வட இலங்கை வர்த்தகர்கள் அறிவுப் பிழைப்பார்களை வெளியேற்றிய இனத் துரோகிகள் கருணா, பிள்ளையான்
Niraj David
யூலை 29, 2020
மட்டக்களப்பில் ஒரு காலத்தில் பலரது மனங்களை உருக்கிய ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தும் காட்சி – இந்தப் புகைப்படங்கள்.
2004 மார்ச் மாதத்தில் கருணா கிழக்கில் ஒரு கோமாளிக்கூத்தை ஆடஆரம்பித்திருந்த நேரத்தில், மட்டக்களப்பில் இருந்த யாழ் வர்த்தகர்களை பலவந்தமாக வெளியேற்றியதைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த யாழ் வர்த்தகர்களின் கடைகள் இவை.
2004.03.30ம் திகதி மட்டக்களப்பின் தமிழ் அரசுக்கட்சி வேட்பாளர் ராஜன் சத்தியமூர்த்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சூட்டோடு சூட்டாக மட்டக்களப்பு மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரம் ஒன்று வினியேரிக்கப்பட்டது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில், வட பகுதியினரை ‘அன்னியர்கள்’ என்று குறிப்பிட்டதுடன், ’24 மணி நேரத்திற்குள் அவர்கள் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களை விட்டு வெளியேறவேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு அடங்கிய அறிவித்தல்கள் ஒலி பெருக்கி ஊடாக மட்டக்களப்பு நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் அறிவிக்கப்பட்டன.
பிள்ளையான் தலைமையிலான கருணா குழுவினரே இந்தக் காரியத்தை செய்தார்கள்.
அதேவேளை, களுவாஞ்சிக்குடி என்ற இடத்தில் வியாபாரம் செய்துவந்த வடபகுதி வர்த்தகர்களை அழைத்த ‘கடாபி’ என்ற கருணா குழு உறுப்பினர், அன்று மாலைக்குள் வடபகுதி வர்த்தகர்கள் அனைவரும் மட்டக்களப்பை விட்டு வெளியேற வேண்டும்’ என்று உத்தரவிட்டதுடன், வெளியேறுபவர்கள் ரூபாய் 500ஐ தவிர வேறு எந்த உடமைகளையும் தம்முடன் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் எச்சரித்திருந்தார்.
இதேபோன்று செங்கலடி, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனைப் பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களும் கருணா அணியைச் சேர்ந்த பொறுப்பாளர்களால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார்கள். பல கடைகளின் சாவிகள் அந்த அணியினரால் பறித்தெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு நகரில் உள்ள சில கடைகளுக்குள் சென்ற பிள்ளையான் மற்றும் குனணேசன் தலைமையிலான கருணா குழுவினர், பலவந்தமாக அந்தக் கடைகளைப் பூட்டி, அதன் சாவிகளைத் தம்முடன் எடுத்துச் சென்றிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான வடபகுதி வர்த்தகர்கள் தங்கள் குடும்பங்களுடன் மட்டக்களப்பை விட்டு சாரைசாரையாக வெளியேறினார்கள். அச்சம் காரணமாக வடக்கைச் சேர்ந்த பொதுமக்களும் மட்டக்களப்பை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள்.
ஏதோ ஒரு தைரியத்தில் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற மறுத்த சிலர் பிள்ளையான் தலைமையிலான கருணா குழுவினரின் மிரட்டல்களுக்கு உள்ளாகி இருந்தார்கள். பாண்டிருப்பு என்ற இடத்தில் ஒரு வர்த்தகரை கடத்திச் சென்ற கருணா குழுவினர், அன்று இரவு முழுவதும் அவரை ஒரு இரட்டு அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு மறுநாள் காலையில் வெளியே விட்டார்கள். உடனடியாக வெளியேறாவிட்டால் தொடர்ந்து இதுபோன்ற இருட்டறையில் அடைத்து வைக்கப்படுவீர் – என்று மிரட்டியிருந்தார்கள். அவருக்குச் சொந்தமான கடையும் அன்று இரவு கொள்ளையிடப்பட்டது.
30ம் திகதி கடைகளைப் பூட்டி கருணா அணியிடம் சாவிகளை ஒப்படைத்துவிட்டுப் பல வடபகுதி வர்த்தகர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறி இருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து சாவிகளை தம்முடன் வைத்திருந்த கருணா அணியினர் அன்றிரவு பல கடைகளைத் திறந்து அங்கிருந்த பொருட்களை லொறிகளில் ஏற்றி தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றார்கள்.
செங்கலடியில் ‘லக்கி ஸ்ரோஸ்’; என்ற யாழ் வர்தகருக்குச் சொந்தமான ஒரு கடை மறுநாள் பகல் எரியூட்டப்பட்டது. பிள்ளையான் இந்தச் சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.
இதேபோன்று வாழைச்சேனையிலும் சில கடைகள் மற்றும் யாழ் வர்த்கருக்குச் சொந்தமான வீடுகள் எரிக்கப்பட்டன.
யாழ் வர்த்தகர்கள் நிரந்தரமாக மட்டக்களப்பிற்கு திரும்பக்கூடாது என்பதே அந்த அணியினரின் பிரதான நோக்கமாக இருந்தது.
அதைவிட அந்த நேரத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக நிலைப்பாடு எடுத்துவந்த ஜோசப் பரராஜசிங்கம் அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதும் கருணா அணியினரின் நோக்கமாக இருந்தது. யாழ் வர்த்தகர்கள் ஜோசப் பரராஜசிங்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால், அவர்களை வெளியேற்றியதன் மூலம் ஜோசப்பை தோற்கடித்துவிடமுடியும் என்பதும் அவர்களது மறைமுக எண்ணமாக இருந்தது.
ஆனால், 1ம் திகதி, வடபகுதியைச் சேர்ந்த வைத்திய நிபுனாகள் மட்டக்களப்பை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்தூன், இந்த விடயம் புதிய பரிமானத்தைப் பெற ஆரம்பித்தது. ஆறு வைத்திய நிபுனாகள் உட்பட 11 சிரேஷ்ட வைத்தியர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் பாரிய ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. சிகிட்சை பெறமுடியாது பல நோயாளர்கள் கஷ்டத்திற்கு உள்ளானார்கள்.
நோயாளர் பராமரிப்பு மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலை ஊழியாகள் கருணா அணியினரின் நடவடிக்கையைக் கண்டித்து ஒரு மணிநேர கண்டப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
இந்த விடயம் மக்கள் மத்தியில் பாரிய எதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
அடுத்ததாக மட்டக்களப்பிலுள்ள யாழ் வர்தகர்களுக்குச் சொந்தமான வர்தக நிலையங்கள் அனைத்துமே மூடப்படடிருந்த நிலையில், மக்கள் முஸ்லிம் வர்தகர்களையே நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள். கடந்த கால இன முறுகல்லைத் தொடர்ந்து முஸ்லிம் வர்தகர்களை ஓரம்கட்டி தமிழ் கடைகளிலேயே பொருட்களைக் கொள்வனவு செய்வது என்று திடசங்கற்பம் பூண்டிருந்த மட்டக்களப்பு தமிழர்களுக்கு இது பெரிய தர்மசங்கடமாக இருந்தது.
இதுவும், வடபகுதி வர்தகர்களின் வெளியேற்றத்தினால் ஒரு மாற்றுக் கருத்து மக்களிடம் ஏற்படக் காரணமாக அமைந்திருந்தது.
இதுபோன்ற பல காரணங ;களினால், வடபகுதி வர்தகர்கள் மீள அழைக்கப்படவேண்டும், அவர்களிடம் பொது மன்னிப்பு கோரப்படவேண்டும் என்பது போன்ற அழுத்தங்கள்; பொதுமக்களால கருணா அணியினரை நோக்கிப் பிரயோகிக்கப்பட்டன.
2004.04.01 திகதி, வடபகுதியைச் சேர்ந்த வைத்திய நிபுனர்கள் மட்டக்களப்பை விட்டு அச்சம் காரணமாக வெளியேறியிருந்தார்கள். ஆறு வைத்திய நிபுனர்கள் உட்பட 11 சிரேஷ்ட வைத்தியர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் பாரிய ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. சிகிட்சை பெறமுடியாது பல நோயாளர்கள் கஷ்டத்திற்கு உள்ளானார்கள்.
நோயாளர் பராமரிப்பு மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலை ஊழியாகள் கருணா குழுவின் நடவடிக்கையைக் கண்டித்து ஒரு மணிநேர கண்டப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
30.03.204 யாழ் வர்த்தகர்களுக்கு மிரட்டல் விடுத்தபடி AK47 ரகத் துப்பாக்கிகள் சகிதம் வாகனங்களில்; சென்ற பிள்ளையான் குழுவினரை மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள பார் வீதியில் பொதுமக்கள் பலருக்கு மத்தியில் பொலிசார் கைதுசெய்திருந்தார்கள். பிள்ளையான் மற்றும் மாவடி முன்மாரிக் கோட்ட இராணுவப் பொறுப்பாளர் சச்சி மாஸ்டர் போன்றவர்கள் அந்த வாகனங்களில் இருந்தார்கள்.
ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அனுமதியுடனேயே தாம் ஆயுதங்களைத் தம்முடன் எடுத்துச் செல்வதாக அவர்கள் பலர் முன்னிலையில் பகிரங்கமாகத் தெரிவித்தார்கள். சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மட்டக்களப்பு பொறுப்பாளர்களுள் ஒருவரான கப்டன் கருணசேன என்பவர், ஆயுதங்களுடன் இருந்த கருணா குழுவினரை விடுவித்தார்.
சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து பிள்ளையான்- கருணா குழு தமிழ் வர்த்தகருக்கு எதிராக – தமிழ்ப் பிரதேச ஒருமைப்பாடுக்கு எதிராகச் செய்திருந்த இந்தக் காரியத்தை இச்சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்ப்பது தவிர்க்கமுடியாததாக இருக்கின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.