சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதி வரையான இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சுருக்கமான பார்வை
வெள்ளி, 25 மே 2018
கடந்த 2000 வருடங்களுக்கும் மேலாக தனித்துவமிக்க இறையாண்மை அடையாளத்தை கொண்டுள்ள ஒருசில நவீன நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கிறது. அக் காலக்கட்டத்திலேயே சர்வதேச தொடர்புகளை கொண்ட நாடாக இலங்கை தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டிருந்தது.
இலங்கைக்கு பௌத்த சமயத்தை கொண்டு வந்த அசோக பேரரசரின் இரு தனிப்பட்ட தூதுவர்களாக அவரது மகனும், மகளுமான மகிந்த மற்றும் சங்கத்மித்ரா ஊடாக மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய சக்கரவர்த்தி அசோக மன்னனுக்கும், சமகாலத்தில் அனுராதபுரத்தை ஆண்ட இலங்கை மன்னன் தேவநம்பியதீஸ்ஸவுக்கும் இடையே கி.மு 3வது நூற்றாண்டில் அதிமுக்கிய இணைப்பு ஏற்பட்ட காலத்திலிருந்தே சர்வதேச இராசதந்திர உறவுகளுக்கு இலங்கை தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. இவ்வாறாக பௌத்த மதம் இலங்கையின் பிரதான நம்பிக்கைக்குரிய மதமாக மாறியது. இதன் மூலமாக பௌத்த மதத்தின் இரண்டாவது மிகப்பெரிய தளமாக இலங்கை உருவானதுடன், ஏனைய நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. உண்மையில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பௌத்த மதம் உத்வேகம் மற்றும் தூண்டுதலாக உருவாகியது.
மூன்று முக்கிய புவியியல் அரசியல் பரிமாணங்களின் தொகுப்பைக் கொண்ட தனிச்சிறப்பான புவியியல் இட அமைவின் பலன்களை இலங்கை அனுபவித்து வருகிறது. இந்திய துணைக்கண்டத்திற்கான அதன் அண்மித்தத்தன்மை காரணமாக அடுத்தடுத்த நாகரீகம் உருவாக்கப்பட்டமை, கிழக்காசியா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவுக்கிடையே சம தூரத்திலமைந்த அதன் நிலையானது குறித்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தமை மற்றும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை இணைக்கும் கடற்பாதைகள் உண்மையில் கிழக்கு மற்றும் மேற்கினை சந்திக்கும் நிலப்பகுதியை உருவாக்கியருந்தமை போன்றவை அவையாகும். இலங்கையின் சர்வதேச நற்பெயரின் அடித்தளமாக இன்று வரை இவை தொடர்வதுடன், பிராந்தியத்தின் பரந்தளவான பகுதிகள் குறிப்பாக கி.பி முதலாம் நூற்றாண்டில் இலங்கைக்கான செல்வாக்குப் பகுதியாக உருவானது.
இந்தியாவுடனான இலங்கையின் தொடர்புகள் தொடர்ச்சியாக வடக்குடன் வளர்ச்சியடையத் தொடங்கின. இருப்பினும், முதல் சகாப்தத்தின் நடுப்பகுதியிலிருந்து தென்னிந்திய இராச்சியங்களின் வருகையைத் தொடர்ந்து, இலங்கையின் இந்தியாவுடனான உறவுகள் மீதான மையக் கவனம் தெற்கை நோக்கி நகரத் தொடங்கியது. தென்னிந்தியாவின் அதிகார அரசியலில் இலங்கை சிக்கிக்கொண்டது. இரு நூற்றாண்டுகளாக இருதரப்புவாதம் மூலம் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளான அனுராதபுர இராச்சியம் இறுதியாக சோழ சாம்ராஜ்ஜியத்திடம் வீழ்ந்தது. அத்தோடு அனுராதபுரம் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்ட போதிலும், பாண்டியர் மற்றும் விஜயநகரம் ஆகிய தென்னிந்திய இராச்சியங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இலங்கை இராச்சியங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கடல்வழி பகுதியில் ரோமப் பேரரசு, Hellanistic இராச்சியங்கள், ஆபிரிக்காவின் ஹோர்ன் Axum பேர்சியாவின் Sassanid இராச்சியம், மேற்கு பகுதியின் Byzantine பேரரசு மற்றும் ஸ்ரீ விஜயா கடல் பேரரசு, சீனா, சியாம் இராச்சியங்கள், கிழக்கு பகுதியில் கம்போடியா மற்றும் மியன்மார் உள்ளடங்கலாக அதன் வெளிநாட்டு தொடர்புகளை இலங்கை விஸ்தரித்துக் கொண்டது. சீனாவுடனான உறவு தனிச்சிறப்பானது. இவ்வுறவானது கி.பி 5 முதல் 10 வரை ஐந்து நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்ததுடன், இலங்கையின் பதினாறு பிரமுகர்கள் சிலர் ஏகாதிபத்திய நீதிமன்றத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
இலங்கையானது அதன் மூலோபாய இடவமைவினை, பிராந்தியத்தின் கடல்வழியில் வாணிப சாலையாகவும், இடைநடுவில் அமையப்பெற்ற தரகர் நிலையமாகவும் தன்னை பயன்படுத்திக் கொண்டது. அதன் மூலமாக பிராந்தியத்தின் வர்த்தக மையமாக இலங்கை உருவானது. தீவில் கண்டுபிடிக்கப்பட்ட வெவ்வேறு தோற்றங்களின் வர்த்தக பொருட்செல்வங்கள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதியில் அமைந்திருந்த பெரும்பாலான துறைமுகங்களை கண்டறிந்த போது இந்நிலைமை ஏற்பட்டது. இலங்கையின் பண்டைய கடல்வழி தொடர்புகளுக்கு மேலும் சான்று பகரும் வகையில், தீவிற்கென இருந்த பல பெயர்கள், பயண இலக்கியத்தில் அதன் குறிப்புக்கள், பிரசித்தி பெற்ற பயணிகளைக் கவர்ந்தமை போன்ற அனைத்தும் அக்காலத்தில் மிகச்சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கையைப் பற்றி குறிப்பெழுதியவரின் விளக்கத்தை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இஸ்லாமிய வளர்ச்சியுடன், பிராந்தியத்தின் அரபு வர்த்தக செயற்பாடுகளுக்கான தளமாக இலங்கை உருவானது.
15வது நூற்றாண்டிலிருந்து குறிப்பாக போர்த்துக்கேயர் மற்றும் டச்சு என ஆசியாவில் ஐரோப்பிய பலம் பரவத் தொடங்கியதிலிருந்து இலங்கை வரலாற்றின் புதிய அத்தியாயம் ஆரம்பமானது. தீவினுள் அரசியல் மற்றும் வர்த்தக முகாம்களை நிறுவுவதற்கான அவர்களது தேடல் உள்நாட்டு இராச்சியங்களுடன் இடைவிடாத மோதல்களை உருவாக்கின. இந்த மோதல்கள் கண்டி இராச்சியத்துக்கு எதிரான போராட்டத்தின் போது உச்சக்கட்டத்தை அடைந்ததுடன், இது பழைய ரோம் நகரைப் போன்று தொடர்ச்சியான படையெடுப்புக்களை எதிர்த்தது. ஆனால், இந்தியா மீதான பிரிட்டிஷ் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருந்த அக்காலக்கட்டத்தில் 1815 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிடம் கண்டி வீழ்ந்தது.
பிரிட்டிஷ் ஆட்சி 150 வருடங்களாக நீடித்ததுடன், முழுத் தீவின் மீதான வெளிநாட்டு ஆட்சியின் முதலாவது அனுபவமாக அதுவமைந்திருந்தது. சுதந்திரத்தின் 50 ஆவது வருடப்பூர்த்தியை கொண்டாடும் இவ்வேளையில், பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் ஏனைய அந்நிய ஆட்சிகளின் போது குறைபாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இருப்பினும் அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட பங்களிப்பு ஊடாக பொருளாதார மற்றும் கலாச்சார பிரிவுகளில் அக் குறைபாடுகளை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது அதனை சரிசமமாக பேண ஏதுவாக அமைந்தது. குறித்த பங்களிப்பில் பிரித்தானிய ஆட்சி மூலமாக பறிக்கப்பட்ட சமாதானம், நாட்டின் நிர்வாக ஒருங்கிணைப்பு, பாராளுமன்ற நிறுவகத்தின் அபிவருத்தியில் அரசியல் அனுபவம், சட்ட ஆட்சி,வர்த்தக பொருளாதாரத்தின் வளர்ச்சி, சார்புநிலை பொருளாதாரமான வர்த்தக அரசியலை அபிவிருத்தி செய்தமை மற்றும் சுதந்திரம் கிடைத்த நேரம் அதற்கு நாட்டினை தயார் நிலையில் வைத்திருக்கச் செய்தமை மற்றும் ஆங்கில கற்பித்தல் ஊடாக மேற்கத்திய கல்விமான்களின் உருவாக்கம் போன்றவையாகும்.
சட்டப் பேரவை மற்றும் சட்ட சபை போன்ற அரசியல் நிறுவகங்கள் போன்றன எதிர்காலத் தலைவர்கள் சுயாட்சிக் கலையை கற்றுக்கொள்வதற்கான அரங்காக மாறியது. 1948 இல் அதிகாரமற்ற இரத்தமல்லா மற்றும் நட்பு அதிகார பரிமாற்றலை நோக்கி வழிநடத்திய ஆரம்பகால தலைவர்களின் அரசியல் முதிர்ச்சியை சுட்டிக்காட்டுவதாக அதுவமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சியானது வெளிநாட்டுக் கொள்கைகளின் உருவாக்கம் மற்றும் வெளிநாட்டு உறவுகளின் முன்னெடுப்பு ஆகியவற்றுக்கான எந்தவொரு பயிற்சியையும் விசேடமாக வழங்கவில்லை. ஆனால், இலங்கையின் முதலாவது தூதுவர்களாக சேவையாற்றிய ஒருசிலர் மாநில சபையில் அனுபவமுள்ளவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 1948 இல் பெற்றுக்கொண்ட சுதந்திரத்துடன் அக்காலக்கட்டத்தில் பிராந்தியத்தில் நிலவிய குழப்ப நிலைக்கு எதிராக இத்தீவின் புவிசார் அரசியல் நிலைமை பற்றிய பார்வையில் வெளிநாட்டுக் கொள்கை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பேசப்பட்டது. இது காலனித்துவ ஆட்சியாளராக இருந்த ஐக்கிய இராச்சியத்துடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வழிவகுத்தது. வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவத்தை சான்று பகர்வதாக பிரதமரின் ஆட்சிக்குள் வெளிநாட்டலுவல்கள் கொண்டு வரப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
இதன் முதற்பகுதியாக பொதுநலவாயப் பிரிவினை சுட்டிக்காட்ட முடியும். இந்த காலக்கட்டத்தில் இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளாக பொதுநலவாயத்தின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள இலங்கை முடிவெடுத்தமை, பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் பொதுநலவாயத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியமை, ஐக்கிய இராச்சியத்துடனான பாதுகாப்பு ஒப்பந்தம், கொழும்புத் திட்டத்தின் அங்குரார்ப்பணம் மற்றும் 1950 இல் கொழும்பில் நடைபெற்ற வெளிநாட்டு அமைச்சர்களின் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய, 1951 இல் நடைபெற்ற சான் பிரான்சிஸ்கோ அமைதி மாநாட்டில் இலங்கையின் பங்கு போன்றவற்றை குறிப்பிட முடியும். பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க அவர்களின் மறைவைத் தொடர்ந்து, இந்த கட்டம் நிறைவடைந்ததுடன், பிராந்திய அடிப்படையிலான கட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
எதிரி நிலையைக் கடைபிடிக்காது, வேறு பல நாடுகளுடன் தொடர்பினை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையானது மேற்குலக நாடுகளிடமிருந்து விலகுவதற்கான அடித்தளத்தை இரண்டாம் கட்டத்தில் ஆரம்பித்தது. அச்சமயத்தில் ஆசிய அடையாளத்திற்கான தேடல் ஏற்கனவே ஆரம்பமாகியிருந்தது. 1947 இல் முதல்முறையாக புராணா க்யுல்லா பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கை சீனாவுடன் மேற்கொண்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தம் புரட்சிமிக்கதாக அமைந்தது. ஏனெனில், அவ்வொப்பந்தம் ஐக்கிய அமெரிக்காவின் அதிருப்திக்கு காரணமாக அமைந்தமையாகும். ஆசிய அடையாளத்தை தேடிச்செல்லும் பயணத்தில் முக்கிய படிமுறையாக கொழும்பு பலம் வாய்ந்தவர்களின் கூட்டத்தை பிரதமர் சேர்.ஜோன் கொத்தலாவல தலைமை தாங்கியிருந்தமை அமைந்தது. அக் கூட்டத்தில் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றாலும், 1954 இல் நடைபெற்ற இந்து – சீன தொடர்பான ஜெனீவா மாநாட்டில் தாக்கம் செலுத்தியிருந்தது. கொழும்பு பலம் வாய்ந்தவர்களின் கூட்டத்திற்கு பின்னர் மீண்டுமொரு முக்கியமான கூட்டம் நடைபெற்றது. ஆபிரிக்க ஆசிய கூட்டிணைவின் உருவாக்கத்திற்கும், பிற்காலத்தில் அணிசாரா இயக்கம் உருவாவதற்கான 1955 பந்துன் மாநாடு இடம்பெறுவதற்கும் கொழும்பு பலம் வாய்ந்தவர்கள் மாநாடு வழிகோலியது. சேர்.ஜோன் கொத்தலாவல அவர்களின் வெளிநாட்டுக் கொள்கையானது அவரது தனிப்பட்ட ஆளுமைக்கு ஏற்பவாறு பலம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. இலங்கை தொடர்பில் நற்பெயரை ஏற்படுத்தும் வகையிலும், இலங்கை தொடர்பான அவப்பெயர்களை இல்லாதொழிக்கும் வகையிலும் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் அதற்கு சான்றாக இருக்கின்றன.
வெளிநாட்டுக் கொள்கையின் அடுத்தக்கட்டம் ஒக்ஸ்வர்ட் பல்கலைக்கழக கல்விமானான பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களுடன் ஆரம்பமானது. ஐக்கிய இராச்சியத்துடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை அவர் முடிவுறுத்தியதுடன், பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகுவது தொடர்பாகவும் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். இது மேற்குலக நாடுகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தாத வகையில் இருந்ததுடன், இலங்கைக்கான சரியான வெளிநாட்டு கொள்கைக்கான உலகளாவிய பார்வையை அவர் கொண்டிருந்தமையினாலாகும். இலங்கையினால் ஆசியாவின் சுவிட்ஸலாந்தாக முடியும் என அவர் கருதியமையே இதற்கு காரணமாகும். வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான ஆசியாவின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பிரதமர் பண்டாரநாயக்க அவர்கள் இலங்கை போன்ற சிறிய நாடுகளினாலும் கூட சர்வதேச பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், உலகில் சமாதானம் மற்றும் இணக்கத்தை ஏற்படுத்த உதவிகளை வழங்குவதற்கான உலகளாவிய ஒழுங்கு குறித்து கருத்துக்களை வழங்கியிருந்தார். ஐக்கிய நாடுகள் சபை ஊடாக சர்வதேச பிரச்சினைகளை தீர்ப்பதில் நடுநிலைக் கொள்கை மூலமாக மூன்றாம் உலக நாடுகள் மத்தியஸ்தராக செயற்பட முடியும் என்ற கருதுகோளினை அவர் ஜவஹர் நேருவுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். திறந்த இராசதந்திர தன்மையை வெளிப்படுத்தும் வகையில் கொமினிஸ்ட் உலகில் இராசதந்திர தூதரகங்களை நிறுவியதனூடாக அவரது உலகளாவியக் கொள்கை பிரதிபலிப்பதாக அமைந்தது.
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையின் இராசதந்திர வரலாறு அணிசேரா கொள்கையினால் முழுமையாக கட்டமைக்கப்பட்டிருந்தது. அணிசேரா இயக்கத்தின் அபிவிருத்தியின் முக்கிய பாத்திரத்தை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் வகித்திருந்தார். அவரது முதலாவது ஆட்சிக்காலத்தின் முக்கிய நிகழ்வாக அவரது சொந்த முயற்சியில் சீன – இந்திய எல்லை முரண்பாடுகளை தீர்க்கும் முகமாக ஆறு அரச தலைவர்களைக் உள்ளடக்கிய வகையில் 1962 இல் சிறிய உச்சி மாநாடு ஒன்றினை முன்னெடுத்தமை காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக அனைவரது பாராட்டுக்களையும் அவர் பெற்றிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் இலங்கை நிலைமை தொடர்பில் இந்தியாவுடன் நிலவிய நீண்டகால முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் அவரது காலத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய சாதனையாகும். பிரதமர் டட்லி சேனாநாயக்க அவர்களின் ஐந்து வருட ஆட்சிக்கு பின்னரான ஸ்ரீமா அம்மையாரின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அணிசேரா இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வாக 1971 இல் இந்திய பெருங்கடல் சமாதான வலய முன்மொழிவு, பாக்கு நீரிணையில் கச்சதீவு தொடர்பாக இந்தியாவுடன் ஏற்பட்டு வந்த முரண்பாடுகளை தீர்த்தமை மற்றும் 1976 செப்டெம்பர் நடைபெற்ற கொழும்பு அணிசாரா கூட்டம் ஆகியவற்றை குறிப்பிடலாம். இந்த கூட்டத்தில் இலங்கையும், இலங்கைப் பிரதமரும் உலகின் பாராட்டுக்களை உரித்தாகின. உலகின் முதலாவது பெண் பிரதமராக பதவிக்கு வந்த பிரதமர் பண்டாரநாயக்க அம்மையார் சர்வதேசத்தின் கௌரவத்தை பெற்றுக்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி ஜயவர்தன அவர்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அடுத்தக் கட்டத்தை தனியொரு வார்த்தைகளால் குறிப்பிட்டு விட முடியாது. அதில் பொதுநலவாயத்துடனான கூட்டிணைவு, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் அறிமுகம், ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை, உலக ஆயத களைவுக்கான அவரது முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் ஆயுத களைவுக்கான உடன்பாடு ஆகியன உள்ளடங்குகின்றன.
நாட்டின் பார்வை மற்றும் எதிர்காலத்தை மாற்றியமைப்பதற்காக திறந்த பொருளாதாரத்தை அறிமுகம் செய்தமையானது அவரால் மேற்கொள்ளப்பட்ட மிகச்சிறந்த செய்றபாடுகளில் ஒன்றாகவுள்ளது.
கலாநிதி. வெர்னன் மென்டிஸ்
தேசமான்ய கலாநிதி.வெர்னன் மென்டிஸ் அவர்கள் அப்போதைய வெளிநாட்டு சேவைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இலங்கையின் இராசதந்திர சேவையை ஆரம்பிப்பதற்காக 1949 இல் இணைத்து கொள்ளப்பட்ட முதலாவது சேவையாளர் ஆவார்.
*(மேற்கூறப்பட்டுள்ளவை கலாநிதி வெர்னன் மென்டிஸ் அவர்களினால் எழுதப்பட்ட முகவுரையில் இருந்து எடுக்கப்பட்டது. ‘இலங்கை வெளிநாட்டு அலுவல்கள்: சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான குறிப்புகளுடன் 1994-1998 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மீளாய்வு‘. வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டது. 1998 பெப்ரவரி).
Leave a Reply
You must be logged in to post a comment.