எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுத்த காரணம்


எல்லாளன்  மீது  துட்டகைமுனு போர் தொடுத்த காரணம் தனது மூதாதையரின் அரசுரிமையை மீளக் கைப்பற்றவே ஆகும்

நக்கீரன் 

November 07, 2020

இலங்கையின் சுதந்திரத்துக்கு பிந்திய அரசியலை மகாவம்ச சிந்தனையே தீர்மானிக்கிறது. எல்லாளன்  மற்றும் துட்டகைமுனுவுக்கு இடையிலான போர் தமிழர்களுக்கும் பவுத்த சிங்களவர்களுக்கும் இடையில் நடந்த போர் என்று சொல்லப்படுகிறது. சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் அப்படித்தான் எழுதி வைத்திருக்கிறார்கள். எழுதி வருகிறார்கள்.  அவர்களைப் பின்பற்றி தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் துட்டகைமுனு ஒரு சிங்கள இளவரசன் என்றே எழுதி வைத்திருக்கிறார்கள்.

கடந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழில் எழுதப்பட்ட பாட நூல்கள்  எல்லாளன் – துட்டகைமுனு இடையிலான யுத்தத்தைத்  தமிழ் – சிங்கள மன்னர்களுக்கு இடையே நடந்த போராகவே சித்திரித்திருந்தன.

நான் படித்த பாலபாடம் புத்தகத்தில்  கைமுனு,   காகவண்ண தீசனினதும் விகாரமா தேவியினதும் மூத்தமகன் என்றும் காகவண்ண தீசனின் மனைவி விகார மகாதேவிக்கு இராசரட்டையில் இருக்கும் தமிழர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கனவு நெடுநாட்களாக இருந்தது என்றும் முதல் குழந்தை தன்னுடைய வயிற்றில் கருவான முதற்கொண்டு அந்த எண்ணம் படிப்படியாக வளர்ந்துகொண்டே சென்றது என மகாவம்சம் குறிப்பிடுகிறது.

துட்ட கைமுனு பெரியவன் ஆனபோது அவனுக்குள்ளே உருவான எண்ணங்களை அவனது தந்தை காகவண்ண தீசன் உணர்ந்தார். இராசரட்டையில் நிலவும் தமிழர் ஆட்சிக்கு எதிராக கைமுனு போர் தொடுத்தால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளை நினைத்து கவலை கொண்டார். எனவே தமிழர்களுக்கு எதிராக  என்றும் போர்புரியக் கூடாது என கைமுனுவிடம் வாக்குப் பெறுவதற்கு முயற்சித்தார். ஆனால் துட்ட கைமுனு  மறுத்துவிட்டான்.

துட்ட கைமுனு ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப் படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு ‘வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா  நான் கால்களை நீட்டிப் படுக்கமுடியும்’ என்று பதிலளித்தான்.

துட்ட கைமுனு  எல்லாளன் மீது  போர் தொடுக்க காகவண்ண தீசனிடம் மூன்றுமுறை  அனுமதி  கேட்டான். அனால் மன்னன் மறுத்துவிட்டான். எரிச்சலின் உச்சிக்கே சென்றுவிட்ட கைமுனு, தன்னுடைய தந்தை தமிழர்களைக் கண்டு அஞ்சி வாழும் பேடி என்பதைக் குறிப்பால் உணர்த்த  பெண்கள் அணியும் ஆடைகளையும் நகைகளையும் காகவண்ண தீசனுக்கு பரிசாக வழங்கிவிட்டு மகாகமத்தில் இருந்து மலைநாட்டிற்குச் சென்றுவிட்டான்.

இளவரசனின் இந்தச் செயலைக் கண்டு வெறுப்படைந்த மக்கள் கைமுனுவை, துட்ட (தீய) கைமுனு என்று அழைத்தார்கள்.  இன்று சிங்களவர்களின் தேசிய வீரன் – கதாநாயகன் –  என்ற அளவுக்கு உயர்ந்த பின்னர் கூட மக்கள் அவனை දුටුගැමුණු (துட்டகாமினி) என்றே அழைக்கப்படுகிறான்.

இவ்வாறு இளமையில் இருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகைமுனு தன் தந்தையின் மறைவிற்குப் பின் பெரும் படையுடன் எல்லாளன் மீது படையெடுத்தான்.  இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. எவ்வளவு முயன்றும் துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த் தந்திரத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. அதனால்  அகவையில் மூத்தவனான எல்லாளனைத் தனிச்சமருக்கு அழைத்தான். துட்டகைமுணு சதியினாலே எல்லாளனைக் கொன்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள்  கூறுகிறார்கள்.

அனுராதபுரத்தை ஆண்ட அசேலனைத் தோற்கடித்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய  எல்லாளன் (கிமு 205 -161) சோழநாட்டில் இருந்து படையெடுத்து வந்த சோழ வம்சத்துவன் எனவும் கூறுகிறது. அவனது 44 ஆண்டு கால ஆட்சி நீதியான, நேர்மையான  ஆட்சி என மகாவம்சம் கூறுகிறது. 

மகாவம்சம் மனுநீதிச் சோழன் ஒரு பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்காக, தன் மகனைத் தன் தேர்க்காலில் கிடத்திக் கொன்று தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கியது போன்று எல்லாளன் செய்ய முற்பட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. அதாவது மகாவம்சம் மனுநீதிச் சோழனையும், எல்லாளனையும் இணைத்துக் காட்டுகிறது. இருந்தும் எல்லாளன் தனது ஆட்சியில் பவுத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும்,  அவன்  வைதீக மதத்தைப் பின்பற்றியவன் ஆதலின் அவன் ‘புன்னெறி’ யாளன் என அதே மகாவம்சம் வருணிக்கிறது.

பெரிய புராணத்தில் திருவாரூரின் சிறப்பைச் சொல்ல முற்பட்ட  சேக்கிழார் “நீதிநெறி தவறாத மனுநீதிச் சோழன் ஆண்ட பூமி இது” என்று மனுநீதிச் சோழன் கதையைச் சொல்லிய பின்னரே பாடத் தொடங்குகிறார்.

மகாவம்சம் போரில் எல்லாள மன்னனைத் தோற்கடித்த ஆட்சியைக் கைப்பற்றிய துட்ட கைமுனுவை (கிமு 161 – 137) தமிழர்கள் ஆட்சியில் இருந்து தாய் நாட்டை  விடுவித்த ஒரு தேசிய விடுதலை வீரனாகவே சித்திரிக்கிறது.  அதன் கதாநாயகன் துட்டகைமுனு ஆவான். 

துட்ட கைமுனுவின் 24  ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில்  (அதிகாரம் 21 – 31) கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே பாடி முடித்துவிடுகிறது. மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சம்  துட்டகைமுனுவின் வரலாற்றை  10 பாடல்களில் பாடி முடிக்கிறது.

மேலும் மகாவம்சம் எல்லாளனுக்கு எதிராகத் துட்டகைமுனுவின் போர் முழக்கம்  “இராச்சியத்துக்கு அல்ல பவுத்தத்தின் மேன்மைக்கு” (Not for the Kingdom but for Buddhism) என நவில்கிறது. இன்றைய சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் அந்தப் போர் இந்து தமிழர் – பவுத்து சிங்களவர் இடையிலான போர் எனக் கெட்ட எண்ணத்தோடு வருணிக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. எல்லாளன் – துட்டகைமுனு யுத்தம் அரசுரிமைக்கான யுத்தம். அது பவுத்த மதத்துக்கான யுத்தம் அல்ல.

எல்லாளன் – துட்டகைமுனு போர் பற்றி வரலாற்ற ஆசிரியர்கள் மற்றும் விமர்சகர்கள்  என்ன சொல்கிறார்கள்?  1956 ஆம் ஆண்டில்  (தனிச் சிங்கள சட்டம் நிறைவேறிய அதே ஆண்டில்)  கலாநிதி வல்பொல இராகுல தேரர் அவர்களால் எழுதி வெளியிட்ட “இலங்கையின் புத்தமத வரலாறு”  என்ற நூல் இலங்கை வரலாற்றைப் பற்றி எழுதும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய மூல நூல்களில் (ஒரு இரண்டாம் நிலை ஆதாரம்) ஒன்றாகும்……..  இந்தச் சிக்கல் தொடர்பாக துட்டகைமுனுவைத் தாக்க நினைப்பவர்கள் வேறு யாரையும் விட அவரை மேற்கோள் காட்டுகிறார்கள். எனவே அவர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமாதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய வரலாற்றுச் சூழ்நிலையைப் பற்றிய  இராகுல தேரர் அவர்களது மதிப்பீடு என்ன?   

“துட்டகாமினி பவுத்த மதத்தை வெளியாரது ஆட்சியில் இருந்து விடுவிக்க ஒரு பெரிய போரை  ஏற்பாடு செய்தார். அவரது போர் முழக்கம் “இராஜ்யத்துக்காக அல்ல, பவுத்தத்துக்காக” என்பதாகும். முழுச்  சிங்கள இனமும் காமினியின் பதாகையின் கீழ் திரட்டப்பட்டது.

இதுவே சிங்களவர்களிடையே விதைக்கப்பட்ட பவுத்த தேசியவாதத்தின் தொடக்கமாகும். இது பவுத்த மதத்தின் புதிய ஒருங்கமைப்பின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட ஆரோக்கியமான இளம் இரத்தத்துடன் கூடிய புதிய இனம். ஒரு வகையான மத-தேசியவாதம், இது கிட்டத்தட்ட முழு சிங்கள மக்களையும் வெறித்தனத்தமான எழுச்சிக்குத் தூண்டிவிட்டது. (பக்கம் 79)

இராகுல தேரர்  வேண்டுமென்றே வரலாற்றின் உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார். ‘இளம் காமினியின் பதாகையின் கீழ் முழு சிங்கள இனமும் ஒன்றுபட்டது”  என்பது அவரது கற்பனையாகும். மகாவம்ச ஆசிரியர் மகாநாப தேரரே அப்படிச் சொல்லவில்லை. 

துட்ட கைமுனுவோ அவனது மூதாதையர்களோ சிங்களவர்கள் அல்லர். அவர்கள் ஏல்லோரும் பவுத்தர்களும் அல்லர். தேவநம்பிய தீசன்  (கிமு 307 – 267) பவுத்தத்துக்கு மாறும்வரை அவனும் அவனது  தந்தை, பாட்டன் எல்லோரும் வைதீக (இந்து) மதத்தவர்கள் ஆவர். விஜயன் கூட வைதீக மதத்தவன் ஆவான். 

துட்ட கைமுனுவின் தந்தை, பாட்டன், முப்பாட்டன்  எல்லோரும்  நாக வம்சத்தவர் ஆவர். துட்டகைமுனு   தந்தை வழியிலும்   தாய் வழியிலும்  நாக வம்சத்தவன் ஆவான். சிங்களவர் என்ற சொல்லோ சிங்களம் என்ற மொழியோ அவன் காலத்தில் இல்லை. சிங்கத்தைக் குறிக்கும் சிகல என்ற சொல் மகாவம்சத்தில் இரண்டு முறையே குறிக்கப்பட்டுள்ளது. தீபவம்சத்தில் ஒரு முறையே குறிக்கப் பட்டுள்ளது. 

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுத்த காரணம் தனது மூதாதையர்  அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த அரசுரிமையை மீளக் கைப்பற்றவே ஆகும். 

துட்ட கைமுனுவிடம் காணப்பட்ட பலமான வைதீக  மரபுவழி காரணமாக அவன் கதிர்காமத்திலுள்ள முருகப் பெருமானின் பக்தனாக விளங்கினான். போருக்கு புறப்படுமுன் கதிர்காமக் கந்தனை வழிபட்டான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது.

துட்ட கைமுனுவின் குடிவழியை அடுத்த முறை பார்ப்போம். (தொடரும்)

——————————————————————————————————————–

நாகர்கள் விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையின் வடக்கையும் தெற்கையும்  அரசாட்சி செய்துள்ளனர்!

நக்கீரன்

மகாவம்சம் இலங்கைக்குப் புத்தர் மும்முறை வருகை தந்ததாக அதன் முதல் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறது. அதாவது விஜயனது வருகைக்கு முன்னரே புத்தர் இலங்கைக்கு வந்தார் என மகாவம்சம் சொல்கிறது.  

 விஜயன் கிமு 483 ஆண்டில் இலங்கையில் கரையொதுங்கியதாகச் சொல்லப்படுகிறது. அந்த நாள்தான் புத்தர் நிர்வாணம் அடைந்த நாளாகும். விஜயனையும் அவனது சந்ததியினரையும் தங்கள் மூதாதையர் எனக் கொண்டாடும் சிங்களவர்கள் இலங்கையின் வரலாறு விஜயனது வருகையோடுதான் தொடங்கியதாக சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தில் விஜயனது வருகைக்கு முன்னரே இலங்கைத் தீவில் நாகர், இயக்கர், இராட்சதர், தேவர், புலிந்தர் (வேடர்)  என்ற ஆதிக்குடிகள் இருந்தார்கள் என்றும் இதில் நாகர்கள் வடக்கிலும் தென்மேற்கிலும் அரசாட்சி செய்தார்கள் என்பது புலனாகின்றது.

மகாவம்சத்தின்படி, மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில், புத்தர்  ஞானம் பெற்று 9 ஆம் மாதத்தில் ஒரு வைகாசி மாதத்து தைப்பூச முழுமதி நாளில் கவுதம புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில காட்சிகள் புலனாகின்றன. “இலங்கையின் மத்தியில் அழகிய நதிக்கரையில் மூன்று யோசனை நீளமும் ஒரு யோசனை அகலமும் உள்ள, மனதுக்கு ரம்யமூட்டும் மகாநாக வனத்தில் இயக்கர்கள் வழக்கமாகக் கூடும் இடம் உள்ளது.  பவுத்த மதம் பெரும் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்றும் ஆனால் முதலில்  அங்கு ஏற்கனவே வாழ்ந்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார். இந்தக் கதை புத்தருக்குப் பெருமை தருவதாக இல்லை. ஒரு அகிம்சைவாதி இயக்கர்களை அகற்றத் திட்டம் போட்டிருக்க மாட்டார்.

இலங்கைக்குப்  புத்தர் வான்வழியாகப் பறந்து வந்து பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். வான வெளியில் மழையும் இருளையும் உண்டாக்கி அவர்கள் மனதில் அச்சத்தை உண்டாக்குகிறார்.

“இங்கே உட்கருவதற்காக ஓர் இடம் கொடுங்கள்” என்று புத்தர் கூறினார். இறைவனே எங்கள் தீவு முழுவதையும் வேண்டுமானாலும் தருகிறோம். எங்களைப் பயத்திலிருந்து விடுதலை அளியுங்கள்” என்று கூறினர். “பின்னர்  புத்தர் கிரித்துவீபத்தை வரச் செய்தார். இயக்கர்கள் யாவரும் போய் தங்கியதும்  அவர்களை மகாமேகவனத்தை விட்டு கிரித்துவீபத்திற்கு (மலைநாட்டுக்கு) அனுப்பி வைக்கின்றார்.

பிறகு புத்தர் தமது தோல் ஆசனத்தை மடித்து வைத்தார். தேவர்கள் வந்து கூடினர். “தேவர்கள் கூட்டத்தில் புத்தர் தமது தருமத்தைப் போதித்தார். கோடிக்கணக்கான ஜீவர்கள் மதம் மாறினர். கணக்கற்றவர்கள் தரிசனமடைந்து சீலத்தை பெற்றனர். ” அப்போது அந்தச் அவையில் அவர் தமது சமயக் கொள்கையைப் போதித்தார்.

தேவவம்ச அரசன் மகாசுமணன் சமந்தகூட மலையை (சிவனொளிபாத மலை) ஆண்டுவந்தான். புத்தரின் போதனைக்குப் பின் அனைத்துத் தேவர்களும் பவுத்தத்தைத் தழுவினர். வணங்கத்தக்க எதையாவது தரும்படி மகா சுமணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புத்தர் கொடுத்த தலைமுடியை, புத்தர் அமர்ந்திருந்த இடத்தில் நவரத்தினங்களைக் குவித்து அதன்மீது வைத்து மகியங்கனை தூபியை தாபித்தான்.  

பின்னாளில் தேவநம்பிய தீசனின் உடன்பிறப்பின் மகன் உதய  சூளாபயன் அந்தத் தூபியை அதிசயத்தோடு பார்த்து அதனை 30 முழ உயரத்துக்கு உயர்த்திக்  கட்டினான்.

மீண்டும் துட்ட கைமுனு தமிழர்களுடன் போரிட்ட போது இந்த இடத்தில் (மகியங்கனை) தங்க நேரிட்டது. அப்போது அந்தத் தூபியை 80 முழ உயரத்துக்குக் கட்டினான்.

ஆக இலங்கைத் தீவை மானிடர்கள் வாழும் பூமியாக மாற்றிய பின்னர்  அம் மகாவீரர் (புத்தர்)  மகத நாட்டு உருவெல வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மகாவம்சம் குறிப்பிடும் ‘தேவர்கள்’  விஜயன் வருவதற்கு முன்னரேயே  இலங்கைத் தீவில் வட இந்தியாவில் இருந்து குடியேறிய ஆரியர்கள் ஆக இருக்க வேண்டும்.

மகாவம்சத்தின்படி, புத்தர் இரண்டாம் முறையும் இலங்கைக்கு வருகை தருகின்றார். அது அவர் ஞானம் பெற்ற 5 ஆம் ஆண்டு சித்திரை முழுமதி நாளில் இடம்பெற்றது. அக்காலத்தில் நாகதீபத்தை (வட இலங்கை) நாகராசன் என்னும் மன்னன்   ஆட்சி செய்கிறான். இவனுக்கு ஒரு மகளும் மகோதரன் என்ற மகனும் இருந்தனர்.

தன் மகளை மலையராட்டிர நாகராசன் என்ற வேறொரு நாகமன்னனுக்கு மணமுடித்து அவளுக்குச்  சீதனமாகத் தன் மணியாசனத்தையும் கொடுத்தனுப்பினான். அவர்களுக்கு குலோதரன் என்னும் மகன் பிறக்கிறான்.

யாழ்ப்பாண நாகராசன் தான் இறக்கும் முன்பு தன் மகனான மகோதரனுக்கு பட்டம் கட்டிவிட்டு இறக்கிறான். இப்போது  நாகராசனான மகோதரன் மலையராட்டிர குலோதரன்    மீது மணியாசனத்தைப் பெறுவதற்குப் பெரும்  போர் தொடுக்கிறான்.

இரு படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில்  புத்தர் தோன்றி முன்பு சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர் என அழைக்கப்பட்ட ஆதிக் குடிகளைப் பயமுறுத்திய புத்தர், இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து, நாக மன்னர்களையும் அவரது வீரர்களையும் பயங்கொள்ள வைக்கின்றார்.  மீண்டும் புத்தர் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் புத்தரை வணங்கிப் போருக்குக் காரணமான மணியாசத்தில் புத்தரையே அமரச்செய்து அவரைச் சரணடைந்தனர்.  

நாகர்கள் அளித்த அமுதை உண்டுவிட்டுப் புத்தர்  அங்கு வாழ்ந்த  நாகர்களுக்கு பவுத்த தர்ம போதனைகளைப்  போதிக்கிறார். அவர்கள் பவுத்த மதத்தைத் தழுவினார்கள்.

அப்போரில் கலந்துகொள்ள கல்யாணியை  (களனி) ஆண்ட நாக மன்னன் மணியக்கிகனும் அங்கு வந்திருந்தான். அவன் மகோதரனின் தாய் மாமனாவான். அவன் மீண்டும் ஒருமுறை தனது நாட்டுக்கு வரும்படி புத்தரை வேண்டிக் கொண்டான். அதற்குச் சம்மதித்த புத்தர் மகத நாட்டு  ஜெத்தவனத்திற்குத் திரும்பினார்.

இந்தக் கதையை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை “வேக வெந்திறல் நாக நாட்டு அரசர் சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி” என்று குறிப்பிடுகின்றது. (மணிமேகலை – பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை)

மணிமேகலை கிபி இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் ஆகும்.

இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், புத்தர் மூன்றாவது முறையாக மீண்டும் இலங்கைக்கு அவர் ஞானம் பெற்ற 8 ஆம் ஆண்டில் இடம்பெற்றது.  மணியக்கிகன் புத்தரைச் சந்தித்து தனது நாட்டிற்கு வரும்படி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று  “பயத்தை வென்றவர்_அறிஞர்க்கு அறிஞர் உத்தரீயத்தை போர்த்துக்கொண்டு, பிட்சா பத்திரத்தை கையிலேந்தி” மணியக்கிகனுடைய கல்யாணி நாட்டிற்கு வைகாசி முழுமதி தினத்தன்று ஐந்நூறு பிக்குகள் புடைசூழக் கல்யாணி நாட்டிற்குச் சென்றார். அங்கு இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மண்டபத்தில் பிக்குகளுடன் அமர்ந்தார். பல இடங்களுக்கும் சென்று அந்த  இடங்களை அருள்பாலித்துத் திரும்புகின்றார்.

அவர் அமர்ந்த இடத்தில் பிற்காலத்தில் களனி இராஜமகா விகாரை கட்டப்பட்டது. நாகமன்னனின் உபசரிப்பிற்குப் பின்னர் அவர்களுக்கு உபதேசம் செய்தபின் சுமணகூட மலைக்குப் புறப்பட்டார். அங்கே தனது பாதச்சுவடுகளைப் பதித்தபின்னர் யெத்த வனத்திற்குத் திரும்பினார்.

களனியை ஆண்ட  களனிதீச  மன்னனின் மகளே இளவரசி விகாரமாதேவி ஆவர்.  ஒரு முறை அரசன் ஒரு அப்பாவித் துறவியை எண்ணெய் கொப்பரையில் உயிரோடு போட்டு கொதிக்க வைத்துத் தண்டித்தான். இந்தக் குரூரச் செயலால்  கோபம் கொண்ட தேவர்கள், கடலை உள்நோக்கி ஓடச் செய்து அந்த நிலத்தை வெள்ளத்தில்  ஆழ்த்தினர்.  ஓர் இளவரசியை கடலுக்குப் பலி கொடுத்தால், பொங்கி வரும் அலைகள் நின்றுவிடும் என்று நிமித்தர்கள்  கூறினார்கள். இளவரசி, தன் தந்தையின் பாவத்தைக் கழுவவும் தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகவும் தன்னைத் தியாகம் செய்ய முன்வந்தாள். அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு படகினுள் அவள் வைக்கப்பட்டாள். அவள் ஓர் அரசனின் மகள் என அந்தப் படகில் எழுத்தி வைக்கப்பட்டது.

விகாரமாதேவி புறப்பட்டுச் சென்றதும் கடல் மீண்டும் அமைதி அடைந்ததாகவும் வெள்ளம்  மீண்டும்  பின்வாங்கிவிட்டதாகக்  கூறப்படுகிறது. மன்னரும் மிகவும் வருத்தமடைந்தார். பட்டத்தரசி தங்கள் துணிச்சலான இளவரசியின் இழப்புப் பற்றி மிகவும் கோபம் அடைந்தார்.  அவ்வாறே குடிமக்களும்  மிகவும் கோபமாக இருந்தனர். அவர்கள் அனைவரும் மன்னரைக் குறைகூறினர்.

இதற்கிடையில், இளம் இளவரசி பயணம் செய்த படகு  இறுதியாக, நாட்டின் தென்பகுதியில் உள்ள கிரிண்டா டொவரா  என்று அழைக்கப்படும் இடத்தில் கரை ஒதுங்கியது.  இது உருகுணைவில் இருந்தது. அது அரசர் காகவண்ண தீசனால் ஆளப்பட்ட ஒரு வளமான நிலம் ஆகும். படகைக் கண்டபோது முதலில் ஒரு மீனவர் அரண்மனைக்கு ஓடி இளவரசிபற்றி அரசருக்குச் செய்தி தெரிவித்தார். தீபவம்சம் மிதவைப் படகை முதலில் பார்த்த பறவைகள் மன்னரிடம் தகவல் தெரிவித்ததாகக்  கூறுகிறது.

மக்கள் இளவரசியை ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்து வந்தனர். அவளுடைய கதையைக் கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நாட்டுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்ய மிக்க துணிவும், தேசபக்தியும் வேண்டும். எனவே அந்த குணாம்சங்களைக் கொண்ட இளவரசியை மணந்து கொள்ள அவர் முடிவு செய்தார். லங்கா விகாரைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் இளவரசி கரைசேர்ந்த காரணத்தால் அவருக்கு  விகாரமகாதேவி எனப் பெயர் சூட்டப்பட்டது.  அவள் கரை இறங்கிய இடத்தில் ஒரு  கல்வெட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

காகவண்ண தீசன் மற்றும் விகாரமாதேவிக்கு கைமுனு, சத்தாதீசன் என்ற இரு மகன்கள் பிறந்தார்கள். துட்ட கைமுனு இலங்கையின் சிறந்த மன்னர்களில் ஒருவனாகப்  போற்றப்படுகிறான். மகாவம்சத்தின் கதாநாயகனும் துட்ட கைமுனுவே.   அது போலவே  விகாரமாதேவியே இலங்கையின் சிறந்த நாயகியாக சிங்கள – பவுத்த தேசியவாதிகளால்   கொண்டாடப்படுகிறார்.

மகாவம்சம் கூறும் இந்தக் கதையில் கற்பனையும் வரலாற்றுக் குறிப்புகளும் கலந்து காணப்படுகின்றன. புத்தர் இலங்கை வந்தார் – வான் வழியாக வந்தார்  – என்பது முழுக்க முழுக்கக் கற்பனையாகும். புத்தர் தென்னாட்டுக்கே செல்லவில்லை!

மகாவம்சத்தை இலங்கையின் வரலாற்று ஆவணமாக சிங்கள – பவுத்த  பெரும்பான்மை மக்கள் கூறிவந்தாலும் முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாக  அதன ஏற்றுக்கொள்ள முடியாது எனும் கருத்து வரலாற்றாசிரியர்களிடையே உள்ளது. அதேவேளை இலங்கையின்  வரலாற்றுக் குறிப்புகள் பல இந்நூலில் இடம்பெற்றிருப்பதனால், மகாவம்சம் என்ற பவுத்த புராணத்தைத்  தவிர்த்துவிட்டு  இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்ய முடியாது எனும் கருத்தும் வரலாற்றாசிரியர்களிடையே  உள்ளது.

எது எப்படியிருப்பினும் மகாவம்ச கதையின்படியே விஜயனது வருகைக்கு முன்னரே இயக்கர், நாகர் இலங்கையில் இருந்திருக்கிறார்கள்.  நாகர்களின் அரசுகள்  இலங்கையின் வட  மற்றும் மேல் மாகாணத்தில் இருந்தன.   துட்டகைமுனுவின் தாய் களனியை ஆண்ட  நாகவம்ச அரசனான களனி தீசனின் மகள் என்பதும்  நிரூபணமாகிறது. அடுத்த வாரம் துட்டகைமுனு தாய் வழியில் மட்டுமல்ல  தந்தைவழியிலும் அவன் ஒரு  நாக இளவரசன் என்ற வரலாற்றைப் பார்ப்போம். (வளரும்) (கனடா உதயன்)

——————————————————————————————————–

எல்லாளன்  மீது  துட்டகைமுனு போர் தொடுத்த காரணம் தனது மூதாதையரின் அரசுரிமையை மீளக் கைப்பற்றவே ஆகும்

நக்கீரன் 

November 13, 2020

இலங்கையின் சுதந்திரத்துக்கு பிந்திய அரசியலை மகாவம்ச சிந்தனையே தீர்மானிக்கிறது. எல்லாளன்  மற்றும் துட்டகைமுனுவுக்கு இடையிலான போர் தமிழர்களுக்கும் பவுத்த சிங்களவர்களுக்கும் இடையில் நடந்த போர் என்று சொல்லப்படுகிறது. சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் அப்படித்தான் எழுதி வைத்திருக்கிறார்கள். எழுதி வருகிறார்கள்.  அவர்களைப் பின்பற்றி தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் துட்டகைமுனு ஒரு சிங்கள இளவரசன் என்றே எழுதி வைத்திருக்கிறார்கள்.

கடந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழில் எழுதப்பட்ட பாட நூல்கள்  எல்லாளன் – துட்டகைமுனு இடையிலான யுத்தத்தைத்  தமிழ் – சிங்கள மன்னர்களுக்கு இடையே நடந்த போராகவே சித்திரித்திருந்தன.

நான் படித்த பாலபோதினி பாடப் புத்தகத்தில்  கைமுனு,   காகவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் என்றும் காகவண்ணதீசனின் மனைவி விகார மகாதேவிக்கு இராசரட்டையில் இருக்கும் தமிழராட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவு நெடுநாட்களாக இருந்தது என்றும் முதல் குழந்தை தன்னுடைய வயிற்றில் கருவான காலம் முதற்கொண்டு அந்த எண்ணம் படிப்படியாக வளர்ந்துகொண்டே சென்றது.

துட்டகைமுனு பெரியவன் ஆனபோது அவனுக்குள்ளே உருவான எண்ணங்களை அவனது தந்தை காகவண்ணதீசன் உணர்ந்தார். இராசரட்டையில் நிலவும் தமிழர் ஆட்சிக்கு எதிராக கைமுனு போர் தொடுத்தால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளை நினைத்து கவலை கொண்டார். எனவே தமிழர்களுக்கு எதிராக  என்றும் போர்புரியக் கூடாது எனக் கைமுனுவிடம் வாக்குப் பெறுவதற்கு முயற்சித்தார். ஆனால் கைமுனு  மறுத்துவிட்டான்.

துட்டகைமுனு ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு ‘வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா  நான் கால்களை நீட்டி படுக்கமுடியும்’ என்று பதிலளித்தான்.

துட்ட கைமுனு  எல்லாளன் மீது  போர் தொடுக்க காகவண்ண தீசனிடம் மூன்றுமுறை  அனுமதி  கேட்டான். அனால் மன்னன் மறுத்துவிட்டான். எரிச்சலின் உச்சிக்கே சென்றுவிட்ட கைமுனு, தன்னுடைய தந்தை தமிழர்களைக் கண்டு அஞ்சி வாழும் பேடி என்பதைக் குறிப்பால் உணர்த்த  பெண்கள் அணியும் ஆடைகளையும் நகைகளையும் காகவண்ண தீசனுக்கு பரிசாக வழங்கிவிட்டு மகாகமத்தில் இருந்து மலைநாட்டிற்குச் சென்றுவிட்டான். இளவரசனின் இந்த செயலைக் கண்டு வெறுப்படைந்த மக்கள் கைமுனுவை, துட்ட (தீய) கைமுனு என்று அழைத்தார்கள்.  இன்று சிங்களவர்களின் தேசிய வீரன் – கதாநாயகன் –  என்ற அளவுக்கு உயர்ந்த பின்னர் கூட இன்றளவும் மக்கள் அவனை දුටුගැමුණු (துட்டகைமுனு) என்றே அழைக்கப்படுகிறான்.

இவ்வாறு இளமையில் இருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகைமுனு தன் தந்தையின் மறைவிற்குப் பின் பெரும் படையுடன் எல்லாளன் மீது படையெடுத்தான்.  இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. எவ்வளவு முயன்றும் துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த் தந்திரத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. அதனால்  அகவையில் மூத்தவனான எல்லாளனைத் தனிச்சமருக்கு அழைத்தான். துட்டகைமுணு சதியினாலே எல்லாளனைக் கொன்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள்  கூறுகிறார்கள்.

அனுராதபுரத்தை ஆண்ட அசேலனை தோற்கடித்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய  எல்லாளன் (கிமு 205 -161) சோழநாட்டில் இருந்து படையெடுத்து வந்த சோழ வம்சத்துவன் எனவும் கூறுகிறது. அவனது 44 ஆண்டு கால ஆட்சி நீதியான, நேர்மையான  ஆட்சி என மகாவம்சம் கூறுகிறது. 

மகாவம்சம் மனுநீதிச் சோழன் ஒரு பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்காக, தன் மகனைத் தன் தேர்க்காலில் கிடத்திக் கொன்று தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கியது போன்று எல்லாளன் செய்ய முற்பட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. அதாவது மகாவம்சம் மனுநீதிச் சோழனையும், எல்லாளனையும் இணைத்துக் காட்டுகிறது. இருந்தும் எல்லாளன் தனது ஆட்சியில் பவுத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும்,  அவன்  வைதீகமதத்தைப் பின்பற்றியவன் ஆதலின் அவன் ‘புன்னெறி’ யாளன் என அதே மகாவம்சம் வருணிக்கிறது.

பெரிய புராணத்தில் திருவாரூரின் சிறப்பைச் சொல்ல முற்பட்ட  சேக்கிழார் “நீதிநெறி தவறாத மனுநீதிச் சோழன் ஆண்ட பூமி இது” என்று மனுநீதிச் சோழன் கதையைச் சொல்லிய பின்னரே பாடத் தொடங்குகிறார்.

மகாவம்சம் போரில் எல்லாள மன்னனைத் தோற்கடித்த ஆட்சியைக் கைப்பற்றிய துட்ட கைமுனுவை (கிமு 161 – 137) தமிழர்கள் ஆட்சியில் இருந்து தாய் நாட்டை  விடுவித்த ஒரு தேசிய விடுதலை வீரனாகவே சித்திரிக்கிறது.  அதன் கதாநாயகன் துட்டகைமுனு ஆவான். 

துட்ட கைமுனுவின் 24  ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில்  (அதிகாரம் 21 – 31) கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே பாடி முடித்துவிடுகிறது. மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சம்  துட்டகைமுனுவின் வரலாற்றை  10 பாடல்களில் பாடி முடிக்கிறது.

மேலும் மகாவம்சம் எல்லாளனுக்கு எதிராகத் துட்டகைமுனுவின் போர் முழக்கம்  “இராச்சியத்துக்கு அல்ல பவுத்தத்தின் மேன்மைக்கு” (Not for the Kingdom but for Buddhism) என நவில்கிறது. இன்றைய சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் அந்தப் போர் இந்து தமிழர் – பவுத்து சிங்களவர் இடையிலான போர் எனக் கெட்ட எண்ணத்தோடு வருணிக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. எல்லாளன் – துட்டகைமுனு யுத்தம் அரசுரிமைக்கான யுத்தம். அது பவுத்த மதத்துக்கான யுத்தம் அல்ல.

எல்லாளன் – துட்டகைமுனு போர் பற்றி வரலாற்ற ஆசிரியர்கள் மற்றும் விமர்சகர்கள்  என்ன சொல்கிறார்கள்?  1956 ஆம் ஆண்டில்  (தனிச் சிங்கள சட்டம் நிறைவேறிய அதே ஆண்டில்)  கலாநிதி வல்பொல இராகுல தேரர் அவர்களால் எழுதி வெளியிட்ட “இலங்கையின் புத்தமத வரலாறு”  என்ற நூல் இலங்கை வரலாற்றைப் பற்றி எழுதும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய மூல நூல்களில் (ஒரு இரண்டாம் நிலை ஆதாரம்) ஒன்றாகும்……..  இந்தச் சிக்கல் தொடர்பாக துட்டகைமுனுவைத் தாக்க நினைப்பவர்கள் வேறு யாரையும் விட அவரை மேற்கோள் காட்டுகிறார்கள். எனவே அவர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமாதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய வரலாற்றுச் சூழ்நிலையைப் பற்றிய  இராகுல தேரர் அவர்களது மதிப்பீடு என்ன?   

“துட்டகாமினி பவுத்த மதத்தை வெளியாரது ஆட்சியில் இருந்து விடுவிக்க ஒரு பெரிய போரை  ஏற்பாடு செய்தார். அவரது போர் முழக்கம் “இராஜ்யத்துக்காக அல்ல, பவுத்தத்துக்காக” என்பதாகும். முழுச்  சிங்கள இனமும் காமினியின் பதாகையின் கீழ் திரட்டப்பட்டது. இதுவே சிங்களவர்களிடையே விதைக்கப்பட்ட தேசியவாதத்தின் தொடக்கமாகும். இது பவுத்த மதத்தின் புதிய ஒருங்கமைப்பின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட ஆரோக்கியமான இளம் இரத்தத்துடன் கூடிய புதிய இனம். ஒரு வகையான மத-தேசியவாதம், இது கிட்டத்தட்ட முழு சிங்கள மக்களையும் வெறித்தனத்தனமான எழுச்சிக்கு  தூண்டிவிட்டது. (பக்கம் 79)

இராகுல தேரர்  வேண்டுமென்றே வரலாற்றின் உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார். ‘இளம் காமினியின் பதாகையின் கீழ் முழு சிங்கள இனமும் ஒன்றுபட்டது”  என்பது அவரது கற்பனையாகும். மகாவம்ச ஆசிரியர் மகாநாப தேரரே அப்படிச் சொல்லவில்லை. 

துட்ட கைமுனுவோ அவனது மூதாதையர்களோ சிங்களவர்கள் அல்லர். அவர்கள் ஏல்லோரும் பவுத்தர்களும் அல்லர். தேவநம்பிய தீசன்  (கிமு 307 – 267) பவுத்தத்துக்கு மாறும்வரை அவனும் அவனது  தந்தை, பாட்டன் எல்லோரும் வைதீக மதத்தவர்கள் ஆவர். விஜயன் கூட வைதீக மதத்தவன் ஆவான். 

துட்ட கைமுனுவின் தந்தை, பாட்டன், முப்பாட்டன்  எல்லோரும்  நாக வம்சத்தவர் ஆவர். துட்டகைமுனு   தந்தை வழியிலும்   தாய் வழியிலும்  நாக வம்சத்தவன் ஆவான். சிங்களவர் என்ற சொல்லோ சிங்களம் என்ற மொழியோ அவன் காலத்தில் இல்லை. சிங்கத்தைக் குறிக்கும் சிகல என்ற சொல் மகாவம்சத்தில் இரண்டு முறையே குறிக்கப்பட்டுள்ளது. தீபவம்சத்தில் ஒரு முறையே குறிக்கப்பட்டுள்ளது. 

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுத்த காரணம் தனது மூதாதையர்  அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த அரசுரிமையை மீளக் கைப்பற்றவே ஆகும். 

துட்ட கைமுனுவிடம் காணப்பட்ட பலமான வைதீக  மரபுவழி காரணமாக அவன் கதிர்காமத்திலுள்ள முருகப் பெருமானின் பக்தனாக விளங்கினான். போருக்கு புறப்படுமுன் கதிர்காமக் கந்தனை வழிபட்டான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது.

துட்ட கைமுனுவின் தந்தை வழி குடிவழியை அடுத்த முறை பார்ப்போம். (கனடா உதயன்) (தொடரும்)

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply