, சாதி என்பது நவீன சமுதாயத்தில்  மங்கிக் கொண்டு போகும் ஒரு  கட்டமைப்பாகும்.  அதை  அரசியல்வாதிகளும், பிக்குகளும் உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். சில பவுத்த மத பீடங்கள் சாதி அமைப்பைத்  தொடர்ந்து  பேணிவருகின்றன.  முற்றிலும் இழிவான இந்த நடைமுறைன பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை.  “நாம் கௌதம புத்தரை  கைவிட்டு விட்டோமா”  (த ஐலண்ட் மே 08, 2020) என நான் எழுதிய கட்டுரையில் விரிவாக விவாதித்திருந்தேன். இப்போது ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகின்றேன். சாதி அடிப்படையில்  குரு தீட்சை பெறுவதைத் தடுப்பது பாசாங்குத்தனத்தின் உச்சம் இல்லையா?

புத்தர் பிறப்பால் அல்ல,  ஒருவரின் நடத்தையால் மட்டுமே  அவன்   தீண்டத்தகாதவன் அல்லது  பிராமணன்  என்பதைத்  தீர்மானிக்கும் என்றார்.    (கம்னா வஸலோ ஹோதி, கம்மன ஹோதி பிரம்மனோ). Tamil News | விமானப்படை சீன முகத்து கல்வித் கழகத்தின் வருடாந்த பிரித் ஓதல்  வைபவம் ஒன்று | Sri Lanka Air Force

“எங்கள் கோரிக்கைகள்  48 மணி நேரத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்” என்று  ஒரு தேசிய அவசரநிலையின் மத்தியில் ஒரு தொழிற்சங்கத் தலைவர் சமீபத்தில்  கூச்சலிட்டார், அது என்னை ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. Covid-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில்  தொடக்கத்தில் இருந்த  பிடிப்பு என்ன காரணத்திற்காக இழக்கப் பட்டிருப்பதாகத் தோன்றினாலும்,  இலங்கையில் உள்ள பிரச்சினை உலகின் மற்ற நாடுகளில் நடக்கிறவற்றோடு ஒப்பிடும்போது பெரிதாக இல்லை. 

இங்கிலாந்தில் கொடிய வைரஸ் தொற்றுக்கு  ஏறக்குறைவாக 300  பேர்  ஒவ்வொரு நாளும் பலியாகிக்  கொண்டிருக்கின்றார்கள். எனினும் நொருக்கப்பட்ட  எங்கள்  பொருளாதாரம்  மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது.  இதனால்    உருக்குலைந்து  போன  எமது கொருளாதாரம்  மேலும்  சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையில், மறைமுகமாக வேலை நிறுத்தம் என்பது முற்றிலும் பொறுப்பற்றது. இந்தத் தொழிற்சங்கம் என்பது என்ன? ஒரு செவிலியர் சங்கம். அவர்கள் தேவதூதர்கள் என்று சொல்லப் படவில்லையா? இந்தச்  சங்கத்தின் தலைவர் யார்? ஒரு பவுத்த  மதகுரு! “ஆரோக்கியம் தான் மிகப்பெரிய ஆதாயம்” என்றும் “எனக்கு ஊழியம் செய்யவேண்டியவன் வியாதியலாளருக்கு ஊழியம் செய்ய வேண்டும்” என்றும் புத்தர் சொன்னதை மறந்துவிட்டரா?

ஒரு பவுத்த மதகுரு நோயாளிகளின் உயிரைப்  பணயம் வைத்து ஆபத்துக்கு உள்ளாகும் படி கூறுவது, ‘மெத்தா (கழிவிரக்கம்)  கருணா (கருணை) முதிதா (மற்றவர்களின் இன்பத்தில் தானும்  இன்புறுவது) உபேக்கா -உள்ளச்சமனிலை) என்ற கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்திய ‘கருணையாளனுக்கு” (புத்தர்) செய்தமிகப் பெரிய அவமானம் ஆகும்.

இலங்கையில் உள்ள செவிலியர், தமது சொந்தத் தொழிலில் உள்ள  ஒரு உறுப்பினரைக்  கொண்டு   தொழிற்சங்கத்தை வழிநடத்த முடியாதநிலை இருப்பது பெரும் வெட்கக்கேடானது. உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாட்டில், இன்னும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தொழிற்சங்கத்திற்கு தலைமை தாங்க   தலைமைப் பண்புகள் கொண்ட பெண் இல்லையா?

ஒரு பவுத்த மதகுரு தொழிற்சங்கத்தை, அது செவிலியர் அல்லது வேறு சங்கமாக  இருக்கலாம்,  வழிநடத்துவது  உண்மையில் ஒரு அட்டூழியம்  ஆகும்.   அவர் அரசியல் செய்து வருகிறார் என்பது வெளிப்படை. சஜித்துக்குப் பதிலாக எதிர்ப்பு அரசியல் செய்ய அவர் முயற்சிசெய்து வருகிறாரா?

தேசத்திற்கு  ஆபத்து ஏற்படும் காலங்களில் பவுத்த தேரர்கள்  தேசத்தைக் காப்பாற்ற  முன்வந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களில் சிலர் பல்வேறு வேடங்களை அணிந்து கொண்டு வருகிறார்கள்,   ஆனால்  அன்றாட அரசியலில் அவர்கள்  பங்கு கொள்ள உரிமைகிடையாது.  ‘இராஜபக்சவை ஒழித்துக் கட்ட அரசியல் சுத்தம் செய்யும் பரப்புரையில்  ஈடுபட்ட  பவுத்த தேரர்  ஒருவரின் முயற்சியினால், ஒரு அழுகிய யாப்பாலனயவின் ஐந்து ஆண்டு ஆட்சியை நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது பிக்குகளின் மற்றொரு குழு புதிய அரசாங்கத்திற்குக் கட்டளையிட  முயன்று வருகிறது.

உண்மையில், அவர்களில் ஒருவர் ஒரு செய்தியாளர் மாநாட்டில் “அவர்கள் அரசியலமைப்பைத் திருத்த விரும்பினால், முதலில் எங்கள் அனுமதியைப் பெற வேண்டும்” என்று கூறினார்! மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே அரசாங்கம் இருக்கிறது,  சங்கம் அல்ல என்பதை  அவர்கள் மறந்து விட்டார்கள். இலங்கை அவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அனைத்து குடிமக்களுக்கும்  அது சொந்தம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டப் பட வேண்டும்.அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்! - Page  7 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்

பவுத்த தேரர்கள்  நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய “கௌரவ” அரசியல்வாதிகளைப் போல் இழிவான முறையில் நடந்து கொண்டனர். சபை நடுவில் அமளிதுமளிகள்  ஏற்பட்டன. ஏமாற்றமடைந்த பவுத்த  மதத்தினர்  தேரர்களுக்கு வாக்களிப்பதை நிறுத்தி விட்டனர். இருந்தும் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்சி தேசிய பட்டியலில் ஒரு  இடத்தைப் பெற்றாலும் அதைத் தொடர்ந்து வந்த படுதோல்வி  இப்போதுள்ள ஐ.தே.க.வின் குறும்புத்தனத்துக்குச்  சமமானது! புத்தர் அரசியலில் ஈடுபட்டாரா? ஆட்சியாளர்களுக்கு வேண்டாத அறிவுரைகளைச் சொல்லி  வந்தாரா? நிச்சயமாக இல்லை.  அவர் அவர்களிடம் இருந்து விலகி இருந்து கொண்டார்.

சில நேரங்களில் ஆட்சியாளர்கள்  விரும்பத்தகாத தேர்வுகளை எடுக்க  வேண்டும் என்ற உண்மையை அவர் உணர்ந்திருந்தார்.  கேட்டால் மட்டுமே  ஆலோசனை வழங்கினார். இதற்கு மாறாக, நவீன கால “அரசியல் மதகுருமார்” சிலர் அரசர்களை  உருவாக்க எத்தனிக்கிறார்கள்.  எத்தனிப்பது மட்டுமன்றி, அவர்கள் விரும்பியதைப் பெரும்பாலும் தனிப்பட்ட சலுகைகளை வழங்க மறுக்கும் போது அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக அச்சுறுத்துகின்றனர். ஒரு சிலரின் செயல்களினால், துரதிட்டவசமாக, முழுச்  சங்கத்தையும் கறைப்படுத்துகிறார்கள். காரணம் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் உள்ள பலர் இருப்பதால், ஒட்டுமொத்த சங்கத்தின் நற்பெயரைக்  கெடுக்கிற  வாய்ப்ப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

பனா உபதேசத்திற் சில  தேரர்கள்  பல்வேறு வேடங்களில் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற வதந்திகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தர்மத்தை விற்கிறார்கள்! எவ்வாறாயினும், எனது  நண்பர் ஒருவருடன் நான் நடத்திய உரையாடலில் இது முதன்முதலாக  உறுதிப்படுத்தப்பட்டது.  துரதிட்டவசமாக இவர் தனது மகள்  புற்றுநோயால் இறந்துவிட்டார்.  புகழ்பெற்ற போதகரான பவுத்த தேரர் (ஹாமதுருவோ) ஒருவரை  நான் ஒரு  மாடகா-பானாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த போது அவர் ஒரு எனக்கொரு செய்தி அனுப்பினார். அதில் தனக்கு  ரூபா 25,000 தர வேண்டும் என்று கேட்டிருந்தார்.  நான் அதிர்ச்சியடைந்தேன். என்னிடம் ரூபா 15, 000 மட்டும் இருந்தது. அதனை  நான் அவருக்கு அனுப்பினேன். 

இந்தத்  தேரர்  பணத்துக்காகத்  தனது உன்னத பொறுப்பை நிறைவேற்றினார்! இன்னும் சிலருக்குத் தங்களது சொந்த ஒலி அமைப்புப் தேவை என்று கூறி அதற்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள். தம்மத்தை விற்க இது ஒரு எளிய தந்திரமாகும்! ஒரு பவுத்தர்  புத்தரின் உருவத்தைப் பச்சைகுத்திக் காண்பிக்கும் போது நாம் கோபப்படுகிறோம், ஆனால் மஞ்சள் அங்கி அணிந்த இந்த வணிகர்களை  நாங்கள் வணங்குகிறோம், ஊக்குவிக்கிறோம்!

எந்தவொரு பிரிகாரமும் வழங்கப்படவில்லை என்ற வெளிப்படையான புரிதலின் பேரில் பனா உபதேசங்கங்களுக்கான அழைப்புகளை வண. வல்பொல இராகுலா ஏற்றுக்கொண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு பனா  உபதேசத்திற்குப் பிறகு ஒரு குடை பெற்றதையிட்டு   அவர் எவ்வளவு குற்ற உணர்ச்சியடைந்தார் என்பதை அவர் தனது எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்.

தனக்கு ஒரு குடை தேவை என்று அவர் சுட்டிக்காட்டி யிருக்கலாம் என்று அவர் நினைக்கிறார்.  ஆனால் அவர் அதைப் பெற்ற நேரத்திலிருந்து, அதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், தம்மத்தை விற்றுவிட்டோம்  என்ற குற்ற உணர்ச்சி அவரைப் பீடித்துக் கொண்டது. பக்தர்கள் (தேரர்களுக்கு) காணிக்கை கொடுக்க விரும்புவதை  என்னால் நன்கு புரிந்து கொள்ள முடியும், அது எங்களுக்கு  நல்ல கர்மாவைச் சேர்க்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.   அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்ய ஒரு தேரர்  ஒரு பிரச்சாரத்ததை (pirikara) ஏற்றுக்கொண்டால்   ஒருவேளை அது பாதிப்பில்லாதது என்று கருதப்படலாம்.  ஆனால் இலாபத்திற்காக உபதேசிப்பது முற்றிலும் இழிவானது.

சங்கத்தை விமர்சிப்பது மன்னிக்க முடியாத பாவம் என்று சில தேரர்கள்  சொல்வது போல் இதை எழுதுவதன் மூலம் நான் நரகத்திற்கு என் பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை, புத்தர் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர்களுடன் அவர் உடன்பட்டிருக்க மாட்டார்.  அது மட்டுமல்லாமல், சங்கத்தின் சில உறுப்பினர்கள் அவருடைய பெயரில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து திகைத்துப் போயிருப்பார். 

புத்தரின் மிகப் பெரிய சாதனை, நம்முடைய விதியைத் நாமே தீர்மானிப்பதற்கு  நமக்கு அதிகாரம் அளித்ததாகும்.  அது இயற்கை கடந்த எந்தத்   தெய்வங்களிடம்  இருந்தும் நம்மை விடுவிக்கிறது. அவர் எங்களுக்கு சிந்தனைச் சுதந்திரத்தை வழங்கினார்.  மற்றும் கேள்விகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான அறிவியல் அடிப்படைக்கு அடித்தளம் அமைத்தார்.

ஒவ்வொரு குழுவும் புரிந்துகொள்ளும் வகையில் அவர் விளக்கமளித்து, அனைவருக்கும் தனது செய்தியைச் சொல்ல  வெறுங்காலுடன், இந்தியாவின் பெரும் பகுதிகளைச் சுற்றிக் கால்நடையாகச் சென்றார். அவரது பயணங்களின் போது, பெரும்பாலான இரவுகளில், புத்தர் ஒரு மரத்தின் அடியில்  வானத்தை உற்றுப் பார்த்தபடி தூங்கியிருப்பார். அவரது படுக்கை ஒரு மடித்த அங்கியைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. இதற்கு மாறாக, அவரைப் பின்பற்றுபவர்களில் சிலர் இன்று என்ன செய்கிறார்கள்?

அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள், அறிவொளியில் பெருமை பேசுகிறார்கள், தர்மத்தை (புத்தரின் போதனைகள்) விற்று அதிகாரத்தையும்  இலாபத்தையும் நாடுகிறார்கள். இது எவ்வளவு  பெரிய அவமானம்? (நொவெம்பர் 08, 2020  அன்று த ஐலண்ட்  நாளேட்டில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம் நக்கீரன்)

———————————————————————————————————–

Bhikkhus behaving badly?

November 8, 2020

  • Dr. Upul Wijayawardhana

Rather than discoursing on the profound truths expounded by the Buddha, some Bhikkhus have specialized in telling stories. Worse still, they are spreading canards the latest being that the Buddha was born in Sri Lanka. Though I would love for this to be true, unfortunately, there is no archaeological evidence even to support that the Buddha visited Sri Lanka, leaving aside being born here. The excellent article by Bhante Dhammika of Australia printed in this newspaper proves with archaeological evidence where the Buddha was actually born (Was the Buddha born in Sri Lanka? Sunday Island, 25 October) but I am sure these Bhikkhus and their supporters would disregard archaeological evidence and concoct their own.

Fortunately, caste is a fading entity in modern society only politicians and bhikkhus attempting to keep it alive. I need not dwell much on the utterly disgraceful practice of perpetuating the caste system by some Nikayas, as I have discussed this in detail in my article “Have we let down Gautama Buddha” (The Island, 8 May 2020) except to ask the question: Is it not the height of hypocrisy to deny ordination on the basis of caste when the Buddha decreed that it is not birth but actions that decide whether one is an untouchable or a Brahmin? (Kammna Wasalo Hothi, Kammana Hothi Brahmano)

“We will take trade union action in 48 hours, if our demands are not met” was the recent rallying cry of a trade union leader, in the midst of a grave national emergency, which shocked me for more reason than one. Though the initial grasp in controlling the Covid-19 epidemic seems to have been lost, for whatever reason, and the problem in Sri Lanka is nothing compared to what is happening in the rest of the world, around 300 dying daily of the deadly virus in UK, still we are facing a grave situation as our battered economy is not likely to withstand any more challenges.

In this situation, an implied strike, to say the least, is grossly irresponsible. And what is this trade union? A nurses’ union. Are they not supposed to be healing angels? Who is the leader of this union? A Buddhist Priest! Has he forgotten what the Buddha said: “Health is the greatest gain” and “He who would minister to me should minister to the sick”? For a Buddhist priest to even suggest risking patients’ lives is the greatest insult that could be done to the ‘Compassionate One’ who introduced the concepts of ‘Metta, Karuna. Muditha and Upeksha’.

It is a great shame that nurses in Sri Lanka, who are second to none, are not able to find a member of their own profession to lead their trade union. In the country that produced the first female prime minister in the world, is there no lady with leadership qualities to lead the union of a profession still largely dominated by women? It indeed is an outrage for a Buddhist priest to be lead a trade union, nursing or otherwise. Obviously, he is politicking as his latest offer is to lead the opposition to the government! Is he trying to replace Sajith?

It is true that Bhikkhus have come to the rescue of the nation at times of national peril but that does not entitle them to play a part in daily politics, which some of them are doing in various guises. At least partly due to the efforts of one Buddhist Monk who took to a ‘political clean-up campaign to get rid of Rajapaksas’ we had to endure almost five years of a rotten Yahapalanaya, unfortunately. Now another group of Bhikkhus is attempting to dictate to the new government. In fact, one of them had the audacity to state in a press conference “If they want to amend the constitution, they should get our permission first”! Have they forgotten that the government is there to carry out the will of the people, not that of the Sangha? Let them be reminded that Sri Lanka does not belong to them, nor to Sinhala Buddhists alone, but to all citizens.

Bhikkhus entered the parliament and behaved as disgracefully as other elected ‘honourable’ politicians. There were brawls in the well of the House. Disappointed Buddhists stopped voting for Bhikkhus though a party which was formed by them got a seat on the national list but the debacle that followed can only be equalled to antics of the now-doomed UNP! Did the Buddha get involved in politics? Did He go round doling unsolicited advice to the rulers? Definitely not. He maintained a distance and recognised the fact that rulers had to make unpalatable choices at times. He gave advice only when sought. In contrast, some of the modern-day ‘political priests’ not only attempt to be kingmakers but also threaten to bring down the government when it refuses to do what they want, often personal favours. By the actions of a few, unfortunately, the entire Sangha may be tainted as there are many with hidden agendas who are keenly waiting for any opportunity to discredit the Sangha.

I have heard rumours that some Bhikkhus are charging for Bana preaching in various guises. They are selling the Dhamma! However, first-hand confirmation of this came with a recent conversation I had with one of my very dear friends who, unfortunately, lost his daughter to cancer: “When the Hamuduruwo, a renowned preacher whom I invited for the Mataka-Bana sent a message that he needs Rs. 25,000 I was shocked. I had only Rs. 15,000 cash with me which I sent”. This Bhikkhu discharged his noble responsibility for a fee! I am told some others insist that they need their own sound system and charge for that; a simple ruse to sell the Dhamma! We get enraged when a Buddhist exhibits a tattoo of the Buddha but venerate and encourage these businessmen in robes!

I am reminded that Ven, Walpola Rahula accepted invitations for Bana Preachings on the express understanding that no pirikara was offered. In his writings, he mentions how guilty he felt after receiving an umbrella after a Bana preaching. He feels he may have indicated that he needs an umbrella but from the time he received it, every time he looked at it, guilt overcame him, that he had sold the Dhamma. I can well understand devotees’ desire to make an offering as we are made to believe that it adds to our good karma. Just to satisfy that desire if a Bhikkhu accepts a pirikara, perhaps it may be construed as harmless but to preach for profit is totally despicable.

Maybe, I am paving my path to hell by writing this as some Bhikkhus say that criticizing the Sangha is an unpardonable sin. Perhaps, the Buddha may not agree with them had He been alive today. Not only that, He would have been shocked and dismayed by what some members of the Sangha are doing in His name. The greatest achievement of the Buddha is empowering us to seek our own destiny; freeing us from any supernatural overlords. He gave us freedom of thought and laid the foundation for the scientific basis of the analysis of questions. He walked miles and miles, most likely barefooted, around large parts of India to pass on His message to all and sundry, explaining in terms each group understood. During his travels, on most nights, the Buddha would have slept under a tree gazing at the night sky above with the vast universe beyond. His bed would have been nothing more than a folded robe. In contrast, what do some of His followers do today? They live in opulence, boast of enlightenment, seek power and profit by selling the Dhamma. What a great shame?

About editor 3162 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply